Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree1102Likes

Medical Notes - மருத்துவ குறிப்புகள்


Discussions on "Medical Notes - மருத்துவ குறிப்புகள்" in "General Health Problems" forum.


 1. #161
  gowrymohan's Avatar
  gowrymohan is offline Registered User
  Blogger
  Ruler's of Penmai
  Real Name
  Gowry Shanmuganathan
  Gender
  Female
  Join Date
  Mar 2012
  Location
  Sri Lanka
  Posts
  13,944
  Blog Entries
  380

  Re: Medical Notes - மருத்துவ குறிப்புகள்

  முடி வளர எளிய மருத்துவம்..!!

  முடி உதிர்வதை தடுக்க:
  வேப்பிலை ஒரு கைப்பிடி எடுத்து நீரில் வேகவைத்து ஒரு நாள் கழித்து வேகவைத்த நீரை கொண்டு தலை கழுவி வந்தால் முடி கொட்டுவது நின்று விடும்.

  கடுக்காய், தான்றிக்காய், நெல்லிக்காய் பொடிகளை கலந்து இரவில் தண்ணீரில் காய்ச்சி ஊறவைத்து காலையில் எலுமிச்சை பழச்சாறு கலந்து கலக்கி தலையில் தேய்த்து குளித்து வர முடி உதிர்வது நிற்கும்.

  வெந்தயம், குன்றிமணி பொடி செய்து தேங்காய் எண்ணெயில் ஊறவைத்து ஒரு வாரத்திற்கு பின் தினமும் தேய்த்து வந்தால் முடி உதிர்வது நிற்கும்.

  வழுக்கையில் முடி வளர:
  கீழநெல்லி வேரை சுத்தம் செய்து சிறிய துண்டாக நறுக்கி தேங்காய் எண்ணெயில் போட்டு காய்ச்சி தலைக்கு தடவி வந்தால் வழுக்கை மறையும்.

  இளநரை கருப்பாக:
  நெல்லிக்காய் அடிக்கடி உணவில் சேர்த்து வந்தால் இளநரை கருமை நிறத்திற்கு மாறும்.

  முடி கருப்பாக:
  ஆலமரத்தின் இளம்பிஞ்சு வேர், செம்பருத்தி பூ இடித்து தூள் செய்து தேங்காய் எண்ணெயில் காய்ச்சி ஊறவைத்து தலைக்கு தேய்த்து வர முடி கருப்பாகும்.

  காய்ந்த நெல்லிக்காயை பவுடராக்கி தேங்காய் எண்ணெயுடன் கலந்து கொதிக்க வைத்து வடிகட்டி தேய்த்துவர முடி கருமையாகும்.

  தலை முடி கருமை மினுமினுப்பு பெற:
  அதிமதுரம் 20 கிராம், 5 மில்லி தண்ணீரில் காய்ச்சி ஆறிய பின் பாலில் ஊறவத்து 15 நிமிடம் கழித்து கூந்தலில் தடவி ஒரு மணி நேரம் ஊற வைத்து குளிக்க வேண்டும்.  செம்பட்டை முடி நிறம் மாற:
  மரிக்கொழுந்து இலையையும் நிலாவரை இலையையும் சம அளவு எடுத்து அரைத்து தலைக்கு தடவினால் செம்பட்டை முடி நிறம் மாறும்.

  நரை போக்க:
  தாமரை பூ கஷாயம் வைத்து காலை, மாலை தொடர்ந்து குடித்து வந்தால்நரை மாறிவிடும்.

  முளைக்கீரை வாரம் ஒருநாள் தொடர்ந்து சாப்பிடவும்.

  முடி வளர்வதற்கு:
  கறிவேப்பிலை அரைத்து தேங்காய் எண்ணெயில் கலந்து காய்ச்சி தலையில் தேய்க்கவும்.

  காரட், எலுமிச்சம் பழச்சாறு கலந்து தேங்காய் எண்ணெயில் கலந்து காய்ச்சி தலையில் தேய்க்கவும்.

  சொட்டையான இடத்தில் முடி வளர:
  நேர்வாளங்கொட்டையை உடைத்து பருப்பை எடுத்து நீர் விட்டு மைய அரைத்து சொட்டை உள்ள இடத்தில் தடவிவர முடிவளரும்.

  புழுவெட்டு மறைய:
  நவச்சாரத்தை தேனில் கலந்து தடவினால் திட்டாக முடிகொட்டுதலும் புழுவெட்டும் மறையும்.  - தமிழ்.களம்


  Sponsored Links

  அன்புடன் கௌரி.


  "உன்னால் சாதிக்க இயலாத காரியம் என்று எதுவும் இருப்பதாக ஒருபோதும் நினைக்காதே!" - விவேகானந்தர்


  எனது கவிதை மொட்டுகள்
 2. #162
  gowrymohan's Avatar
  gowrymohan is offline Registered User
  Blogger
  Ruler's of Penmai
  Real Name
  Gowry Shanmuganathan
  Gender
  Female
  Join Date
  Mar 2012
  Location
  Sri Lanka
  Posts
  13,944
  Blog Entries
  380

  Re: Medical Notes - மருத்துவ குறிப்புகள்


  பற்களை எப்படி துலக்க வேண்டும்?

  தற்போது குழந்தைகளுக்கு விதவிதமான பேஸ்ட்டு வருகிறது. அவைகள் ஆரோகியம் தானா.. சற்று சிந்தியிங்கள். ஒரு வெப் தளத்தில் வெளி வந்த நல்ல தகவல். எல்லோருக்குமே வெண்மையான பற்கள் மீது ஆசைதான். ஆனால், பற்களைச் சரியாகப் பராமரிக்காமல் இருந்தால், அவை மஞ்சள் நிறமாகக் காட்சியளிக்கும். சிகரெட் பிடிப்பவர்கள், போதை பாக்குகளைப் பயன்படுத்துபவர்கள், வெற்றிலை போடுபவர்கள் போன்றவர்களின் பற்களைப் பார்த்தால் கறைபடிந்து காணப்படும்.

  அதோடு வாய் துர்நாற்றம் வேறு. பற்களை முறைப்படி துலக்காதது, ஒரே பிரஷ்சை வருடக் கணக்கில் பயன்படுத்துவது, கண்ட கண்ட பேஸ்ட்டை உபயோகிப்பது போன்றவையே இதற்குக் காரணமாகும். உங்கள் பற்களும் முத்துப் போல் வெண்மையாக ஜொலிக்க வேண்டுமா?

  இதோ சில டிப்ஸ்:

  பிரஷ்ஷில் பேஸ்ட் வைக்கும்போது பிரஷ் முழுவதும் வைக்க வேண்டிய அவசியமில்லை. பாதி அளவு வைத்தால் போதுமானது. அந்தந்த நேரத்தில் கிடைக்கும் ஏதாவது ஒரு பேஸ்ட்டைப் பயன்படுத்தாமல், தொடர்ந்து தரமான பேஸ்ட்டைப் பயன்படுத்துங்கள்.

  பல் துலக்கும் போது, கண்ணாடி முன்னால் நின்று மேல்வரிசைப் பற்களை கீழ்வரிசைப் பற்களுடன் ஒட்டாமல் லேசாகத் திறந்து வைத்துக் கொண்டு (ஒரு விரல் அளவுக்கு) துலக்க வேண்டும்.

  பற்களைச் சேர்த்து வைத்து துலக்கும்போது, பற்களில் உள்ள உணவுத் துகள்கள் மற்றும் படலங்கள் வெளியேறாமல் மீண்டும் பல் ஈறுகளின் அடியிலேயே ஒட்டிக்கொண்டு விடும். பற்களுக்கு இடையே சிறிது இடைவெளி விட்டு துலக்கும்போது உணவுத் துகள்கள், படலங்கள் வாய்க்குள் சென்றுவிடும். பின்னர் வாய் கொப்பளிக்கும்போது அவை வெளியேறி விடும்.

  பற்களைத் துலக்க ஆரம்பிக்கும்பொழுது, முதலில் கடைவாய்ப் பற்களில் இருந்து ஆரம்பிக்கலாம். இப்படிச் செய்வதால், மொத்தப் பற்களையும் வரிசையாக பிரஷ் செய்த திருப்தி கிடைக்கும்.

  மேல்வரிசைப் பற்களை மேலிருந்து கீழாகவும், கீழ்வரிசைப் பற்களை கீழிருந்து மேலாகவும் துலக்க வேண்டும்.

  மென்மையான பிரஷ்ஷையே பயன்படுத்த வேண்டும். இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை பிரஷ்ஷை மாற்றுவது நல்லது.

  பற்பொடியை விட பேஸ்ட் கொண்டு பல் துலக்குவதே சிறந்தது. ப்ளோரைடு கலந்த பேஸ்ட்கள் குழந்தைகளின் உடல்நலத்திற்குத் தீங்கு விளைவிக்கும்.
  நாக்கில் உள்ள அழுக்குகளை வெளியேற்ற, டங்க் கிளீனருக்குப் பதிலாக, பிரஷ்ஷின் குச்சங்களைக் கொண்டே சுத்தம் செய்யலாம். ஏனெனில், டங்க் கிளீனர் நாக்கில் உள்ள சுவை நரம்புகளை புண்ணாக்கி விடும்.

  காலையில் எழுந்த உடனும், இரவு படுக்கப்போகும் முன்பும் என ஒருநாளைக்கு இரண்டு முறை பல் துலக்க வேண்டும்.

  சிலருடைய பற்களுக்கு இடையே இடைவெளி காணப்படும். இவர்கள் இன்டர்டென்டல் பிரஷ் கொண்டு உணவுத் துகள்கள் மற்றும் படலங்களை அகற்றலாம்.

  சாக்லேட், ஐஸ்கிரீம் போன்றவற்றைக் குறைவாக சாப்பிட வேண்டும். இவற்றைத் தொடர்ந்து சாப்பிட்டால் விரைவில் பற்சொத்தை ஏற்படும். அதேபோல் அதிக குளிர்ச்சியான பானங்களை அருந்தக் கூடாது.

  ஒவ்வொரு முறையும் சாப்பிட்ட பின்பு இரண்டு, மூன்று முறை நன்றாக வாய் கொப்பளிக்க வேண்டும்.

  மவுத்வாஷை தொடர்ந்து பயன்படுத்தக் கூடாது. பயன்படுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டால் மருத்துவரின் ஆலோசனைப்படி மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

  6 மாதங்களுக்கு ஒருமுறை பல் மருத்துவரிடம் சென்று, பற்களைச் சுத்தம் செய்து கொள்வது அவசியம்.  - Tamilcnn


  jv_66 and priyachandran like this.

  அன்புடன் கௌரி.


  "உன்னால் சாதிக்க இயலாத காரியம் என்று எதுவும் இருப்பதாக ஒருபோதும் நினைக்காதே!" - விவேகானந்தர்


  எனது கவிதை மொட்டுகள்
 3. #163
  gowrymohan's Avatar
  gowrymohan is offline Registered User
  Blogger
  Ruler's of Penmai
  Real Name
  Gowry Shanmuganathan
  Gender
  Female
  Join Date
  Mar 2012
  Location
  Sri Lanka
  Posts
  13,944
  Blog Entries
  380

  Re: Medical Notes - மருத்துவ குறிப்புகள்

  காலை உணவு பற்றி கவலைப்படுவதில்லையா?

  சிலர் காலை உணவு பற்றி கவலைப்படுவதில்லை. காலை உணவே சாப்பிடும் வழக்கம் இல்லாதவர்களும் இருக்கிறார்கள். ஆனால் காலை உணவு கட்டாயம் சாப்பிட வேண்டும். ஏன்? இதோ காரணங்கள்…

  1. காலையில் உடலில் உள்ள சர்க்கரையின் அளவு குறைவாக இருக்கும். அப்போது உடலுக்கு வேண்டிய சக்தியை காலை உணவே தருகிறது. காலை முதல் இரவு வரை நன்கு வேலை செய்ய உடலுக்கு சக்தி தேவைப்படுகிறது. அதற்கு காலை உணவு அவசியம்.

  2. சிலர் எடையைக் குறைக்க காலை உணவை மட்டும் தவிர்த்து மற்ற நேரங்களில் கொஞ்சம் உண்பார்கள். ஆனால் உண்மையில் காலையில் உண்ணாமல் இருந்து நண்பகலில் குறைவாக உண்ண முடியாது. அப்போதும் வயிறு நிறைய சாப்பிடுவார்கள். ஆனால் அது அவர்களுக்குத் தெரியாது. மேலும் அந்த மாதிரியான நேரங்களில் ஆரோக்கியமான உணவையும் பார்த்து உண்ண மாட்டார்கள். எனவே எடை கூடுமே தவிர, குறையாது.

  3. மேலும் காலை உணவை உண்ணாமல் இருந்தால் முதலில் உடலில் சுரக்கும் இன்சுலின் அளவு அதிகரித்து, பின் கலோரியின் அளவு அதிகரிக்கும். மேலும் இது உடலில் ‘மெட்டபாலிக் டிஸாடரை’ ஏற்படுத்தும். இதனால் எடை தான் அதிகரிக்கும்.

  4. வேலைக்குச் செல்பவர்களும், பள்ளிக்குச் செல்லும் மாணவ, மாணவியரும் காலை உணவை உண்ணாமல் சென்றால் அவர்களால் வேலையில் கவனத்தைச் செலுத்த முடியாது. காலை உணவு அவர்களுக்கு ஒரு புத்துணர்ச்சியைத் தந்து கவனத்தை அதிகப்படுத்துகிறது.

  5. காலை உணவை உண்டால் உடலில் இருக்கும் தேவையில்லாத கலோரியானது விரைவில் கரைந்து விடும்.

  6. வீட்டில் குழந்தைகள் இருந்தால், அவர்கள் நீங்கள் நடந்து கொள்ளும் விதத்தையே பின்பற்றுவார்கள். நீங்கள் காலையில் சாப்பிடாமல் இருந்தால் அவர்களும் அதில் கவனம் செலுத்த மாட்டார்கள். எனவே அவர்களின் ஆரோக்கியம் பாதிக்கப்படும். எனவே நீங்கள் முறையாக காலை உணவை உண்பதன் மூலம் அவர்களுக்கு முன்மாதிரியாக இருங்கள்.

  7. காலை உணவை உண்ணும் போது ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளான தானியங்கள், பழங்கள், பால் போன்றவற்றை உண்டால் உடல் ஆரோக்கியமாக இருப்பதோடு, எடையும் கூடாமல் அளவோடு இருக்கும்.

  8. வேலைக்குச் சென்று ‘சிடுசிடு’ வென்று டென்ஷனாக இருக்கிறீர்களா? அதற்குக் காரணமும் காலை உணவைத் தவிர்த்தது தான்.

  எனவே, காலை உணவைக் கைவிடாதீர்கள்!


  - Tamilcnn
  அன்புடன் கௌரி.


  "உன்னால் சாதிக்க இயலாத காரியம் என்று எதுவும் இருப்பதாக ஒருபோதும் நினைக்காதே!" - விவேகானந்தர்


  எனது கவிதை மொட்டுகள்
 4. #164
  priyasarangapan's Avatar
  priyasarangapan is offline Yuva's of Penmai
  Gender
  Female
  Join Date
  Oct 2011
  Location
  bangalore
  Posts
  7,825

  Re: Medical Notes - மருத்துவ குறிப்புகள்

  குளிர்பானம் குடித்ததும் உடலுக்குள் நடக்கும் மாற்றங்கள்!

  10 நிமிடங்களில், குளிர்பானத்தில் உள்ள சர்க்கரை ரத்தத்தில் கலந்து உடல் முழுவதும் பாய்கிறது. ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிக்கிறது. இதைக் கட்டுப்படுத்த முடியாத நிலைக்கு இன்சுலின் தள்ளப்படுகிறது. நிலைமை மோசமடைவதைத் தடுக்க கல்லீரல் பிரச்னையைக் கையில் எடுத்து சர்க்கரையை கொழுப்பாக மாற்றுகிறது.

  40 நிமிடங்கள் கழித்து, குளிர்பானத்தில் இருந்த காஃபின் முழுமையாகக் கிரகிக்கப்படுகிறது. அது ரத்த அழுத்தத்தை அதிகரிக்கிறது. ரத்தத்தில் உள்ள அதிகப்படியான சர்க்கரையை கல்லீரல் கட்டுப்படுத்துகிறது. மூளையில் உள்ள அடினோசின் ரியாக்டர், அரைத்தூக்க நிலையைத் தவிர்க்கிறது.

  45 நிமிடங்கள் கழித்து உடலில் டோபோமைன் என்ற ரசாயனம் அதிக அளவில் சுரக்கப்படுகிறது. இந்த ரசாயனம்தான் மூளையில் மகிழ்ச்சியான நிலை தோன்றக் காரணம்.

  60வது நிமிடங்களில் பாஸ்பரிக் அமிலமானது உடலில் உள்ள கால்சியம், மக்னீசியம் மற்றும் துத்தநாகம் போன்ற தாது உப்புக்களின் அளவைக் குறைக்கிறது.

  டாக்டர் விகடன்

  With Love,
  Priya

 5. #165
  gowrymohan's Avatar
  gowrymohan is offline Registered User
  Blogger
  Ruler's of Penmai
  Real Name
  Gowry Shanmuganathan
  Gender
  Female
  Join Date
  Mar 2012
  Location
  Sri Lanka
  Posts
  13,944
  Blog Entries
  380

  Re: Medical Notes - மருத்துவ குறிப்புகள்

  Ariyaatha thagaval Priya. Thanks for sharing.

  priyachandran and Amirporkodi like this.

  அன்புடன் கௌரி.


  "உன்னால் சாதிக்க இயலாத காரியம் என்று எதுவும் இருப்பதாக ஒருபோதும் நினைக்காதே!" - விவேகானந்தர்


  எனது கவிதை மொட்டுகள்
 6. #166
  gowrymohan's Avatar
  gowrymohan is offline Registered User
  Blogger
  Ruler's of Penmai
  Real Name
  Gowry Shanmuganathan
  Gender
  Female
  Join Date
  Mar 2012
  Location
  Sri Lanka
  Posts
  13,944
  Blog Entries
  380

  Re: Medical Notes - மருத்துவ குறிப்புகள்

  இதுவரை தெரிந்திராத ‘சரஸ்வதி மூலிகை’ அதாவது வல்லாரையின் மருத்துவக் குணங்கள்

  மூலிகைகள் என்ற இயற்கைக் கொடையை ஏராளமாகப் பெற்றிருக்கிறோம். நம்மைச் சுற்றி சாதாரணமாகக் காணப்படும் தாவரங்கள், அசாதாரண மருத்துவ குணங்களைக் கொண்டவை. அந்த வரிசையில் வரும் வல்லாரை வழங்கும் நன்மைகள் அனேகம். அவை பற்றி…


  * வல்லாரை இலையை நிழலில் உலர்த்திப் பொடித்து, பாலில் கலந்து தினமும் இரவு படுக்கைக்குச் செல்லும்முன் அருந்தி வந்தால் வயிற்றுப் பூச்சிகள் அழிந்துபோகும்.


  * வல்லாரை இலையை நன்கு சுத்தம் செய்து, அதனுடன் சின்ன வெங்காயம், பூண்டு, மிளகு சேர்த்து சட்னியாக அரைத்து 48 நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் மாணவ, மாணவிகளுக்கு ஏற்படும் மூளைச் சோர்வை நீக்கி, ஞாபக மறதியைக் குணமாக்கும். ஆனால் வல்லாரைச் சட்னியில் புளியை அறவே தவிர்க்க வேண்டும். உப்பு சேர்த்துக்கொள்ளலாம்.


  * வல்லாரை இலையுடன் சம அளவு கீழா நெல்லி இலை சேர்த்து அரைத்து காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் நீர் எரிச்சல் தீரும்.


  * குழந்தைகளுக்குத் தினமும் 10 வல்லாரை இலைகளை பச்சையாக மென்று சாப்பிடக் கொடுத்தால் மூளை நரம்புகள் வலுப்பெறும். தொண்டையில் ஏற்படும் அவஸ்தைகள் குறையும்.


  * ஞாபக சக்தியைத் தூண்டும் வல்லாரையை ‘சரஸ்வதி மூலிகை’ என்றும் அழைக்கின்றனர்.


  * வல்லாரை, ரத்த சோகையைப் போக்கி ரத்தத்தில் ஹீமோகுளோபின் எண்ணிக்கையை அதிகரிக்கும்.


  * வல்லாரைப் பொடியைக் கொண்டு பல் துலக்கினால் பல்லில் உள்ள கறைகளைப் போக்கும். பல் ஈறுகளைப் பலப்படுத்தும்.


  * இளைப்பு, இருமல், தொண்டைக்கட்டு போன்றவற்றை வல்லாரை போக்கும். காசநோயாளிகளுக்கு வல்லாரை சிறந்த மருந்தாகும்.


  * வல்லாரை, கண் எரிச்சல், கண்ணில் நீர் வடிதல் போன்றவற்றைப் போக்கி கண் நரம்புகளுக்கு நன்மை அளிக்கும்.


  * நீரிழிவு நோயாளிகள் வல்லாரைக் கீரை உண்பது நல்லது. இக்கீரை மலச் சிக்கலைப் போக்கி, வயிற்றுப் புண், குடல்புண்ணை ஆற்றுகிறது.


  * யானைக்கால் வியாதியால் பாதிக்கப்பட்டவர்கள் வல்லாரை இலையை அரைத்துக் கட்டினால் நோயின் தாக்கம் குறையும். அதுபோல விரை வீக்கம், வாயு வீக்கம், கட்டிகளின் மீது பூசி வந்தால் குணம் கிட்டும்.


  * வல்லாரை இலையை முறைப்படி எண்ணையாக்கி, தினமும் தலையில் தேய்த்து வந்தால் உடல் சூடு தணியும். உடல் எரிச்சல் நீங்கும்.


  - Tamilcnn

  jv_66 and priyachandran like this.

  அன்புடன் கௌரி.


  "உன்னால் சாதிக்க இயலாத காரியம் என்று எதுவும் இருப்பதாக ஒருபோதும் நினைக்காதே!" - விவேகானந்தர்


  எனது கவிதை மொட்டுகள்
 7. #167
  Amirporkodi's Avatar
  Amirporkodi is offline Commander's of Penmai
  Real Name
  Porkodi.A
  Gender
  Female
  Join Date
  Mar 2013
  Location
  chennai
  Posts
  1,885

  Re: Medical Notes - மருத்துவ குறிப்புகள்

  பூண்டின் மகத்துவம் மகிமைகள்! ! ! !

  பூண்டை பூஞ்சைக் காளான் மற்றும் கிருமிகளை ஒழித்து நோய்களை ஓட ஓட விரட்டக் கூடியது பூண்டு.

  வயதானவர்கள் தினம் ஒரு தம்ளர் பாலில் 5 பூண்டுகளை வேக வைத்து மஞ்சள் தூள், ஏலம், சர்க்கரை சேர்த்து சாப்பிட ரத்த நாளங்களில் ஏற்படும் அடைப்பு நீங்கி வாதம் தடுக்கப்படும்.

  வலி வீக்கத்தை நீக்கும்.

  பி.பியை சரி செய்யும்.

  சர்க்கரை வியாதியை குறைக்கும்.

  கெட்ட கொழுப்பை நீக்கும்.

  புற்றுநோய் வராமல் தடுக்கும்.

  நரம்பு வீக்கமுறுவது, கால் கை வீக்கம், முடிச்சு முடிச்சாக நரம்பு சுருள்வது இவற்றை சரி செய்யும்.

  தினசரி உணவில் பூண்டைச் சேர்த்து சாப்பிட்டால் பல நோய்களுக்கு நோ என்ட்ரி! 8. #168
  gowrymohan's Avatar
  gowrymohan is offline Registered User
  Blogger
  Ruler's of Penmai
  Real Name
  Gowry Shanmuganathan
  Gender
  Female
  Join Date
  Mar 2012
  Location
  Sri Lanka
  Posts
  13,944
  Blog Entries
  380

  Re: Medical Notes - மருத்துவ குறிப்புகள்

  Quote Originally Posted by Amirporkodi View Post
  பூண்டின் மகத்துவம் மகிமைகள்! ! ! !  தினசரி உணவில் பூண்டைச் சேர்த்து சாப்பிட்டால் பல நோய்களுக்கு நோ என்ட்ரி!

  Poondoda magimai theriyaamalae karikalla saerkkirom. Aanaa ivvalavu talents irukkaa poondukulla.................
  Thanks for sharing Amirporkodi.

  priyachandran likes this.

  அன்புடன் கௌரி.


  "உன்னால் சாதிக்க இயலாத காரியம் என்று எதுவும் இருப்பதாக ஒருபோதும் நினைக்காதே!" - விவேகானந்தர்


  எனது கவிதை மொட்டுகள்
 9. #169
  priyasarangapan's Avatar
  priyasarangapan is offline Yuva's of Penmai
  Gender
  Female
  Join Date
  Oct 2011
  Location
  bangalore
  Posts
  7,825

  Re: Medical Notes - மருத்துவ குறிப்புகள்

  பால் சாப்பிடாவிட்டால் சிறுநீரகக் கற்கள் ஏற்படும்.

  "சிறுநீரகத்தில் கல்லா? பால் சாப்பிடாதீர்கள். பாலில் கால்சியம் அதிகம் இருக்கிறது. அது சிறுநீரகத்தில் கல்லை ஏற்படுத்திவிடும்'' என்பார்கள். ஆனால் இதற்கு நேர்மாறாக, ""பால், தயிர், மோர் போன்றவற்றை நீங்கள் உணவில் சேர்த்துக் கொள்ளாவிட்டால், சிறுநீரகத்தில் கற்கள் தோன்றிவிடும்'' என்கிறார் சிறுநீரகவியல் அறுவைச் சிகிச்சை நிபுணர் டாக்டர் எம்.ஆர்.பாரி. சென்னைஅடையாறில் உள்ள மலர் மருத்துவமனையில் அவரைச்
  சந்தித்துப் பேசினோம்:

  ""பால், தயிர். மோர் போன்றவற்றைச் சேர்த்துக் கொள்ளாவிட்டால் உடலில் கால்சியம் பற்றாக்குறை ஏற்படும். கால்சியத்தின் தேவை காரணமாக, குடல் அதிக அளவில் ஆக்ஸலேட்டை ஈர்த்துக் கொள்ளும். இவ்வாறு ஈர்க்கப்பட்ட ஆக்ஸலேட் ரத்தத்தில் கலந்து சிறுநீரகத்தில் கற்களை ஏற்படுத்திவிடும்'' என்கிறார் அவர்.
  ""நமது நாட்டில் சிறுநீரகக் கல் தோன்றும் பிரச்னை அதிகமிருக்கிறது. இதற்குக் காரணம் நமது வெப்பநிலைதான். அதிக அளவு வெப்பத்தால் உடலில் அதிகம் வியர்க்கிறது. வெளியேறும் வியர்வைக்கு ஏற்ற அளவில் தண்ணீர் குடிக்காவிட்டால், சிறுநீரகக் கற்கள் உருவாகிவிடுகின்றன.

  நமது உணவுமுறையும் கூட இப்போது மாறிவிட்டது. பீட்ஸ, பர்கர் என்று சாப்பிட ஆரம்பித்துவிட்டோம். விலங்குகளின் புரதச் சத்து அதிக அளவில் நமது உடலில் சேர்கிறது. பழங்கள், காய்கறிகளைத் தேவையான அளவு சாப்பிடுவது இல்லை. இவையும் சிறுநீரகக் கற்கள் உருவாகக் காரணம்.
  உடல் உழைப்புக் குறைந்துவிட்டது. நடப்பதும் குறைந்துவிட்டது. இரு சக்கர வாகனங்களில் சென்று அலுவலகத்தில் ஏஸி அறையில் வேலை செய்வது என்று வாழ்க்கைமுறை மாறிவிட்டது. சிறுநீரகக் கற்கள் உருவாக இவையும் காரணம்.

  முன்பைக் காட்டிலும் அதிக அளவு இப்போது பெண்களுக்கும் சிறுநீரகக் கல் பிரச்னை ஏற்படுகிறது. இதற்குக் காரணம் பெண்களின் வாழ்க்கை முறை மாறிவிட்டதே. முன்பு பெண்கள் வீட்டுக்குள்ளேயே இருந்தார்கள். இப்போது படிப்பு, வேலை என்று ஆண்களைப் போலவே அவர்களும் வெளியே செல்வதால், தேவையான அளவு தண்ணீர் குடிப்பதில்லை. உடலுக்குத் தேவையான சத்துள்ள உணவுகளைச் சாப்பிடுவதில்லை.

  அதிக அளவு தண்ணீர் குடிக்க வேண்டும் என்று சொன்னவுடன், சிலர் ஒரே நேரத்தில் 1 லிட்டர் தண்ணீரைக் குடிப்பார்கள். அப்படி குடிக்கக் கூடாது. சாப்பாட்டுக்குச் சிறிது நேரம் முன்பும், சாப்பிட்ட பின்பும் இரண்டு, இரண்டு டம்ளர் தண்ணீர் அருந்தலாம். தாகம் எடுக்கும்போதும் இடையிடையே தண்ணீர் அருந்தலாம். சிலர் காலையில் எழுந்து வெறும் வயிற்றில் 1 லிட்டர், 2 லிட்டர் என்று தண்ணீரைக் குடிப்பார்கள். அப்படிக் குடித்துவிட்டு, அன்றைய நாள் முழுவதும் தேவையான அளவு தண்ணீர் குடிக்காவிட்டாலும் சிறுநீரகக் கற்கள் தோன்றும்.

  எப்போதெல்லாம் சிறுநீர் மஞ்சள் நிறமாகவோ அல்லது வேறு நிறமாகவோ போகிறதோ, எப்போதெல்லாம் சிறுநீர் கழிக்கும்போது எரிச்சல் ஏற்படுகிறதோ, அப்போதெல்லாம் நாம் நமது உடலுக்குத் தேவையான தண்ணீரைக் குடிக்கவில்லை என்று தெரிந்து கொள்ளலாம்.

  சிறுநீரகத்திலோ, சிறுநீர் பாதையிலோ கற்கள் தோன்றிவிட்டால், அவற்றை அகற்ற நவீன மருத்துவமுறைகள் இப்போது வந்துவிட்டன. சிறுநீர் பாதையில் ஒரு கருவியை நுழைத்து கற்களை நீக்கும் முறையும் உள்ளது. சிறுநீரகத்தில் துவாரம் போட்டு கற்களை நீக்கும் முறையும் உள்ளது.

  சிறுநீரகக் கற்களை நீக்க வாழைத்தண்டு சாறை சிலர் அருந்துவார்கள். சிறுநீரகக் கற்கள் இதனால் உடலை விட்டு வெளியேறுமா? என்று உறுதியாகச் சொல்ல முடியாது. அதே சமயம் வாழைத்தண்டு சாறு அருந்துவதால் உடலுக்கு எந்தக் கெடுதியும் இல்லை. வாழைத் தண்டு சாறு ஒரு சிறுநீர் பெருக்கியாக உடலில் செயல்படுவதால், அதிக அளவு சிறுநீர் வெளியேறும்'' என்கிறார் டாக்டர் பாரி.

  நன்றி : ஆரோக்கியமான வாழ்வு

  With Love,
  Priya

 10. #170
  gowrymohan's Avatar
  gowrymohan is offline Registered User
  Blogger
  Ruler's of Penmai
  Real Name
  Gowry Shanmuganathan
  Gender
  Female
  Join Date
  Mar 2012
  Location
  Sri Lanka
  Posts
  13,944
  Blog Entries
  380

  Re: Medical Notes - மருத்துவ குறிப்புகள்

  Payanulla thagaval Priya. Kurippaaga vaelaikku pogum penkal avasiyam therinthukolla vaendiyathu.


  அன்புடன் கௌரி.


  "உன்னால் சாதிக்க இயலாத காரியம் என்று எதுவும் இருப்பதாக ஒருபோதும் நினைக்காதே!" - விவேகானந்தர்


  எனது கவிதை மொட்டுகள்
loading...

Bookmarks

Posting Permissions

 • You may not post new threads
 • You may not post replies
 • You may not post attachments
 • You may not edit your posts
 •  
Like It?
Share It!Follow Penmai on Twitter