கண்களைக் காக்கும் முறைகளும் உணவுகளும்


நம் உடலிலுள்ள ஐம்புலன்களில் கண்கள் மிகவும் முக்கியமானவை. அதனால்தான், ஒளிபடைத்த கண்ணிணாய் வா! வா! வா! என்று பாடினார் மகாகவி பாரதி. சிறு வயதிலிருந்தே ஊட்டச்சத்துள்ள உணவுகளை உண்டுவந்தால் கண்பார்வை மிகச் சரியாக இருக்கும். இன்றைய குழந்தைகள் ஊட்டச்சத்துகளுக்கு இடம் தராமல், விரைவு உணவுகளை அதிகமாக விரும்பிச் சாப்பிடுவதால், - கண்ணுக்குத் தேவையான சத்துகள் கிடைக்காமல் பார்வைக் குறை ஏற்பட்டு, சிறு வயதிலேயே கண்ணாடி அணியும் நிலை ஏற்படுகிறது.

பார்வை குறையக் காரணங்கள்
பார்வை குறைய பல காரணங்கள் உண்டு. கருவிழி நோய், கண்புரை நோய், கண் அழுத்தநோய், விழித்திரை நோய், சர்க்கரை நோய், கண்நரம்பு நோய், கிட்டப்பார்வை, தூரப்பார்வை என்று நீண்ட பட்டியலே போடலாம். என்றாலும், இவற்றில் கிட்டப்பார்வை, தூரப்பார்வை என்று அழைக்கப்படுகின்ற பார்வைக் குறைபாடுகள்தான் குழந்தைகளுக்கு அதிகமாக ஏற்படுகின்றன.கிட்டப் பார்வை உள்ளவர்களுக்கு, அருகில் உள்ள பொருள்கள் தெரியும். தூரத்தில் உள்ள பொருள்கள் சரியாகத் தெரியாது. தூரப் பார்வை உள்ளவர்களுக்குத் தூரத்தில் உள்ள பொருள்கள் தெரியும். அருகிலுள்ள பொருள்கள் சரியாகத் தெரியாது.

மாலைக்கண் நோய்
சிலருக்குப் பகலில் பார்வை நன்றாகத் தெரியும். மாலை நேரத்தில் பார்வை குறை யத் தொடங்கும். இரவில் சரியாகத் தெரி யாது. இதற்கு மாலைக்கண் நோய் என்று பெயர். இந்த நோய் வைட்டமின் ஏ சத்துக் குறைவு காரணமாக வருகிறது. திட்டமிட்ட உணவும் சமச்சீரான உணவும் உட்கொள்ளாத குழந்தைகளுக்கு இந்த நோய் அதிக அளவில் ஏற்படுகிறது.

கண்ணைக் காக்கும் வைட்டமின்
காலம் முழுவதும் கண்பார்வை பளிச் சென்று இருக்க வைட்டமின் ஏ மற்றும் கரோட்டின் சத்து மிக அவசியம். கண்ணின் வெளியில் தெரிகின்ற வெண்படலம், கரு விழி ஆகியவற்றில் உள்ள திசுக்களின் சீரான வளர்ச்சிக்கு வைட்டமின் ஏ சத்து தேவை. மேலும், நமக்குப் பார்வை சரியாக இருக்க வேண்டுமென்றால் கண்ணின் உள்ளே விழி லென்ஸுக்குப் பின்புறம் உள்ள விழித்திரை ஆரோக்கியமாக இருக்க வேண்டும். இந்த, விழித்திரையில்தான் நாம் பார்க்கும் பொருளின் பிம்பங்கள் விழுகின்றன.இந்தப் பிம்பத்தைப் பற்றிய செய்திகள் கண் நரம்பு வழியாக மூளைக்குச் செல்கின்றன. மூளை இதனைப் பார்வையாக உணர்த்துகிறது. விழித்திரையில் ராட்கள் மற்றும் கோன்கள் என்னும் அணுக்கள் உள்ளன. கண்ணுக்குள் ஒளிக்கீற்றாக நுழைகின்ற பொருள்களைப் பிம்பங்களாக உரு வாக்கிப் பார் வையை உண்டாக் குவதும், பார்க்கின்ற பொருள்களின் நிறங்களைப் பகுத்துச் சொல்வதும் இவற்றின் வேலை. ராட்கள் மற்றும் கோன்கள் சரியாகச் செயல்படுவதற்கு வைட்டமின் ஏ உதவுகிறது. ஆகையால் உடலில் வைட் டமின் ஏ சத்து சரியான அளவில் இருந்தால் பார்வை நன்றாக இருக்கும்.

வைட்டமின் உணவுகள்
காரட், முட்டைக்கோஸ், புடலைக்காய், பீர்க்கங்காய், முருங்கைக்காய், அவரை, பீன்ஸ், பூசணி ஆகிய காய்கள்; பப்பாளி, தக்காளி, மாம்பழம், ஆப்பிள், அன்னாசி, மாதுளை, கொய்யா, உலர் திராட்சை போன்ற பழங்கள்; பால், முட்டை, இறைச்சி, வெண்ணெய், மீன், மீன் எண்ணெய் போன்ற அசைவ உணவுகள்; முளை கட்டிய தானியங்கள் போன்றவற்றில் வைட்டமின் ஏ சத்து அதிகம்.

பார்வை தரும் கீரைகள்
முருங்கைக்கீரை, பொன்னாங் கன்னிக்கீரை, மணத்தக்காளிக்கீரை, சிறு கீரை, கறிவேப்பிலை, கொத்துமல்லி, புதினா போன்றவற்றிலும் இச்சத்து அதிகம். தினமும் ஒரு கீரை சாப்பிடுவது கண்களைப் @பணும்

தினசரி உணவுத் திட்டம்
காலையில் காபிக்குப் பதிலாக ஆப் பிள், அன்னாசி, பேரீச்சை இவற்றில் ஒன்றைச் சாறு பிழிந்து 200 மி.லி. அருந்தலாம். காலை உணவில் இட்லி, தோசைக்குப் புதினா சட்னி, கொத்துமல்லி துவையல் சேர்க்கலாம்.

மதிய உணவில் காய்கறிகளில் ஒன்றை யும் கீரைகளில் ஒன்றையும் அவசியம் சேர்த்துக் கொள்ள வேண்டும். மாலை சிற்றுண்டியில் காரட் பால், பப்பாளிச் சாறு, காய்கறி சாலட் அல்லது காய்கறி சூப் 200 மி.லி. அருந்தலாம்.
இரவில் வழக்கமான உணவுடன் இரண்டு பச்சை காரட், மீன் எண்ணெய் ஐந்து மில்லி அல்லது மீன் எண்ணெய் மாத்திரை ஒன்று சாப்பிடலாம்.

சத்துக்குறைவு அறிவது எப்படி?
பொதுவாக கண்ணின் வெளியில் தெரிகின்ற வெண்படலம் வெள்ளை நிறத்தில் காணப்படும். அது ஈரமாக இருக்கும். வைட்டமின் ஏ குறைவாக இருந்தால், வெண்படலத்தின் பளபளப்பு குறையும். கலங்கிய நிறத்தில் காணப்படும். பின்னர், அதில் வெள்ளிநிறப் புள்ளிகள் தெரியும். கண்ணீர் சுரப்பது குறை யும். இதனால் ஈரம் குறைந்து கண்கள் உலர்ந்துவிடும். இந்த நிலைமையில் சிகிச்சை பெற்று சரி செய்துவிடலாம். தவறினால், வெள்ளிநிறப் புள்ளிகள் தடித்துத் தழும்பாகிவிடும். அப்போது பார்வை குறைந்துவிடும். முக்கியமாக இரவில் பார்வை தெரியாது.

கண்ணுக்குப் பயிற்சி செய்!
தவிர, கண் தசைகளுக்குப் பயிற்சியும் தேவை. நடனமாடுபவர்கள், கண்ணை மட் டும் பல திசைகளில் உருட்டுவார்கள். அது போல, முகத்தை நேராக வைத்துக் கொண்டு, கண்களை மட்டும் இடமிருந்து வலமாகவும், வலமிருந்து இடமாகவும், மேலிருந்து கீழாகவும், கீழிருந்து மேலாகவும், பின்பு வட்டவடிவிலும் உருட்டுங்கள். தினமும் இப்படி ஐந்து நிமிடங்கள் பயிற்சி செய்யுங்கள். பார்வை தெளிவாக இருக்கும்.
source Dr. Ganesan

Similar Threads: