Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree145Likes

Human Brain


Discussions on "Human Brain" in "General Health Problems" forum.


  1. #11
    YOKI's Avatar
    YOKI is offline Minister's of Penmai
    Real Name
    Subha
    Gender
    Female
    Join Date
    Jun 2011
    Location
    Salem
    Posts
    2,805

    re: Human Brain

    வண்ணக்குருடு : (Color blindness)

    கண் திரையில் இருக்கும் நுட்பமான நரம்பு செல்கள் சுமார் 13 கோடி அவற்றை போட்டோ ரிஸப்டர் – ‘ஒளி வாங்கி செல்கள்’ என்பர். இவற்றில் 60 லட்சம் செல்கள் கோன் வடிவத்தில் இருப் பவை. வர்ணத்தை உணர்கின்றன!

    இவற்றில் பழுது ஏற்படும் போது (Color blindness) ஏற்படுகிறது. இவர்களுக்குப் பெரும்பாலும் கறுப்பு. வெள்ளைதான் தெரியும். வண்ணக் குருடு நிறைய பேருக்கு அவர்கள் அறியாமலேயே இருக்கிறது. அதிகமாக ஆண்களுக்கு இருக்கிறது.

    லட்சக்கணக்கான மக்கள் தங்களுக்கு அது இருப்பதை அறியாமலேயே வாழ்கிறார்கள். இந்தக் குறை வம்சாவளி வழியில் வருவது. இதற்கு சிகிச்சை இல்லை.

    Human Brain-genet.jpg


    Human Brain-cb.jpg



    Sponsored Links
    Last edited by Parasakthi; 22nd Feb 2012 at 10:36 AM.
    Subha... Believe in all that can be

    A miracle starts whenever you dream

    Believe and sing from your heart
    You'll see Your song will hold the key

    To Sucess...

  2. #12
    YOKI's Avatar
    YOKI is offline Minister's of Penmai
    Real Name
    Subha
    Gender
    Female
    Join Date
    Jun 2011
    Location
    Salem
    Posts
    2,805

    re: Human Brain

    மூளைப்புற்று
    மூளைப்புற்று என்பது செல்களின் கட்டுப் படுத்தப்படாத வளர்ச்சி. உடலின் மற்ற பாகங் களிலிருந்து வரும் புற்றுநோய் செல்களின் வளர்ச்சி. மூளைக்கு வரும் ரத்த செல்களிலிருந்து பெரும்பாலும் புற்று செல்கள் வளர்கின்றன. அரிதாகத்தான் நியூரான்களில் புற்று ஏற்படுகிறது. இதனால் தலைவலி, பார்வை மழுப்பல், குமட்டல், வாந்தி வரும். வாசனை, பேச்சு, தொடுகை உணர்வு இவற்றையும் பாதிக்கும். ஒரு பக்கம் வாதம் வரலாம். நினைவு பாதிக்கப்படும். வலிப்பு வரும்.


    Human Brain-imagesbt.jpg

    Subha... Believe in all that can be

    A miracle starts whenever you dream

    Believe and sing from your heart
    You'll see Your song will hold the key

    To Sucess...

  3. #13
    YOKI's Avatar
    YOKI is offline Minister's of Penmai
    Real Name
    Subha
    Gender
    Female
    Join Date
    Jun 2011
    Location
    Salem
    Posts
    2,805

    re: Human Brain

    மூளைக்கு உணவு என்பது ரத்தத்தில் உள்ள ஆக்ஸிஜன்தான். சைவமோ, அசைவமோ கடைசியில் ரத்தமாக மாறித்தான் மூளைக்குச் செல்கிறது.

    * நம் மூளையின் செயல்கள் 90 நிமிட சுழற்சியில் இயங்குகின்றன. அதாவது 90 நிமிடத்துக்கு ஒருமுறை மனநிலை மாறுகிறோம். நாடித்துடிப்பு, ரத்த அழுத்தம், சர்க்கரை, உடல் வெப்பம், சுரப்பிகள், என்ஸைம் அளவுகள் என 40க்கும் மேற்பட்ட செயல்பாடுகள் தினப்படி உயர்ந்து தணிகின்றன. இதை சர்க்கேடியான் ரிதம் என்பர். சர்க்கேடியன் என்றால் தினசரி தினப்படி.

    * மூளைக்கு வலி கிடையாது. அது உணரும் வலியெல்லாம் உடலின் மற்றபாகங்களிலிந்து வரும் நரம்புகளிலிருந்து வரும் செய்திகள் மூலம்தான்.

    * மனம் என்பது மூளையின் ஒட்டுமொத்தமான இயக்கம். அதன் நூறு பில்லியன் நியூரான்களின் பிரத்தியோக இணைப்பே மனம்.

    * செக்ஸ் உணர்ச்சிகளுக்கு ஹைப்போதலாமஸ் தான் காரணம்.

    * என்டார்ஃபின், டோபமின், போன்ற ரசாயனப் பொருள்கள் மூளையில் செய்யும் மாற்றங்களே காதல் உணர்ச்சி.

    Last edited by Parasakthi; 22nd Feb 2012 at 10:38 AM.
    Subha... Believe in all that can be

    A miracle starts whenever you dream

    Believe and sing from your heart
    You'll see Your song will hold the key

    To Sucess...

  4. #14
    YOKI's Avatar
    YOKI is offline Minister's of Penmai
    Real Name
    Subha
    Gender
    Female
    Join Date
    Jun 2011
    Location
    Salem
    Posts
    2,805

    re: Human Brain

    நரம்புகளில் இரண்டு வகை :

    * சுமார் ஒன்றரை அடி (46 சென்டி மீட்டர்) நீளமுள்ள தண்டுவடம் மூளையின் அடி பாகத்திலிருந்து ஆரம்பித்துக் கீழே இறங்குகிறது. இது முதுகெலும்புக்குள் பத்திரமாக வைக்கப்பட்டிருக்கிறது. இதிலிருந்து ஆங்காங்கே கிளைகள் போல நரம்புகள் பிரிந்து உடம்பின் சகல பாகங் களுக்கும் போகிறது.

    முதுகெலும்பின் உள்ளே இருப்பதால் இதற்கு மிகுந்த பாதுகாப்பு, மேலும் மூளைக்கு இருப்பது போல இதற்கும் மூன்று வகை மெனின்ஜிஸ் என்ற பத்திரமான போர்வைகள் உள்ளன. முதுகெலும்பின் முழு நீளத்திற்கும் தண்டுவடம் இருப்பதில்லை. அதனால் அதிலிருந்து வெளிப்படும் முப்பத்தொரு ஜோடி நரம்புகள் முதலில் ஆங்கங்கே பிரிந்து கடைசியில் குதிரைவால் போல் தென்படும்.

    * இந்த முப்பத்தொன்றில் எட்டு ஜோடி – தொண்டை, மார்பு, கைகளைக் கவனித்துக் கொள்கின்றன. பன்னிரண்டு ஜோடி – உடலின் மைய பாகத்துக்கும், ஐந்து ஜோடி – கால்களுக்கும் மற்றோர் ஐந்துஜோடி – சிறுநீர்ப்பை இன உறுப்பு ஆசனவாய் போன்றவற்றைக் கவனிக்கும்.


    Human Brain-sc.jpg


    Human Brain-sc1.jpg


    Last edited by Parasakthi; 22nd Feb 2012 at 10:40 AM.
    Subha... Believe in all that can be

    A miracle starts whenever you dream

    Believe and sing from your heart
    You'll see Your song will hold the key

    To Sucess...

  5. #15
    myworld's Avatar
    myworld is offline Registered User
    Blogger
    Minister's of Penmai
    Gender
    Female
    Join Date
    Nov 2011
    Location
    Tirunelveli
    Posts
    3,181
    Blog Entries
    3

    re: Human Brain

    Yoki... very very intresting informations about human brain ma..
    evlo vishayangal irukku indha chinna size brainla... its really amazing...
    thanks for sharing this informative post dear.. :-)

    Anitha

    "Necessity is the mother of invention"

  6. #16
    YOKI's Avatar
    YOKI is offline Minister's of Penmai
    Real Name
    Subha
    Gender
    Female
    Join Date
    Jun 2011
    Location
    Salem
    Posts
    2,805

    re: Human Brain

    மூளையிலிருந்து 12 ஜோடி ‘க்ரேனியல்’ நரம்புகள் தலையின் முழுமைக்கும் செல்கின்றன.

    * நரம்புகளில் இரண்டு பிரிவுகள் உண்டு. சோமாட்டிக், ஆட்டனாமிக் என்பன. உடலில் நாம் விரும்பும் மற்றும் தன்னிச்சையான அசைவுகளுக்கு இவை பயன் படுகின்றன.

    * மூக்கு, சருமம், விரல்கள், கண்கள், காதுகள் போன்ற புலன்களிலிருந்து வரும் செய்திகளை உள்ளே செலுத்தும் நரம்புகளை உணர்வு நரம்புகள் என்று சொல்வர். மூளை தீர்மானித்து இடும் தசைக் கட்டளைகளை நிறைவேற்ற மோட்டார் நரம்புகள் பயன்படும்.

    * ஆட்டானாமஸ் நரம்புகள், நம் உடலில் பல காரியங்களை நம்மை அறியாமல் கட்டுப்படுத்துவது. சுரப்பிகள், சுவாசப்பைகள், இதயம், கண்களின் கண்மணி போன்றவை. நாம் நினைத்துச் செயல்பட முடியாது. தானாகவே இயங்கித்தான் ஆகவேண்டும்.

    * இதில் ‘பாராசிம்பதட்டிக் மற்றும் சிம்பதடிக்’ பிரிவு என இருவகை உண்டு.

    * நியூரான்களில் முக்கியமாக மூன்று வகை உண்டு, சென்சரி, மோட்டார், இண்டர் என்பன அவை. சென்சரி என்பது செய்திகளை உள்ளே கொண்டு வருவது. மோட்டார் என்பது தசை நார்களைக் கட்டுப்படுத்துவது, இண்டர் என்பது அவற்றை இணைப்பதற்கான இடைப்பட்ட நியூரான்கள்.

    Last edited by Parasakthi; 22nd Feb 2012 at 10:40 AM.
    Subha... Believe in all that can be

    A miracle starts whenever you dream

    Believe and sing from your heart
    You'll see Your song will hold the key

    To Sucess...

  7. #17
    YOKI's Avatar
    YOKI is offline Minister's of Penmai
    Real Name
    Subha
    Gender
    Female
    Join Date
    Jun 2011
    Location
    Salem
    Posts
    2,805

    re: Human Brain

    ஆபத்து வேலைகளில் ஏற்படும் மாற்றங்கள் :

    அளவிற்கதிகமான கார்டிசால், உயிருக்கு ஆபத்தான சமயங்களில் அளவிற்கதிகமான கார்டிசால், அட்ரீனலின் மற்றும் நார் அட்ரீனலின் சுரந்து இரத்தத்தின் மூலமாக உடல் முழுவதும் பரவி விடும். இதனால் இதயம் அதிக வேகமாக துடிக்கிறது.

    தோலுக்கும் ஜீரணத்துக்கும் செல்லும் ரத்தக் குழாய்கள் சுருங்குகின்றன. அதிகமான பிராண வாயுத் தேவைக்கு சுவாசக் குழாய்கள் விரிவடைகின்றன. தசை நார்கள் இறுகுகின்றன. சிறுநீர் தற்காலிகமாக நின்று போய் விடும். நாக்கு உலர்கிறது. உடல் வியர்க்கிறது. ரோமக் கால்கள் சிலிர்த்து முடி செங்குத்தாக நிற்கும்.

    Last edited by Parasakthi; 22nd Feb 2012 at 10:41 AM.
    Subha... Believe in all that can be

    A miracle starts whenever you dream

    Believe and sing from your heart
    You'll see Your song will hold the key

    To Sucess...

  8. #18
    YOKI's Avatar
    YOKI is offline Minister's of Penmai
    Real Name
    Subha
    Gender
    Female
    Join Date
    Jun 2011
    Location
    Salem
    Posts
    2,805

    re: Human Brain

    சராசரி மனிதனின் வாழ்நாளில் மூன்றில் ஒரு பகுதி தூக்கம்தான். இரவு வந்ததும் கண்களிலிருந்து பினியல் சுரப்பிக்குச் செய்தி உடனே சென்று ‘மெலடோனின்’ என்கிற ஹார்மோனை சுரக்கிறது. உடனே மூளையின் மின் நடவடிக்கைகள் அணைக்கப் படுகின்றன.

    * உறக்கத்தின் முதல் கட்டத்தில், தூக்கமும், விழிப்பும் மாறி மாறி வருகின்றன. இரண்டாம் கட்டத்தில், கண்கள் பக்கவாட்டில் மெள்ள உருள் கின்றன. கொஞ்சம் சத்தம் கேட்டாலும் விழித்து விடுவோம்.

    மூன்றாம் கட்டத்தில் ஆழ்ந்த தூக்கம். நான்காம் கட்டம் துவங்க அதன் பின் மீண்டும் மூன்றாம் கட்டம் இரண்டாம் கட்டம் என வேகக் கண் சலனத் தூக்கம், இப்படி ஒவ்வொரு தூக்கப் பகுதியும் சுமார் தொண்ணூறு நிமிடங்கள். ஒவ்வொரு ராத்திரியும் இந்த மாதிரி நான்கு அல்லது ஐந்து முறை.

    Human Brain-imagesbb.jpg


    Last edited by Parasakthi; 22nd Feb 2012 at 10:41 AM.
    Subha... Believe in all that can be

    A miracle starts whenever you dream

    Believe and sing from your heart
    You'll see Your song will hold the key

    To Sucess...

  9. #19
    YOKI's Avatar
    YOKI is offline Minister's of Penmai
    Real Name
    Subha
    Gender
    Female
    Join Date
    Jun 2011
    Location
    Salem
    Posts
    2,805

    re: Human Brain

    பருவ வயது வரும் வரை, ஆண், பெண் உடல் அமைப்பில் அதிக வித்தியாசமில்லை. அதன் பின்னர் தான் மாறுதல் தெரிகிறது. இதற்கெல் லாம் ஆண் பெண் ஹார்மோன்கள் மூளையில் ஏற்படுத்தும் ரசாயன மாற்றம் தான் காரணம்.

    * நம் எல்லோருக்குமே இரட்டை குணம் இருக்கிறது. நம் மூளையிலும் இந்த இரட்டைத் தன்மை இருக்கிறது. மூளை தெளிவாக வலது, இடது பகுதியாகப் பிரிந்திருக்கிறது. இவற்றை வலது இடது ஹெமிஸ்ஃபியர் – அரைக் கோளங்கள் என்பர். இந்த இரு பாதிகளையும் கார்பஸ் கலோசம் என்கிறதண்டு இணைக்கிறது.

    * வலப்பக்க செய்திகள் மூளையின் இடது பாதிக்கும். இடப்பக்க செய்திகள் வலது பாதிக்கும் மாறிவிடுகின்றன. நம்மில் பெரும்பாலானவர்கள் வலது கைக்காரர்களாக இருப்பதற்குக் காரணம் நம் மூளையின் இடது பாதியின் அதிகப் படியான தாக்கத்தில்தான். இடது பாதிதான் பேச, எழுத, கணக்கிட, தர்க்கரீதியில் சிந்திக்க உதவுகிறது.

    Human Brain-indexb.jpg

    Last edited by Parasakthi; 22nd Feb 2012 at 10:41 AM.
    Subha... Believe in all that can be

    A miracle starts whenever you dream

    Believe and sing from your heart
    You'll see Your song will hold the key

    To Sucess...

  10. #20
    YOKI's Avatar
    YOKI is offline Minister's of Penmai
    Real Name
    Subha
    Gender
    Female
    Join Date
    Jun 2011
    Location
    Salem
    Posts
    2,805

    re: Human Brain

    Quote Originally Posted by myworld View Post
    Yoki... very very intresting informations about human brain ma..
    evlo vishayangal irukku indha chinna size brainla... its really amazing...
    thanks for sharing this informative post dear.. :-)
    S Dear...
    Amazing na...?
    still its unpredictable ma...
    dankz thala...

    myworld likes this.
    Subha... Believe in all that can be

    A miracle starts whenever you dream

    Believe and sing from your heart
    You'll see Your song will hold the key

    To Sucess...

loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter