சூப்பர் பாக்டீரியா

தாரண நிலையில் இருந்த பல்வகையான பாக்டீரியாக்கள், அதிக நச்சுத்தன்மை உடைய அதிக பலம் கொண்ட சூப்பர் பாக்டீரியாக்களாக மாறி மனித குலத்தை அச்சுறுத்தி வருகின்றன.
உலக அளவில் எதிர் உயிரினி (Antibiotic) மருந்துகளை எவ்வகையான கட்டுப்பாடும் இல்லாமல் மனம் போன போக்கில் தவறாக பயன்படுத்தியதன் விளைவாக சாதாரண எதிர் உயிரினி மருந்துகளுக்கு கட்டுப்படும் பலவகையான பாக்டீரியாக்கள் தங்கள் மென்தன்மையை இழந்து கொடிய பாக்டீரியாக்களாக செயல் வடிவம் பெற்று, மனித குலத்தை அச்சுறுத்தும் சூப்பர் பாக்டீரியாக்களாக மாறி 21-ம் நூற்றாண்டில் உலக மக்களை அச்சுறுத்திக் கொண்டிருக்கின்றன.
மருந்துகளை எவ்வகையான கட்டுப்பாடும் இல்லாமல், சாதாரண மக்கள், மருந்துகடைகளில் மருத்துவர்களின் பரிந்துரை இல்லாமல் கண்டபடி வாங்குவதை முதலில் தடை செய்ய வேண்டும்.
மருத்துவர்களின் பரிந்துரையின் பேரில் மட்டும் எதிர் உயிரினிகள், மருந்துகடைகளில் வழங்கப்பட வேண்டும்.
மருத்துவர்கள் நோயாளிகளுக்குப் பரிந்துரை செய்து எழுதிக்கொடுக்கும் எதிர் உயிரினின மருந்துகளை நோயாளிகளுக்கு முழுமையாக பயன் படுத்த வேண்டும். அவற்றை பாதியில் நிறுத்திவிட்டு தாங்களாகவே நலமாகிவிட்டது என்று தவறாக எண்ணினால் இத்தகைய மருந்துகள் பயனற்ற நிலையை அடையக்கூடும்.
சாதாரண நோய்களுக்கு மற்றவகை எளிமை யான மருந்துகள் இருக்கும்போது மருத்துவர்களை கட்டாயப்படுத்தி ஆற்றல் மிகுந்த எதிர் உயிரினி மருந்துகளைப் பெறக்கூடாது.
உடலின் நோய் தடுக்கும் ஆற்றலை இயற்கையாக அதிகரிக்க சத்துள்ள பலவகையான உணவுகளை உட்கொள்வது, காற்றோட்டமான வீடுகள், தூய்மையான குடிநீர், தூய்மையான கழிப்பறை வசதிகள் மற்றும் நோய் தடுக்கும் காப்பூசிகள் போன்றவற்றில் அதிக கவனம் செலுத்த வேண்டும்.

Similar Threads: