Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

நெஞ்சு எரிச்சல் - Heart Burning


Discussions on "நெஞ்சு எரிச்சல் - Heart Burning" in "General Health Problems" forum.


 1. #1
  vijigermany's Avatar
  vijigermany is offline Supreme Ruler's of Penmai
  Gender
  Female
  Join Date
  Jul 2011
  Location
  Germany
  Posts
  97,050

  நெஞ்சு எரிச்சல் - Heart Burning

  நெஞ்சு எரிச்சல்


  நெஞ்சு எரிச்சல் என்பது முன்பெல்லாம் பெரியவர்களுக்கான பிரச்னையாக இருந்து வந்தது. இப்போதோ பள்ளி செல்லும் வயதில் உள்ள குழந்தைகளுக்கும் இந்தப் பிரச்னை உள்ளது.

  என்ன காரணம்?
  இன்றைய குழந்தைகள் நம் நாட்டின் பாரம்பரிய உணவு முறையிலிருந்து விலகி, மேற்கத்திய நாடுகளில் பின் பற்றும் விரைவு உணவுகளை விரும்பிச் சாப்பிடுவது நெஞ்செரிச்சல் ஏற்படுவதற்கு முக்கியக் காரணம் என்று கூறப்படுகிறது.

  மேலும், காலை உணவைத் தவிர்ப்பது, சரியான நேரத்தில் உணவைச் சாப்பிடாமல் இருப்பது, பசிக்கிற நேரத்தில் சத்துள்ள உணவுகளைச் சாப்பிடாமல், நொறுக்குத் தீனிகளால் வயிற்றை நிரப்புவது, தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைப் பார்த்துவிட்டு, இரவில் தாமதமாக உறங்குவது, தேர்வு நேர மன அழுத்தம் போன்ற காரணங்களாலும் குழந்தைகளுக்கு நெஞ்செரிச்சல், அஜீரணம், வயிறு உப்புசம், புளித்த ஏப்பம் போன்ற தொல்லைகள் ஏற்படுகின்றன.

  நெஞ்செரிச்சல் ஏற்படுவது எப்படி?
  வாயில் போடப்பட்ட உணவு உமிழ் நீருடன் கலந்து, முதற்கட்ட செரிமானம் நடந்து, கூழ்போல் ஆனதும், அதை இரைப்பைக்குக் கொண்டு சேர்ப்பது உணவுக்குழாயின் முக்கிய வேலை. உணவுக்குழாயின் மேல்முனையிலும் கீழ்முனையிலும் வட்டச் சுருக்குத் தசையால் ஆன இரண்டு கதவுகள்(Sphinctres) உள்ளன.

  மேல்முனையில் இருக்கும் கதவு, நாம் உணவை விழுங்கும்போது, அது சுவாசக்குழாக்குள் செல்வதைத் தடுக்கிறது, கீழ்முனையில் இருக்கும் கதவு, இரைப்பையில் சுரக்கும் அமிலம் உணவுக்குழாக்குள் நுழைய விடாமல் தடுக்கிறது. இந்தக் கதவு, உணவுக்குழாக்கும் இரைப்பைக்கும் இடையில் ஓர் எல்லைக்கோடு போல் அமைந்து செயல்படுகிறது.

  மிகவும் இனிப்பான, காரமான, கொழுப்பு மிகுந்த உணவுகளை அடிக்கடி சாப்பிட்டால், உணவுக்குழாயின் கீழ்முனைக் கதவு பழசாகிப்போன சல்லடை வலை போல தொள தொள வென்று தொங்கிவிடும். விளைவு, இரைப்பையில் இருக்கும் அமிலம் மேல்நோக்கி வரும்போது, அதைத் தடுக்க முடியாமல் போகும். இதனால் அங்கு புண் உண்டாகி, நெஞ்செரிச்சல் ஏற்படும்.
  இந்த இடத்தில் ஒரு விஷயத்தை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும். அதாவது, உணவுக்குழாயின் தசைகள் காரம் நிறைந்த, சூடான, குளிர்ச்சியான உணவுகளைக்கூட தாங்கிக்கொள்ளும். ஆனால், அமிலத்தின் வீரியத்தை அவற்றால் தாங்கிக்கொள்ள முடியாது. ஆகவே, இந்த அமில அலைகள் அடிக்கடி மேலேறி வரும் போது, அங்குள்ள திசுப் படலத்தை அரித்துப் புண்ணாக்கிவிடும். இது நெஞ்செரிச்சலை உண்டாக்கும்.

  என்ன முதலுதவி செய்வது?

  இளநீர் சாப்பிடலாம்.
  புளிப்பில்லாத மோர் குடிக்கலாம்.
  நுங்கு சாப்பிடலாம்.
  ஜெலுசில், டைஜீன் போன்ற அமிலக் குறைப்பு மருந்துகளில் ஒன்றை 15 மி.லி. அளவில் குடிக்கலாம். இவற்றை மாத்திரையாகவும் சாப்பிடலாம்.
  இவை எதுவும் கிடைக்காத நேரத்தில், குளிர்ந்த குடிநீரைக் குடித்தால் கூட நெஞ்செரிச்சல் குறையும்.
  அடிக்கடி நெஞ்செரிச்சல் ஏற்பட்டால், மருத்துவரின் ஆலோசனையைப் பெற வேண்டியது அவசியம்.

  தடுப்பது எப்படி?
  ஒரே நேரத்தில் வயிறு நிறையச் சாப்பிடுவதைவிட மூன்று அல்லது நான்கு மணிநேர இடைவெளிகளில் சிறிது சிறிதாகச் சாப்பிடலாம். காரம் அதிகமாக உள்ள உணவுகள் வேண்டாம். அதிக சூடாகவும் சாப்பிடாதீர்கள். மசாலா கலந்த, எண்ணெய் மிகுந்த, கொழுப்பு நிறைந்த, புளிப்பேறிய உணவுகளைக் குறைத்துக் கொள்ளுங்கள்.

  அவசரம் அவசரமாகச் சாப்பிடுவது தவறு. அப்படிச் சாப்பிடும்போது, உணவோடு சேர்ந்து காற்றும் இரைப்பைக்குள் நுழைந்துவிடும். பிறகு, ஏப்பம் வரும். சமயங்களில், ஏப்பத்துடன் அமிலக் கவளம் உணவுக்குழாய்க்குள் உந்தப்படும். இதனால், நெஞ்செரிச்சல் அதிகமாகும். ஆகையால், வாயை மூடியபடி, உணவை நன்றாக மென்று மிக நிதானமாக விழுங்குங்கள். சாப்பிடும் நேரத்தில் பேச்சைக் குறைத்துக் கொள்ளுங்கள்.

  உணவு உண்டபின் ஆடைகள், பெல்ட் போன்றவை இறுக்கமாக இருந்தால், சிறிது தளர்த்திக்கொள்ள வேண்டும். உணவு சாப்பிட்டபின் குனிந்து வேலை செய்யக்கூடாது; கனமான பொருளைத் தூக்கக்கூடாது; உடற் பயிற்சி செய்யக்கூடாது.

  எவ்வளவு தண்ணீர் குடிப்பது?

  உணவு சாப்பிடும்போது, இடையிடையில் தண்ணீர் குடிக்கக்கூடாது என்று ஒரு தவறான நம்பிக்கை பலரிடம் உள்ளது. சாப்பிடும்போதும் தண்ணீர் குடிக்கலாம்; சாப்பிட்ட பிறகும் தண்ணீர் குடிக்கலாம். அது உங்கள் தேவையைப் பொறுத்தது. ஆனால் ஒன்று, நெஞ்செரிச்சல் உள்ளவர்கள் ஒரே நேரத்தில் அதிக அளவாக இரண்டு தம்ளர் தண்ணீர் குடித்தால் போதும். அளவுக்கு மீறி தண்ணீர் குடித்தால் உணவில் உள்ள எண்ணெயும் இரைப்பையில் உள்ள அமிலமும் தண்ணீரில் மிதந்து மேலெழும்பி வந்து நெஞ்செரிச்சலை உண்டு பண்ணும்.

  எந்த உணவைத் தவிர்ப்பது?
  இறைச்சி, முட்டையின் மஞ்சள் கரு போன்ற அதிக கொழுப்பு உள்ள உணவுகள்; காபி, தேநீர், சாக்லேட், மது, பெப்சி, கோக், வாயு நிரப்பப்பட்ட பிற பானங்கள்; காரம், மசாலா வகைகள்; எலுமிச்சைச் சாறு, நெல்லிக்காய்,சாத்துக்குடிச் சாறு போன்றவற்றைத் தவிர்ப்பது நல்லது. இவற்றை முழுமையாகத் தவிர்க்க இயலாதவர்கள் அளவைக் குறைத்துக்கொள்ளலாம்.

  மிக முக்கிய யோசனை இது:
  சாப்பிட்டவுடன் படுக்காதீர்கள். குறைந்தது இரண்டு மணி நேரம் கழித்துப் படுக்கச் செல்லுங்கள். அப்போதுகூட படுக்கையின் தலைப்பகுதியை அரை அடியிலிருந்து ஓர் அடிவரை உயர்த்திக்கொள்வது நல்லது, இதற்காக நான்கு தலையணைகளை அடுக்கி வைத்துக்கொள்ள வேண்டும் என்பதில்லை. தலைப்பக்கக் கட்டில் கால்களுக்குக் கீழே ஓர் அடி உயரத்திற்கு மரக்கட்டைகளை வைத்தால் போதும்.

  வலதுபுறமாகப் படுப்பதைவிட, இடதுபுறமாகத் திரும்பிப்படுப்பது நெஞ்செரிச்சலைக் குறைக்கும். குறைந்தது 6 மணி நேரம் தூக்கம் அவசியம். ஆகவே, தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைப் பார்த்துவிட்டு, இரவில் தாமதமாக உறங்குவதைத் தவிர்க்கவும்.

  பகையாகும் புகை
  நெஞ்செரிச்சலுக்கு முக்கிய எதிரி, புகைபிடிப்பது. காரணம், சிகரெட் புகையானது, இரைப்பையில் அமிலச்சுரப்பை அதிகரிப்பதோடு, உணவுக்குழாயின் சுருக்குத்தசைக் கதவுகளையும் தளரச் செய்வதால், நெஞ்செரிச்சல் அதிகமாகி விடும். புகைபிடிப்பதைப் போலவே புகையிலை போடுவது, மது அருந்துவது, பான்மசாலா உபயோகிப்பது ஆகியவையும் நெஞ்செரிச்சலுக்கு ஆகாது. இவை அனைத்தையும் அறவே தவிர்த்து விடுங்கள். நெஞ்செரிச்சல் தொல்லை நிரந்தரமாகத் தீரும்.

  source டாக்டர் கு.கணேசன்

  Similar Threads:

  Sponsored Links

 2. #2
  viji54 is offline Newbie
  Gender
  Female
  Join Date
  Aug 2012
  Location
  *-*-*-
  Posts
  84

  re: நெஞ்சு எரிச்சல் - Heart Burning

  எனக்கு தோசை சாப்பிட்டால் நெஞ்சு எரிச்சல் வரும், அது ஏன்?


 3. #3
  sgr37's Avatar
  sgr37 is offline Friends's of Penmai
  Real Name
  Poorna
  Gender
  Female
  Join Date
  May 2011
  Location
  delhi
  Posts
  219

  re: நெஞ்சு எரிச்சல் - Heart Burning

  viji54,

  Ennai kaaranamaga irukkalam, milagai podi sappidum pazhakkamendraal , nirutthi vidungal. melum regularaaga use pannum brand ennai matri dosai vaarthu paarungal..
  Ungalai maathiriyethaan, enga pakatthu veetu auntykkum Dosai nenjerichal varum , aana idly otthukkum.
  Avanga dosai saapiduvathaye niruthi irunthaangga, ippo ennai brand, and pulikkatha maavu endru silasamayam saapiduvaanga. Othukolgirathu!

  Vijigermany unga sugessions ennappa?

  Last edited by sgr37; 5th Sep 2012 at 07:42 PM.

loading...

Bookmarks

Posting Permissions

 • You may not post new threads
 • You may not post replies
 • You may not post attachments
 • You may not edit your posts
 •  
Like It?
Share It!Follow Penmai on Twitter