Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine December! | All Issues

User Tag List

Like Tree39Likes

மருத்துவம் பற்றிய சில விஷயங்கள்


Discussions on "மருத்துவம் பற்றிய சில விஷயங்கள்" in "General Health Problems" forum.


  1. #21
    girija chandru's Avatar
    girija chandru is offline Penman of Penmai
    Blogger
    Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Oct 2011
    Location
    coimbatore
    Posts
    10,005
    Blog Entries
    152

    Re: மருத்துவம் பற்றிய சில விஷயங்கள்

    ஒருவர் , தனது அம்மாவிற்கு கடுமையான காய்ச்சல் என்று ஹாஸ்பிடல் போய் டெஸ்ட் எடுத்து பார்த்தால் டெங்கு காய்ச்சல்.
    பக்கத்தில் மளிகை கடை வைத்திருக்கும் திருநெல்வேலி அண்ணாச்சி நிலவேம்பை கஷாயம் வைத்து ரெண்டு வேலை குடிங்க காய்ச்சல் சரியாகிவிடும் என்று சொன்னார்.
    அவரும் நிலவேம்பு பொடியை கஷாயம் வைத்து 3 நாள் கொடுத்தார்.
    காய்ச்சல் குணமாகி விட்டது.
    கூடவே தன் அம்மாவிற்கு சர்க்கரை நோயால் காலில் பயங்கர எரிச்சல் எப்பொழுதுமே இருக்கும்.
    அது சுத்தமாக இல்லை.
    உடனே நெட்டில் தேடிபார்த்த பொழுது நிறைய இணைய தளங்களில் Andrographis paniculata (நிலவேம்பின் தாவர பெயர் ) தினமும் எடுத்துகொள்ளும் பொழுது ரத்தத்தில் குளுகோஸ் அளவு குறைகிறது என்று நிறைய ஆராய்ச்சி கட்டுரைகள் கிடைத்தது .
    3 டம்ளர் தண்ணீரில் ஒரு பெரிய டீஸ்பூன் நிலவேம்பு பொடி போட்டு 1 டம்ளர் வற்றும் வரை கொதிக்க விட்டு தினமும் காலை 1 வேளை இரவு வேளை என ஒன்றரை மாதம் தன் அம்மாவுக்கு கொடுத்ததில் 290 அளவு இருந்த சர்க்கரை அளவு நேற்று வெறும் 80 !!!
    இதில் முக்கியமாக நல்ல தரமான 100% ஆர்கானிக் நிலவேம்பு பொடியாக இருந்தால் பலன் நிச்சயம் .நிறைய ஆன்லைன் ஸ்டோர் மற்றும் நாட்டு மருந்து கடை அல்லது ஹோமியோ மருந்து கடையிலும் கிடைக்கிறது .
    காய்ச்சலுக்கு கஷாயம் குடிக்க போய் சர்க்கரை நோய் குணமாகி விட்டது.
    "சிறிய நங்கை" செடியே நிலவேம்பு.




    Sponsored Links
    "Our sweetest songs are those that tell of the saddest thoughts "

    My completed story :-
    நம்பிக்கை ஒளி

    My ongoing story :-
    ததும்பி வழிகிறதே மௌனம் - Thathumbi


    dROP YOUR VALUABLE COMMENTS ON MY STORY HERE :-
    ததும்பி வழிகிறதே மௌனம் - Thathumbi Vazhikiradhae Mounam (Comments)


    PLEASE VISIT MY BLOG :-
    Penmai.Com - Indian, Tamil Women's Forum - Online Community - மயிலிறகாய் ரா.கிரிஜா - Blogs

    KAVIDHAI NOOLGAL :-
    GIRIJAVIN KAVIDHAI THOGUPPU NOOL
    http://www.penmai.com/forums/poems/1...ml#post1698598
    1) THOGUPPU 1 :- "வேரும் (க)விதைகளும் " DATED 17.02.2016
    2) THOGUPPU 2 :- "கவிதையாய் இனிய சாரல்கள்" DATED 18.02.2016

  2. #22
    girija chandru's Avatar
    girija chandru is offline Penman of Penmai
    Blogger
    Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Oct 2011
    Location
    coimbatore
    Posts
    10,005
    Blog Entries
    152

    Re: மருத்துவம் பற்றிய சில விஷயங்கள்

    வாழைப்பூவின் மருத்துவ மகத்துவம் :
    ========================================================
    வாழைப்பூ பற்றி அறியாதவர்கள் இருக்க முடியாது. வாழையை நம் தேசத்தில் வீட்டு மரமாக வளர்க்கின்றனர்.
    வாழைமரத்தில் மொத்தம் 14 வகைகள் உள்ளன. சிறப்பு வாய்ந்த வாழையின் அனைத்துப் பாகங்களுமே மருத்துவப் பயன் கொண்டவை. இதில் வாழைப் பூவின் மருத்துவக் குணங்களை அறிந்து கொள்வோம்.
    மருத்துவப் பயன்கள்:
    ---------------------------------------------------------------------------------------
    இரத்தத்தைச் சுத்தப்படுத்த:
    --------------------------------------------
    வாழைப்பூவை வாரம் இருமுறை சமைத்து உண்டு வந்தால் இரத்தத்தில் கலந்துள்ள தேவையற்ற கொழுப்புகளைக் கரைத்து வெளியேற்றும். இதனால் இரத்தத்தின் பசைத்தன்மை குறைந்து, இரத்தம் வேகமாகச் செல்லும். மேலும் இரத்த நாளங்களில் ஒட்டியுள்ள கொழுப்புகளைக் கரைத்து இரத்தத்தை சுத்தப்படுத்தும். இதனால் இரத்தமானது அதிகமான ஆக்ஸிஜனை உட் இரப்பதுடன், தேவையான இரும்பு சத்தையும் உட்கிரகிக்கிறது.
    இரத்த அழுத்தம், இரத்த சோகை போன்ற நோய்கள் ஏற்படாமல் தடுக்கும்.
    சர்க்கரை நோயாளிகளுக்கு:
    -------------------------------------------------
    இரத்தத்தில் கலந்துள்ள அதிகளவு சர்க்கரைப் பொருளைக் கரைத்து வெளியேற்ற வாழைப்பூவின் துவர்ப்புத்தன்மை அதிகம் உதவுகிறது. இதனால் இரத்தத்தில் கலந்துள்ள சர்க்கரையின் அளவு குறைகிறது.
    வயிற்றுப்புண் நீங்க:
    -------------------------------------
    இன்றைய உணவுமுறை மாறுபாட்டாலும், மன உளைச்சலாலும் வயிற்றில் செரியாமை உண்டாகி அதனால் அபான வாயு சீற்றம் கொண்டு வயிற்றில் புண்களை ஏற்படுத்துகிறது. இந்த புண்களை ஆற்ற வாழைப் பூவை வாரம் இருமுறை உணவில் சேர்த்து வந்தால் வயிற்றுப் புண்கள் ஆறும். செரிமானத்தன்மை அதிகரிக்கும்.
    மூலநோயாளிகளுக்கு:
    ---------------------------------------
    மூலநோயின் பாதிப்பினால் மலத்துடன் இரத்தம் வெளியேறுதல், உள்மூலம், வெளிமூலப் புண்கள் இவற்றுக்கு சிறந்த மருந்தாக வாழைப் பூவைப் பயன்படுத்தலாம். வாழைப்பூ மூலக்கடுப்பு, இரத்த மூலம் போன்றவற்றைக் குணப்படுத்தும். மலச்சிக்கலைப் போக்கும் . சீதபேதியையும் கட்டுப்படுத்தும். வாய்ப் புண்ணைப் போக்கி வாய் நாற்றத்தையும் நீக்கும்.
    பெண்களுக்கு:
    --------------------------------
    பெண்களுக்கு உண்டாகும் கருப்பைக் கோளாறுகள். மாதவிலக்கு காலங்களில் அதிக இரத்தப்போக்கு, அல்லது இரத்த போக்கின்மை, வெள்ளைப்படுதல் போன்ற நோய்களுக்கு வாழைப்பூவை உணவில் சேர்த்துக் கொண்டு வந்தால் நோய்கள் நீங்கும்.
    வாழைப்பூ கஷாயம்:
    வாழைப்பூ (இரண்டு அல்லது மூன்று இதழ்களை நீக்கி விட்டு பூவை சிறிது சிறிதாக நறுக்கி வைத்துக் கொண்டு) அதனுடன் இஞ்சி 5 கிராம் பூண்டு பல் 5 நல்ல மிளகு 1 ஸ்பூன் சீரகம் 1 ஸ்பூன் சோம்பு 1 ஸ்பூன் கொத்தமல்லி விதை 1 ஸ்பூன் கறிவேப்பிலை 5 இணுக்கு எடுத்து இடித்து கஷாயம் செய்து காலை, மாலை என இருவேளையும் மாதவிலக்கு தோன்றும் காலத்திற்கு இரண்டு நாட்களுக்கு முன்பும், மாதவிலக்கு காலங்களிலும், மாதவிலக்கு முடிந்து இரண்டு நாட்கள் என மூன்று அல்லது நான்கு மாதங்கள் அருந்தி வந்தால் கருப்பைப்புண், கர்ப்பப்பைக் கட்டி, வெள்ளைபடுதல், மாதவிலக்கு சீரற்ற தன்மை போன்றவை மாறும். இது கை கண்ட மருந்தாகும்.
    அடிவயிறு கனம் குறையும். புண்புரை நீங்கும், சீராக இரத்த ஓட்டம் பெறும். உடல் வலுவடையும். பெண்களுக்கு உண்டாகும் சூடு மற்றும் வெள்ளை படுதலை போக்கும். கர்ப்பப்பையை வலுப்படுத்தும் குணமுண்டு. மலட்டுத் தன்மையைப் போக்கும்.
    ஈறு வீக்கம், புண் இவற்றிற்கு சிறந்த மருந்தாகும். வியர்வை நாற்றத்தைப் போக்கி, வியர்வையை நன்கு வெளியேற்றும்.
    கை, கால்களில் உண்டாகும் பித்த எரிச்சலைக் குணப்படுத்தும். உடல் எரிச்சலைப் போக்கும். தாதுவை விருத்தி செய்து விந்துவை கெட்டிப்படுத்தும். பருவ வயதினருக்கு உண்டாகும் சொப்ன ஸ்கலிதத்தை மாற்றும். நரம்புகளுக்கு வலுவூட்டும். குறிப்பாக மூளை நரம்புகளில் சூட்டைத் தணித்து மூளைக்கு புத்துணர்வைக் கொடுக்கும்.
    இத்தகைய சிறப்பு மிகுந்த வாழைப்பூவை நாமும் தொடர்ந்து சமைத்து உண்டு நோயில்லா பெருவாழ்வு வாழ்வோம்.

    "Our sweetest songs are those that tell of the saddest thoughts "

    My completed story :-
    நம்பிக்கை ஒளி

    My ongoing story :-
    ததும்பி வழிகிறதே மௌனம் - Thathumbi


    dROP YOUR VALUABLE COMMENTS ON MY STORY HERE :-
    ததும்பி வழிகிறதே மௌனம் - Thathumbi Vazhikiradhae Mounam (Comments)


    PLEASE VISIT MY BLOG :-
    Penmai.Com - Indian, Tamil Women's Forum - Online Community - மயிலிறகாய் ரா.கிரிஜா - Blogs

    KAVIDHAI NOOLGAL :-
    GIRIJAVIN KAVIDHAI THOGUPPU NOOL
    http://www.penmai.com/forums/poems/1...ml#post1698598
    1) THOGUPPU 1 :- "வேரும் (க)விதைகளும் " DATED 17.02.2016
    2) THOGUPPU 2 :- "கவிதையாய் இனிய சாரல்கள்" DATED 18.02.2016

  3. #23
    girija chandru's Avatar
    girija chandru is offline Penman of Penmai
    Blogger
    Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Oct 2011
    Location
    coimbatore
    Posts
    10,005
    Blog Entries
    152

    Re: மருத்துவம் பற்றிய சில விஷயங்கள்

    கொழுப்பு அதிகம் உள்ள உணவு உண்பதால் பித்தப்பையில் கல் உருவாகிறது. இதன் அறிகுறி வலது நெஞ்சில் வலி , நேர் பின்னே முதுகில் வலி, வலது தோளிலிரிந்து உள்ளங்கை வரை வலி பரவும்.

    இதன் அறிகுறி தென்பட்டால் எலுமிச்சை சாரை ஒரு கப் நீரில் பிழிந்து ஒரு மணிநேரத்திற்கு ஒரு முறை அருந்தவும். ஒரு கப் தண்ணீரை கொதிக்க விட்டு கொதி வந்தவுடன் நெருப்பை அணைத்து , இதில் அரை டீஸ்பூன் கீழாநெல்லி கீரை பொடியை சேர்த்து கலக்கவும். பத்து நிமிடம் கழித்து நீர் ஆறியவுடன் வடிகட்டி அருந்தவும். ஒரு நாளைக்கு ஒருமுறை குடித்தால் போதும்.
    இதை ஒரு வாரம் குடிக்கவும். கீழநேல்லிக் கீரை கல்லை கரைக்கும் தன்மை கொண்டது. இது பித்தப்பைக் கல், கிட்னியில் கல், கல்லீரலில் கல் அனைத்தையும் கரைக்க வல்லது. அறுவை சிகிச்சை மூலம் பித்தபையை அகற்றினால் பிற்காலங்களில் அஜீரனக் கோளறு, குடற்புண் ஏற்படும் வாய்ப்பு உள்ளது.
    இன்று மக்கள் அதிகமாக சந்தித்து வரும் நோய்களில் பித்தப்பை கல் நோயும் ஓன்று. இதை ஆங்கிலத்தில் (Gallstones )என்பார்கள். இந்த பித்தப்பை கல் ஏன் வருகிறது என்றால், உணவு முறை தான் முதல் காரணம். இந்த பித்தப்பை ஒரு சிறு உறுப்பு தான் இது மனிதனின் ஈரலுக்கு கீழ் அமைந்து இருக்கும். இதனுடைய செயல் பாடுகள் என்னவென்றல்,உணவு செரிமானத்தில் இந்த பித்தப்பையின் பங்கு முக்கியமானது.
    அது போல் இது மனிதனின் பித்த நீரை சேமித்து வைத்து கொள்ளும் ஒரு தனி அரை.நாம் உண்ணும் உணவானது செரிப்பதற்கு தேவையான அமிலத்தை நம்முடைய ஈரல் சுரக்கிறது. இந்த அமிலம் பலவகையான பொருட்களால் ஆனது.
    அவையாவது கொழுப்பு,பித்தச்செம்பசை,பித்த உப்பு. இது சுரந்து அதை குடல் வழியாக நம் உணவோடு சேர்த்துவிடும்.மேலும் இது உருவாவதற்கு பல வகையான கரங்கள் உண்டு.
    அவற்றை கீழே பாப்போம்.
    1) இந்த நோயானது நம் குடுமபத்தில் யாருக்காவது இருந்தது என்றல். குடும்பத்தில் உள்ள மற்ற நபர்களுக்கும் வரும் வாய்பு உள்ளது.
    2) உடல் பருமன் இதில் முக்கிய பங்கு ஆற்றுகிறது. உடல் பருமனானவர்களுக்கு கொழுப்பு அதிகமாக உண்டாகிறது.அந்த கொழுப்பானது பித்தபையை காலியாக இருக்கவிடாது.
    3) எசுத்தோசென்(Estrogen): இது கொழுப்பை அதிகமாக உடலில் உண்டு பண்ணும் மேலும் இது பித்தபையை அசைய விடாமல் அதன் செயல் பாடுகளை குறைக்கும். மாசமாக உள்ளவர்கள், கருத்தடை மாத்திரை எடுத்து கொண்டவர்கள், ஹார்மோன் அதிகமாக சுரப்பவர்களுக்கு இந்த நோய் வரும் வாய்புகள் அதிகம்.
    4) இனம் சம்பந்தமாக பூர்வீகம் உள்ளவர்களுக்கு இந்த நோய் வர வாய்புகள் அதிகம்.பூர்வீக அமெரிக்கர்களுக்கு மற்றும் மெகசிகோ அமெரிக்கர்களுக்கும் இந்த நோய் பரவலாக வரும் வாய்ப்பு உள்ளது.
    5)பாலினம் மற்றும் வயதும் ஒரு முக்கிய காரணம். இந்த நோய் வயதான பெண்களை அதிகமாக தாக்கும்.
    6)போதையான கொழுப்பு பொருள் பித்தத்தில் கொழுப்பை அதிக படுத்தும்.இது போன்று நிகழும் போது கொழுப்பு கற்கள் உருவாகும்.
    6) நீரிழிவு: நீரழிவை த்டுபதற்காக கையலபடுகிற முறைகளினால் இரத்தத்தில் கொழுப்பு உண்டாகும். இந்த வகை பித்தப்பை கல் மிக மோசமானது.
    இந்த நோயால் பாதிப்படைந்தவர்கள் முதலில் உடல் பருமனை குறைக்க வேண்டும்.
    நோன்பு நோர்பதினால் பித்தப்பை சுருங்கும்.
    இந்த நோயின் அறிகுறிகள்:
    1) மேற்புற வாயிற்று பகுதியில் மற்றும் முதுகு புரத்தின் மேற்புறத்தில் வலி உண்டாகும்.
    2) குமட்டுதல்: இந்த நோய் உள்ளவர்களுக்கு குமட்டல் உண்டாகும்.
    3) வாந்தி உண்டாகும்.
    4) உணவு பாதையில் பிரச்னை உருவாகும்,வாயு தொல்லை உண்டாகும், அசீரணம் பிரச்சனைகள் உண்டாகும்.
    பித்தப்பை கல் நீங்க மருத்துவம்:
    ‪#‎இந்த‬ வகை நோயினால் பாதிக்க பட்டவர்கள் நெருஞ்சில் இலையை பொடிசெய்து காலையில் இரண்டு ஸ்பூன் எடுத்து தண்ணீரில் கலந்து குடிக்க வேண்டும். அப்படி குடித்து வந்தால் ஆறுநாட்களில் இந்த நோயை குணப்படுத்தலாம்.
    ‪#‎கொழுப்பு‬ அதிகம் உள்ள உணவு உண்பதால் பித்தப்பையில் கல் உருவாகிறது. இதன் அறிகுறி வலது நெஞ்சில் வலி , நேர் பின்னே முதுகில் வலி, வலது தோளிலிரிந்து உள்ளங்கை வரை வலி பரவும். இதன் அறிகுறி தென்பட்டால் எலுமிச்சை சாரை ஒரு கப் நீரில் பிழிந்து ஒரு மணிநேரத்திற்கு ஒரு முறை அருந்தவும். ஒரு கப் தண்ணீரை கொதிக்க விட்டு கொதி வந்தவுடன் நெருப்பை அணைத்து , இதில் அரை டீஸ்பூன் கீழாநெல்லி கீரை பொடியை சேர்த்து கலக்கவும். பத்து நிமிடம் கழித்து நீர் ஆறியவுடன் வடிகட்டி அருந்தவும். ஒரு நாளைக்கு ஒருமுறை குடித்தால் போதும். இதை ஒரு வாரம் குடிக்கவும். கீழநேல்லிக் கீரை கல்லை கரைக்கும் தன்மை கொண்டது. இது பித்தப்பைக் கல், கிட்னியில் கல், கல்லீரலில் கல் அனைத்தையும் கரைக்க வல்லது. அறுவை சிகிச்சை மூலம் பித்தபையை அகற்றினால் பிற்காலங்களில் அஜீரனக் கோளறு, குடற்புண் ஏற்படும் வாய்ப்பு உள்ளது

    "Our sweetest songs are those that tell of the saddest thoughts "

    My completed story :-
    நம்பிக்கை ஒளி

    My ongoing story :-
    ததும்பி வழிகிறதே மௌனம் - Thathumbi


    dROP YOUR VALUABLE COMMENTS ON MY STORY HERE :-
    ததும்பி வழிகிறதே மௌனம் - Thathumbi Vazhikiradhae Mounam (Comments)


    PLEASE VISIT MY BLOG :-
    Penmai.Com - Indian, Tamil Women's Forum - Online Community - மயிலிறகாய் ரா.கிரிஜா - Blogs

    KAVIDHAI NOOLGAL :-
    GIRIJAVIN KAVIDHAI THOGUPPU NOOL
    http://www.penmai.com/forums/poems/1...ml#post1698598
    1) THOGUPPU 1 :- "வேரும் (க)விதைகளும் " DATED 17.02.2016
    2) THOGUPPU 2 :- "கவிதையாய் இனிய சாரல்கள்" DATED 18.02.2016

  4. #24
    girija chandru's Avatar
    girija chandru is offline Penman of Penmai
    Blogger
    Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Oct 2011
    Location
    coimbatore
    Posts
    10,005
    Blog Entries
    152

    Re: மருத்துவம் பற்றிய சில விஷயங்கள்

    சாப்பிடாதீங்க ...
    * பசி இல்லாதபோது ...
    * உடலுக்கு பொருந்தாத உணவை...
    * களைப்பாக இருக்கும்போது...
    * வேலை நிறைய இருக்கும்போது...
    * கோபமாக உள்ளபோது...
    * உடல் நலம் இல்லாதபோது...
    * அவசரமாக...
    * கெட்டுப் போன பழையதை...
    * கண்ட நேரங்கள் / கண்ட இடங்களில்...
    * காய்கறி இல்லாமல்...
    * மசாலா போட்ட உணவை...
    * டால்டா சேர்ந்துள்ளதை ...
    * கொழுப்பு கலந்த நெய் ( மாட்டுக் கொழுப்பு ) ...
    * மாலை 5.30 லிருந்து 6.30 மணிக்குள்...

    "Our sweetest songs are those that tell of the saddest thoughts "

    My completed story :-
    நம்பிக்கை ஒளி

    My ongoing story :-
    ததும்பி வழிகிறதே மௌனம் - Thathumbi


    dROP YOUR VALUABLE COMMENTS ON MY STORY HERE :-
    ததும்பி வழிகிறதே மௌனம் - Thathumbi Vazhikiradhae Mounam (Comments)


    PLEASE VISIT MY BLOG :-
    Penmai.Com - Indian, Tamil Women's Forum - Online Community - மயிலிறகாய் ரா.கிரிஜா - Blogs

    KAVIDHAI NOOLGAL :-
    GIRIJAVIN KAVIDHAI THOGUPPU NOOL
    http://www.penmai.com/forums/poems/1...ml#post1698598
    1) THOGUPPU 1 :- "வேரும் (க)விதைகளும் " DATED 17.02.2016
    2) THOGUPPU 2 :- "கவிதையாய் இனிய சாரல்கள்" DATED 18.02.2016

  5. #25
    girija chandru's Avatar
    girija chandru is offline Penman of Penmai
    Blogger
    Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Oct 2011
    Location
    coimbatore
    Posts
    10,005
    Blog Entries
    152

    Re: மருத்துவம் பற்றிய சில விஷயங்கள்

    தினமும் ஒரு கிண்ணம் முளை கட்டிய வெந்தயத்தை சாப்பிட்டு வந்தால் . . .
    ஒரு கிண்ணமளவு வெந்தயத்தை எடுத்து அதனை ஈரப்பருத்தித் துணியி ல் வைத்து மூட்டையாக கட்டி சிறிது
    நேரம் ஊற வைக்க வேண்டும். சிறிதுநேரம் கழித்து அந்த மூட்டை கட்டி வைத்த ஈரப்பருத்தித் துணியை பிரி த்து பார்த்தால் வெந்தயம் முளைக் கட்டியிருக்கும். அந்த முளை கட்டி வெந்தயத்தை கடுமையான சர்க்கரை நோயாளிகள் தினமும் கட்டாயம் சாப்பிட்டு வந்தால், சர்க்கரையின்அளவு கட்டுப்படும். மேலும் வயிற்றுப்புண், பெண்கள் கர்ப்பப்பை நோய்கள், வெள்ளைப்படுதல் குணமாகும். அதுமட்டுமா எப்பேற்பட்ட குடல் புண்களும் குணமாகி சுகம் காண்பர்.

    ur2076 likes this.
    "Our sweetest songs are those that tell of the saddest thoughts "

    My completed story :-
    நம்பிக்கை ஒளி

    My ongoing story :-
    ததும்பி வழிகிறதே மௌனம் - Thathumbi


    dROP YOUR VALUABLE COMMENTS ON MY STORY HERE :-
    ததும்பி வழிகிறதே மௌனம் - Thathumbi Vazhikiradhae Mounam (Comments)


    PLEASE VISIT MY BLOG :-
    Penmai.Com - Indian, Tamil Women's Forum - Online Community - மயிலிறகாய் ரா.கிரிஜா - Blogs

    KAVIDHAI NOOLGAL :-
    GIRIJAVIN KAVIDHAI THOGUPPU NOOL
    http://www.penmai.com/forums/poems/1...ml#post1698598
    1) THOGUPPU 1 :- "வேரும் (க)விதைகளும் " DATED 17.02.2016
    2) THOGUPPU 2 :- "கவிதையாய் இனிய சாரல்கள்" DATED 18.02.2016

  6. #26
    girija chandru's Avatar
    girija chandru is offline Penman of Penmai
    Blogger
    Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Oct 2011
    Location
    coimbatore
    Posts
    10,005
    Blog Entries
    152

    Re: மருத்துவம் பற்றிய சில விஷயங்கள்

    கண்டிப்பாக ஒவ்வொருவரும் பல் சொத்தை பிரச்சனையை சந்தித்திருப்போம். பற்களில் சொத்தை ஏற்படுவதற்கு முக்கிய காரணம் இனிப்புப் பொருட்களை அதிகமாக சாப்பிடுவதும், எந்த ஒரு உணவுப் பொருளை உட்கொண்ட பின்னரும் வாயை நீரில் கொப்பளிக்காமல் இருப்பதும் தான்.




    பற்களில் உள்ள மஞ்சள் கறைகளைப் போக்கும் சில எளிய வழிகள்!!! இதனால் பாக்டீரியாக்கள் பற்களை சொத்தையாக்கிவிடும். இப்படி சொத்தையான பற்களை ஆரம்பத்திலேயே கவனிக்காமல் விட்டால், பற்களில் பெரிய ஓட்டை உருவாகி, நாளடைவில் ஈறுகளில் நோய்த்தொற்றுகள் ஏற்பட்டு, அதுவே பல பிரச்சனைகளை உண்டாக்கிவிடும். அதற்காக சொத்தைப் பற்களை பிடுங்கி எடுக்க வேண்டும் என்பதில்லை. பற்களின் பின்னால் உள்ள கறைகளைப் போக்குவதற்கான எளிய வழிகள்!!! உண்ணும் உணவில் ஒருசில மாற்றங்களுடன், அன்றாடம் ஒருசில பொருட்களைக் கொண்டு பற்களைப் பராமரித்து வந்தால், சொத்தைத் தடுக்கலாம்.

    1=ஆயில் புல்லிங்
    ~~~~~~~~~~~~~~~~~
    ஆயில் புல்லிங் என்பது தினமும் காலையில் நல்லெண்ணெயை வாயில் ஊற்றி, 10 நிமிடம் வாயினுள் வைத்து கொப்பளிக்க வேண்டும். இப்படி செய்வதால், வாயில் உள்ள அனைத்து பாக்டீரியாக்களும் வெளியேறி, வாயின் ஆரோக்கியம் மேம்படும். குறிப்பாக இப்படி தினமும் செய்து வந்தால், சொத்தைப் பற்கள் உருவாவதைத் தடுக்கலாம்,
    2=கிராம்பு
    ~~~~~~~~~~~~~
    2-3 துளிகள் கிராம்பு எண்ணெயை 1/4 டேபிள் ஸ்பூன் நல்லெண்ணெயுடன் கலந்து, காட்டனில் அந்த எண்ணெயை தொட்டு, இரவில் படுக்கும் போது அந்த காட்டானை சொத்தைப் பல் உள்ள இடத்தில் வைத்து தூங்க வேண்டும். இப்படி தினமும் செய்து வந்தால், சொத்தைப் பற்கள் விரைவில் குணமாகும்,
    3=உப்பு தண்ணீர்
    ~~~~~~~~~~~~~~~~~~~
    அன்றாடம் காலையில் வெதுவெதுப்பான நீரில் உப்பு கலந்து, பற்களை துலக்கம் முன் அதனை வாயில் ஊற்றி 1 நிமிடம் வாயைக் கொப்பளிக்க வேண்டும். இப்படி தினமும் மூன்று வேளையும் உணவு உண்பதற்கு முன் செய்து வந்தால், பல் சொத்தையில் இருந்து விடுபடலாம்,
    4=பூண்டு
    ~~~~~~~~~~~
    3-4 பற்கள் பூண்டை தட்டை, அதில் 1/4 டீஸ்பூன் உப்பு சேர்த்து, அக்கலவையை பாதிக்கப்பட்ட பற்களின் மீது வைத்து 10 நிமிடம் கழித்து, அக்கலவையை சொத்தைப் பல்லின் மீது அழுத்தவும், இப்படி தினமும் 2 முறை செய்து வந்தால், சொத்தைப் பற்களை உருவாக்கிய பாக்டீரியாக்கள் அழிக்கப்பட்டு வெளியேற்றப்பட்டு, நாளடைவில் சொத்தைப் பற்களை போக்கிவிடும்,
    5=மஞ்சள்
    ~~~~~~~~~~~~~
    மஞ்சள் தூளை பாதிக்கப்பட்ட பற்களில் தடவி 5 நிமிடம் கழித்து, வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும். இது சிறந்த கிருமிநாசினியாக செயல்பட்டு, கிருமிகளை அழித்துவிடும்,
    6=வேப்பிலை
    ~~~~~~~~~~~~~~
    வேப்பிலை சாற்றினை சொத்தைப் பற்களின் மீது தடவி 10 நிமிடம் ஊற வைத்து, பின் வெதுவெதுப்பான நீரில் வாயை கொப்பளிக்க வேண்டும். முடிந்தால் தினமும் வேப்பங்குச்சி கொண்டு பற்களை துலக்கி வந்தாலும், சொத்தைப் பற்களைப் ,
    7=உணவுமுறைகளில் மாற்றம்
    ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
    சொத்தைப் பற்கள் உருவாவதற்கு போதிய கனிமச்சத்துக்கள் நிறைந்த உணவுகளை உண்ணாமல் இருப்பது மற்றும் கொழுப்பில் கரையாத வைட்டமின்களான ஏ, டி, ஈ, கே போன்றவற்றின் குறைபாடு மற்றும் சில ஊட்டச்சத்துக்கள் குறைவாக இருப்பது தான் காரணம். இதற்கு சரியான தீர்வு, நல்ல சத்துக்கள் நிறைந்த உணவுப் பொருட்களை அன்றாடம் உட்கொண்டு வர வேண்டும்.
    8=சர்க்கரையைத் தவிர்க்கவும்
    ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
    சுத்திரிக்கரிக்கப்பட்ட சர்க்கரை கலந்த உணவுகளை உட்கொண்டால், கெட்ட பாக்டீரியாக்களின் வளர்ச்சி அதிகரித்து, அதனால் பற்களில் சொத்தையும் அதிகரிக்கும். உணவுகளில் இனிப்பு வேண்டுமானால், தேனைக் கலந்து கொள்ளலாம்.

    "Our sweetest songs are those that tell of the saddest thoughts "

    My completed story :-
    நம்பிக்கை ஒளி

    My ongoing story :-
    ததும்பி வழிகிறதே மௌனம் - Thathumbi


    dROP YOUR VALUABLE COMMENTS ON MY STORY HERE :-
    ததும்பி வழிகிறதே மௌனம் - Thathumbi Vazhikiradhae Mounam (Comments)


    PLEASE VISIT MY BLOG :-
    Penmai.Com - Indian, Tamil Women's Forum - Online Community - மயிலிறகாய் ரா.கிரிஜா - Blogs

    KAVIDHAI NOOLGAL :-
    GIRIJAVIN KAVIDHAI THOGUPPU NOOL
    http://www.penmai.com/forums/poems/1...ml#post1698598
    1) THOGUPPU 1 :- "வேரும் (க)விதைகளும் " DATED 17.02.2016
    2) THOGUPPU 2 :- "கவிதையாய் இனிய சாரல்கள்" DATED 18.02.2016

  7. #27
    girija chandru's Avatar
    girija chandru is offline Penman of Penmai
    Blogger
    Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Oct 2011
    Location
    coimbatore
    Posts
    10,005
    Blog Entries
    152

    Re: மருத்துவம் பற்றிய சில விஷயங்கள்

    மாங்காய், கரு????
    ==================
    கரு பெண்ணின் வயிற்றில் வளரும் போது முதலில்
    சிசுவின் இதயம் வளரும். இதயம் வளர்வதற்கான ,
    தேவையான சத்து பொருள் மாங்காயில் அதிகம் உள்ளது !!!!

    இருதயம் வளர தேவையான சத்து பொருட்கள் தேவைப்படும்போது
    அத்தேவையை நாக்கின் சுவை அரும்புகள் தெரிவிக்கின்றன.
    அதனால், உந்தப்பட்டுக் கர்ப்பிணி பெண்கள் மாங்காயை விரும்பி
    சாப்பிடு கின்றனர்..

    "Our sweetest songs are those that tell of the saddest thoughts "

    My completed story :-
    நம்பிக்கை ஒளி

    My ongoing story :-
    ததும்பி வழிகிறதே மௌனம் - Thathumbi


    dROP YOUR VALUABLE COMMENTS ON MY STORY HERE :-
    ததும்பி வழிகிறதே மௌனம் - Thathumbi Vazhikiradhae Mounam (Comments)


    PLEASE VISIT MY BLOG :-
    Penmai.Com - Indian, Tamil Women's Forum - Online Community - மயிலிறகாய் ரா.கிரிஜா - Blogs

    KAVIDHAI NOOLGAL :-
    GIRIJAVIN KAVIDHAI THOGUPPU NOOL
    http://www.penmai.com/forums/poems/1...ml#post1698598
    1) THOGUPPU 1 :- "வேரும் (க)விதைகளும் " DATED 17.02.2016
    2) THOGUPPU 2 :- "கவிதையாய் இனிய சாரல்கள்" DATED 18.02.2016

  8. #28
    girija chandru's Avatar
    girija chandru is offline Penman of Penmai
    Blogger
    Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Oct 2011
    Location
    coimbatore
    Posts
    10,005
    Blog Entries
    152

    Re: மருத்துவம் பற்றிய சில விஷயங்கள்

    அறிந்திருக்கிறோமா?
    =====================

    1) தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் சாப்பாட்டில், முருங்கை கீரை
    சேர்த்து வந்தால், பால் அதிகம் சுரக்கும்.
    2) தேநீரில் ஏலக்காய் நான்கு, துளசி இலைகளும் போட்டு கொதிக்க
    வைத்து குடித்தால்,ஜலதோஷம், இருமல் முதலியன நீங்கும்.
    3) முள்ளங்கியை அரைத்து சாறு எடுத்து தடவி வந்தால்,
    எல்லா விதமான சரும நோய்களும் அகலும்.
    4) வாரம் ஒரு முறை பாகற்காயை சாப்பாட்டில் சேர்த்து வந்தால்,
    வயிற்றில் உள்ள பூச்சிகள் மடிந்து விடும்.
    5) வாழை பிஞ்சோடு , பருப்பும் தேங்காயும் சேர்த்து காரம் சேர்க்காமல்
    சமைத்து சாப்பிட்டால் குடல் புண் ஆறும்.
    6) பப்பாளிப் பழத்தை மாம்பழ துண்டுகள் மாதிரி போட்டு, தேனில்
    ஊற வைத்து சாப்பிட்டால் மூல நோய் குணமாகும்.

    "Our sweetest songs are those that tell of the saddest thoughts "

    My completed story :-
    நம்பிக்கை ஒளி

    My ongoing story :-
    ததும்பி வழிகிறதே மௌனம் - Thathumbi


    dROP YOUR VALUABLE COMMENTS ON MY STORY HERE :-
    ததும்பி வழிகிறதே மௌனம் - Thathumbi Vazhikiradhae Mounam (Comments)


    PLEASE VISIT MY BLOG :-
    Penmai.Com - Indian, Tamil Women's Forum - Online Community - மயிலிறகாய் ரா.கிரிஜா - Blogs

    KAVIDHAI NOOLGAL :-
    GIRIJAVIN KAVIDHAI THOGUPPU NOOL
    http://www.penmai.com/forums/poems/1...ml#post1698598
    1) THOGUPPU 1 :- "வேரும் (க)விதைகளும் " DATED 17.02.2016
    2) THOGUPPU 2 :- "கவிதையாய் இனிய சாரல்கள்" DATED 18.02.2016

  9. #29
    girija chandru's Avatar
    girija chandru is offline Penman of Penmai
    Blogger
    Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Oct 2011
    Location
    coimbatore
    Posts
    10,005
    Blog Entries
    152

    Re: மருத்துவம் பற்றிய சில விஷயங்கள்

    வெங்காயத்தின் சில மருத்துவ குணங்கள்
    **************************************************************
    வெங்காயத்தின் காரத்தன்மைக்குக் காரணம் அதில் உள்ள அலைல் புரோப்பைல் டை சல்பைடு என்ற எண்ணெய். இதுவே வெங்காயத்தின் நெடிக்கும், நமது கண்களில் கண்ணீர் வருவதற்கும் காரணமாக அமைகிறது. வெங்காயத்தில் புரதச்சத்துக்கள், தாது உப்புக்கள், வைட்டமின்கள் ஆகியவை உள்ளன.
    முருங்கைக்காயைவிட அதிக பாலுணர்வு தரக்கூடியது வெங்காயம்தான்
    வெங்காயம் ஒரு நல்ல மருந்துப் பொருள். இதை இதயத்தின் தோழன் என்றும் சொல்லலாம். இதிலுள்ள கூட்டுப் பொருட்கள் ரத்தத்தில் கொழுப்பு சேர்வதை இயல்பாகவே கரைத்து, உடலெங்கும் ரத்தத்தை கொழுப்பு இல்லாமல் ஓட வைக்க உதவி செய்கிறது.
    குளவியோ, தேனீயோ கொட்டிவிட்டால் பயப்பட வேண்டாம். அவை கடித்த இடத்தில் வெங்காயத்தை எடுத்துத் தேய்த்தாலே போதும். வெங்காயத்தில் உள்ள ஒரு வகை என்சைம், கொட்டியதால் ஏற்படும் உடலில் வலியையும், அழற்சியையும் உண்டாக்குகின்ற ப்ராஸ்டாகிளாண்டின்ஸ் என்ற கூட்டுப் பொருளை சிதைத்து விடுகிறது. விஷத்தையும் முறித்து விடுகிறது.
    சிறுநீர் அடக்கிவைக்கும் பழக்கம் ஆண்களைவிட பெண்களிடம் அதிகம் உண்டு. அவ்வாறு சிறுநீரை அடக்குவதால் அதில் நுண்ணுயிரிகளின் உற்பத்தி அதிகமாகி, நோய் உண்டாகும் வாய்ப்பு அதிகரிக்கும். இந்த பழக்கத்தை தொடர்பவர்களுக்கு சிறுநீர்த்தாரைத் தொற்று வரும்.
    இவர்கள், வெங்காயத்தை உணவில் அதிகமாகச் சேர்த்துக்கொண்டால் போதும். வெங்காயம் கழிவுப் பொருட்களை கரைத்து, அழற்சியைக் குறைத்து கழிவுகளை வெளியே தள்ளிவிடும். இதனால் சிறுநீர்த் தாரைத் தொற்றும் குறையும்.
    யூரிக் அமிலம் அதிகமாக சிறுநீர்ப் பையில் சேர்ந்தால் கற்கள் தோன்றும். வெங்காயத்தை அடிக்கடி சாப்பிட்டால் அந்த கற்கள் கரைந்துவிடும்.
    முதுமையில் வரும் மூட்டு அழற்சியை கட்டுப்படுத்தும் ஆற்றல் வெங்காயத்திற்கு உண்டு. இதற்கு வெங்காயத்தையும், கடுகு எண்ணெயையும் சேர்த்து மூட்டு வலி உள்ள இடத்தில் தடவினால் போதும் வலி குறைந்துவிடும்.
    செலனியச் சத்து இருப்பவர்களுக்குத்தான் கவலை, மன இறுக்கம், களைப்பு போன்ற பிரச்சினை தோன்றும். இதைத் தவிர்க்க சுலபமான வழி வெங்காயத்தில் இருக்கிறது. வெங்காயத்தை தொடர்ந்து உணவில் எடுத்து வந்தாலே போதும், தேவையான செலினியச்சத்து கிடைத்துவிடும். வெங்காயம் தவிர, பூண்டையும் இதற்காக பயன்படுத்தலாம்.
    சீதோஷ்ண நிலை மாறும்போது அடிக்கடி இருமல் வரும். நுரையீரல் அழற்சி, மூக்கு எரிச்சல் போன்றவையும் ஏற்படும். சிறிது வெங்காயச் சாற்றில் தேன் கலந்து சாப்பிட்டால் மேற்கண்ட பிரச்சினைகள் நீங்கும்.
    புற்றுநோயைத் தடுக்கும் மருந்துப்பொருள் வெங்காயத்தில் இருப்பதாக சமீபத்திய ஆராய்ச்சியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. புகைபிடித்தல், காற்று மாசுபடுதல், மன இறுக்கம் போன்றவற்றால் ஏற்படும் செல் இறப்புகள், செல் சிதைவுகளை இது சரிசெய்து விடுகிறது.
    நாலைந்து வெங்காயத்தை தோலை உரித்து அதோடு சிறிது வெல்லத்தைச் சேர்த்து அரைத்து சாப்பிட பித்தம் குறையும், பித்த ஏப்பம் மறையும்.
    வெங்காயத்தை வதக்கிச் சாப்பிட உஷ்ணத்தால் ஏற்படும் ஆசனக் கடுப்பு நீங்கும்
    வெங்காயச் சாறு சில வயிற்றுக் கோளாறுகளை நீக்கும். இதை மோரில் கலந்து குடிக்க இருமல் குறையும்.
    வெங்காயச் சாற்றையும், வெந்நீரையும் கலந்து வாய் கொப்பளித்து, வெறும் வெங்காயச் சாறை பஞ்சில் நனைத்து பல் ஈறுகளில் தடவிவர பல்வலி, ஈறுவலி குறையும்.
    அடிக்கடி புகைப்பிடிப்பவர்கள் வெங்காயச் சாற்றை நாள் ஒன்றுக்கு அரை அவுன்ஸ் வீதம் மூன்றுவேளை சாப்பிட்டு வர நுரையீரல் சுத்தமாகும்







    "Our sweetest songs are those that tell of the saddest thoughts "

    My completed story :-
    நம்பிக்கை ஒளி

    My ongoing story :-
    ததும்பி வழிகிறதே மௌனம் - Thathumbi


    dROP YOUR VALUABLE COMMENTS ON MY STORY HERE :-
    ததும்பி வழிகிறதே மௌனம் - Thathumbi Vazhikiradhae Mounam (Comments)


    PLEASE VISIT MY BLOG :-
    Penmai.Com - Indian, Tamil Women's Forum - Online Community - மயிலிறகாய் ரா.கிரிஜா - Blogs

    KAVIDHAI NOOLGAL :-
    GIRIJAVIN KAVIDHAI THOGUPPU NOOL
    http://www.penmai.com/forums/poems/1...ml#post1698598
    1) THOGUPPU 1 :- "வேரும் (க)விதைகளும் " DATED 17.02.2016
    2) THOGUPPU 2 :- "கவிதையாய் இனிய சாரல்கள்" DATED 18.02.2016

  10. #30
    girija chandru's Avatar
    girija chandru is offline Penman of Penmai
    Blogger
    Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Oct 2011
    Location
    coimbatore
    Posts
    10,005
    Blog Entries
    152

    Re: மருத்துவம் பற்றிய சில விஷயங்கள்

    புற்றுநோயைத் தடுக்கும் கேரட்
    **********************************************
    கேரட்டை தாவரத் தங்கம் என்று கூறுகிறார்கள். தாவரத்தங்கம் என்று பெயர் வந்ததற்குக் காரணம் என்ன என்று பார்ப்போம்.
    தங்கத்தை அணிவதால் மேனிக்கு மெருகு கிடைப்பது போல, கரட்டை அவ்வப்போது உணவில் சேர்த்துக் கொள்வதால், தங்கம் போன்று மேனி பளபளக்கும் என்பதாலேயே அதற்கு தாவரத் தங்கம் என்று பெயர் வந்தது. மேலும் புற்றுநோய் வராமல் தடுப்பதில் கரட் முக்கியப் பங்காற்றுகிறது.
    கரட்டில் உள்ள கரோட்டின் எனும் சத்தானது, புற்றுநோய் எதிர்ப்பு சக்தியை அளிக்கிறது. பீட்டா கரோட்டின் எனும் நோய் எதிர்ப்பு சக்தியை கரட் அளிப்பதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
    தவிர வயிறு தொடர்பான அனைத்து நோய்களையும் குணப்படுத்துகிற ஆற்றலும் கரட்டிற்கு உண்டு.
    உதாரணமாக குடல்புண் (அல்சர்) நோய் உள்ளவர்கள், காரம் சாப்பிட்டால் வயிற்று வலி வருபவர்கள் போன்றோர், கரட் சாறினை வாரத்தில் மூன்று தடவை வீதம் இரண்டு மாதம் சாப்பிட்டு வர அவை குணமாகும். மேலும் கரட்டில் நார்ச் சத்து அதிகம் உள்ளதால் மிகுந்த நன்மை தருவதுடன் செரிமானத்தை தூண்டி நல்ல ஜீரண சக்திதியையும் அளிக்கிறது.






    "Our sweetest songs are those that tell of the saddest thoughts "

    My completed story :-
    நம்பிக்கை ஒளி

    My ongoing story :-
    ததும்பி வழிகிறதே மௌனம் - Thathumbi


    dROP YOUR VALUABLE COMMENTS ON MY STORY HERE :-
    ததும்பி வழிகிறதே மௌனம் - Thathumbi Vazhikiradhae Mounam (Comments)


    PLEASE VISIT MY BLOG :-
    Penmai.Com - Indian, Tamil Women's Forum - Online Community - மயிலிறகாய் ரா.கிரிஜா - Blogs

    KAVIDHAI NOOLGAL :-
    GIRIJAVIN KAVIDHAI THOGUPPU NOOL
    http://www.penmai.com/forums/poems/1...ml#post1698598
    1) THOGUPPU 1 :- "வேரும் (க)விதைகளும் " DATED 17.02.2016
    2) THOGUPPU 2 :- "கவிதையாய் இனிய சாரல்கள்" DATED 18.02.2016

loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter