Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree39Likes

மருத்துவம் பற்றிய சில விஷயங்கள்


Discussions on "மருத்துவம் பற்றிய சில விஷயங்கள்" in "General Health Problems" forum.


  1. #31
    girija chandru's Avatar
    girija chandru is offline Penman of Penmai
    Blogger
    Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Oct 2011
    Location
    coimbatore
    Posts
    10,005
    Blog Entries
    152

    Re: மருத்துவம் பற்றிய சில விஷயங்கள்

    இஞ்சியின் மருத்துவ பயன்கள்
    ***********************************************
    இஞ்சி, உணவின் ருசி கருதி உணவுடன் சேர்த்துக் கொள்ளப்படும் ஒரு முக்கிய நறுமண அல்லது பலசரக்குப் பொருள் ஆகும். இது ஒரு மருத்துவ மூலிகையும் கூட.இஞ்சுதல் என்றால் நீரை உள்ளிழுத்தல் என பொருள்படும். நீரை உள்ளிழுப்பதால் இஞ்சி எனும் பெயர் தோன்றிற்று.
    இஞ்சி எரிப்பு குணத்தை உடையது. கடினமான பண்டங்களை எளிதில் செரிப்பிக்கும்.வாயில் சுரக்கும் உமிழ்நீரைப் பெருக்கிப் பசியைத் தூண்டும் மற்றும் உஷ்ணத்தை உண்டாக்கும் குணமுடையது.அது மாத்திரமன்றி,இன்னும் பல மருத்துவ குணம்களையும் உடையது இஞ்சி.
    இஞ்சி சாறை பாலில் கலந்து பருகுவதன் மூலம் வயிறு சம்பந்தப்பட்ட நோய்கள் குணமடைவதோடு உடம்பும் இளைக்கும். மலச்சிக்கல், களைப்பு, மார்பு வலி என்பன நீங்க இஞ்சியை துவையல், பச்சடி செய்து சாப்பிட வேண்டும்.இஞ்சியை சுட்டு சாப்பிடுவதன் மூலம் பித்த , கப நோய்கள் நீங்கும்.இஞ்சியை புதினாவோடு சேர்த்து துவையலாக்கி சாப்பிடுவதன் மூலம் பித்தம், அஜீரணம், வாய் நாற்றம் என்பன நீங்கும் அதேவேளை, சுறுசுறுப்பும் ஏற்படும்.காலையில் இஞ்சி சாறில் உப்பு கலந்து மூன்று நாட்கள் பருகுவதன் மூலம் பித்த தலைச்சுற்று மற்றும் மலச்சிக்கல் தீரும். உடம்பும் இளமை பெறும்.
    பத்து கிராம் இஞ்சி, பூண்டு இரண்டையும் அரைத்து, ஒரு கப் வெந்நீரில் கலந்து காலை, மாலை என இரண்டு நாட்கள் சாப்பிட மார்பு வலி தீரும்.இஞ்சி சாறோடு, தேன் கலந்து சூடாக்கி காலையில் வெறும் வயிற்றில் ஒரு கரண்டி வீதம் அருந்தி வெந்நீர் குடித்துவர தொந்தி கரையும்.இஞ்சி, மிளகு, இரண்டையும் அரைத்து சாப்பிட ஜீரணம் ஏற்படும்.
    இஞ்சியை வதக்கி, தேன் விட்டு கிளறி, நீர் விட்டு கொதிக்க வைத்து அந்த நீரை காலை, மாலை குடித்துவர வயிற்றுப் போக்கு தீரும்.இஞ்சியை அரைத்து நீரில் கலந்து தெளிந்த பின், நீரை எடுத்து, துளசி இலை சாறை சேர்த்து ஒரு கரண்டி வீதம் ஒரு வாரம் சாப்பிட வாய்வுத் தொல்லை நீங்கும்.
    இஞ்சி சாறில், தேன் கலந்து தினசரி காலை ஒரு கரண்டி சாப்பிட்டு வர நோய் தடுப்பு திறன் கூடும். உற்சாகம் ஏற்படும். இளமை பெருகும்.இஞ்சி சாறுடன், வெங்காய சாறு கலந்து ஒரு வாரம், காலையில் ஒரு கரண்டி வீதம் குடித்துவர நீரிழிவு குறையும்.இஞ்சி சாறு, எலுமிச்சை சாறு, வெங்காய சாறு மூன்றையும் கலந்து ஒருவேளை அரை அவுன்ஸ் வீதம் சாப்பிட்டுவர ஆரம்ப கால ஆஸ்துமா, இரைப்பு, இருமல் குணமாகும்.


    Sponsored Links
    "Our sweetest songs are those that tell of the saddest thoughts "

    My completed story :-
    நம்பிக்கை ஒளி

    My ongoing story :-
    ததும்பி வழிகிறதே மௌனம் - Thathumbi


    dROP YOUR VALUABLE COMMENTS ON MY STORY HERE :-
    ததும்பி வழிகிறதே மௌனம் - Thathumbi Vazhikiradhae Mounam (Comments)


    PLEASE VISIT MY BLOG :-
    Penmai.Com - Indian, Tamil Women's Forum - Online Community - மயிலிறகாய் ரா.கிரிஜா - Blogs

    KAVIDHAI NOOLGAL :-
    GIRIJAVIN KAVIDHAI THOGUPPU NOOL
    http://www.penmai.com/forums/poems/1...ml#post1698598
    1) THOGUPPU 1 :- "வேரும் (க)விதைகளும் " DATED 17.02.2016
    2) THOGUPPU 2 :- "கவிதையாய் இனிய சாரல்கள்" DATED 18.02.2016

  2. #32
    girija chandru's Avatar
    girija chandru is offline Penman of Penmai
    Blogger
    Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Oct 2011
    Location
    coimbatore
    Posts
    10,005
    Blog Entries
    152

    Re: மருத்துவம் பற்றிய சில விஷயங்கள்

    மனஅமைதி பெற
    **************************
    உங்களுக்காக ஏதாவது செய்யுங்கள் :
    வேலைகளை குறிப்பிட்ட நேரத்தில் செய்து முடித்தால், உங்களுக்கு நீங்களே பரிசு பொருட்கள், சாக்லெட் போன்றவற்றை பரிசளியுங்கள்.
    பிடித்த இசையை கேட்டு மகிழுங்கள் :
    மன அழுத்தத்தை நீக்கும் வகையில் உள்ள இசையை கேட்டு அமைதி பெறுங்கள். முக்கியமாக அதிக தாளத்துடன் கூடிய இசையை கேட்டு, மனநிலையை ஊக்கப்படுத்துங்கள்.
    எளிய உணவை சமையுங்கள் :
    சமைப்பது என்பது ஒரு சிகிச்சை போன்றதாகும். இது மனஅழுத்தம் தரும் விஷயத்தில் இருந்து மனதை மாற்றும். மேலும் சுவையான ஆரோக்கியமான உணவையும் உண்ணலாம் அல்லவா?
    வசதியான ஆடைகளை அணியுங்கள் :
    வீட்டிற்கு சென்றதும் ஆடைகளை மாற்றி, பருத்தி துணியால் செய்யப்பட ஆடைகளை அணியுங்கள். இது நிச்சயம் உடலை ரிலாக்ஸ் அடையச் செய்து, மனதிற்கு அமைதியை ஏற்படுத்தும்.
    உங்களுக்காக சிறிது நேரத்தை ஒதுக்குங்கள் :
    வீட்டில் ஒரு இடத்தை தேர்வு செய்து, அங்கே அமர்ந்து சிறிது நேரம் ஓய்வு எடுத்து அமைதியை பெறுங்கள். கண்டிப்பாக ஓய்வு எடுக்கும் நேரம் கைபேசியை எல்லாம் அணைத்துவிடுங்கள்.
    முகத்தை குளிர்ந்த நீரில் கழுவுங்கள் :
    இந்த எளிய வழி உங்களுக்கு புத்துணர்ச்சி அளிக்கும். அதிலும் இதனால் முகத்தில் உள்ள அழுக்கு நீங்குவதால், முகம் குளிர்ச்சி அடைந்து புத்துணர்ச்சி பெறும்.
    மெதுவாகவும், ஆழமாகவும் மூச்சு விடுங்கள் :
    மெதுவாக, ஆழமாக மூச்சு விடுவதால், இரத்தக் கொதிப்பு குறையும். முக்கி யமாக யோகாவில் உள்ள பிராணயாமம் முறைப்படி மூச்சு விட்டால், அதாவது ஒரு துவாரத்தில் மட்டும் மூச்சு விடுவதால், உங்கள் கவலைகள் நீங்கும்.
    தூக்கம் அவசியம் :
    இன்னும் கொஞ்சம் நேரம் வேலை பார்த்தால், அதிக வேலைகளை செய்து முடிக்கலாம் என்று மனம் நினைக்கும். ஆனால் தூக்கம் மிகவும் அவசியம். போதுமான அளவு தூக்கம் கண்டிப்பான முறையில் அவசியமான ஒன்றாகும்.
    உங்களுக்கு பிடித்த உறவினர்கள் , நண்பர்கள் ஆகியவரோடு மனம்விட்டு பேசி சிரித்து மகிழுங்கள். உங்கள் கவலைகள் மறந்து போகும்.
    உங்களுக்கு பிடித்த கோவிலுக்கு சென்று யாருடனும் பேசாமல் சிறிது நேரம் அமைதியாக கடவுளை தியானம் செய்யுங்கள்.
    தலைக்கு மசாஜ் செய்து பாருங்கள் :
    தலைக்கு மசாஜ் செய்வதால், தலையில் ரத்த ஓட்டம் சீராகும், தலைவலி குறையும், தூக்கம் அதிகரிக்கும், மன அழுத்தம் நீக்கும் மற்றும் இதர நோய்களில் இருந்தும் காக்கும்.
    எழுதும் பழக்கத்தை ஏற்படுத்துங்கள் :
    எழுதும் பழக்கத்தை ஏற்படுத்துவது, உங்களுடன் நீங்களே உரையாட ஒரு வாய்ப்பாக அமையும். மேலும் இது மன அழுத்தத்தையும் குறைக்கும். எந்திர வாழ்க்கை, எதிலும் உறுதியற்ற தன்மை, என்னவேண்டுமானாலும் சாப்பிடுவேன் என்ற குணம்
    இதுபோன்ற முறையற்ற தன்மையால் மன அழுத்தம் இல்லாமல் இன்றைய வாழ்க்கை இல்லை என்று கூறுமளவிற்கு நிலைமை வந்துவிட்டது. எனவே மேற்கண்ட உணவு மற்றும் பழக்கவழக்கங்களை கடைபிடித்து மன அழுத்தத்தில் இருந்து தப்புவோம்.

    santhi1984 and sarjana ul like this.
    "Our sweetest songs are those that tell of the saddest thoughts "

    My completed story :-
    நம்பிக்கை ஒளி

    My ongoing story :-
    ததும்பி வழிகிறதே மௌனம் - Thathumbi


    dROP YOUR VALUABLE COMMENTS ON MY STORY HERE :-
    ததும்பி வழிகிறதே மௌனம் - Thathumbi Vazhikiradhae Mounam (Comments)


    PLEASE VISIT MY BLOG :-
    Penmai.Com - Indian, Tamil Women's Forum - Online Community - மயிலிறகாய் ரா.கிரிஜா - Blogs

    KAVIDHAI NOOLGAL :-
    GIRIJAVIN KAVIDHAI THOGUPPU NOOL
    http://www.penmai.com/forums/poems/1...ml#post1698598
    1) THOGUPPU 1 :- "வேரும் (க)விதைகளும் " DATED 17.02.2016
    2) THOGUPPU 2 :- "கவிதையாய் இனிய சாரல்கள்" DATED 18.02.2016

  3. #33
    girija chandru's Avatar
    girija chandru is offline Penman of Penmai
    Blogger
    Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Oct 2011
    Location
    coimbatore
    Posts
    10,005
    Blog Entries
    152

    Re: மருத்துவம் பற்றிய சில விஷயங்கள்

    நாவல் பழம்
    *******************
    இதன் மருத்துவ குணங்கள் எவை? நாவல் மரத்தின் இலை, பட்டை, கொட்டை அனைத்திலும் பல மருத்துவ குணங்கள் உள்ளது.
    தன்வந்திரி நிகண்டுவில் நாவல் பழம் கபத்தின் கோளாறுகளையும் பித்தத்தின் கோளாறுகளையும் குணப்படுத்திவிடும். ஆனால் அதிகமாய் வாயு தோஷத்தை வளர்க்கும், மலத்தைக் கட்டும் என்று காணப்படுகிறது. இதே கருத்தை ஆமோதிக்கும் வகையில் சரக ஸம்ஹிதையிலும் காணப்படுகிறது.
    ராஜநிகண்டுவில் பித்தக் கொதிப்பினால் ஏற்படும் உள்காந்தல், எரிச்சல், தாகம், வறட்சி, வெப்பம் போன்றவை நாவல் பழம் சாப்பிட்டால் குறைந்துவிடும் என்றும், குடலிலுள்ள கிருமித் தொற்றை அழித்து வெளியேற்றிவிடும் என்றும் காணப்படுகிறது.
    சாதாரணமான மற்ற பழங்கள் போல நாவல் பழத்தை அதிகம் சாப்பிட்டால் பசி மந்தம், வயிற்றுப் பொருமல், குடல், கை, கால், கீல்களில் வலி போன்ற தொந்தரவு ஏற்படும் என்று சுஸ்ருத ஸம்ஹிதை கூறுகிறது. இது போன்ற கெடுதல்களைப் போக்க பச்சை நெல்லிக்காயை மென்று சாப்பிட்டுக் குளிர்ந்த நீரைப் பருகினால் போதுமானது.
    நாவல் பழத்தை நன்றாகப் பிசைந்து கொட்டையை நீக்கி பிழிந்து வடிகட்டிய சாறு 1 லிட்டர் எடுத்து அதில் ஒரு கிலோ சர்க்கரையையோ, சீனாக் கற்கண்டையோ சேர்த்துக் கரைத்து வடிகட்டி மெல்லிய தீயில் தேன் பதமாகக் காய்ச்சி இதில் 2 கிராம் குங்குமப் பூ, 1 கிராம் பச்சைக் கற்பூரம் அரைத்துக் கலக்கி, கண்ணாடி பாட்டிலில் பத்திரப்படுத்தி வைத்துக் கொள்ள வேண்டும். சுமார் 10- 15 மி.லி. வரை ஒரு நாளில் 3 -4 முறை சாப்பிட்டு வந்தால், சிறுநீர் எரிச்சல், தாகம், உடற்சூடு, ரத்த மூலம், மூலச் சூடு, மாதவிடாய் நாட்களில் பெண்களுக்கு ஏற்படும் அதிக ரத்தப்போக்கு போன்றவை குணமாகும்.
    சிறுநீரில் வெளியாகும் இனிப்பு (சர்க்கரை) நாளடைவில் குறைய, நாவல் பழக்கொட்டையை வெய்யிலில் உலர்த்தி உடைத்து உள் பருப்பைச் சூரணம் செய்து காலை, மாலை 1- 2 கிராம் இடைவிடாமல் சாப்பிட்டு வந்தால் போதுமானது. மலக்கட்டு ஏற்பட வாய்ப்பிருப்பதால், சிறிது நெல்லி முள்ளி சூரணத்தைக் கலந்து சாப்பிட்டால், சரியாகிவிடும். நாவற் பருப்புடன் மாங்கொட்டை பருப்பு சூரணத்தைச் சேர்த்துக் கொடுத்தால் பேதி நின்று விடும். சிறுநீர் நன்றாகப் பிரியும்.
    சீதபேதி, ரத்த பேதி, அஜீரண பேதி, வாந்தி போன்றவை குணமாக, நாவற் கொழுந்தை ஆட்டுப் பாலில் அரைத்துக் கலக்கிச் சாப்பிட்டால் குணமாகிவிடும். நொதநொதவென்று வலியுடன் போகும் பெருமலப் போக்குக்கு, நாவல் இலைக் கொழுந்து, மாந்தளிர் இரண்டையும் சேர்த்தரைத்துச் சாறு பிழிந்து 15 மி.லி. எடுத்து, கொஞ்சம் பிஞ்சுக் கடுக்காயின் சூரணத்துடன் சாப்பிட்டால் குணமாகிவிடும்.
    நிகண்டு ரத்னாகரம் நாவற் பட்டையின் பெருமைகளை விளக்கிக் கூறுகிறது. பச்சையாக வெட்டி வெய்யிலில் உலர்த்தி சூரணம் செய்து, துணியில் சலித்து வைத்துக் கொண்டு, ஒன்றிரண்டு சிட்டிகை ஒரு நாளில் 3 -4 முறை சாப்பிட்டு வர, தொண்டைப் புண், கபம், இருமல், ஆஸ்த்துமா, மூலம், பேதி, மாதவிடாய் அதிக உதிரப் போக்கு, சர்க்கரை உபாதை, ரத்த பேதி போன்றவை குணமாகும். பட்டையைக் கஷாயமாகக் காய்ச்சி, வாய் கொப்பளிக்க வாய்ப் புண் ஆறிவிடும்.
    புண்ணைக் கழுவினால் புண் ஆறிவிடும். ஆவாரை, மருதம் பட்டை, கொத்தமல்லி விதை, நெல்லி வற்றல், மஞ்சள், நன்னாரி வேர், நாவற்பட்டை, நாவல் கொட்டை ஆகிய எட்டு மருந்துச் சரக்குகளையும் சமமான அளவில் சேர்த்துப் பெருந்தூளாக இடித்துக் கஷாயம் செய்து காலை, மாலை சாப்பிட்டு வந்தால், இன்ஸலின் இன்ஜெக்ஷன் யூனிட்டின் அளவைப் படிப்படியாகக் குறைத்து, நிறுத்திவிடக் கூடிய அளவுக்கு உபயோகமாக இருக்கும். சிலாஜித் எனும் ஆயுர்வேத மருந்தையும் இதனுடன் உபயோகித்தால் மிகவும் சிறந்தது.





    "Our sweetest songs are those that tell of the saddest thoughts "

    My completed story :-
    நம்பிக்கை ஒளி

    My ongoing story :-
    ததும்பி வழிகிறதே மௌனம் - Thathumbi


    dROP YOUR VALUABLE COMMENTS ON MY STORY HERE :-
    ததும்பி வழிகிறதே மௌனம் - Thathumbi Vazhikiradhae Mounam (Comments)


    PLEASE VISIT MY BLOG :-
    Penmai.Com - Indian, Tamil Women's Forum - Online Community - மயிலிறகாய் ரா.கிரிஜா - Blogs

    KAVIDHAI NOOLGAL :-
    GIRIJAVIN KAVIDHAI THOGUPPU NOOL
    http://www.penmai.com/forums/poems/1...ml#post1698598
    1) THOGUPPU 1 :- "வேரும் (க)விதைகளும் " DATED 17.02.2016
    2) THOGUPPU 2 :- "கவிதையாய் இனிய சாரல்கள்" DATED 18.02.2016

  4. #34
    girija chandru's Avatar
    girija chandru is offline Penman of Penmai
    Blogger
    Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Oct 2011
    Location
    coimbatore
    Posts
    10,005
    Blog Entries
    152

    Re: மருத்துவம் பற்றிய சில விஷயங்கள்

    பெண்களுக்கான ஆரோக்கியம்
    =============================
    இளவயதில் தினமும் ஒரு கப் பால் குடிப்பது, எலும்புகளை வலுவாக்கி கால்சியம் சத்தை அதிகரிக்கும்.
    முட்டைகோஸில் ஈஸ்ட்ரோஜன் அதிகமென்பதால் மார்பக புற்று வரமல் தடுக்க கோதுமை உணவுடன் கோஸ் சேர்த்து உண்ணலாம்.
    மார்பக புற்று உள்ளிட்ட பல்வேறு புற்று நோய்கள் வராமல் தடுக்க ஆப்பிள் உதவுகிறது.
    .மாதவிடாய்க் கால மன அழுத்தம், பயம், பதற்றம் ஆகியவற்றால் தொந்தரவா..? அந்த நாட்களில் கார்ன்ஃபிளாக்ஸை காலை உணவாக்குங்கள்.
    கர்ப்பக் கால கவனிப்பு..!
    கர்ப்பிணிகள், நாவல்பழம் சாப்பிட்டால் வயிற்றில் உள்ள குழந்தை கறுப்பாகப் பிறக்கும் என்பதும், குங்குமப்பூ சாப்பிட்டால் சிவப்பாகப் பிறக்கும் என்பதும் மூட நம்பிக்கையே. தோலின் நிறத்தை நிர்ணயிப்பவை மெலனின் எனப்படும் நிறமிகளே!
    கர்ப்பிணிகள், இரும்புச்சத்து மாத்திரை சாப்பிட்டால், உடல் லேசாக கறுத்து, பிறகு பழைய நிறத்துக்கு வந்துவிடும். இதை வைத்தே, குழந்தையும் கறுப்பாக பிறக்கும் என்று சிலர் பயப்படுவார்கள். அது தேவையற்றது.
    கர்ப்பிணி பெண்கள், காலையில் சீக்கிரம் சாப்பிட வேண்டும். இதனால் ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு குறையாமலிருக்கும். அடிக்கடி மயக்கமும் வராது.கர்ப்பம்
    வயிற்றில் குழந்தை வளர வளர, குடல் ஒரு பக்கம் தள்ளும். அப்போது அதிகமாக சாப்பிட முடியாது. சீக்கிரமும் பசிக்காது. அந்த நேரங்களில் ஜூஸ், முளை கட்டிய தானியங்கள் போன்றவற்றை, பல வேளைகளாகப் பிரித்துச் சாப்பிட வேண்டும்.
    பிரசவ காலத்துக்குப் பின் வயிற்று தசைகள் வலுப்பெற உடற்பயிற்சிகள் செய்ய வேண்டும்.
    கர்ப்பிணிகளின் உடலுக்கு இயற்கையான குளிர்ச்சியைத் தருகிறது வாழைப்பழம். உடல் காரணங்களால் மட்டுமல்ல உணர்ச்சி வசப்படுவதாலும் உடலைப் பாதிக்கும் சூட்டை வாழைப்பழம் நீக்குகிறது. தாய்லாந்தில் தாயாகப் போகிறவரின் தினசரி உணவில் வாழை ரெசிபிக்கள் விதவிதமாக இருக்கும்.
    கர்ப்பக் காலத்தில் சிலருக்கு கால்கள் வீங்குவது வழக்கமான ஒன்று. அதிகமாக தண்ணீர் குடிப்பதால்தான் இப்படி என்று சொல்வது தவறு.
    கர்ப்பக் காலத்தில் மலச்சிக்கல் பிரச்னை வரும். அதைத் தவிர்க்க அதிகமாக தண்ணீர் குடிக்க வேண்டும்.
    பிரசவம் முடிந்த சில நாட்களில், வயிறு சுருங்க வேண்டும் என்பதற்காக பெரிய துணியை வயிற்றில் கட்டிவிடுவார்கள். அது தவறு. இதனால் கருப்பை கீழிறங்கிட வாய்ப்பு உண்டு. இருமல் அல்லது தும்மலின்போது சிலருக்கு சிறுநீர் வெளியாவதற்கு காரணம் இதுதான். பிரசவம் முடிந்து ஆறு வாரம் கழித்து, அதற்கான பெல்ட்டை அணியலாம்.
    தைராய்டு, சுகர் போன்ற பிரச்னைகள் உள்ள பெண்கள், கர்ப்பக் காலத்தில் அதற்கான மருந்துகளைக் கட்டாயம் எடுத்துக்கொள்ள வேண்டும். அது, குழந்தையைப் பாதிக்காது.

    santhi1984 likes this.
    "Our sweetest songs are those that tell of the saddest thoughts "

    My completed story :-
    நம்பிக்கை ஒளி

    My ongoing story :-
    ததும்பி வழிகிறதே மௌனம் - Thathumbi


    dROP YOUR VALUABLE COMMENTS ON MY STORY HERE :-
    ததும்பி வழிகிறதே மௌனம் - Thathumbi Vazhikiradhae Mounam (Comments)


    PLEASE VISIT MY BLOG :-
    Penmai.Com - Indian, Tamil Women's Forum - Online Community - மயிலிறகாய் ரா.கிரிஜா - Blogs

    KAVIDHAI NOOLGAL :-
    GIRIJAVIN KAVIDHAI THOGUPPU NOOL
    http://www.penmai.com/forums/poems/1...ml#post1698598
    1) THOGUPPU 1 :- "வேரும் (க)விதைகளும் " DATED 17.02.2016
    2) THOGUPPU 2 :- "கவிதையாய் இனிய சாரல்கள்" DATED 18.02.2016

  5. #35
    girija chandru's Avatar
    girija chandru is offline Penman of Penmai
    Blogger
    Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Oct 2011
    Location
    coimbatore
    Posts
    10,005
    Blog Entries
    152

    Re: மருத்துவம் பற்றிய சில விஷயங்கள்

    கிருமிகளை அழிப்பதில் சுண்டைக்காய்க்கு நிகரே இல்லை எனலாம். உணவின் மூலம் நம் உடலுக் குள் சேர்கிற கிருமிகள் அமைதியாக உள்ளே பலவித பாதிப்புகளை உருவாக்கலாம். அடிக்கடி சுண்டைக்காய் சாப்பிடுகிறவர்களுக்கு இந்த நச்சுக் கிருமிகள் உடலில் தங்குவது தவிர்க்கப்படும்.
    சுண்டைக் காயை உலர்த்திப் பொடியாக்கி, தினம் சிறிதளவை தண்ணீரில் கரைத்துக் குடித்து வந்தால், ஆசனவாய் தொற்றும், அதன் விளைவால் உண்டாகிற அரிப்பும் குணமாகும். வாரத்தில் 4 நாட்களுக்கு சுண்டைக்காய் சாப்பிடுகிறவர்களுக்கு ரத்த சர்க்கரை கட்டுப்பாட்டில் இருக்குமாம்.
    சுண்டைக்காயைக் காய வைத்து வற்றலாக்கி, சில துளிகள் எண்ணெய் விட்டு வறுத்து, சூடான சாதத்தில் பொடித்துச் சேர்த்து ஒரு கவளம் சாப்பிட, செரிமானக் கோளாறுகள் குணமாகும். வாயுப்பிடிப்பு பிரச்சினை உள்ளவர்களுக்கும் சுண்டைக்காய் நல்ல மருந்து.
    பச்சை சுண்டைக்காயை அடிக்கடி எடுத்துக் கொள்வதன் மூலம் எலும்புகள் பலப்படும் என்பது பெண்கள் கவனிக்க வேண்டிய சேதி. பக்கவாதம் பாதித்தவர்களுக்குக் கூட சுண்டைக்காய் மெல்ல மெல்ல நிவாரணம் தரும்

    santhi1984 likes this.
    "Our sweetest songs are those that tell of the saddest thoughts "

    My completed story :-
    நம்பிக்கை ஒளி

    My ongoing story :-
    ததும்பி வழிகிறதே மௌனம் - Thathumbi


    dROP YOUR VALUABLE COMMENTS ON MY STORY HERE :-
    ததும்பி வழிகிறதே மௌனம் - Thathumbi Vazhikiradhae Mounam (Comments)


    PLEASE VISIT MY BLOG :-
    Penmai.Com - Indian, Tamil Women's Forum - Online Community - மயிலிறகாய் ரா.கிரிஜா - Blogs

    KAVIDHAI NOOLGAL :-
    GIRIJAVIN KAVIDHAI THOGUPPU NOOL
    http://www.penmai.com/forums/poems/1...ml#post1698598
    1) THOGUPPU 1 :- "வேரும் (க)விதைகளும் " DATED 17.02.2016
    2) THOGUPPU 2 :- "கவிதையாய் இனிய சாரல்கள்" DATED 18.02.2016

  6. #36
    girija chandru's Avatar
    girija chandru is offline Penman of Penmai
    Blogger
    Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Oct 2011
    Location
    coimbatore
    Posts
    10,005
    Blog Entries
    152

    Re: மருத்துவம் பற்றிய சில விஷயங்கள்


    நெய் வேண்டாம் நு சொல்லாதீங்க :-
    =========================


    1) உடல் எடையைக் குறைக்க உதவுகிறது.
    2) சக்தியைக் கொடுக்கிறது.:-
    நடுத்தரமான நல்ல ஆசிட்ஸ், கொழுப்ப்புகள் நிறைந்து உள்ளதால்,கல்லீரல் நேரடியாக உறிஞ்சி ,உடனே எரித்து விடும்.நாம் சாப்பிடும் கார்போஹைட்ரேட்ஸ்
    உணவுகளை எரிக்க உதவுகிறது.கான்செர், இதய நோய்கள்,சர்க்கரை நோய்கள்
    வருவதைக் குறைக்கிறது.


    3) கொலேச்த்ராலை குறைக்கிறது :-
    * ஒமேகா -3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்து உள்ளதால்
    கொலேச்த்ராலை குறைக்கிறது
    * செரிமானத்தை ஊக்குவிக்கிறது.
    * பூட்டியிருக் அமிலம் உள்ளதால் செரிமானம் நன்கு நடைபெறும்., செரிமானத்தை எளிதா க்குகிறது..
    *செரிமானப் பாதையை சீராக்கி , ஆரோக்கியமாக வைக்கிறது.
    * நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப் படுத்துகிறது.
    4) வீக்கத்தைக் குறைக்க உதவுகிறது.
    5) பசி உணர்வை தூண்டுகிறது
    6) உடல் இயக்கங்களில் நெகிழ்வு தன்மையை அளிக்கிறது
    7) கண் பார்வைக்கு உதவுகிறது
    வைட்டமின் - ஏ இருப்பதால் , வயதான பிறகு ஏற்படும் கண் பார்வை குறைபாடுகளையும் சரி செய்கிறது.
    8) கரு உற்ற தாய்மார்களுக்கு குழந்தை நலனுக்கு உதவுகிறது.
    9) வைட்டமின்-கே 2 இருப்பதால் குழந்தை வளர்ச்சிக்கும்,பல் வளர்ச்சிக்கும் உதவுகிறது.
    10)சாத்வீக உணவு ஆதலால் , ஆரோக்கியம், நேர்மறை எண்ணங்களை வளர்க்கிறது..
    11) உணர்ச்சிக் கொந்தளிப்பைக் கட்டுபடுத்துகிறது..
    12) மூலிகை வாசனைப் பொருட்களில் உள்ள சத்துகளை உறிஞ்ச
    உதவுகிறது.
    13) இந்திய உணவுகளில் உள்ள எல்லா சத்துகளையும் உ றிஞ்சி எந்த பாகத்துக்கு தேவையோ, அந்தந்த பாக ng களுக்கு அந்தந்த சக்தி கிடைக்க உதவுகிறது..
    14) நாம் உபயோகிக்கும் எண்ணெய் கெடுதல் பலனை தருகிறது. அனால், நெய், தேங்காய் எண்ணெய், நல்லெண்ணெய் , தீய பலன்களை தருவதில்லை.
    15) குளிர் சாதனா பெட்டி வேண்டாம். நெய் நீண்ட நாட்களுக்கு கெடாமல் இருக்கும்.
    16) பால் பொருட்கள் அலெர்ஜி உள்ளவர்களுக்கும் உதவுகிறது.

    ajayjofi likes this.
    "Our sweetest songs are those that tell of the saddest thoughts "

    My completed story :-
    நம்பிக்கை ஒளி

    My ongoing story :-
    ததும்பி வழிகிறதே மௌனம் - Thathumbi


    dROP YOUR VALUABLE COMMENTS ON MY STORY HERE :-
    ததும்பி வழிகிறதே மௌனம் - Thathumbi Vazhikiradhae Mounam (Comments)


    PLEASE VISIT MY BLOG :-
    Penmai.Com - Indian, Tamil Women's Forum - Online Community - மயிலிறகாய் ரா.கிரிஜா - Blogs

    KAVIDHAI NOOLGAL :-
    GIRIJAVIN KAVIDHAI THOGUPPU NOOL
    http://www.penmai.com/forums/poems/1...ml#post1698598
    1) THOGUPPU 1 :- "வேரும் (க)விதைகளும் " DATED 17.02.2016
    2) THOGUPPU 2 :- "கவிதையாய் இனிய சாரல்கள்" DATED 18.02.2016

  7. #37
    girija chandru's Avatar
    girija chandru is offline Penman of Penmai
    Blogger
    Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Oct 2011
    Location
    coimbatore
    Posts
    10,005
    Blog Entries
    152

    Re: மருத்துவம் பற்றிய சில விஷயங்கள்

    ஜீரண சக்தியை மேம்படுத்தும் வழிகள் :​ -
    ============================


    1) உணவை நன்றாக மெல்லுங்கள்.
    2) முளை கட்டிய உணவை சாப்பிடவும்
    அவற்றில் நல்ல பாக்டிரியாக்கள் உள்ளன.
    3) கல்லீரல் கிட்டே கொஞ்சூண்டு இர க் கம் காட்டுங்கள் :-
    3.1) குடி வேண்டாம்.
    3.2) காரட், பீட் ரூட் , பச்சை காய்கறிகள் அதிகம் சேர்க்கவும்
    3.3) பழ ஜூஸ் அதிகம் சேர்க்கவும்..
    4) நிறைய தண்ணீர் குடியுங்கள்.
    4.1) இளநீர் குடிக்கலாம்.
    4.2) எலுமிச்சை ரசம் கட்டாயம் உணவில் சேர்க்கவும்
    4.3) நிறைய பழ ரசங்கள் குடிக்கவும் .
    5) ஸ்ட்ரெஸ் மனகேமென்ட் மனகேமென்ட் செய்யவும்
    6) நச்சு பொருட்களை வெளியேற்றவும்.
    7) க்ளுடமின் :- என்பது நமது உடலின் பாகங்களான சிறு குடல்,
    பெருங்குடல் ஆகியவற்றை நன்கு ரிப்பேர் செய்து பராமரிக்கிறது..
    மாத்திரைகளாகவும், மீன்,முட்டை,தயிர்,பால், பீட்ரூட்,,பீன்ஸ்,கீரை,
    ப்ரெஷ் காய்கறி ஜூஸ் இலும் இந்த க்ளுடமின் கிடைக்கின்றன.
    8)ப்ரோபயோடிக் உபயோக்கியுங்கள் :- தயிரில் இருக்கிறது.
    (நல்ல பாக்ட்டேரியாக்கள்)
    9) உடற்பயிற்சி செய்யுங்கள்
    10)உங்கள் உடல் சொல்வதை கேளுங்கள் :​-
    வேண்டாம் என்றால் வேண்டாம். வேண்டும் என்றால் வேண்டும். பசித்து ருசித்து புசியுங்கள்.

    ahilanlaks likes this.
    "Our sweetest songs are those that tell of the saddest thoughts "

    My completed story :-
    நம்பிக்கை ஒளி

    My ongoing story :-
    ததும்பி வழிகிறதே மௌனம் - Thathumbi


    dROP YOUR VALUABLE COMMENTS ON MY STORY HERE :-
    ததும்பி வழிகிறதே மௌனம் - Thathumbi Vazhikiradhae Mounam (Comments)


    PLEASE VISIT MY BLOG :-
    Penmai.Com - Indian, Tamil Women's Forum - Online Community - மயிலிறகாய் ரா.கிரிஜா - Blogs

    KAVIDHAI NOOLGAL :-
    GIRIJAVIN KAVIDHAI THOGUPPU NOOL
    http://www.penmai.com/forums/poems/1...ml#post1698598
    1) THOGUPPU 1 :- "வேரும் (க)விதைகளும் " DATED 17.02.2016
    2) THOGUPPU 2 :- "கவிதையாய் இனிய சாரல்கள்" DATED 18.02.2016

  8. #38
    girija chandru's Avatar
    girija chandru is offline Penman of Penmai
    Blogger
    Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Oct 2011
    Location
    coimbatore
    Posts
    10,005
    Blog Entries
    152

    Re: மருத்துவம் பற்றிய சில விஷயங்கள்

    செடிகளுக்கு மாத்திரை :-
    =================


    காலாவதியான சித்தா,homeopathy,ஆயுர்வேத மருந்து மாத்திரைகளை வீண் ஆக்காமல், எலுமிச்சை மரம், அரளி,ரோஜா செடிகளில் போட்டால் பயன் உண்டு.
    1) எலுமிச்சை காய்ப்பு அபாரம்
    2) ரோஜாப்பூக்கள் மிக பெரிய அளவில் பூக்கின்றன.

    "Our sweetest songs are those that tell of the saddest thoughts "

    My completed story :-
    நம்பிக்கை ஒளி

    My ongoing story :-
    ததும்பி வழிகிறதே மௌனம் - Thathumbi


    dROP YOUR VALUABLE COMMENTS ON MY STORY HERE :-
    ததும்பி வழிகிறதே மௌனம் - Thathumbi Vazhikiradhae Mounam (Comments)


    PLEASE VISIT MY BLOG :-
    Penmai.Com - Indian, Tamil Women's Forum - Online Community - மயிலிறகாய் ரா.கிரிஜா - Blogs

    KAVIDHAI NOOLGAL :-
    GIRIJAVIN KAVIDHAI THOGUPPU NOOL
    http://www.penmai.com/forums/poems/1...ml#post1698598
    1) THOGUPPU 1 :- "வேரும் (க)விதைகளும் " DATED 17.02.2016
    2) THOGUPPU 2 :- "கவிதையாய் இனிய சாரல்கள்" DATED 18.02.2016

  9. #39
    girija chandru's Avatar
    girija chandru is offline Penman of Penmai
    Blogger
    Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Oct 2011
    Location
    coimbatore
    Posts
    10,005
    Blog Entries
    152

    Re: மருத்துவம் பற்றிய சில விஷயங்கள்

    home remedy for kidney stones :-
    ======================

    1) decoction of onion with sugar
    2) drink lots of coconut water
    3) drink lots of barley water
    4) take orange juice daily
    5) take plantain pith either in the form of juice or as a food.
    6) lemon juice mixed with honey or sugar.
    7) practice yoga along with medicines to relieve the symptoms of stones...

    signs of kidney stones :-
    ===============
    1) intermittant pains in the groins or to the genital areas or inner thigh (known as renal colic.
    2) It is accompanied by urinary urgency, restlessness, hematuria,nausea and sweating.
    3)the site of the pain depends on the site of obstruction.
    4)there may be burning sensation or urgency while urinating.
    5) bleeding in urinary tract.


    ahilanlaks likes this.
    "Our sweetest songs are those that tell of the saddest thoughts "

    My completed story :-
    நம்பிக்கை ஒளி

    My ongoing story :-
    ததும்பி வழிகிறதே மௌனம் - Thathumbi


    dROP YOUR VALUABLE COMMENTS ON MY STORY HERE :-
    ததும்பி வழிகிறதே மௌனம் - Thathumbi Vazhikiradhae Mounam (Comments)


    PLEASE VISIT MY BLOG :-
    Penmai.Com - Indian, Tamil Women's Forum - Online Community - மயிலிறகாய் ரா.கிரிஜா - Blogs

    KAVIDHAI NOOLGAL :-
    GIRIJAVIN KAVIDHAI THOGUPPU NOOL
    http://www.penmai.com/forums/poems/1...ml#post1698598
    1) THOGUPPU 1 :- "வேரும் (க)விதைகளும் " DATED 17.02.2016
    2) THOGUPPU 2 :- "கவிதையாய் இனிய சாரல்கள்" DATED 18.02.2016

  10. #40
    ahilanlaks's Avatar
    ahilanlaks is offline Ruler's of Penmai
    Real Name
    Athilakshmi Ahilan ( Bhuvana )
    Gender
    Female
    Join Date
    Mar 2015
    Location
    Chennai
    Posts
    12,408

    Re: மருத்துவம் பற்றிய சில விஷயங்கள்

    Very useful thread dear. Good you share with us


loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter