Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree2Likes
  • 2 Post By tnkesaven

வெந்நீர் அளிக்கும் நன்மைகள்


Discussions on "வெந்நீர் அளிக்கும் நன்மைகள்" in "General Health Problems" forum.


  1. #1
    tnkesaven is offline Yuva's of Penmai
    Gender
    Male
    Join Date
    Jun 2012
    Location
    puducherry
    Posts
    7,956

    வெந்நீர் அளிக்கும் நன்மைகள்

    வெந்நீர் அளிக்கும் நன்மைகள்
    * காலையில் காலைக் கடனை சரியாகக் கழிக்க முடியாமல் அவதிப்படுகிறீர்களா?

    வெந்நீர் குடித்துப் பாருங்கள். நல்ல பலன் கிடைக்கும்.

    * ஏதாவது எண்ணைப் பல காரம், இனிப்பு போன்றவை சாப்பிட்ட பிறகு நெஞ்சு கரித்துக் கொண்டிருக்கிறதா?


    உடனே ஒரு டம்ளர் வெந்நீர் எடுத்து நிதானமாகப் பருகுங்கள். சிறிது நேரத்தில் நெஞ்செரிச்சல் மறைந்துவிடும்.

    * தொடர்ந்து வெந்நீர் குடித்தால், உடம்பில் சேரும் கொழுப்பு கரையும் என்று கூறப்படுகிறது.

    * மூக்கு அடைப்பால் அவதி
    வெந்நீரில் விக்ஸ் அல்லது அமிர்தாஞ்சன் போட்டு 'ஆவி பிடித்தால்' மூக்கு அடைப்பு, தலைப் பாரம் அகன்றுவிடும்.

    * உடம்பு வலி
    வெந்நீரில் கொஞ்சம் சுக்குத் தூள், பனங்கற்கண்டு போட்டுக் குடியுங்கள்.

    இதனால், பித்தத்தினால் ஏற்படும் வாய்க்கசப்பு மறைந்துவிடும். மேலும் உடல் வலிக்கும்போது நன்றாக வெந்நீரில் குளித்து விட்டு, சுக்கு வெந்நீரையும் குடித்துவிட்டுப் படுத்தால், நன்றாகத் தூக்கம் வருவதோடு, வலியும் பறந்துவிடும்.

    * அலைந்து திரிந்ததால் பாதங்கள் வலி
    பெரிய பாத்திரத்தில் கால் சூடு பொறுக்கும் அளவு வெந்நீர் ஊற்றி, அதில் சிறிது கல் உப்பைப் போட்டு கொஞ்சம் நேரம் பாதத்தை அமிழ்த்தி எடுங்கள்.

    காலில் அழுக்கு இருப்பது போலத் தோன்றினால் வெந்நீரில் கொஞ்சம் டெட்டால் ஊற்றி அதில் பாதத்தை வைத்தால், கால் வலி மறைவதோடு, பாதமும் சுத்தமாகி விடும்.

    * வீட்டில் துணி துவைப்பது, பாத்திரங்கள் கழுவுவது போன்ற வேலைகளைச் செய்யும் இல்லத்தரசிகள், வாரத்துக்கு ஒரு முறையாவது உங்கள் கைகளை சிறிது நேரம் வெந்நீரில் வைத்திருங்கள். அதனால் நக இடுக்கில் இருக்கும் அழுக்குகள் அகன்று, கைகள் ஆரோக்கியமாக இருக்கும்.

    * வெயிலில் அலைந்துவிட்டு வந்த உடனே 'ஜில்'லென்று ஐஸ் வாட்டர் பருகுவதைவிட வெதுவெதுப்பான வெந்நீர் அருந்தலாம். அது நன்கு தாகம் தீர்க்கும்.

    * ஈஸ்னோபிலியா, ஆஸ்துமா போன்றவற்றால் அவதிப்படுபவர்கள், தாகம் எடுக்கும்போதெல்லாம் கண்டிப்பாக வெந்நீர் பருகுவது நல்லது. அதுபோலவே, ஜலதோஷம் பிடித்தவர்களும் வெந்நீர் குடித்தால் அது அந்த நேரத்தில் இதமாக இருப்பதோடு, விரைவாக இயல்பு நிலை ஏற்படும்

    nandri;maalaimalar

    Similar Threads:

    Sponsored Links
    rifan and jv_66 like this.

  2. #2
    rifan's Avatar
    rifan is offline Registered User
    Blogger
    Yuva's of Penmai
    Real Name
    Nathasaa Shiyan
    Gender
    Female
    Join Date
    Oct 2011
    Location
    Sri Lanka
    Posts
    8,176
    Blog Entries
    140

    Re: வெந்நீர் அளிக்கும் நன்மைகள்

    Good sharing


  3. #3
    jv_66's Avatar
    jv_66 is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Jayanthy
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    Bangalore
    Posts
    31,985

    Re: வெந்நீர் அளிக்கும் நன்மைகள்

    உபயோகமான பகிர்வு .....நன்றி கேசவன்

    Jayanthy





loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter