Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree2Likes
  • 2 Post By shansun70

எந்த மருந்தை எடுக்கும் போது, எந்த உணவுப் Ī


Discussions on "எந்த மருந்தை எடுக்கும் போது, எந்த உணவுப் Ī" in "General Health Problems" forum.


  1. #1
    shansun70's Avatar
    shansun70 is offline Minister's of Penmai
    Real Name
    M ShanmugaSundaram
    Gender
    Male
    Join Date
    Mar 2014
    Location
    Hosur
    Posts
    2,651

    Cool எந்த மருந்தை எடுக்கும் போது, எந்த உணவுப் Ī

    உலகில் எத்தனை பேர் புற்றுநோய், நீரிழிவு மற்றும் இதர தீவிரமான ஆரோக்கிய பிரச்சனைகளால் கஷ்டப்படுகின்றனர் என்று தெரியுமா? சமீபத்திய நிலவரப்படி, சுமார் 7.8 பில்லியன் மக்கள் இதுப்போன்ற பல பிரச்சனைகளை சந்திப்பதோடு, இந்த பிரச்சனைகளுக்கு எடுத்து வரும் மருந்து மாத்திரைகளுடன் தவறான உணவுகளையும் உட்கொண்டு வருவதால் இறப்பையும் சந்தித்திருப்பதாக தெரிய வந்துள்ளது.

    ஆஸ்துமா அல்லது சுவாச பிரச்சனைகளை சந்திப்பவர்கள் காபியை அளவுக்கு அதிகமாக உட்கொள்ளக்கூடாது, அப்படி எடுத்தால் அதில் உள்ள காஃப்பைன், நுரையீரலின் தசைகளுக்கு அதிக வேலைக் கொடுத்து, நிலைமையை இன்னும் மோசமடையச் செய்யும். இதுப்போன்று பல தவறான உணவுகளை, ஆரோக்கிய பிரச்சனை உள்ளவர்கள் உட்கொண்டு வருகின்றனர்.

    நீங்கள் ஆன்டி-ஹிஸ்டமைன்கள், சர்க்கரை நோய் மருந்துகள் அல்லது வலி நிவாரணிகளை எடுப்பவராயில், ஆல்கஹால் பருகுவதைத் தவிர்ப்பது நல்லது. ஏனெனில் இந்த மருந்துகளை எடுத்துக் கொண்டிருக்கும் போது, ஆல்கஹாலை அதிகம் பருகினால், ஆல்கஹாலில் உள்ள உட்பொருட்களை உடைப்பதற்கு கல்லீரல் சற்று அதிகமாக செயல்பட வேண்டியிருக்கும். இப்படி கல்லீரலில் வேலைப்பளு அதிகரித்தால், அதனால் கல்லீரல் செயலிழப்பு ஏற்படும் வாய்ப்புள்ளது. எனவே கவனமாக இருங்கள்.



    வாழைப்பழம் & இரத்த அழுத்த மருந்துகள் உங்களுக்கு இரத்த அழுத்த பிரச்சனை இருந்து, அதற்காக மருந்து மாத்திரைகளை எடுத்து வரும் போது பொட்டாசியம் நிறைந்த உணவுகளை அதிகம் எடுக்கக்கூடாது. இருப்பதிலேயே வாழைப்பழத்தில் தான் பொட்டாசியம் வளமான அளவில் உள்ளது. இதனை இரத்த அழுத்த பிரச்சனை உள்ளவர்கள் அதிகம் உட்கொண்டால், இதய செயல்பாடு அதிகரித்து, அதனால் நிலைமை மோசடைய வாய்ப்புள்ளது.
    இரத்த உறைவு தடுப்பு மருந்துகளை எடுத்து வருபவர்கள், பச்சை இலைக் காய்கறிகளான கேல், பசலைக்கீரை, ப்ராக்கோலி போன்றவற்றை அதிகம் எடுப்பதைத் தவிர்ப்பது நல்லது. ஏனெனில் இந்த மருந்துகளை எடுக்கும் போது, இவற்றை உட்கொண்டால் அதில் உள்ள அதிகப்படியான வைட்டமின் கே இரத்த உறைய வழிவகுக்கும். எனவே இவை இரண்டையும் ஒன்றாக உட்கொள்ளாதீர்கள்.

    உடலில் உள்ள கொழுப்பைக் குறைக்க மருந்துகளை எடுத்து வரும் போது, கிரேப்ஃபுரூட்/பப்பளிமாஸ் பழத்தை உட்கொள்ள வேண்டாம். ஏனெனில் இதில் உள்ள கெமிக்கல்கள், உடலில் உள்ள கொழுப்புக்களை உடைக்க முடியாமல் செய்யும். மேலும் கொழுப்பு குறைப்பு மருந்துகள் உயர் இரத்த அழுத்தத்தையும் குறையும் உதவும் என்பதால், சிட்ரஸ் பழங்கள் அதிகம் எடுப்பதைத் தவிர்ப்பது நல்லது.

    உங்களுக்கு சளி அல்லது இருமல் இருந்து, அதற்கு டெக்ஸ்ரோம்த்ரோபன் உள்ள மருந்துகளை எடுக்கும் போது, சிட்ரஸ் பழங்கள் உட்கொள்வதைத் தவிர்க்க வேண்டும். ஏனெனில் சிட்ரஸ் பழங்களில் உள்ள அமிலமும், டெக்ஸ்ரோம்த்ரோபனும் ஒன்று சேர்ந்தால், அது மயக்க உணர்வை உண்டாக்கும்.

    Similar Threads:

    Sponsored Links
    ahilanlaks and chitra.k like this.

  2. #2
    ahilanlaks's Avatar
    ahilanlaks is offline Ruler's of Penmai
    Real Name
    Athilakshmi Ahilan ( Bhuvana )
    Gender
    Female
    Join Date
    Mar 2015
    Location
    Chennai
    Posts
    12,408

    Re: எந்த மருந்தை எடுக்கும் போது, எந்த உணவுப் &

    Very useful sharing ji


loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter