Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree64Likes

Diabetes


Discussions on "Diabetes" in "General Health Problems" forum.


  1. #1
    YOKI's Avatar
    YOKI is offline Minister's of Penmai
    Real Name
    Subha
    Gender
    Female
    Join Date
    Jun 2011
    Location
    Salem
    Posts
    2,805

    Diabetes

    உண்ணும் உணவை உடல் குளுகோஸாக (சர்க்கரை) மாற்றுகிறது. பிறகு அந்த சர்க்கரை, இரத்த ஓட்டத்தில் சேர்கிறது. கணையத்தில் சுரக்கின்ற இன்சுலினும் இரத்தத்தில் சேர்கிறது. இதனால் சர்க்கரையானது அணுக்களின் உள்ளே செல்ல முடியும். பிறகு உயிரணுக்கள் சர்க்கரையை எரித்து, உடலுக்கு எரிபொருளை வழங்குகிறது. அதனால்தான் உடலுறுப்புகள் செயல்படுகின்றன. சர்க்கரையானது உயிரணுக்களுக்குள் செல்ல முடியாத போது, இரத்தத்திலேயே தங்கிவிடுகிறது. இதுவே அதிக இரத்த சர்க்கரை (நீரிழிவு நோய்) எனப்படும்.
    முதல் வகை (டைப் 1 ) சர்க்கரை நோய்:
    இவ்வகை சர்க்கரை நோயால் பாதிக்கப் பட்டுள்ளவர்கள், உயிர் வாழ இன்சுலின் ஊசி போட்டுக் கொள்வது மிகவும் அவசியம். இல்லை யென்றால் அவர்கள் (மயங்கிய நிலை) எனும் உயிருக்கே ஆபத்து ஏற்படுகின்ற நிலைக்கு போய் விடுவர். அதனால் தான் இது இன்சுலின் சார்ந்துள்ள சர்க்கரை நோய் என்பர். இந்த நோய் பெரும்பாலும் இளம் வயதில் இருக்கும் போது ஆரம்பிக்கிறது என்றாலும், எந்த வயதினருக்கும் இந்த வகை நோய் ஏற்படலாம்.
    இரண்டாம் வகை சர்க்கரை நோய்:
    இவ்வகையில் இன்சுலின் உற்பத்தி சீராகவே உள்ளது. ஆனால் போதுமான அளவுக்கு உற்பத்தி செய்வதில்லை. அல்லது உற்பத்தி செய்யும் இன்சுலினை போதுமான அளவுக்கு உபயோகித்துக் கொள்வதில்லை. இவ்வகை சர்க்கரை நோய்க்கு சரியான உணவு, உடற்பயிற்சி, மாத்திரை அல்லது இன்சுலின் மூலம் சிகிச்சை அளிக்கலாம். பெரும்பாலும் 40 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு ஏற்படும்.

    Diabetes-diab-1.jpg

    Similar Threads:

    Sponsored Links
    Subha... Believe in all that can be

    A miracle starts whenever you dream

    Believe and sing from your heart
    You'll see Your song will hold the key

    To Sucess...

  2. #2
    YOKI's Avatar
    YOKI is offline Minister's of Penmai
    Real Name
    Subha
    Gender
    Female
    Join Date
    Jun 2011
    Location
    Salem
    Posts
    2,805

    re: Diabetes

    அறிகுறிகள் :
    இரண்டாம் வகை நோய்க்கு ஆரம்பத்தில் எந்த அறிகுறியும் தோன்றுவதில்லை. அவை படிப் படியாகத் தோன்றும்.
    1. சோர்வான உணர்வு, அசதி
    2. தோல் வறட்சி, அரிப்பு ஏற்படுதல்
    3. கைகள் (அடி) பாதங்கள் உணர்வு குறைந்து போதல்.
    4. கை, கால் நடுக்கம்.
    5. தொடர்ந்து ஆறாத புண், காயம் ஆறுவதில் தாமதம்.
    6. அடிக்கடி சிறுநீர் கழித்தல், அதிக தாகம், அதிக பசி, கண் பார்வை மங்குதல்.
    7. உடல் உறவில் குறைபாடு போன்றவை ஏற்படும்


    Diabetes-dia-2.jpg

    Subha... Believe in all that can be

    A miracle starts whenever you dream

    Believe and sing from your heart
    You'll see Your song will hold the key

    To Sucess...

  3. #3
    YOKI's Avatar
    YOKI is offline Minister's of Penmai
    Real Name
    Subha
    Gender
    Female
    Join Date
    Jun 2011
    Location
    Salem
    Posts
    2,805

    re: Diabetes

    ஜி.டி.டி பரிசோதனை :
    பொதுவாக இரத்தப் பரிசோதனையில் இரத்த சர்க்கரை அளவு அதிகமாக இருந்தால் ?
    ஜி.டி.டி (குளுக்கோஸ் டாலரன்ஸ் டெஸ்ட்) செய்து சர்க்கரை நோய் இருக்கிறதா, இல்லையா என்பதை உறுதிபடுத்திக் கொள்வது அவசியம். ஜி.டி.டி பரிசோதனை என்பது மூன்று கட்டமாக மொத்தம் இரண்டு மணி நேரம் செய்யப்படுகிற ரத்த சர்க்கரை அளவு பரிசோதனையாகும். முதலில் வெறும் வயிற்றில் சர்க்கரை அளவு. அடுத்து 75 கிராம் குளுக்கோஸ் கலந்த நீரை குடிக்கக் கொடுத்து ஒரு மணி நேரம் கழித்து செய்யப்படுகிற ரத்த சர்க்கரை பரிசோதனை. அடுத்து இரண்டு மணி நேரம் கழித்து இரத்த சர்க்கரை அளவை பரிசோதனை செய்வது ஆகியவை.
    ஜி.டி.டி இரத்தப் பரிசோதனை அளவுகள்
    ஜி.டி.டி ரத்தப் பரிசோதனையில் வெறும் வயிற்றில் செய்யப்பட்ட பரிசோதனையில் ரத்த சர்க்கரை அளவு 120 மில்லிகிராமுக்கு அதிகமாக இருந்தாலே கணையத்தில் போதிய இன்சுலின் சுரக்கவில்லை என்று பொருள்.
    இந்த நிலையிலேயே உணவுக் கட்டுப்பாடு, உடற்பயிற்சி ஆகியவற்றில் கவனம் செலுத்த தொடங்கி விட்டால் சர்க்கரை நோயைத் தடுக்கலாம். ஜி.டி.டி இரத்தப் பரிசோதனையில் இரண்டு மணி நேரம் கழித்து செய்யப்பட்ட சோதனையில் இரத்த சர்க்கரை அளவு 200 மில்லி கிராமுக்கு அதிகமாக இருந்தால் சர்க்கரை நோயை உறுதிப்படுத்தலாம்.

    Subha... Believe in all that can be

    A miracle starts whenever you dream

    Believe and sing from your heart
    You'll see Your song will hold the key

    To Sucess...

  4. #4
    YOKI's Avatar
    YOKI is offline Minister's of Penmai
    Real Name
    Subha
    Gender
    Female
    Join Date
    Jun 2011
    Location
    Salem
    Posts
    2,805

    re: Diabetes

    சிறுநீரக பாதிப்பு :
    கண்களுக்கு அடுத்ததாக சிறுநீரகங்களை சர்க்கரை நோய் பாதிப்பதற்கான வாய்ப்புகள் அதிகம். சிறுநீரகங்களில் பாதிப்பு ஏற்பட்டால் ரத்த அழுத்தம் அதிகமாகும். எனவே சர்க்கரை நோயாளிகள் ரத்த அழுத்த அளவையும் இயல்பானதாக வைத்துக் கொள்வது அவசியம்.
    எளிய சிறுநீர் பரிசோதனை மூலம் (மைக்ரோ அல்புமின் யூரியா சோதனை) சர்க்கரை நோயினால் சிறுநீரகங்களில் பாதிப்பு ஆரம்பித்துள்ளதைக் கண்டுபிடித்து விட முடியும். மருந்து சிகிச்சை மூலமே சிறுநீரக செயலிழப்பை தடுக்க முடியும். தொடர்ந்து ரத்த சர்க்கரை அளவை நல்ல கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்வது அவசியம். கால் வீக்கம் ஏற்பட்டால் சிறுநீரக செயலிழப்பின் அறிகுறி எனலாம்.

    Subha... Believe in all that can be

    A miracle starts whenever you dream

    Believe and sing from your heart
    You'll see Your song will hold the key

    To Sucess...

  5. #5
    YOKI's Avatar
    YOKI is offline Minister's of Penmai
    Real Name
    Subha
    Gender
    Female
    Join Date
    Jun 2011
    Location
    Salem
    Posts
    2,805

    re: Diabetes

    இதய பாதிப்பு :
    உடலில் உள்ள கொழுப்பைப் பிரிக்கும் செயல்பாட்டிற்கு இன்சுலின் ஹார்மோன் உதவுகிறது. உடலில் இரத்த சர்க்கரை அளவு அதிமாக இருந்தால் கொழுப்பு பிரியாமல் கெட்ட கொழுப்பு சத்து (எல்டிஎல் கொலஸ்ட்ரால்) அதிகமாகி. இரத்தக் குழாய்களை அடைக்கும். இதற்கு ‘அதிரோஸ்கிளிரோசிஸ்’ என்று பெயர். இதனால் சீரான இரத்த ஓட்டம் பாதிக்கப்படும். இதய ரத்த குழாய்களிலும் இத்தகைய பாதிப்பும் ஏற்படும்.
    கட்டுப்பாடில்லாத சர்க்கரை நோய் காரணமாக, இதய நரம்புகள் பாதிக்கப்பட்டு வலி உணர்வைத் தெரிவிக்கும். ஆற்றலின் பாதிப்பு ஏற்படும். நோயாளியின் வயதைப் பொருத்து, ரத்த கொழுப்பு சத்து அளவுகள் அதிகமாக இருக்கும் நிலையில் இதயத்தைக் காக்கும் சிகிச்சையும் சேர்த்து செய்யப் படும்.

    Subha... Believe in all that can be

    A miracle starts whenever you dream

    Believe and sing from your heart
    You'll see Your song will hold the key

    To Sucess...

  6. #6
    YOKI's Avatar
    YOKI is offline Minister's of Penmai
    Real Name
    Subha
    Gender
    Female
    Join Date
    Jun 2011
    Location
    Salem
    Posts
    2,805

    re: Diabetes

    சரியான காலணி :
    ஒரு சிலருக்கு கால் விரல்களின் நுனிப் பாதத்தில் குத்தல் அல்லது எரிச்சல், பஞ்சு மெத்தையில் நடப்பது போன்ற உணர்வு ஆகிய அறிகுறிகள் இருக்கும். கால் நரம்பு, ரத்த குழாய் பாதிப்பு காரணமாக இத்தகைய அறிகுறிகள் தெரியலாம்.
    சார்க்கரை நோயாளிகளின் கால் நரம்பு ரத்தக்குழாயின் தன்மையை அறிய பரிசோதனைகள் உள்ளன. பாதத்தின் அழுத்தப் புள்ளிகளை ஆய்வு செய்து, எம்.சி.ஆர் (மைக்ரோ செல்லுலார் ரப்பர்) அல்லது எம்.சி.பி (மைக்ரோ செல்லுலார் பாலிமர்) சிறப்புக் காலணிகளை அணிவது நல்லது.

    Nishahameetha, Darra and senvi like this.
    Subha... Believe in all that can be

    A miracle starts whenever you dream

    Believe and sing from your heart
    You'll see Your song will hold the key

    To Sucess...

  7. #7
    YOKI's Avatar
    YOKI is offline Minister's of Penmai
    Real Name
    Subha
    Gender
    Female
    Join Date
    Jun 2011
    Location
    Salem
    Posts
    2,805

    re: Diabetes

    கட்டுப்படுத்தப்படாத சர்க்கரை நோயினால் கால் ரத்தக்குழாய்களில் அடைப்பு ஏற்படும்.
    சர்க்கரைநோயைக் கண்காணித்து மருத்துவ ஆலோசனை பெறுவது சர்க்கரை உள்ளவரின் குடும்பத்தினரின் ஒத்துழைப்போடு உணவுமுறை, உடற்பயிற்சிகளைக் கடைப்பிடிப்பது, மருந்துகளை சரியான அளவில் சரியான நேரத்தில் கொடுத்து விழிப்புடன் சர்க்கரையைக் கட்டுப்படுத்துவது ஆகியவை மிக முக்கியம்.
    சர்க்கரை நோய், இரத்தக் கொதிப்பு, இதய நோய் உள்ளவர்களுக்கு இரத்தக்குழாயின் நிலையைப் பொருத்து சிகிச்சையும் மாறுபடும். முன்பே பைபாஸ் அறுவை சிகிச்சை செய்தவர்கள், கொலஸ்ட்ரால் அதிகம் உள்ளவர்கள், கொலஸ்ட் ராலை கட்டுப்பாட்டில் வைத்திருப்பவர்கள் வாரத்தில் ஒரு நாள் கோழி வேகவைத்து சாப்பிடலாம்.

    Subha... Believe in all that can be

    A miracle starts whenever you dream

    Believe and sing from your heart
    You'll see Your song will hold the key

    To Sucess...

  8. #8
    YOKI's Avatar
    YOKI is offline Minister's of Penmai
    Real Name
    Subha
    Gender
    Female
    Join Date
    Jun 2011
    Location
    Salem
    Posts
    2,805

    re: Diabetes

    ரத்தக்குழாய் அடைப்பு ஏற்படக் காரணங்கள்:
    * வயது ஆக ஆக இரத்தக்குழாய் சுருங்கி அடைப்பு ஏற்படலாம்.
    * பாரம்பரியம்
    * பெண்களை விட ஆண்களுக்கு ரத்தக் குழாய் அடைபடும் வாய்ப்பு அதிகம்.
    * புகைப்பிடித்தல்
    * அதிக இரத்த அழுத்தம்
    * அதிக கொலஸ்ட்ரால்
    * சர்க்கரை கட்டுப்பாட்டில் இல்லாதது
    * உடல் பருமன்
    * அதிகமாக மது அருந்துதல்
    போன்ற காரணங்களில் இரண்டுக்கு மேல் இருந்தால் அவர்களுக்கு மாரடைப்பு ஏற்படுகின்ற வாய்ப்பு இருக்கலாம். இவர்கள் மாரடைப்பு தடுப்பு மருந்துகளைச் சாப்பிடுவது நல்லது.
    சர்க்கரை உள்ளவர்கள் வருடத்திற்கு ஒரு முறைவிழித்திரையில் பாதிப்பு உள்ளதா என்று பரிசோதனை செய்து கொள்வது அவசியம்.

    Subha... Believe in all that can be

    A miracle starts whenever you dream

    Believe and sing from your heart
    You'll see Your song will hold the key

    To Sucess...

  9. #9
    YOKI's Avatar
    YOKI is offline Minister's of Penmai
    Real Name
    Subha
    Gender
    Female
    Join Date
    Jun 2011
    Location
    Salem
    Posts
    2,805

    re: Diabetes

    உணவே மருந்து :
    நீரிழிவு நோய் சிகிச்சை முறையில் உணவு கட்டுப்பாடும் உடற்பயிற்சியும் மிக முக்கியம். இக் கட்டுப்பாட்டினை செய்யாமல் உயர்ந்த ஊசி மாத்திரை சாப்பிட்டாலும் பலன் குறைவாக இருக்கும்.
    அரிசி, கோதுமை, ராகி, பார்லி, மக்காச் சோளம் போன்ற அனைத்திலும் 70% மாவுச்சத்து உள்ளது. ஆகவே அவற்றை சரியான அளவில் உட்கொள்ளுதல் அவசியம்.
    கலோரி குறைவாக அதே சமயத்தில் புரதம் அதிகமாக உள்ள உணவினை எடுத்துக் கொள்ள வேண்டும். பயறு, பருப்பு போன்ற தாவரங் களிலிருந்து கிடைக்கின்ற நார்ச்சத்து தரமானவை யாகவும், சிறப்பானைவையாகவும் இருக்கும்.
    நார்ச்சத்து மிகுந்த உணவு நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்தி கொலஸ்டிராலைக் குறைப்பதால், இயற்கையான நார்ச்சத்துள்ள உளுந்து, கொண்டைக்கடலை, பச்சைப்பயறு போன்ற முழு தானியப் பயறுவகைகள் மற்றும் கீரை வகைகள் எடுத்துக் கொள்ள வேண்டும்.
    உணவில், கொழுப்பை குறைத்தால் இரத்தத்தில் கொலஸ்டிரால் அதிகமாவதையும் இரத்தக் குழாய்களில் அடைப்பு உண்டாவதையும் தடுக்கலாம். அந்த வகையில் சமையலுக்குப் பயன் படுத்தப்படுகின்ற எண்ணெய் மிக முக்கியம். தாவர எண்ணெய்களை குறைந்த அளவில் உபயோகிக்கலாம். ஆலிவ் எண்ணெய், நல்லெண்ணெய், சூரியகாந்தி எண்ணெய் போன்றவற்றை மாற்றி மாற்றி உபயோகித்தால் பலன் அதிகம்.
    விரதம் இருப்பதை கண்டிப்பாகக் கைவிட வேண்டும். விருந்தும் தவிர்க்கப்பட வேண்டும். உணவையும் பல வேளைகளாகப் பிரித்து சிறு சிறு இடைவெளிகளில் உண்ணுவது நலம். உணவில் கலோரி அளவை குறைத்துக் கொள்ள வேண்டும்.
    என்ன சாப்பிடுகின்றோம் என்பதைக் காட்டிலும் எவ்வளவு சாப்பிடுகின்றோம் என்பது தான் முக்கியம்.

    Subha... Believe in all that can be

    A miracle starts whenever you dream

    Believe and sing from your heart
    You'll see Your song will hold the key

    To Sucess...

  10. #10
    rubesh's Avatar
    rubesh is offline Citizen's of Penmai
    Gender
    Male
    Join Date
    Jan 2012
    Location
    Chennai
    Posts
    524

    re: Diabetes

    அனைவரும் அறிந்துகொள்ள வேண்டிய மிகவும் பயனுள்ள பதிவு...பெற்றோருக்கு நீரிழிவு நோய் இருந்தால் பிள்ளைகளுக்கும் அந்நோய் வருவதற்கான சாத்தியகூறுகள் உண்டு ....ஆனால் இதை மிக எளிதாக தவிர்க்க இயலும் .....சீரான உடற்பயிற்சியும் உணவு கட்டுப்பாடும் நீரிழிவு நோயை மட்டுமல்ல ...மற்ற நோயையும் கட்டுபடுத்தும்....

    YOKI, Thendral D. and senvi like this.

loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter