"வெர்டிகோ'' எனப்படும் தலைசுற்றல் வந்தால் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். (இதயம் வரை செல்லக்கூடிய பிரச்னை இது!)
நீண்டநேரம் ஒரே இடத்தில் உட்கார்ந்து எழும்போதோ, எதையாவது எடுக்க குணிந்துவிட்டு எழுந்தாலோ, சிலருக்கு "சர்' தலைசுற்றும், எல்லாம் நான்கு ஐந்து நொடிக்குள்தான். அதற்குபின் சரியாகிவிடும். இப்படி என்றோ ஒருநாள் தலைசுற்றல் வந்தால் பராவயில்லை. இதனால் எந்தப் பாதிப்பும் இல்லை.
சிலருக்கு அதிகாலையில் படுக்கையில் இருந்து எழுந்து நிற்கும்போது தலைசுற்றும் அப்படியே அறையே சுற்றுவதுபோல் இருக்கும். மனசுக்குள் ஒருவித பயம் தொற்றிக்கொள்ளும். படுக்கையிலிருந்து எழும்போது சிலருக்கு ரத்த அழுத்தம் குறைவதால் இந்த தலைசுற்றல் வரலாம். ரத்த அழுத்திற்காக மருந்து சாப்பிடுபவராக இருந்தால் மருத்துவரை கலந்தாலோசிப்பது நல்லது. ரத்தக் கொதிப்பு அதிகமானாலும். தலைசுற்றல் வரும் குறைந்தாலும் வரும். சர்க்கரையின் அளவு கூடினாலும் குறைந்தாலும் தலைசுற்றும். அதிகம் தூங்கினாலும் தூங்காவிட்டாலும் தலைசுற்றல் வரும். இந்த தலைசுற்றல் எல்லாம் அதற்கான காரணங்களைக் கண்டறிந்து உரிய மருந்துகள் எடுத்தால் தலைசுற்றல் உடனே நின்றுவிடும். ஆனால் சிலருக்கு காரணமே இல்லாமல் அடிக்கடி தலைசுற்றல் வரும். வாழ்க்கையே வெறுத்தபோல் இருக்கும். பயம் மனதை கவ்வும். போதையில் தள்ளாடும் ஒரு நபரைப் போல தள்ளாடித் தள்ளாடி நடக்கவேண்டியது வரும் மற்றவர் துணையுடன்தான் நடக்கவே முடியும். இந்த மாதிரியான தலைசுற்றல் தான் பிரச்னைக்குரியது இந்தப் பிரச்னை மூளை நரம்பு மண்டலத்தில் இருந்து ஆரம்பிக்கும் அப்படியே முதுகுத்தணடுவடம், அதைச் சுற்றியுள்ள நரம்புகள், எலும்புப்பகுதி என்று பாதிக்க வாய்ப்புகள் உண்டு இதைத்தான் "வெர்கடிகோ' (ஙஞுணூtடிஞ்ணி) என்று மருத்துவ உலகம் அழைக்கிறது. கண்டுகொள்ளாமல் விட்டால் வெர்டிகோவின் அதிகபட்ச ஆபத்தாக அது இதயக் கோளாறு என்கிறார்கள் மருத்துவர்கள்.
அறிகுறிகள்: அடிக்கடி தலைவேலி வரும். கண்கள் தெளிவில்லாததுபோல் இருக்கும் நாக்குக் குழறிப் பேசுவதுபோல் பேசுவார்கள். காது மந்தமாகும் கைகள்ல் பலவீனம் அடையும் நடந்து கொண்டிருக்கும்போதே மயக்கமும் குமட்டலும் வரும் தூங்கவே முடியாது. இந்த அறிகுறிகள் லேசாக தென்பட்டவுடனேயே உணவில் சில மாற்றங்கள் செய்து பார்க்க வேண்டும்.
தவிர்க்கவேண்டியவை: சேர்க்க வேண்டியவை:
* அதிக இனிப்பு, அதிக உப்பு உள்ள எந்த உணவையும் உண்ணக்கூடாது, * ஜங்க்ஃபுட் அறவே தவிர்த்தாகவேண்டும். காபி, சாக்கெட்டை நிறுத்திவிட வேண்டும். * புகை, மது கூடவே கூடாது. * சிலருக்க பித்தத்தால் கூட தொடர் வாந்தி, மயக்கம், தலைசுற்றல் வரலாம். அதனால் துவர்ப்புச்சுவையுள்ள உணவுகளை அதிகம் சேர்த்துக்கொள்ளவேண்டும். தினம் ஒரு நெல்லிக்காய் சாப்பிட்டாலே பித்தம் தொடர்பான தலைசுற்றல் நின்றுபோகும், நெல்லிக்காய் சாதம் செய்துகூட சாப்பிடலாம். நல்ல பலன் கிட்டும்.
* கொத்தமல்லி விதையை கொதி நீரில் போட்டு ஊறவைத்து வடிகட்டி தினம் பருகினால் தலைசுற்றல் நிற்கும், கொத்தமல்லி துவையால், கறிவேப்பலை துவையலை தினமும் உணவுடன் சேர்த்து வர தலைசுற்றல் குறையும்.
*சீரகத்தை வெறும் வாயில் போட்டு மென்று அதன் சாரை விழுங்கினால் அதன் சாரை விழுங்கினால் நல்ல பலன் கிடைக்கும். * இஞ்சி சாறு தேன் கலந்து சாப்பிட்டால் வாந்தி, மயக்கம் நின்று தலைசுற்றல் நிற்கும். இஞ்சி மரப்பன் என்ற மிட்டாய்கூட இதற்கு மிக நல்லது. சுக்குகாப்பி இதற்கு சிறந்து மருந்து. * கொழுப்புசத்த உள்ள அசைவ உணவுகளை குறைத்துக் கொள்ள வேண்டும். மீன், கோழிக்கறி நல்லது. மற்றப்படி உப்புக் கருவாடு, அப்பளம் போன்றவை கூடவே கூடாது. நார்ச்சத்துள்ள காய்கறிகள், பழங்கள் அதிகம் சேர்ப்பது நல்லது. * படுக்கையைவிட்டு விசுக்கென்று எழாதீர்கள். முதலில் நன்றாக கண்ணைத் திறந்து பாருங்கள். பின்பு ஒரு பக்கமாக உடலைத் திருப்பி மெதுவாக எழுந்திருங்கம். இவ்வாறு செய்தால் தலைசுற்றல் குறையும். தொந்தரவு தொடர்ந்து நீடிக்குமேயானால் மருத்துவரை கலந்து ஆலோசிப்பது நல்லது. எனெனில் மூளையில் வேறு பிரச்னைகளுக்காக தலைசுற்றல் வந்தால் அதற்கான சிகிச்சையே உடனே எடுத்தாகவேண்டும்.
* நம் காதில் உள்ள சிறிய எலும்புகள்தான் நாம் தலையை-உடலை பல்வேறு விதமாக ஆட்டும்போது நமது உடலை சமநிலையில் வைத்திருக்க உதவுகின்றன. இந்த எலும்புகளில் பிரச்னை என்றாலும் கூட தலைசுற்றல் வரும். இதற்கு உNகூ மருத்துவர்தான் பரிசோதித்து முடிவு சொல்வார்.

-senthilvayal

Similar Threads: