Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree5Likes
 • 3 Post By silentsounds
 • 2 Post By silentsounds

Eye strain due to Computer? - கம்ப்யூட்டரால் கண் வலியா?


Discussions on "Eye strain due to Computer? - கம்ப்யூட்டரால் கண் வலியா?" in "General Health Problems" forum.


 1. #1
  silentsounds's Avatar
  silentsounds is offline Moderator & Blogger Guru's of Penmai
  Gender
  Male
  Join Date
  Feb 2011
  Location
  chennai
  Posts
  6,312
  Blog Entries
  31

  Eye strain due to Computer? - கம்ப்யூட்டரால் கண் வலியா?

  கடந்த 11ம் தேதி உலக பார்வை தினமாக கடைபிடிக்கப்பட்டது. முன்பெல்லாம் 40 வயதை தாண்டியவர்கள்தான் மூக்கு கண்ணாடி அணிவார்கள். ஆனால், தற்போது 2ம் வகுப்பு படிக்கும் மாணவன் கூட மூக்கு கண்ணாடி அணிய வேண்டிய நிலை ஏற்படுகிறது. இதற்கு, அதிக நேரம் கம்ப்யூட்டர் பார்ப்பது, உணவுப்பழக்கமே காரணம் என்கிறார் அமெரிக்கன் ஐ கேர் சென்டர் டாக்டர் டி.பி.பிரகாஷ்.
  கண் மருத்துவ பரிசோதனையில் தற்போது வந்துள்ள நவீன தொழில்நுட்ப வசதிகள் குறித்தும், கண் பார்வை குறைபாடுக்கான காரணங்கள் குறித்தும் இதோ அவரே விளக்கம் தருகிறார்...

  இன்றைய கால கட்டத்தில் எல்லா துறையை சேர்ந்தவர்களும் கம்ப்யூட்டரில்தான் வேலை பார்க்க வேண்டியிருக்கிறது. பணி நிமித்தம் காரணமாக 8 மணி நேரம் தொடர்ச்சியாக கம்ப்யூட்டரை பார்த்துக் கொண்டே இருக்கிறார்கள். இதனால், பெரும்பாலானவர்களுக்கு பார்வையில் குறைபாடு ஏற்படுகிறது. எனவே, அதிகளவில் கம்ப்யூட்டர் உபயோகிப்பவர்கள் டிவென்டி-20 என்ற ரூல்சை ஃபாலோ செய்வது நல்லது.
  அதாவது, 20 நிமிடங்கள் தொடர்ச்சியாக கம்ப்யூட்டர் மானிட்டரை பார்த்துக் கொண்டிருந்தால் 20 செகன்ட் ரிலாக்ஸ் செய்யுங்கள். அந்த 20 செகன்ட்டில் கண்களை மூடி, கண்களுக்கு ஓய்வு தரலாம். அல்லது 20 அடி தூரத்தில் உள்ள ஒரு பொருளை பார்த்துக் கொண்டிருங்கள். அப்படி செய்வதால் கண் வலி ஏற்படாது. பார்வை குறைபாடு ஏற்படுவது பெருமளவு தடுக்கப்படும்.

  நிறைய பேர் கான்டாக்ட் லென்ஸ் அணிகிறார்கள். டாக்டர் ஆலோசனை இல்லாமல், பவர் இல்லாத லென்ஸ் தானே என்று நீங்களாக எந்த லென்சையும் அணியாதீர்கள். அதனால் உங்கள் பார்வையே பறிபோகும் அபாயமும் ஏற்படலாம். கருவிழியையே மாற்ற வேண்டிய ஆபத்தும் ஏற்பட வாய்ப்புண்டு.
  குழந்தைகளுக்கு ஃபாஸ்ட் புட் தருவதை தவிர்த்து, காய்கறி பழங்கள் அதிகளவில் தர வேண்டும். பச்சை, சிவப்பு நிற காய்கறி பழங்களை சாப்பிடுவதால் பார்வை திறன் அதிகரிக்கும். எந்த வயதினராக இருந்தாலும், ஆண்டுக்கு ஒருமுறை கண் பரிசோதனை செய்து கொள்வது நல்லது. குறிப்பாக, குழந்தைகளுக்கு அவசியம் பரிசோதனை செய்ய வேண்டும்.


  நன்றி-தினகரன்


  Similar Threads:

  Sponsored Links
  Last edited by sumathisrini; 1st Dec 2012 at 01:27 PM. Reason: Alignment
  Penmai, sumathisrini and jv_66 like this.
  Guna (குணா)

  நினைப்பில் தூய்மையும், சொல்லில் உண்மையும்
  மிகவும் அவசியமானவை
 2. #2
  silentsounds's Avatar
  silentsounds is offline Moderator & Blogger Guru's of Penmai
  Gender
  Male
  Join Date
  Feb 2011
  Location
  chennai
  Posts
  6,312
  Blog Entries
  31

  Re: Eye strain due to Computer? - கம்ப்யூட்டரால் கண் வலியா?

  கம்ப்யூட்டர் என்பது இன்று அனேகம் பேருக்கு மூன்றாவது கை மாதிரி. அது இன்றி ஒரு நிமிடம் கூட நகராது. உணவு, உறக்கமெல்லாம் கூட இரண்டாம் பட்சம்தான். கம்ப்யூட்டர்தான் வாழ்க்கை பலருக்கும். அந்தளவுக்கு கம்ப்யூட்டர் பயன்பாடு தவிர்க்க முடியாததாகி வருகிற நிலையில், இடைவெளியே இல்லாமல் 24 மணி நேரம் கம்ப்யூட்டரே கதி என இருப்பவர்களுக்கு ‘கம்ப்யூட்டர் விஷன் சின்ட்ரோம்’ என்கிற பிரச்னை வரலாம் என எச்சரிக்கிறார் கண் மருத்துவ நிபுணர் பிரவீன் கிருஷ்ணா.

  அதென்ன ‘கம்ப்யூட்டர் விஷன் சின்ட்ரோம்’? அதன் அறிகுறிகள் எப்படியிருக்கும்? தீர்வுகள் என்ன?
  எல்லாவற்றையும் பற்றி விளக்கமாகப் பேசுகிறார் அவர். ‘‘அதிக நேரம் கம்ப்யூட்டர் உபயோகிக்கிறவங்களுக்கு கண்கள் வறண்டு, கண்ணீரே இல்லாமப் போகலாம். அடிக்கடி தலைவலி, கண்கள் இழுக்கிற மாதிரி உணர்வு, கண்கள் துடிக்கிறது, எரிச்சல், பார்வை மங்கின மாதிரி உணர்வு... இதெல்லாம் கம்ப்யூட்டர் விஷன் சின்ட்ரோமோட அறிகுறிகளா இருக்கலாம்.


  சதா சர்வ காலமும் கம்ப்யூட்டரே கதியா இருக்கிறவங்க, ‘20 - 20 - 20’ விதியைப் பின்பற்றியே ஆகணும். அதாவது 20 நிமிடங்களுக்கு ஒரு முறை, 20 நொடிகளுக்கு, 20 அடி தொலைவுல உள்ள காட்சியைப் பார்க்கணும். உள்ளங்கைகளை சூடு பறக்கத் தேய்ச்சு, மூடின கண்கள் மேல வச்சு எடுக்கலாம். கண்கள் ரொம்ப வறண்டு போனா, கண் மருத்துவரைப் பார்க்கணும்.


  வறட்சியோட அளவைப் பொறுத்து, தேவைப்பட்டா, கண்களுக்கான செயற்கை கண்ணீர் மருந்துகளைப் பரிந்துரைப்பாங்க’’ என்கிற டாக்டர் பிரவீன், கம்ப்யூட்டர் வேலையில் சேர்வதற்கு முன்பே, கண் பரிசோதனையை மேற்கொண்டு, ஆலோசனை பெறுவது பாதுகாப்பானது என்றும் அறிவுறுத்துகிறார்.


  ‘‘கிட்டப்பார்வையும் இல்லாம, தூரப்பார்வையும் இல்லாம கம்ப்யூட்டருக்கு நடுத்தர பார்வை தேவை. கண்ணாடி தேவைப்படும்போது, தூரப்பார்வைக்கும் கிட்டப்பார்வைக்குமான
  கண்ணாடி கம்ப்யூட்டருக்கு சரி வராது. கம்ப்யூட்டர் வேலைக்கான பிரத்யேக கண்ணாடிகள் இருக்கு. ஸ்பெஷல் கோட்டிங்கோட, நடுத்தரப் பார்வைக்கான அதைக் கேட்டு வாங்க வேண்டியது அவசியம். கம்ப்யூட்டருக்கும் உங்களுக்குமான இடைவெளி சரியா இருக்கணும்.


  பாதங்கள் தரையைத் தொடற மாதிரி உட்காரணும். 90 டிகிரி கோணத்துல உட்கார்றது சரியா இருக்கும். கம்ப்யூட்டருக்கு ‘ஆன்ட்டி ரெஃப்ளெக்ஷன் மானிட்டர்’ போடறதும் கண்களைப் பாதுகாக்கும். பொதுவா 40 பிளஸ்ல இருக்கிறவங்களுக்கு, வெள்ளெழுத்தோட சேர்ந்து, இந்த கம்ப்யூட்டர் விஷன் சின்ட்ரோம் பிரச்னையும் வரும். அந்தவயசுல வரக்கூடிய பிரச்னையா ஒதுக்காம, கம்ப்யூட்டர் விஷன் சின்ட்ரோமுக்கும் சோதனை செய்து, தேவையான சிகிச்சைகளை எடுத்துக்கிறது அவசியம்.’’


  Last edited by sumathisrini; 1st Dec 2012 at 01:26 PM. Reason: Alignment
  sumathisrini and jv_66 like this.
  Guna (குணா)

  நினைப்பில் தூய்மையும், சொல்லில் உண்மையும்
  மிகவும் அவசியமானவை
 3. #3
  jv_66's Avatar
  jv_66 is offline Super Moderator Silver Ruler's of Penmai
  Real Name
  Jayanthy
  Gender
  Female
  Join Date
  Dec 2011
  Location
  Bangalore
  Posts
  31,985

  Re: Eye strain due to Computer? - கம்ப்யூட்டரால் கண் வலியா?

  ​Thagavaluku nandri.......Guna

  Jayanthy

loading...

Bookmarks

Posting Permissions

 • You may not post new threads
 • You may not post replies
 • You may not post attachments
 • You may not edit your posts
 •  
Like It?
Share It!Follow Penmai on Twitter