Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree1102Likes

Medical Notes - மருத்துவ குறிப்புகள்


Discussions on "Medical Notes - மருத்துவ குறிப்புகள்" in "General Health Problems" forum.


 1. #171
  priyasarangapan's Avatar
  priyasarangapan is offline Yuva's of Penmai
  Gender
  Female
  Join Date
  Oct 2011
  Location
  bangalore
  Posts
  7,825

  Re: Medical Notes - மருத்துவ குறிப்புகள்

  அதிக சூடாக டீ குடிப்பதைத் தவிருங்கள்

  சில பானங்களை சூடாகக் குடித்தால்தான் குடித்த மாதிரி இருக்கும். ஆனால் பலரும் அதிக சூடாக தேநீர் குடிப்பார்கள். அப்படிக் குடிப்பது பல பிரச்சினைகளை ஏற்படுத்தும் என்கிறது சில ஆய்வுகள்.

  மிகவும் சூடாக டீ குடிப்பதால் உணவுக் குழாய் புற்றுநோய் வரும் ஆபத்து அதிகமாக இருக்கிறது என்று இந்திய மருத்துவ நிபுணர்கள் மேற்கொண்ட ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

  வாய் முதல் இரைப்பை வரை உள்ள உணவுக் குழாய் மிகவும் மிருதுவானது. குறிப்பிட்ட அளவில்தான் சூட்டை அது தாங்கக் கூடியதாக உள்ளது. சூடு அதிகமானால் அதன் சுவர் அரிக்கத் துவங்கிவிடும்.

  அதிகமான சூட்டுடன் டீ குடிக்கும் போது உணவுக் குழாய் சுவர்கள் வெகுவாக பாதிக்கப்பட்டு திசுக்கள் பலவீனம் அடைகிறது.

  இதனால் சுவர்ப்பகுதியில் உணவுக்குழாய் புற்றுநோய் கட்டி ஏறப்டும் ஆபத்து ஏற்படும் என்று ஆய்வில் கூறப்பட்டுள்ளது.

  இந்த ஆபத்து சூடாக டீ குடிப்பவர்களுக்கு மட்டுமே, காபி போன்றவை குடிப்பவர்களுக்கு அல்ல என்கிறது ஆய்வு.


  Sponsored Links
  Last edited by priyasarangapan; 7th Aug 2013 at 08:36 PM.
  gowrymohan and priyachandran like this.
  With Love,
  Priya

 2. #172
  priyasarangapan's Avatar
  priyasarangapan is offline Yuva's of Penmai
  Gender
  Female
  Join Date
  Oct 2011
  Location
  bangalore
  Posts
  7,825

  Re: Medical Notes - மருத்துவ குறிப்புகள்

  முளை கட்டிய பயறின் மகத்துவம் தெரியுமா?

  பச்சைப் பயறை வாங்கி வந்து அதனை இரவில் தண்ணீரில் ஊற வைத்து காலையில் தண்ணீரை வடித்து விட்டு ஆறவிடுங்கள். சுமார் 4 மணி நேரம் கழித்து பயறு முளை வந்திருக்கும்.

  இதனைத்தான் முளை கட்டிய பயறு என்கிறோம். பொதுவாக பயறுக்கும், முளை கட்டிய பயறுக்கும் ஒரு வித்தியாசம் உள்ளது. என்னவென்றால், அதில் உள்ள சத்துக்கள்தான்.எந்த தானியத்தையும் முளை வந்த பிறகு அதனை உண்பது உடலுக்கு அதிக சக்திகளைக் கொடுக்கும் என்பது அனைவரும் அறிந்ததே. அதில் மிக முக்கிய இடம் வகிப்பது பயறுதான்.

  100 கிராம் முளை கட்டிய பயறில்,
  30 கலோரிகள்
  3 கிராம் புரதச்சத்து
  6 கிராம் கார்போஹைட்ரேட்
  2 கிராம் நார்ச்சத்து உள்ளது.

  அதிக உடல் உழைப்பும், உடல் பலமும் தேவைப்படுபவர்கள் இந்த முளை கட்டியப் பயறை உணவில் எடுத்துக் கொள்ளலாம். இது உடலுக்கு குளுமையைக் கொடுப்பதால் கோடைக் காலத்தில் குழந்தைகளுக்கும் செய்து கொடுக்கலாம்.

  நன்றி :
  வேர்களை தேடி

  gowrymohan and priyachandran like this.
  With Love,
  Priya

 3. #173
  priyasarangapan's Avatar
  priyasarangapan is offline Yuva's of Penmai
  Gender
  Female
  Join Date
  Oct 2011
  Location
  bangalore
  Posts
  7,825

  Re: Medical Notes - மருத்துவ குறிப்புகள்

  இரத்தம் சுத்திகரிக்க உண்ண வேண்டிய உணவு வகைகள்..!

  உடலில் உள்ள இரத்தம் சுத்தமில்லாமல் இருந்தால் உடல் அசதி, காய்ச்சல், வயிற்றுப் பொருமல், சுவாசக் கோளறுகள் போன்றவை உண்டாகலாம். அதனால் உடலின் அடிப்படை சக்தியான இரத்தத்தை சுத்தமாக வைத்துக்கொள்வது அவசியமாகும். இயற்கை உணவுகள் மூலம் இரத்தத்தை சுத்தமாக வைத்துக்கொள்வது எப்படி? இரத்தத்தை விருத்தி செய்வது எப்படி என்பதை பார்ப்போம்.

  1) பீட்ரூட் கிழங்கு சாப்பிட்டு வந்தால் புதிய இரத்தம் உற்பத்தியாகும்.

  2) செம்பருத்திப் பூவை நடுவில் இருக்கும் மகரந்தத்தை தவிர்த்து சுத்தி உள்ள இதழ்கள் மட்டும் வெறும் வயிற்றில் சாப்பிட்டுவர வெட்டை சூடு தீர்ந்து இரத்தம் விருத்தியாகும்.

  3) முருங்கைக் கீரையை துவரம் பருப்புடன் சமைத்து ஒரு கோழிமுட்டை உடைத்து விட்டு கிளறி நெய் சேர்த்து 41 நாட்கள் சாப்பிட்டு வர இரத்தம் விருத்தியாகும்.

  4) நாவல் பழம் தினமும் சாப்பிட்டால் இரத்தம் விருத்தி விருத்தியாகும்.

  5) இஞ்சிச் சாறுடன் தேன் கலந்து சாப்பிட்டால் இரத்தம் சுத்தப்படுத்தப்படுகிறது.

  6) தக்காளிப் பழம் சாப்பிட்டு வந்தால் இரத்தம் சுத்தமாகும். ஆனால், வாத நோய் உள்ளவர்கள் தவிர்த்தல் நல்லது.

  7) இலந்தைப் பழம் சாப்பிட்டால் இரத்தத்தை சுத்தம் செய்வது மட்டுமில்லாமல், சுறுசுறுப்பாக வைத்துக் கொள்ளும். பசியையும் தூண்டும் தன்மை கொண்டது.

  விளாம்பழம் சாப்பிட்டால் இரத்தத்தில் உள்ள கிருமிகள் அழிந்துபோகும்.

  With Love,
  Priya

 4. #174
  priyasarangapan's Avatar
  priyasarangapan is offline Yuva's of Penmai
  Gender
  Female
  Join Date
  Oct 2011
  Location
  bangalore
  Posts
  7,825

  Re: Medical Notes - மருத்துவ குறிப்புகள்

  ஆண்மைக் குறைவுக்கு காரணமாகும் டெஸ்தெஸ்தரோனை அதிகரிக்க சில இயற்கை வழிகள்!

  டெஸ்டோஸ்டிரோன் என்பது பெண்கள் மற்றும் ஆண்களின் உடம்பில் சுரக்கும் ஒரு ஸ்டீராய்டு ஹார்மோனாகும். செக்ஸ் உணர்வை தூண்டுவது இந்த ஹார்மோன் தான். பெண்களை காட்டிலும் இது ஆண்களுக்கு தான் அதிகமாக சுரக்கிறது. அத்தகைய உடலில் சுரக்கும் டெஸ்டோஸ்டெரோன் அளவு குறைய ஆரம்பித்தால், அது உடல் வளர்ச்சியில் பாதிப்பை ஏற்படுத்தும். அதிலும் முக்கியமாக ஆண்மை குறையத் தொடங்கி விடும். ஆகவே இத்தகைய ஹார்மோனின் அளவை சீராக பராமரிக்க வேண்டும். மேலும் இந்த ஹார்மோன்களின் அளவை அதிகரிப்பதற்கு பல செயல்கள் உள்ளன. குறிப்பாக அதனை உணவுகள் மூலம் அதிகரிக்கலாம். ஆனால் பலருக்கு இந்த ஹார்மோன்கள் குறைவதற்கு பல காரணங்கள் உள்ளன. இப்போது அந்த ஹார்மோன்களை சரியான அளவில் பராமரிக்க, கீழ்கூறியவைகளை மனதில் வைத்துக் கொள்ள வேண்டும்.

  உடல் எடையை குறைக்கவும்

  அதிக எடையுடன் இருந்தால், பல எதிர்மறையான விளைவுகளை சந்திக்க நேரிடும். மேலும் உடலில் கொழுப்பின் அளவு அதிகமாக இருந்தால், அது டெஸ்டோஸ்டிரோன் அளவை அதிகரிக்க விடாமல் தடுக்கும். எனவே டெஸ்டோஸ்டிரோன் அளவை அதிகரிக்க, உடல் எடையை குறைக்கும் முயற்சியில் இறங்க வேண்டும்.

  கனிமங்களை உணவுகளுடன் சேர்த்துக் கொள்ளுதல்

  டெஸ்டோஸ்டிரோன் உற்பத்திக்கு ஜிங்க் மற்றும் மக்னீசியம் போன்ற கனிமங்கள் முக்கிய பங்கு வகிக்கிறது. எனவே இந்த கனிமங்கள் நிறைந்துள்ள உணவுகளை உட்கொள்ள வேண்டும். இது ஆண்களின் உடம்பில் டெஸ்டோஸ்டிரோன் அளவை அதிகரிக்க உதவி புரியும். டெஸ்டோஸ்டிரோன் குறைபாடு இருக்கும் போது, இந்த கனிமங்கள் நிறைந்த உணவுகளை அதிகமாக உட்கொண்டால், இந்த பிரச்சனை பெருமளவில் குறையும். குறிப்பாக இந்த சத்துக்கள் கடல் சிப்பி, நட்ஸ், பூசணிக்காய் விதைகளில் அதிகம் இருக்கும்.

  மன அழுத்தம்

  தொழில் அல்லது குடும்ப வாழ்க்கையில் ஏற்படும் பிரச்சனைகளால் ஏற்படும் மன அழுத்தம், உடல் ஆரோக்கியத்தை பல வழிகளில் பாதிக்கும். மன அழுத்தம் அதீத அளவில் இருக்கும் போது, உடலில் மன அழுத்தத்தை உண்டாக்கும் ஹார்மோன்கள் அதிகமாக சுரக்கும். இந்த ஹார்மோன்கள்உடலில் உள்ள டெஸ்டோஸ்டிரோன் உற்பத்தியை தடுக்கும். அதனால் தியானம் போன்ற எளிய முறைகளை கொண்டு, மன அழுத்தத்தை நீக்கிட வேண்டும்.

  சர்க்கரை உண்ணுதல்

  உடலில் சர்க்கரை அளவு அதிகரித்தால், இன்சுலின் அளவு அதிகரிக்கும். அதிலும் உபயோகிக்கும் சர்க்கரை அளவை பொறுத்து, உடலில் உள்ள டெஸ்டோஸ்டிரோன் அளவும் தானாக குறையும். அதனால் சர்க்கரை உட்கொள்ளுதலில் கட்டுப்பாடு இருப்பது அவசியமாகும். இது முக்கியமாக ஹார்மோன் வளர்ச்சிக்கு தூண்டுகோலாக இருக்கும்.

  ஆரோக்கியமான உணவு

  நற்பதமான, சத்துள்ள ஆரோக்கியமான உணவுகள் பல உடல் பிரச்சனைகளை தீர்த்து வைக்கும். பச்சை காய்கறிகள், பழங்கள், உலர் பழங்கள் போன்றவைகளை சீரான முறையில் சாப்பிட வேண்டும். மேலும் ஆரோக்கியமான கொழுப்பு நிறைந்த உணவையும் உண்ண வேண்டும்.

  ஓய்வு

  தேவையான அளவு ஓய்வும், தூக்கமும் உடலுக்கு மிகவும் அவசியம். இது உடலுக்கு தேவையான வளர்ச்சி ஹார்மோன் உற்பத்திக்கு பெரிதும் துணையாக இருக்கும். எனவே தினமும் குறைந்தது 7-8 மணிநேரம் தூக்கம் அவசியம் என்று வல்லுனர்கள் கூறுகின்றனர். தூக்கத்தில் தான் 70% அளவிலான டெஸ்டோஸ்டிரோன் உடலில் உற்பத்தியாகிறது.

  கடும் உடற்பயிற்சியில் ஈடுபடுதல்

  தொடர்ச்சியாக 45-75 நிமிடங்களுக்கு கடுமையான உடற்பயிற்சியில் ஈடுபடும் போது, அது உடலில் உள்ள டெஸ்டோஸ்டிரோன் வளர்ச்சியை குறைக்கும் என்று ஆய்வுகள் கூறுகிறது. அதனால் சரியான முறையில் திட்டமிட்டு, அளவான உடற்பயிற்சியில் ஈடுபடுவது அவசியம்.

  மதுபானம் பருகுவதில் கவனம் தேவை

  கட்டுப்பாடு இல்லாமல் மதுபானம் பருகுவதால், உடலில் டெஸ்டோஸ்டிரோன் அளவு குறைய ஆரம்பிக்கும். அதிலும் தொடர்ச்சியாக மதுபானம் பருகினால், உடலில் உள்ள டெஸ்டோஸ்டிரோன் அளவு 50 சதவீதம் வரை குறையத் தொடங்கும். எனவே இயற்கையான வழிமுறைகளால் தேவையான அளவு டெஸ்டோஸ்டிரோனை உடலில் பராமரித்தால், தேவையில்லாமல் நோய்வாய்ப்பட்டு மருத்துவமனைக்கு ஓடத் தேவையில்லை.

  With Love,
  Priya

 5. #175
  priyasarangapan's Avatar
  priyasarangapan is offline Yuva's of Penmai
  Gender
  Female
  Join Date
  Oct 2011
  Location
  bangalore
  Posts
  7,825

  Re: Medical Notes - மருத்துவ குறிப்புகள்

  ஆமணக்கு..!

  கை வடிவ மடல்களை மாற்றடுக்கில் கொண்ட வெண் பூச்சுடைய செடி. உள்ளீடற்ற கட்டையினையும் முள்ளுள்ள மூன்று விதைகளைக் கொண்ட வெடிக்கக் கூடிய காய்களையும் உடையது. இதன் விதை கொட்டைமுத்து எனப்பெறும். தமிழகமெங்கும் விளைவிக்கப்படுகிறது. இலை, எண்ணெய் ஆகியவை மருத்துவப் பயனுடையவை.

  இலை வீக்கம் கட்டி ஆகியவற்றைக் கரைக்கக் கூடியது. ஆமணக்கு நெய் மலமிளக்கும், தாது வெப்பு அகற்றும்.

  1. இலையை நெய்தடவி அனலில் வாட்டி மார்பகத்தில் வைத்துக் கட்டிவரப் பால் சுரப்பு மிகும்.

  2. இலையைப் பொடியாய் அரிந்து ஆமணக்கு நெய்விட்டு வதக்கி ஒத்தடம் கொடுத்துக் கட்டி வர மூலக்கடுப்பு, கீல்வாதம், வாத வீக்கம் ஆகியவை தீரும்.

  3. ஆமணக்குத் துளிரை விளக்கெண்ணெயில் வதக்கித் தொப்புளில் வைத்துக் கட்ட வெப்ப வயிற்று வலி தீரும்.

  4. ஆமணக்கு இலையுடன் சமனளவு கீழாநெல்லி இலையைச் சேர்த்து வெண்ணெய் போல் அரைத்து 30 கிராம் காலை மட்டும் மூன்று நாள் கொடுத்து நான்காம் நாள் பேதிக்குச் சாப்பிடக் காமாலை தீரும்.

  5. 30 மி.லி. விளக்கெண்ணெயுடன் சிறிது பசும்பால் கலந்தோ இஞ்சிச் சாறு கலந்தோ கொடுக்க நான்கைந்து முறை பேதியாகும். பசியின்மை, வயிற்றுவலி, சிறுநீர்ப்பாதை அழற்சி, வெட்டை, நீர்க்கடுப்பு, மாதவிடாய்க் கோளாறுகள், இரைப்பிருமல், பாண்டு, ஆறாத கட்டிகள், தொண்டை அழற்சி, மூட்டுவலி ஆகியவை தீரும்.

  6. கண் வலியின் போதும் கண்ணில் மண், தூசி விழுந்த போதும் ஓரிருதுளி விளக்கெண்ணெய் விட வலி நீங்கும்.

  7. தோல் நீக்கிய விதையை மெழுகு போல் அரைத்துப் பற்றுப்போட ஆறாத புண்கள் ஆறும், கட்டிகள் பழுத்து உடையும். மூட்டுவலி, கணுச்சூலை ஆகியவற்றில் தோன்றும் வீக்கம் குறையும்.

  8. வேரை அரைத்துப் பற்றுபோட பல்வலி நீங்கும்.

  selvipandiyan and gowrymohan like this.
  With Love,
  Priya

 6. #176
  selvipandiyan's Avatar
  selvipandiyan is offline Registered User
  Blogger
  Silver Ruler's of Penmai
  Gender
  Female
  Join Date
  Nov 2011
  Location
  Chennai
  Posts
  33,042
  Blog Entries
  14

  Re: Medical Notes - மருத்துவ குறிப்புகள்

  ஆரோக்கிய வாழ்வுக்கு சில குறிப்புகள்:

  * முள்ளங்கி சாப்பிட்டால் வாதம் குணமாகும். முள்ளங்கி இருமல், கபம், குடல் நோய்களுக்கும் சிறந்தது.

  * இரவில் தூங்க அடம் பிடிக்கும் குழந்தைக்கு படுக்கும் முன் சிறிது தேன் கொடுத்தால் அசந்து தூங்கும்.

  * கருவேப்பிலை, மிளகு, சீரகம், சுக்கு ஆகியவற்றை சம அளவில் எடுத்து பொடித்து சாப்பிட்டால் வெயில் காலத்தில் ஏற்படும் மலச்சிக்கல் சரியாகும்.

  * 5 கிராம்பு. கொஞ்சம் சீரகத்தை தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து குடித்தால் உஷ்ண தலைவலி குறையும்.

  * சீரகத்தை தண்ணீரில் கொதிக்க விட்டு ஆறியதும் குடித்தால் ரத்த அழுத்தம் கட்டுப்படும்.

  * இஞ்சி, கொத்தமல்லித் தழையுடன் எலுமிச்சைச் சாறு கலந்து துவையல் செய்து சாப்பிட்டு வந்தால் நன்கு பசி எடுக்கும்.

  * அன்னாசிப்பழத்தை நறுக்கி தேனில் ஊற வைத்து அந்தத் தேனை இரண்டு வாரம் குடித்தால் கல்லீரல் ஆரோக்கியமாகும்.

  * இதய மாற்று அறுவைச்சிகிச்சை செய்தவர்களுக்கு மஞ்சள் தூள் அருமருந்தாகும். இது இதயத்தில் ரத்த ஒட்டத்தை அதிகரிக்கும். திசுக்களின் சேதத்தையும் சரிப்படுத்தும்.


  Last edited by selvipandiyan; 8th Aug 2013 at 08:11 AM.
  gowrymohan likes this.

 7. #177
  selvipandiyan's Avatar
  selvipandiyan is offline Registered User
  Blogger
  Silver Ruler's of Penmai
  Gender
  Female
  Join Date
  Nov 2011
  Location
  Chennai
  Posts
  33,042
  Blog Entries
  14

  Re: Medical Notes - மருத்துவ குறிப்புகள்

  உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்வதற்கு நமக்கு கிடைத்த ஒரு வரப்பிரசாதம் தான் எலுமிச்சை. ஏனெனில் எலுமிச்சையின் நன்மைக்கு அளவே இல்லை. இந்த சிறிய பழத்தில், உடலுக்கு வேண்டிய அனைத்து சத்துக்களும் அடங்கியுள்ளன.

  மேலும் இந்த எலுமிச்சையை உணவில் அதிகம் சேர்த்தால், மிகப்பெரிய பிரச்சனையைக்கூட எளி தில் தீர்த்துவிட முடியும். பொதுவாக எலுமிச்சையைப் பற்றி அனைவருக்கும் தெரிந்தது என்னவென்றால் உடல் பருமன், தொண்டைப்புண் மற்றும் முகப்பரு போன்ற பிரச்சனைகளைப் போக்கும் என்பது தான்.

  ஆனால் இதில் இவற்றைத் தவிர, இன்னும் பலருக்கும் தெரியாத நன்மை கள் நிறைந்துள்ளன. எலுமிச்சையானது உடலின் ஒவ்வொரு பாகங்களுக்கும் மிகவும் சிறந்தது. இப்போது எலுமிச்சையை சாப்பிட்டால், எந்த பிரச்சனைகளைத் தடுக்கலாம் என்று கொடுத்துள்ளோம். அதைப் படித்து, அதில் எலுமிச்சையைப் பற்றிய விஷயங்களை அறிந்தும், தெரிந்தும் கொள்ளலாம்.

  சரியான குடலியக்கத்திற்கு...

  தினமும் காலையில் எழுந்ததும், வெதுவெதுப்பான நீரில் எலுமிச்சை சாற்றினை பிழிந்து, தேன் சேர்த்து குடித்து வந்தால், குடலியக்கம் சீராக செயல்படுவதோடு, குடலில் தங்கியுள்ள அனைத்து நச்சுக் களும் வெளியேறிவிடும்.

  தொண்டை புண்ணை சரிசெய்ய...

  எலுமிச்சையில் ஆன்டி பாக்டீரியல் பொருள் அதிகம் நிறைந்துள்ளது. எனவே எலுமிச்சை ஜுஸில் சிறிது துளசி மற்றும் தேன் சேர்த்து குடித்து வந்தால், தொண்டைப் புண் குணமாகிவிடும்.

  இளமையை தக்க வைக்க...

  எலுமிச்சையில் அதிக அளவில் ஆன்டி ஆக்ஸிடன்ட் டுகள் நிறைந்துள்ளதால், அது பாதிப்படைந்த சரும செல்களை புதுப்பித்து, இளமையான தோற்றத்தை தக்க வைக்கும்.

  உயர் இரத்த அழுத்தத்தைக் குறைக்க...

  எலுமிச்சையில் ரத்த அழுத்தத்தைக் குறைக்கும் பொட்டாசியமும் உள்ளது. எனவே உயர் ரத்த அழுத்தம் இருந்தால், அப்போது உண்ணும் உணவுகளில் எலுமிச்சை சாற்றை பிழிந்து சாப்பிட்டால், ரத்த அழுத்தத்தைக் குறைக் கலாம்.

  நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க...

  எலுமிச்சையில் வைட்டமின் `சி' அளவுக்கு அதிகமாக நிறைந்துள்ளதால், அதனை சாப்பிட்டால், உடலில் நோய் எதிர்ப்பு சக்தியானது அதிகரிக்கும். இதனால் எந்த விதமான நோய் தாக்கு தல்களில் இருந்தும் தப்பிக்கலாம்.

  கொழுப்பை குறைக்க...

  எலுமிச்சை ஒரு சிட்ரஸ் பழம். அத்தகைய பழத்தின் சாற்றை வெதுவெதுப்பான நீரில் கலந்து குடித்தால், உடலில் தங்கியுள்ள தேவையில்லாத கொழுப்புக்களானது கரைக்கப்படும். எனவே உடல் எடையை குறைக்க தினமும் உடற்பயிற்சியை மேற்கொள்ளும் போது, உடற்பயிற்சிக்கு பின், ஒரு டம்ளர் எலுமிச்சை சாற்றை குடிப்பது சிறந்த பலனைத் தரும்.

  குமட்டலை போக்க...

  சிலருக்கு பயணம் மேற்கொள்ளும் போது, வாந்தி வருவது போல் உணர்வார்கள். அவ்வாறு குமட்டல் ஏற்படும் போது, எலுமிச்சையை நுகர்ந்து பார்த்தால், குமட்டலைப் போக் கலாம்.

  வாத நோயை சரிசெய்ய...

  எலுமிச்சையில் நீர்ப் பெருக்கப் பொருள் அதிகம் உள்ளது. அதாவது, எலுமிச்சை சாற்றை அதிகம் பருகினால், அது உடலில் தங்கியுள்ள அதிகப்படியான நீரை சிறுநீராக வெளியேற்றிவிடும். எனவே வாத நோய் உள்ளவர்கள், எலுமிச்சை ஜுஸ் குடித்து வந்தால் நல்லது.

  புற்றுநோயை தடுக்க...

  அனைவருக்குமே எலு ச்சையில் ஆன்டி ஆக்ஸிடன்ட்டுகள் அதிகம் உள்ளது என்று தெரியும். அதே போன்று இதில் பல வகையான புற்றுநோயை தடுக்கும் பொருளும் அதிகம் நிறைந்துள்ளது. எனவே தினமும் எலுமிச்சையை ஜுஸ் போட்டு குடித்து வந்தால், புற்றுநோயின் அபாயத்திலிருந்து விடுபடலாம்.

  தலைவலியை போக்க...

  உடலில் சோர்வு மற்றும் மன அழுத்தம் இருந்தால் வருவது தான் தலைவலி. இத்தகைய தலைவலியைப் போக்குவதற்கு, எலுமிச்சை டீ மிகவும் சிறந்ததாக இருக்கும்.

  நாடாப் புழுக்களை அழிக்க...

  குழந்தைகளுக்கு வயிற்றில் நாடாப்புழுக்களானது இருக் கும். இவ்வாறு வயிற்றில் புழுக்கள் இருந்தால், வயிற்று வலி மற்றும் வழக்கத்திற்கு மாறாக மலம் கழிக்க நேரிடும். இத்தகைய பிரச்சினையை போக்குவதற்கு எலுமிச்சை மிகவும் உதவியாக இருக்கும். எப்படியெனில் எலுமிச்சையில் புழுக்களை அழிக்கக்கூடிய அளவில் சக்தியானது உள்ளது.

  உணவை செரிப்பதற்கு...

  அனைவருக்குமே செரிமானப் பிரச்சனை அவ்வப்போது வரும். இவ்வாறு செரிமானப் பிரச்சனையால் அவஸ்தைப்பட்டால், ஒரு டம்ளர் எலுமிச்சை ஜுஸில், உப்பு மற்றும் சிறிது சர்க்கரை சேர்த்து குடித்தால் குணமாகி விடும்.

  உடலை சுத்தப்படுத்த...

  தினமும் உடலில் நச்சுக்களானது பலவாறு உள்ளே நுழையும். உதாரணமாக, ஜிங்க் உணவுகள் மற்றும் சுற்றுச்சூழல் மாசுபாடு போன்றவற்றின் மூலம் நுழையும். ஆனால் அத்தகைய நச்சுக்களை போக்கும் சக்தி எலுமிச்சைக்கு உள்ளது. எனவே தினமும் ஒரு டம்ளர் எலுமிச்சை ஜுஸ் குடித்தால், உடலில் உள்ள நச்சுக்கள் அனைத்தும் வெளி யேறிவிடும்.

  பற்களை ஆரோக்கியமாக வைக்க...

  எலுமிச்சை சாற்றில், உப்பு மற்றும் கடுகு எண்ணெய் ஊற்றி, அதனை வாயில் ஊற்றி கொப்பளித்தால், பற்களில் உள்ள கறைகள், பாக்டீரியாக்கள் மற்றும் வாய் துர்நாற்றம் போன்றவை நீங்கி, பற்கள் ஆரோக்கியமாக இருக்கும்.

  காயங்களை குணப்படுத்த...

  உடலில் ஏதேனும் வெட்டுக் காயங்கள் ஏற்பட்டால், அப்போது அதனை குணமாக்குவதற்கு, அன்த இடத்தில் சிறிது எலுமிச்சை சாற்றினை தடவினால், காயங்களில் உள்ள பாக்டீரியாக்கள் அழிந்து, காயங்கள் எளிதில் குணமாகிவிடும்.

  முகப்பருவை போக்க...

  சருமத்தில் ஏற்படும் பிரச்சி னைகளை போக்குவ தற்கு ஒரு சிறந்த பொருள் என்றால் அது எலுமிச்சை தான். எனவே தான் சரும பராமரிப்பில் எலுமிச்சை அதிகம் சேர்க்கப்படுகிறது.

  கல்லீரல் பிரச்சனைக்கு...

  எலுமிச்சையை தினமும் உணவில் சேர்த்தால், கல் லீரலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம்.

  பிறப்புறுப்பை சுத்தமாக்க...

  பிறப்புறுப்பை சுத்தமாக வைத்துக் கொள்ள கெமிக்கல் கலந்த பொருட்களை பயன்படுத்த பயமாக உள்ளதாப அப்படியெனில், கெமிக்கல் இல்லாத இயற்கைப் பொரு ளான எலுமிச்சையைக் கொண்டு சுத்தம் செய்தால், பிறப்புறுப்பில் எந்த ஒரு பக்க விளைவும் வராமல் இருக்கும்.

  கண் பிரச்சனையை போக்க...

  எலுமிச்சையில் ரூடின் என்னும் பொருள் உள்ளது. ஆகவே எலுமிச்சை உண வில் சேர்த்தால், கண் பார்வை கூர்மையாவதோடு, ரெட்டினாவில் உள்ள பிரச்சினைகளையும் சரிசெய்யலாம்.

  சிறுநீரகக் கற்களை கரைக்க...

  எலுமிச்சை பழத்தில் சிட்ரிக் ஆசிட் அதிகம் இருக்கிறது. எனவே சிறுநீரகக் கல் பிரச்சனை இருப்பவர்கள், எலுமிச்சை ஜுஸை அவ்வப் போது குடித்து வந்தால், சிட்ரிக் ஆசிட்டானது சிறுநீரகக் கற்களை கரைத்துவிடும். இதுபோன்ற எண்ணற்ற மருத்துவ குணாதிசயத்தை தன்னகத்தே கொண்டுள்ள எலுமிச்சையை நாமும் பல்வேறு பயன்படுத்தி நோய் எதிர்ப்பு சக்தியை உடலில் அதிகரிப்பதோடு நோயின்றியும் வாழ்வோம்.


  gowrymohan and santhi1984 like this.

 8. #178
  selvipandiyan's Avatar
  selvipandiyan is offline Registered User
  Blogger
  Silver Ruler's of Penmai
  Gender
  Female
  Join Date
  Nov 2011
  Location
  Chennai
  Posts
  33,042
  Blog Entries
  14

  Re: Medical Notes - மருத்துவ குறிப்புகள்

  கீரைகள், காய்கறிகள் உடல் வளர்ச்சிக்கும், ஆரோக்கியத்திற்கும் மிகவும் அவசியம். கீரை சத்துமிக்கவை என்பது அனைவரும் அறிந்தது தான். கீரையின் சத்துக்கள் அப்படியே உடலுக்கு கிடைக்க என்ன செய்ய வேண்டும்? இந்தியாவில் பல வகை கீரைகள் உணவாக உட்கொள்ளப்படுகிறது. அவற்றில் மிகவும் பெயர் பெற்றவை- அரைக்கீரை, பாலக்கீரை, தண்டுக்கீரை, புளிச்சக்கீரை, வெந்தயக்கீரை, முருங்கைக்கீரை மற்றும் புதினா தழை போன்றவையாகும்.

  கீரைகள் சுண்ணாம்புச் சத்து, பீட்டா கரோடின், வைட்டமின் `சி' போன்றவற்றை அதிகம் கொண்ட முக்கிய மூலப்பொருளாகும். கீரைகளை தினமும் உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் ரத்தசோகை வருவதை தடுத்து, நல்ல உடல்நலனைப் பெறலாம். இந்தியாவில் ஒவ்வொரு வருடமும் 5 வயதிற்குட்பட்ட சுமார் 30 ஆயிரம் சிறு பிள்ளைகள், வைட்டமின் ஏ குறைபாட்டினால் கண்பார்வை இழக்கும் நிலை ஏற்படுகிறது. கீரைகளில் உள்ள கரோடின் என்னும் பொருளானது உடலில் வைட்டமின் `ஏ' ஆக மாறுவதால் பார்வை இழக்கும் நிலை தடுக்கப்படுகிறது.

  கீரைகளிலுள்ள கரோட்டின் சத்துப்பொருள் அப்படியே நம் உடலுக்கு கிடைக்க கீரைகளை நீண்ட நேரம் வேக வைப்பதை தவிர்க்க வேண்டும். அதிக நேரம் சமைப்பதினால் கேரட்டின் சிதைந்து விடுகிறது. கீரைகள் `பி காம்ப்ளக்ஸ்' வைட்டமின்களையும் கொண்டுள்ளது.

  ஒவ்வொருவரும் தினமும் சாப்பிட வேண்டிய கீரையின் பரிந்துரைக்கப்பட்ட அளவு :

  பெண்களுக்கு 100 கிராம், ஆண்களுக்கு 40 கிராம். பள்ளி செல்லும் சிறுவர்களுக்கு 50 கிராம். கீரை வகைகள் சிறு பிள்ளைகளுக்கு வயிற்றுப் போக்கினை ஏற்படுத்தும் என்று நம்பப்படுகிறது. அதனால் பெரும்பாலான தாய்மார்கள் கீரை உணவை பிள்ளைகளுக்கு கொடுக்காமல் தவிர்க்கின்றனர். பாக்டிரியா கிருமிகள், சிறு பூச்சிகள் மற்றும் மாசுப்பொருட்கள், தண்ணீர் அல்லது மண்ணின் மூலமோ கீரைகள் மாசுபடுகிறது.

  எனவே கீரைகளை நன்கு கழுவி சுத்தம் செய்யாமல் உணவில் சேர்க்கும் போது வயிற்றுப் போக்கினை ஏற்படுத்தலாம். நன்கு கழுவி சுத்தம் செய்து சாப்பிட்டால் இந்தப் பிரச்சினை வராது. கீரைகளை நன்கு சமைத்து, மசித்து கீரையிலுள்ள நார் பொருட்களை நீக்கிய பின்னரே சிறு குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டும். கீரையில் உள்ள சத்துக்கள் முழுமையாக கிடைக்க முதலில் கீரைகளை நீண்ட நேரம் சமைப்பதை தவிர்க்க வேண்டும்.

  கீரைகளை சமைக்கும் பாத்திரங்களை சமைக்கும்போது மூடி வைக்க வேண்டும். கீரைகளை வெயிலில் உலர்த்தக்கூடாது. அப்படி செய்தால் அவற்றில் உள்ள கரோட்டீன் சத்து வீணாகி விடும். கீரைகளை பொரிப்பதையும் தவிர்க்க வேண்டும்.

  gowrymohan likes this.

 9. #179
  selvipandiyan's Avatar
  selvipandiyan is offline Registered User
  Blogger
  Silver Ruler's of Penmai
  Gender
  Female
  Join Date
  Nov 2011
  Location
  Chennai
  Posts
  33,042
  Blog Entries
  14

  Re: Medical Notes - மருத்துவ குறிப்புகள்

  சரியான நேரத்தில் தண்ணிரை அருந்துவதால் ஏற்படும் பலன் ...!

  1.விழித்ததும் அருந்தும் 2 கிளாஸ் நீரால் உள்ளுறுப்புகள் சுறுசுறுப்படையும்.

  2.உணவுக்கு 30 நிமிடங்களுக்கு முன் அருந்தும் 1 கிளாஸ் நீரால் ஜீரணம் அதிகரிக்கும்.

  3.குளிப்பதற்கு முன் அருந்தும் 1 கிளாஸ் நீரால் தாழ்வு இரத்த அழுத்தத்துக்கு உதவும்.

  4.தூங்குமுன் அருந்தும் 1 கிளாஸ் நீரால் மாரடைப்பிலிருந்து தப்பலாம்...!

  sgr37, gowrymohan and santhi1984 like this.

 10. #180
  selvipandiyan's Avatar
  selvipandiyan is offline Registered User
  Blogger
  Silver Ruler's of Penmai
  Gender
  Female
  Join Date
  Nov 2011
  Location
  Chennai
  Posts
  33,042
  Blog Entries
  14

  Re: Medical Notes - மருத்துவ குறிப்புகள்

  அரிசிக் கஞ்சியின் மகத்துவம்..!

  *சாதம் வடித்த கஞ்சியுடன் சிறிது உப்பு கூட்டி பருக, கண்ணெரிச்சல் நீங்கி குளிர்ச்சியடையும். உடல் உஷ்ணம் குறையும்.

  பேதி ஏற்படும்போது அரிசிக் கஞ்சியில் உப்பு சேர்த்து குடித்தாலும், சாதத்தில் ஊற்றி பிசைந்து சாப்பிட்டாலும் நல்லது.

  இரவு வடித்த சாதத்தில் ஒரு டம்ளர் நீர் ஊற்றி மறுநாள் காலையில் அந்த நீரில் உப்பு சேர்த்து குடிப்பது அல்சர் போன்றவற்றிற்கு நல்லது.

  ஒரு வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு அரிசி கழுவிய நீரை லேசாக சூடுபடுத்தி கால் மற்றும் கைகளில் ஊற்ற எலு*ம்பு பலம் பெறும்.

  gowrymohan likes this.

loading...

Bookmarks

Posting Permissions

 • You may not post new threads
 • You may not post replies
 • You may not post attachments
 • You may not edit your posts
 •  
Like It?
Share It!Follow Penmai on Twitter