சாதாரணமாக, சிறுநீரகங்களிலும், சிறுநீர்ப்பையிலும் கிருமிகள் வளர்ந்தால் அது யூரினரி இன்ஃபெக்ஷன் என்று சொல்லப்படுகிறது. ஆண்களை விட இந்தப் பெண்களுக்கே இந்தப் பிரச்னை அதிகம் வர வாய்ப்பிருக்கிறது. பிறப்புறுப்பில் தங்கும் கிருமிகள் மிக எளிதாக உள் உறுப்புகளில் பரவ வாய்ப்பிருப்பதே இதற்குக் காரணம்.

பெண்கள், தங்கள் சிறுநீர் புறவழிப் பாதையையும் கர்ப்பப்பைப் பாதையையும் சுத்தமாக வைத்துக் கொண்டாலே பெரும்பாலான கிருமித் தொற்றை தவிர்த்து விடலாம்.

முக்கியமாக மலம் கழித்த பிறகு சுத்தம் செய்யும்போது மலத்தில் உள்ள கிருமிகள் முன் பக்கத்துக்கு வராமல் சுத்தம் செய்ய சிறிய வயதிலிருந்தே பெண்குழந்தைகளுக்குக் கற்றுக் கொடுக்க வேண்டும்.


இதைத் தவிர சிறுநீரகங்களிலிருந்த சிறுநீர்ப்பைக்கு வரும் குழாயிலோ சிறுநீர் புறவழிப் பாதையிலோ அடைப்பு ஏற்பட்டு சிறுநீர் தேக்கம் ஏற்பட்டால், நிச்சயம் அங்கே கிருமிகள் வளரும். அங்கு கற்கள் உண்டாகி அடைப்பு ஏற்பட்டாலும் கிருமித் தாக்குதல் உண்டு.


தொடர்ந்த சிகிச்சைக்குப் பிறகும் கிருமிகள் தாக்குதல் இருப்பதால், உள் உறுப்புகளில் ஏதோ பிரச்னை இருக்க அநேக வாய்ப்புகள் உள்ளன. அதைக் கண்டறிவதற்கு ஸ்கேன் செய்தால் மட்டும் போதாது. மேலும் சில சிறப்பு பரிசோதனை முறைகள் தேவைப்படலாம்.


உதாரணத்துக்கு, சிறுநீரகப்பை சிறுநீரை வெளியேற்றும் திறனைக் கண்டறிய யூரோ ஃப்ளோ அல்லது யூரோ டைனமிக்ஸ் போன்ற கணினி பரிசோதனைகள் தேவைப்படும்.

சிலசமயங்களில் சிறப்பு எக்ஸ்ரே பரிசோதனைகள் (ஐவி-யூரோகிராபி) அல்லது சி.டி ஸ்கேன் போன்ற பரிசோதனைகள் தேவைப்படலாம். சிறுநீரக அறுவை சிகிச்சை நிபுணரை அணுகி இந்த தொடர் கிருமி தாக்குதலுக்கு காரணம் என்னவென்று கண்டுபிடித்த பிறகே உரிய சிகிச்சை செய்து பயன்பெறலாம்.''

Similar Threads: