பேறு காலத்தின் முதல் மூன்று மாதத்தில் அனைத்து பெண்களுக்கும் வாந்தி ஏற்படுவது இயல்பு. உடலின் செரிமான பணிகள் அனைத்தும் ஹார்மோன் மாற்றங்களின் கட்டுப்பாட்டில் இயங்குவதால், கருவுற்ற பெண்களுக்கு மலச்சிக்கல் ஏற்படும்.
பேறுகாலத்தில் கரு முழுமையாக வளர, ஈஸ்ட்ரோஜென் உற்பத்தியாகும். அதே சமயம், இந்த ஹார்மோன்கள் குடல் இயக்கத்தின் வேகத்தைக் குறைத்து விடுகிறது. இதனால், மலச்சிக்கல் ஏற்படுகிறது. தசைகளைத் தளர்த்துவதன் மூலம் ஹார்மோன்களில் ஒன்றான புரோஜெஸ்ட்ரான் செயல்படும். தசைகளால் ஆன குடலின் வெளிப்புறச் சுவர் தளர்வதால் உணவு மற்றும் மலத்தின் வேகம் குறைகிறது.
சில நேரங்களில் இரைப்பை, குடல் உறுத்தல்கள் ஏற்படும். பேறுகாலத்தில் இயல்பாகவே, தவிப்பும் ஆர்வமும் அதிகமாக இருக்கும்.
ப்ரூன்ஸ் பழத்தில் உள்ள சத்துக்கள் இதுபோன்ற சிக்கலான நேரத்தில், குடல்களின் இயக்கத்திற்குத் தேவையான நார்ச்சத்தை வழங்குகிறது.
* குடல்களின் வேகமான செயல்பாடுகளுக்கு நார்ச்சத்துக்கள் மிகவும் முக்கியம். ப்ரூன்ஸ் பழங்கள் நீர்ச்சத்தை உறிஞ்சிக் கொள்வதால், மலச்சிக்கலைப் போக்குகிறது.
* ப்ரூன்ஸ் பழங்கள் சுவையாக இருப்பதுடன், தேவையான ஊட்டச்சத்துக்களையும் வழங்குகிறது.
* ஆரோக்கியமான குழந்தையைப் பெற, இரும்புச்சத்து முக்கியமான ஊட்டச்சத்து. ப்ரூன்ஸ் பழங்களில் உள்ள இந்த ஊட்டச்சத்து தாய் மற்றும் குழந்தைக்குத் தேவையான ஹீமோகுளோபினை அளிக்கிறது. இது ரத்தசோகையைத் தடுத்து, உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.
* ப்ரூன்ஸ் பழங்களில் உள்ள பொட்டாசியம் சத்து இயற்கையாகவே உயர் ரத்த அழுத்தத்தைத் குறைக்கும் திறன் கொண்டது.
* இதில் கொழுப்புச்சத்துக்கள் இல்லாததால், எப்போது பசித்தாலும் சாப்பிடலாம்.
தகவல்: கலிபோர்னியா ப்ரூன்ஸ் வாரியம்.

Similar Threads: