Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine December! | All Issues

User Tag List

Like Tree65Likes

Heart


Discussions on "Heart" in "General Health Problems" forum.


  1. #41
    YOKI's Avatar
    YOKI is offline Minister's of Penmai
    Real Name
    Subha
    Gender
    Female
    Join Date
    Jun 2011
    Location
    Salem
    Posts
    2,805

    Re: Heart

    நாள்பட்ட மிகு இரத்த அழுத்தம் இடது வெண்டிரிக்-கள் உடலுக்கு தேவையான அளவு இரத்தம் செலுத்த அதிக அளவில் சுருங்கி விரியும். இதனால் இதயத்தின் சதைகள் பருத்துவிடும். இதில் இடது வெண்டிரிக்கள் அதிக அளவு பெருத்து விடும் நிலை சில வருடங்களில் உண்டாகி விடும்.

    Heart-hypertensionlvh.jpeg

    இதனால் இதயச் செயல்பாடுகள் குறைந்து இதயம் செயலிழக்கத் துவங்கும். இதனால், நுரையீரல்களில் நீர்கோக்க (Pulmonary edema) துவங்கும்.

    Heart-hypertensionpul.jpeg

    அதனால் மூச்சிரைப்பு, மூச்சுத் திணறல் போன்றவை ஏற்பட்டு இறுதியில் இதயம் முழுமையாக செயல்பாட்டை நிறுத்திவிடும்.

    இதனால் மரணம் ஏற்படும்.

    இதயம் மிகு இரத்த அழுத்தத்தால் மேற்சொன்ன இரண்டு வகையில் பாதிக்கப்பட்டாலும், மாரடைப்பால் ஏற்படும் மரணம் எதிர்பாராமல் திடீரென்று ஏற்படும். இதயம் செயலிழப்பதால் ஏற்படும் மரணம் மெதுவாக நிகழும். ஆகையால் மிகு இரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைத்திருத்தல் அவசியமாகும்.


    Sponsored Links
    Nishahameetha likes this.
    Subha... Believe in all that can be

    A miracle starts whenever you dream

    Believe and sing from your heart
    You'll see Your song will hold the key

    To Sucess...

  2. #42
    YOKI's Avatar
    YOKI is offline Minister's of Penmai
    Real Name
    Subha
    Gender
    Female
    Join Date
    Jun 2011
    Location
    Salem
    Posts
    2,805

    Re: Heart

    இதயத்திலுள்ள சிறு சிறு ரத்த நாளங்களில் பழுது ஏற்பட்டால் ஆஞ்சியோ ப்ளாஸ்டி சர்ஜரியும்,

    Heart-angio.jpeg

    முக்கியமான ரத்தக் குழாயில் பழுது என்றால் பை பாஸ் சர்ஜரியும் செய்யப்படுகிறது. பை பாஸ் என்பது ரத்தக் குழாயின் அந்த பகுதிக்குப் பதிலாக மற்றொரு புது ரத்தப் பாதையை உருவாக்குவதாகும்.

    Heart-bypass.jpeg


    நோயாளியின் உடலிலிருந்து (கால் பகுதி) ரத்தக் குழாயை அங்கு வைத்து மாற்றுப் பாதையை அடைப்பதுதான் பை_பாஸ் சர்ஜரி.

    Heart-aeartbypass.jpeg


    பை பாஸ் சிகிச்சை அளிக்கப்பட்டவருக்கு மீண்டும் அப்பிரச்னை வருவது அரிது. ஆனால், ஆஞ்ஜியோ ப்ளாஸ்டியில் சுமார் இருபது சதவிகிதம் பேருக்குச் சரிசெய்யப்பட்ட இடத்தில் மீண்டும் அடைப்பு ஏற்பட வாய்ப்பு உண்டு. இதற்குக் காரணம் கொழுப்பு சத்தோடு ஸ்கார் திசுக்களும் சேர்ந்துதான் அந்த அடைப்புக்குக் காரணமாக இருந்திருக்கும்.

    Nishahameetha likes this.
    Subha... Believe in all that can be

    A miracle starts whenever you dream

    Believe and sing from your heart
    You'll see Your song will hold the key

    To Sucess...

  3. #43
    YOKI's Avatar
    YOKI is offline Minister's of Penmai
    Real Name
    Subha
    Gender
    Female
    Join Date
    Jun 2011
    Location
    Salem
    Posts
    2,805

    Re: Heart

    கொழுப்புச் சத்தை நீக்கினாலும் ஸ்கார் திசுக்கள் அங்கேயே இருக்க வாய்ப்புண்டு. மறுபடியும் அங்கு கொழுப்புச்சத்து சேரும் போது மீண்டும் அடைப்பு ஏற்படலாம். இதற்காக ஒரு ஸ்பெஷல் இரும்பினால் ஆன வலை ஒன்றை இந்த அடைப்பு இடத்தில் பொருத்தி விட்டால், ரத்தக்குழாய் சுருங்க வாய்ப்பு இல்லை. நாளடைவில் இந்த வலை உடலோடு ஒன்றிவிடும்.

    Heart-coronary-stenting.jpeg

    Nishahameetha likes this.
    Subha... Believe in all that can be

    A miracle starts whenever you dream

    Believe and sing from your heart
    You'll see Your song will hold the key

    To Sucess...

  4. #44
    YOKI's Avatar
    YOKI is offline Minister's of Penmai
    Real Name
    Subha
    Gender
    Female
    Join Date
    Jun 2011
    Location
    Salem
    Posts
    2,805

    Re: Heart

    மாரடைப்பு

    இருதைய தசைகள், உயிர்வாழ்வதற்கும் அதன் செயல்பாட்டிற்கும் தேவையான ஆக்ஸிஜனையும் ஊட்டச் சத்தினையும் இரத்தமூலம் பெறுகிறது. இருதயத்திற்கு இரத்தத்தினை எடுத்துச் செல்லும் இரத்தக்குழாய்களில் அடைப்பு ஏற்பட்டால் இதயத் தசைகள் இரத்தம் கிடைக்கப்பெறாமல் அப் பகுதி தசைகள் (இறந்து) இயங்க மறுக்கின்றன. அதனால் இதயத்தில் வலிப்பு ஏற்படுகின்றது. இதுவே மாரடைப்பு அல்லது Heart Attack என அழைக்கப்பெறுகின்றது.


    இரத்தக்குழாயில் அடைப்பு எப்படி ஏற்படுகிறது?
    இரத்தக்குழாயின் தசைச்சுவர் உள்ளிருந்து வெளியே மூன்று அடுக்குகளாக உள்ளது. இதில் முதல் இரண்டு அடுக்குகளுக்கும் இடையே, ஒருவர் பிறந்த ஓரிரு ஆண்டுகளிலேயே நூலாடை போல கொழுப்புச் சத்து (Fatty Streak) படிய ஆரம்பிக்கின்றது. காலப்போக்கில் சில காரணங்களால் அது வளர்ந்து கொழுப்பு படிவமாகி (Plaque) ரத்தத்தின் சீரான ஓட்டத்திற்கு தடைக்கற்களாக மாறுகிறது. ஒரு கட்டத்தில் இத்தடை மேட்டில் விரிசல் உருவாகி ரத்தக்குழாயினுள் வெடிக்கிறது. இதன் விளைவாக ரத்தத்தில் உள்ள சில அணுக்கள் இத்தடை மேட்டின் விரிசல் உள்ள பகுதியில் அமர்ந்து ரத்தத்தை உறைய வைத்து, ரத்தக்குழாயை முழுமையாக அடைத்துக் கொள்கிறது.







    Nishahameetha likes this.
    Subha... Believe in all that can be

    A miracle starts whenever you dream

    Believe and sing from your heart
    You'll see Your song will hold the key

    To Sucess...

  5. #45
    YOKI's Avatar
    YOKI is offline Minister's of Penmai
    Real Name
    Subha
    Gender
    Female
    Join Date
    Jun 2011
    Location
    Salem
    Posts
    2,805

    Re: Heart

    மாரடைப்பு வருவதற்கான காரணங்கள் என்ன?


    காரணங்கள் இரண்டு.
    * ஒன்று நம்மால் கட்டுப்படுத்த முடிந்தவை

    * மற்றொன்று நம் கட்டுப்பாட்டில் இல்லாதவை.

    மாரடைப்பு வருவதற்கான காரணிகள்
    * புகைப்பிடித்தல்

    * சர்க்கரை நோய்

    * உயர் இரத்த அழுத்தம்

    * அதிக உடல் பருமன் மற்றும் நன்மை செய்யும் கொழுப்பு (hdl) குறைவாக இருத்தல்

    * அதிக கொலஸ்ட்ரால்

    * உடல் உழைப்பு இல்லாமை

    * குடும்பத்தில் பலருக்கு தொன்றுதொட்டு மாரடைப்பு

    * மன அழுத்தம், அதீத கோபம் மற்றும் படபடப்பு

    * மரபியல் காரணிகள்.

    கட்டுப்படுத்த முடிந்த காரணங்கள்
    * புகை பிடித்தல்,
    * உயர் ரத்தஅழுத்தம்
    * உடலின் எடை

    * உடற்பயிற்சியின்மை
    * சர்க்கரை நோய்.

    கட்டுப்பாட்டில் இல்லாத காரணங்கள்
    * வயது * பரம்பரயாக வரும் மரபணுத்தன்மை.




    Attached Thumbnails Attached Thumbnails Heart-ha1.jpeg  
    Nishahameetha likes this.
    Subha... Believe in all that can be

    A miracle starts whenever you dream

    Believe and sing from your heart
    You'll see Your song will hold the key

    To Sucess...

  6. #46
    YOKI's Avatar
    YOKI is offline Minister's of Penmai
    Real Name
    Subha
    Gender
    Female
    Join Date
    Jun 2011
    Location
    Salem
    Posts
    2,805

    Re: Heart

    மாரடைப்பு
    நோயானது பல்வேறு விதமான அறிகுறிகளை உடையது. இதயத் தசைகள் இறந்து சிதைவுறுவதாலேயே மாரடைப்பு ஏற்படுகிறது.

    இதயத் தசைகளுக்குத் தேவையான ஆக்ஸிஜன் கிடைக்கப் பெறாததால் ஏற்படும் அறிகுறிகளாவன:

    நெஞ்சுப் பகுதியில் அழுத்தம் அதிகமாவது;
    அதிக வியர்வை;

    நெஞ்சு இறுக்கம்;
    மூச்சுத் திணறல்;
    இடது தோள்பட்டை கைகள், தாடை மற்றும் பற்களில்கூட வலி பரவுதல் போன்றவை.

    Heart-hart-attack.jpg



    ஆண்களுக்குப் பொதுவாக நெஞ்சுப் பகுதியில் அழுத்தம் அதிகமாவதுபோல் தோன்றும். பெண்களுக்கு
    மூச்சுத் திணறல், மேல்வயிறு எரிச்சல் தோன்றி வாந்தி, குமட்டலுடன் அதிக வியர்வை தோன்றக்கூடும்.

    அறிகுறிகளைத் தெரிந்து கொண்ட பிறகு மருத்துவப் பரிசோதனைகளைச் செய்து கொள்ளலாம். இதற்காக
    மருத்துவமனையில் தங்க வேண்டிய அவசியம் இல்லை.

    பரிசோதனைகளைச் செய்து கொள்வதன் மூலம் நோய் தீவிரமாவதைத் தடுக்கலாம்.

    எனவே நெஞ்சுவலிக்கு ஏராளமான காரணங்கள் உள்ள நிலையில், அதனை மாரடைப்பு என்று தவறாக நினைத்து வருந்தத் தேவையில்லை.

    Nishahameetha likes this.
    Subha... Believe in all that can be

    A miracle starts whenever you dream

    Believe and sing from your heart
    You'll see Your song will hold the key

    To Sucess...

  7. #47
    YOKI's Avatar
    YOKI is offline Minister's of Penmai
    Real Name
    Subha
    Gender
    Female
    Join Date
    Jun 2011
    Location
    Salem
    Posts
    2,805

    Re: Heart

    பொதுவான அறிகுறிகள்
    * நெஞ்சுவலியுடன் மூச்சுவிடுவதில் சிரமம் மற்றும் இறுக்கம்.

    * வியர்த்தல், குமட்டல் மற்றும் மயக்கம் வருவதுபோல் உணர்தல்.

    * மார்பின் முன்பகுதியிலோ அல்லது நெஞ்சுக்கூட்டின் பின்புறமோ வலி இருக்கலாம். இங்கிருந்து வலி கழுத்து அல்லது இடக்கைக்கு பரவலாம்.

    * வாந்தி, இருமல், படபடப்பு மற்றும் 20 நிமிடங்களுக்கு மேல் தொடரும் வலி.

    * தீவிர நிலையில், இரத்த அழுத்தம் குறைவதால் மாரடைப்பு ஏற்பட்டவரின் உடல் வெளுத்து இறப்பும் நேரலாம்.

    மாரடைப்பு வருவதற்கான எச்சரிக்கை அறிகுறி, ஒவ்வொரு நபருக்கும் வெவ்வேறு விதமாக இருக்கலாம். பொதுவாக மாரடைப்பு வரும் போது முதலில் மெதுவாக நெஞ்சுவலியுடனோ அல்லது நெஞ்சில் ஒருவித கனமான இறுக்கத்துடனோ துவங்கி, பின் அவ்வலியின் தன்மை படிப்படியாக அதிகரிக்கலாம்.

    சிலருக்கு இத்தகைய உணர்வுகள் ஏதுமின்றியும் வரலாம். இவர்களுக்கு மாரடைப்பு வந்திருப்பதே பின்னாளில் வேறொரு காரணத்திற்காக இ.சி.ஜி, அல்லது எக்கோ பரிசோதனை செய்யும் போது தான் தெரியவே வரும். இதற்கு “அமைதியான மாரடைப்பு’ என்று பெயர்.

    Nishahameetha likes this.
    Subha... Believe in all that can be

    A miracle starts whenever you dream

    Believe and sing from your heart
    You'll see Your song will hold the key

    To Sucess...

  8. #48
    YOKI's Avatar
    YOKI is offline Minister's of Penmai
    Real Name
    Subha
    Gender
    Female
    Join Date
    Jun 2011
    Location
    Salem
    Posts
    2,805

    Re: Heart

    நோயைக் கண்டறிவது எப்படி ?
    * மருத்துவர் இதயத்துடிப்பு மற்றும் இரத்த அழுத்தத்தினை பதிவு செய்வதோடு முந்தைய சிகிச்சை விவரங்களை விரிவாக பெற்றுக் கொள்வார்.

    * இதயத்தின் செயல்பாடுகளை மின்னணு வடிவில் பெற்றுத் தரும் இசிஜி ecg) எடுக்கப்படுகிறது..

    Heart-ha2ecg.jpeg



    * இசிஜி இதயத்துடிப்பின் வேகம் பற்றிய தகவலைத் தருகிறது. வழக்கத்திற்கு மாறான துடிப்புகள் உள்ளனவா என்றும் மாரடைப்பால் இதயத்தசைகளில் ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதா என்றும் இசிஜி மூலம் அறியலாம். ஆரம்ப நிலையில் இசிஜி சீராக இருப்பதால் மாரடைப்பிற்கான சாத்தியக்கூறுகள் இல்லை என கூற முடியாது என்பதை நினைவில் கொள்க.

    * இதயத்தசைகளில் பாதிப்பு உள்ளதா எனக் கண்டறிய இரத்த பரிசோதனைகள் உதவும்.

    * மார்புப்பகுதியில் எக்ஸ்ரே எடுக்கப்படலாம்.

    Heart-ha3xry.jpeg



    * எக்கோ-கார்டியோகிராம் என்பது இதயத்தின் செயல்பாடுகளை அறிய உதவும் புதிய ஸ்கேன் முறை

    Heart-ha4.jpeg



    Heart-ha4echo.jpeg



    * கரோனரி ஆஞ்ஜியோகிராம் என்ற பரிசோதனை கரோனரி இரத்தக்குழாய்களில் அடைப்பு உள்ளதா என உறுதியாக கணித்துக் கூறும்.

    Heart-ha5ca.jpeg

    Nishahameetha likes this.
    Subha... Believe in all that can be

    A miracle starts whenever you dream

    Believe and sing from your heart
    You'll see Your song will hold the key

    To Sucess...

  9. #49
    YOKI's Avatar
    YOKI is offline Minister's of Penmai
    Real Name
    Subha
    Gender
    Female
    Join Date
    Jun 2011
    Location
    Salem
    Posts
    2,805

    Re: Heart

    மாரடைப்பு வரும்போது கொடுக்கப்படவேண்டிய முதலுதவி
    மாரடைப்பிற்கு உரிய முறையில் சிகிச்சை அளித்தால் உயிரிழப்பைத் தவிர்கலாம்.

    * சிறந்த மருத்துவ உதவி கிடைக்கும் வரை , நோயாளியின் இறுக்கமான உடைகளைத் தளர்த்தி அவரை படுக்க வைத்திருக்க வேண்டும்..

    * ஆக்ஸிஜன் சிலிண்டர் இருந்தால் நோயாளிக்கு கட்டாயம் செயற்கை சுவாசம் கொடுக்க வேண்டும்.

    Heart-ha6.jpeg



    * நைட்ரோக்ளிசிரைன் அல்லது ஸார்பிட்ரேட் மாத்திரைகள் கிடைக்கப்பெற்றால் ஒன்றிரண்டு மாத்திரைகளை நோயாளியின் நாக்கின் அடியில் வைக்கவேண்டும்.

    * நீரில் கரைக்கப்பட்ட நிலையில் அஸ்பிரின் மாத்திரையைக் கொடுக்கலாம்.

    Nishahameetha likes this.
    Subha... Believe in all that can be

    A miracle starts whenever you dream

    Believe and sing from your heart
    You'll see Your song will hold the key

    To Sucess...

  10. #50
    YOKI's Avatar
    YOKI is offline Minister's of Penmai
    Real Name
    Subha
    Gender
    Female
    Join Date
    Jun 2011
    Location
    Salem
    Posts
    2,805

    Re: Heart

    சிகிச்சைகள்
    * மாரடைப்பு ஏற்பட்டால் உடனடி மருத்துவ கவனிப்பும், மருத்துவமனையில் சேர்க்கப்படுவதும் அவசியம்.
    * மாரடைப்பு ஏற்படும் ஆரம்பகால நிமிடங்களும், நேரங்களும் இக்கட்டானவை. முதலில் கரோனரி தமனி எனப்படும் இரத்தக்குழாய்களில் ஏற்பட்டுள்ள கட்டியைக் கரைக்கும் மருந்துகளைக் கொடுக்க வேண்டும்.

    * இதயத்துடிப்புகள் கண்காணிக்கப்பட்டு இயல்புக்கு மாறான துடிப்புகளுக்குரிய சிகிச்சை அளிக்கப்படுகிறது. வலி நீக்கும் மருந்துகளை நோயளிக்குக் கொடுத்து ஓய்வெடுக்க அறிவுறுத்தப்படுகிறார்.

    * இரத்த அழுத்தம் அதிகமாக இருக்கும்பட்சத்தில்,அதனைக்குறைக்கத் தகுந்த மருந்துகள் அளிக்கப்படுகின்றன.

    * நோயாளியின் வயது, மாரடைப்பின் தாக்கம், இதயம் பாதிக்கப்பட்டுள்ள அளவு மற்றும் இரத்தக்குழாய்களில் ஏற்பட்டுள்ள அடைப்பின் அளவு ஆகியவற்றைப் பொறுத்து நோயாளிக்கு அளிக்கப்படும் சிகிச்சை மாறுபடும்.

    * பல நேரங்களில் இரத்தக்குழாய்களில் ஏற்பட்டுள்ள அடைப்பினை நீக்க தெளிவான மற்றும் முறையான வழிமுறைகள் அவசியமாகின்றன. அவை கரோனரி ஆஞ்சியோப்ளாஸ்டி, பலூன்களைக்கொண்டு இரத்தக்குழாய்களை விரிவடையச்செய்தல் அல்லது கரோனரி பைபாஸ் அறுவை சிகிச்சை போன்ற முறைகளாக இருக்கலாம்.

    Nishahameetha likes this.
    Subha... Believe in all that can be

    A miracle starts whenever you dream

    Believe and sing from your heart
    You'll see Your song will hold the key

    To Sucess...

loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter