Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine December! | All Issues

User Tag List

Like Tree13Likes

Thyroid


Discussions on "Thyroid" in "General Health Problems" forum.


  1. #1
    YOKI's Avatar
    YOKI is offline Minister's of Penmai
    Real Name
    Subha
    Gender
    Female
    Join Date
    Jun 2011
    Location
    Salem
    Posts
    2,805

    Thyroid

    தைராய்டு

    தைராய்டு ஒரு முக்கியமான நாளமில்லா சுரப்பி. கழுத்தின் முன்பகுதியில் உள்ளது. குரல்வளையின் கீழ்ப்பகுதியில் காற்றுக் குழாயின் முன்பாக, ஒட்டினாற்போல அமைந்துள்ளது. பட்டாம்பூச்சி வடிவம். இரண்டு பக்கமும் இரண்டு பெரிய பகுதிகள். (பட்டாம்பூச்சி இறக்கைபோல) இவை இரண்டையும் இணைப்பது போல் நடுவில் ஒரு குறுக்குப்பகுதி இஸ்துமஸ் என்று பெயர்.

    Thyroid-thy1.jpg

    தைராய்டைச் சுற்றி இரண்டு உறைகள் இருக்கின்றன. ஒன்று சொந்த உறை. இதற்கு உண்மை உறைஎன்று பெயர். இதற்கு வெளியே சுற்றியுள்ள இணைப்புத் திசு கெட்டியாகி ஒரு உறை போன்ற அமைப்பை உருவாக்கியிருக்கும். இதற்குப் பொய்யுறை என்று பெயர். உள்ளமைப்பில் ஃபாலிக்கிள்ஸ் என்னும் பகுதிகள் உள்ளன. இவற்றிலுள்ள அணுக்கள்தான் தைராக்ஸின் மற்றும் ட்ரைஅயடோ தைரோனின் என்னும் ஹார்மோன்களைச் சுரக்கின்றன.
    ஃபாலிக்கிள்களின் ஒரங்களில் உள்ள சிறப்பு அணுக்களை பாராஃபாலிக்குலர் அணுக்கள் என்பர். இவற்றின் சுரப்பு கால்சிடோனின் ஆகும். உடலின் எல்லாப் பகுதிகளின் மீதும் தைராய்டு சுரப்புகள் பணியாற்றுகின்றன.

    Thyroid-thyroid-2.jpg

    Similar Threads:

    Sponsored Links
    Subha... Believe in all that can be

    A miracle starts whenever you dream

    Believe and sing from your heart
    You'll see Your song will hold the key

    To Sucess...

  2. #2
    YOKI's Avatar
    YOKI is offline Minister's of Penmai
    Real Name
    Subha
    Gender
    Female
    Join Date
    Jun 2011
    Location
    Salem
    Posts
    2,805

    Re: Thyroid

    இளம் வயதில், உடலின் வளர்ச்சியை இவை தூண்டுகின்றன. உடலின் எல்லாப் பகுதிகளிலும் நடைபெறும் வளர்சிதை மாற்றத்தைச் சீராக வைக்கின்றன. இந்த வளர்சிதை மாற்றங்களால்தான். அந்தந்தத் திசுக்கள் தங்களுக்கு வேண்டிய ஊட்டச்சத்துக்களைப் பெற்று வளர்ந்து சரியாகப் பணி செய்ய முடிகிறது.
    *அணுக்களின் புரத உற்பத்தி, அணுக்கள் வளர்ச்சியடைதல், அணுக்கள் முதிர்ச்சியடைதல், சரியாகப் பசியெடுத்தல், உணவு உட்கொள்ளல், உணவு செரிமானம் அடைதல், உடலில் சேர்ந்த ஊட்டச்சத்துக்கள் உடலின் எல்லா பகுதிகளையும் சேர்தல் போன்ற பணிகளிலும் தைராய்டு ஹார்மோன்களின் பங்கு முக்கியம்.

    senvi likes this.
    Subha... Believe in all that can be

    A miracle starts whenever you dream

    Believe and sing from your heart
    You'll see Your song will hold the key

    To Sucess...

  3. #3
    YOKI's Avatar
    YOKI is offline Minister's of Penmai
    Real Name
    Subha
    Gender
    Female
    Join Date
    Jun 2011
    Location
    Salem
    Posts
    2,805

    Re: Thyroid

    தைராய்டு ஹார்மோன்கள், திசுக்களின், ஆக்ஸிஜன் பயன்பாட்டையும் வெப்ப உற்பத்தியையும் அதிகப்படுத்துகின்றன. இதனால் உடலின் சராசரி வெப்பம் சரியாக இருப்பதற்கும் தட்ப வெப்பச் சூழல்கள் மாறும்போது, அதற்கேற்ப உடல் தன்னைச் சரி செய்து கொள்வதற்கும் இவை தேவை.
    *உணவிலுள்ள கொழுப்புப் பொருட்களையும் மாவுப் பொருட்களையும் செரிக்கவும் அவற்றின் வளர்சிதை மாற்றங்களைச் சரியாக வைக்கவும் இந்த ஹார்மோன்கள் உதவுகின்றன
    *நரம்புத் திசு மற்றும் எலும்புகளின் வளர்ச்சியில் இவற்றின் பங்களிப்பு இன்றியமையாதது. கரு வளரும் காலத்திலும் குழந்தைப் பருவத்திலும் இந்த ஹார்மோன்கள் குறைந்தால் அதன் வளர்ச்சிக் குன்றுவதும், குள்ளத்தன்மையும் மனவளர்ச்சிக் குறைபாடும் ஏற்படும். அதிகமாக தைராய்டு சுரந்தால் தைரோடாக்ஸிகோசிஸ் என்று பெயர். தைராய்டு குறைவாகச் சுரந்தால் ஹைபோதைராடிஸம் என்று பெயர். இதனால் ஏற்படும் கோளாறு மிக்ஸடிமா எனப்படும்.

    senvi likes this.
    Subha... Believe in all that can be

    A miracle starts whenever you dream

    Believe and sing from your heart
    You'll see Your song will hold the key

    To Sucess...

  4. #4
    Kousalya bala's Avatar
    Kousalya bala is offline Commander's of Penmai
    Gender
    Female
    Join Date
    Aug 2011
    Location
    USA
    Posts
    1,050

    Re: Thyroid

    Hi kanna,
    Summa kalakkara pa. thanks for this useful post.

    YOKI likes this.

  5. #5
    YOKI's Avatar
    YOKI is offline Minister's of Penmai
    Real Name
    Subha
    Gender
    Female
    Join Date
    Jun 2011
    Location
    Salem
    Posts
    2,805

    Re: Thyroid

    தைராய்டு சுரப்பி வீங்கிக் கொள்வது ‘காய்டர்’ (Goitre) என்று அழைக்கப்படும் தைராய்டு வீங்கினால், பக்கத்திலுள்ள மற்றஉறுப்புகளையும் பாதிக்கும்.

    Thyroid-thy3.jpg

    தைராய்டு வீங்கினால் அதன் பின்னுள்ள காற்றுக்குழாயை அழுத்தி மூச்சுத் திணறல் ஏற்படலாம்.
    கரோடிட் தமனியை அழுத்தினால், தலைப் பகுதிக்கும் மூளைக்கும் செல்லும் ரத்தம் குறையும் காற்றுக் குழாய்க்கும் உணவுக் குழாய்க்கும் அருகாமையிலுள்ள குரல்வளைக்குச் செல்லும் நரம்பு உள்ளது. இது அழுத்தமுற்றால் குரல் கம்மிப் போகும்.
    தைராய்டு மிகவும் வீக்கமுறும் நிலையில் உணவுக் குழாயும் அழுத்தப்பட்டு உணவு விழுங்குதலிலும் சிக்கல் ஏற்படும்.
    *’காய்டர்’ என்னும் தைராய்டு வீக்கம் ஏற்பட்டால் முன்கழுத்தில் பட்டாம்பூச்சி போல் ஒரு வீக்கம் ஏற்படும். அதற்கு முன்கழுத்துக் கழலை என்று பெயர்.
    எச்சிலை விழுங்கினால் தைராய்டு வீக்கம் மேலிருந்து கீழாக அசையும்.

    senvi likes this.
    Subha... Believe in all that can be

    A miracle starts whenever you dream

    Believe and sing from your heart
    You'll see Your song will hold the key

    To Sucess...

  6. #6
    YOKI's Avatar
    YOKI is offline Minister's of Penmai
    Real Name
    Subha
    Gender
    Female
    Join Date
    Jun 2011
    Location
    Salem
    Posts
    2,805

    Re: Thyroid

    பாராதைராய்டு சுரப்பிகள்
    *மஞ்சள் கலந்த மர நிறத்தில் சிறிய நிலக்கடலை போல் இருக்கும். தைராய்டு சுரப்பியில் பின்பக்கத்தில் அதனோடு ஒட்டினாற்போல் இரண்டு வகையான அணுக்கள் உள்ளன. சிறிய வடிவில் நிறைய இருக்கும் சீஃப் அணுக்கள், பெரிய அளவுகொண்ட இங்கொன்றும் அங்கொன்றுமான ஆக்ஸிஃபில் அணுக்கள்.
    சீஃப் அணுக்கள்தான் பாராதைராய்டு சுரப்பியின் ஹார்மோனான பாராதார்மோனைச் சுரக்கின்றன.
    பாராதார்மோன் குறைவானால் ரத்தத்தில் உள்ள கால்சியம் குறைந்து அதனால் நரம்புகளும் தசைகளும் செயல்படுவது குறைந்து போகும்.

    Thyroid-thy4.jpg

    Subha... Believe in all that can be

    A miracle starts whenever you dream

    Believe and sing from your heart
    You'll see Your song will hold the key

    To Sucess...

  7. #7
    YOKI's Avatar
    YOKI is offline Minister's of Penmai
    Real Name
    Subha
    Gender
    Female
    Join Date
    Jun 2011
    Location
    Salem
    Posts
    2,805

    Re: Thyroid

    தைராய்டு சுரப்பியை அதிகமாக சுரக்கச் செய்கின்றஎதிர்ப்பு பொருள் உண்டாகி அதனால் தைராய்டு ஹார்மோனை அதிகமாக்குகிறது. அதைத் தொடர்ந்து சிலருக்கு கட்டி ஏற்படும்

    தைராய்டு கட்டியை அறுவை சிகிச்சை செய்யாவிடில் கட்டி பெரிதாகும், இரத்தக் கசிவு ஏற்படும்.
    புற்றுநோயாக மாறலாம்.
    தைராய்டு புற்றுநோயில் மூச்சுக்குழல் அழுத்தப்படலாம். அல்லது மார்புக்கூட்டுக்குள் வளர்ந்து சுவாச பாதிப்பு ஏற்படும்.

    senvi likes this.
    Subha... Believe in all that can be

    A miracle starts whenever you dream

    Believe and sing from your heart
    You'll see Your song will hold the key

    To Sucess...

  8. #8
    YOKI's Avatar
    YOKI is offline Minister's of Penmai
    Real Name
    Subha
    Gender
    Female
    Join Date
    Jun 2011
    Location
    Salem
    Posts
    2,805

    Re: Thyroid

    தைராய்டு பரிசோதனைகள்:
    1. தைராய்டு ஹார்மோன் .அளவுகள்

    Thyroid-thy-horm.jpg
    2. தைராய்டு ஸ்கேன் (US scan)

    Thyroid-thyyusg.jpg
    3. FNAC பரிசோதனை

    Thyroid-thy-fnac.jpg
    4. ரேடியோ அயோடின் பரிசோதனை.

    Thyroid-thy2.jpg

    senvi likes this.
    Subha... Believe in all that can be

    A miracle starts whenever you dream

    Believe and sing from your heart
    You'll see Your song will hold the key

    To Sucess...

  9. #9
    YOKI's Avatar
    YOKI is offline Minister's of Penmai
    Real Name
    Subha
    Gender
    Female
    Join Date
    Jun 2011
    Location
    Salem
    Posts
    2,805

    Re: Thyroid

    பெண்களுக்கு ஏன் தைராய்டு நோய் அதிகமாக உண்டாகிறது?
    மாதவிலக்கு மற்றும் கர்ப்பத்தின் போது அதிகமான அளவு தைராய்டு ஹார்மோன் தேவைப்படுகிறது. அதனால் தைராய்டு செல்கள் அதிகமாக செயல்பட்டு அதிக அயோடின் சத்தை உறிஞ்சுகின்றன.
    அதைத் தொடர்ந்து தைராய்டு செல்கள் பெரிதாகின்றன. அதனால் தைராய்டு சுரப்பியும் வீங்கி விடுகிறது.
    இம்மாற்றங்கள் மாதவிலக்கு மற்றும் கர்ப்பம் முடிந்ததும் இயல்பான நிலைக்கு தைராய்டு மாறி, வீக்கம் குறைந்து, இயல்பாக செயல்படும். ஒரு சிலருக்கு தைராய்டு சுரப்பியின் ஒரு சில பகுதி இயல்புநிலைக்கு மாறாமல் அதிகமாக செயல்பட்டு அப்பகுதியில் மட்டும் வீக்கம், செல்கள் அழிதல், இரத்தக் கசிவு போன்றகாரணங்களால் கட்டியாகிறது. அதைப்போலவே தைராய்டு சுரப்பியின் பிற இடங்களிலும் மாற்றங்கள் ஏற்பட்டு பல கட்டிகள் உண்டாகி, தைராய்டு சுரப்பி மிகப் பெரியதாக வீங்கி விடுகிறது.

    senvi likes this.
    Subha... Believe in all that can be

    A miracle starts whenever you dream

    Believe and sing from your heart
    You'll see Your song will hold the key

    To Sucess...

  10. #10
    YOKI's Avatar
    YOKI is offline Minister's of Penmai
    Real Name
    Subha
    Gender
    Female
    Join Date
    Jun 2011
    Location
    Salem
    Posts
    2,805

    Re: Thyroid

    தைராய்டு அதிகமாக சுரப்பதன் அறிகுறிகள்:

    * கண் சிவந்து விடுதல்
    * கழுத்தின் முன்புறம் வீக்கம்
    * கண்ணீர் கசிதல்
    * கண் பிதுங்கி இருத்தல்

    Thyroid-hypert.jpg
    * பொருள் இரட்டையாக தெரிதல்
    * கை கால்கள் நடுங்குதல்
    * பார்வை மங்குதல்
    * உடல் பலவீனம்
    * ஆண்களுக்கு மார்பு பருத்து விடுதல்
    * படபடப்பு
    * அதிக தாகம்
    * அதிக பசி அல்லது சாப்பிட இயலாமை
    * எலும்பு மெலிவு
    * எடை குறைவு
    * கணுக்கால் வீக்கம்
    * வயிற்றுப்போக்கு
    * ஆஸ்துமா அதிகமாகுதல்
    * முன்கோபம், எளிதில் உணர்ச்சி வயப்படுதல்
    * தோலில் அரிப்பு
    * உடல் அதிகமாக வியர்த்தல்
    * தோலில் புள்ளிகள்
    * வெயிலை தாங்க முடியாமை
    * விரல் நுனி தடித்து விடுதல்
    * பெண்களுக்கு மாதவிடாய் நின்று விடுதல்
    * மலட்டுத் தன்மை
    * ஆண்மைக் குறைவு
    * மூச்சிரைத்தல்
    * உடலுறவில் விருப்பமின்மை
    * நெஞ்சுவலி

    senvi likes this.
    Subha... Believe in all that can be

    A miracle starts whenever you dream

    Believe and sing from your heart
    You'll see Your song will hold the key

    To Sucess...

loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter