Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine December! | All Issues

User Tag List

Like Tree8Likes
 • 2 Post By silentsounds
 • 3 Post By silentsounds
 • 2 Post By myworld
 • 1 Post By viji_mothi

Controlling your sleep - உறங்காமலேயே இரவு முழுக்க பணிகளில் ஈ


Discussions on "Controlling your sleep - உறங்காமலேயே இரவு முழுக்க பணிகளில் ஈ" in "General Health Problems" forum.


 1. #1
  silentsounds's Avatar
  silentsounds is offline Moderator & Blogger Guru's of Penmai
  Gender
  Male
  Join Date
  Feb 2011
  Location
  chennai
  Posts
  6,312
  Blog Entries
  31

  Controlling your sleep - உறங்காமலேயே இரவு முழுக்க பணிகளில் ஈ

  சரியா மூச்சுவிடகூட நேரமில்லாத அளவுக்கு, வேலை வேலை வேலைன்னு ஓடிக்கிட்டு இருக்குற நாம எல்லாருமே ஒரு விஷயத்துல ஒத்துப்போவோம். அது என்னன்னா, குடும்பத்தலைவர்களுக்கு வேலை, குடும்பச் சுமை, குழந்தைகளின் கல்வி இப்படி பலவகையான பொறுப்புகளை சுமந்து, எல்லாவற்றையும் சமாளிக்க வேண்டிய கட்டாயத்தில் அவங்கவங்களோட ஆரோக்கியத்தை பத்தி பெருசா அலட்டிக்கமாட்டாங்க.

  மாணவர்களைப் பொறுத்தவரை, எப்படியாவது படிச்சு வாழ்க்கையில முன்னேறனும் அப்படீங்கிற ஒரு லட்சியவெறியோட கல்வியில ஈடுபடுறதுனால, ஆரோக்கியம் பத்தி பெருசா கவலைப்படமாட்டாங்க. ஏன்னா, இந்த வயசுல நமக்கு என்ன ஆயிடப்போகுது, வயசான காலத்துலதான பிரச்சினை அப்போ பார்த்துக்கலாம் அப்படீங்கிற ஒரு அலட்சியப்போக்கு!

  இப்படி வாழ்க்கையின் ஒவ்வொரு நிலையிலும் இருக்கும் நாம், வேகமான இந்த வாழ்க்கையில தினமும் இழந்துபோகிற ஒரு முக்கியமான விஷயம் உறக்கம்! வார நாட்கள்ல திங்கள் தொடங்கி வெள்ளிவரை சரியான உறக்கமின்மை அப்படீங்கிறது ஒரு தொடர்கதையாகவே மாறியிருக்கும் நம்மில் பலருக்கு! தினமும் ஏற்படுற இந்த உறக்க இழப்பு பத்தி அதிகமா அலட்டிக்காத சிலர் நம்மிடையே இருந்தாலும், பலரோட நிலைப்பாடு என்னன்னா, "சரி வார நாட்கள்ல தூங்க முடியலைன்னா என்ன, அதான் வாரக்கடைசியில ரெண்டு நாள் விடுமுறை இருக்குதே அப்போ ஒரு 2 மணி நேரமோ இல்லைன்னா ஒரு 4 மணி நேரமோ அதிகமா தூங்கினா சரியாப்போயிடப்போகுது" என்பதுதான்!

  ஆனா, உறக்க இழப்பு பத்தின நம்மோட இந்த கணிப்பு தவறானது என்று சொல்கிறது அமெரிக்காவின் பென்சிவேனியா பல்கலைக்கழக மருத்துவத்துறையின் ஆய்வாளர் டேவிட் டிங்கெஸ் அவர்களின் சமீபத்தியஉறக்கம் தொடர்பான ஒரு ஆய்வு! இந்த ஆய்வில் எட்டப்பட்ட முடிவுகள், முன்வைக்கப்படும் கருத்துக்கள், பரிந்துரைகள் என்னென்ன, நம் ஆரோக்கியத்தை பாதுகாக்க நம் அன்றாட உறக்கம் எவ்வளவு நேரம் இருக்க வேண்டும் என்பது பற்றிய தகவல்களைத்தான் நாம இந்தப் பதிவுல மேற்கொண்டு பார்க்கப்போகிறோம்.....

  தூக்கக்கடனும் வாரக்கடைசி தூக்கமும்!

  பொதுவாக ஆரோக்கியமான வாழ்க்கைக்கு, மருத்துவர்கள் பரிந்துரைக்கும் தினசரி உறக்க அளவு 6 முதல் 8 மணி நேரம் வரை! ஆனால், சராசரியாக நம்மில் பலர் தினமும் பணி முடிந்து இரவு உறங்கச்செல்லும் நேரம் குறைந்தது 12.30 என்று வைத்துக்கொள்வோம். பின்பு அடுத்த நாள் பணிக்குச் செல்ல வேண்டிய நேரம் 8.30 அல்லது 9 என்றால், நாம் உறக்கத்திலிருந்து எழ வேண்டிய நேரம் 6 அல்லது 7 மணி என்று வைத்துக்கொள்வோம். ஆக, தினசரி நாம் 5.30 முதல் 6.30 மணி நேரம்வரை உறங்குகிறோம். இது பரவாயில்லை!

  ஆனால், சிலர் இரவு 1 மணி அல்லது 2 மணிக்கு உறங்கச் சென்று காலை 5 அல்லது 6 மணிக்கு எழுவதும் உண்டு. இப்படியான உறங்கும் பழக்கம் இருப்போருக்கு தினசரி உறக்கம் வெறும் 4 மணி நேரமே! இது ஆரோக்கியமான உறக்க நேரத்தைவிட 2 முதல் 4 மணி நேரம் குறைவு. இப்படியே வாரம் 5 நாட்கள் தூங்கினால், தினமும் 4 மணி நேரம் சேர்ந்து மொத்தம் 10 முதல் 20 மணி நேர உறக்க இழப்பு (Sleep deprivation) சேர்ந்துவிடுகிறது. இத்தகைய உறக்க இழப்பு சேர்வதையே உறக்கக் கடன்/தூக்கக் கடன் (sleep debt) என்கிறார்கள். இந்தக் கடனை அடைக்க வாரக்கடைசியில் ஒரு நாள் இரவு 10 மணிக்கு உறங்கி, அடுத்த நாள் காலை 8 மணிக்கோ அல்லது 10 மணிக்கோ எழுந்தால் போதும் என்பதுபோன்ற ஒரு பொதுவான கருத்து இதுவரை நிலவி வந்தது.

  ஆனால், இது போன்று தூக்கக் கடனை வாரக்கடைசியில் அடைத்துவிட்டாலும், பணியில் கவனக்குறைவு மற்றும் செயல்திறன் குறைவு ஆகிய பிரச்சினைகளை மக்கள் சந்திக்கிறார்கள் என்பது தெரியவந்துள்ளது! இந்த ஆய்வு முடிவானதுஎன்பது குறிப்பிடத்தக்கது என்கிறார் ஆய்வாளர் டேவிட்!

  சமீபத்திய ஆய்வின்படி, அன்றாட வாழ்க்கையில் கவனக்குறைவு, செயந்திறன்குறைவு போன்ற பிரச்சினைகளை தவிர்க்க வாரக்கடைசியில் தூங்கும் 10 மணி நேரம் உறக்கம் போதாது என்றும், மேலும் பல இரவுகள் அதே போல உறங்க வேண்டியது அவசியம் என்றும் கண்டறியப்பட்டுள்ளது. மேலும், தூக்கக்கடனை அடைக்காமல் அதிகரித்துக்கொண்டே போவதால் பணியில் கவனக்குறைவு மற்றும் வேறு சில தவறுகளையும் இழைக்க வாய்ப்புள்ளது என்றும் தெரியவருகிறது என்கிறார் ஆய்வாளர் டேவிட் டிங்கெஸ்!

  சராசரியாக 30 வயதான, ஆரோக்கியமான சுமார் 159 பேரை ஆய்வுக்குட்படுத்திய இந்த ஆய்வு, இதுவரை சோதனைக்கூடத்திலேயே வைத்து மேற்கொள்ளப்பட்ட "உறக்கக் கட்டுப்பாடு" ஆய்வுகளிலேயே அதிக எண்ணிக்கையிலானவர்களை கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது!  Similar Threads:

  Sponsored Links
  Last edited by Parasakthi; 27th Dec 2011 at 12:11 PM. Reason: Alignment
  Parasakthi and myworld like this.
  Guna (குணா)

  நினைப்பில் தூய்மையும், சொல்லில் உண்மையும்
  மிகவும் அவசியமானவை
 2. #2
  silentsounds's Avatar
  silentsounds is offline Moderator & Blogger Guru's of Penmai
  Gender
  Male
  Join Date
  Feb 2011
  Location
  chennai
  Posts
  6,312
  Blog Entries
  31

  Re: உறங்காமலேயே இரவு முழுக்க பணிகளில் ஈடுப&

  உறங்காமலேயே இரவு முழுக்க பணிகளில் ஈடுபடுவதை தவிர்த்தல் அவசியம்!

  பல்வேறு உடல் பாகங்களைக் கொண்ட நம் உடலியக்கமானது, சூரிய ஒளி தொடங்கும் பகலில் விழித்து இருப்பதற்க்கும், சூரிய ஒளி மறைந்துவிடும் இரவில் உறங்குவதற்க்குமே இயற்க்கையால் வடிவமைக்கப்பட்டது. சூரிய ஒளியை மையமாக/அடிப்படையாகக் கொண்டு, பகல் இரவு நேரத்திற்க்கேற்ப இயங்கும் ஒரு கடிகாரமான உயிரியல் கடிகாரத்தின் (Biological clock) இயக்கத்தின் அடிப்படையிலேயே நம் உடலியக்கம் நிகழ்கிறது.

  இதற்ககு பகல்-இரவுக்கு அடிப்படையான சூரிய ஒளி தொடங்கி மறையும் ஒரு சுழற்ச்சியே
  அடிப்படைக் காரணம்.

  ஆக, 5 வார நாட்கள் தொடர்ந்து 4 மணி நேரம்வரை மட்டுமே உறங்கிவிட்டு, திடீரென்று ஒரு நாள் அதிக வேலை வந்துவிட, சரி இன்று இரவு உறங்காமலேயே இந்தப் பணியை முடித்துவிட்டு நாளை முழுதும் உறங்கிவிடுவோம் என்று சில சமயம் இரவுமுழுக்க உறங்காமல் விழித்திருப்பதால், ஒருவரின் 'கவனம்' குறிப்பிடத்தக்க அளவில் பாதிக்கப்படுகிறது அல்லது சம்பந்தப்பட்டவர் கவனச்சிதறல்/கவனக்குறைவு பிரச்சினையால் பாதிக்கப்படக்கூடும் என்று எச்சரிக்கிறார் டேவிட்!

  அதனால், இயன்றவரை தினமும் 6 முதல் 8 மணி நேரம் உறங்குவதை பழக்கப்படுத்திக்கொண்டு, அடிக்கடி இரவு முழுக்க விழித்திருக்கும் பழக்கத்தை தவிர்த்தல் நலம் என்கிறார் ஆய்வாளர் டேவிட் டிங்கெஸ்! சரி, இந்த ஆய்வு பத்தி நீங்க என்ன நினைக்கிறீங்க?  Last edited by Parasakthi; 27th Dec 2011 at 12:16 PM. Reason: Alignment
  Parasakthi, sudhar and myworld like this.
  Guna (குணா)

  நினைப்பில் தூய்மையும், சொல்லில் உண்மையும்
  மிகவும் அவசியமானவை
 3. #3
  myworld's Avatar
  myworld is offline Registered User
  Blogger
  Minister's of Penmai
  Gender
  Female
  Join Date
  Nov 2011
  Location
  Tirunelveli
  Posts
  3,181
  Blog Entries
  3

  Re: உறங்காமலேயே இரவு முழுக்க பணிகளில் ஈடுப

  Guna sir..

  good research.. nit nalla thoongi endhrichi day timela velai paakradhukum, nit thoongama velai paarthutu daytimela velai paakradhukum kandippa neraiya differnces eruku..

  thoongama 3, 4 hrs panra velaiyai, thoongi fresha iruntha 1hrla mudichidalam.. adhu ipa yaarukku theriyudhu.. ellarum mostly nitlayum work panranga daytimum work panraanga..

  work pannalanaalum nit mulichirundhu tv pakranga, book padikraanga.. idhanaala kandipa neraiya health problems like eye problem, laziness, dizziness, head ache, etc.... varum..

  naama thaan namma healtha carefulla paathukanum.. nit timeku thoongi timeku endhrichi work start pannale naamalum healthy and naama panra seyalkalum success thaan..


  Parasakthi and silentsounds like this.
  Anitha

  "Necessity is the mother of invention"

 4. #4
  viji_mothi is offline Newbie
  Gender
  Female
  Join Date
  Aug 2011
  Location
  Moncton, Canada
  Posts
  94

  Re: உறங்காமலேயே இரவு முழுக்க பணிகளில் ஈடுப&

  Quote Originally Posted by myworld View Post
  Guna sir..

  good research.. nit nalla thoongi endhrichi day timela velai paakradhukum, nit thoongama velai paarthutu daytimela velai paakradhukum kandippa neraiya differnces eruku..

  thoongama 3, 4 hrs panra velaiyai, thoongi fresha iruntha 1hrla mudichidalam.. adhu ipa yaarukku theriyudhu.. ellarum mostly nitlayum work panranga daytimum work panraanga..

  work pannalanaalum nit mulichirundhu tv pakranga, book padikraanga.. idhanaala kandipa neraiya health problems like eye problem, laziness, dizziness, head ache, etc.... varum..

  naama thaan namma healtha carefulla paathukanum.. nit timeku thoongi timeku endhrichi work start pannale naamalum healthy and naama panra seyalkalum success thaan..
  well said pa

  silentsounds likes this.

loading...

Bookmarks

Posting Permissions

 • You may not post new threads
 • You may not post replies
 • You may not post attachments
 • You may not edit your posts
 •  
Like It?
Share It!Follow Penmai on Twitter