குளிர்பானத்தால் வரும் கேடு


அமெரிக்காவிலுள்ள நியு ஆர்லியன்ஸ் நகரில் குளிர்பானங்களால் ஏற்படும் ஆபத்து குறித்து ஆய்வு நடத்தப்பட்டது. இனிப்பு கலந்த குளிர்பானங்களை அருந்துவதால் ஆண்டுதோறும் 1.8 லட்சம் மக்கள் இறப்பதாக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. ஆய்வுக் குழுவில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கீதாஞ்சலி என்பவர் கூறுகையில்,""சர்க்கரைப் பொருள்கள் கலந்த குளிர்பானங்களை அருந்துவதால் எடை அதிகரிக்கிறது. சர்க்கரை நோய் உள்ளிட்ட பாதிப்புகள் உருவாகின்றன. 2010-ம் ஆண்டுக்கான ஆய்வின்படி குளிர்பானம் அருந்தும் பழக்கம் உள்ளவர்களுள் 1.3 லட்சம் பேர் சர்க்கரை நோயாலும் 44 ஆயிரம் பேர் இதய நோய்களாலும் 6,000 பேர் புற்றுநோயாலும் இறந்தது தெரியவந்துள்ளது. குறைந்த அளவில் குளிர்பானம் அருந்தும் ஜப்பானியர்களுள் 10 லட்சம் பேர்களுக்கு 10 பேர் மட்டுமே மரணமடைகின்றனர்'' என்று அவர் தெரிவிக்கிறார்.

Similar Threads: