Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree1102Likes

Medical Notes - மருத்துவ குறிப்புகள்


Discussions on "Medical Notes - மருத்துவ குறிப்புகள்" in "General Health Problems" forum.


  1. #91
    Subhasreemurali's Avatar
    Subhasreemurali is offline Penman of Penmai
    Blogger
    Yuva's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jan 2013
    Location
    chennai
    Posts
    7,537
    Blog Entries
    1

    Re: Medical Notes - மருத்துவ குறிப்புகள்

    Thanx for the useful info gowry


    Quote Originally Posted by gowrymohan View Post
    இயற்கையோடு இணைந்து வாழ்வோம்


    மனிதன் இயற்கையை ஒட்டி வாழ்ந்து வந்தால் நோய்கள், பிரச்சினைகள் இல்லாத ஆரோக்கிய ஆனந்த வாழ்க்கையை நிச்சய மாகப் பெற முடியும். ஆனால் நாம் இயற்கைக்கு முரண்பட்டு எத்தனையோ காரியங்களைச் செய்கிறோம். அதுதான் பிரச்சினைகளுக்கு ஆணிவேர்.

    நமது உடலில் இரத்தம் தூய்மையாக இருக்க, இயற்கை தரும் உணவு தேன். தினமும் ஒரு டம்ளர் வெது வெதுப்பான நீரில் ஒரு தேக்கரண்டி தேன் கலந்து பருகி வந்தால் ரத்தத்தில் உள்ள குற்றங்கள் நீங்கும்.

    உடல் பருமனைக் குறைக்க வேண்டுமானால் முள்ளங்கி அல்லது கேரட்டைத் துருவி மேலாகச் சிறிது தேன் கலந்து, அருந்தி வந்தால் உடலில் தேவையற்ற கொழுப்பு குறைந்து பருமன் குறையும்.

    ஜீரணக் கோளாறுகள் உடையவர்கள் காலையில் வெறும் வயிற்றில் வெது வெதுப்பான நீரில் எலுமிச்சம்பழம் பிழிந்து பருகினால் ஜீரணக் கோளாறுகள் சீரடையும். ரத்தமும் சுத்தம் அடையும்.

    விரல் நகங்கள் சிதைந்து வலிமை அற்றதாய் இருந்தால், சுண்ணாம்புச் சத்துள்ள உணவு வகைகளை உண்ண வேண்டும். பால் இதற்கு மிகவும் சிறந்த பலன்களை அளிக்கும்.

    தலைமுடி நன்கு வளர, கீரைகள், கொத்துமல்லி, கறிவேப்பிலை, பால் பொருட்கள், முருங்கைக்காய் முதலிய வற்றை அதிகமாக உணவில் சேர்த்து வந்தால் முடி செழித்து வளரும். கறி வேப்பிலைச் சாறும் தேங்காய் எண்ணெயும் கலந்து நன்கு காய்ச்சி அந்த எண்ணெயை தலைமுடிக்குப் பயன்படுத்தி வந்தால் முடி கருத்து,செழித்து வளரும்.

    தக்காளியைப் பச்சையாகப் பச்சடியாகவோ, சாறாகவோ அருந்தி வந்தால், தோலின் நிறம் கூடும். ரோஜா இதழ்களை தேனில் ஊறுவைத்துத் தயாரிக்கப்படும் குல்கந்து உண்டு வந்தால் தோலின் நிறம் கூடி பளபளப்பு பெறும்.

    கேரட் கண்பார்வைக்கு நல்லது என்பது அனைவரும் அறிந்ததே இதனை தினமும் பச்சையாக உண்டு வந்தால் கண்பார்வை கூர்மை பெறும்.
    உணவு உண்ணும் நேரங்களில், சிறிது இஞ்சிச் சாறு, எலுமிச்சஞ் சாறு, தேன் இவற்றைக் கலந்து இரண்டு மூன்று தேக்கரண்டி அளவு அருந்தி வந்தால், இரத்தம் தூய்மை அடைந்து, முகப்பருக்கள், மரு,வெண்புள்ளிகள் மறைந்து முகம் தூய்மை பெறும். தக்காளி, ஆரஞ்சு சாத்துக்குடி,அன்னாசி ஆகிய பழங்களில் புத்தம் புது சாறுகள் உடல் ஆரோக்கியத் திற்குப் பெரிதும் உதவும்.


    சித்த மருத்துவ குறிப்புகள்



    Sponsored Links
    Arise ! awake ! and stop not till the goal is reached

  2. #92
    sumitra's Avatar
    sumitra is offline Registered User
    Blogger
    Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jul 2012
    Location
    mysore
    Posts
    23,699
    Blog Entries
    18

    Re: Medical Notes - மருத்துவ குறிப்புகள்

    Quote Originally Posted by gowrymohan View Post
    வயிற்று நோயும், தேனின் பயனும் Continuation..........



    சிறந்த மருத்துவரும், மாபெரும் சிந்தனையாளருமான ஹிப்போ கிரேட்ஸ் 107 வயது வரை நோய் நொடியின்றி, திடகாத்திரமாக புலன்கள் பலம் நிறைந்தவராக வாழ்ந்தார். இதற்குக் காரணம் தேன்தான். "ஒவ்வொரு நேரமும், உணவு உண்ணும்போது தேனையும் சேர்த்து உண்டு வந்தேன்" என்று கூறினார் அவர்.

    நாம் உண்ணும் உணவுகள் இரைப்பையில் சென்று சேருகிறது. அங்கு ஜீரண உறுப்புகளெல்லாம் ஒன்று சேர்ந்து உணவை ஜீரணித்து பலவித சத்துக்களைத் தனித்தனியாகப் பிரித்து, பின்பு உடல் முழுவதும் அனுப்புகின்றன. இந்தப் பணியினை இரைப்பை மிகச் சிறப்பாகச் செய்கிறது. இந்த இரைப்பையின் பணி சீராக நடப்பதற்கு தேன் மிகவும் உதவுகிறது. ஜீரணச் சத்து குறைந்திருந்தால் ஒரு டம்ளர் பாலில் ஒரு ஸ்பூன் தேன் கலந்து சாப்பிட்டால் ஜீரண உறுப்புகள் பலம் பெற்றுவிடும். இரைப்பையின் பணி கெட்டுவிட்டால் உடம்பு அவ்வளவுதான்.

    ஒரு ஸ்பூன் தேனைச் சாப்பிட்டு வந்தால் அரை மணி நேரத்தில் நரம்புகள் சுறுசுறுப்புடன் திகழும். சிலருக்குக் கை, கால்கள், விரல்கள் மற்றும் உடல் நடுங்க ஆரம்பிக்கும். இவர்கள் தினமும் ஒரு டம்ளர் பாலில் ஒரு ஸ்பூன் தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் நிச்சயம் குணம் காண்பார்கள்.

    மூட்டு வலிகளுக்குச் சிறந்த மருந்து தேன்தான். வலி உள்ள இடத்தில் நன்றாகத் தேனைத் தேய்த்துவிட வேண்டும். அத்துடன் எப்பொழுது உணவு உட்கொண்டாலும் ஒரு ஸ்பூன் தேனையும் உடனே உட்கொள்ள வேண்டும். மூட்டுகள் தேயாது, மூட்டுகள் வலிக்காது.

    படுக்கையே கதியாகக் கொண்டிருக்கும் பிணியாளர்கள், பாலில் கொஞ்சம் தேன் கலந்து தவறாமல் குடித்து வந்தால், விரைவில் தெம்பு ஏற்பட்டு சுறுசுறுப்புடன் செயல்படத் தொடங்கிவிடுவார்கள் கொம்புத்தேன், மலைத்தேன், குறிஞ்சித்தேன் என்று தேனில் அறுபது வகை உண்டு. ஒவ்வொரு வகைத் தேனுக்கும் ஒவ்வொரு சிறப்பு குணம் உண்டு.

    ஆஸ்துமா, அலர்ஜி தொல்லைகளிலிருந்து விடுபட தினமும் தேனைப் பருகி வரவேண்டும். 120 கிலோ எடையுள்ள ஆல்பிரட், ஆஸ்திரேலியா நாட்டின் தலைசிறந்த ஓவியர். உடலின் எடையைக் குறைப்பதற்கு இவர் உண்ணாத மருந்துகளில்லை. பார்க்காத வைத்தியமில்லை. ஆனாலும், உடல் எடை குறைந்தபாடில்லை. பின்னர், தேனை உண்டு வந்தார். சில நாட்களில் அவருடைய உடல் எடை குறைய ஆரம்பித்துவிட்டது.

    இத்தகைய சிறப்புள்ள தேன் கெட்டியாக, தெளிவானதாக, வெளிறிய தங்கத்தை ஒத்த நிறத்தில் இருக்கும். நமது உடலுக்கு கார்போஹைட்ரேட் சக்திகளை அளித்து, நமக்குத் தேவையான சக்தியைத் தருகிறது. பிற உணவுகளைப் போல் வயிற்றில் தங்கிப் புளிக்கும் அபாயமோ, ஜீரணக் கோளாறோ எல்லாம் இதில் இல்லை. இதில் இரும்பு, தாமிரம், மாங்கனீசு, பொட்டாசியம் போன்ற சத்துக்கள் உள்ளதால் நல்ல இரத்த விருத்தி ஏற்படும்.

    சோர்வுற்றநிலை, அதிக வேலை, பசியின்மை, அதிக அமிலத்தன்மை, பித்தம் சம்பந்தமான தொல்லைகள், இரத்தக்குழாய் தொடர்பான சில தொல்லைகள், இருதயத் தசைகளுக்குப் போதுமான இரத்தம் இன்மையால் ஏற்படும் வலி, தொற்று நோய்க் கிருமிகளால் உண்டான காய்ச்சல், மூளைக்கு அதிக வேலை கொடுத்ததால் ஏற்பட்ட சோர்வு, கர்ப்பிணிகளுக்கு ஏற்படும் காலை நேரத் தொல்லைகள், ஹைபோகிளை சீமியா எனப்படும் இரத்தத்தில் சர்க்கரைச் சத்து குறைந்த நிலை போன்றவைகளுக்குத் தேன் மிகுந்த பயனுள்ளது. ஒரு மேசைக்கரண்டி தேனை இரவில் படுக்கும்போது உண்டு. வந்தால் அடிக்கடி சிறுநீர் கழிக்கும் நிலை மாறும். நரம்புத் தளர்ச்சிக்குத் தேனைவிடச் சிறந்த மருந்து இல்லை. தேனை துளசிச் சாற்றில் கலந்து உபயோகிப்பது சளி, தொண்டை வீக்கம், பிராங்டீஸ் எனப்படும் சுவாசத் தொல்லை போன்றவைகளுக்கு மிகவும் நல்லது.
    very useful information thank you Gowrymohan

    gowrymohan likes this.

  3. #93
    sumitra's Avatar
    sumitra is offline Registered User
    Blogger
    Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jul 2012
    Location
    mysore
    Posts
    23,699
    Blog Entries
    18

    Re: Medical Notes - மருத்துவ குறிப்புகள்

    Quote Originally Posted by gowrymohan View Post
    இயற்கையோடு இணைந்து வாழ்வோம்


    மனிதன் இயற்கையை ஒட்டி வாழ்ந்து வந்தால் நோய்கள், பிரச்சினைகள் இல்லாத ஆரோக்கிய ஆனந்த வாழ்க்கையை நிச்சய மாகப் பெற முடியும். ஆனால் நாம் இயற்கைக்கு முரண்பட்டு எத்தனையோ காரியங்களைச் செய்கிறோம். அதுதான் பிரச்சினைகளுக்கு ஆணிவேர்.

    நமது உடலில் இரத்தம் தூய்மையாக இருக்க, இயற்கை தரும் உணவு தேன். தினமும் ஒரு டம்ளர் வெது வெதுப்பான நீரில் ஒரு தேக்கரண்டி தேன் கலந்து பருகி வந்தால் ரத்தத்தில் உள்ள குற்றங்கள் நீங்கும்.

    உடல் பருமனைக் குறைக்க வேண்டுமானால் முள்ளங்கி அல்லது கேரட்டைத் துருவி மேலாகச் சிறிது தேன் கலந்து, அருந்தி வந்தால் உடலில் தேவையற்ற கொழுப்பு குறைந்து பருமன் குறையும்.

    ஜீரணக் கோளாறுகள் உடையவர்கள் காலையில் வெறும் வயிற்றில் வெது வெதுப்பான நீரில் எலுமிச்சம்பழம் பிழிந்து பருகினால் ஜீரணக் கோளாறுகள் சீரடையும். ரத்தமும் சுத்தம் அடையும்.

    விரல் நகங்கள் சிதைந்து வலிமை அற்றதாய் இருந்தால், சுண்ணாம்புச் சத்துள்ள உணவு வகைகளை உண்ண வேண்டும். பால் இதற்கு மிகவும் சிறந்த பலன்களை அளிக்கும்.

    தலைமுடி நன்கு வளர, கீரைகள், கொத்துமல்லி, கறிவேப்பிலை, பால் பொருட்கள், முருங்கைக்காய் முதலிய வற்றை அதிகமாக உணவில் சேர்த்து வந்தால் முடி செழித்து வளரும். கறி வேப்பிலைச் சாறும் தேங்காய் எண்ணெயும் கலந்து நன்கு காய்ச்சி அந்த எண்ணெயை தலைமுடிக்குப் பயன்படுத்தி வந்தால் முடி கருத்து,செழித்து வளரும்.

    தக்காளியைப் பச்சையாகப் பச்சடியாகவோ, சாறாகவோ அருந்தி வந்தால், தோலின் நிறம் கூடும். ரோஜா இதழ்களை தேனில் ஊறுவைத்துத் தயாரிக்கப்படும் குல்கந்து உண்டு வந்தால் தோலின் நிறம் கூடி பளபளப்பு பெறும்.

    கேரட் கண்பார்வைக்கு நல்லது என்பது அனைவரும் அறிந்ததே இதனை தினமும் பச்சையாக உண்டு வந்தால் கண்பார்வை கூர்மை பெறும்.
    உணவு உண்ணும் நேரங்களில், சிறிது இஞ்சிச் சாறு, எலுமிச்சஞ் சாறு, தேன் இவற்றைக் கலந்து இரண்டு மூன்று தேக்கரண்டி அளவு அருந்தி வந்தால், இரத்தம் தூய்மை அடைந்து, முகப்பருக்கள், மரு,வெண்புள்ளிகள் மறைந்து முகம் தூய்மை பெறும். தக்காளி, ஆரஞ்சு சாத்துக்குடி,அன்னாசி ஆகிய பழங்களில் புத்தம் புது சாறுகள் உடல் ஆரோக்கியத் திற்குப் பெரிதும் உதவும்.


    சித்த மருத்துவ குறிப்புகள்
    very useful and essential collection of medical tips. thank you Gowrymohan

    Amirporkodi likes this.

  4. #94
    gowrymohan's Avatar
    gowrymohan is offline Registered User
    Blogger
    Ruler's of Penmai
    Real Name
    Gowry Shanmuganathan
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    Sri Lanka
    Posts
    13,960
    Blog Entries
    380

    Re: Medical Notes - மருத்துவ குறிப்புகள்

    Quote Originally Posted by Subhasreemurali View Post
    Thanx for the useful info gowry

    You are welcome and Thank you Subha.

    Amirporkodi likes this.

    அன்புடன் கௌரி.


    "உன்னால் சாதிக்க இயலாத காரியம் என்று எதுவும் இருப்பதாக ஒருபோதும் நினைக்காதே!" - விவேகானந்தர்


    எனது கவிதை மொட்டுகள்




  5. #95
    gowrymohan's Avatar
    gowrymohan is offline Registered User
    Blogger
    Ruler's of Penmai
    Real Name
    Gowry Shanmuganathan
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    Sri Lanka
    Posts
    13,960
    Blog Entries
    380

    Re: Medical Notes - மருத்துவ குறிப்புகள்

    Quote Originally Posted by sumitra View Post
    very useful information thank you Gowrymohan
    Quote Originally Posted by sumitra View Post
    very useful and essential collection of medical tips. thank you Gowrymohan
    Thank you so much Sumitra.


    அன்புடன் கௌரி.


    "உன்னால் சாதிக்க இயலாத காரியம் என்று எதுவும் இருப்பதாக ஒருபோதும் நினைக்காதே!" - விவேகானந்தர்


    எனது கவிதை மொட்டுகள்




  6. #96
    gowrymohan's Avatar
    gowrymohan is offline Registered User
    Blogger
    Ruler's of Penmai
    Real Name
    Gowry Shanmuganathan
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    Sri Lanka
    Posts
    13,960
    Blog Entries
    380

    Re: Medical Notes - மருத்துவ குறிப்புகள்

    மரபணுக்களை பாதிக்கும் தூக்கமின்மை

    முறையான குறைந்தபட்ச தூக்கமில்லாமல் இருந்தால் மனித உடலின் செயற்பாட்டை கடுமையாக பாதிக்கும் என்று விஞ்ஞானிகள் கண்டறிந்திருக்கிறார்கள். இது தொடர்பாக நடத்தப்பட்ட ஆய்வில் தொடர்ந்து ஒருவார காலத்திற்கு ஒரு நாளைக்கு ஆறு மணி நேரத்துக்கும் குறைவாக தூங்கும்படி செய்யப்பட்டபோது சம்பந்தப்பட்டவர்களின் மரபணுக்களில் நூற்றுக்கணக்கானவற்றில் கடுமையான மாற்றங்கள் ஏற்பட்டதாக இந்த ஆய்வில் ஈடுபட்ட விஞ்ஞானிகள் தெரிவித்திருக்கிறார்கள்.

    இந்த ஆய்வுக்காக 26 பேரை ஒரு வார காலம் ஒரு நாளைக்கு பத்து மணி நேரம் தூங்கவைத்து அவர்களின் இரத்தத்தை எடுத்து பரிசோதனை செய்தனர். அடுத்து இவர்களை ஒரு வார காலத்திற்கு ஆறு மணிக்கும் குறைவாக தூங்கவைத்து அதன்பிறகு அவர்களின் இரத்த மாதிரிகளை எடுத்து பரிசோதனை செய்தனர்.

    இதில் எழுநூற்றுக்கும் அதிகமான மரபணுக்கள் மாற்றமடைந்திருப்பதை இவர்கள் கண்டறிந்தனர். குறிப்பாக மனிதர்களின் அன்றாட செயற்பாட்டுக்கு பெரிதும் தேவைப்படும் மரபணுக்களில் இந்த மாற்றங்கள் கூடுதலாக இருப்பதை இந்த ஆய்வின் முடிவுகள் காட்டுவதாக விஞ்ஞானிகள் தெரிவித்திருக்கிறார்கள்.

    போதுமான தூக்கமின்மை மனிதர்களின் ஆரோக்கியத்தை கடுமையாக பாதிக்கிறது என்பதை இந்த ஆய்வின் முடிவுகள் காட்டுவதாக விஞ்ஞானிகள் தெரிவித்திருக்கிறார்கள். குறிப்பாக தூக்கமின்மை காரணமாக, இதய நோய்கள், சர்க்கரை நோய், கூடுதல் உடல் பருமன், குறைவான மூளைச் செயற்பாடு ஆகியவை உருவாகலாம் என்று இந்த ஆய்வை மேற்கொண்டவர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.

    ஆரோக்கியமான வாழ்வை விரும்புபவர்கள் அவசியம் ஒரு நாளைக்கு எட்டு மணி நேரம் தூங்க வேண்டும் என்பது இவர்களின் அறிவுரை.


    -பெண்மணி.


    அன்புடன் கௌரி.


    "உன்னால் சாதிக்க இயலாத காரியம் என்று எதுவும் இருப்பதாக ஒருபோதும் நினைக்காதே!" - விவேகானந்தர்


    எனது கவிதை மொட்டுகள்




  7. #97
    gowrymohan's Avatar
    gowrymohan is offline Registered User
    Blogger
    Ruler's of Penmai
    Real Name
    Gowry Shanmuganathan
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    Sri Lanka
    Posts
    13,960
    Blog Entries
    380

    Re: Medical Notes - மருத்துவ குறிப்புகள்

    உடல் நலத்தை கெடுக்கும் தூக்க மாத்திரை

    வேலை பார்க்கும் அனைவருக்கும் இருக்கும் பிரச்சினைகளில் ஒன்றுதான் தூக்கமின்மை. சிலருக்கு வேலைப்பளு, ஆரோக்கியமில்லா வாழ்க்கை முறையால் தூக்கம் வராமல் தவிக்கின்றனர். அதனால் சிலபேர் தூக்கமாத்திரை சாப்பிடுவார்கள். தூக்கம் வரவில்லை என்று தூக்க மாத்திரை சாப்பிடுவதால் உடம்புக்குத்தான் கேடு வரும்.

    * தூக்க மாத்திரை ஒரு போதைப் பொருள் மாதிரி. அதை அடிக்கடி சாப்பிட்டால் நாம் அதற்கு அடிமையாகிவிடுவோம். அதன்பிறகு நமக்கு வழக்கமாக தூக்கம் வந்தால்கூட தூக்க மாத்திரை போடாமல் நிம்மதியாக தூங்க முடியாது. தூக்கமும் வராது.

    * தூக்க மாத்திரை சாப்பிட்டால் நாம் சுவாசிப்பதில் பிரச்சினை வரும். மேலும் ஆஸ்துமா, சுவாசக் கோளாறு பிரச்சினை இருப்பவர்கள் தூக்க மாத்திரை சாப்பிடக் கூடாது.

    * சிலர் தூக்க மாத்திரையை ஜூஸ் அல்லது மதுவில் கலந்து சாப்பிடுவார்கள். அப்படி சாப்பிடுவது உடலுக்கு மிகவும் ஆபத்தானது. மேலும் மதுவில் கலந்து சாப்பிட்டால், சில சமயங்களில் மரணம் கூட ஏற்படலாம். முக்கியமாக தூக்க மாத்திரையை திராட்சைப் பழச்சாறுடன் சாப்பிட வேண்டாம்.

    * தூக்க மாத்திரை சாப்பிட்டால் அடிக்கடி காலையில் தலைவலி, மயக்கம், சோர்வு, அதிக தாகம் போன்றவை ஏற்படும்.

    *தூக்கம் அதிகம் வருவதால் பசியைக்கூட மறந்திவிடுவோம். இதனால் உடலில் உள்ள சக்தி குறைந்து,தலைச்சுற்றல், உடல் நடுக்கம் போன்றவை ஏற்படும். ஆகவே தூக்க மாத்திரையை மருத்துவர் ஆலோசனை இல்லாமல் சாப்பிடுவது ஆபத்தானது.


    - பெண்மணி.


    அன்புடன் கௌரி.


    "உன்னால் சாதிக்க இயலாத காரியம் என்று எதுவும் இருப்பதாக ஒருபோதும் நினைக்காதே!" - விவேகானந்தர்


    எனது கவிதை மொட்டுகள்




  8. #98
    indiragandhi28's Avatar
    indiragandhi28 is offline Citizen's of Penmai
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    mumbai
    Posts
    598

    Re: Medical Notes - மருத்துவ குறிப்புகள்

    very useful info.thanks for sharing gowry

    gowrymohan likes this.

    என்றும் அன்புடன்

    ​இந்திரா

  9. #99
    gowrymohan's Avatar
    gowrymohan is offline Registered User
    Blogger
    Ruler's of Penmai
    Real Name
    Gowry Shanmuganathan
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    Sri Lanka
    Posts
    13,960
    Blog Entries
    380

    Re: Medical Notes - மருத்துவ குறிப்புகள்

    Quote Originally Posted by indiragandhi28 View Post
    very useful info.thanks for sharing gowry
    Thank you Indiragandhi.


    அன்புடன் கௌரி.


    "உன்னால் சாதிக்க இயலாத காரியம் என்று எதுவும் இருப்பதாக ஒருபோதும் நினைக்காதே!" - விவேகானந்தர்


    எனது கவிதை மொட்டுகள்




  10. #100
    gowrymohan's Avatar
    gowrymohan is offline Registered User
    Blogger
    Ruler's of Penmai
    Real Name
    Gowry Shanmuganathan
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    Sri Lanka
    Posts
    13,960
    Blog Entries
    380

    Re: Medical Notes - மருத்துவ குறிப்புகள்







    அன்புடன் கௌரி.


    "உன்னால் சாதிக்க இயலாத காரியம் என்று எதுவும் இருப்பதாக ஒருபோதும் நினைக்காதே!" - விவேகானந்தர்


    எனது கவிதை மொட்டுகள்




loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter