பாத்திரம் துலக்குவது, துணி துவைப்பது, வீடு கழுவுவது போன்ற வேலைகளைச் செய்யும்போது, அதில் நீங்கள் பயன்படுத்தும் சோப்போ, பவுடரோ உங்கள் நகங்களில் கண்ணுக்குத் தெரியாத துளைகளை ஏற்படுத்தியிருக்கும்.

விடாமல் அவற்றை மீண்டும் மீண்டும் பயன்படுத்தும்-போது, அதில் உள்ள வேதிப்பொருட்கள் அந்தத் துளைகள் வழியே உள்ளே சென்று ஒவ்வாமை(அலர்ஜி)யை ஏற்படுத்தும்.

இதுபோன்ற ஒவ்வாமை ஏற்பட்டதுமே மருத்துவரை அணுகி சிகிச்சை எடுத்துக் கொண்டால் இரண்டே நாட்களில் சரியாகிவிடும்

இந்தப் பிரச்னை வராமல் தடுப்பதும் மிக சுலபம்தான். தொடர்ந்து நகங்களுக்கு தரமான நெயில் பாலிஷ் போடுங்கள். இவை நகத்தில் உள்ள துளைகளுக்கு பாதுகாப்பு அளிக்கும்.


அதில் விருப்பம் இல்லாதவர்கள், வேலை முடிந்த பிறகு தேங்காய் எண்ணெய், ஆலிவ் எண்ணெய் போன்றவற்றைக் கைகளில் தடவிக் கொள்ளலாம். கையுறை அணிந்து வேலைகளைச் செய்தாலும், இந்தப் பிரச்னையில் இருந்து நகங்களைப் பாதுகாக்கலாம்.'

Similar Threads: