புகை பிடிக்கும் பழக்கம் நீண்டநாள் இருப்பவருக்கு, பல்வேறு தொந்தரவு இருக்க வாய்ப்புள்ளது. இதில் நீங்கள் கூறுவதும் ஒன்று. புகைபிடிப்பவருக்கு உமிழ்நீர் சுரக்கும் தன்மை குறைந்து பற்சொத்தை அதிகரிக்கக் கூடும். நாக்கில் இருக்கும் சுவை அறியும் விசேஷ அணுக்கள் பாதிக்கப்பட்டு, சுவை அறியும் தன்மை குறையும். பற்களின் மேல் கறை படியத் துவங்கும். இது நீண்டநாள் இருந்தால், பல்லினுள் ஊடுருவி செல்லக் கூடும். இவ்வாறு ஆன கறைகளை எளிதில் சரிசெய்ய முடியாது. மேல் அண்ணத்தில் சிறு சிவப்பு புள்ளிகள் தோன்றக் கூடும். அதேபோல கன்னத்தில் உட்புறமும், நாக்கிலும் வெள்ளை கோடுகளோ, வெள்ளைப் படிவங்களோ தோன்றக் கூடும். இவற்றை கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டால் புற்றுநோயாக மாறக் கூடும். இதைத் தவிர புகைபிடிப்பதால் வாய் மட்டுமின்றி, நுரையீரல், தொண்டை போன்ற பகுதியில் புற்றுநோய், சுவாச கோளாறு வரக்கூடும். எனவே புகைபிடிக்கும் பழக்கத்தை தவிர்ப்பதே பற்கள் மற்றும் வாய்ப்பகுதி மட்டுமின்றி உடல் நலத்திற்கு நல்லது.

Similar Threads: