'சின்னம்மை நோய், 'ஹெர்பிஸ் வேரிசெல்லா' (herpes varicella) என்ற வைரஸ் மூலம் பரவுகிறது. இந்த வைரஸ், வெயில் காலத்தில்தான் அதிகமாக பரவும் என்பதால் கோடை காலம் ஆரம்பிக்கும் நேரத்தில், இதன் தாக்கம் அதிகமாக இருக்கும்.

பொதுவாக, 14 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள், மற்ற குழந்தைகளோடு நெருங்கி விளையாடுவதால் அவர்களுக்கு இந்நோய் பரவ வாய்ப்பு அதிகம். குழந்தைக்கு மூன்று வயதுக்குள் சின்னம்மை தடுப்பூசி போட்டிருந்தால், நோய்த்தொற்று குறித்து கவலைப்படத் தேவையில்லை

ஒருமுறை சின்னம்மை வந்தால் மீண்டும் வராது என்பதால் ஏற்கெனவே சின்னம்மையால் பாதிக்கப் பட்டவர்களும் கவலைப்பட வேண்டியதில்லை.


இந்த வைரஸ், ஒருவரது உடலுக்குள் நுழைந்ததும் 17 நாட்கள் வரை தன் எண்ணிக்கையை பெருக்கிக் கொள்ளும். அதன் பிறகே அதன் பாதிப்பு வெளிப்படை-யாகத் தெரியும். அதாவது அந்த 17 நாட்களுக்குள்ளேயே பாதிக்-கப்பட்டவரின் இருமல், தும்மல் மூலம் அருகில் இருப்பவர்களுக்கு இது பரவத் தொடங்கிவிடும் என்பதால், முன்கூட்டி பாதுகாப்பாக இருப்பது கடினம்தான்

ஆனால், வெளிப்படையான சின்னம்மை அடையாளங்களுடன் இருக்கிறவரிடம் நெருங்கிப் பழகாமல் கவனமாக இருக்கலாம். ஏனெனில், இந்த வைரஸ், காற்றின் மூலம் எளிதில் பரவக்கூடியது. வீட்டில் ஒருவருக்கு வந்தாலே மற்றவர்களுக்கும் பரவ மிக அதிக வாய்ப்பு உண்டு.

தும்மல், இருமல் தவிர, பாதிக்கப்பட்டவரின் கொப்புளங்களில் உள்ள நீர், காய்ந்த கொப்புளங்களில் இருந்து உதிரும் பக்கு மூலமும் இது பரவும். நோயின் வீரியத்தைப் பொறுத்து, அடுத்தடுத்த வீடுகளில் இருப்பவர்களுக்கும் பரவும்.

சின்னம்மையின் அடையாளங்களைப் பார்க்கலாம்

வெள்ளை நிறத்தில் தண்ணீர் கோர்த்த மாதிரியான கொப்புளம்தான் இதன் அடையாளம். சிலருக்கு, இந்தக் கொப்புளம் தோன்றும் முன்னே, ஐந்து நாட்களுக்கு காய்ச்சல் இருக்கும். சந்தேகப்படும்படி சிறு சிறு கட்டிகள் தோன்றினால் உடனடியாக மருத்துவரிடம் சென்று, அது சின்னம்மைதானா என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.

அப்படி உறுதியானால், தினமும் கட்டாயம் குளிக்க வேண்டும். குளிக்கத் தவறினால் சின்னம்மை வைரஸ் தொற்றுடன், பாக்டீரியா தொற்றும் சேர்ந்து கொள்ள வாய்ப்பு அதிகம். மஞ்சள், வேப்பிலை போன்றவை கிருமிநாசினி என்பதால் அவற்றைப் பயன்படுத்துவதில் தவறில்லை

நக இடுக்குகளில் பாக்டீரியா இருப்பதால், பாதிக்கப்பட்டவரின் உடலில் உள்ள கொப்புளங்கள் மீது தெரியாமல் அவருடைய நகமே பட்டும் பாக்டீரியா தொற்று ஏற்படலாம். எனவே, சின்னம்மை பாதிப்புக்குள்ளானவர்களின் நகங்களை வெட்டி விடுவது நல்லது.


இன்றைய மருத்துவ உலகில் சின்னம்மைக்கு சிறந்த மருத்துவ சிகிச்சைகள் நிறைய உள்ளன. இதை மேற்கொண்டால் கொப்புளங்கள் பரவாமலும் பெரிதாகாமலும் தடுக்கலாம். பொதுவாக இது குணமாக ஏழிலிருந்து பத்து நாட்கள் வரை ஆகும்.''

Similar Threads: