நீயா? நானா? - 19.01.2012 to 31.01.2012
Discuss here on நீயா? நானா? - 19.01.2012 to 31.01.2012 within the General Discussions forums, part of the The Lounge forum; வணக்கம்... வணக்கம்... வணக்கம்!!! என்ன வணக்கம் எல்லாம் பலமா இருக்கு அப்படின்னு கேக்கறீங்களா? அது ஒன்னும் இல்ல சும்மா சம்பிரதாயத்துக்கு... வணக்கம் சொல்லி ஆரம்பிக்கறது தான நம்ம ...
-
19th Jan 2012, 12:08 PM #1
- Real Name
- Parasakthi KS
- Gender
- Female
- Join Date
- May 2010
- Location
- Coimbatore
- Posts
- 8,710
- Blog Entries
- 1
நீயா? நானா? - 19.01.2012 to 31.01.2012
வணக்கம்... வணக்கம்... வணக்கம்!!!
என்ன வணக்கம் எல்லாம் பலமா இருக்கு அப்படின்னு கேக்கறீங்களா? அது ஒன்னும் இல்ல சும்மா சம்பிரதாயத்துக்கு... வணக்கம் சொல்லி ஆரம்பிக்கறது தான நம்ம தமிழ் கலாச்சாரம் அதான்...
பொங்கல் பண்டிகையில்(பொங்கல் சாப்பிடுவதில்) கொஞ்சம் மும்முரமாக இருந்துவிட்டதால் இந்த கலந்துரையாடல் தொடங்க சிறிது தாமதமாகி விட்டது மன்னித்து விடுங்கள்...
முந்தைய கலந்துரையாடலில், தங்கள் சிறப்பான கருத்துக்களை பதிவிட்ட அனைவருக்கும் பாராட்டுக்கள் வாழ்த்துக்கள்...
அதிலேயும் நமது நடுவர் அவர்களின் அசத்தலான இயற்கை மேட்சிங் தீர்ப்பு பிரமாதம்....
தன் விவாத திறமை கொண்டு, மிகச் சிறப்பாக விவாதம் செய்து பரிசை தட்டி சென்ற சூர்யா அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் ....
சரி சரி நாம இப்போ அடுத்த தலைப்புக்கு வருவோம்.... இந்தமுறை எது பற்றி பேசலாம் என்று யோசித்து கொண்டிருந்த பொது இளவரசி அக்கா தான், தமிழ் கலாச்சாரம் சம்மந்தமாக இருந்தால் நல்லா இருக்கும்ன்னு சொல்லிட்டாங்க... அது, இது, எது ன்னு கடைசியா தலைப்பு எல்லாரும் சேர்ந்து முடிவு பண்ணியாச்சு...
இன்றைய தலைமுறையினர் தமிழ் கலாச்சாரங்களை பின்பற்றுவதை விரும்புகிறார்களா ? விரும்பவில்லையா?
என்னருமை தமிழ் மக்களே, பெண்மை பிரியைகளே/ பிரியர்களே
தலைப்பு கொடுத்தாச்சு, வாங்க வந்து தூள் கிளப்புங்க........
-
23rd Jan 2012, 10:03 PM #2
Re: நீயா? நானா? - 19.01.2012 to 31.01.2012
இன்றைய தலைமுறையினர் தமிழ் கலாச்சாரங்களை பின்பற்றுவதை விரும்பவில்லை என்று எனது கருத்துக்களை முன்வைக்கிறேன் :-
கலாச்சாரம் என்றால் என்ன என்பதை முதலில் புரிந்து கொள்ள வேண்டும்.
கலாச்சாரம் என்பது சமூகத்தை நல்வழியில் கொண்டுபோக உதவும் ஒரு வழிகாட்டும் முறையே ஆகும். மொத்த மனித கூட்டத்தையும் சரியான பாதைக்கு கொண்டு செல்லவேண்டும் என்பதற்காகவே மனிதன் என்பவன் இப்படித்தான் வாழவேண்டும் என்ற கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. அத்தகைய கட்டுப்பாடுகளின் படி வழிவழியாக மக்கள் வாழ்வதையே கலாச்சாரம் என்றழைக்கிறோம். கலாச்சாரம் என்பது, வாழ்ந்து காட்டி, வழிகாட்டும் முறை என்றால் மிகையில்லை.
திருமணம்:-
திருமணம் நமது கலாச்சாரத்தின் ஆணிவேர். கூட்டமாக மனிதன் வாழத்துவங்கியபோது உறவுகளின் உரிமையை நிலைநாட்டிக் கொள்ளும் கட்டாயம் ஏற்பட்டது. இவள் எனது மனைவி இனி வேறு ஆடவன் இவளை அனுகக்கூடாது என்று அறிவிக்க திருமணம் தேவைப்பட்டது. பெண்ணுக்கும் ஆடவன் மீதுள்ள உரிமையை நிலைநாட்ட திருமணம் உதவியது. திருமணம் செய்து கொண்டவர்களும் அந்த உறவுக்கு விரோதமாக நடக்க கூடாது என்றும் கட்டுப்படுத்தப்பட்டது. இவ்வாறு திருமணம் செய்து கொண்டவர்கள் வாழ்வில் வேறு மனிதர்கள் குறுக்கிட மாட்டார்கள். சென்ற தலைமுறையில், திருமணம் என்பது மூன்று நாட்கள் நடக்கும். ஆனால் இன்றைய நாட்களில் பதிவு திருமணம் மற்றும் வரவேற்பு நிகழ்ச்சி மட்டும் வைக்கிறார்கள். மேலும் இன்றைய தலைமுறையினர், திருமணம் செய்துகொள்ளமலேயே சேர்ந்து வாழ விரும்புகின்றனர். திருமணம் மற்றும் அதனை சார்ந்த பல நிகழ்சிகள் நமது கலாச்சாரத்தின் பிரதிபளிப்பாகும். இவற்றை எல்லாம் இன்றைய தலைமுறையினர் இந்த அவசர யுகத்தில் கடைபிடிக்க விரும்புவதில்லை.
கூட்டுக்குடும்பம் :-
முற்காலத்தில், எல்லோரும் கூட்டுக் குடும்பமாக வாழ்ந்தோம். ஆனால் இன்றைய தலைமுறையில் கணவன் - மனைவியிடமே புரிந்துகொள்ளும் தன்மை, விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை மற்றும் சகிப்புத்தன்மை இல்லாத காரணத்தினால், அவர்கள் கூட்டுக்குடும்பமாக வாழ்வதை விரும்புவதில்லை.
வாசலில் கோலம் போடுதல்:
வாசலில் மாட்டுச்சாணம் கரைத்துத் தெளித்து அழகிய கோலம் (அரிசி மாவினால்) போடும் கலாச்சாரம் அழிந்தே போய்விட்டது. மாட்டுச்சாணம் - கிருமி நாசினி மற்றும் அரிசி மாவினால் கோலம் போட்டால் அது எறும்பு மற்றும் சிறிய உயிரினங்களுக்கு உணவாகும் (இதை பூத யக்ஞம் என்பார்கள்). இந்த கலாச்சாரமும் இப்போது மறைந்து கொண்டிருக்கிறது. வீட்டிற்க்குள் எல்லோரும் ஸ்டிக்கர் (!) கோலம் வாங்கி தரையில் ஒட்டிக்கொள்கிறார்கள்.
விருந்தோம்பல் கலாச்சாரம் :-
முக்கியமாக தமிழன் விருந்தோம்புவதில் பெயர் பெற்றவன். திருவள்ளுவர் கூறியதுபோல் -
"செல்விருந்து ஓம்பி வருவிருந்து பார்த்திருப்பான்
நல்விருந்து வானத் தவர்க்கு"
வந்த விருந்தினரை உபசரித்துவிட்டு, இனி வரும் விருந்தினரை உபசரிக்கக் காத்திருப்பவன், தேவர்கட்கு நல்ல விருந்தினன் ஆவான் என்கிறார் வள்ளுவர்.
ஆனால் பெரும்பாலும், இன்றைய தலைமுறையினரோ, வீட்டில் சமைப்பது இல்லை, ஹோட்டலில் சாப்பிடுகின்றனர். இந்த விருந்தோம்பல் கலாச்சாரமும் கொஞ்சம் கொஞ்சமாக நலிந்து வருகிறது.
உடை கலாச்சாரம் :-
தமிழன் என்று சொன்னாலே, வேட்டி மற்றும் சேலை தான் அடையாளங்கள். ஆனால் இன்றோ வேறு நிலைமை. உடை என்பது அவரவர் வசதிக்கு ஏற்ப மாறிவிட்டது. பெரும்பாலான ஆண்கள் பான்ட் (Pant) மற்றும் அரை காற்சட்டை (Bermudaas) அணிவதையே வசதியாக கருதி விரும்பி அணிகிறார்கள். பெண்களும், அவர்கள் பங்கிற்கு, சுடிதார், நைட்டி மற்றும் ஆண்கள் அணியும் இதர ஆடைகளையும் (பண்ட, ஷர்ட்) அணிகிறார்கள். இதை பார்க்கும்போது, இன்றைய தலைமுறையினருக்கு பண்டைய தமிழ் கலாச்சார உடைகளில் நாட்டம் குறைவது தெளிவாகிறது.
மொழி கலாச்சாரம் :-
தமிழரிடம் தமிழில் பேசுங்கள் என பிரச்சாரம் செய்ய வேண்டிய அழிவு நிலைக்கு வந்து விட்டது. நமது செந்தமிழ் மொழி நம் தலைமுறையுடன் முடிந்துவிடுமோவென அச்சம் நெஞ்சினுள் ஊற்றெடுக்கிறது.
கவிஞன் ஒருவன் அருமையாக சொன்னான், பசுமாடு கூட தாயை அம்மாவென சொல்கிறது, பச்சைத்தமிழனோ மம்மினு சொல்கிறான்.
என்று. ஒருவனின் ஆங்கிலப்புலமையே அவனது அறிவுத்திறமையாக கணக்கிடப்படுகிறது. சிந்தியுங்கள், இப்பொழுது நம்மை சுற்றியிருக்கும் பொருட்கள் பலவற்றின் தமிழ் பெயர்கள் கூட நமக்குத் தெரிவதில்லை.
பாட்டி கதை சொல்லும் கலாச்சாரம் :-
அன்றைய நாட்களில், வீட்டில் உள்ள குழந்தைகளுக்கு, பாட்டி நம்முடைய புராணங்கள் மற்றும் இதிகாசங்களிலிருந்து நல்ல கதைகளை சொல்லி அதன் மூலம் குழந்தைகளுக்கு நல்ல எண்ணங்களை விதைத்தார்கள். ஆனால், இப்போது கூட்டுக்குடும்ப கலாச்சாரம் சிதைந்த நிலையில், இந்த கலாச்சாரமும் நலிந்து விட்டது. மேலும், குழந்தைகளும் தொலைகாட்சி பார்ப்பதிலேயே ஆர்வம் காட்டுகின்றனர்.
கலாச்சாரம் வளர / வாழ :-
கலாச்சாரம் என்பது பழம்பஞ்சாங்கம், மேலை நாட்டு நாகரீகம் படி வாழ்வதே அறிவு என்று பரப்புவர்கள் நுனிக்கிளையில் உட்கார்ந்து அடிக்கிளையை வெட்டிக்கொண்டிருக்கிறார்கள் என்பது தெளிவு!
தனி மனிதர்கள் குடும்பத்தில் எப்படி நடந்து கொள்கிறார்களோ, அதுவே சமூக விளைவாகப் பரவும். சமூகத்தில் பரவும் விளைவுகள் யாவும் ஒவ்வொரு தனி மனிதனையும் பாதிக்கும். குடும்பம் என்பது ஒரு சிறிய சமூகம். சமூகம் என்பது ஒரு பெரிய குடும்பம். எனவே, ஒவ்வொரு தனிமனிதனும்
கலாச்சாரத்தை விரும்பி பின்பற்றினால்தான் சமூகம் நன்றாக வளரும். நம்முடைய சந்ததியினரும் அமைதியான வாழ்க்கை வாழ ஏதுவாக இருக்கும்.
With Regards,
Sumathi Srini
“Nothing is impossible as impossible itself says i'm possible”
-
24th Jan 2012, 07:32 PM #3
Re: நீயா? நானா? - 19.01.2012 to 31.01.2012
Hi all,
Sorry for the late entry
.
To be frank I dont know about other youth, but as for me i like to follow the tamil culture.
As said by sumathi akka there may be many people who doesnt like to stay in joint family,dont like to put attire,but still there are youth who like to hear stories from their grandmom, staying with joint family, if there comes any function or festival whole family celibrates with lots of joy and happiness.just imagine celebrating a function or festival with grandpa,grandma,dad,mom,uncle,aunt,nince,cousin,cousin sister and so on. even if u give crores of rupees one cant buy the happiness.
Many wives eat food after their husband have his food even in late nights now a days also.Next about dress,We still see many people wearing saries and dhoties in chennai,may be during work hrs they may wear pants,suits due to the influence of western culture in todays business but during many occations many youth pefer to wear traditional dress only.even in metropolition cities like chennai we can see attire in front of many houses during morning times.
Reg,
M.Syed AshickLast edited by Ashick; 24th Jan 2012 at 07:34 PM.
-
24th Jan 2012, 09:40 PM #4
Re: நீயா? நானா? - 19.01.2012 to 31.01.2012
இன்றைய தலைமுறையினர் தமிழ்க் கலாச்சாரத்தை பின்பற்ற விரும்புகிறார்கள் என்பதில் என் சிறு அறிவுக்கு எட்டிய சில கருத்துக்களுடன் என் வாதத்தை முன்வைக்கிறேன்.
சிறு மகவு பிறந்த உடனேயே நம் தமிழ் கலாச்சாரமும் பின்பற்றப் பட்டது. ஆம் ! நம் அன்னை நமக்கு நிலாச் சோறு ஊட்டியது யாராலும் மறுக்க முடியாதது. நாகரிக மாற்றத்தால் மரத்தடியில் ஊட்டியது இன்று மாடிமீது என்றானது. ஆனால் நிலாச் சோறு மாறவில்லையே.
பள்ளிகளிலும் , கல்லூரிகளிலும் கலாச்சார விழாக்களின் போது விதவிதமான மேற்கத்திய நடனங்கள் இடம் பெறுவது உண்மைதான் ஆனால் முதல் மரியாதையை என்னவோ நம் பரத நாட்டியத்திற்கு என்பது மறுக்கமுடியாத உண்மை.
ஒவ்வொரு திருவிழாக்களின் போதும் நம் தமிழ் கலாச்சாரம் தவறாமல் பின்பற்றப்பட்டுக் கொண்டு தான் இருக்கிறது. பொங்கலின் போது செங்கரும்பும் புதுமஞ்சளும் புத்தரிசியும் கொண்டு புதுப்பானையில் கொண்டாட முடியாதுதான் .
எங்கோ ஒரு மாடி வீட்டில் எரிவாயு அடுப்பில் குக்கரிலாவது பொங்கல் பொங்கிக் கொண்டு தான் இருக்கிறது. பின்பற்ற விரும்பவில்லை என்றால் மாடி வீட்டிலும் பொங்கலிட மனம் விரும்பாது. நாகரிக மாற்றமும் நகர மயமாதலும் கொண்டு வந்த மாற்றத்தால் சில வழி முறைகள் இடம் மாறியிருக்கலாம். நம் கலாச்சாரத்தை பின்பற்றும் ஆவல் மாறவில்லை.
இன்றைய தலை முறையினர் கேரமிலும் கிரிக்கெட்டிலும் காணாத இன்பத்தை நம் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டில் காண்கிறார்கள். அதனால் தான் என்னவோ பல சட்ட ரீதியான சவால்களை சந்தித்தும் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு நடை பெற்றுக்கொண்டிருக்கிறது.
தமிழனின் தனிச் சிறப்பு விருந்தோம்பும் பண்பு. அது இன்றல்ல என்றாயினும் மாறப்போவதில்லை.ஏழைத் தொழிலாளி கூட தான் வீட்டுத் திருமணத்தின் போது நூறுபேருக்காயினும் உணவளிக்க விரும்புகிறான். அது உணவகத்திலிருந்து கொண்டு வரப்பட்டதாயினும் நம் தமிழன் விருந்தோபலை மறந்திருக்கவும் இல்லை;மறுக்கவும் இல்லை.
பாட்டி கதை சொன்ன காலம் மாறியிருக்கலாம் ஆனால் இன்றும் நம் தமிழ் குழந்தைகள் கதை கேட்டுக் கொண்டுதான் இருக்கிறார்கள்; கார்டூன் வடிவத்திலும் சிடி வடிவத்திலும். நம் கலாச்சாரத்தை பின்பற்ற விரும்பாதிருந்தால் கார்டூன் மூலம் கூட அறநெறிக் கதைகள் நம் பிள்ளைகள் செவியை எட்டியிருக்காது.
தமிழில் படிப்பது குறையாக கருதப்பட்டிருந்தால் வலைதளத்தில் தமிழைக் கண்டிருக்க முடியாது.மணலில் 'அ'வை தொடங்கி , புத்தகத்தில் அறிவை வளர்த்து வலைதளத்தில் வெளிப்படுத்திக்கொண்டு இருக்கிறோம் (அதுவும் கூட தமிழில் ).
இன்றைய அதிவேகமான நகர வாழ்க்கை சூழ்நிலையில் நம் கலாச்சாரத்தை நடைமுறை படுத்தும் வாய்ப்பு குறைந்திருக்கலாம் .ஆனால் இருக்கும் வாய்ப்புகளைக் கொண்டு நம் மக்கள் அதை பின்பற்றியும் அதற்காக தங்களை தயார் படுத்தியும் வருகிறார்கள் என்பது நிதர்சனமான உண்மை.எனவேஇன்றைய தலைமுறையினர் தமிழ் கலாச்சாரங்களை பின்பற்றுவதை விரும்புகிறார்கள்.Last edited by nandhunive; 24th Jan 2012 at 09:44 PM.
சிநேகமுடன்
சிவசக்தி
-
25th Jan 2012, 09:54 PM #5
Re: நீயா? நானா? - 19.01.2012 to 31.01.2012
இன்றைய திருமண நிகழ்சிகளுக்கு வரும் ஆண்களில், இன்றைய இளைய தலைமுறையினர் (தமிழ் கலாச்சார உடை அல்லாத) Pant , Shirt மேலும் ஷெர்வானி / குர்தா அணிந்துதான் வருகிறார்கள். அவர்களுக்கு வேட்டி அணிவது எப்படி என்றே தெரியாது போலிருக்கிறது (!). அதேபோல், பெண்கள் சுடிதார் அணிந்துதான் வருகின்றனர். அவர்களுக்கும் சேலை அணிவது எப்படி என்றே தெரியாது போலிருக்கிறது(!) . பெண்களிலும் ஆண்களிலும் வயதானவர்கள் மட்டுமே தமிழ் கலாச்சார உடைகளை அணிகின்றனர். இங்கு எங்கள் வீட்டு திருமணத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றை குறிப்பிட விரும்புகிறேன். என்னுடைய அக்கா மகள் ஆசையுடன் புதிதாக பட்டுப் பாவாடை, தாவணி வாங்கி அணித்து வந்தாள். ஆனால், அந்த திருமணதிற்கு வந்த, அவள் ஒத்த வயதுடைய மற்ற பெண்கள் செய்த கலாட்டாவினால், அப்போதே பாவாடை, தாவணியை விட்டு சுடிதாருக்கு மாறிவிட்டாள் (அன்று மடித்து வைத்த பாவாடை, தாவணி இன்றும் பீரோவில் தூங்குகிறது). சில பெண்கள் சேலை கட்டி வந்தாலும், தமிழ் கலாச்சாரமில்லாத, குஜராத்தி பாணியில் கட்டிக்கொண்டு வருகிறார்கள். மணப்பெண்ணே, திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் குஜராத்தி அல்லது வேறு வடக்கத்திய பாணியில்தான் சேலை கட்டிக்கொள்கிறார்கள். ஏதோ சேலையாவது கட்டிகொள்கிறார்களே என்று திருப்தி பட்டுக்கொள்ள வேண்டியதுதான்.
உடை என்பது தற்காலத்தில் வசதியின் (சௌகரியம்) அடிப்படையில் மாறிவிட்ட நிலையில் சில கலாச்சாரங்கள் விரும்பப்படுவதில்லை என்பதை நாம் ஒத்துக்கொண்டுதான் ஆகவேண்டும்.
திருமணத்தின் போது, திருமணத்திற்கு வந்திருக்கும் அனைவருக்கும் சாப்பாடு போடுவது விருந்தோம்பல் அல்ல. விருந்தோம்பல் என்பது, தினசரி வாழ்வில் வீட்டிற்கு உறவினர்களை, நண்பர்களை அன்புடன் வரவழித்து உபசரிப்பது ஆகும். இன்றைய மிக வேகமான கால ஓட்டத்தில், அவரவர்களுடைய சொந்த வேலைகளைப் பார்க்கவே நேரம் இல்லாத நிலையில், இந்த கலாச்சாரம் இன்றைய தலைமுறையினரால் விரும்பியோ / விரும்பாமலோ விரும்பப்படுவதில்லை.
கார்டூன் மற்றும் சி டி வடிவத்தில் கதை கேட்கும் பட்சத்தில் அதில் ஒரு உயிரோட்டம் இருக்காது. மேலும் அது ஒருவழிப்பாதையாகத்தான் இருக்கும். பாட்டி கதை சொல்லும்போது குழந்தைகள் உடனுக்குடன் சந்தேகங்களை நிவர்த்தி செய்து கொள்ள முடியும். அந்த பிஞ்சு வயதில் அதுதான் உறவுகளுக்கிடையே நேசத்தை வளர்க்க உதவும். ஆனால் இன்றைய காலக் கட்டத்தில் வீட்டில் பாட்டிமார்களே இருப்பதில்லை (பெரும்பாலும் அவர்கள் முதியோர் இல்லங்களில்), அப்படி வீட்டில் இருந்தாலும் ஒன்று அவர்கள் டி வி பார்ப்பார்கள், அவர்கள் கதை சொல்ல ரெடியாக இருந்தால் குழந்தைகள் டி வி அல்லது கம்ப்யூட்டரில் மூழ்கி இருப்பார்கள். மொத்தத்தில் கதைசொல்லும் கலாச்சாரம் விரும்பப்படவில்லை.Last edited by sumathisrini; 26th Jan 2012 at 11:19 AM.
With Regards,
Sumathi Srini
“Nothing is impossible as impossible itself says i'm possible”
-
26th Jan 2012, 04:28 PM #6
Re: நீயா? நானா? - 19.01.2012 to 31.01.2012
வணக்கம் தோழமைகளே.... அனைவர்க்கும் இனிய குடியரசு தின நல்வாழ்த்துக்கள்...... இன்றைய தலைமுறையினர் தமிழ் கலாச்சாரத்தை விரும்புவதில்லை என்னும் தலைப்பில் என் கருத்துக்களை இங்கே வைக்கிறேன்
பண்டைய தமிழர்கள் தமொழ் கலாச்சாரத்தை பெருத்து மதித்து போற்றினர். அனால் இன்றைக்கு தமிழ் கலாசாரத்தை அனைவரும் , குறிப்பாக இன்றைய தலைமுறையினர் பின்பற்ற விரும்புவதில்லை என்பது மிகவும் வருத்ததிற்குரிய அனால் நிதர்சன உண்மையாகும்....
நம் தமிழ் கலாச்சாரத்தில் உடை என்பது மிகவும் முக்கியமான ஒன்றாகும். நம் முன்னோர்கள் அனைத்து விஷயத்திலும் அறிவியலை சார்ந்தே பின்பற்றி வந்துள்ளனர். எடுத்துக்காட்டாக நம் கலாச்சார உடை என்பது பருத்தி புடவை மற்றும் வேட்டி சட்டை தான். ஏன்என்றல் நம் தமிழ் நாட்டின் சீதோஷ்ண நிலைக்கு ஏற்ற உடை என்பது ஆகும்.. அனால் இன்றைய இளைய சமுதாயத்தினரில் எதனை பேர் புடவை அணியவும் வேட்டிசட்டை அணியவும் தயாராக உள்ளனர்..... திருமணதிர்காவது அணிகிறார்களே அன்று நாம் சந்தொஷபடவேண்டியது தான். அனைவரும் ஜீன்ஸ் டாப்ஸ் அணியவே விரும்புகிறார்கள்.
அது மட்டுமின்றி நம் தலை முடியை பின்னி கொள்வது ஒரு கலாசாரம் தான். அனால் இன்றைய தலைமுறையினர் நேரம் இல்லை என்று சொல்லி விடு முடியை வெட்டி கொள்கின்றனர்.... முடி இருந்தாலும் அதை விரித்து விடு கொளவதில்லை. பள்ளி கல்லூரிகளில் கட்டயதினால் பின்னி கொள்கின்றனர்.... வெளி இடங்களுக்கு சென்றால் பின்னபப்டாத அலை பாயும் கூந்தல் தான் அதிகம்.
பெரியோரை மதித்தல்
தமிழர் கலாசாரத்தில் முக்கியமான ஒன்று பெரியோரையும் பெற்றோரையும் மதித்தல். அனால் இந்த கலாசாரம் இன்றைய சமுதாயத்தினரிடம் அணுஅளவும் இல்லை என்பது மிகவும் வேதனைக்குரிய விஷயமாகும்.
மாதா, பிதா, குரு \, தெய்வம் என்பார்கள்... இன்றைய தலைமுறை மாணவர்கள் குருவை மதிப்பதே இல்லை...
பள்ளி மாணவர்கள் முதல் கல்லூரி மாணவர்கள் வரை ஆசிரியர்ரை அவன் அது என்று azhaikindranar idhuvaa தமிழர் கலாசாரம்.
indraya thalimurayinar thamizh kalaachaarathai virumbavathillai enbadhe unmaayaagum"This too will pass away"
regards
Vishnupriyah
-
26th Jan 2012, 04:49 PM #7
Re: நீயா? நானா? - 19.01.2012 to 31.01.2012
hi friends
adhu mattum indri indraya siruvargal nila saadham saapiduvathu illai.. maaraga tvyil serail sooru than saapidugindra nilai erpatuvitadhu....
needhi kadhaigali solvathurkum aalilai adhai ketpadharkum inge aalilai...maaraga computeril games vilaayadugindrana.....petrorgalukku thangal kuzhandhaigal computerai operate seyavadhai matravarku perumayaaga solli kollum nilai erpattu vitadhu...pinbu engu irundhu thamizh kalaachaarathai virumbuvaargal? thamizh kalaacharathil kootu kudumbam enbadhu adithalam pondrathaagum. indha kaalathil adithalme ilaii enum nilayail katidam epadi thamizh kalaachaarathodu valarum.
nooril 10 pangu siruvargal matrum ilaya samuthaayathinare thamizh kalachaarathai virumbugindranar matravar anaivarum adhai virumbuvadhillai......."This too will pass away"
regards
Vishnupriyah
-
26th Jan 2012, 06:25 PM #8
- Real Name
- Hameetha
- Gender
- Female
- Join Date
- Jul 2011
- Location
- Trichy
- Posts
- 8,721
- Blog Entries
- 4
Re: நீயா? நானா? - 19.01.2012 to 31.01.2012
ஹாய் தோழமைகளே அனைவரும் நலமா?
இன்றைய தலைமுறையினர் தமிழ் கலாச்சாரங்களை பின்பற்றுவதை விரும்புவதில்லை என்பது என் கருத்து.
முன்னமெல்லாம் ஒரு குழந்தை பிறந்தால் தமிழ் சார்ந்த பெயரை வைக்க பெற்றோர் விரும்பினர், ஆனால் இப்பொழுதோ வித்தியாசமாகவும், பேஷனாக இருக்க வேண்டும் என்று இணையத்தில் தேடோ தேடு என்று தேடுகிறார்கள். அல்லது பெற்றோர் அவ்வாறு தமிழ் பெயரை சுட்டினாலும் இன்றைய பிள்ளைகள் அவற்றை விரும்புவது இல்லை. இப்படி தான் இருக்கிறது இன்றைய தலைமுறையினர் தமிழ் கலாசாரம்.
அதே போல் ஒரு வீட்டில் பெண் பார்க்க வந்தார்கள் என்றால், பெண் வீட்டினர் கேட்கும் முதல் கேள்வி பெண் மற்றும் பையனை தனி குடித்தனம் வைப்பீர்களா என்று தான், ஏன் என்றால் கூட்டு குடும்பம் என்றால் தங்கள் பெண்ணால் சமாளிக்க முடியாது என்று வேறு காரணம் சொல்கிறார்கள். வேலை நிமிர்த்தமாக தனி குடித்தனம் இருந்தால் தவறு எதுவும் இல்லை, ஆனால் ஒரே ஊரில் இருந்து கொண்டு தனி குடித்தனம் இருப்பது தவறு தானே.
தனி குடித்தனம் இருப்பதால் நிறைய நல்ல விஷயங்களை, தமிழ் சார்ந்த மரபுகளை கற்றுகொள்ள முடியாது, சிறு பிள்ளைகளுக்கு கதை சொல்ல தாத்தா, பாட்டி இருக்க மாட்டார்கள், அதே போல ஒரு துணைகோ, ஆருதல்கோ ஆள் இருக்க மாட்டார்கள்.
இப்பொழுதெல்லாம் நம் பெண்கள் நெற்றி வகிடில் குங்குமம் இட்டு கொள்வதையே மறந்து விட்டார்களா? சேலை கட்டுவதையே சில பெண்கள் விரும்புவது இல்லை என்பது வேதனைக்குரிய விஷயமாக இருக்கிறது. வேளைக்கு செல்லும் பெண்கள் சுரிதாரையே அணிய விரும்பிகிறார்கள், காரணம் கேட்டால் நேரம் போதவில்லை என்று சொல்கிறார்கள், சேலை கட்டுவதற்கு 5 நிமிடம் போதாதா, திருமணம் ஆகாத பெண்கள் என்றால் பரவால்லை, திருமணம் ஆனா பெண்கள் எப்பொழுதும் சுரிதார் அணிவது நன்றாகவா இருக்கிறது.
என்னை பொறுத்தவரை அனேக ஆண்கள் சேலை அணியும் தமிழ் பெண்ணையே அதிகம் விரும்புகிறார்கள், ஆனால் நம் பெண்களோ சேலை அணிவதே இல்லை.
ஒரு பெண் அழகாக சேலை அணிந்து, தலையில் பூ சூடி, காதில் ஒரு ஜிமிக்கி அணிந்தால்,அந்த பெண் அழகோ அழகாக இருப்பாள். ஆனால் நம் பெண்கள் தான் அதை செய்வதே இல்லையே.
இப்பொழுதெல்லாம் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில், மாப்பிள்ளை செர்வானியும், பெண்கள் சோல்லியையே அணிய விரும்புகிறார்கள், இது எல்லாம் அவரவர் விருப்பம் என்றாலும், வேட்டி, சேலை அணிந்து நின்றால் எவ்வளவு அழகாக இருக்கும்.
இது போல இன்னும் நிறைய இருக்கிறது, நம் மக்கள் தான் இதை பற்றி எல்லாம் புரிந்து கொண்டு, நம் தமிழ் கலாச்சாரத்தை போற்ற வேண்டும் தோழர்களே.
-
28th Jan 2012, 09:32 PM #9
Re: நீயா? நானா? - 19.01.2012 to 31.01.2012
இன்றைய தலைமுறையினர் தமிழ் கலாச்சாரங்களை பின்பற்றுவதை விரும்புகிறார்களா ? விரும்பவில்லையா?
அன்புள்ள தோழர் தோழிகளுக்கு.
உலகம் உள்ளவரை உணர்வு, கலாசார, பண்பாடு சம்பத்தபட்ட விவாதங்களுக்கு உண்டு இல்லை என்று தெளிவான பதில் சொல்ல முடியாது, ஏன் என்றாள் எது கலாசாரம் என்பதை தெளிவுபடுத்த முடியாது.
எனினும் விகிதாச்சார அடிபடையில் இன்றய தலைமுறையினர் கலாச்சாரதை
விரும்பவில்லை என்பதே என் கருத்து.
இந்த கலாசாரம் சம்பத்தபட்ட விவாதங்கள் பெரும்பாலும் உடையில் தொடங்கி உள்ளாடையில் முடிந்த பல விவாத மன்றங்களை தினமும் ஊடகம் வழி பார்க்கிறோம். புடவை, வேட்டியை கட்டி இழுத்து, புரண்டு, தொங்கிய பல ஜவுளி கடை பேச்சாளர்கள் ஊடகத்தின் ஊடே நான் கண்டதுண்டு.
அப்படியெல்லாம் இல்லாமல் உடை முதல் உள்ளம் வரை,விருந்தோம்பல் முதல் வாழ்வியல் சிந்தனை தொட்டு வந்த பெண்மை வாசிகளுக்கு (sumathisrini , ashik, nandhini, vishnupriyah, hameetha ) தலை வணங்குகிறேன்.
Nepolian hillசொல்லுவார் நீ விரும்பினாலும் விரும்பாவிட்டாலும், மாற்றம் வந்தடையும், உலகம் மாறிக்கொண்டே இருக்கும் அப்படிபட்டதே கலாச்சாரமும்.
நாம் கடந்துவந்த கலாசார படிநிலைகள் பலவுண்டு. இவை நேற்றய மழையில் முளைத்த காளான்கள் இல்லை.
நாம் நம்முடய கலாசாரத்தின் காலநிலையை சிறிது இங்கு பார்போம்.
- தொல்பழங்காலத்தில் தமிழர்
- தலைச்சங்கம்
- இடைச்சங்கம்
- கடைச்சங்கம் - சங்க காலம்
- சேரர்
- முற்கால சோழர்
- முற்கால பாண்டியர்
- களப்பிரர்
- பல்லவர்
- பிற்கால சோழர்
- பிற்கால பாண்டியர்
- இசுலாமியர் ஆட்சி
- நாயக்கர் ஆட்சி
- மராத்தியர் ஆட்சி
- ஆங்கிலேயர் ஆட்சி
- தமிழ்நாடு
- உடை
- உணவு
- கலை
- மருத்துவம்
- பண்பாடு
- மொழி
- காதல்
- வாழ்வியல் சிந்தனை
- வீரம்
- விருந்தோம்பல்
உணவு: தமிழ் இலக்கிய ஆதாரங்களைக்கொண்டு அ. தட்சிணாமூர்த்தி தனது தமிழர் நாகரிகமும் பண்பாடும் என்ற நூலில் "பண்டைய தமிழரின் உணவு" பற்றி குறிப்புகள் தந்துள்ளார். வாழ்த நிலத்துக்கேற்பவும் குலத்துக்கேற்பவும் பண்டைய தமிழரிடையே உணவுகள் வேறுபடுகின்றன. எனினும், அனேக தமிழர்கள் சோறும், மரக்கறியும், புலாணுவும், மதுவும் விரும்பியுண்டனர் என்பது தெரிகின்றது. நெற்சோறு, வரகுச்சோறு, வெண்ணற்சோறு, நண்டுக் கறி, உடும்புக் கறி, வரால்மீன் குழம்பு, கோழியிறைச்சி வற்றல், பன்றியிறைச்சி, முயல், ஈயல், மாங்கனிச் சாறு, மாதுளங்காய்-மிளக்ப்பொடி-கறிவேப்பிலை பொரியல், ஊறுகாய் என தமிழ்நாட்டில் வாழ்ந்த பலதரப்பட்டோர் உண்ட உணவுகளை தமிழ் இலக்கிய சான்றுகளோடு அ. தட்சிணாமூர்த்தி விபரிக்கின்றார்.
"கடுகு இட்டுக் காய்கறிகளை தாளிப்பது", "பசுவெண்ணையில் பொரிப்பது", "முளிதயிர் பிசைந்து தயிர்க் குழம்பு வைப்பது", கூழைத் "தட்டுப் பிழாவில் ஊற்றி உலரவைப்பது", "மோரில் ஈயலை ஊறப்போட்டு புளிக்கறி சமைப்பது" போன்ற பழந்தமிழர் சமையல் வழிமுறைகளையும் அ. தட்சிணாமூர்த்தி சுட்டியுள்ளார். மேலும், தென்னைக் கள்ளு, பனங்கள்ளு, வீட்டில் சமைத்த "தோப்பி" என்ற ஒருவகைக் கள்ளு ஆகியவற்றை பழந்தமிழர்கள் விரும்பி உண்டனர் என்கிறார். ஆனால் இன்று நாம் கலாச்சாரம் என்று கருதும் இட்லி 700 ஆண்டுகளாக மட்டுமே பயன்படுதுகிறோம் சிலர் அது 17 ஆம் நூற்றாண்டில் இருந்து தான் உட்கொள்கிறோம் என்றும் சொல்கிறார்கள். இன்று நாம் எடுதுகொள்ளும் உணவு மேற்கத்திய கலாசாரத்தின் மிச்சங்களே.இவை பதபடுதபட்ட, container packaged உணவுகளே அதிகம்.மேலும் subway, kfc என்றும் துரித உணவுகள் என்று உண்டு நம் நாடு சூழலுக்கு ஓத்து வராத உணவுகளை உட்கொண்டு 120 காலம் ஆரோக்கியதுடன் வாழ்த்த நாம் இன்று 25 களில் glucometerரை நோண்டி கொண்டு இருக்கிறோம்.
ஒரு சம்பவம் என் வாழ்வில் நடந்தது சென்னையில் என் நண்பனுடன் ஒரு உயர்தர வெளிநாட்டு hotelகு சென்றேன் அங்கே இருந்த பட்டியலில் எது எப்படி இருக்கும் என்று எனக்கு தெரியாது அதனால் என் நண்பனிடம் “மச்சான் எனக்கு இதெல்லாம் சாப்பிட்டு பழக்கம் இல்லை நீயே ஏதாவது சொல்லுடா என்றேன் என் பக்கத்தில் இருந்த ஜீன்ஸ் போட்ட post modernism பெத்து போட்ட சிறுமி சிரித்தாள்”, அவள் சிரிப்பில் அந்த அமெரிக்க ஏகாதிபதியமே தெரிந்தது. Menu cardல் உள்ளது தெரியாவிட்டால் பெருநகரங்களில் வாழ கூடாது என்ற உண்மையும் எனக்கு தெரிந்தது. அதன் பிறகு நடந்தது தான் கூத்து, அந்த சிறுமி wash basin இல் கழுவாமல் சாப்பிட்ட தட்டில் கை கழுவி விட்டு சென்று விட்டால் அங்கே வந்த supplier மற்றும் துடைக்க வந்தவன் அந்த தட்டை பார்த்து சொன்ன வார்தகள் சொல்ல தகா. ஒழுங்கா அவ அம்மா சொல்லி வளர்த்திருந்த இப்படி இருக்குமா எல்லாம் பண கொழுப்பு என்று சொன்னான், menu card இல் உள்ளது தெரியாத இவ்வளவு பெரிய பையனா நான் இருக்கிறேனே என்பதைவிட பண்பாடு தெரியாத அந்த பெண்ணை பற்றியே நான் கவலை பட்டேன்.
தொடர்ச்சி அடுத்த பதிவில்........................................Last edited by surya; 28th Jan 2012 at 09:41 PM.
தமிழ்தாசன்.
Suriya Narayanan.
...........................................................................................................................
"நான் அடைப்புகுறிக்குள் வாழ்கிறேன்
பிரபஞ்சத்தின் எல்லை கோடுகள் நான் வரைந்தவையே"
"சொல்லும் பொருளுமற்று சும்மா இருக்கவே அல்லும் பகலும் எனக்கு ஆசை பராபரமே"
-
28th Jan 2012, 09:38 PM #10
Re: நீயா? நானா? - 19.01.2012 to 31.01.2012
சமயம்: தமிழர்கள் இறை நம்பிக்கை உடையவர்களாகவே பெரும்பாலும் இருந்து வந்திருக்கின்றார்கள். சங்கத் தமிழர்கள் உலகாயுத போக்கு அல்லது இயற்கை வழிபாட்டையே கொண்டிருந்தனர் என அறிஞர் சிலர் வாதிட்டாலும், தமிழர்கள் முற்காலம் தொட்டே பல்வேறு சமய மரபுகளை அறிந்தும் பின்பற்றியும் வந்துள்ளார்கள். சைவம், வைணவம், பெளத்தம், சமணம், இந்து, இசுலாம், கிறித்தவம் ஆகிய பெரும் சமய மரபுகளைத் தமிழர்கள் பல்வேறு கால கட்டங்களில் வெவ்வேறு போக்குகளுடன் பின்பற்றி வந்துள்ளார்கள். பெரும்பாலான தமிழர் தமது கடவுளாக முருகனை வணங்குகின்றனர். முருகனை விட அய்யனார், மதுரை வீரன், கண்ணகி (கடவுள்), இசக்கி அம்மன், கறுப்புசாமி, சுடலை மாடன் ஆகிய காவல் தமிழ்க் கடவுள்கள் வழிபாடும் பரவலாக இருக்கின்றது.
நாயன்மார்கள் மற்றும் ஆழ்வார்களின் பக்தி இயக்கம், வள்ளலார் இராமலிங்க அடிகளைப் பின்பற்றிய மனிதநேய இயக்கம், அய்யாவழி ஆகியவை தமிழ்ச் சூழலில் தோன்றி சிறப்புற்றவைதான்.
இன்று திருக்குறளைப் பொது அற மறையாகவும், இறை நம்பிக்கையை ஏற்றும், அனைத்து சமயங்களுக்கு இடமளிக்கும் பண்பைப் பேணியும் தமிழர் சமய சிந்தனை, நடைமுறைப் போக்குகள் அமைகின்றன. அதே வேளை, இறைமறுப்பு (நாத்திகம்), அறியாமைக் கொள்கை (Agnosticism), உலகாயதக் கொள்கை, இயற்கை நம்பிக்கை கொண்ட பல தமிழர்களும் உள்ளார்கள். இது மட்டுமின்றி சூரிய வழிபாடு (சௌரம்), முருகனை மட்டும் வழிபடும் கௌமாரம், தமிழ் நாட்டில் சிறந்து விளங்கியவாயே. இன்று இந்த சமய நம்பிக்கையில் தான் மிக பெரிய குறையே வழிபடும் தெய்வம் எதுவென்று தெரியாது வழிபடும் நோக்கம் கிடையாது, எதற்காக வந்தோம் என்று தெரியாமல் சுற்றுலா போல் திரியும் கூட்டம் நம் கண்ணெதிரே உண்டு. இவை கலாச்சாரதை மீட்டெடுக்க கடவுளே வரவேண்டும் என்பதன் சிறு குறிப்பு.
கலை: பல்லாங்குழி, கபடி, சிலம்பம், பாண்டி போன்ற விளையாடுகள் தமிழரின் உடல் மற்றும் அறிவு சம்மதமான மேன்மையை உருவாகியது ஆனால் இன்றோ ipl இல் ஊழல் என்றும், தேசிய விளயாட்டு புறக்கணிபும், individual player களுக்கு முக்கியத்துவம் இன்மயும் என்று அரசியலில் மூழ்கடிக்கபட்டுளது.
மருத்துவம்: அன்று நம் சித்தர்கள் கண்டு சொன்ன நாடி சாஸ்திரம். உடல் கூறு உண்மைகள், மூலிகை ரகசியம் என பல உண்மைகள் இயற்கை வழி மருத்துவம் இன்று அழிவு நிலயில் இருக்கிறது. சீரான வாழ்க்கை நெறிகளை சொல்லி கொடுதது இன்று மருந்தும் பக்க விளைவுகளும் பயம் முருதுகின்றன. (உ.தா) எனக்கு sinus பிரச்சனை காக கொடுத்த மருந்து கண் அழுத்த நோய்க்கு (glaucoma )வுக்கு கொண்டு சென்றுள்ளது. அரை நாளில் யோசித்து type பண்ணவேண்டிய இந்த கட்டுரை ஒரு வாரம் பிடிதது என் கண் கோலாறே காரணம்.
பண்பாடு : தமிழர் சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே பண்பாட்டிலும் நாகரிகத்திலும் சிறந்திருந்தனர் என்பதை சங்க இலக்கியங்கள் உணர்த்துகின்றன. மொழிக்கு இலக்கணம் வகுத்த தமிழர்கள் மனித வாழ்வியலுக்கும் இலக்கணம் வகுத்து வாழ்ந்தனர்.
காதல்: காதல் வாழ்வு தமிழர்களுக்கு அறத்திலிருந்து மாறுபடாமல் அன்பின் வழிப்பாட்டாக அமையும்.
“மங்கலம் என்ப மனைமாட்சி மற்றதன்
நன்கலம் நன்மக்கட் பேறு”
என்று வள்ளுவரும் காதல்வழிவந்த மனை மாட்சியைச் சிறப்பிக்கின்றார்.அகநானூற்று கூறும் காதல் தர்மங்கள் இன்றும் ஏட்டளவில் தான் உள்ளது மனிதனுக்கு மனிதன் மாறும் இந்த காதல் on the basis of the percentage இப்போது குறைந்து வருகிறது. மேலும் பிறன் மனை நோக்குதல்,தகா புணர்ச்சி எல்லாம் நாளய செய்திதாளிலும் ஒரு coloum வரும்.
வீரம் : புறத்திணை பகுதிகளில் தமிழர்களின் போர்முறைகள் தொல்காப்பியத்தில் காணப்படுகின்றன. மேலும் வீரர் அல்லாதவர்கள், புறங்காட்ட ஓடுவார், புண்பட்டார், முதியோர், இளையோர், இவர்கள் மீது படைக்கலம் செலுத்தலாகாது என்பதும் புறநானூற்றால் அறிய முடிகிறது. இன்று வீரம் நான் எது என்று கூற கூடாது தமிழ் சினிமா இலக்கணம் வகுத்து வைதிருக்கும் போது.
விருந்தோம்பல்: அறியாதவர்களையும் அழைத்து உணவளித்து இடமளித்து உபசரித்து மகிழ்ந்தனர் தமிழர்.
“செல்விருந்து ஓம்பி வருவிருந்து பார்த்திருப்பான்
நல்விருந்து வானத் தவர்க்கு” என்கிறார் திருவள்ளுவர்.
விளக்கம்:விருந்தினர்களை வெளியில் இருக்கச் செய்து தான் மட்டும் வீட்டின் உள்ளே உண்ணுதல் சாவாமைக்கு மருந்தாகிய அமிர்தமாக இருந்தாலும் வேண்டப்படுவதில்லை என்பதை வள்ளுவர்,இன்று விருந்தோம்பல் எல்லாம் buffet system என்றும் புன்னகை இல்லாமல் materialistic காக இருக்கின்றது, இவை நீங்கள் செல்லும் இல்லங்களிலும் உண்டு.சில சமயம் நம் இல்லங்களிலும்.
மொழி : தமிழை பழித்து வாழ்க்கை நடத்த தயார் என் தமிழ் கூட்டம், எனக்கு தெரிந்த தெலுங்கு, மற்றும் சில தமிழ் நாட்டில் வாழும் சிறுபான்மை மக்கள் வீட்டில் அவர்கள் மொழியயே வீட்டில் பயன் பாடுதுகிறாகள், மேலும் உறவு முறைகளை அவர்கள் மொழியில் கூப்பிடாவிட்டால் தண்டனை கொடுக்கும் குடும்பங்களும் உண்டு. இந்த தமிழன் மட்டும் தான் mummy, daddy என்ற சொல்லுக்கு மயங்கும் கூட்டம். தமிழில் இருக்கும் எந்த இறை நூலும் தமிழனுக்கு விருப்பம் இல்லை. விளைவு நந்தனுக்கும், தமிழுக்கும் சிதம்பரதில் ஒரே நிலை. அன்று பாலிக்கு பால் வார்தோம் களபிறர்கள் காலத்தில் இன்று நீச மொழியாக தெருவில் நிற்க்கவைகிறோம்.
சில கலாசார சீரழிவு:
- தமிழ் வழி திருமணம் மறைந்து வருகிறது
- குழந்தைகளுக்கு தமிழில் பெயர் வைக்க தயங்குதல்
- சடங்கு சம்பிரதாயாம் இவற்றை செய்ய அசௌகரியம் படுவது
- குல தெய்வ வழிபாடு குறைந்து வருகிறது
- நம் நம்முடய மூதாதையர் யார் என்று தெரிந்து வைத்து கொல்லாதாது
- ஈகை,கொடை,கற்பு,உலக ஒருமைப்பாடு இவைகளின் முன்னேற்றதிற்கு துளி கூட கவனம் செலுதாமை.
இது நிச்சயம் ஆடுத்து வரும் தலைமுறையின் அழிவு பாதைகளை செப்பனிடும் என்ற பயத்துடன் முடிதுகொள்கிறேன்.
வாழ்க தமிழ்!!!
வெல்க தமிழ்!!!Last edited by surya; 28th Jan 2012 at 09:56 PM.
தமிழ்தாசன்.
Suriya Narayanan.
...........................................................................................................................
"நான் அடைப்புகுறிக்குள் வாழ்கிறேன்
பிரபஞ்சத்தின் எல்லை கோடுகள் நான் வரைந்தவையே"
"சொல்லும் பொருளுமற்று சும்மா இருக்கவே அல்லும் பகலும் எனக்கு ஆசை பராபரமே"
Similar Threads
-
நீயா? நானா? - Neeya? Naana?
By Parasakthi in forum General DiscussionsReplies: 7Last Post: 5th Apr 2012, 02:04 PM -
நீயா? நானா? - 01-01-2012 to 15-01-2012
By Parasakthi in forum General DiscussionsReplies: 23Last Post: 22nd Jan 2012, 08:23 AM -
ஸ்ரீமந் நடனகோபால நாயகி சுவாமிகள்.
By vijigermany in forum SaintsReplies: 0Last Post: 10th Dec 2011, 12:49 AM -
ஜாலியாக ஒரு 'நீயா? நானா?'
By sumathisrini in forum Media TalkReplies: 6Last Post: 22nd Oct 2011, 12:01 AM -
நீயே நானாக
By Kavibhanu in forum PoemsReplies: 45Last Post: 31st Jul 2011, 10:46 PM


94Likes
LinkBack URL
About LinkBacks

Reply With Quote
Bookmarks