User Tag List

Like Tree11Likes
 • 2 Post By ahilanlaks
 • 2 Post By safron
 • 1 Post By ahilanlaks
 • 1 Post By lekha20
 • 2 Post By sumathisrini
 • 1 Post By ahilanlaks
 • 1 Post By girija chandru
 • 1 Post By ahilanlaks

கண்களையுமா தாக்கும் புற்றுநோய்?


Discussions on "கண்களையுமா தாக்கும் புற்றுநோய்?" in "General Health Problems" forum.


 1. #1
  ahilanlaks's Avatar
  ahilanlaks is offline Ruler's of Penmai
  Real Name
  Athilakshmi Ahilan ( Bhuvana )
  Gender
  Female
  Join Date
  Mar 2015
  Location
  Chennai
  Posts
  12,408

  கண்களையுமா தாக்கும் புற்றுநோய்?

  நன்றி குங்குமம் டாக்டர்

  விழியே கதை எழுது! விழித்திரை சிறப்பு மருத்துவர் வசுமதி வேதாந்தம்


  முன்னொரு காலத்தில் புற்றுநோய் என்கிற வார்த்தையை அரிதினும் அரிதாகவே கேள்விப்பட்டிருக்கிறோம். இன்று அது காய்ச்சல், ஜலதோஷம் போல சாதாரண வார்த்தையாகவும், சகஜமான நிகழ்வாகவும் மாறிவிட்டது. நமக்குத் தெரிந்த வட்டத்திலேயே புற்றுநோய் பாதிக்கப்பட்ட யாரேனும் ஒருத்தர் இருப்பதைப் பார்க்கிறோம். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான புற்றுநோய்... வேறு வேறு உறுப்புகளில் பாதிப்பு...'இந்தக் கடவுளுக்கு கண்ணே
  இல்லையா?’ எனப் புலம்புகிறீர்களா? கொஞ்சம் பொறுங்கள். கடவுளின் கண்களைப் பற்றிப் பேசும் முன், மனிதர்களின் கண்களையும் தாக்கக் கூடிய புற்றுநோயைப் பற்றியும் தெரிந்து கொள்வோம்.

  'என்னது.... கண்லயும் கேன்சரா?’ என விழிகளை விரிக்காமல் விவரங்களைப் படியுங்கள்.கண்களில் வரக்கூடிய புற்றுநோய்களில் மிகவும் பரவலானது ரெட்டினோபிளாஸ்ட்டோமா. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை தாக்கக்கூடியது இது. ஒரு கண்ணிலோ, இரண்டு கண்களிலுமோ வரலாம். சில
  நேரங்களில் இது மூளை வரை தாக்கக்கூடியது. அதை ட்ரைலேட்டரல் ரெட்டினோ பிளாஸ்ட்டோமா என்கிறோம். ரெட்டினோபிளாஸ்ட்டோமா புற்று
  நோயின் முதல் அறிகுறியாக குழந்தையின் கண்கள் பூனைக்கண்கள் மாதிரித் தெரியும். கேட்ஸ் ஐ ரெஃப்ளெக்ஸ் (Cat’s Eye Reflex) என்று சொல்வோம். அதன் பெயர் லூகோகோரியா(Leukocoria) கோரியா என்றால் கண்ணின் பாப்பா. அந்த பாப்பா பகுதிக்குள் வெள்ளையாக பின்னால் விழித்திரையில் புற்றுநோய் தெரியும். அதனால் கண் பூனைக்கண் போலத் தெரியும். ஒரு கண் சிவப்பாகவும் இன்னொரு கண் வெள்ளையாகவும் தெரியும். அதை வைத்துதான் பெற்றோர் கண்டுபிடிப்பார்கள்.

  ரெட்டினோபிளாஸ்ட்டோமாவுக்கு பரம்பரைத் தன்மையும் காரணமாக இருக்கலாம். குடும்பத்தில் யாருக்கேனும் ரெட்டினோ பிளாஸ்ட்டோமா இருந்தால், குழந்தை பிறந்ததும் உடனடியாக விழித்திரை சிறப்பு மருத்துவரிடம் காட்டி, குழந்தைக்கு புற்றுநோய் இருக்கிறதா என சோதித்துக் கொள்ள வேண்டியது அவசியம். அதன் பிறகும் அடிக்கடி பரிசோதனைகள் மேற்கொள்ள வேண்டும். ரெட்டினோபிளாஸ்ட்டோமாவுக்கு முன் காலத்தில் ஒரே தீர்வு இநியூக்ளியேஷன்(Enucleation). அதாவது, அந்தக் கண்ணையே எடுத்துவிட்டு, இம்பிளான்ட் என ஒன்றை வைத்து பக்கத்தில் உள்ள கண்ணைப்போலவே தோற்றமளிக்கச் செய்ய முடியும். இநியூக்ளியேஷன் செய்துவிட்டு, கண்ணை மூளையோடு சேர்க்கிற ஆப்டிக் நரம்புப் பகுதி யில் புற்றுநோய் செல்கள் இருக்கின்றனவா என்பதையும் மைக்ரோஸ்கோப் வைத்துப் பார்க்க வேண்டும்.

  தேவைப்பட்டால் அந்தக் கண் உட்காரும் சாக்கெட் போன்ற ஆர்பிட் பகுதிக்கு ரேடியேஷன் மற்றும் கீமோதெரபி கொடுத்துவிட்டு, பிறகு இம்பிளான்ட் வைக்க வேண்டும். சீக்கிரமே கண்டுபிடிக்கும் பட்சத்தில் இப்போது பிராக்கி தெரபி (Brachy Therapy) என ஒன்று வந்திருக்கிறது. ரேடியோ ஆக்டிவ் மெட்டீரியலை கண்ணில் கட்டிகள் உள்ள குறிப்பிட்ட இடத்தில் வைத்துத் தைத்துவிடுவார்கள். அது அந்த இடத்தில் மட்டும் ரேடியோதெரபியை கொடுக்கும். கண்ணுக்குள் செலுத்தக்கூடிய கீமோதெரபி மருந்துகளும் (Cisplatin) இப்போது வந்துள்ளன. என்னதான் நவீன சிகிச்சைகள் வந்தாலுமே, கண்களுக்குள் புற்றுநோய் வந்து
  விட்டால் பார்வை பறிபோகிற வாய்ப்புகள் மிக மிக அதிகம். பூனைக்கண் மாதிரி அறிகுறி காட்டலாம் அல்லது கண்கள் சிவந்து வீங்கிப் போய் கண் வலி வந்ததுபோலக்கூட குழந்தையிடம் மாற்றங்களைக் காணலாம்.

  இதை ஆரம்பத்திலேயே கவனிக்காமல் அலட்சியப்படுத்தினால், அது குழந்தையின் நுரையீரல், கல்லீரல், எலும்புகள் போன்றவற்றையும் பாதிக்கும். இது ரொம்பவே தீவிர பாதிப்புகளைக் கொடுக்கக்கூடிய புற்றுநோய் என்பதால் எத்தனை சீக்கிரத்தில் கண்டுபிடித்து சிகிச்சைகளைத் தொடங்குகிறோமோ அவ்வளவு நல்லது. அடுத்தது குழந்தைகளுக்கு வரக்கூடிய முக்கியமான புற்றுநோய் ராப்டோமயோசார்கோமா (Rhabdomyosarcoma).கண்களைச் சுற்றியுள்ள தசைகள் மற்றும் மென்திசுக்களில் வரக்கூடிய புற்றுநோய் ஒன்றும் உள்ளது. இதில் கண்கள் மிகவும் வீங்கிவிடும். கண்ணே முன்னாடி வருகிற மாதிரியான நிலை தெரியும். இதற்கு எக்சென்ட்டெரேஷன் (Exenteration) என்கிற முறையில்தான் சிகிச்சை அளிக்க வேண்டும்.

  ரெட்டினோபிளாஸ்ட்டோமா முன்காலத்தில் குழந்தையின் உயிரையே பறிக்கிற அளவுக்கு அதிகமாக இருந்தது. இன்று நவீன மருத்துவ சிகிச்சைகளின் மூலம் அது குறைந்திருக்கிறது. இந்த இரண்டு வகை புற்றுநோய்களைத் தவிர பெரியவர்களுக்கு வரக்கூடிய எல்லாவகையான புற்றுநோய்களும் குழந்தைகளுக்கும் வரலாம். தவிர, உடலில் வரக்கூடிய புற்றுநோய், உதாரணத்துக்கு லுகிமியா (Leukemia) என்கிற ரத்தப் புற்றுநோயில், குழந்தைகளின் கண்களில் ரத்தக் கசிவு இருக்கும். லுகிமியாவில் ரத்தத்தின் அடர்த்தி அதிகமாகிவிடும். உடலின் மற்ற பகுதிகளில் உள்ள ரத்தக் குழாய்களைவிட விழித்திரையில் உள்ள ரத்த நாளங்கள் மெலிதாக இருக்கும்.

  எனவே ரத்தம் அதிக அடர்த்தி காரணமாக சீராகப் பாயாமல் நிற்கும் போது ரத்தக் குழாய் வெடித்து கண்களுக்குள் ரத்தக் கசிவு ஏற்படும். நிறைய குழந்தைகளை இந்த நிலையில் பார்க்கிறோம். அவர்களுக்கு எளிமையான ஒரு ரத்தப் பரிசோதனை செய்து பார்த்தால் லுகிமியா இருப்பது தெரிய வரும். உடலில் வேறு எங்காவது புற்றுநோய் இருந்தால் விழித்திரையின் பின்னால் உள்ள கோராய்டு என்கிற அமைப்பை பாதிக்கும். மெட்டாஸ்ட்டிட்ஸ் எனப்படுகிற அந்த நிலையில் விழித்திரை பிரிந்து எக்யூடேட்டிவ் ரெட்டினல் டிடாச்மென்ட் (Exudative retinal detachment) வரலாம். இதற்கெல்லாம் முதலில் உடலில் புற்றுநோய் பாதித்த பகுதிக்கு சிகிச்சை அளிக்க வேண்டும். கண்களில் ஏற்படுகிற ரத்தக் கசிவுக்கு லேசர் சிகிச்சை அல்லது விட்ரெக்ட்டமி என்கிற அறுவை சிகிச்சை பரிந்துரைக்கப்படும். எனவேதான் சொல்கிறோம்.... கண்களைக் கவனியுங்கள்!


  Similar Threads:

  Sponsored Links
  Last edited by ahilanlaks; 23rd Aug 2016 at 04:10 PM.
  sumathisrini and gkarti like this.
  ​Bhuvana Ahilan

  Love Makes Life Beautiful

 2. #2
  safron's Avatar
  safron is offline Citizen's of Penmai
  Real Name
  sumy
  Gender
  Female
  Join Date
  May 2016
  Location
  srilanka
  Posts
  625

  Re: கண்களையுமா தாக்கும் புற்றுநோய்?

  Katayam ellam kavanikka vendiya info ka
  En frnd relative da 2 vayasu kutti payyanukku kanla cancer. Andha paapvukkum
  Paavam ippa parvayellm mangalagi varudhu adhukku treatment pannikodirukkanga
  Romba paavam andha paapa romba cute a iruppan.. kattayam avanukku gunamaganum

  girija chandru and ahilanlaks like this.
  Sumy..
  உனக்கென நிர்ணயிக்கப்பட்டது உன்னை அடைந்தே தீரும். .

 3. #3
  ahilanlaks's Avatar
  ahilanlaks is offline Ruler's of Penmai
  Real Name
  Athilakshmi Ahilan ( Bhuvana )
  Gender
  Female
  Join Date
  Mar 2015
  Location
  Chennai
  Posts
  12,408

  Re: கண்களையுமா தாக்கும் புற்றுநோய்?

  Quote Originally Posted by safron View Post
  Katayam ellam kavanikka vendiya info ka
  En frnd relative da 2 vayasu kutti payyanukku kanla cancer. Andha paapvukkum
  Paavam ippa parvayellm mangalagi varudhu adhukku treatment pannikodirukkanga
  Romba paavam andha paapa romba cute a iruppan.. kattayam avanukku gunamaganum
  Don`t worry Sumy, that kid will be alright soon

  girija chandru likes this.
  ​Bhuvana Ahilan

  Love Makes Life Beautiful

 4. #4
  lekha20's Avatar
  lekha20 is offline Citizen's of Penmai
  Real Name
  Lekha Prakash
  Gender
  Female
  Join Date
  Nov 2013
  Location
  bangalore
  Posts
  622

  Re: கண்களையுமா தாக்கும் புற்றுநோய்?

  Good info.. thanks for sharing.....

  ahilanlaks likes this.

  Be a reason for someone's
  smile today!!

  வாங்கும் கையா இருப்பதை விட....
  கொடுக்கும் கையாக இறைவன் நம்மை ஆக்கட்டும்....!

  Always keep smile...
  Lekha

 5. #5
  sumathisrini's Avatar
  sumathisrini is offline Super Moderator Silver Ruler's of Penmai
  Real Name
  Sumathi
  Gender
  Female
  Join Date
  Jun 2011
  Location
  Hosur
  Posts
  34,368

  Re: கண்களையுமா தாக்கும் புற்றுநோய்?

  படிக்கவே பயமா இருக்கு புவனா... இப்ப எல்லாம் யாராவது இறந்து விட்டால் அதற்கு காரணம், விபத்து, புற்றுநோய், இதயநோய் இது தான் மேஜர் ரீசனா இருக்கு .

  girija chandru and ahilanlaks like this.

 6. #6
  ahilanlaks's Avatar
  ahilanlaks is offline Ruler's of Penmai
  Real Name
  Athilakshmi Ahilan ( Bhuvana )
  Gender
  Female
  Join Date
  Mar 2015
  Location
  Chennai
  Posts
  12,408

  Re: கண்களையுமா தாக்கும் புற்றுநோய்?

  Quote Originally Posted by lekha20 View Post
  Good info.. thanks for sharing.....
  Welcome dear friend

  ​Bhuvana Ahilan

  Love Makes Life Beautiful

 7. #7
  ahilanlaks's Avatar
  ahilanlaks is offline Ruler's of Penmai
  Real Name
  Athilakshmi Ahilan ( Bhuvana )
  Gender
  Female
  Join Date
  Mar 2015
  Location
  Chennai
  Posts
  12,408

  Re: கண்களையுமா தாக்கும் புற்றுநோய்?

  Quote Originally Posted by sumathisrini View Post
  படிக்கவே பயமா இருக்கு புவனா... இப்ப எல்லாம் யாராவது இறந்து விட்டால் அதற்கு காரணம், விபத்து, புற்றுநோய், இதயநோய் இது தான் மேஜர் ரீசனா இருக்கு .
  ​Ama ka vasikum podhu bakiru nu irunthuchu

  sumathisrini likes this.
  ​Bhuvana Ahilan

  Love Makes Life Beautiful

 8. #8
  girija chandru's Avatar
  girija chandru is offline Penman of Penmai
  Blogger
  Ruler's of Penmai
  Gender
  Female
  Join Date
  Oct 2011
  Location
  coimbatore
  Posts
  10,005
  Blog Entries
  152

  Re: கண்களையுமா தாக்கும் புற்றுநோய்?

  bhuvana, nijamave romba bayamaa irukku.... indha putru noi arakkanukku eevu irakkame kidayaadhaa? kannaiyum vittu vaikkavillaiya andha rascoal?

  ahilanlaks likes this.
  "Our sweetest songs are those that tell of the saddest thoughts "

  My completed story :-
  நம்பிக்கை ஒளி

  My ongoing story :-
  ததும்பி வழிகிறதே மௌனம் - Thathumbi


  dROP YOUR VALUABLE COMMENTS ON MY STORY HERE :-
  ததும்பி வழிகிறதே மௌனம் - Thathumbi Vazhikiradhae Mounam (Comments)


  PLEASE VISIT MY BLOG :-
  Penmai.Com - Indian, Tamil Women's Forum - Online Community - மயிலிறகாய் ரா.கிரிஜா - Blogs

  KAVIDHAI NOOLGAL :-
  GIRIJAVIN KAVIDHAI THOGUPPU NOOL
  http://www.penmai.com/forums/poems/1...ml#post1698598
  1) THOGUPPU 1 :- "வேரும் (க)விதைகளும் " DATED 17.02.2016
  2) THOGUPPU 2 :- "கவிதையாய் இனிய சாரல்கள்" DATED 18.02.2016

 9. #9
  ahilanlaks's Avatar
  ahilanlaks is offline Ruler's of Penmai
  Real Name
  Athilakshmi Ahilan ( Bhuvana )
  Gender
  Female
  Join Date
  Mar 2015
  Location
  Chennai
  Posts
  12,408

  Re: கண்களையுமா தாக்கும் புற்றுநோய்?

  Quote Originally Posted by girija chandru View Post
  bhuvana, nijamave romba bayamaa irukku.... indha putru noi arakkanukku eevu irakkame kidayaadhaa? kannaiyum vittu vaikkavillaiya andha rascoal?
  ​Yes ma, enakum vasikum podhe dhigila irunthuchu hmm

  girija chandru likes this.
  ​Bhuvana Ahilan

  Love Makes Life Beautiful

loading...

Bookmarks

Posting Permissions

 • You may not post new threads
 • You may not post replies
 • You may not post attachments
 • You may not edit your posts
 •  
Like It?
Share It!Follow Penmai on Twitter