Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine December! | All Issues

User Tag List

Like Tree19Likes
 • 6 Post By umasaravanan
 • 2 Post By jv_66
 • 2 Post By laddubala
 • 1 Post By saveetha1982
 • 2 Post By sumathisrini
 • 2 Post By umasaravanan
 • 1 Post By umasaravanan
 • 2 Post By umasaravanan
 • 1 Post By preetlove

Friendship keeps your mind healthy-மனதை லேசாக்கும் நட்பு மந்திரம்...!


Discussions on "Friendship keeps your mind healthy-மனதை லேசாக்கும் நட்பு மந்திரம்...!" in "Friends and Neighbours" forum.


 1. #1
  umasaravanan's Avatar
  umasaravanan is offline Penman of Penmai
  Blogger
  Minister's of Penmai
  Real Name
  M.UMA DEVI
  Gender
  Female
  Join Date
  Dec 2013
  Location
  THENI
  Posts
  3,241

  Friendship keeps your mind healthy-மனதை லேசாக்கும் நட்பு மந்திரம்...!

  லோகேஷ் குட்டிப் பையனாக இருந்த போது பயங்கர துறுதுறு. அவனுக்கு நிகிதா என்ற கியூட்டான சுட்டித் தங்கை வேறு. இருவரும் சேர்ந்து செய்த குறும்புகள் அந்த இல்லத்தை மகிழ்ச்சியால் நிறைத்தது. இதெல்லாம் கொஞ்ச நாட்கள் தான்.


  அம்மாவுக்கு முதலில் கேன்சர், பின் அப்பாவுக்கு சர்க்கரை நோய் என பள்ளிக் காலம் முடியும் தருவாயில் பெற்றோரை இழந்து நின்றனர். உறவினர்களும் கண்டு கொள்ளாமல் விட விரக்தியில் துவண்டான் லோகேஷ். தங்கையை தனி ஆளாக நின்று பாதுகாக்க முடியாதே என்ற பயத்தில் நெருங்கிய உறவில் திருமணம் செய்து வைத்தான். தனி ஆளாய் ஒரு மருந்துக் கம்பெனியில் வேலை பார்த்தான்.  சிறு வயதில் இருந்தே தனிமை அவனை வாட்டி எடுத்தது. நம்மை ஒதுக்கிய இந்த உலகம் ஒரு நாள் நம்மைத் திரும்பிப் பார்க்க வேண்டும் என்ற நெருப்பை மனதில் வளர்த்தான். நண்பர்களை, உறவுகளைத் தவிர்த்தான். இவனது சோக வாழ்க்கையை புரிந்து கொண்டு வாழ்வில் இணைய வந்த தேவதை சுகன்யாவை பல்வேறு பிரச்னைகளுக்கு இடையில் மணம் முடித்தான். திருமணத்துக்குப் பின்னும் உறவினர் மத்தியில் பெரிய அளவுக்கு அங்கீகாரம் இல்லாத நிலையில் பெங்களூர் சென்று செட்டிலாவது என்று முடிவெடுத்தான். ஐடி நிறுவனத்தில் வேலை.  கை நிறையை சம்பாதித்தான். இரண்டு குழந்தைகள் இன்ப வாழ்க்கை என தன் குடும்பத்தினருடன் மட்டுமே மகிழ்ச்சியில் திளைத்தான். இடையில் உறவினர், நண்பர்கள் யாரோடும் தொடர்பு கொள்ளவேயில்லை. நண்பர்களை சந்திப்பதையும் தவிர்த்தான்.சொந்த வீடு, கார் என சுபிட்சத்தை நோக்கி ஓடிக் கொண்டிருந்தான்.  எதிர்பாராமல் சந்தித்த விபத்து அவனை கோமாவில் தள்ளியது. பிள்ளைகளும் மனைவியும் தெருவில் தவித்தனர். உறவினர், நண்பர் என்று எந்த தொடர்பும் அற்ற நிலையில் யாரிடம் உதவி கேட்பது என்று தெரியாமல் நின்றனர். தூரத்து நண்பன் விக்னேஷ் தகவலை கேள்விப்பட்டு பழைய நண்பர்களை ஒருங்கிணைத்து லோகேசுக்கு உதவ ஓடி வந்தான். வாட்ஸ் அப் மற்றும் பேஸ் புக் வழியாக தொடர்பு கொண்டு நண்பனின் சிகிச்சைக்கு நிதி திரட்டினர். எப்படியாவது தனது கணவனைக் காப்பாற்றியே ஆக வேண்டும் என்ற மனைவியில் தீவிரமும், நண்பர்களின் அன்பும் லோகேஸ் மறுபடியும் கண்திறந்து உலகைப் பார்க்க வாய்ப்பளித்தது.
  மருத்துவமனையில் ஒரு மாதம் வரை பல்வேறு சிகிச்சைகள் லோகேசுக்கு வழங்கப்பட்டது. கண் துஞ்சாமல் அருகில் இருந்து கவனித்துக் கொண்ட மனைவியின் அன்பு அவனை நெகிழ வைத்தது. ஓடி, ஓடி உதவிய நண்பர்கள் அவனது மனதில் கடவுளின் இடத்தைப் பிடித்தார்கள். லேகேஸ் சிகிச்சை முடிந்து புது மனிதனாய் எழுந்து வந்தான்.


  எல்லோருடனும் அன்பாகப் பழகத் துவங்கிய லோகேசுக்கு இந்த உலகம் சொர்க்கமாக மாறியது. அவனது குழந்தைகளுக்கு நல்ல நண்பர்கள் கிடைத்தார்கள். சுகன்யாவுக்கும் தனது மனக் குழப்பங்களையும், மகிழ்ச்சிகளையும் பகிர்ந்து கொள்ள நண்பர்கள் வட்டம் அமைந்தது. எவ்வளவு பிரச்னை வந்தாலும் தன்னால் சமாளிக்க முடியும் என்ற எண்ணம் லோகேசுக்கு வந்தது. இந்த நம்பிக்கை அவன் வாழ்க்கை முழுவதும் எதிரொலித்தது.


  தனி ஒருவனாக யாராலும் வாழ முடியாது. பகிர்வுகள் இல்லாத வாழ்க்கை என்பது பாழடைந்த கிணற்றுக்கு சமமானது. சின்னச் சின்ன டென்சன்களை நம்பகம் மிக்க நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். குழப்பமாக இருந்தால் விவாதித்து தெளிவு பெறலாம். எந்தக் கட்டணமும் பெற்றுக் கொள்ளாமல் உங்கள் மனக்குழப்பத்தைத் தீர்த்து வழியனுப்பி வைப்பதில் நட்புக்கு எப்போதுமே முதல் இடம் உண்டு.


  Similar Threads:

  Sponsored Links

 2. #2
  jv_66's Avatar
  jv_66 is offline Super Moderator Silver Ruler's of Penmai
  Real Name
  Jayanthy
  Gender
  Female
  Join Date
  Dec 2011
  Location
  Bangalore
  Posts
  31,985

  re: Friendship keeps your mind healthy-மனதை லேசாக்கும் நட்பு மந்திரம்...!

  அருமையான , உண்மையான கருத்து .

  umasaravanan and saveetha1982 like this.
  Jayanthy

 3. #3
  laddubala's Avatar
  laddubala is offline Guru's of Penmai
  Real Name
  Latha
  Gender
  Female
  Join Date
  Feb 2011
  Location
  Chennai
  Posts
  5,997

  Re: Friendship keeps your mind healthy-மனதை லேசாக்கும் நட்பு மந்திரம்...!

  நிதர்சனமான கருத்து. பகிர்விற்கு நன்றி

  umasaravanan and saveetha1982 like this.
  வாழ்க்கையில் ரெண்டு விஷயத்த எப்பவும் மறக்க கூடாது

  1. விரும்பி எது வந்தாலும் "TAKE CARE"
  2. விலகி எது சென்றாலும்
  " DON'T CARE"

 4. #4
  saveetha1982's Avatar
  saveetha1982 is offline Penman of Penmai
  Blogger
  Yuva's of Penmai
  Real Name
  சவீதா லட்சுமி
  Gender
  Female
  Join Date
  Jan 2014
  Location
  Chennai
  Posts
  7,552

  Re: Friendship keeps your mind healthy-மனதை லேசாக்கும் நட்பு மந்திரம்...!

  சூப்பர் உமா... பகிர்வுகள் ஆறுதலை தரும்... அன்பை தேடித் தரும்...

  umasaravanan likes this.
  தோழமையுடன்...

  சவீதா முருகேசன்


  மெர்குரியோ... மென்னிழையோ... - ongoing story

  Stories of Saveetha


 5. #5
  umasaravanan's Avatar
  umasaravanan is offline Penman of Penmai
  Blogger
  Minister's of Penmai
  Real Name
  M.UMA DEVI
  Gender
  Female
  Join Date
  Dec 2013
  Location
  THENI
  Posts
  3,241

  Re: Friendship keeps your mind healthy-மனதை லேசாக்கும் நட்பு மந்திரம்...!

  Quote Originally Posted by jv_66 View Post
  அருமையான , உண்மையான கருத்து .
  Thank you Aunty...........


 6. #6
  sumathisrini's Avatar
  sumathisrini is offline Super Moderator Silver Ruler's of Penmai
  Real Name
  Sumathi
  Gender
  Female
  Join Date
  Jun 2011
  Location
  Hosur
  Posts
  33,585

  Re: Friendship keeps your mind healthy-மனதை லேசாக்கும் நட்பு மந்திரம்...!

  சரியாகச் சொன்னீர்கள் உமா. எவ்வளவு பணம் இருந்தாலும், சுற்றமும், நட்பும் சூழ இருந்தால் தான் சந்தோஷமான வாழ்க்கை அமையும்.

  umasaravanan and saveetha1982 like this.

 7. #7
  umasaravanan's Avatar
  umasaravanan is offline Penman of Penmai
  Blogger
  Minister's of Penmai
  Real Name
  M.UMA DEVI
  Gender
  Female
  Join Date
  Dec 2013
  Location
  THENI
  Posts
  3,241

  Re: Friendship keeps your mind healthy-மனதை லேசாக்கும் நட்பு மந்திரம்...!

  Quote Originally Posted by laddubala View Post
  நிதர்சனமான கருத்து. பகிர்விற்கு நன்றி

  Thank you Sister...Welcome..

  laddubala and saveetha1982 like this.

 8. #8
  umasaravanan's Avatar
  umasaravanan is offline Penman of Penmai
  Blogger
  Minister's of Penmai
  Real Name
  M.UMA DEVI
  Gender
  Female
  Join Date
  Dec 2013
  Location
  THENI
  Posts
  3,241

  Re: Friendship keeps your mind healthy-மனதை லேசாக்கும் நட்பு மந்திரம்...!

  Quote Originally Posted by saveetha1982 View Post
  சூப்பர் உமா... பகிர்வுகள் ஆறுதலை தரும்... அன்பை தேடித் தரும்...

  Thank you Sweet akka.....

  saveetha1982 likes this.

 9. #9
  umasaravanan's Avatar
  umasaravanan is offline Penman of Penmai
  Blogger
  Minister's of Penmai
  Real Name
  M.UMA DEVI
  Gender
  Female
  Join Date
  Dec 2013
  Location
  THENI
  Posts
  3,241

  Re: Friendship keeps your mind healthy-மனதை லேசாக்கும் நட்பு மந்திரம்...!

  Quote Originally Posted by sumathisrini View Post
  சரியாகச் சொன்னீர்கள் உமா. எவ்வளவு பணம் இருந்தாலும், சுற்றமும், நட்பும் சூழ இருந்தால் தான் சந்தோஷமான வாழ்க்கை அமையும்.

  Neengal solvathum unmaithaan Sumi akka....Thank you.....

  sumathisrini and saveetha1982 like this.

 10. #10
  preetlove is offline Newbie
  Gender
  Female
  Join Date
  Mar 2015
  Location
  India
  Posts
  19

  Re: Friendship keeps your mind healthy-மனதை லேசாக்கும் நட்பு மந்திரம்...!

  Yes! friendship is very important for boys and girls. If you have friends you can share your problems and happiness with them and get appropriate solutions. It gives you positivism nature ans make you feel happy and cheer up.

  Last edited by sumathisrini; 21st May 2015 at 02:23 PM. Reason: External link removed
  SADAIYAN likes this.

loading...

Bookmarks

Posting Permissions

 • You may not post new threads
 • You may not post replies
 • You may not post attachments
 • You may not edit your posts
 •  
Like It?
Share It!Follow Penmai on Twitter