Did this page help you? Let your friends know about us!!!

Give it a
Page 2 of 4 FirstFirst 1234 LastLast
Results 11 to 20 of 33
Like Tree177Likes

Neeya? Naana? - 03.2.2012 to 27.02.2012

Discuss here on Neeya? Naana? - 03.2.2012 to 27.02.2012 within the General Discussions forums, part of the The Lounge forum; அனைவருக்கும் இனிய வணக்கங்கள் காதலித்தவரை கரம்பிடிப்பதா (து)? கரம்பிடித்தவரை காதலிப்பதா (து)? இதில் எது சிறந்த இல்லறத்திற்கு தேவையானது. நல்லதொரு தலைப்பு. இங்கே ஏற்கனவே சங்கீதா, ஆஷிக் ...

  1. #11
    Anjusanju's Avatar
    Anjusanju is offline Friends's of Penmai
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    Coimbatore
    Posts
    107

    re: Neeya? Naana? - 03.2.2012 to 27.02.2012



    அனைவருக்கும் இனிய வணக்கங்கள்

    காதலித்தவரை கரம்பிடிப்பதா (து)? கரம்பிடித்தவரை காதலிப்பதா (து)?

    இதில் எது சிறந்த இல்லறத்திற்கு தேவையானது.


    நல்லதொரு தலைப்பு.


    இங்கே ஏற்கனவே சங்கீதா, ஆஷிக் மற்றும் முத்துசெல்வி மூவரும் கரம்பிடித்தவரை காதலிக்கும் போது தான் அவர்களது இல்லறம் சிறந்து விளங்கும் என்று பேசி இருக்கிறார்கள்.

    நீங்கள் சொல்லும் கருத்துக்கள் அனைத்தும் சில பக்குவபடாத காதல்களுக்கு மட்டுமே பொருந்தக்கூடியது.

    என் கருத்து என்னவென்றால், காதலித்தவரை கரம்பிடிப்பது தான் சிறந்த இல்லறத்திற்கு வழிவகுக்கும். இன்றும் எத்தனையோ காதலர்கள் ஒருவருகொருவரை உண்மையாய் நேசித்து, அன்பு செலுத்தி, ஒருவரை புரிந்து கொண்டு, ஒருவருக்கு ஒருவர் விட்டுகொடுத்து காதலின் பொருளுணர்ந்து காதல் செய்து கொண்டு தான் இருக்கிறார்கள். காதல் என்பது வெறும் புறக்கவர்ச்சி மட்டும் அல்ல. காதலுக்கு அககவர்ச்சி தான் முக்கியம்.

    காதலிக்கும் முன்பு இருவரும் நட்புணர்வுடனே பழக ஆரம்பித்து இருப்பார்கள். இருவரும் தன்னை பற்றியும் தன் குடும்பத்தை பற்றியும் பழக்க வழக்கங்கள் பற்றியும் எதிர்பார்ப்புகள் பற்றியும் நிறைய பேசி இருப்பார்கள். பிடித்தது பிடிக்காதது இப்படி பேசி பழகும் போது ஏதோ ஒரு விஷயத்தில் இருவரின் மனமும் கவரப்பட்டு நட்பு காதலாக மாறிவிடுகிறது. ஒருவர் மற்றவர் மேல் வைத்து இருக்கும் அதீத அன்பின் வெளிப்பாடு தான் காதல். ஒரு நல்ல நண்பன்/தோழியால், நல்ல வாழ்கை துணையாக இருக்க முடியும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

    சிறந்த இல்லறத்திற்கு தேவையானது நல்ல புரிதலும் விட்டுக்கொடுக்கும் மனப்பான்மையும் தான். இவ்விரு பண்புகளும் காதலித்தவரை கரம்பிடிப்பவர்க்கு அதிகமாக இருக்கும். தான் நேசிக்கும் தன்னை நேசிப்பவற்காக சிலதை விட்டுக்கொடுப்பதில் தவறில்லை என்னும் மனபக்குவம் காதலித்து மணம் புரிந்தவர்களிடம் இருக்கும். இதனால் அவர்கள் இல்லற வாழ்க்கையும் இனிமையாகவே இருக்கும். திருமணதிற்கு பின் தன் துணையை சரிவர புரிந்து கொள்ள வாய்ப்புகள் மிக குறைவே. மாமியார் மாமனார் மைத்துனர் நாதனார் என குடும்ப பொறுப்புகள் ஏராளம் இருக்கும், இருவரும் மனம் விட்டு பேசவே நேரம் போதாது. இதில் எங்கே ஒருவரை ஒருவர் புரிந்து விட்டுகொடுத்து வாழ்வது.

    நடைமுறையில் பெரியவர்களால் நிச்சயிக்கப்படும் திருமணங்களில் கூட, நிச்சயம் முடிந்து சில மாதங்கள் கழித்தே திருமண தேதி முடிவு செய்கின்றனர். எதற்காக? பெண்ணும் பையனும் மனம் விட்டு பேசி ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ள தானே அந்த இடைவெளி. அப்படி பார்த்தால் இதுவும் ஒருவகை காதல் திருமணம் என்றே சொல்லலாம். அதாவது காதலிப்பவரை மணந்து கொள்வது. என்ன பையன் அல்லது பொண்ணு மட்டும் பெற்றோர்களின் தேர்வு.

    எனவே காதலிப்பவரை கரம்பிடிப்பது தான் சிறந்த இல்லறத்திற்கு தேவையானது.

    நன்றி
    அ ஞ் ச னா !!!


  2. #12
    nandhunive's Avatar
    nandhunive is offline Newbie
    Real Name
    NANDHINI
    Gender
    Female
    Join Date
    Sep 2011
    Location
    namakkal
    Posts
    27

    re: Neeya? Naana? - 03.2.2012 to 27.02.2012

    பெண்மை நண்பர்களுக்கு இனிய வணக்கம்.
    கரம்பிடித்தவரை காதலிப்பதே இல்லறத்திற்கு சிறந்தது என்று என் வாதத்தை முன் வைக்கிறேன்.
    திருமணத்திற்கு முன்பு ஒருவர் பலரை விரும்பி இருக்கலாம்.ஒருவர் பலரால் விரும்பப் பட்டிருக்கலாம். திருமணத்திற்கு முன்பான காதலில் ஒருவரை ஒருவர் புரிந்து கொள்வதற்க்கான வாய்ப்புகள் அதிகம் தான். ஆனால் அளவுக்கு அதிகமான புரிந்து கொள்ளலே அடுத்தவரை தேர்ந்தெடுக்க வழிசெய்துவிடுகிறது.இது ஓரிரு முறை என்றால் ஒத்துக்கொள்ளலாம்.இதுவே பலருக்கு வழக்கமாகி விடும்போது உண்மையான காதல் மறைந்து விடுகிறது.

    திருமணத்திற்கு முன்பான காதலில் அழகின் வழி சென்று தான் அகத்தை அறிய முடியும். ஆனால் திருமணத்திற்கு பின்பான காதலில் அகத்தின் (அன்பின்) வழி சென்று அழகை உணர முடியும்.திருமணம் நிச்சயிக்கப்பட்ட பின்பு கால இடைவெளி தருவது ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ளத்தான்.இறுதியில் அவை திருமணத்தில் தான் முடிகிறது.
    பெரும்பாலான திருமணத்திற்கு முன்பான காதல் புரிந்து கொள்ளப் பட்டிருக்கலாம் ஆனால் பிரிதலில் முடிகிறது இல்லை எனில் திருமணத்திற்கு பின்பு மணவிலக்கில் முடிகிறது.

    திருமணத்திற்கு முன்பு அதிகப்படியனவர்கள் தான் காதலிக்கும் நபரை தன்னவளாக (தன்னவனாக) நினைப்பதில்லை.ஆனால் திருமணத்திற்கு பின்பு ஆணாயினும் பெண்ணாயினும் தன் துணையை தன்னவனாக தனக்கானவள் ஆக எண்ணுகின்றனர்.

    இனிய இல்லறம் என்பது இருவர் மட்டும் இணைந்தது அல்ல. பல உறவுகளும் உறவாடி வழிநடத்துவதே இனிய இல்லறம். அத்தகைய இல்லறத்தில் கிளை உறவுகளும் காதலை வளர்க்க உதவுகிறது.பலவகை உறவுகள் கணவன் மனைவி இடையே தொந்தரவாய் இருப்பதில்லை.மாறாக இருவருக்கும் இடையே உணர்வுகளை புரிந்து கொள்ள துணையாய் இருக்கின்றனர்.


    காதல்
    சிலருக்கு ஆக்கத்தையும்
    பலருக்கு அழிவையும் தரும்
    அஸ்த்திரம்.
    இது காதலை பற்றிய என் முதல் வரிகள்.


    உன்னவர் மீது குற்றமிருந்தாலும்
    அவருக்கு துணை நிற்கும் உன்னை பார்த்து
    பொறமை பட்ட நாட்கள் பல.

    நீங்கள் கோபத்தில் இருக்கும் போது
    சிரிக்க வைக்க முயன்று தோற்று போயிருக்கிறோம்.
    ஆனால் உன்னவள் முகம் பார்க்க சொன்னவுடன்
    கொபத்தனழ் மறைந்து புன்னகை பூக்கள்

    அரும்பி விடுகின்றன.

    இது சென்ற வருட த்தில் என் பெற்றோரின் திடுமான நாளிற்காக அவர்களுக்கென எழுதியது.அவர்களை ஒவொவொரு முறை பார்க்கும் போதும் நான் உணர்வது இது.
    காதலித்தவரை கரம் பிடிப்பது சிலருக்கு மகிழ்ச்சியை தரலாம். ஆனால் இல்லறத்தின் மகிழ்ச்சிக்கு கரம் பிடித்தவரை காதலிப்பதே சிறந்தது.
    சிநேகமுடன்
    சிவசக்தி

  3. #13
    Parasakthi's Avatar
    Parasakthi is online now Super Moderator
    Blogger
    Yuva's of Penmai
    Real Name
    Parasakthi KS
    Gender
    Female
    Join Date
    May 2010
    Location
    Coimbatore
    Posts
    8,710
    Blog Entries
    1

    re: Neeya? Naana? - 03.2.2012 to 27.02.2012

    நீயா நானா அன்பர்களுக்கு,இம்மாதத்தில் இருந்து நீயா நானா கலந்துரையாடலுக்கான காலக்கெடு 15 நாட்களில் இருந்து ஒரு மாதமாக நீட்டிக்கபடுகிறது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன் . இவ்விவாதத்தின் தீர்ப்பும் , சிறப்பாக வாதம் செய்தவரின் விவரமும் இம்மாத இறுதியில் அறிவிக்கப்படும்....

  4. #14
    Parasakthi's Avatar
    Parasakthi is online now Super Moderator
    Blogger
    Yuva's of Penmai
    Real Name
    Parasakthi KS
    Gender
    Female
    Join Date
    May 2010
    Location
    Coimbatore
    Posts
    8,710
    Blog Entries
    1

    re: Neeya? Naana? - 03.2.2012 to 27.02.2012

    Quote Originally Posted by Anjusanju View Post
    அனைவருக்கும் இனிய வணக்கங்கள்

    நீங்கள் சொல்லும் கருத்துக்கள் அனைத்தும் சில பக்குவபடாத காதல்களுக்கு மட்டுமே பொருந்தக்கூடியது.

    காதலிக்கும் முன்பு இருவரும் நட்புணர்வுடனே பழக ஆரம்பித்து இருப்பார்கள். இருவரும் தன்னை பற்றியும் தன் குடும்பத்தை பற்றியும் பழக்க வழக்கங்கள் பற்றியும் எதிர்பார்ப்புகள் பற்றியும் நிறைய பேசி இருப்பார்கள். பிடித்தது பிடிக்காதது இப்படி பேசி பழகும் போது ஏதோ ஒரு விஷயத்தில் இருவரின் மனமும் கவரப்பட்டு நட்பு காதலாக மாறிவிடுகிறது. ஒருவர் மற்றவர் மேல் வைத்து இருக்கும் அதீத அன்பின் வெளிப்பாடு தான் காதல். ஒரு நல்ல நண்பன்/தோழியால், நல்ல வாழ்கை துணையாக இருக்க முடியும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

    சிறந்த இல்லறத்திற்கு தேவையானது நல்ல புரிதலும் விட்டுக்கொடுக்கும் மனப்பான்மையும் தான். இவ்விரு பண்புகளும் காதலித்தவரை கரம்பிடிப்பவர்க்கு அதிகமாக இருக்கும். தான் நேசிக்கும் தன்னை நேசிப்பவற்காக சிலதை விட்டுக்கொடுப்பதில் தவறில்லை என்னும் மனபக்குவம் காதலித்து மணம் புரிந்தவர்களிடம் இருக்கும். இதனால் அவர்கள் இல்லற வாழ்க்கையும் இனிமையாகவே இருக்கும். திருமணதிற்கு பின் தன் துணையை சரிவர புரிந்து கொள்ள வாய்ப்புகள் மிக குறைவே. மாமியார் மாமனார் மைத்துனர் நாதனார் என குடும்ப பொறுப்புகள் ஏராளம் இருக்கும், இருவரும் மனம் விட்டு பேசவே நேரம் போதாது. இதில் எங்கே ஒருவரை ஒருவர் புரிந்து விட்டுகொடுத்து வாழ்வது.


    எனவே காதலிப்பவரை கரம்பிடிப்பது தான் சிறந்த இல்லறத்திற்கு தேவையானது.
    ஹாய் அஞ்சனா, வாங்க வாங்க...

    காதலித்தவரை கல்யாணம் பண்ணிகிட்டா தான் வாழ்க்கை சந்தோசமா இருக்கும்ன்னு சொல்றீங்க...

    ஒரு நல்ல நண்பன்/தோழியால், நல்ல வாழ்கை துணையாக இருக்க முடியும் சரியா சொன்னிங்க. நட்புக்குள் ஈகோ கிடையாது, விட்டுகொடுக்கும் மனப்பான்மை இருக்கும், நல்ல புரிதல் இருக்கும், சுயநலம் இருக்காது, எனவே நட்பின் வழியே காதல் வளர்ந்து அது மணப்பந்தலில் சேரும் போது, நிச்சயம் அவர்களது இல்லறம் மகிழ்ச்சியாகவே இருக்கும்...

    உண்மையே தோழி,,, உங்களோடு கை கோர்த்து விவாதம் செய்ய யார் வர போகிறார்கள்.. பாக்கலாம்..



    நடைமுறையில் பெரியவர்களால் நிச்சயிக்கப்படும் திருமணங்களில் கூட, நிச்சயம் முடிந்து சில மாதங்கள் கழித்தே திருமண தேதி முடிவு செய்கின்றனர். எதற்காக? பெண்ணும் பையனும் மனம் விட்டு பேசி ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ள தானே அந்த இடைவெளி. அப்படி பார்த்தால் இதுவும் ஒருவகை காதல் திருமணம் என்றே சொல்லலாம். அதாவது காதலிப்பவரை மணந்து கொள்வது. என்ன பையன் அல்லது பொண்ணு மட்டும் பெற்றோர்களின் தேர்வு.

    ஓஹோ... இது தான் விஷயமா!!! காதலிக்க தான் பெரியவங்களா பாத்து கல்யாண நாள் தள்ளி போடறங்களா... நான் இத்தன நாளா, கல்யாண வேலை நெறைய இருக்கும் சொந்த பந்தங்கள வெத்தலை பாக்கு வைத்து அழைக்க வேண்டும்... துணி மணி எடுக்க வேண்டும் சில சம்பிரதாயங்கள் செய்யவேண்டும் .. அதுக்காக தான் நிச்சயம் முடிஞ்சு கொஞ்சம் நாள் கழிச்சு கல்யாணம் வைக்கறாங்கன்னு நெனச்சேன் பா... ஆனா இப்ப தான தெரியுது... ம்ம்ம்ம்... பெரியவங்க என்ன செஞ்சாலும் காரணம் இல்லாம செய்ய மாட்டாங்கன்னு புரிஞ்சிகிட்டேன்...


  5. #15
    Parasakthi's Avatar
    Parasakthi is online now Super Moderator
    Blogger
    Yuva's of Penmai
    Real Name
    Parasakthi KS
    Gender
    Female
    Join Date
    May 2010
    Location
    Coimbatore
    Posts
    8,710
    Blog Entries
    1

    re: Neeya? Naana? - 03.2.2012 to 27.02.2012

    பெண்மை நண்பர்களுக்கு இனிய வணக்கம்.
    கரம்பிடித்தவரை காதலிப்பதே இல்லறத்திற்கு சிறந்தது என்று என் வாதத்தை முன் வைக்கிறேன்.
    யாருப்பா அது? அட நம்ம சிவசக்தியா... வாங்க வாங்க... நீங்க எந்த பக்கம்...

    கல்யாணத்துக்கு அப்புறம் வர காதல் தான் மகிழ்ச்சியான இல்லறத்திற்கு தேவையானது சிறந்ததும் கூட என்பது உங்கள் கருத்து

    திருமணத்திற்கு முன்பான காதலில் அழகின் வழி சென்று தான் அகத்தை அறிய முடியும். ஆனால் திருமணத்திற்கு பின்பான காதலில் அகத்தின் (அன்பின்) வழி சென்று அழகை உணர முடியும்.

    மிக சரியாக சொன்னீர்கள் தோழி... புரிந்து கொள்வதற்கும் விட்டு கொடுப்பதற்கும் அன்பே பிரதானம்...திருமணத்திற்கு முன்பு வரும் காதலுக்கு புறக்கவர்ச்சியும் ஒரு காரணமாக அமையலாம்... ஆனால் திருமணத்திற்கு பின்பு அப்படி இல்லை. அவர்களின் நேசமும் காதலும் தான் துணையின் அழகை உணர செய்யும்... ரசிக்க செய்யும்...

    இனிய இல்லறம் என்பது இருவர் மட்டும் இணைந்தது அல்ல. பல உறவுகளும் உறவாடி வழிநடத்துவதே இனிய இல்லறம்.
    அத்தகைய இனிய இல்லறத்தின் மகிழ்ச்சிக்கு கரம் பிடித்தவரை காதலிப்பதே சிறந்ததுன்னு சொல்லி சிவசக்தி அவங்க வாதத்தை முடிசிட்டாங்க...

    இனி அடுத்தது யாரு வர போறாங்க எந்த பக்கம் பேச போறங்கன்னு பாக்கலாம்..

  6. #16
    surya's Avatar
    surya is offline Moderator
    Blogger
    Citizen's of Penmai
    Gender
    Male
    Join Date
    Sep 2010
    Location
    Gingee
    Posts
    624

    Re: Neeya? Naana? - 03.2.2012 to 27.02.2012

    காதலித்தவரை கரம்பிடிப்பதா (து)? கரம்பிடித்தவரை காதலிப்பதா (து)?

    இதில் எது சிறந்த இல்லறத்திற்கு தேவையானது.

    காதலித்தவரை கரம்பிடிப்பது கரம்பிடித்தவரை காதலிப்பது இவை இரண்டுமே அறம் என கொள்ளபடும் எனினும் நான் காதலித்தவரை கரம்பிடிப்பது சிறந்தது என்றே சொல்ல, கருத்தை பதிவு செய்ய விரும்புகிறேன்

    காதலித்தவரை கரம்பிடிப்பது என்பது நம்முடய (இருவர்) உணர்வு, புரிதல், எண்ணம், அழுகை, இவைகளை உணர்ந்து கடந்த பிறகு இந்த சமூகம் சொல்லும் திருமணம் என்ற கட்டுபாடு நிபந்தனைகள் இவற்றை ஏற்றுக்கொண்டு வாழ்வது ஆனால் கரம்பிடித்தவரை காதலிப்பது என்பது சமூக கட்டுபாடுகளை மட்டுமே ஏற்று கொண்ட பிறகு புரிதல் கொள்வது.

    40 ஆண்டுகள் வாழ்ந்த பிறகு வரும் நெருக்கம், ஒத்த எண்ண அலைகள்(wavelength or frequency), உண்மையான தாம்பத்தியம் இவற்றை சில ஆண்டு கால காதல் சொல்லி கொடுத்துவிடும், பிறகு திருமணம் என்பது புரிதலின் தொடர்ச்சியே இது காதல் திருமணம் செய்தவர்களுக்கு மட்டுமே வாய்க்கும், இன்னும் அப்படி வாழும் காப்பிய நாயகர், நாயகிகள் இருக்கிறார்கள் ஆனால் இதிகாசம் எழுத தான் ஆள் இல்லை,ஆனால் நிச்சயித்த திருமணம் நின்று அடிபட்டு, பக்குவபடவேண்டும் !!!!

    காதலும், காதல் திருமணமும் தவறில்லை, இது பெற்றவர்களின் மனதை புண் படுத்தும் என்பது உண்மை தான், ஆனால் மீதி வாழ்க்கை வாழ போவது என்னவோ நாமதானே.

    நம்முடய தேடல், தேவை, புரிதல் எண்ணம், கருத்து ஒற்றுமை, வெளிப்படை உணர்வு(transparency ) இணக்கம்(mutual understanding), அந்யோனியம் இந்த அடிப்படை குணங்கள் மட்டுமே உலக உறவுகள் நிலைக்க செய்யும் அடிப்படை தத்துவம். இவை காதல் திருமணத்தில் நிலைபெறுகிறது நிறைவு பெறுகிறது, ஆனால் நிச்சயித்த திருமணத்தில் இவை சந்தேகதிற்கு உரியவாயே.

    குட்டி மரணம்(hypothesis):

    ஒருவனின் குணம், செயல் இவை வெளிபடுத்தும் விளைவு, இதை வைத்து அவள் நமக்கு சரியானவள் என்று கண்டுபிடிக்க முடியும், எப்போது என்றாள் உறவுகளுக்கு சிக்காத நிலையில் அதை கண்டுபிடிக்க முடியும், இது காதலின் முதல் பருவத்தில் வரும் எப்படி என்றாள்
    நட்பும் இல்லாமல் காதலும் இல்லாமல் ஒரு இழை காதலை வெளிபடுத்துவதற்கு (love propose )செய்வதற்கு முன்னாள் சில காலம் நம்மிடயே ஊசல் ஆடும் இதை குட்டி மரணம் என்று கூட சொல்லலாம், அதில் ஒருவனின் சுயம் (identity)வெளிவரும் அதை கொண்டே நாம் தீர்மானிதுவிடலாம் இது காதலில் மட்டுமே சாத்தியம். (இவை அனுபவதின் அடிப்படையில் வருபவை இது hypothesis)

    ஆனால் நிச்சயித்த திருமணத்தில் இதை கண்டுபிடிக்க முடியாது. அதற்கு காதல் கடவுள் உங்களுக்கு வழியும் செய்யவில்லை. நல்லதோ கேட்டதோ ஏற்று கொள்ள மட்டும் துணிவு வேண்டும்.

    தேடலின் வழி கிடைக்கும் ஒரு பொருளுக்கு உலகம் மதிப்பு கொடுக்கும் அப்படியே காதல் திருமணமும்.

    நாட்கள், மாதங்கள், வருடங்கள் கடந்து தேடி திரிந்து
    உணர்வு எண்ணம் பகிர்ந்து
    மதம், இனம் துறந்து.
    மொழி, உலகம், தூக்கம் மறந்து
    இவன் (அ) இவள் நம்க்கும் நம் வாழ்க்கை பயனதிற்கும் சரிவருவாள், இவளே துணை என்று காதல் புரிந்து, கரம் பிடித்த பிறகு தொடரும் வாழ்க்கை என்பது
    சொல், பொருள் குற்றம் நீங்கி, இலக்கண இலக்கிய ரசனை ததும்பும் வானவர் போற்றும் இதிகாசம், காப்பியம் போன்றது ஆனால் நிச்சயித்த திருமணம் என்பது எண்ணங்கள் சண்டையிட்டு எழுத்தில் வராத கவிஞ்னின் மனம் போன்றது.

    இதயம் சொல்லுவதை மூளையும், மூளை சொல்லுவதை இதயமும் புரிந்து கொள்ளுவதற்கு முன்னாள் இன்னோர் இதயம் அதை புரிந்து கொண்டு அதை செயல் படுத்துமாயின் அது காதல் திருமணத்தில் மட்டுமே சாத்தியம். ஆனால் அப்போது நிச்சயித்த திருமணம் மட்டும் வாய் அசைவிற்கு காத்துக் கொண்டிருக்கும்.எனவே காதல் திருமணம் சிறந்தது.
    Last edited by surya; 25th Feb 2012 at 12:07 AM.
    தமிழ்தாசன்.
    Suriya Narayanan.
    ...........................................................................................................................

    "நான் அடைப்புகுறிக்குள் வாழ்கிறேன்
    பிரபஞ்சத்தின் எல்லை கோடுகள் நான் வரைந்தவையே
    "

    "சொல்லும் பொருளுமற்று சும்மா இருக்கவே அல்லும் பகலும் எனக்கு ஆசை பராபரமே"

  7. #17
    silentsounds's Avatar
    silentsounds is offline Moderator
    Blogger
    Commander's of Penmai
    Gender
    Male
    Join Date
    Feb 2011
    Location
    chennai
    Posts
    2,144

    Re: Neeya? Naana? - 03.2.2012 to 27.02.2012

    பெண்மையின் வாசக வட்டத்திற்கு என் பணிவான வணக்கங்கள். தலைப்பின் சுவாரசியம் கருதி வார நாட்களை நீட்டித்து காதலுக்கே உரிய பரிமாண வளர்சிகளுடன் இத்தலைப்பை சார்ந்த கருத்துக்கள் மெதுவாக அதன் பக்குவத்தை அடைந்து முதிர்ந்து, தலைப்பை சார்ந்த அர்த்தத்தையும், காதலின் அடிப்படைத் தன்மையான நிசப்தத்தின் ஊடே பயணித்து வருகிறது என்பது எதார்த்தத்தின் உண்மை.

    காதலித்தவரை கரம்பிடிப்பதா (து)? கரம்பிடித்தவரை காதலிப்பதா (து)?

    இதில் எது சிறந்த இல்லறத்திற்கு தேவையானது.



    ஆயுள் முழுவதும் இணைந்திருக்கும் ஆனந்தமான உறவை கொண்டாட இந்த தலைப்பை சார்ந்த கருத்துக்கள் நன்கு அமையும் என்பதில் ஐயமில்லை.

    ஆதி மனிதன் முதன் முதலில் சூரிய கிரகணத்தைப் பார்த்துவிட்டு ஏதோ பில்லி சூனியம் என்று மிரண்டதைப் போல, முதல்முறை காதல் தாக்கும்போதும் ஒவ்வொரு மனிதனும் மிரள்கிறான். 21 நூற்றாண்டைக் கடந்து மனிதன் நடை போட்டுக்கொண்டிருக்கும் போது காதல் நிச்சயமாக சரிவிகித சமானத்தில் கணக்கிடப்பட்ட ஒரு வேதியியல், உயிரியல் வினைகள் அடங்கிய ஒரு மனோதத்துவவியல் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை.

    பரவசம், பயம், அழுகை, சந்தோஷம், வார்த்தைகள் ஏதும் கிடைக்காமல் தடுமாறி ஒரு குட்டி நவரசத்தையே அரங்கேற்றிகொன்றிருக்கும் இக்காதல் பற்றி

    இதுவரை கவிஞ்ர்களும், கலைஞ்ர்களும், காதலர்களும் கையாண்டு வந்ததை விஞ்சானிகள் தீவிரமாக ஆராயத் துவங்கி குழப்பி இருக்கிறர்கள். பெருமூச்சிலும், துடிப்பிலும், கண்ணீரிலும், மோசமான கவிதைகளிலும் சிலவேளை ஹோடேல்களிலும் கடிதம் எழுதிவிட்டுத் தற்கொலையிலும்
    ஓடிகொண்டிருந்த காதல் தன் தெய்வீக, அமர காரணங்களைத் துறந்து வெறும் கெமிஸ்ட்ரி ஆகிவிடும் போல இருக்கிறது.

    நீங்கள் காதலித்து இருக்கிறீர்கள் என்றால் கீழ்க்கண்ட உங்களுக்கு ஏற்படும். காலுக்கு கீழே பஞ்சு, காதில் கொஞ்சம் சலங்கை சப்தம். மிதப்பது போல உணர்வு, ஒட்டுமொத்தமாக உலகமே ஏன், பிரபஞ்சமே உங்கள் காதலி, காதலனாக மாறிவிட்டது போன்ற பிரமை, காதல் என்பது இம்சை, இன்பம், அடிமை, விடுதலை, கொடுமை, கோலாகலம்..காதல் இல்லையேல் கவிஞ்சர்களிருந்து ஐஸ்கிரீம் விற்பவர்கள் வரை பிழைப்பை இழந்து விடுவார்கள். சினிமாக்களில் கூட்டம் இராது. சுண்டல் வியாபாரமும், கிண்டல் ஜோக்குகளும்
    படுத்து விடும். காதல் உலகை இயக்குகிறது.

    காதல் என்பது குழப்பமான உணர்வு. காதலுக்கு என்று தனிப்பட்ட அடையாளங்களை தேடுவது கஷ்டம்.
    கோபத்திற்கும் பயத்திற்கும் நேரடியான பரிணாமரீதியான தேவை இருக்கிறது. கோபம் சண்டை போட, பயம் ஓடிப்போக! மனித இனம் நீடிக்க இவை இரண்டும் தேவை. ஆனால், காதல்? காதல் இல்லாமலே சேர்ந்து பிள்ளை பெற்றுக்கொள்ள முடிகிறது நம்மால். பெருமூச்சிக்கள், கைக்குட்டையில் சென்ட், கவிதைகள் ஏதுமின்றி பெற்றுத்தள்ள முடிகிறது. எனவே, காதல் இன நீடிப்புக்குத் தேவையற்றது என்று உயிரியளாரும்,
    மானிட இயலாளர்களும் இதை நிராகரித்தார்கள். காதல் என்பது வெறும் மனதில் நிகழ்வது. நாகரிகம் பெற்றதும் மனிதன் பொழுது போகாமல் காவியங்களாகப் படைத்த நேர விரையம்..காதலைப் பற்றி கவிஞ்சர்களும் மாத நாவல்காரர்களுமே எழுதட்டும் என்று விட்டு வைத்திருந்தார்கள். ஆனால், சென்ற 10 ஆண்டுகளில் மனம் மாறிவிட்டார்கள். ஏகப்பட்ட ஆராய்சிகள் செய்து "இரண்டு பேரை ஒன்று சேர்த்து இணைந்து வருஷக்கணக்காக நேசிக்கும் இந்தக் காதல் என்னும் சக்தி"யின் முக்கியத்துவத்தை உணரச் செய்துள்ளார்கள்.

    "காதலித்துப்பார், காதலிக்கப்பட்டுப்பார்"! இந்த ஆணை உலகம் முழுவதும் எங்கும் எப்போதும் ஒலிக்கிறது.
    கவிதை, சினிமா, நாவல்கள், பத்திரிக்கைகள், தொலைக்காட்சிகள் அனைத்திலும் இந்த மந்திர வார்த்தைதான்.
    காதல் என்பது மஹா வியாபார கலாச்சாரத்தின் முக்கிய அங்கமாகிவிட்டது. லாரன்ஸ் காஸ்கர் என்னும் சைக்காலஜிஸ்ட் காதல் என்பது மனித இயற்கை அல்ல அது சமூகத் தேவைகளினால் ஏற்படுவது என்கிறார்.

    -தொடரும்.
    Penmai, Parasakthi, surya and 7 others like this.
    with
    Regards

    Guna (குணா)

    வாழு... வாழ விடு..

  8. #18
    silentsounds's Avatar
    silentsounds is offline Moderator
    Blogger
    Commander's of Penmai
    Gender
    Male
    Join Date
    Feb 2011
    Location
    chennai
    Posts
    2,144

    Re: Neeya? Naana? - 03.2.2012 to 27.02.2012

    காதல் என்பது பற்றி சுஜாதாவின் கருத்துக்களை இங்கே பதிவு செய்வது சாலப் பொருந்தும்.
    கவிஞ்சர் சக்திக்கனல் "திருமணங்கள் சொர்க்கத்தில் நிற்கப் படுகின்றனவாம் என் கல்யாணம் மட்டும் ஏன் செட்டிப்பாளையத்தில் நிச்சயக்கப்பட்டது?" என்று கேட்கிறார். சிலருக்கு காதல் வாய்ப்பதில்லை.


    காதலைப்பற்றி கொஞ்சம் அறிவியல் பூர்வமாக பார்க்கலாம். காதலர்கள் நடந்துகொள்வது மேம்போக்காகப் பித்துபிடித்தது போல் இருந்தாலும், அதை அறிவியல் பார்வையில் அலசும் போது அதற்கு காரணமும், தேவையும் இருப்பதைக் கண்டிருக்கிறார்கள். மைக்கல் மில்ஸ் என்னும்
    சைகாலஜிஸ்ட் "காதல் என்பது நம் முன்னோர்கள் நம் காதில் பேசும் ரகசியம்" என்கிறார்.


    நாற்பது லட்சம் வருஷங்களுக்கு முன் ஆபிரிக்கச் சமவெளிப் பகுதியில் காதல் பிறந்தது என்கிறார்கள்.
    அப்போதுதான் மூளையில் இருந்து நியுரோ கெமிக்கல்கள் மனித ரத்தத்தில் பாய்ந்து காதலின் காரணத்தால் அசட்டுச் சிரிப்பும் கைகளில் வியர்வையும் ஏற்ப்பட்டதாம். ஆணும் பெண்ணும் கண்ணும் கண்ணும் கலந்து பார்த்து நிற்க..."ஏய்! என்னடா இது புதுசா?" என்று பெற்றோர்களால் அதட்டப்பட்டனர். மனிதன் இரண்டு கால்களால் நிற்கத் துவங்க, காதலால் அவன் உடல் உறுப்புகளில் ஏற்ப்பட்ட மாறுதல்கள் வெளிபடையாக அனைவருக்கும் தெரியத் துவங்க, தோளின் அகலம், கண்கள் இவை எல்லாம் ஒவ்வொருவருக்கும் வேறுபடுவதை உணர்ந்தபோது காதல் பிறந்தது.


    காதல் ஆணையும் பெண்ணையும் ஸ்திரமான உறவுக்கு இழுத்தது. இது குழந்தை வளர்ப்புக்குத் தேவைப்பட்டது. சமவெளிப் பகுதியில் மனிதன் இரை தேடும் போது ஒருத்தனாகவோ, ஒருத்தியாகவோ கையில் குழந்தையை வைத்துக்கொள்வது அபாயகரமானதாக இருந்தது. அதனால்,
    குழந்தையைப் பார்த்துக்கொள்ளவாவது இருவரும் கொஞ்சம் நாள் ஜோடியாக இருப்பது தேவைப்பட்டது. ஜோடியாக இருக்க அன்பு வேண்டும். ஒருவர் மேல் ஒருவர் விருப்பம் வேண்டும். காதல் வேண்டும். இதை நான்கு வருஷ அரிப்பு! என்கிறார்கள் மேற்கித்திய நாகரிகத்தில். கொஞ்சம் கொஞ்சமாக இந்தியாவிலும் கூட. இந்த நான்கு வருஷத்திற்கு பின்புதான் இல் வாழ்வில் முதல் அலுப்புகள் தோன்றுகின்றன என்றும். அதனால் விவாகரத்துகளும் அதிகரிக்கின்றன என்றும் கூறப்படுகின்றது.


    காதல் என்பது ஏற்ப்படும் போது உடம்பில் நிகழும் மாற்றங்கள் எல்லோருக்கும் போது. காதல் என்பது என்னை வெள்ளம் போல் அடித்துச் செல்கிறது என்னும்போது தம்முள் வெள்ளம்போல் ரசாயனப் பொருட்கள் பிரசுவிபதைக் கண்டிருக்கிறார்கள்.


    கன்னம், கன்னம் தொடும்போது, கையும் கையும் படும்போது ஒரு நறுமணம். ஒரு மெல்லிய மிக மெல்லிய ஸ்பரிசம் போதும், மூளையில் இருந்து ரத்தத்தில் இந்த ரசாயனப் பொருட்கள் பாய்கின்றன.
    விளைவு- கை ஈரம், மேல்மூச்சு, காதலும் பதற்றமும் ஒன்று போல் அறிந்தார். காரணம்-ஒரே கெமிக்கல்கள்! எல்லாவற்றிக்கும் மேல் பரவசம்! உற்சாகம்! உலகமே அலம்பி விட்டாற்ப்போல வியப்பு. காரணம், அம்பதோ மின்கள், இவற்றில் டோப்பாமின், நோரேபின் இப்ரைன் குறிப்பாக பினைல் எத்தில் போன்ற வஸ்துக்கள் அத்தனை கிக்கிர்க்கும் காரணம். காதல் என்பது இயற்க்கை தரும் போதை.


    போகப்போக இந்த எதில் அமின்கள் பழகிப் போக.. ஒரு வாரத்துக்குப் பின் காதலியைத் தொட்டால் மட்டும் போதாது, கொஞ்சம் முன்னேற வேண்டியிருக்கிறது. கடைக்கண் பார்வை மட்டும் போதாது
    படுக்கைக்கு போகவேண்டி இருக்கிறது. இவையெல்லாம் சுலபமாக கிடைத்துவிட்டால், வேறு நபரிடம் காதல் செய்தால்தான் மீண்டும் இந்த ரசாயனங்கள் சுரக்கின்றனாவாம். இருந்தும் பல காதல்கள் வருடக்கணக்கில் நீடிக்கின்றன. காரணம்? வேறு வகை கேமிகல்கள். மூளையில் என்டார்பின் என்ற மற்றொரு சமாச்சாரம் சுரந்து காதலை நீடிக்க வைக்கிறதாம்.


    "முதல் காதல் என்பது ஒருத்தர் ஏற்படுத்தும் உணர்ச்சிகளைக் காதலிப்பது!"


    "முதிர்ந்த காதல் ஒருத்தரைக் காதலிப்பது!"


    - தொடரும்.
    Penmai, Parasakthi, surya and 7 others like this.
    with
    Regards

    Guna (குணா)

    வாழு... வாழ விடு..

  9. #19
    silentsounds's Avatar
    silentsounds is offline Moderator
    Blogger
    Commander's of Penmai
    Gender
    Male
    Join Date
    Feb 2011
    Location
    chennai
    Posts
    2,144

    Re: Neeya? Naana? - 03.2.2012 to 27.02.2012

    காதலித்தவரை கரம்பிடிப்பதா (து)? கரம்பிடித்தவரை காதலிப்பதா (து)?

    இதில் எது சிறந்த இல்லறத்திற்கு தேவையானது.

    என்ன இத்தலைப்பை தாண்டி காதலைப் பற்றி அதிகமாக நீள்கிறது என்று நீங்கள் நினைப்பதை நானறிவேன். ஆனால் இந்த அறிவியல் பார்வைகள் எவ்வளவு தொடர்புடையது என்று ஆழமாக பார்த்தால் புரியும்.


    ஆக்சிடோசின் என்னும் பொருள் கூடக் காதலுக்கு காரணம். நரம்பை நிரடி, தசைகளை சுருக்குகிறது. விளைவு-காதல்! இதே டோசின் கெமிக்கல் தான் பெண்மையின் தாய்மைக்கு சிறப்பு ஊக்கியாக செயல்படுகிறது. காதலனைக்கொஞ்சவும், குழந்தையைக் கொஞ்சவும், தாம்பத்தியத்தில் மத்தாப்பு வான வேடிக்கைகள் எல்லாம் ஏற்படுவதற்கு காரணமும் இதுதான்.


    ஆண்கள் ஏன் சீக்கிரம் காதல் வசப்படுகிறார்கள்? இதற்கும் பரிணாம் தேவைதான் காரணம். ஆண்கள் பெண்களிடம் அதிகம் பிள்ளை பெரும் தகுதியைத் தன் முதலில் விரும்புகிறார்கள். அதனால்தான் பிள்ளை பெரும் வயதான பதினேழிலிருந்து இருபத்தி எட்டு வரை பெண்கள் கவர்சிகரமாக இருக்கிறார்கள். ஆண்கள் பெண்களைப் பார்த்த மாத்திரம் அவள் இளமையையும் திறமையையும் உடனே கணித்துவிடுகின்றார்கள். அதனால்தான் உடனடி திடீர் காதல்!


    ஆனால் பெண்கள் அப்படியல்ல.. கொஞ்சம் ஆர அமர யோசித்து, "ஆசாமி காப்பாற்றுவான, விசுவாசமாக இருப்பனா?" என்பதெல்லாம் தெரிந்தபின் தான் காதல் வசப்படுவார்கள். இப்படி இருந்தும்
    எப்படி கல்யாணியைப் பிடிக்கிறது, காமாட்சியைப் பிடிப்பதில்லை? இதற்கும் அறிவியல் பதில் சொல்கிறது. "இயற்கை நம்மை ஒருவகையனா நபருக்கு மட்டும் தயார் செய்து வைக்கிறதாம். உங்கள் ஒவ்வொருவர் மனதின் ஆழத்திலும் ஒரு பிரத்யோக நாயகன் அல்லது நாயகி இருக்கிறார்கள்.
    ஒரு தனிப்பட்ட காதல் வரைபடம்.. "தனிப்பட்ட..முகம், சுரும் முடி, அழுத்தமான உதடு ..தனிப்பட்ட இந்த உருவம் உங்கள் ஆரம்ப இளமைத் காலத்தில் மனதில் உருவாகிறது. அந்த முகத்தை சந்திக்கும்போது ஒரு கை சொடக்கில் காதல்..!"


    இதுதான் அறிவியல் கூறும் காதல்...பரவாயில்லை நம்மில் பெரும்பாலானவர்களுக்குக் காதல் என்பது செம்புலப் பெயனீர்.


    'யாயும் ஞாயும் யாரோ கியரோ
    எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர்
    யானும் நீயும் எவ்வழி யறிதும்
    செம்புலப் பெயனீர் போல
    அன்புடை நெஞ்சம் தாங்கலந்தனவே'


    என்று குறுந்தொகை சொல்ல, கவிஞ்சர் மீரா,


    'உனக்கும் எனக்கும் ஒரே ஊர்
    வாசுதேவ நல்லூர்
    நீயும் நானும் ஒரே குலம்
    திருநெல்வேலி சைவப் பிள்ளைமார்
    உன் தந்தையும் என தந்தையும்
    உறவினர்கள்- மைத்துனன்மார்கள்
    செம்புலப் பெயனீர் போல
    அன்புடை
    நெஞ்சம் தாங்கலந் தனவே..'


    என்று தற்க்கால சமுதாயத்தை பற்றி சொல்லி இருக்கிறார்.


    -தொடரும்.
    Penmai, Parasakthi, surya and 7 others like this.
    with
    Regards

    Guna (குணா)

    வாழு... வாழ விடு..

  10. #20
    silentsounds's Avatar
    silentsounds is offline Moderator
    Blogger
    Commander's of Penmai
    Gender
    Male
    Join Date
    Feb 2011
    Location
    chennai
    Posts
    2,144

    Re: Neeya? Naana? - 03.2.2012 to 27.02.2012

    இளமையின் வாசலில் காலைச்சூரியனின் முதல் ஒளிக்கீற்றாகவும், மாலைச் சூரியனின் மங்கிய ஒளியாகவும் படர்ந்து விடுகிறது. எப்படிப்பட்டவராக இருந்தாலும், முகத்தில் ஒரு களையையும், அர்த்தமுள்ள புன்னகையையும் தருவித்துவிடுகிற மாயம் அதற்கு இருக்கிறது. நிற்கிற இடத்தில் நிலம் ஊற்றெடுக்கிறது. பார்க்கிற இடத்தில் பசுமை பூத்தொடுக்கிறது. தனிமை திகட்டாமல் கனவு காணச் செய்கிறது. உலகமே அழகாய் இருக்கிறது. இதுபோன்ற அனுபவம் உலகத்தில் வேறு எந்தக் காதலருக்கும் ஏற்பட்டிராது என்று கர்வம் கொள்ள வைக்கிறது. ஆதி மனிதனின் முடிகள் அடர்ந்த தோலில் தோன்றிய அந்த சிலிர்ப்பு இன்று வரை அப்படியே ஒவ்வொருவருக்கும் புதியதாகவே தொடர்ந்து கொண்டேயிருக்கிறது. ஆணுக்கு பெண் மீதும், பெண்ணுக்கு ஆண் மீதும் சிறு வயதிலிருந்தே ஈர்ப்பு இருக்கிறது. அந்த பொறி உடல் மாற்றங்களோடு பருவம் அடைகிற போது கொழுந்து விட்டு பற்றிக் கொள்கிறது. எதையும் அறிந்து கொள்ளத் துடிக்கும் மனித சுபாவம் சுவாரஸ்யம் கொண்டு தத்தளிக்கிறது. புரிந்தும் புரியாமல் அலைபாய்கிறது. தனக்கும் எல்லாம் நேர்கிறது என்பது பாடாய் படுத்துகிறது. தன்னை தானே ரசிக்கிற குறுகுறுப்பில் பிறக்கிறது. தனது ரகசியங்களை எதிர்வினையின் மூலம் புரிந்து கொள்ள முயலும் துடிப்பில் வளர்கிறது.


    இந்த புதிய உலகத்தின் திறவுகோல் ஒரு பெண்ணுக்கு ஆணின் பார்வையில் இருக்கிறது. ஒரு ஆணுக்கு பெண்ணின் பார்வையில் இருக்கிறது. திறந்துவிடும் கண்களுக்காக பூத்துக் கிடக்கிறார்கள். ரகசியங்கள் பொதிந்த பார்வைகளை பரிமாறிக் கொண்டு உடல் விசித்திரங்களில் கண்ணாமூச்சி ஆடுகிறார்கள்.ஒரு ஆணின் கண்கள் பல பெண்களின் கண்களைப் பார்க்கின்றன. ஒரு பெண்ணின் கண்கள் பல ஆண்களின் கண்களைப் பார்க்கின்றன. வாழும் சமூகமும், வாய்க்கும் சூழலும் அவரவர்களுக்குள் மூட்டி வைத்திருக்கிற பிரமைகளுக்கும், பிம்பங்களுக்கும் அருகில் நெருங்கி வருகிறவர்களை ஏற்றுக் கொள்ளத் துடிக்கிறார்கள். தங்களது கோட்டு உருவங்களுக்கு வண்ணம் பூசுகிறார்கள். அவரவர் சித்திரங்கள் மிகச் சிறப்பாக வடிவம் பெறும் என நம்புகிறார்கள். செந்தூரப்பூவே என்று ஊஞ்சல் கட்டி ஆடுகிறார்கள்.


    எதிர்த்தரப்பில் சம்மதம் கிடைக்காத போது எல்லாம் தொலைத்தவர்களாய் சிதைந்து போகிறார்கள். நாட்கள் வலி கொண்டதாக நகருகின்றன. தன்னை உணர்த்தி விடவும், எதிர் மனதில் இடம் பெறவும் உன்மத்தம் பிடித்துப் போகிறது. போகிற இடங்களுக்கெல்லாம் போகிறார்கள். பார்க்கிற இடங்களெல்லாம் போய் நிற்கிறார்கள். பிடித்தமானவராய் மாறுவதற்கு வித்தைகளும், சாகசங்களும் செய்து பார்க்கிறார்கள். மலையுச்சியிலிருந்து குதிக்கப் போவதாகவும், விஷமருந்தி இரத்தம் கக்கிச் சாகப் போவதாகவும் கடைசிச் செய்தி அனுப்பி பார்க்கிறார்கள். பயமுறுத்தியோ, இரக்கத்தை உற்பத்தி செய்தோ, எப்படியோ ஒரு பெண்ணை அடைய ஆண் வெறி பிடித்து நிற்கிறான். தான் விரும்பிய பெண்ணின் மீது தாக்குதல் தொடுக்கவும், பலாத்காரம் செய்யவும் கூட சில சமயங்களில் துணிந்து விடுகிறான். நமது சினிமாக்கள் கொஞ்சங்கூட சமூகப் பொறுப்பற்று விடலைகளின் உள்ளத்தில் தீயை வைத்துக் கொண்டிருக்கின்றன.


    பார்வைக்கு மறு பார்வை எதிர்த் தரப்பில் பதிலாய் கிடைக்கிற போது வானவில் தோன்றுகிறது. சக வயதொத்த பால் பேதம் கொண்டவரின் சம்மதமே பிறவிப்பயனாகிறது. உறுதி செய்து கொள்ள மீண்டும் மீண்டும் பார்வைகளில் திளைக்கிறார்கள். கால்களில் நடுக்கமும், கண்களில் படபடப்புமாய் பரிதவிக்கிறார்கள். தனக்காக ஒரு இளவரசன் வரப் போகிறான் என அவனும், இனியுள்ள காலம் முழுவதையும் அந்த ஒருத்தியோடுதான் என அவனும் கற்பனை செய்கிறார்கள்.


    அவளது தலைமுடியொன்றை தனது விரல்களில் சுற்றி மோதிரம் என பெருமைப் படுகிறான் அவன். அவளது பாதம்பட்ட மண்ணை கவனத்துடன் அள்ளி தனது வழி பாட்டுக்கு பாதுகாக்கிறான் அவன். அவனது அழுக்குக் கைகுட்டையை கவர்ந்து சலவை செய்து மயங்கிப் போகிறாள் அவள். அசட்டுத்தனங்களும், சினிமாத்தனங்களுமாய் சிறுத்துப் போனாலும் காதல் எல்லோரையும் தனது உள்ளங்கையில் அள்ளி வைத்துக் கொள்கிறது. வசீகரமான பயணமாக, ரகசிய அனுபவமாக உணரப்படுகிறது. எல்லைகளற்ற பெருவெளியில் மனிதர்களை சஞ்சரிக்க வைக்கிறது.


    இடைவெளிகளை மேலும் மேலும் குறைக்க வேண்டும் என பித்துப் பிடித்து நிற்கிறார்கள். காதலின் சாலையில் யாவரின் பயணங்களும் அதை நோக்கியே செல்கின்றன. ஆண் பெண் உறவுகளை திருமணங்களே உறுதி செய்கின்றன. சமூகத்தின் சம்மதம் முக்கியமாகிறது. திருமணத்திற்கான ஒழுக்கத்தையும், விதிகளையும் சமூகமே கற்பித்து வைத்திருக்கின்றன. ஜாதி பார்க்கிறது. மதம் பார்க்கிறது. கல்வி பார்க்கிறது. வாழ்வதற்கான வசதி பார்க்கிறது. இவைகளை பார்க்காத காதலையும், காதலரையும் நிராகரிக்கிறது. வன்மத்தோடு எதிர்க்கிறது. எல்லாவற்றையும் மீறி திருமணம் செய்து கொள்பவர்களுக்கு தங்கள் சொந்தக் காலில் நிற்கிற உறுதி வேண்டியிருக்கிறது. காதலின் வெற்றி என்பது காதலர்கள் வசதியாகவும், சமூகத்தில் கௌரவமானவர்களாக வாழ்வதிலும் இருக்கிறது.


    இப்படித்தான்- இவ்வளவுதான் காதல் பற்றிய நமது புரிதல்களும், உணர்வுகளுமாக தேங்கிப் போய் கிடக்கின்றன. திரைப்படங்களில் ஆட்டமாய் ஆடுவதும், சண்டையாய் போடுவதும் ஒரு பெண்ணின் கழுத்தில் தாலி கட்டும் கடைசிக் காட்சிக்காகவே இருக்கின்றன. அந்தி மங்கும் வானத்தின் பின்னணியில் காதலனும், காதலியும் கட்டிப் பிடித்து சேர்ந்து நடக்கும் காட்சி வந்ததும், ரசிக பெருமக்கள் அப்பாடா என்று இருக்கைகளை விட்டு எழுந்து வீடுகளுக்குச் செல்ல தயாராகி விடுகின்றனர். விரும்பிய ஆணும், பெண்ணும் திருமணம் செய்து கொள்வதுதான் காதலின் வெற்றியென சொல்லி சூரியன்கள் மறைகின்றன. முதலிரவுக் காட்சிகளே காதலின் உச்சக்கட்டம் என்று விளக்குகள் அணைக்கப் படுகின்றன.


    அந்த ஆணின் வாழ்க்கை அத்தோடு முடிந்து போகவில்லை. அந்த பெண்ணின் வாழ்க்கையும் அத்தோடு முடிந்து போகவில்லை. ஆனால் காதல் மட்டும் முடிந்து விடுகிறது. அக்காதலை முடிந்து விடாமல், முடித்து விடாமல், அக் காதலை தக்கவைக்கும் சூத்திரத்தையும், சூட்ஷமத்தையும் விட்டுவிடாமல் பற்றுடன் பெற்றிந்தால் போதும்.


    சூர்யா சுட்டிக்காட்டியதைப் போல் காதலும், காதல் திருமணமும் தவறில்லை, இது பெற்றவர்களின் மனதை புண் படுத்தும் என்பது உண்மை தான், ஆனால் மீதி வாழ்க்கை வாழ போவது என்னவோ நாம்தான்.
    என்ற எண்ணமே சொச்ச வாழ்க்கையில் மகிழ்ச்சியை தர எதுவாக அமைந்து விடும்.

    with
    Regards

    Guna (குணா)

    வாழு... வாழ விடு..

Page 2 of 4 FirstFirst 1234 LastLast

Similar Threads

  1. May 2012 Buddies
    By roja123 in forum I am pregnant
    Replies: 44
    Last Post: 20th Apr 2012, 05:10 PM
  2. Neeya Naana - January 1st fortnight Winner
    By Penmai in forum Contests & Rewards
    Replies: 7
    Last Post: 17th Apr 2012, 06:00 PM
  3. Neeya Naana - January 2nd fortnight Winner
    By Penmai in forum Contests & Rewards
    Replies: 7
    Last Post: 16th Apr 2012, 06:43 PM
  4. நீயா? நானா? - 19.01.2012 to 31.01.2012
    By Parasakthi in forum General Discussions
    Replies: 25
    Last Post: 6th Feb 2012, 12:28 PM
  5. நீயா? நானா? - 01-01-2012 to 15-01-2012
    By Parasakthi in forum General Discussions
    Replies: 23
    Last Post: 22nd Jan 2012, 08:23 AM

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •