Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree1102Likes

Medical Notes - மருத்துவ குறிப்புகள்


Discussions on "Medical Notes - மருத்துவ குறிப்புகள்" in "General Health Problems" forum.


 1. #111
  Amirporkodi's Avatar
  Amirporkodi is offline Commander's of Penmai
  Real Name
  Porkodi.A
  Gender
  Female
  Join Date
  Mar 2013
  Location
  chennai
  Posts
  1,885

  Re: Medical Notes - மருத்துவ குறிப்புகள்

  பப்பாளி பழத்தின் பண்புகள்

  வருடம் முழுவதும் கிடைக்கக்கூடிய பழம்இது. இதிலும் வைட்ட மின் ஏ உயிர் சத்து நிறைய இருக்கிறது. பல் சம்மந்தமானகுறை பாட்டிற்கும், சிறு நீர்ப்பையில் உண்டாகும் கல்லை கரைக்கவும் பப் பாளிசாப்பிட்டால் போதும். மேலும்- நரம்புகள் பலப் படவும், ஆண்மை தன்மைபலப்படவும், ரத்த விருத்தி உண்டாகவும், ஞாபக சக்தியை உண்டு பண்ணவும்பப்பாளி சாப்பிடுங்கள்.

  மாதவிடாய் சரியான அளவில் இன்றிகஷ்டப்பட்டு கொண்டி ருக்கும் பெண்மணிகள் தினமும் பப்பாளிப்பழம் உண்டுவந்தால் மாதவிடாய் குறைபாடு சீராகும். அடிக்கடி பப்பாளி பழத்தினை உண்டுவருபவர்கள் எவ்வகை நோய்க்கும் ஆளாக நேரிடாது. எந்த வகையான தொற்று நோய்பரவினாலும், அது இவர்களை தாக்காது. பப்பாளி பழத்தில் இயற்கையாகவேவிஷக்கிருமிகளை கொல்லும் ஒரு வகை சத்து இருப்பதால் பப்பாளி பழத்தைசாப்பிடுபவர்களின் ரத்தத்தில் நோய் கிருமிகள் தங்கி நோயை உண்டு பண்ணவாய்ப்பில்லை.மருத்துவக் குணங்கள்:

  பப்பாளி பழத்தை அடிக்கடி குழந்தைகளுக்கு கொடுத்து வர உடல் வளர்ச்சி துரிதமாகும். எலும்பு வளர்ச்சி, பல் உறுதி ஏற்படும்.

  பப்பாளிக் காயை கூட்டாக செய்து உண்டு வர குண்டான உடல் படிப்படியாக மெலியும். தொடர்ந்து பப்பாளிப் பழத்தை சாப்பிட்டு வர கல்லீரல் வீக்கம் குறையும்.

  பப்பாளிப் பழத்தை தேனில் தோய்த்து உண்டு வர நரம்புத் தளர்ச்சி குறையும்.

  நன்கு பழுத்த பழத்தை கூழாக பிசைந்து தேன் கலந்து முகத்தில் பூசி, ஊறிய பின் சுடுநீரால் கழுவி வர முகச்சுருக்கம் மாறி, முகம் அழகு பெறும்.

  பப்பாளி விதைகளை அரைத்து பாலில் கலந்து சாப்பிட நாக்குப்பூச்சிகள் அழிந்து விடும்.

  பப்பாளிக் காயின் பாலை வாய்ப்புண், புண்கள் மேல் பூச புண்கள் ஆறும்.

  பப்பாளிப் பாலை, பசும்பாலுடன் கலந்து சேற்றுப் புண்கள் மேல் தடவி வர புண்கள் ஆறும்.

  பப்பாளிப் பாலை குழந்தைகளின் தலையில் ஏற்படும் புண்களில் பூசி வர புண்கள் ஆறும்.பப்பாளி இலைகளை அரைத்து கட்டி மேல் போட்டு வர கட்டி உடையும்.

  பப்பாளி இலைகளை பிழிந்து எடுத்து வீக்கங்கள் மேல் பூசி வர வீக்கம் கரையும்.

  பப்பாளி விதைகளை அரைத்து தேள் கொட்டிய இடத்தில் பூச வலி, விஷம் இறங்கும்.

  பப்பாளிக் காய் குழம்பை, பிரசவித்த பெண்கள் உணவில் சேர்த்து வர பால் சுரப்பு கூடும்.

  100
  கிராம் பச்சைக் காயான பப்பாளியில் 32 மில்லி கிராமும்,சற்றே பழுத்தபப்பாளியில் 40 முதல் 72 மில்லி கிராமும், பாதிக்கு மேல் பழுத்ததில் 53 முதல் 95 மில்லி கிராமும், நன்றாகப் பழுத்ததில் 68 முதல் 136 மில்லிகிராமும், வைட்டமின் சிஇருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது.

  பழுக்காத பச்சைப் பப்பாளித் துண்டுகள் அல்லது சாறை அருந்தினால், குடலிலுள்ள வட்டப்புழுக்கள் வெளியேறும்.

  கல்லீரல் கோளாறுகளுக்கும் பப்பாளி மருத்துவரீதியாக உதவி சரிசெய்யும். முறையான மாதவிலக்கு ஒழுங்குக்கு பப்பாளி உண்பது சரியான வழி.

  அடிவயிற்றுப் பிரச்னைகளுக்கு பப்பாளியே மிகச் சிறந்த மருந்து.

  வயிற்றுக் கடுப்பு, செரிமானமின்மை, அமிலத்தொல்லை,மலச்சிக்கல் இவற்றுக்கெல்லாம் அருமருந்து பப்பாளி.

  முகப்பரு உள்ளவர்கள், பப்பாளிக்காயின் நறுக்கிய உட்பகுதித் துண்டுகளைமென்மையாக முகத்தில் தேய்க்கவேண்டும்.இது முகப்பருக்களைப் போக்கி, முகச்சுருக்கங்களையும் நீக்கி, பொலிவு கூட்டும்.

  பப்பாளிப்பழம் விலை குறைவு ஆனால் அது தரும் பயன்களோ ஏராளம்.பப்பாளிப் பழத்தை தேனில் கலந்து சாப்பிட்டால் நரம்பு தளர்ச்சி குணமாகும்.


  Sponsored Links
  jv_66, gowrymohan and sumitra like this.

 2. #112
  Amirporkodi's Avatar
  Amirporkodi is offline Commander's of Penmai
  Real Name
  Porkodi.A
  Gender
  Female
  Join Date
  Mar 2013
  Location
  chennai
  Posts
  1,885

  Re: Medical Notes - மருத்துவ குறிப்புகள்

  வீ*ட்டிலேயே இரு*க்கு எ*ளிய வை*த்*திய*ம்

  கடுமையான இரும*ல் இரு*ந்தா*ல் 3 கப் தண்ணீருடன் வெற்றிலையையும், மிளகையும் போட்டு கொதிக்க வைத்து குடித்து வரவும்.

  பல் வலி குறைய துளசி இலை 2, கொஞ்சம் உப்பு மற்றும் மிளகுத்தூள் ஆகியவற்றை வலி இருக்கும் இடத்தில் வை*த்து அழு**த்*தி வரவு*ம். வ*லி குறையு*ம்.

  சருமத்தில் உள்ள சிறு தழும்புகளைப் போக்க குளிக்கும் நீரில் துளசி இலைகளை போ*ட்டு குளிக்கவும். *விரை*வி*ல் தழு*ம்புக*ள் மறையு*ம்.

  குழந்தைகளுக்கு ஏற்படும் காய்ச்சல் மற்றும் இருமலுக்கு நீருடன் தேனைக்கலந்து கொடுத்தா*ல் *விரை*வி*ல் இரும**ல் *நி*ற்கு*ம். கா*ய்*ச்ச*ல் குறையு*ம்.

  காரட் மற்றும் தக்கா*ளி*ச் சாறு இதனுடன் கொஞ்சம் தேன் கலந்து குழந்தைகளுக்கு கொடுத்து வந்தால் உட*ல் வ*லிமை பெரும்.

  வயிற்றுப் போக்கை உடனடியாக நிறுத்த கொய்யா இலைகளை மென்று தின்றால் போதுமானது.

  jv_66, gowrymohan, sumitra and 1 others like this.

 3. #113
  gowrymohan's Avatar
  gowrymohan is offline Registered User
  Blogger
  Ruler's of Penmai
  Real Name
  Gowry Shanmuganathan
  Gender
  Female
  Join Date
  Mar 2012
  Location
  Sri Lanka
  Posts
  13,944
  Blog Entries
  380

  Re: Medical Notes - மருத்துவ குறிப்புகள்

  மாரடைப்பு தடுக்கப்படும்

  வாரம் ஒருநாள் விரதம் இருந்தால் மாரடைப்பு ஏற்படும் ஆபத்து குறைவு என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்

  விரதம் இருப்பதன் பயன் குறித்து இங்கிலாந்தின் யுடா பல்கலைக்கழக பேராசிரியர் பெஞ்சமின் ஹோர்ன் தலைமையில் ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டது. இதில் விரதம் இருப்பவர்களுக்கு இதய நோய் ஏற்படுவதற்கான வாய்ப்பு குறைவு என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

  சுமார் 5 ஆயிரம் பேரின் இதயத்தை எக்ஸ்ரே எடுத்துப் பார்த்ததில் மாதம் தோறும் ஒரு நாளாவது விரதம் இருப்பவர்களால் பெரும்பாலானவர்களின் இதய ரத்த குழாய்களில் கொழுப்பால் ஏற்படும் அடைப்புகள் இல்லாதது கண்டுபிடிக்கப்பட்டது.


  தமிழ் - கருத்துக்களம்

  jv_66, sumitra and Amirporkodi like this.

  அன்புடன் கௌரி.


  "உன்னால் சாதிக்க இயலாத காரியம் என்று எதுவும் இருப்பதாக ஒருபோதும் நினைக்காதே!" - விவேகானந்தர்


  எனது கவிதை மொட்டுகள்
 4. #114
  gowrymohan's Avatar
  gowrymohan is offline Registered User
  Blogger
  Ruler's of Penmai
  Real Name
  Gowry Shanmuganathan
  Gender
  Female
  Join Date
  Mar 2012
  Location
  Sri Lanka
  Posts
  13,944
  Blog Entries
  380

  Re: Medical Notes - மருத்துவ குறிப்புகள்

  சக்தி கொடு!

  சின்ன உடல்நலக் கோளாறுகூட, ஒட்டுமொத்த உடலையும் சோர்வடையவைத்துவிடும். இன்றைய வாழ்க்கை முறையில், அனைவரையுமே ஏதாவது ஒரு உடல்நலப் பிரச்னை உலுக்கி எடுத்துக் கொண்டேயிருக்கிறது. அதிலும் பெண்களுக்கு, எலும்பு அடர்த்தி குறைவு, உடல் பருமன், மன அழுத்தம், மெனோபாஸ் நிலை, கர்ப்பம் தொடர்பான பிரச்னைகள் என அதிகமாகப் பாதிப்புகளுக்கு ஆளாக நேரிடுகிறது.

  குடும்பத்தில் அனைவரும் சாப்பிட்டு, கடைசியில் எஞ்சியதை உண்டு வாழும் பழக்கம் இன்றும் சில பெண்களுக்கு உண்டு. குடும்ப உறுப்பினர்களின் ஆரோக்கியத்தில் அதிகம் அக்கறை செலுத்தும் பெண்கள் தங்கள் ஆரோக்கியத்தின் மீது அக்கறை காட்டாதது வேதனைக்குரிய விஷயம். இதனால், பல்வேறு ஊட்டச்சத்து பற்றாக்குறைக்கு ஆளாகி அவதிப்படுகின்றனர். பெண்கள் உண்ணும் உணவில் தவறவிடும் ஊட்டச் சத்துக்களையும், அதைத் தவிர்க்கும் வழிகளையும் பட்டியலிடுகிறார் மூத்த டயட்டீஷியன் பி.வி.லட்சுமி.

  கால்சியம்

  வலிமையாகவும், ஆரோக்கியமாகவும் இருக்க கால்சியம் மிக முக்கியமான ஊட்டச்சத்து. எலும்பு நீண்ட நாள் ஆரோக்கியமாக இருப்பது உள்ளிட்ட சில பணிகளுக்கு கால்சியம் மிகவும் அவசியம். பற்கள் ஆரோக்கியமாக உருவாகவும், தசைகள் மற்றும் இதயம் தன்னுடைய வழக்கமான செயல்பாட்டை மேற்கொள்ளவும் கால்சியம் அவசியம். நாள் ஒன்றுக்கு 1,000 முதல் 1,200 மி.கி வரை ஒருவருக்கு கால்சியம் தேவை. ஆனால் 500 முதல் 600 மி.கி கால்சியமே கிடைக்கிறது.

  கீரைகள், பால் பொருட்களில் அதிக அளவில் கால்சியம் உள்ளது. தினந்தோறும் 300 மிலி பால் மற்றும் தயிர், மோர் எடுத்துக்கொள்ள வேண்டும். கேழ்வரகு உருண்டை, கேழ்வரகு சப்பாத்தி அல்லது தோசை என ஒரு வேளை மட்டும் கேழ்வரகால் தயாரான உணவு வகைகளை உட்கொள்ளுங்கள். ஒரு நாளைக்கு ஒரு கப் அளவுக்கு பச்சைக் காய்கறிகள், கீரை சேர்த்துக்கொள்ளலாம். அகத்தி, முளைக்கீரை, பொன்னாங்கன்னி, கறிவேப்பிலை போன்றவற்றில் அதிக அளவில் கால்சியம் சத்து உள்ளது. தினமும் நான்கு அல்லது ஐந்து பாதாம் பருப்பை எடுத்துக்கொள்வதன் மூலம் கால்சியம் சத்துக் குறைபாட்டை முழுமையாய் தவிர்க்கலாம்.

  jv_66, sumitra and Amirporkodi like this.

  அன்புடன் கௌரி.


  "உன்னால் சாதிக்க இயலாத காரியம் என்று எதுவும் இருப்பதாக ஒருபோதும் நினைக்காதே!" - விவேகானந்தர்


  எனது கவிதை மொட்டுகள்
 5. #115
  gowrymohan's Avatar
  gowrymohan is offline Registered User
  Blogger
  Ruler's of Penmai
  Real Name
  Gowry Shanmuganathan
  Gender
  Female
  Join Date
  Mar 2012
  Location
  Sri Lanka
  Posts
  13,944
  Blog Entries
  380

  Re: Medical Notes - மருத்துவ குறிப்புகள்

  பொட்டாஷியம்

  எலெக்ட்ரோலைட்களில் முக்கியமானது பொட்டாஷியம். தசை மற்றும் நரம்பு மண்டலத்தின் செயல்பாட்டுக்கும், ரத்த அழுத்தம் சரியான அளவில் இருக்கவும் பொட்டாசியம் பெரிதும் உதவுகிறது. போதுமான அளவு பொட்டாஷியம் கிடைக்கவில்லை எனில், சோர்வு, எரிச்சல் போன்ற உணர்வுகள் தோன்றும். இதைத் தவிர்க்க பொட்டாசியம் அதிகம் உள்ள உணவுகளை எடுத்துக்கொள்வதுடன், சோடியம் அளவைக் குறைக்க வேண்டும். இந்த இரண்டு தாது உப்புக்களும் சரியான அளவில் இருப்பது மிகவும் அவசியம். ஒன்று அதிகமானாலும் பிரச்னைதான். நாள் ஒன்றுக்கு 4,700 மி.கி. அளவுக்கு பொட்டாஷியம் தேவை. ஆனால் இதில் பாதி அளவுக்குத்தான் நமக்கு கிடைக்கிறது.

  பொட்டாஷியம் தாவர உணவுகளில் அதிக அளவில் கிடைக்கின்றன. தினமும் உணவில் போதுமான அளவு காய்கறி, பழங்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். பழங்களில் சாத்துக்குடி, ஆரஞ்சு, சப்போட்டா, சீதா பழம், மாம்பழம், செர்ரி, தர்பூசணி, வாழைப்பழம் போன்றவற்றை எடுத்துக்கொள்ளலாம். இளநீரில் பொட்டாஷியம் அதிக அளவில் உள்ளது. ஒரு கிளாஸ் இளநீரில் ஒரு நாளைக்குத் தேவையானதில் 15 சதவிகித பொட்டாஷியம் உள்ளது. காய்கறிகளில், முருங்கைக்காய், பருப்புக் கீரை, முருங்கைக் கீரை, கொத்துமல்லி, சேப்பங்கிழங்கு, உருளை, சர்க்கரைவள்ளிக் கிழங்கு போன்றவற்றை எடுத்துக்கொள்ளலாம்.

  மக்னீசியம்

  நம் உடலில் நடக்கும் நூற்றுக்கணக்கான ரசாயன செயல்பாடுகளுக்கு மக்னீசியம் அவசியம் தேவை. உடலில் உள்ள செல்கள் மற்றும் செல்களின் வளர்ச்சிதை மாற்றப் பணிகளுக்கும், இதயம் சம்பந்தப்பட்ட நோய்களைத் தவிர்க்கவும், கர்ப்ப காலத்தில் காலில் நரம்பு புடைத்தல் போன்ற பிரச்னைகள் வராமல் தடுக்கவும், ரத்த அழுத்தம் சரியான அளவில் இருக்கவும், சோர்வைப் போக்கவும் மக்னீசியம் தேவை. ஒரு நாளைக்கு 350 மி.கி. அளவுக்கு மக்னீசியம் தேவை. ஆனால் இதில் 260 மி.கி. என்ற அளவுக்கே கிடைக்கிறது.

  நார்ச்சத்து மிகுந்த உணவுப் பொருட்களில் மக்னீசியம் நிறைவாக உள்ளது. மக்னீசியம் குறைபாட்டைத் தவிர்க்க புரூகோலி, பச்சை காய்கறிகள், வெங்காயம், முள்ளங்கி போன்றவற்றை எடுத்துக்கொள்வதன் மூலம் மக்னீசியம் பற்றாக்குறையை சரிசெய்ய முடியும். பாதாம், முந்திரி, வால்நட் போன்ற விதைகள் மற்றும் பருப்பு வகைகளிலும் மக்னீசியம் உள்ளது. தவிர காபி, சாக்லெட் போன்றவற்றிலும் உள்ளது. இந்த உணவுகளை எடுத்துக்கொள்வதன் மூலம் மக்னீசியம் பற்றாக்குறையைத் தடுக்கலாம்.

  jv_66, sumitra and Amirporkodi like this.

  அன்புடன் கௌரி.


  "உன்னால் சாதிக்க இயலாத காரியம் என்று எதுவும் இருப்பதாக ஒருபோதும் நினைக்காதே!" - விவேகானந்தர்


  எனது கவிதை மொட்டுகள்
 6. #116
  gowrymohan's Avatar
  gowrymohan is offline Registered User
  Blogger
  Ruler's of Penmai
  Real Name
  Gowry Shanmuganathan
  Gender
  Female
  Join Date
  Mar 2012
  Location
  Sri Lanka
  Posts
  13,944
  Blog Entries
  380

  Re: Medical Notes - மருத்துவ குறிப்புகள்

  வைட்டமின் ஏ

  பார்வை தொடர்பான வைட்டமின் இது. நோய் எதிர்ப்பு மண்டலம், வளர்ச்சி, குழந்தைப்பேறு, எலும்பு வளர்ச்சி, ரத்த செல் உருவாக்கம், தோல், ஈறு உள்ளிட்ட திசுக்கள் ஆரோக்கியம் எனப் பல்வேறு பணிகளைச் செய்கிறது. பெண்களுக்கு வைட்டமின் ஏ ஊட்டச் சத்தானது பருக்கள், உலர் கண், நீர்க் கட்டிகள், குறைப்பிரசவம், கர்ப்பப்பை தொடர்பான நோய்கள் வராமல் தடுக்கிறது. ஒரு நாளைக்கு 700 மைக்ரோ கிராம் வைட்டமின் ஏ தேவை. ஆனால் 550 மைக்ரோ கிராம் என்ற அளவில்தான் வைட்டமின் ஏ கிடைக்கிறது.

  மஞ்சள் நிறக் காய்கறி பழங்களில் கரோட்டின்கள் நிறைவாக உள்ளது. இந்த கரோட்டின்கள் உடலில் வைட்டமின் ஏ ஆக மாற்றப்படும். தவிர பச்சைக் காய்கறிகளில் கீரைகள், கொத்துமல்லி, முருங்கைக் கீரை, கறிவேப்பிலை, புதினா, முள்ளங்கிக் கீரை ஆகியவற்றில் வைட்டமின் ஏ உள்ளது. பழங்களில் மாம்பழம், பப்பாளி, தக்காளியிலும் கரோட்டின் உள்ளது. விலங்குகளில் இருந்து கிடைக்கும் வெண்ணெய், நெய், பால், தயிர், முட்டை மஞ்சள் கரு, கால்நடைகளின் கல்லீரல் மற்றும் மீன் எண்ணெயிலும் இந்த வைட்டமின் நிறைவாக உள்ளது.

  வைட்டமின் ஈ

  ஆக்சிடேஷன் எனப்படும் நாம் சுவாசிக்கும் ஆக்சிஜனானது உடலுக்கு எதிரான பொருளாக மாறும் தன்மையைத் தடுக்கும் ஆற்றல், இந்த வைட்டமினுக்கு உண்டு. அதனால் இதை மிகச் சிறந்த ஆன்டிஆக்சிடன்ட் என்று சொல்வார்கள். சில வகையான புற்றுநோய்கள் வராமல் தடுக்கவும், புறஊதா கதிர்வீச்சில் இருந்து பாதுகாத்து சருமத்துக்கு நிறம் கூட்டி பாதுகாப்பு அளிக்கவும், நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தவும், வயதானவர்களுக்கு அல்சீமர் எனப்படும் மறதிநோய் பாதிப்பைத் தடுக்கும் ஆற்றலும் வைட்டமின் ஈ-க்கு உண்டு. ஒரு நாளைக்கு 15 மி.கி. வைட்டமின் ஈ தேவைப்படுகிறது. ஆனால் ஒருவரால் 55 சதவிகிதம் அளவுக்குத்தான் பெற முடிகிறது.

  வைட்டமின் ஈ உணவு சமைத்தலின்போதும், உணவு பதப்படுத்தும்போதும் எளிதில் மறையக்கூடியது. விதைகள், சூரியகாந்தி விதை, எண்ணெய், கீரை, பாதாம், வால்நட் மற்றும் பப்பாளி, கிவி போன்ற பழங்களில் வைட்டமின் ஈ உள்ளது.  தமிழ் - கருத்துக்களம்

  jv_66, sumitra and Amirporkodi like this.

  அன்புடன் கௌரி.


  "உன்னால் சாதிக்க இயலாத காரியம் என்று எதுவும் இருப்பதாக ஒருபோதும் நினைக்காதே!" - விவேகானந்தர்


  எனது கவிதை மொட்டுகள்
 7. #117
  sumitra's Avatar
  sumitra is offline Registered User
  Blogger
  Ruler's of Penmai
  Gender
  Female
  Join Date
  Jul 2012
  Location
  mysore
  Posts
  23,699
  Blog Entries
  18

  Re: Medical Notes - மருத்துவ குறிப்புகள்

  Very useful medical notes. thank you Gowrymohan

  gowrymohan and Amirporkodi like this.

 8. #118
  gowrymohan's Avatar
  gowrymohan is offline Registered User
  Blogger
  Ruler's of Penmai
  Real Name
  Gowry Shanmuganathan
  Gender
  Female
  Join Date
  Mar 2012
  Location
  Sri Lanka
  Posts
  13,944
  Blog Entries
  380

  Re: Medical Notes - மருத்துவ குறிப்புகள்

  Quote Originally Posted by sumitra View Post
  Very useful medical notes. thank you Gowrymohan
  Thank you so much Sumitra. Welcome dear.


  அன்புடன் கௌரி.


  "உன்னால் சாதிக்க இயலாத காரியம் என்று எதுவும் இருப்பதாக ஒருபோதும் நினைக்காதே!" - விவேகானந்தர்


  எனது கவிதை மொட்டுகள்
 9. #119
  gowrymohan's Avatar
  gowrymohan is offline Registered User
  Blogger
  Ruler's of Penmai
  Real Name
  Gowry Shanmuganathan
  Gender
  Female
  Join Date
  Mar 2012
  Location
  Sri Lanka
  Posts
  13,944
  Blog Entries
  380

  Re: Medical Notes - மருத்துவ குறிப்புகள்
  அன்புடன் கௌரி.


  "உன்னால் சாதிக்க இயலாத காரியம் என்று எதுவும் இருப்பதாக ஒருபோதும் நினைக்காதே!" - விவேகானந்தர்


  எனது கவிதை மொட்டுகள்
 10. #120
  Amirporkodi's Avatar
  Amirporkodi is offline Commander's of Penmai
  Real Name
  Porkodi.A
  Gender
  Female
  Join Date
  Mar 2013
  Location
  chennai
  Posts
  1,885

  Re: Medical Notes - மருத்துவ குறிப்புகள்

  very helpful information about the pasting and vitamins for health thanks for sharing

  gowrymohan and vijivedachalam like this.

loading...

Bookmarks

Posting Permissions

 • You may not post new threads
 • You may not post replies
 • You may not post attachments
 • You may not edit your posts
 •  
Like It?
Share It!Follow Penmai on Twitter