Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree56Likes

Today's Fitness Info


Discussions on "Today's Fitness Info" in "Fitness" forum.


  1. #31
    Sriramajayam's Avatar
    Sriramajayam is offline Registered User
    Blogger
    Supreme Ruler's of Penmai
    Real Name
    விசு @ Visu
    Gender
    Male
    Join Date
    Sep 2012
    Location
    Madras @ சென்னை
    Posts
    88,492
    Blog Entries
    1787

    Re: Today's Fitness Info

    My special thanks to all goodhearted members who comes to my posts and gave likes to my posts.


    Welcome again!!!








    Sponsored Links
    பழகிப் பார் பாசம் தெரியும்.
    பகைத்து பார் வீரம் தெரியும்.


    Get in Close with Me to know my Affection!
    Get in Fight with me to know my Braveness!






    விசு @ Visu.,
    PENMAI’s Supreme Ruler's of Penmai – II – 22-4-17 to still Date
    PENMAI’s Ex Young Golden Ruler – II – 30-7-15 to 22-4-17 (631days)
    PENMAI’s Ex Young Silver Ruler - II – 12-2-14 to 30-7-15 (534days)
    PENMAI’s Ex Young Ruler - 7-3-13 to 12-2-14 (343days)
    PENMAI’s Ex Young Yuva - 11-2-13 to 7-3-13 (25days)
    PENMAI’s Ex Young Guru - 5-1-13 to 11-2-13 (38days)
    PENMAI’s Ex Young Minister - 22-11-12 to 5-1-13 (45days)
    PENMAI’s Ex Young Commander - 6-11-12 to 22-11-12 (17days)
    PENMAI’s Ex Young Friend – 19-9-12 to 6-11-12 (49days)

  2. #32
    Sriramajayam's Avatar
    Sriramajayam is offline Registered User
    Blogger
    Supreme Ruler's of Penmai
    Real Name
    விசு @ Visu
    Gender
    Male
    Join Date
    Sep 2012
    Location
    Madras @ சென்னை
    Posts
    88,492
    Blog Entries
    1787

    Re: Today's Fitness Info

    சிக்ஸ்பேக் சீக்ரெட் சொல்லும் அதர்வா!


    தமிழ் சினிமாவின் சாக்லேட் பாயாக அறிமுகம் ஆனவர்தான். ஆனால் 'பரதேசி’ புரட்டிப் போட்டது. மூன்றாவது படத்திலேயே சின்சியர் சிகாமணியாக உழைப்பைக் கொட்டி, தற்போது 'ஈட்டி’ படத்துக்காக பாலிவுட் ஹீரோக்கள் ஸ்டைலில் உடலைச் செதுக்கி சிக்ஸ்பேக்குக்கு மாறிய ஹாட் அண்ட் ஸ்வீட் ஹீரோ அதர்வா.


    'வறுமையில் வாடிய ஒல்லிக்குச்சி 'பரதேசி’ ராசா, 'ஃபிட் அன்ட் டைட்’ 'ஈட்டி’ வீரனானது எப்படி?'


    'நான் தீவிரமான சாப்பாட்டு ராமன். ஆனா, பரதேசி’ படத்தில் நடிக்கிறதுக்காக, என்னை நானே மாத்திக்கிட்டேன். ஆரம்பத்துல ரெண்டு மூணு நாள் ஒழுங்கா சாப்பிடாம, ரொம்பக் கஷ்டமா இருந்தது. ஆனா சினிமா மீது எனக்குத் தீராத தாகம். அதனால் பிரியாணியில் ஆரம்பிச்சு, பிடிச்ச பல விஷயங்களைத்் தியாகம் செஞ்சேன். அந்தப் படத்தின் கிளைமாக்ஸ் காட்சிகளில் நடிக்கிறப்போ, ரொம்பவே ஒல்லியாகிட்டேன். அதுக்கப்புறம், ஈட்டி’ ப்ராஜெக்ட்டுக்குத் தடகள வீரனாக நடிக்கணும், உடம்பை மெருகேத்தணும், செம ஃபிட்டா இருக்கணும். ரெண்டு மாசம் நல்லா சாப்பிட்டு உடம்பைப் பழைய நிலைக்குக் கொண்டுவந்தேன். இதுக்காக, என்னோட தினசரி வேலைகள், உணவு, வொர்க்அவுட்ஸ் எல்லாத்தையும் தலைகீழா மாத்தினேன். இப்படியே உடம்பை வெச்சுக்கிறது ரொம்பப் பிடிச்சிருக்கு.'


    'உங்கள் தினசரி மெனு என்ன?'


    'தினமும் காலை 4.45 மணிக்கு எழுந்திடுவேன். 2 லிட்டர் தண்ணீர் குடிப்பேன். அப்புறம் வொர்க் அவுட்ஸ். 7 மணிக்கு கொஞ்சம் பழங்கள், வேகவைத்த முட்டையின் வெள்ளைப் பகுதியை தேவையான அளவு சாப்பிட்டுட்டு ஷூட்டிங் போயிடுவேன். ஷூட்டிங்கின் இடையிடையே எனர்ஜி தேவைப்படும். அப்பப்போ ஜூஸ் குடிப்பேன். ஷூட்டிங் இல்லாத நாட்களில் வொர்க் அவுட்ஸ் செய்வேன். அப்போ வைட்டமின்சி உணவு அதிகம் தேவை என்பதால், ஆரஞ்சு ஜூஸ், இல்லைன்னா லெமன் ஜூஸ் குடிப்பேன். வேக வெச்ச மீன் காய்கறிகள் மட்டும்தான் என் மதியஉணவு. சாயங்காலம் ஓட்ஸ், கொஞ்சம் பழங்கள்... ராத்திரி மசாலா தடவாத சிக்கன் அல்லது மீன் எடுத்துப்பேன். நைட் 7 மணிக்கெல்லாம் சாப்பிட்டுடுவேன். ராத்திரி உணவு சாப்பிட்டு, உடனே தூங்கினா வெயிட் போடும். அதனால் டின்னர் விஷயத்துல நான் ரொம்ப ஸ்ட்ரிக்ட்.'


    'சிக்ஸ்பேக் ஆரோக்கியமானது இல்லை என்கிறார்களே?'


    'என்னைப் பொறுத்தவரை சிக்ஸ்பேக் வெச்சுக்கிறதால் உடலுக்கு எந்தத் தீங்கும் இல்லை. பாலிவுட்டிலும் ஹாலிவுட்டிலும் சிக்ஸ்பேக் வெச்சுக்கிறவங்களுக்கு இதுவரைக்கும் எந்தப் பிரச்னையும் வந்ததே இல்லை. எந்த ஒரு விஷயத்துக்குமே கால அவகாசம் தேவை. அதை விட்டுட்டு மூணு மாசத்துல சிக்ஸ்பேக் கொண்டுவர்றதும், மிகக் கடுமையான வொர்க்அவுட்ஸ், மாத்திரைகள், ஸ்டீராய்டு எடுத்துக்கறதுனு தவறான முறைகளைக் கடைபிடிப்பவர்களுக்குத்தான் பிரச்னையே.எனக்கு சிக்ஸ்பேக் கொண்டுவர்றதுக்கு ஒரு வருஷத்துக்கும் மேல ஆச்சு. படிப்படியா ஒவ்வொரு நிலையையும் முறையாக கடைப்பிடிச்சுதான் கொண்டுவந்தேன். அதுக்கான வொர்க்அவுட்டில் இருக்கும்போது அடிபட்டுக் காயம் வந்துச்சுன்னா, உடனே ஆறாது. அதனால் முகத்தில் ஆரம்பிச்சு கால் வரைக்குமே காயம்படாமக் கவனமா இருக்கணும்.


    சிக்ஸ்பேக் வைக்க கடுமையான கட்டுப்பாடுகள் இருக்கு. இது எனக்கு ரொம்பப் பிடிச்சிருக்கு. காலையில் எந்திரிச்சு தினமும் வொர்க் அவுட் செஞ்சே ஆகணும்னு மனசு சொல்லுது. சிக்ஸ்பேக் வெச்சிருக்கிறதுன்னா தண்ணியை குறைவா குடிக்கச் சொல்வாங்க. ஆனால், தினமும் நான் 4 லிட்டருக்கு மேல் தண்ணீர் குடிப்பேன். அதை வொர்க் அவுட்டில் சரிக்கட்டிடுவேன். சிக்ஸ்பேக் வெளியே தெரியும்படி எடுக்கப்போற சீனுக்கோ அல்லது போட்டோ ஷூட்டுக்கோ மட்டும் வயிற்றில் ஷார்ப்நெஸ் தெரியணுங்கிறதுக்காக, அதற்கேற்ப ஒரு வாரம் கொஞ்சம் கஷ்டப்பட்டு டயட்ல இருப்பேன். தண்ணீர் குடிப்பதை கொஞ்சம் கொஞ்சமாக குறைச்சுக்கிட்டு, கடைசி 24 மணி நேரத்துக்கு தண்ணீர் குடிக்காமலேயே இருப்பேன். ஷூட் முடிஞ்சிடுச்சுன்னா, மெள்ள மெள்ளப் பழைய நிலைக்கு வந்திடுவேன்.


    ஒரு வருஷம் கஷ்டப்பட்டும் இஷ்டப்பட்டும் வெச்ச சிக்ஸ்பேக்கை நான் கலைக்க மாட்டேன். ஏன்னா, வேணுங்கிறப்ப வெச்சிக்கிறதும், வேணாங்கிறப்ப கட்ஸை’ கலையவிட்டுட்டும் இருந்தால், உடம்பு வீணாப்போகும். நாம கலக்குவோம் பாஸ்!'


    இளைஞர்களுக்கு அதர்வாவின் டிட்பிட்ஸ்


    ஒரு நாளைக்கு ஒரு மணி நேரமாவது உடற்பயிற்சிக்கு நேரம் ஒதுக்குங்கள். நமது உடல் நன்றாக இருந்தால் தான் எதையுமே சாதிக்க முடியும்.


    உங்க உடலுக்கு எது செட்டாகும், எந்த வொர்க் அவுட்ஸ் கரெக்ட் என்பதை பயிற்சியாளிடம் ஆலோசனை பெற்று நீங்கள்தான் முடிவு செய்யவேண்டும்.


    சிக்ஸ்பேக் கொண்டுவர வேண்டும் என்று நினைப்பவர்கள் முறையான பயிற்சியாளரின் துணையோடு, பயிற்சி செய்யுங்கள். சீக்கிரம் சிக்ஸ்பேக் வேண்டும் என்று குறுக்கு வழிகளைத் தேர்ந்தெடுக்காதீர்கள்.


    சினிமா விகடன்


    jv_66 and saidevi like this.
    பழகிப் பார் பாசம் தெரியும்.
    பகைத்து பார் வீரம் தெரியும்.


    Get in Close with Me to know my Affection!
    Get in Fight with me to know my Braveness!






    விசு @ Visu.,
    PENMAI’s Supreme Ruler's of Penmai – II – 22-4-17 to still Date
    PENMAI’s Ex Young Golden Ruler – II – 30-7-15 to 22-4-17 (631days)
    PENMAI’s Ex Young Silver Ruler - II – 12-2-14 to 30-7-15 (534days)
    PENMAI’s Ex Young Ruler - 7-3-13 to 12-2-14 (343days)
    PENMAI’s Ex Young Yuva - 11-2-13 to 7-3-13 (25days)
    PENMAI’s Ex Young Guru - 5-1-13 to 11-2-13 (38days)
    PENMAI’s Ex Young Minister - 22-11-12 to 5-1-13 (45days)
    PENMAI’s Ex Young Commander - 6-11-12 to 22-11-12 (17days)
    PENMAI’s Ex Young Friend – 19-9-12 to 6-11-12 (49days)

  3. #33
    butterfly09 is offline Newbie
    Gender
    Female
    Join Date
    Feb 2013
    Location
    Mumbai
    Posts
    51

    Re: Today's Fitness Info

    Nice Thread... Very Useful to all....

    Sriramajayam likes this.

  4. #34
    Sriramajayam's Avatar
    Sriramajayam is offline Registered User
    Blogger
    Supreme Ruler's of Penmai
    Real Name
    விசு @ Visu
    Gender
    Male
    Join Date
    Sep 2012
    Location
    Madras @ சென்னை
    Posts
    88,492
    Blog Entries
    1787

    Re: Today's Fitness Info

    Thx u friend.





    Quote Originally Posted by butterfly09 View Post
    Nice Thread... Very Useful to all....


    பழகிப் பார் பாசம் தெரியும்.
    பகைத்து பார் வீரம் தெரியும்.


    Get in Close with Me to know my Affection!
    Get in Fight with me to know my Braveness!






    விசு @ Visu.,
    PENMAI’s Supreme Ruler's of Penmai – II – 22-4-17 to still Date
    PENMAI’s Ex Young Golden Ruler – II – 30-7-15 to 22-4-17 (631days)
    PENMAI’s Ex Young Silver Ruler - II – 12-2-14 to 30-7-15 (534days)
    PENMAI’s Ex Young Ruler - 7-3-13 to 12-2-14 (343days)
    PENMAI’s Ex Young Yuva - 11-2-13 to 7-3-13 (25days)
    PENMAI’s Ex Young Guru - 5-1-13 to 11-2-13 (38days)
    PENMAI’s Ex Young Minister - 22-11-12 to 5-1-13 (45days)
    PENMAI’s Ex Young Commander - 6-11-12 to 22-11-12 (17days)
    PENMAI’s Ex Young Friend – 19-9-12 to 6-11-12 (49days)

  5. #35
    Sriramajayam's Avatar
    Sriramajayam is offline Registered User
    Blogger
    Supreme Ruler's of Penmai
    Real Name
    விசு @ Visu
    Gender
    Male
    Join Date
    Sep 2012
    Location
    Madras @ சென்னை
    Posts
    88,492
    Blog Entries
    1787

    Re: Today's Fitness Info

    இயற்கை சார்ந்த உடற்பயிற்சி முறைகள் - யோகா பற்றிய வரலாறு.




    பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த, இன்றும் சூட்சமமாக வாழ்ந்து கொண்டிருக்கும் தமிழ்ச்சித்தர்கள் தம்மை சுற்றி நடக்கும் இயற்கை நிகழ்வுகளை கூர்ந்து கவனிக்கின்றனர்.


    ஒவ்வொரு விலங்குகளும், பறவைகளும் மற்றும் பிற உயிரினங்களும் தங்களுக்கே உரிய இருக்கை நிலைகளை ( Resting Position / Posture ) கொண்டு இயங்குவதை காண்கின்றனர்.


    இவ்வாறு பல இருக்கை நிலைகளை கவனித்து பட்டியலிடுகின்றனர். பிறகு இந்த இருக்கை நிலைகள் ஒவ்வொன்றிலும் தங்கள் உடலை அமைத்து பார்க்கின்றனர்.நாளடைவில் உடல் நலம் நன்கு மேம்படுகின்றது.இதனையே இயற்கை சார்ந்த உடற்பயிற்சிகளாக வடிவமைக்கின்றனர்.இவையே பிற்காலங்களில் யோகாசனங்கள் மற்றும் பிரணாயாமங்கள் எனப்படுகின்றன.


    இந்த வகையில் மயிலை அடிப்படையாக கொண்டு அமையும் ஆசனம் மயூராசனம் ஆகும்.வடமொழியில் மயூரா என்றால் மயில் ஆகும்.இதை போன்றே பிற உயிரினங்களை அடிப்படையாக கொண்ட ஆசனங்களின் பட்டியலை கீழே காணலாம்.


    ஒவ்வொரு ஆசனத்தின் அருகிலும் அதற்கு அடிப்படையான வடமொழி சொல்லும், அதன் தமிழ் பொருளும் அடைப்புக்குறிக்குள் கொடுக்கப்பட்டுள்ளன.


    மகராசனம் (மகரம்–முதலை), சலபாசனம் (சலபம் – வெட்டுக்கிளி), சசாங்காசனம் ( சசாங்கம் – முயல் ), மச்சாசனம் ( மச்சம் – மீன் ), கூர்மாசனம் ( கூர்மம் – ஆமை ),புஜங்காசனம் ( புஜங்கம் – பாம்பு ),
    பாகாசனம் ( பாக – கொக்கு ), பேகாசனம் ( பேக – தவளை ) குக்கூட்டாசனம் ( குக்கூடம் – சேவல் ), சிம்மாசனம் ( சிம்மம் – சிங்கம் )
    உஷ்ட்ராசனம் ( உஷ்ட்ரா – ஒட்டகம் ), கபோடாசனம் ( கபோடா- புறா )


    இதைப் போன்று மரம் மற்றும் மலர்களை அடிப்படையாக கொண்ட ஆசனங்கள் :


    பத்மாசனம் ( பத்மா – தாமரை மலர் ),
    விருட்சாசனம் ( விருட்சம் - மரம் )


    பிறகு அன்றாடம் பயன்படுத்தும் பொருள்களை அடிப்படையாகக் கொண்டும் ஆசனங்களை வடிவமைக்கின்றனர்.அவற்றுள் சில பின்வருமாறு,


    நாவாசனம் ( நாவா – படகு ), தனுராசனம் ( தனுரா-வில் ),
    ஹலாசனம் ( ஹலா- கலப்பை ),
    துலாசனம் ( துலா – தராசு )
    சக்கராசனம் ( சக்கரா- சக்கரம் ),
    தண்டாசனம் ( தண்டா – கம்பு,தடி )


    இதே போன்று சில உயிரினங்களை அடிப்படையாக கொண்டு, மூச்சு பயிற்சிமுறைகளையும் வடிவமைக்கின்றனர்.இவ்வாறாக முற்றிலும் இயற்கை சார்ந்த உடற்பயிற்சி முறைகளை தமிழ் மொழியில் தொல் தமிழர்கள் வடிவமைத்தனர். இதனை நீண்ட உடல் நலத்திற்காகவும்,உடலில் ஏற்படும் நோய்களை தீர்க்கும் பொருட்டும் அன்றாடம் பயிற்சி செய்து வந்துள்ளனர்.


    இப்பழக்கம் பின்னர் சில ஆயிரம் ஆண்டுகள் வரை கடைபிடிக்கப்பட்டு வந்துள்ளது.அதன் பிறகு காலப்போக்கில் கடல்கோள்கள் போன்ற இயற்கை சீற்றங்களாலும்,ஆட்சி மாற்றங்களாலும் இந்த வழக்கம் மெல்ல மெல்ல குறைந்து வருகின்றது.


    பின்னர் ஒரு காலகட்டத்தில் சமஸ்கிருத மொழி செல்வாக்கு பெற்றிருந்த வேளையில் ( இன்றைக்கு ஆங்கிலம் செல்வாக்கு பெற்றிருப்பதை போல ) இந்த இயற்கை சார்ந்த உடற்பயிற்சிகள் சமஸ்கிருத மொழியில் அதிகமாக பதிவு செய்யப்படுகின்றன.இவ்வாறு சமஸ்கிருத மொழியில்இயற்கை சார்ந்த உடற்பயிற்சிகள், யோகாசனங்கள் என பெயர் பெறுகின்றன.


    இனி இந்த யோகாசனங்கள் வரலாற்றில் எவ்வாறெல்லாம் பதிவு செய்யப்பட்டுள்ளன என காணலாம்.


    தமிழ்நாட்டில் அகத்தியர்,திருமூலர்,பதஞ்சலி உள்ளிட்ட பதினெட்டு சித்தர்கள் வாழ்ந்துள்ளனர்.இவர்கள் எழுதிய நூல்களில் யோகாசனங்களை பற்றிய செய்திகளை காணலாம்.


    இதில் பதஞ்சலி முனிவர் வடநாட்டுக்கு சென்று யோக சூத்திரம் என்ற நூலை எழுதுகின்றார்.இது எட்டு உறுப்புகளை கொண்டதால் அஷ்டாங்க யோகா என அழைக்கப்படுகின்றது.


    பிறகு 15 ஆம் நூற்றாண்டில், யோகி ஸ்வாத்மராமா என்பவர் ஹத யோகா பற்றிய நூலை எழுதுகின்றார்.


    19 ஆம் நூற்றாண்டின் இறுதியில் சுவாமி விவேகானந்தர் மேற்கு நாடுகளில் ராஜ யோகம் பற்றி விளக்குகின்றார்.


    இதனைத் தொடர்ந்து இருபதாம் நூற்றாண்டில் இந்தியாவில் அரவிந்தர், சுவாமி சிவானந்தர் போன்றோர் ஆன்மீக ரீதியிலான யோகாவை பரப்புகின்றனர்.


    1920 களில் மைசூர் மாகாணத்தை சேர்ந்த திருமலை கிருஷ்ணமாச்சார்யா எனும் யோக நிபுணர் ஆரோக்கிய ரீதியிலான யோகாவை வடிவமைக்கின்றார்.பல்வேறு நோய்களுக்கும் இயற்கை உணவு +மருந்து + யோகாசனங்கள் அமைந்த சிகிச்சை திட்டங்களை தீட்டி நோய்களை குணப்படுத்துகின்றார்.இம்முறை பின்னர் பல்வேறு யோக ஆசிரியர்களாலும் கடைபிடிக்கப்படுகின்றது.


    1980 களில் டீன் ஆர்னிஷ் ( Dean Ornish ) எனும் அமெரிக்க மருத்துவ நிபுணர், யோகாவின் மூலம் இருதய நோய்கள் குணமடைவதை மருத்துவ ஆய்வுகள் மூலம் நிரூபிக்கின்றார்.சுவாமி சச்சிதானந்தாவிடமிருந்து இவர் யோகாவை கற்றவராவார்.


    இதன் பிறகு மேற்கு நாடுகளில் யோகாவை பற்றிய விழிப்புணர்வு தொடர்ந்து அதிகரித்து வருகின்றது.


    இன்றைய நிலையில் தமிழ் வழி யோகா என்பது இல்லை.நாம் இன்று பெறக்கிடைப்பது வட நாட்டு யோகா ஆகும்.வருங்கால ஆராய்ச்சிகள் முற்றிலும் இயற்கை சார்ந்த, அனைவருக்கும் பொதுவான தமிழ் வழி யோகாவை உருவாக்கும் என நம்புவோமாக.


    யோகா செயல்படும் விதம் :


    யோகா பயிற்சிகளின் போது தொடர்புடைய பகுதிகளில் இரத்த ஒட்டம் அதிகரிக்கின்றது.இதனால் ஊட்டச்சத்துக்களும்,ஆக்ஸிஜனும் தேவையான அளவு செல்களுக்கு கிடைப்பதால், உடலின் மெட்டபாலிசம் அதிகரிக்கின்றது.இதனால் உள்ளுறுப்புகள் நன்கு இயங்குகின்றன.


    பொதுவாக உடல் முழுமைக்குமான யோகா பயிற்சிகளை செய்யும் போது, இரத்த ஒட்டம் நன்கு உறுதி செய்யப்பட்டு உடலின் ஆரோக்கியம் தொடர்ந்து அதிகரிக்கின்றது.


    உடல் முழுவதும் பரவியுள்ள நரம்பு மண்டலமும் சீரான நிலையில் வைக்கப்படுகின்றது.


    நம் சுவாசத்திற்கும், எண்ணங்களுக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது.கோபம், கண்ணீர்,அதிக சந்தோஷம் போன்ற உணர்ச்சி வசப்பட்ட தருணங்களில் நாம் வேகமாக மூச்சு விடுவோம்.அதாவது அந்த நிலையில் நம் மனதின் எண்ண ஒட்டங்கள் அதிகமாக இருக்கும்.


    மாறாக அமைதியான தருணங்களில் ஆழ்ந்து மூச்சு விடுவோம்.அதாவது தெளிவான எண்ண நிலையில் இருப்போம்.


    இந்த அடிப்படையில் மூச்சு பயிற்சி, நம் சுவாசத்தை ஆழப்படுத்தி அமைதியான எண்ணங்களை நிலை கொள்ளச் செய்யும்.இது உளவியல் ரீதியாக மிகுந்த பலனை நமக்கு தரும்.


    யோகா பற்றிய குறிப்புகள் :


    • யோகாசனங்கள் எப்பொழுதும் இருபக்க சமச்சீரானவை.முதலில் இடது பக்கம் செய்யப்படும் அசைவுகள்,அடுத்ததாக வலது பக்கமும் அதே அளவு செய்யப்படும்.இந்த அடிப்படையில் பார்க்கும்போது இரண்டு கைகளையும் சமமாக பயன்படுத்தும் பழக்கம் தொல் தமிழர்கள் வாழ்வில் இருந்திருக்க வேண்டும்.இது மூளையின் செயல்திறனை அதிகரிக்கும்.


    • ஒவ்வொரு ஆசனத்திலும், ஆரம்ப நிலையில் தொடங்கி ஒவ்வொரு நிலையாக கடந்து இறுதி நிலையை அடைய வேண்டும்.பிறகு அதே படிவரிசையில் ஆரம்ப நிலையை அடைய வேண்டும்.அதாவது 1-2-3-4-5 என்றவாறு ஆசனத்தின் இறுதி நிலையை அடைந்தபின் 5-4-3-2-1 என்றவாறு ஆரம்ப நிலைக்கு திரும்ப வேண்டும்.இதுவே உடலின் பாதுகாப்பை உறுதி செய்யும்.மீறினால் சுளுக்கு,தசைபிடிப்பு ஏற்படலாம்.


    • ""''ஸ்திரம் சுகம் ஆசனம்" என்ற அடிப்படையில் பயிற்சிகள் மேற்கொள்ளப்படவேண்டும்.முதலில் உடல் ஆடாமல் நிலையாக இருக்குமாறு பார்த்து கொள்ள வேண்டும்.பிறகு வலியில்லாமல் பார்த்து கொள்ள வேண்டும்.பிறகு இறுதி நிலையை முயற்சிக்க வேண்டும்.இதற்கு உரிய நாட்களை எடுத்து கொள்ளவேண்டும்.சில ஆசனங்களை செய்வதற்கு பல மாதங்கள் கூட ஆகலாம்.மாறாக அவசரப்பட்டால் தவறு நேரலாம்.


    • கீழ்நோக்கிய அசைவுகள் மூச்சு விட்டுக் கொண்டே செய்யப்படும்.மேல்நோக்கிய அசைவுகள் மூச்சை இழுத்துக் கொண்டே செய்யப்படும்.இந்த வகையில் யோகப்பயிற்சிகள் புவியீர்ப்பு விசையை கருத்தில் கொண்டவை.


    யோகாவின் இன்றைய அவசியங்கள் :


    இன்றைய நிலையில் நமது வாழ்வில், உடலுழைப்பு குறைந்து பல்வேறு நோய்களுக்கு ஆளாகி வருகின்றோம். இரத்த அழுத்தம், நீரிழிவு, இதய நோய்கள், சிறுநீரக கோளாறு, அல்சர், முதுகு வலி, இடுப்பு வலி, மூட்டு வலி என பல்வேறு நோய்களை சந்தித்து வருகின்றோம்.


    பொருளாதார நெருக்கடி, அவசரம் , பதற்றம் காரணமாக பல்வேறு மன அழுத்தங்களுக்கு ஆளாகி வருகின்றோம். இதனால் நம்முடைய மன நலமும் குறைகின்றது.இதனால் சமூகத்தில் உளவியல் பிரச்சனைகள் அதிகரிக்கின்றன.


    இவற்றுக்கெல்லாம் தீர்வாக நம் முன்னோர்கள் வழியில், நாமும் யோகாவை தினசரி வாழ்வின் அங்கமாக மாற்றிக் கொள்ள வேண்டும்.


    தினசரி அரைமணி நேரமாவது யோக பயிற்சிகளை செய்யலாம்.இயலாதவர்கள் வாரத்திற்கு மூன்று முறையாவது செய்ய முயற்சிக்கலாம்.


    இதன் மூலம் உங்கள் உடல் நலமும்,மனநலமும் மேம்படுவது உறுதி.நீண்ட காலம் தொடர்ந்து செய்தால் நோய்கள் குறைந்து ஆரோக்கியமாக வாழலாம்.இது சமூகத்தில் இணக்கத்தை ஏற்படுத்தி அமைதிக்கு வழி வகுக்கும்.குடும்பத்தில் ஒருவர் யோக பயிற்சிகள் செய்யும்போது, இந்த பழக்கம் குழந்தைகள்,இளைஞர்களிடமும் பரவும்.
    எல்லோரும் இன்புற்று வாழலாம்.


    யோகா பற்றிய விழிப்புணர்வு அதிகரிக்க,இந்த செய்தியை அனைவருக்கும் Share செய்யவும்.


    Chitthar Ariviyal


    Attached Thumbnails Attached Thumbnails Today's Fitness Info-yoga.jpg  
    Last edited by Sriramajayam; 12th May 2015 at 06:15 PM.
    jv_66 and saidevi like this.
    பழகிப் பார் பாசம் தெரியும்.
    பகைத்து பார் வீரம் தெரியும்.


    Get in Close with Me to know my Affection!
    Get in Fight with me to know my Braveness!






    விசு @ Visu.,
    PENMAI’s Supreme Ruler's of Penmai – II – 22-4-17 to still Date
    PENMAI’s Ex Young Golden Ruler – II – 30-7-15 to 22-4-17 (631days)
    PENMAI’s Ex Young Silver Ruler - II – 12-2-14 to 30-7-15 (534days)
    PENMAI’s Ex Young Ruler - 7-3-13 to 12-2-14 (343days)
    PENMAI’s Ex Young Yuva - 11-2-13 to 7-3-13 (25days)
    PENMAI’s Ex Young Guru - 5-1-13 to 11-2-13 (38days)
    PENMAI’s Ex Young Minister - 22-11-12 to 5-1-13 (45days)
    PENMAI’s Ex Young Commander - 6-11-12 to 22-11-12 (17days)
    PENMAI’s Ex Young Friend – 19-9-12 to 6-11-12 (49days)

  6. #36
    saidevi's Avatar
    saidevi is offline Guru's of Penmai
    Real Name
    sarala devi
    Gender
    Female
    Join Date
    Mar 2014
    Location
    tn
    Posts
    5,086

    Re: Today's Fitness Info

    Useful info abt Yoga.

    Sriramajayam likes this.

  7. #37
    Sriramajayam's Avatar
    Sriramajayam is offline Registered User
    Blogger
    Supreme Ruler's of Penmai
    Real Name
    விசு @ Visu
    Gender
    Male
    Join Date
    Sep 2012
    Location
    Madras @ சென்னை
    Posts
    88,492
    Blog Entries
    1787

    Re: Today's Fitness Info

    Thx u friend.




    Quote Originally Posted by saidevi View Post
    Useful info abt Yoga.


    saidevi likes this.
    பழகிப் பார் பாசம் தெரியும்.
    பகைத்து பார் வீரம் தெரியும்.


    Get in Close with Me to know my Affection!
    Get in Fight with me to know my Braveness!






    விசு @ Visu.,
    PENMAI’s Supreme Ruler's of Penmai – II – 22-4-17 to still Date
    PENMAI’s Ex Young Golden Ruler – II – 30-7-15 to 22-4-17 (631days)
    PENMAI’s Ex Young Silver Ruler - II – 12-2-14 to 30-7-15 (534days)
    PENMAI’s Ex Young Ruler - 7-3-13 to 12-2-14 (343days)
    PENMAI’s Ex Young Yuva - 11-2-13 to 7-3-13 (25days)
    PENMAI’s Ex Young Guru - 5-1-13 to 11-2-13 (38days)
    PENMAI’s Ex Young Minister - 22-11-12 to 5-1-13 (45days)
    PENMAI’s Ex Young Commander - 6-11-12 to 22-11-12 (17days)
    PENMAI’s Ex Young Friend – 19-9-12 to 6-11-12 (49days)

  8. #38
    Sriramajayam's Avatar
    Sriramajayam is offline Registered User
    Blogger
    Supreme Ruler's of Penmai
    Real Name
    விசு @ Visu
    Gender
    Male
    Join Date
    Sep 2012
    Location
    Madras @ சென்னை
    Posts
    88,492
    Blog Entries
    1787

    Re: Today's Fitness Info

    உடல் இளைக்க கொள்ளு ரசம் !

    தேவையானவை: கொள்ளு - அரை கப், புளி - சிறு எலுமிச்சை அளவு, உப்பு - தேவையான அளவு, ரசப்பொடி - ஒரு டீஸ்பூன். தாளிக்க: நெய் - அரை டீஸ்பூன், கடுகு - அரை டீஸ்பூன், பெருங்காயம் - ஒரு சிட்டிகை.

    செய்முறை: கொள்ளை அரை மணி நேரம் ஊறவைத்து, நான்கு கப் தண்ணீர் சேர்த்து வேகவைத்துக்கொள்ளவும். வேகவைத்த பிறகு, தண்ணீரைத் தனியே வடித்து விடவும். வெந்த கொள்ளை, சுண்டலாகத் தாளித்து உண்ணலாம். புளியைத் தேவையான தண்ணீரில் கரைத்துக்கொள்ளவும். அதில் ரசப்பொடி, உப்பு சேர்த்துப் பச்சை வாசனை போகும் வரை கொதிக்கவைக்கவும். பிறகு கொள்ளு வேகவைத்த தண்ணீரைச் சேர்த்து நுரை கட்டி வரும்போது, நெய்யில் தாளித்துக் கொட்டிப் பரிமாறவும்.


    Dr Vikatan



    பழகிப் பார் பாசம் தெரியும்.
    பகைத்து பார் வீரம் தெரியும்.


    Get in Close with Me to know my Affection!
    Get in Fight with me to know my Braveness!






    விசு @ Visu.,
    PENMAI’s Supreme Ruler's of Penmai – II – 22-4-17 to still Date
    PENMAI’s Ex Young Golden Ruler – II – 30-7-15 to 22-4-17 (631days)
    PENMAI’s Ex Young Silver Ruler - II – 12-2-14 to 30-7-15 (534days)
    PENMAI’s Ex Young Ruler - 7-3-13 to 12-2-14 (343days)
    PENMAI’s Ex Young Yuva - 11-2-13 to 7-3-13 (25days)
    PENMAI’s Ex Young Guru - 5-1-13 to 11-2-13 (38days)
    PENMAI’s Ex Young Minister - 22-11-12 to 5-1-13 (45days)
    PENMAI’s Ex Young Commander - 6-11-12 to 22-11-12 (17days)
    PENMAI’s Ex Young Friend – 19-9-12 to 6-11-12 (49days)

  9. #39
    Sriramajayam's Avatar
    Sriramajayam is offline Registered User
    Blogger
    Supreme Ruler's of Penmai
    Real Name
    விசு @ Visu
    Gender
    Male
    Join Date
    Sep 2012
    Location
    Madras @ சென்னை
    Posts
    88,492
    Blog Entries
    1787

    Re: Today's Fitness Info

    என் போஸ்ட்க்கு வந்து என் எல்லா ஸ்டேடஸ்க்கு லைக் போட்டு போகும் நல் உள்ளங்கள் கொண்ட நண்பர்களுக்கு நன்றி நன்றி நன்றி.

    மீண்டும் வருக..





    பழகிப் பார் பாசம் தெரியும்.
    பகைத்து பார் வீரம் தெரியும்.


    Get in Close with Me to know my Affection!
    Get in Fight with me to know my Braveness!






    விசு @ Visu.,
    PENMAI’s Supreme Ruler's of Penmai – II – 22-4-17 to still Date
    PENMAI’s Ex Young Golden Ruler – II – 30-7-15 to 22-4-17 (631days)
    PENMAI’s Ex Young Silver Ruler - II – 12-2-14 to 30-7-15 (534days)
    PENMAI’s Ex Young Ruler - 7-3-13 to 12-2-14 (343days)
    PENMAI’s Ex Young Yuva - 11-2-13 to 7-3-13 (25days)
    PENMAI’s Ex Young Guru - 5-1-13 to 11-2-13 (38days)
    PENMAI’s Ex Young Minister - 22-11-12 to 5-1-13 (45days)
    PENMAI’s Ex Young Commander - 6-11-12 to 22-11-12 (17days)
    PENMAI’s Ex Young Friend – 19-9-12 to 6-11-12 (49days)

  10. #40
    arunuma's Avatar
    arunuma is offline Friends's of Penmai
    Gender
    Female
    Join Date
    Sep 2011
    Location
    Denver
    Posts
    126

    Re: Today's Fitness Info

    Very useful thread

    Sriramajayam likes this.

loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter