தொப்பையா உங்களுக்கு ? பேராபத்து காத்திருக்கிறது

நீங்கள் ஆணாக இருந்தால் இடுப்பு சுற்றளவு 35 அங்குலத்துக்குள் இருக்க வேண்டும். பெண் என்றால் 31 அங்குலம் தான்.

மீறி வயிறு வளர்த்தால் குடல் புற்று நோய் ஆபத்து காத்திருப்பதாக லண்டன் ஆராய்ச்சி எச்சரிக்கிறது. உலக புற்றுநோய் ஆராய்ச்சி நிதி அமைப்பு சார்பில் இங்கிலாந்து மருத்துவ பேராசிரியர்கள் இணைந்து தொப்பைக்கும் குடல் புற்று நோய்க்கும் உள்ள தொடர்பு பற்றி ஆராய்ந்தனர்.

சராசரி அளவைவிட அதிகமாகும் ஒவ்வொரு அங்குல இடுப்பு சுற்றளவும், குடல் புற்றுநோய் ஏற்படும் வாய்ப்பை 3 சதவிகிதம் அதிகரிப்பதாக ஆய்வில் தெரிய வந்தது.

இடுப்பு சுற்றளவு அதிகரிப்பதற்கேற்ப புற்றுநோய் ஆபத்து அதிகரிப்பதை இந்த ஆராய்ச்சி உறுதிப்படுத்தி உள்ளது. ஆசிய நாடுகளை சேர்ந்த ஆண்களுக்கு இடுப்பு சுற்றளவு அதிகபட்சம் 35 அங்குலம் இருக்கலாம்.

பெண்களுக்கு 31.5 அங்குலத்தை தாண்டக் கூடாது. இதுவே வெள்ளையர், ஆப்ரிக்க ஆண்களுக்கு 37 அங்குலம் வரை பரவாயில்லை.

இந்த அளவுகளைவிட இடுப்பு சுற்றளவு அதிகரித்தால் ஒவ்வொரு அங்குலத் துக்கும் 3 சதவிகித புற்றுநோய் வாய்ப்பு அதிகரிப்பதாக அவர்கள் தெரிவித்தனர்.

சராசரி எடையை விட குறைந்து விடாமல் அதேநேரம் சரியான எடையும், இடுப்பு சுற்றளவும் பராமரிக்க வேண்டியது அவசியம் என்று ஆராய்ச்சியில் கூறப்பட்டு உள்ளது.

Similar Threads: