''டுக்கையில் சிறுநீர் கழிக்கும் பழக்கம் வளர்ந்த பிறகும்

''டுக்கையில் சிறுநீர் கழிக்கும் பழக்கம் இரண்டு முதல் மூன்று வயது வரை இயல்பானதுதான். அந்த வயதில் குழந்தைகளுக்கு சிறுநீரை வெளியேற்றும் செயலைத் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் நரம்புகளின் வளர்ச்சி முழுமை பெற்றிருக்காது. ஆனால், வயதாக ஆக, நரம்பு வளர்ச்சி முழுமை பெறும்போது, அந்தப் பழக்கம் தானாக நின்றுவிடும்.

ஆனால், மிகச் சிலருக்கு வளர்ந்த பிறகும் பிரச்னை தொடர்வதுண்டு.

இந்தப் பிரச்னைக்கு
நரம்பு மண்டல வளர்ச்சி குறைவாக இருப்பது,
மன அழுத்தம்,
மலம் கழிக்கும் இடத்தில் ஏற்படும் தொற்று,
சில வகை மருந்துகள்
அல்லது சாக்லெட்டுகள் சாப்பிடுவதால் ஏற்படும் அலர்ஜி, சிறுநீர்ப்பையின் கொள்ளளவு குறைவாக இருப்பது
(இயல்பான கொள்ள ளவு - 250 முதல் 300 மி.லி. வரை),
சிறுநீர்ப் பையின் வாய்ப் பகுதி மூடாமல் இருப்பது..
என்று பல காரணங்கள் சொல்லலாம்.

இந்தப் பிரச்னைக்கு சிகிச்சை எடுக்காமல் இருந்ததே பெரிய தவறு.

முதலில் பிரச்னைக்குக் காரணம் என்பதைக் கண்டறிய, 'யூரோ டைனமிக் டெஸ்ட்' எனப்படும் பரி சோதனையை செய்ய வேண்டும்.

சிறுநீரக சிறப்பு மருத்துவர் ஒருவரின் ஆலோசனையின் கீழ் அந்தப் பரிசோதனையைச் செய்து அதற்கேற்ப சிகிச்சை அளித்தால் பிரச்னை தீரும்.''


Similar Threads: