''வாயில் புண் ஏற்படுவதற்கு நிறையக் காரணங்கள் இருக்கலாம்.

வைட்டமின் பி-12 குறைபாடு,
இரும்புச் சத்துக் குறைபாடு,
வைரஸ் மற்றும் பாக்டீரியா தொற்று,
புகை பிடிக்கும் பழக்கம்,
வயிறு மற்றும் குடல் சம்பந்தப்பட்ட நோய்கள்,
கவலை மற்றும் மன அழுத்தம்

ஆகியவற்றால் வாய் மற்றும் நாக்கில் புண்கள் ஏற்படலாம்.

சாக்லேட், காஃபி மற்றும் வெண்ணெய் உணவு வகைகளை அதிகம் சாப்பிடுவதாலும் வாயில் புண் ஏற்பட வாய்ப்பு உண்டு.

சிலர் டூத் பிரஷினால் அழுத்தமாகவும் வேகமாகவும் பல் துலக்குவார்கள். இதுவும் வாய்ப்புண் வருவதற்கான காரணம்.


சாதாரணமாக வாயில் புண் ஏற்பட்டால் ஓரிரு நாட்களில் தானாகவே குணமாகிவிடும்.

புண்களில் ரத்தம் வந்தாலோ அல்லது வாரக்கணக்கில் தொடர்ந்து புண் இருந்தாலோ, உடனடியாக மருத்துவரை அணுகுவது நல்லது.

காரமான உணவுகளைத் தவிர்த்துவிடுங்கள்.

டூத் பிரஷினை அழுத்தித் தேய்க்காமல் மென்மையாகப் பல் துலக்குங்கள். மிதமான வெந்நீரில் அடிக்கடி வாய் கொப்பளிப்பது நல்லது

Similar Threads: