Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine December! | All Issues

User Tag List

Like Tree2Likes
  • 2 Post By chan

உடற்பயிற்சியும் உள்ளாடையும்!


Discussions on "உடற்பயிற்சியும் உள்ளாடையும்!" in "Fitness" forum.


  1. #1
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    உடற்பயிற்சியும் உள்ளாடையும்!

    உடற்பயிற்சியும் உள்ளாடையும்!


    ஆரோக்கியமோ அல்லது அழகு சார்ந்தோ, அனைத்து வயதினருமே உடலைக் கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்வது அவசியமாகிவிட்டது. இதற்காக, முன் எப்போதும் இல்லாததைவிட, சற்று அதிகமாகவே மெனக்கெட வேண்டியிருக்கிறது என்பதை மறுப்பதற்கில்லை. இந்நிலையில், உடற்பயிற்சி மேற்கொள்ளும்போது பெண்களுக்கு வரும் மார்பு வலிக்கும், அவர்கள் அணிகிற உள்ளாடைக்கும் தொடர்புண்டு என்கிறார் உடற்பயிற்சி நிபுணர் சுசீலா.

    “இன்று அனைத்து வயது பெண்களுமே உடற்பயிற்சி, யோகாப் பயிற்சிகளில் ஈடுபடத் தொடங்கிவிட்டனர். ஜிம்மில் சேர்ந்து கடுமையான பயிற்சிகளைக்கூட செய்கிறார்கள். இந்நிலையில், பயிற்சிகளில் ஈடுபடும்போது, பெண்கள், ஆண்களைக் காட்டிலும் சற்று கூடுதல் சங்கடங்களை சந்திக்க நேரிடுகிறது. அவற்றில், மார்பு வலி மற்றும் மார்பு தொய்வு முக்கியமானவை. சாதாரணமாகவே உடற்பயிற்சிகள் மேற்கொள்ளும் போது அனைவருக்குமே கை, கால் தசைகளில் வலி ஏற்படும்.

    அதுபோலத்தான் இந்த மார்பு வலியும். தொடர்ந்து செய்துவரும்போது கை, கால் தசைகளில் வரும் வலி போன்று தானாகவே சரியாகிவிடும். இதில் பயப்படுவதற்கு ஒன்றுமில்லை. ஆனால், சில பெண்களுக்கு மார்பு காம்பிலும், அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் வலி உண்டாகும். இது ஹார்மோன்கள் பிரச்னையா என மருத்துவரை அணுகி அதற்கான காரணத்தை அறிந்து சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும்.

    சிலர் சாதாரண பிரா, டி-ஷர்ட் அணிந்து கொண்டு கடும் உடற்பயிற்சிகளில் ஈடுபடுவதைப் பார்க்கலாம். இதனால் மார்புப்பகுதிகள் அதிக அசைவுகளுக்கு உள்ளாகி வலி உண்டாகும். தொடர்ந்து உடற்பயிற்சி செய்யும் போது அப்பகுதியிலுள்ள கொழுப்பு தசைகள் குறைவதால் சுருங்க ஆரம்பித்து நாளடைவில் தொய்வடைய ஆரம்பித்துவிடும்.

    இவர்கள் ஸ்போர்ட்ஸ் பிரா அணிந்து கொள்வது அவசியம். தற்போது பிரத்யேகமாக மோல்டட் கப் பொருத்தப்பட்ட ஸ்போர்ட்ஸ் பிராக்கள் விற்பனைக்கு வந்துவிட்டன. இவற்றை அணிந்து கொண்டு உடற்பயிற்சி செய்வதால், மார்புகளின் அசைவுகள் கட்டுப்படுத்தப்பட்டு வலி மற்றும் தொய்வடைவதைத் தவிர்க்கலாம்” என்கிறார் சுசீலா.சிலர் சாதாரண பிரா, டி-ஷர்ட் அணிந்து கொண்டு கடும் உடற்பயிற்சிகளில் ஈடுபடுவதைப் பார்க்கலாம். இதனால் மார்புப் பகுதிகள் அதிக அசைவுகளுக்கு உள்ளாகி வலி உண்டாகும்.


    Similar Threads:

    Sponsored Links
    Last edited by chan; 6th Sep 2016 at 12:33 PM.
    Mary Daisy and ahilanlaks like this.

  2. #2
    Mary Daisy's Avatar
    Mary Daisy is offline Registered User
    Blogger
    Guru's of Penmai
    Real Name
    Daisy
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    Little Roma Puri
    Posts
    5,047
    Blog Entries
    4

    Re: உடற்பயிற்சியும் உள்ளாடையும்!




loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter