ஆண்களைவிட பெண்கள் தான் குடலிறக்க பிரச்சனை பாதிப்புக்கு அதிகம் ஆளாகுகிறார்கள். பெண்கள் தாய்மை அடையும் காலங்களிலும், அளவுக்கு அதிகமாக எடை கூடும் காலங்களிலும் இந்த பாதிப்பு ஏற்பட அதிகம் வாய்ப்பு இருக்கிறது.


பொதுவாக ஒருவரது வயிற்றுப் பகுதியின் அடிப்புறச் சுவர், சில பகுதிகளில் நலிந்து, வலுவிழந்து காணப்படும்.


அவ்வாறு வலுவிழந்து காணப்படும் பகுதி வழியே சிறுகுடல் பிதுக்கிக் கொண்டு அல்லது துருத்திக் கொண்டு இறங்கி விடும். இதுவே ஹெர்னியா அல்லது குடலிறக்கம் என்று அழைக்கப்படுகிறது.


பெண்களுக்கு வயிற்றுப் பகுதியில் அறுவைச் சிகிச்சை செய்யப்படும் போது குடலிறக்கம் ஏற்பட அதிக வாய்ப்பு இருக்கிறது.


குறிப்பாக சிசேரியன் எனப்படும் மகப்பேறு கால அறுவைச் சிகிச்சை மற்றும் கர்ப்பப்பை நீக்கும் அறுவை சிகிச்சைக்குப் பிறகு சம்பந்தப்பட்ட பெண்களுக்கு இந்த பாதிப்பு ஏற்படுகிறது.


அடுத்ததாக பெண்களுக்கு வயது ஏற ஏற எடை கூடுவது இயற்கையான ஒன்று. இப்படி எடை கூடுவது அவர்களது வயிற்றுப் பகுதியை பலவீனமாக்குகிறது.

ஒரு பெண் கருவுற்றிருக்கும் காலத்தில் மாதம் ஆக ஆக அவளது வயிறு விரிவடைகிறது. இதுவும் வயிற்றுப் பகுதியை பலவீனமாக்கி வலுவிழக்கச் செய்கிறது. இவ்வாறுதான் பெண்களுக்கு பெரும்பாலும் குடலிறக்கப் பாதிப்பு ஏற்படுகிறது.

Similar Threads: