கணைய புற்றுநோயை ஏற்படுத்து​ம் பதப்படுத்த​ப்பட்ட இறைச்சி!!

சுவீடன் நாட்டில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வொன்றின் மூலம் பதப்படுத்தப்பட்ட இறைச்சியானது கணையப் புற்றுநோயை ஏற்படுத்தப்படும் என்னும் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

இந்த ஆய்வின் அடிப்படையில் சராசரி மனிதன் ஒருவனால் ஒரு நாளில் அன்றாட உணவின் மூலம் உள்ளெடுக்கப்படும் 50 கிராம் இறைச்சியின் மூலம் 19% சதவீதம் கணையப்புற்று நோய் அதிகரிப்பதற்கான வாய்ப்பு காணப்படுவதாகவும், 100 கிராம் இறைச்சியை உள்ளெடுக்கும் போது 38% என்ற அளவினால் அதி உச்ச ஆபாத்தான நிலைக்கு இட்டு செல்லும் எனவும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை பிரித்தானியாவில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வொன்றின் மூலம் சிவப்பு மற்றும் பதப்படுத்தப்பட்ட இறைச்சியானது மலக்குடலுக்குரிய புற்றுநோயை ஏற்படுத்தும் என்பதும் கண்டறியப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Similar Threads: