Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine July! | All Issues

User Tag List

Like Tree39Likes

மருத்துவம் பற்றிய சில விஷயங்கள்


Discussions on "மருத்துவம் பற்றிய சில விஷயங்கள்" in "General Health Problems" forum.


  1. #11
    girija chandru's Avatar
    girija chandru is offline Penman of Penmai
    Blogger
    Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Oct 2011
    Location
    coimbatore
    Posts
    10,005
    Blog Entries
    152

    Re: மருத்துவம் பற்றிய சில விஷயங்கள்

    பெண்கள் சந்திக்கும் ஸ்ட்ரெஸ் பிரச்னை
    *************************************************************
    வேலை, வீடு என இரட்டைச் சுமையில் தவிக்கும், எல்லாப் பெண்களுக்குமான பொது பிரச்னை, மன அழுத்தம். குடும்பத்துக்காக வேலையையோ, வேலைக்காக குடும்பத்தையோ விட்டுக் கொடுக்காமல், இரண்டையும் திறம்பட கையாளும் வித்தை தெரிந்த பெண்களுக்கு, தம்மை கவனித்துக் கொள்ள, நேரம் ஒதுக்குவது அரிதாகிவிடுகிறது.
    முடியலையே… எனப் புலம்பிக் கொண்டாவது, எல்லா வேலைகளையும் முடித்து விடும் பலருக்கு தெரிவதில்லை, அது ஸ்ட்ரெஸ் என்கிற மன அழுத்தத்தின் ஆரம்பம் என்பது. இதை தொடர விட்டால், பல்வேறு மனபாதிப்புகளுக்கு, சிவப்பு கம்பளம் விரிப்பது போலாகிவிடும் என்கின்றனர் உளவியல் நிபுணர்கள்.
    தம்மால் முடியவில்லையே என்கிற நினைப்புதான், அழுத்தத்தின் ஆரம்பம். குடும்பத்தில், மனைவியாக, தாயாக, பணிபுரியும் இடத்தில் நல்ல வேலையாளாக திறம்பட செயல்பட முடியாத போது, புலம்பல்கள் அடிக்கடி வந்தால், மன அழுத்த குகைக்குள் சிக்கி கொண்டதை அறியலாம். படபடப்பு, அழுகை, கோபம், எரிச்சல், தூக்கமின்மை, அதீத பசி போன்றவை ஸ்ட்ரெஸ்சின் அறிகுறிகள். வேலையையும் வீட்டையும் கவனிக்கிற, ஒவ்வொரு பெண்ணுமே, அசாதாரண மனுஷிதான். இரண்டு இடங்களிலும், எல்லா விஷயங்களிலும், நூறு சதவீத பர்பெக்சனை எதிர்பார்க்க ஆரம்பிக்கும் போதுதான், ஸ்ட்ரெஸ் வருகிறது.
    சமாளிக்க உத்திகள்: வீடு, வேலை என, இரண்டுக்கும் 50:50 முக்கியத்துவம் கொடுக்க பழகுங்கள். நிதான மனப்பான்மையை வளர்த்துக் கொள்ளுங்கள். வேலையை, திறமைக்கான ஒரு வடிகாலாக பாருங்கள். படித்திருந்தும், வீட்டில் முடங்கி கிடக்காமல் இருப்பதற்கு, வேலை செய்வது ஒரு ஆறுதல்.
    இதற்காக வேலை, வேலை என எந்நேரமும், அதைப் பற்றிய சிந்தனையில் ஓடுவதையும், அதிகமாக சம்பாதிக்க நினைப்பதும், ஆடம்பர வாழ்க்கைக்கான கனவு என்கிற, அதிகபட்ச ஆசைகள் தேவையில்லை. அந்த ஆசைகளை தேடி ஓட ஆரம்பித்தால், நிச்சயம் ஸ்ட்ரெஸ்சை சந்தித்தாக வேண்டும்.
    வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு, அதிகபட்ச கால ஒழுக்கம் அவசியம். உறவினர்களுக்கு, நண்பர்களுக்கு, அக்கம் பக்கத்து வீட்டாருக்கு, எத்தனை மணித்துளிகளை ஒதுக்கலாம் எனத் திட்டமிட்டுக் கொள்ள வேண்டும். பேஸ்புக்கோ, ட்விட்டரோ, டிவியோ, வேலைக்குச் செல்கிறவர்களின் களைப்பை நீக்கி புத்துணர்வு கொடுக்கும் ஒரு விஷயமாக இருக்க வேண்டுமே தவிர, உலகத்தை மறக்கும் அளவுக்கு, அதிலேயே மூழ்கக்கூடாது.
    வேலையிடத்தில் கூடியவரை வம்பு பேசுவதோ, அரசியல் பேசுவதோ வேண்டாம். சிலவிதமான அலுவலக அரசியல்கள், ஸ்ட்ரெஸ்சை அதிகரித்து, ஒரு கட்டத்தில், அந்த வேலையிலிருந்தே விலகி ஓடச் செய்து விடும். வேலையிடத்தில் செலவழிக்கிற நேரத்தை, ஆக்கப்பூர்வமாக செலவழித்தால், வேலை நேரம் முடிந்தும், அலுவலை முடிக்க முடியாமல் உண்டாகிற, டென்ஷன் இருக்காது. இதை புரிந்து கொண்டு, வீட்டையும், வேலை பார்க்கும் தளத்துக்கான முக்கியத்துவத்தையும் எடை போட்டு பிரித்தாள தெரிந்தவர்களுக்கு, எத்தகைய பிரச்னைகளில் இருந்தும் விடுபட, வழி கிடைக்கும்.


    Sponsored Links
    "Our sweetest songs are those that tell of the saddest thoughts "

    My completed story :-
    நம்பிக்கை ஒளி

    My ongoing story :-
    ததும்பி வழிகிறதே மௌனம் - Thathumbi


    dROP YOUR VALUABLE COMMENTS ON MY STORY HERE :-
    ததும்பி வழிகிறதே மௌனம் - Thathumbi Vazhikiradhae Mounam (Comments)


    PLEASE VISIT MY BLOG :-
    Penmai.Com - Indian, Tamil Women's Forum - Online Community - மயிலிறகாய் ரா.கிரிஜா - Blogs

    KAVIDHAI NOOLGAL :-
    GIRIJAVIN KAVIDHAI THOGUPPU NOOL
    http://www.penmai.com/forums/poems/1...ml#post1698598
    1) THOGUPPU 1 :- "வேரும் (க)விதைகளும் " DATED 17.02.2016
    2) THOGUPPU 2 :- "கவிதையாய் இனிய சாரல்கள்" DATED 18.02.2016

  2. #12
    girija chandru's Avatar
    girija chandru is offline Penman of Penmai
    Blogger
    Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Oct 2011
    Location
    coimbatore
    Posts
    10,005
    Blog Entries
    152

    Re: மருத்துவம் பற்றிய சில விஷயங்கள்

    வீட்டு மருத்துவ குறிப்புகள்
    *****************************************
    • நெல்லி வற்றல்- சந்தனத்தூள்- கொத்தமல்லி மூன்றையும் தண்ணீரில் ஊற வைத்தபின் வடிகட்டி அந்த நீரை அருந்தி வந்தால் தலை சுற்றல், கிறுகிறுப்பு முதலியன குறையும்.
    • வெல்லத்தை கெட்டியாகப் பாகு வைத்து அதில் மிளகை ஒன்றிரண்டாகப் பொடித்துப் போட்டு உருட்டி வைத்தால் இருமல் வரும்போது வாயில் அடக்கிக் கொள்ள இருமல் நிற்கும்.
    • மண் சட்டியில் உப்பை வறுத்துத் துணியில் கட்டி உப்பு ஒத்தடம் இரண்டு மூன்று வேளை கொடுத்தால் கழுத்து வலி நீங்கிவிடும்.
    • வயலட் நிறமுள்ள பிஞ்சு கத்தரிக்காய், கருஞ்சிவப்பு நிறமுள்ள பசலைக் கீரை, சிவப்பு பொன்னாங்கண்ணிக் கீரை இவற்றில் அயோடின் சத்து அதிகம் உள்ளது. இவற்றை அதிகமாகக் குழையவிடாமல் சாப்பிட்டு வர சிறுநீர் போகும்போது ஏற்படும் எரிச்சல் நீங்கிவிடும்.
    • நூல்கோலைத் துருவி ஊறவைத்து பயத்தம் பருப்பு கலந்து உப்பு பிசறி எலுமிச்சைச்சாறு பிழிந்து சாப்பிட்டால் சர்க்கரை நோய்க்கு அருமருந்தாகும்.
    • தேங்காய் எண்ணெயை மிதமான தீயில் வைத்துக் காய்ந்ததும் வேப்பிலையைப் போட்டு பொரித்து எடுத்துவிடவும். கொத்தாகக்கூடப் போடலாம். பிறகு இறக்கி வைத்துக் கொஞ்சம் வெந்தயம் போட்டு மூடிவைக்கவும். இந்த எண்ணெய்யைத் தலையில் தடவிவந்தால் வெயிலால் வரும் உடல் சூடு குறையும். வெப்ப நோய்கள் தாக்காது.
    • வயிற்றில் பிரச்னை ஏற்பட்டால் கொஞ்சம் சீரகத்தை எடுத்து கொதிநீரில் போட்டு கஷாயமாக இரண்டு வேளை குடித்து வர நிவாரணம் கிடைக்கும்.
    • மாதுளைச் சாறு தினமும் குடித்து வந்தால் ரத்த அழுத்தம், கொழுப்பு, நச்சுத்தன்மை என பல பிரச்னைகளுக்கு தீர்வு கிடைக்கும்.
    • பொடி செய்த ஓமத்தை பாலில் கலந்து வடிகட்டி படுக்கும் முன் குழந்தைகளுக்குக் கொடுத்தால் சளியை தூர விரட்டும்.
    • திராட்சையை பன்னீரில் ஊறவைத்துச் சாப்பிட்டால் இதயம் பலம் பெறும். தொடர்ந்து திராட்சை உண்பவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி நிச்சயம்.
    • குழந்தைகள் ஞாபகசக்தியுடன் இருக்க வேண்டுமானால் தினமும் காலை உணவுக்குப் பின் வெந்நீரில் ஒரு தேக்கரண்டி தேன் கலந்து குடிக்க வையுங்கள்.
    • சின்ன வெங்காயத்தை சிறிது எண்ணெய்விட்டு வதக்கவும். வெறும் வயிற்றில் தினமும் ஐந்தாறு என்ற கணக்கில் இரண்டு வாரங்கள் சாப்பிட்டு வர நரம்புத் தளர்ச்சி குணமாகும். உடலும் குளிர்ச்சியடையும்.

    "Our sweetest songs are those that tell of the saddest thoughts "

    My completed story :-
    நம்பிக்கை ஒளி

    My ongoing story :-
    ததும்பி வழிகிறதே மௌனம் - Thathumbi


    dROP YOUR VALUABLE COMMENTS ON MY STORY HERE :-
    ததும்பி வழிகிறதே மௌனம் - Thathumbi Vazhikiradhae Mounam (Comments)


    PLEASE VISIT MY BLOG :-
    Penmai.Com - Indian, Tamil Women's Forum - Online Community - மயிலிறகாய் ரா.கிரிஜா - Blogs

    KAVIDHAI NOOLGAL :-
    GIRIJAVIN KAVIDHAI THOGUPPU NOOL
    http://www.penmai.com/forums/poems/1...ml#post1698598
    1) THOGUPPU 1 :- "வேரும் (க)விதைகளும் " DATED 17.02.2016
    2) THOGUPPU 2 :- "கவிதையாய் இனிய சாரல்கள்" DATED 18.02.2016

  3. #13
    girija chandru's Avatar
    girija chandru is offline Penman of Penmai
    Blogger
    Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Oct 2011
    Location
    coimbatore
    Posts
    10,005
    Blog Entries
    152

    Re: மருத்துவம் பற்றிய சில விஷயங்கள்

    பாட்டி வைத்தியம்:-
    ****************************
    1. தும்மல் நீங்க...
    வெந்தயம் 100 கிராம், மிளகு 50 கிராம், ஓமம் 100 கிராம் மூன்றையும் லேசாக வறுத்துப் பொடி செய்து காலை மாலை 1/4 தேக்கரண்டி எடுத்து தேனுடன் குழைத்துச் சாப்பிடலாம் அல்லது பகல் இரவு உணவுடன் பிசைந்து சாப்பிடலாம்.
    2. பூச்சிகள் போக...
    குடலில் சேரும் பூச்சிகள் வெறியேற வேப்பந்துளிர் 10 எடுத்து வெல்லம் சேர்த்து சாப்பிட, மலத்துடன் அவை வெளியேறும். நான்கு நாட்கள் தொடர்ந்து செய்ய வேண்டும்.
    3. இளமை நீடிக்க...
    சீமை இலந்தைப்பழம் உண்பதற்குச் சுவையாக இருக்கும். தினம் ஐந்து முதல் பத்துப் பழங்களை வெறும் வயிற்றில் உண்டு வந்தால் இளமை நீடிக்கும். இல்லற சுகம் சோர்வு பெறாது. மகப்பேறு வாய்க்கும்.
    4. இரத்த சோகை நீங்க...
    வெறும் வயிற்றில் தினம் ஆப்பிள் + மாதுளை சுவைநீர் கலந்து தேன் 2 தேக்கரண்டி சேர்த்து சாப்பிட்டு வந்தால் இரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு உயரும். இரத்தசோகை நீங்கும். இரத்தப் புற்று நோய் நோயாளிகளுக்கு இது உணவாகவும் மருந்தாகவும் பயன்படுகிறது.
    5. முக்கனி சுவையில்...
    மா, பலா, வாழை எனும் தமிழ் கனிகள் முறையே வாத, பித்த, கபநிலைகளைக் கட்டுப்படுத்துபவை ஆகும். இவைகளை உணவில் ஒரு பழக்கமாக மாற்றிக் கொண்டால் நிச்சயம் நிலையான உடல் நலத்தைப் பெறலாம்.
    6. பலம் தரும் பலா...
    பலாக் காயினை துண்டுகளாக்கி உருளைக்கிழங்கு வருவல் போல் செய்துண்ணலாம். காம வேட்கையைத் தூண்டும் ஆற்றல் பலாக்காய்க்கு உண்டு. அதற்காக அன்றாடம் செய்து உண்டால் வாதம், செரிக்காமை, ஆகியன உண்டாகும். மாதமிருமுறை உண்பதே சிறப்பு. போதை நஞ்சுகள் முறியும்.
    7. மூல நோய் தணிய...
    நாட்டுக் கருணையின் தண்டினைப் பாசிப்பருப்புடன் பொரியலாகச் சமைத்துண்ண இரத்த மூலம், சதை மூலம் தணியும். பசியும் செரிமானமும் நிலைபெறும். மாதம் 1 முறை உண்ணலாம்!
    8. நல்லா செரிமானமாக...
    தினசரி பகல் உணவில் மட்டுமே சுத்தமான சுக்குப் பொடி 1/2 தேக்கரண்டி எடுத்து 1 பிடி சாதத்தில் கலந்து 1/4 தேக்கரண்டி நெய் அல்லது நல்லெண்ணை விட்டுப் பிசைந்து சாப்பிட அன்றைய உணவு முழுமையாக செரிக்கப்பட்டு, சாரம் இரத்தத்தில் கலக்கும். சக்கை மலக்குடல் வழி வெளியேறும்

    "Our sweetest songs are those that tell of the saddest thoughts "

    My completed story :-
    நம்பிக்கை ஒளி

    My ongoing story :-
    ததும்பி வழிகிறதே மௌனம் - Thathumbi


    dROP YOUR VALUABLE COMMENTS ON MY STORY HERE :-
    ததும்பி வழிகிறதே மௌனம் - Thathumbi Vazhikiradhae Mounam (Comments)


    PLEASE VISIT MY BLOG :-
    Penmai.Com - Indian, Tamil Women's Forum - Online Community - மயிலிறகாய் ரா.கிரிஜா - Blogs

    KAVIDHAI NOOLGAL :-
    GIRIJAVIN KAVIDHAI THOGUPPU NOOL
    http://www.penmai.com/forums/poems/1...ml#post1698598
    1) THOGUPPU 1 :- "வேரும் (க)விதைகளும் " DATED 17.02.2016
    2) THOGUPPU 2 :- "கவிதையாய் இனிய சாரல்கள்" DATED 18.02.2016

  4. #14
    girija chandru's Avatar
    girija chandru is offline Penman of Penmai
    Blogger
    Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Oct 2011
    Location
    coimbatore
    Posts
    10,005
    Blog Entries
    152

    Re: மருத்துவம் பற்றிய சில விஷயங்கள்

    நாள் முழுவதும் சுறுசுறுப்பாய் இயங்கிட..!
    *****************************************************************
    தலையை பின்புறம் 10 முறையும் முன்புறம் 10 முறையும் சாய்க்கவும்.
    •தலையை நன்றாக பின்நோக்கி வைத்துக் கொண்டு, வாயை நன்றாகத் திறந்து அசைத்து மூடவும்.
    •தலையை ஒரு பக்கத்திலிருந்து மறுபக்கத்திற்கு திருப்பவும்.
    •பிறகு தலையை வலது தோள்பட்டை வரை கொண்டு சென்று மறுபடி இடது தோள்பட்டைக்கு கொண்டு செல்லவும். இது போல் 10 முதல் 20 தடவை செய்யவும்.
    •வாய்க்குள் காற்றை நிரப்பி மூடவும். பின்னர் காற்றை வெளியேற்றவும். இதுபோல் 10 முறை செய்யவும்.
    •கண்களை வட்டமாக சுற்றிப் பார்க்கவும். இதுபோல் ஒரு 2 நிமிடம் செய்யவும்.
    •கழுத்தை நேராக இருக்குமாறு வைத்து தரையில் உட்கார்ந்து கழுத்தை கொஞ்சம்-கொஞ்சமாக சாய்க்கவும். அதே போன்று மெதுவாக மூச்சை இழுத்து விட்டுக் கொண்டு கழுத்தை மேலே உயர்த்தவும்.
    •இரு புருவங்களுக்கும் மேலே ஒற்றை விரல்களால் சில நிமிடங்கள் வரை அழுத்திக் கொண்டேயிருந்து விடவும்.
    •கண்களைச் சுற்றி சுருக்கங்கள் விழுவதால் வெகு சீக்கிரம் வயதாகி விட்டது போன்று தோற்றம் ஏற்படும். கீழ்க்கண்ட பயிற்சியின் மூலம் கருப்பு வளையங்கள் நீங்க வாய்ப்புள்ளது.
    •முதலில் நேராகப் பார்த்து பிறகு கொஞ்சம் கொஞ்சமாகப் பார்வையைத் தூக்கி மேலே பார்த்து, பிறகு கீழே பார்க்கவும். இதே போன்று வலப்புறமும், இடப்புறமும் பார்க்கவும்.
    •விரல்களின் அடிப்புறத்தால் முகம் முழுக்க மெதுவாக அழுத்தினால் முகத்தில் உள்ள தளர்ச்சி நீங்கும்

    "Our sweetest songs are those that tell of the saddest thoughts "

    My completed story :-
    நம்பிக்கை ஒளி

    My ongoing story :-
    ததும்பி வழிகிறதே மௌனம் - Thathumbi


    dROP YOUR VALUABLE COMMENTS ON MY STORY HERE :-
    ததும்பி வழிகிறதே மௌனம் - Thathumbi Vazhikiradhae Mounam (Comments)


    PLEASE VISIT MY BLOG :-
    Penmai.Com - Indian, Tamil Women's Forum - Online Community - மயிலிறகாய் ரா.கிரிஜா - Blogs

    KAVIDHAI NOOLGAL :-
    GIRIJAVIN KAVIDHAI THOGUPPU NOOL
    http://www.penmai.com/forums/poems/1...ml#post1698598
    1) THOGUPPU 1 :- "வேரும் (க)விதைகளும் " DATED 17.02.2016
    2) THOGUPPU 2 :- "கவிதையாய் இனிய சாரல்கள்" DATED 18.02.2016

  5. #15
    girija chandru's Avatar
    girija chandru is offline Penman of Penmai
    Blogger
    Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Oct 2011
    Location
    coimbatore
    Posts
    10,005
    Blog Entries
    152

    Re: மருத்துவம் பற்றிய சில விஷயங்கள்

    மருந்தில்லா மருத்துவம் ! ஆயுள் நீடிக்க மூலிகை மருத்துவம் :
    ************************************************************************************************
    அஜீரணம்
    ஒரு டம்ளர் தண்ணீரில் கருவேப்பிலை, இஞ்சி, சீரகம், மூன்றையும் கொதிக்க வைத்து ஆறவைத்து வடிகட்டி குடிக்க அஜீரணம் சரியாகும்.
    குடல்புண்
    மஞ்சளை தணலில் இட்டு சாம்பல் ஆகும் வரை எரிக்க வேண்டும். மஞ்சள் கரி சாம்பலை தேன் கலந்து சாப்பிட குடல் புண் ஆறும்.
    வாயு தொல்லை
    வேப்பம் பூவை உலர்த்தி தூளாக வெந்நீரில் உட்கொள்வதினால் வாயுதொல்லை நீங்கும். ஆறாத வயிற்றுப்புண் நீங்கும்.
    வயிற்று வலி
    வெந்தயத்தை நெய்யில் வறுத்து பொடி செய்து மோரில் குடிக்க வயிற்று வலி நீங்கும்.
    மலச்சிக்கல்
    செம்பருத்தி இலைகளை தூள் செய்து, தினமும் இருவேளை சாப்பிட்டு வர மலச்சிக்கல் தீரும்.
    சீதபேதி
    மலை வாழைப்பழத்தை நல்லெண்ணையில் சேர்த்துச் சாப்பிட சீதபேதி குணமாகும்.
    பித்த வெடிப்பு
    கண்டங்கத்திரி இலைசாறை ஆலிவ் எண்ணையில் காய்ச்சி பூசி வந்தால் பித்த வெடிப்பு குணமாகும்.
    மூச்சுப்பிடிப்பு
    சூடம், சுக்கு, சாம்பிராணி, பெருங்காயம் இவைகளை சம அளவு எடுத்து சேர்த்து வடித்த கஞ்சியில் கலக்கி மறுபடியும் சூடுபடுத்தி மூச்சுப்பிடிப்பு உள்ள இடத்தில் மூன்று வேளை தடவினால் குணமாகும்.
    சரும நோய்
    கமலா ஆரஞ்சு தோலை வெயிலில் காயவைத்து பொடி செய்து தினமும் சோப்புக்கு பதிலாக உடம்பில் தேய்த்து குளித்து வர சரும நோய் குணமாகும்.
    தேமல்
    வெள்ளை பூண்டை வெற்றிலை சேர்த்து மசிய அரைத்து தினமும் தோலில் தேய்த்து குளித்து வர தேமல் குணமாகும்.
    மூலம்
    கருணைக் கிழங்கை சிறுதுண்டுகளாய் நறுக்கி துவரம் பருப்புடன் சேர்த்து, சாம்பாராக செய்து சாப்பிட்டு வர மூலம் குணமாகும்.
    தீப்புண்
    வாழைத் தண்டை சுட்டு அதன் சாம்பலை தேங்காய் எண்ணையில் கலந்து தடவி வர தீப்புண், சீழ்வடிதல் மற்றும் காயங்கள் விரைவில் குணமாகும்.
    மூக்கடைப்பு
    ஒரு துண்டு சுக்கை தோல் நீக்கி அரை லிட்டர் நீரில் போட்டு சுண்டக் காய்ச்சி, பால், சர்க்கரை சேர்த்துக் காலை, மாலை சாப்பிட்டு வர மூக்கடைப்பு விரைவில் நீங்கும்.
    வரட்டு இருமல்
    எலுமிச்சம் பழசாறு, தேன் கலந்து குடிக்க வரட்டு இருமல் குணமாகும்

    ilakkikarthi likes this.
    "Our sweetest songs are those that tell of the saddest thoughts "

    My completed story :-
    நம்பிக்கை ஒளி

    My ongoing story :-
    ததும்பி வழிகிறதே மௌனம் - Thathumbi


    dROP YOUR VALUABLE COMMENTS ON MY STORY HERE :-
    ததும்பி வழிகிறதே மௌனம் - Thathumbi Vazhikiradhae Mounam (Comments)


    PLEASE VISIT MY BLOG :-
    Penmai.Com - Indian, Tamil Women's Forum - Online Community - மயிலிறகாய் ரா.கிரிஜா - Blogs

    KAVIDHAI NOOLGAL :-
    GIRIJAVIN KAVIDHAI THOGUPPU NOOL
    http://www.penmai.com/forums/poems/1...ml#post1698598
    1) THOGUPPU 1 :- "வேரும் (க)விதைகளும் " DATED 17.02.2016
    2) THOGUPPU 2 :- "கவிதையாய் இனிய சாரல்கள்" DATED 18.02.2016

  6. #16
    girija chandru's Avatar
    girija chandru is offline Penman of Penmai
    Blogger
    Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Oct 2011
    Location
    coimbatore
    Posts
    10,005
    Blog Entries
    152

    Re: மருத்துவம் பற்றிய சில விஷயங்கள்

    பயனுள்ள இயற்கை மருத்துவ குறிப்புகள்
    ****************************************************************
    காலையில் வெறும் வயிற்றில் 30 மில்லி அளவு கீழாநெல்லிச் சாறு குடித்து வந்தால் கல்லீரல் சம்பந்தப்பட்ட நோய்கள் குணமாகும்.
    துளசிச்சாற்றை தினமும் குடித்து வந்தால் கல்லீரல், மண்ணீரல் நோய்களை தடுக்கலாம்.
    நெல்லிக்காய் வற்றல் 50 கிராம், சீரகம் 50 கிராம் - இந்த இரண்டையும் பொடி செய்து ஒரு வாரத்துக்கு காலை, மாலை இரண்டு வேளையும் சாப்பிட்டு வந்தால் மஞ்சள் காமாலை குணமாகும்.
    பருப்பு கீரை, கீழா நெல்லி இரண்டையும் சம அளவில் எடுத்து மஞ்சள் சேர்த்து அரைத்து சாப்பிட்டால் கல்லீரல் வீக்கம் வற்றும்.
    பூவரசு மரத்தின் கொழுந்து இலைகளுடன் 6 மிளகு சேர்த்து அரைத்து, அதை மோரில் சுண்டைக்காய் அளவு கலந்து மூன்று வேளை குடித்து வந்தால் மஞ்சள் காமாலை குணமாகும்.
    பொன்னாங்கண்ணிக் கீரையை பருப்பு போட்டு கடைந்து சாப்பிட்டு வந்தால் கல்லீரல் நோய் குணமாகும்.
    சுக்கு, கிராம்பு இவற்றை எடுத்து கஷாயம் போட்டு மூன்று வேளை பருகி வந்தால் கை, கால், மூட்டு வலி குணமாகும்.
    கிராம்பு, வெற்றிலை, மிளகு இவற்றை மென்று தின்று மோர் குடித்தால் வயிற்று உப்புசம் குணமாகும்.
    திராட்சைச் சாறுடன் கிராம்பு, மிளகு பொடியாக அரைத்து நீருடன் பருகிவர சிறுநீரகக் கோளாறு நீங்கும்.
    துளசிச் சாற்றுடன் தேன், கிராம்புத் தூள் சேர்த்துச் சாப்பிட்டு வர நரம்புத் தளர்ச்சி நீங்கும்.
    எலுமிச்சைச் சாற்றுடன் கிராம்பு, ஓமம் பொடியாக்கி குடித்தால் வயிற்றுப்போக்கு நிற்கும்.
    வசம்புடன் கிராம்பு வைத்து நீர் தெளித்து விழுதாக அரைத்து தேமல் மீது தடவிவர, தேமல் மறையும்.
    கறிவேப்பிலை, கிராம்பு, பூண்டு சேர்த்துத் துவையல் செய்து சாப்பிட்டு வர தோல் நோய்கள் குணமாகும்.

    ilakkikarthi likes this.
    "Our sweetest songs are those that tell of the saddest thoughts "

    My completed story :-
    நம்பிக்கை ஒளி

    My ongoing story :-
    ததும்பி வழிகிறதே மௌனம் - Thathumbi


    dROP YOUR VALUABLE COMMENTS ON MY STORY HERE :-
    ததும்பி வழிகிறதே மௌனம் - Thathumbi Vazhikiradhae Mounam (Comments)


    PLEASE VISIT MY BLOG :-
    Penmai.Com - Indian, Tamil Women's Forum - Online Community - மயிலிறகாய் ரா.கிரிஜா - Blogs

    KAVIDHAI NOOLGAL :-
    GIRIJAVIN KAVIDHAI THOGUPPU NOOL
    http://www.penmai.com/forums/poems/1...ml#post1698598
    1) THOGUPPU 1 :- "வேரும் (க)விதைகளும் " DATED 17.02.2016
    2) THOGUPPU 2 :- "கவிதையாய் இனிய சாரல்கள்" DATED 18.02.2016

  7. #17
    girija chandru's Avatar
    girija chandru is offline Penman of Penmai
    Blogger
    Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Oct 2011
    Location
    coimbatore
    Posts
    10,005
    Blog Entries
    152

    Re: மருத்துவம் பற்றிய சில விஷயங்கள்

    வெந்நீரின் மருத்துவ பயன்கள்
    *********************************************
    எளிதாகக் கிடைக்கும் விஷயங்களின் மதிப்பு பல நேரங்களில் நமக்குத் தெரிவதில்லை. அப்படிப்பட்ட ஒன்றுதான், 'வெந்நீர்'. தண்ணீர் சுட வைப்பது, அதாவது வெந்நீர் போடுவது யாருக்கும் கஷ்டமான காரியமில்லை. ஆனால் வெந்நீர் அளிக்கும் நன்மைகள் ஏராளம். அவை இதோ...
    * காலையில் காலைக் கடனை சரியாகக் கழிக்க முடியாமல் அவதிப்படுகிறீர்களா? வெந்நீர் குடித்துப் பாருங்கள். நல்ல பலன் கிடைக்கும்.
    * ஏதாவது எண்ணைப் பல காரம், இனிப்பு போன்றவை சாப்பிட்ட பிறகு நெஞ்சு கரித்துக் கொண்டிருக்கிறதா? உடனே ஒரு டம்ளர் வெந்நீர் எடுத்து நிதானமாகப் பருகுங்கள். சிறிது நேரத்தில் நெஞ்செரிச்சல் மறைந்துவிடும்.
    * தொடர்ந்து வெந்நீர் குடித்தால், உடம்பில் சேரும் கொழுப்பு கரையும் என்று கூறப்படுகிறது.
    * மூக்கு அடைப்பால் அவதிப்படுகிறீர்களா? வெந்நீரைப் போன்ற சிறந்த மருத்துவர் ஏது? வெந்நீரில் விக்ஸ் அல்லது அமிர்தாஞ்சன் போட்டு 'ஆவி பிடித்தால்' மூக்கு அடைப்பு, தலைப் பாரம் அகன்றுவிடும்.
    * உடம்பு வலிக்கிற மாதிரி இருந்தால் உடனே வெந்நீரில் கொஞ்சம் சுக்குத் தூள், பனங்கற்கண்டு போட்டுக் குடியுங்கள். இதனால், பித்தத்தினால் ஏற்படும் வாய்க்கசப்பு மறைந்துவிடும். மேலும் உடல் வலிக்கும்போது நன்றாக வெந்நீரில் குளித்து விட்டு, சுக்கு வெந்நீரையும் குடித்துவிட்டுப் படுத்தால், நன்றாகத் தூக்கம் வருவதோடு, வலியும் பறந்துவிடும்.
    * அலைந்து திரிந்ததால் பாதங்கள் வலியெடுக்கிறதா? அப்போதும் வெந்நீர் தான் கை கொடுக்கும். பெரிய பாத்திரத்தில் கால் சூடு பொறுக்கும் அளவு வெந்நீர் ஊற்றி, அதில் சிறிது கல் உப்பைப் போட்டு கொஞ்சம் நேரம் பாதத்தை அமிழ்த்தி எடுங்கள். காலில் அழுக்கு இருப்பது போலத் தோன்றினால் வெந்நீரில் கொஞ்சம் டெட்டால் ஊற்றி அதில் பாதத்தை வைத்தால், கால் வலி மறைவதோடு, பாதமும் சுத்தமாகி விடும்.
    * வீட்டில் துணி துவைப்பது, பாத்திரங்கள் கழுவுவது போன்ற வேலைகளைச் செய்யும் இல்லத்தரசிகள், வாரத்துக்கு ஒரு முறையாவது உங்கள் கைகளை சிறிது நேரம் வெந்நீரில் வைத்திருங்கள். அதனால் நக இடுக்கில் இருக்கும் அழுக்குகள் அகன்று, கைகள் ஆரோக்கியமாக இருக்கும்.
    * வெயிலில் அலைந்துவிட்டு வந்த உடனே 'ஜில்'லென்று ஐஸ் வாட்டர் பருகுவதைவிட வெதுவெதுப்பான வெந்நீர் அருந்தலாம். அது நன்கு தாகம் தீர்க்கும்.
    * ஈஸ்னோபிலியா, ஆஸ்துமா போன்றவற்றால் அவதிப்படுபவர்கள், தாகம் எடுக்கும்போதெல்லாம் கண்டிப்பாக வெந்நீர் பருகுவது நல்லது. அதுபோலவே, ஜலதோஷம் பிடித்தவர்களும் வெந்நீர் குடித்தால் அது அந்த நேரத்தில் இதமாக இருப்பதோடு, விரைவாக இயல்பு நிலை ஏற்படும். இப்படி வெந்நீரின் நன்மைகளை பட்டியல் போட்டுக் கொண்டே போகலாம். வெந்நீர் பருகும் பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்ளுங்கள். அது என்றும் நன்மை தரும்.

    ilakkikarthi likes this.
    "Our sweetest songs are those that tell of the saddest thoughts "

    My completed story :-
    நம்பிக்கை ஒளி

    My ongoing story :-
    ததும்பி வழிகிறதே மௌனம் - Thathumbi


    dROP YOUR VALUABLE COMMENTS ON MY STORY HERE :-
    ததும்பி வழிகிறதே மௌனம் - Thathumbi Vazhikiradhae Mounam (Comments)


    PLEASE VISIT MY BLOG :-
    Penmai.Com - Indian, Tamil Women's Forum - Online Community - மயிலிறகாய் ரா.கிரிஜா - Blogs

    KAVIDHAI NOOLGAL :-
    GIRIJAVIN KAVIDHAI THOGUPPU NOOL
    http://www.penmai.com/forums/poems/1...ml#post1698598
    1) THOGUPPU 1 :- "வேரும் (க)விதைகளும் " DATED 17.02.2016
    2) THOGUPPU 2 :- "கவிதையாய் இனிய சாரல்கள்" DATED 18.02.2016

  8. #18
    girija chandru's Avatar
    girija chandru is offline Penman of Penmai
    Blogger
    Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Oct 2011
    Location
    coimbatore
    Posts
    10,005
    Blog Entries
    152

    Re: மருத்துவம் பற்றிய சில விஷயங்கள்

    this piece of info is from facebook.....

    அல்சரை தவிர்க்க.........
    நண்பர்களே தயவு செய்து இதை அதிகம் ஷேர் செய்யுங்கள்...
    ஒரு நடிகையின் போட்டோ வை ஷேர் செய்யறோம்.....
    உங்கள் ஷேர் ஒரு உயிரை கூட காப்பாற்றலாம்.....
    ஒரு கப் தயிரை தவறாமல் சாப்பிட்டு வந்தால் அல்சர் வரவே வராது.......
    தினமும் ஒரு ஏலக்காயை தேனோடு உண்பது கண் பார்வைக்கும், நரம்பு மண்டலத்திற்கும்மிகவும் நல்லது.......
    தினமும் இரண்டு அல்லது மூன்று ஓமம் சாப்பிட்டால் ஒரு மனிதனுக்கு தேவையான இரும்புச் சத்தில் பத்து சதவீதம் கிடைக்கிறது.......
    குழந்தைகளுக்கு முகத்தில் பாலுண்ணி தோன்றியதும், வெங்காயத்தை வெட்டி அதன் மேல் தேய்த்துவிட்டால் இரண்டு மூன்று தினங்களில் உதிர்ந்து விடும்.......
    மஞ்சள், பூண்டு இவை இரண்டையும் பால் விட்டு அரைத்து தலைக்கு பற்றுப் போட்டால், தலைவலி நீங்கும்.......
    உங்களுக்கு தெரிந்திருக்கலாம் அல்லது தெரியாமலிருக்கலாம் anyway share பண்ணுக......
    நண்பர்களே தயவு செய்து இதை அதிகம் ஷேர் செய்யுங்கள்......

    "Our sweetest songs are those that tell of the saddest thoughts "

    My completed story :-
    நம்பிக்கை ஒளி

    My ongoing story :-
    ததும்பி வழிகிறதே மௌனம் - Thathumbi


    dROP YOUR VALUABLE COMMENTS ON MY STORY HERE :-
    ததும்பி வழிகிறதே மௌனம் - Thathumbi Vazhikiradhae Mounam (Comments)


    PLEASE VISIT MY BLOG :-
    Penmai.Com - Indian, Tamil Women's Forum - Online Community - மயிலிறகாய் ரா.கிரிஜா - Blogs

    KAVIDHAI NOOLGAL :-
    GIRIJAVIN KAVIDHAI THOGUPPU NOOL
    http://www.penmai.com/forums/poems/1...ml#post1698598
    1) THOGUPPU 1 :- "வேரும் (க)விதைகளும் " DATED 17.02.2016
    2) THOGUPPU 2 :- "கவிதையாய் இனிய சாரல்கள்" DATED 18.02.2016

  9. #19
    girija chandru's Avatar
    girija chandru is offline Penman of Penmai
    Blogger
    Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Oct 2011
    Location
    coimbatore
    Posts
    10,005
    Blog Entries
    152

    Re: மருத்துவம் பற்றிய சில விஷயங்கள்

    உங்கள் காபியில் சிக்கரி இருக்கா?

    காலையில் எழுந்ததும், பெட்காபி இல்லை என்றால், நம்மில் பலருக்கு வேலையே ஓடாது.
    அதுவும் சிக்கரி கலக்காத ஃபில்டர் காபி, பியூர் ப்ளண்டட் காபி, இன்ஸ்டன்ட் காபி என்று காபியில் பல வகைகள் உண்டு.
    ஒவ்வொருத்தரும் சுவைக்கேற்ற மாதிரி அருந்தி வருகிறார்கள்.
    போதாக்குறைக்கு இந்த காபி வகைகளையே உயர்வாகவும், கெத்தாகவும் சொல்லிக் கொள்வதுமுண்டு.
    ஆனால், சிக்கரியில் உள்ள மகத்துவம் புரியாமல்தான் இவர்கள் இப்படி நடந்து கொள்கிறார்கள்.
    எளிதாகவும், விலை குறைவாகவும் உள்ள பொருட்களை கேவலமாக எண்ணும் மனோபாவம் நம் நாட்டினரிடம் மிகுதியாக உள்ளது.
    காபியை, 'முதலாளிகளுக்கான பானம்' என்றும் டீயை, 'தொழிலாளர்களுக்கான பானம்' என்றும் சொல்லும் பழக்கம் வெள்ளையர்கள் காலத்தில் இருந்தது.
    காபி குடிப்பது அப்போதெல்லாம்... ஏன், இப்போதும் கூட ஒரு ஸ்டேட்டஸ்ஸாக பார்க்கப்படுகிறது.
    50 ஆண்டுகளுக்கு முன் சிக்கரியை காப்பிக் கொட்டைகளுடன் கலந்து உபயோகிப்பது இந்தியாவில் பிரசித்தம்.
    காபியில் சிக்கரியைக் கலக்கும்போது ஒருவித கசப்புச்சுவையை ஏற்படுத்துகிறது.
    இந்த சுவையை, பலரும் விரும்புகின்றனர்.
    காபியில் 30% சிக்கரியைக் கலப்பது காபிப் பொடி தயாரிப்பவர்களின் வழக்கம்.
    இதனால், காபியில் உள்ள காஃபின் அளவு குறைகிறது.
    அப்படி என்னதான் இருக்கிறது சிக்கரியில் என்று பார்த்தால்,
    சிக்கரி உடல் சூட்டைத் தணிக்கிறது.
    மூச்சுத் திணறல், அஜீரணக்கோளாறு, தலைவலி ஆகியவற்றை சரி செய்கிறது.
    மூளைக்கு நல்ல மருந்தாகவும் செயல்படுகிறது.
    இதன் கசாயம் மாதவிடாய் போக்கை சீர் செய்கிறது.
    ஈரல் நோய்களை குணமாக்கி, சிறுநீர் கழிப்பை அதிகப்படுத்துகிறது.
    சிக்கரியில் எண்ணற்ற மருத்துவ குணங்கள் உள்ளன.
    இதை பார்ப்பதற்கு முள்ளங்கியைப் போலவே இருக்கும்.
    சிக்கரியின் கிழங்கை காயவைத்துதான் சிக்கரி தூள் தயாரிக்கிறார்கள்.
    எளிதில் ஆவியாகும் தன்மைக் கொண்டது.
    இதன் எண்ணெய்ச் சத்துக்கள் வயிற்றுப்பூச்சிகளை அழிக்கும் வல்லமை வாய்ந்தவை.
    இதனால் கால்நடை உணவுகளில், சிக்கரியைப் பயன்படுத்துகின்றனர்.
    கால்நடைகளின் வயிற்றுப்பூச்சிகளை அகற்றுவதில் சிறப்பாக பணிபுரிகின்றது.
    சிக்கரியை சிகோரியம் இன்டிபஸ் என்று தாவரப் பெயரில் அழைக்கிறார்கள். ஒரு காலத்தில் பிரான்ஸ் நாட்டில் காட்டுச்செடிபோல் எங்கு பார்த்தாலும், வளர்ந்து கிடந்தது. அங்கிருந்து இங்கிலாந்துக்குப் சென்று, அதன்பிறகு உலகம் முழுவதும் பரவியது.
    இங்கிலாந்தில், காபியுடன் சிக்கரியைக் கலப்பது, 1832ல் தடை செய்யப்பட்டது. பின், 1840ல், சிக்கரியை கலப்பது குறித்து, காபி வாங்குவோருக்கு தெரியப்படுத்த வேண்டும் என்ற நிபந்தனையுடன் இந்தத் தடையை விலக்கிக் கொண்டனர்.
    நம் நாட்டில் கூட, சிக்கரி எத்தனை சதவிகிதம் கலக்கப்பட்டுள்ளது என்பதை காபி தூள் வாங்கும் கவரில் கட்டாயம் போடவேண்டும் என்ற விதிமுறை இன்றளவும் உண்டு.
    இந்தியாவில் சிக்கரி தாவரம் பஞ்சாப் மற்றும் ஆந்திரபிரதேசம், பீகார், பஞ்சாப், இமாச்சலப் பிரதேசம், அஸ்ஸாம், மகாராஷ்டிரம், குஜராத், தமிழ்நாடு, ஒரிஸ்ஸா உள்ளிட்ட மாநிலங்களில் பயிரிடப்படுகிறது.
    ஃபிரான்ஸில் இதன் இலைகளை சலாட் செய்து பச்சையாகவே சாப்பிடுகின்றனர்.
    இதன் வேர்களில் இருந்து தயாரிக்கப்படும் டானிக், சிறுநீர் சுலபமாகப் போக மற்றும் வயிற்றுக் கோளாறுகளுக்கும் பயன்படுத்தப்படுகிறது.
    தவிர கல்லீரல், பித்தப்பை நோய்களுக்கு மருந்தாகப் பயன்படுகிறது.
    இதன் விதைகள், வேர்கள் ஆகியவை மருத்துவப் பயனுடையவை.
    இதன் இலைகள் மற்றும் வேரில் செயல்திறன் மிக்க வேதிப்பொருட்கள் (சிக்கோரியின் எஸ்கியுபின், எஸ்கியுலேட்டின்) போன்றவை உள்ளன.
    சிக்கரியில் காஃபின் இல்லாததால், ரத்த ஓட்டத்தைச் சீராக்கி, உடல் உள் உறுப்புகளுக்கு அநேக நன்மைகளைச் செய்கிறது.
    ஈரலுக்கும் நல்லது என்கிறார்கள்.
    விலையும் காபியைவிட மிகக் குறைவு.
    இதில் நாம் கவனத்தில் கொள்ள வேண்டியது, கர்ப்பிணிகளும், குழந்தைகளும் சிக்கரியை உட்கொள்வதைத் தவிர்ப்பது நல்லது.
    நாடித் துடிப்பைக் குறைத்துவிடும் தன்மை இதற்கு உண்டு.
    ரத்தத்தில் சர்க்கரை அளவை குறைக்கக்கூடிய தன்மையும் உண்டு.
    இதனால் மருந்து உட்கொள்ளும் சர்க்கரை நோயாளிகள் அளவோடு பயன்படுத்தி ஆரோக்கியத்தைப் பாதுகாக்கலாம்.





    "Our sweetest songs are those that tell of the saddest thoughts "

    My completed story :-
    நம்பிக்கை ஒளி

    My ongoing story :-
    ததும்பி வழிகிறதே மௌனம் - Thathumbi


    dROP YOUR VALUABLE COMMENTS ON MY STORY HERE :-
    ததும்பி வழிகிறதே மௌனம் - Thathumbi Vazhikiradhae Mounam (Comments)


    PLEASE VISIT MY BLOG :-
    Penmai.Com - Indian, Tamil Women's Forum - Online Community - மயிலிறகாய் ரா.கிரிஜா - Blogs

    KAVIDHAI NOOLGAL :-
    GIRIJAVIN KAVIDHAI THOGUPPU NOOL
    http://www.penmai.com/forums/poems/1...ml#post1698598
    1) THOGUPPU 1 :- "வேரும் (க)விதைகளும் " DATED 17.02.2016
    2) THOGUPPU 2 :- "கவிதையாய் இனிய சாரல்கள்" DATED 18.02.2016

  10. #20
    girija chandru's Avatar
    girija chandru is offline Penman of Penmai
    Blogger
    Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Oct 2011
    Location
    coimbatore
    Posts
    10,005
    Blog Entries
    152

    Re: மருத்துவம் பற்றிய சில விஷயங்கள்

    பாட்டி வைத்தியத்தில் உள்ள ஓர் வித்தியாசமான வைத்தியம் தான் இரவில் படுக்கும் போது வெங்காயத்தை பாதத்தின் கீழ் வைத்து சாக்ஸ் அணிந்து தூங்குவது.


    வெங்காயத்தை பாதத்தில் வைத்துக் கொண்டு சாக்ஸ் அணிந்து கொண்டால், உடலின் பல்வேறு உறுப்புகளுக்கு நல்லது. இதற்கு வெங்காயத்தில் உள்ள பாஸ்பாரிக் ஆசிட் தான் காரணம்.
    இரத்தம் சுத்தமாகும்
    வெங்காயத்தில் உள்ள பாஸ்பாரிக் ஆசிட்டானது, சருமத்தின் வழியே ஊடுருவி இரத்த நாளங்களில் நுழைந்து, இரத்தத்தை சுத்தப்படுத்துமாம்.
    பாக்டீரியாக்களை அழிக்கும்
    வெங்காயத்தில் ஆன்டி-பாக்டீரியல் மற்றும் ஆன்டி-வைரஸ் அதிகம் உள்ளது. எனவே இவை உடலில் உள்ள தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்களை அழித்துவிடுமாம்.
    இதய ஆரோக்கியம்
    வெங்காயத்தை தினமும் பாதங்களில் வைத்துக் கொண்டு தூங்கினால், இதய ஆரோக்கியம் மேம்படுமாம். முக்கியமாக இந்த பழக்கத்தை அன்றாடம் மேற்கொண்டு வந்தால், இதய நோயில் இருந்து விடுபடலாமாம்.
    கழுத்து வலி, காது வலி
    நீங்கும் பாதங்களில் வெங்காயத்தை வைத்துக் கொண்டு சாக்ஸ் அணிந்து தூங்கினால், இதுவரை மிகுந்த தொந்தரவைக் கொடுத்துக் கொண்டிருந்த கழுத்து வலி, காது வலி போன்றவை நீங்குமாம்.
    வயிற்று பிரச்சனைகள்
    முக்கியமாக வயிற்றுப் பிரச்சனைகள் இருந்தாலும் நீங்கிவிடுமாம். அதுமட்டுமின்றி சிறுநீரக பிரச்சனைகள் இருந்தாலும் குணமாகிவிடுமாம்.
    குடல் மற்றும் சிறுநீர்ப்பை பிரச்சனைகள்
    உங்களுக்கு குடல் மற்றும் சிறுநீர்ப்பை பிரச்சனைகள் இருந்தாலும் குணமாகும். எப்படியெனில் வெங்காயத்தை பாதத்தில் வைக்கும் போது உடலினுள் ஒருவித வெப்பம் உருவாகி, அதனால் பல்வேறு பிரச்சனைகள் நீங்குமாம்.
    துர்நாற்றமிக்க பாதம்
    உங்கள் பாதங்களில் இருந்து கடுமையான தூர்நாற்றம் வீசுமாயின், தினமும் பாதங்களில் வெங்காயத்தை வைத்து சாக்ஸ் அணிந்து கொண்டு தூங்கினால், பாதங்களில் இருந்து வீசும் துர்நாற்றம் போய்விடுமாம்.
    சளி, காய்ச்சல்
    சளி, காய்ச்சல் போன்றவற்றால் அவஸ்தைப்படுபவராயின், வெங்காயத்தை இரவில் படுக்கும் போது உள்ளங்கால்களில் வைத்து சாக்ஸ் அணிந்து கொண்டு தூங்கினால், சளி, காய்ச்சல் போன்றவை குணமாகுமாம்.


    ... courtesy... daily newspaper

    spmeyyammaisp06 likes this.
    "Our sweetest songs are those that tell of the saddest thoughts "

    My completed story :-
    நம்பிக்கை ஒளி

    My ongoing story :-
    ததும்பி வழிகிறதே மௌனம் - Thathumbi


    dROP YOUR VALUABLE COMMENTS ON MY STORY HERE :-
    ததும்பி வழிகிறதே மௌனம் - Thathumbi Vazhikiradhae Mounam (Comments)


    PLEASE VISIT MY BLOG :-
    Penmai.Com - Indian, Tamil Women's Forum - Online Community - மயிலிறகாய் ரா.கிரிஜா - Blogs

    KAVIDHAI NOOLGAL :-
    GIRIJAVIN KAVIDHAI THOGUPPU NOOL
    http://www.penmai.com/forums/poems/1...ml#post1698598
    1) THOGUPPU 1 :- "வேரும் (க)விதைகளும் " DATED 17.02.2016
    2) THOGUPPU 2 :- "கவிதையாய் இனிய சாரல்கள்" DATED 18.02.2016

loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter