Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine December! | All Issues

User Tag List

Like Tree5Likes
  • 2 Post By silentsounds
  • 1 Post By bhuvijai
  • 1 Post By s.jayanthi
  • 1 Post By bookslover

Stress Due To Dual Role Of Women - பெண்கள் சந்திக்கும் ஸ்ட்ரெஸ் பிரச&#


Discussions on "Stress Due To Dual Role Of Women - பெண்கள் சந்திக்கும் ஸ்ட்ரெஸ் பிரச&#" in "General Health Problems" forum.


  1. #1
    silentsounds's Avatar
    silentsounds is offline Moderator & Blogger Guru's of Penmai
    Gender
    Male
    Join Date
    Feb 2011
    Location
    chennai
    Posts
    6,312
    Blog Entries
    31

    Stress Due To Dual Role Of Women - பெண்கள் சந்திக்கும் ஸ்ட்ரெஸ் பிரச&#

    பெண்கள் சந்திக்கும் ஸ்ட்ரெஸ் பிரச்னை


    வேலை, வீடு என இரட்டைச் சுமையில் தவிக்கும், எல்லாப் பெண்களுக்குமான பொது பிரச்னை, மன அழுத்தம். குடும்பத்துக்காக வேலையையோ, வேலைக்காக குடும்பத்தையோ விட்டுக் கொடுக்காமல், இரண்டையும் திறம்பட கையாளும் வித்தை தெரிந்த பெண்களுக்கு, தம்மை கவனித்துக் கொள்ள, நேரம் ஒதுக்குவது அரிதாகிவிடுகிறது.


    முடியலையே எனப் புலம்பிக் கொண்டாவது, எல்லா வேலைகளையும் முடித்து விடும் பலருக்கு தெரிவதில்லை, அது ஸ்ட்ரெஸ் என்கிற மன அழுத்தத்தின் ஆரம்பம் என்பது. இதை தொடர விட்டால், பல்வேறு மனபாதிப்புகளுக்கு, சிவப்பு கம்பளம் விரிப்பது போலாகிவிடும் என்கின்றனர் உளவியல் நிபுணர்கள்.




    தம்மால் முடியவில்லையே என்கிற நினைப்புதான், அழுத்தத்தின் ஆரம்பம். குடும்பத்தில், மனைவியாக, தாயாக, பணிபுரியும் இடத்தில் நல்ல வேலையாளாக திறம்பட செயல்பட முடியாத போது, புலம்பல்கள் அடிக்கடி வந்தால், மன அழுத்த குகைக்குள் சிக்கி கொண்டதை அறியலாம். படபடப்பு, அழுகை, கோபம், எரிச்சல், தூக்கமின்மை, அதீத பசி போன்றவை ஸ்ட்ரெஸ்சின் அறிகுறிகள். வேலையையும் வீட்டையும் கவனிக்கிற, ஒவ்வொரு பெண்ணுமே, அசாதாரண மனுஷிதான். இரண்டு இடங்களிலும், எல்லா விஷயங்களிலும், நூறு சதவீத பர்பெக்சனை எதிர்பார்க்க ஆரம்பிக்கும் போதுதான், ஸ்ட்ரெஸ் வருகிறது.


    சமாளிக்க உத்திகள்: வீடு, வேலை என, இரண்டுக்கும் 50:50 முக்கியத்துவம் கொடுக்க பழகுங்கள். நிதான மனப்பான்மையை வளர்த்துக் கொள்ளுங்கள். வேலையை, திறமைக்கான ஒரு வடிகாலாக பாருங்கள். படித்திருந்தும், வீட்டில் முடங்கி கிடக்காமல் இருப்பதற்கு, வேலை செய்வது ஒரு ஆறுதல்.
    இதற்காக வேலை, வேலை என எந்நேரமும், அதைப் பற்றிய சிந்தனையில் ஓடுவதையும், அதிகமாக சம்பாதிக்க நினைப்பதும், ஆடம்பர வாழ்க்கைக்கான கனவு என்கிற, அதிகபட்ச ஆசைகள் தேவையில்லை. அந்த ஆசைகளை தேடி ஓட ஆரம்பித்தால், நிச்சயம் ஸ்ட்ரெஸ்சை சந்தித்தாக வேண்டும்.


    வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு, அதிகபட்ச கால ஒழுக்கம் அவசியம். உறவினர்களுக்கு, நண்பர்களுக்கு, அக்கம் பக்கத்து வீட்டாருக்கு, எத்தனை மணித்துளிகளை ஒதுக்கலாம் எனத் திட்டமிட்டுக் கொள்ள வேண்டும். பேஸ்புக்கோ, ட்விட்டரோ, டிவியோ, வேலைக்குச் செல்கிறவர்களின் களைப்பை நீக்கி புத்துணர்வு கொடுக்கும் ஒரு விஷயமாக இருக்க வேண்டுமே தவிர, உலகத்தை மறக்கும் அளவுக்கு, அதிலேயே மூழ்கக்கூடாது.


    வேலையிடத்தில் கூடியவரை வம்பு பேசுவதோ, அரசியல் பேசுவதோ வேண்டாம். சிலவிதமான அலுவலக அரசியல்கள், ஸ்ட்ரெஸ்சை அதிகரித்து, ஒரு கட்டத்தில், அந்த வேலையிலிருந்தே விலகி ஓடச் செய்து விடும். வேலையிடத்தில் செலவழிக்கிற நேரத்தை, ஆக்கப்பூர்வமாக செலவழித்தால், வேலை நேரம் முடிந்தும், அலுவலை முடிக்க முடியாமல் உண்டாகிற, டென்ஷன் இருக்காது. இதை புரிந்து கொண்டு, வீட்டையும், வேலை பார்க்கும் தளத்துக்கான முக்கியத்துவத்தையும் எடை போட்டு பிரித்தாள தெரிந்தவர்களுக்கு, எத்தகைய பிரச்னைகளில் இருந்தும் விடுபட, வழி கிடைக்கும்.

    Similar Threads:

    Sponsored Links
    Guna (குணா)

    நினைப்பில் தூய்மையும், சொல்லில் உண்மையும்
    மிகவும் அவசியமானவை








  2. #2
    bhuvijai's Avatar
    bhuvijai is offline Friends's of Penmai
    Real Name
    Bhuvana
    Gender
    Female
    Join Date
    Nov 2013
    Location
    Arakkonam
    Posts
    124

    re: Stress Due To Dual Role Of Women - பெண்கள் சந்திக்கும் ஸ்ட்ரெஸ் பிரĩ

    Amam endha ulagathula first namaku nama than kavanichikanum

    silentsounds likes this.

  3. #3
    s.jayanthi is offline Citizen's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jun 2012
    Location
    chennai
    Posts
    702

    re: Stress Due To Dual Role Of Women - பெண்கள் சந்திக்கும் ஸ்ட்ரெஸ் பிரĩ

    200% true friends

    silentsounds likes this.

  4. #4
    bookslover is offline Citizen's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jul 2011
    Location
    chennai
    Posts
    737

    re: Stress Due To Dual Role Of Women - பெண்கள் சந்திக்கும் ஸ்ட்ரெஸ் பிரĩ

    nice information friend

    silentsounds likes this.

loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter