செவியில் பயங்கர இரைச்சல்

! காதில் ஓட்டை மற்றும் இரைச்சல். பொதுவாக காதில் ஓட்டை இருந்தால், அதனால் சீழ் வைக்கவும் வாய்ப்புள்ளது. எனவே, உடனடியாக பரிசோதித்து உங்களுக்கு சீழ் வைத்திருந்தால் அதை அகற்றிவிட்டு, பின் ஓட்டையை சரி செய்வதற்கான அறுவை சிகிச்சையை எடுத்துக்கொள்ள வேண்டியது அவசியம். இல்லையெனில் இதனால் பக்கவிளைவாக திடீர் மயக்க நிலை ஏற்படுவதுடன், எதிர்காலத்தில் உங்களின் காது கேட்கும் திறனையே இழந்துவிடவும் வாய்ப்பிருக்கிறது.

அடுத்தது இரைச்சல். காதுகளை சரிவர சுத்தம் செய்யாததால் சேரும் அழுக்குகள், காது நரம்புகளை பாதித்து சிதைப்பதால் உண்டாவது. இதற்கான நிரந்தரத் தீர்வு என்று எதுவும் இல்லை. ஆயினும், இதை மாஸ்போடெக்டமி (Mphpoidectomy) என்ற ஆபரேஷன் மூலம் குணப்படுத்தலாம். என்றாலும், இதன் மூலம் இரைச்சலிருந்து விடுபடுவதற்கு ஐம்பது சதவிகிதம்தான் வாய்ப்பிருக்கிறது. இதைத்தான் உங்களின் மருத்துவரும் கூறியிருப்பார்.
ஒரு ஈ.என்.டி மருத்துவரின் ஆலோசனையின்கீழ் இந்த இரண்டு பிரச்னைகளுக்குமான சிகிச்சைகளையும் நீங்கள் எடுத்துக் கொள்வதுதான் நலம்."

Similar Threads: