Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree1102Likes

Medical Notes - மருத்துவ குறிப்புகள்


Discussions on "Medical Notes - மருத்துவ குறிப்புகள்" in "General Health Problems" forum.


  1. #201
    priyasarangapan's Avatar
    priyasarangapan is offline Yuva's of Penmai
    Gender
    Female
    Join Date
    Oct 2011
    Location
    bangalore
    Posts
    7,825

    Re: Medical Notes - மருத்துவ குறிப்புகள்

    மூலிகை நீர்:

    சித்தர்களின் வாக்குப்படி மூலிகைகளைக் கொண்டு தயாரிக்கப்படும் நீர்கள் நோய் தடுப்பில் சிறப்பிடம் பெறுகின்றன. உணவுக்கு உணவாகவும், மருந்துக்கு மருந்தாகவும் பயன்படுகின்றன. இச்சுவை நீர்களை காலை, மாலை வெறும் வயிற்றில் உட்கொள்வதால் விரைவில் பலன் கிடைக்கிறது. சாதாரண சுவைநீர்கள், மூலிகை சேர்வதால் நோய் தடுக்கும் சுகநீராய் மாறுகிறது.

    ஆவாரம்பூ நீர்

    ஆவாரைப் பூத்திருக்க சாவாரைக் கண்ட துண்டோ என்ற பழமொழிக்கு ஏற்ப நீரிழிவுக்கு ஆவாரைப்பூவின் அற்புதத்தை அறியலாம். மஞ்சள் நிறமுள்ள இப்பூ தங்கச்சத்தை தன்னகத்தே கொண்டுள்ளது. ஆவாரம்பூ சுவை நீர் நீரிழிவு, பெரும்பாடு, குடற்புண், நீர்க்கடுப்பு, வெள்ளைப்போக்கு ஆகியன வராமல் தடுக்கிறது. நூறு மில்லி நீரில் பத்து ஆவாரம் பூக்களை போட்டு காய்ச்சி, வடிகட்டி காய்ச்சிய பாலில் கலந்து இனிப்பு சேர்த்து தேவையெனில் காபித்தூள் அல்லது டீத்தூள் கஷாயத்தில் கலந்து காலை, மாலை வெறும் வயிற்றில் குடிக்கவும்.

    கரிசாலை நீர்

    சிறுநீரக செயலிழப்பு, அதிக இரத்தக் கொதிப்பு, புற்றுநோய், காச நோய், வெண்புள்ளி, எலும்பு தேய்மானம் ஆகியன வராமல் கரிசாலை சுவைநீர் தடுக்கிறது. மேற்சொன்ன ஆவாரம்பூ சுவை நீர் தயாரிப்பதுபோல் ஆவாரம்பூத் தூளுக்குப் பதிலாக கரிசாலைதூளை இரண்டு கிராம் போட்டுக் கொள்ளவும். தினசரி காலையில் மட்டும் கரிசாலைச்சுவை நீர் அருந்தி வரவும்.

    செம்பருத்தி நீர்

    செம்பருத்தி பூ நீர் இதய சுவர் ஓட்டை, இதய வால்வு, தேய் மானம், வழுக்கை, இரத்த சோகை ஆகியன வராமல் தடுக்கிறது. இது மாதவிடாய் கோளாறுகளை சரி செய்கிறது. குடல் இறக்கம், கர்ப்பப்பை இறக்கம் ஏற்படாதும் தடுக்கிறது.
    காய்ச்சிய பாலை அடுப்பிலிருந்து இறக்கி வைத்து அதில் அடுக்கு செம்பருத்திப்பூ இதழ்கள் ஐந்து போட்டுப் பத்து நிமிடம் பாலை மூடி வைத்து பின் வடிகட்டி விட வும். பால் சிவப் பாகி இருக்கும். இனிப்பு சேர்த்து வடிகட்டி காலையிலும், மாலையிலும் குடிக்கவும். சளி தொந்தரவு உள்ளவர்கள் பால் காய்ச்சும் போது தோல் நீக்கிய சிறு துண்டு இஞ்சியை நசுக்கி சேர்த்துக் கொள்ளவும்.

    நன்னாரி நீர்

    தோன்றும் மழலைகள் உத்தாமணி வேரால், தோல் நோய்கள் மடிவது நன்னாரி வேரால் என்பதன் மூலம் நன்னாரியின் நற்பண்பை நவிலலாம். நூறு மில்லி நீரில் ஐந்து கிராம் நன்னாரி வேரை நசுக்கிப் போட்டு கொதிக்க வைத்து காய்ச்சி வடிகட்டிய கருமை நிற கஷாயத்தை காய்ச்சிய பாலில் கலந்து இனிப்பு சேர்த்து உபயோகிக்கவும்.

    துளசி நீர்

    குடல் காய்ச்சல், மஞ்சள் காமாலை, மலேரியா, காலரா நோய்கள் வராமல் துளசி சுவை நீர் தடுக்கும். மேலும் குடல்வால் அழற்சி ஏற்படாது. காய்ச் சிய நூறு மில்லி சூடான பாலில் இரண்டு கிராம் துளசி இலை பொடியைக் கலந்து, மூடி வைத்து பத்து நிமிடங்கள் சென்று இனிப்பு சேர்த்து,
    தேவை யெனில் காபி அல்லது டீ கஷாயம் சேர்த்து வடிகட்டி தினசரி காலையில் மட்டும் குடிக்கவும். அடிக்கடி பல ஊர்கள் தண்ணீர் குடிப்போரும், தொற்று நோய்கள் பரவும் காலங்களிலும் இந்த துளசி சுவை நீரை பயன்படுத்தி பலன் பெறலாம்.

    வல்லாரை நீர்

    யானைக்கால், வலிப்பு, மலடு, பக்கவாதம், மூலம், மூட்டுவலி, இரத்தக்குழாய் தடிப்பு போன்ற நோய்கள் வராமல் வல்லாரை சுவை நீர் தடுக்கும். காய சித்திக்கு புளியாரை கபால கோளாறுக்கு வல்லாரை என்பார்கள். வல்லாரை இலைப்பொடி இரண்டு கிராம் எடுத்து மேற்கண்டுள்ள துளசி சுவை நீர் தயாரிப்பதுபோல் வல்லாரை சுவை நீர் தயாரித்துக் கொள்ளவும். காலை, மாலை இருவேளையும் குடிக்கவும். எல்லோருக்கும் என்றும் ஏற்றது வல்லாரை சுவை நீராகும். இச்சுவை நீர்கள் குறிப்பிட்டுள்ள நோய்கள் வராமல் தடுக்கவும், குணப்படுத்தவும் கூடியது. எனவே நோயுள்ளோரும், பயன்படுத்தி பயன் பெறலாம்.



    Sponsored Links
    With Love,
    Priya

  2. #202
    gowrymohan's Avatar
    gowrymohan is offline Registered User
    Blogger
    Ruler's of Penmai
    Real Name
    Gowry Shanmuganathan
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    Sri Lanka
    Posts
    13,937
    Blog Entries
    380

    Re: Medical Notes - மருத்துவ குறிப்புகள்

    All are very very useful information. Thanks for sharing Priya. Antha udampu edai kuraippathu thaan konjam kadinamaanathu..........

    datchu and Amirporkodi like this.

    அன்புடன் கௌரி.


    "உன்னால் சாதிக்க இயலாத காரியம் என்று எதுவும் இருப்பதாக ஒருபோதும் நினைக்காதே!" - விவேகானந்தர்


    எனது கவிதை மொட்டுகள்




  3. #203
    gshanthi's Avatar
    gshanthi is offline Friends's of Penmai
    Real Name
    Shanthi Ganesan
    Gender
    Female
    Join Date
    Jul 2013
    Location
    chennai
    Posts
    204

    Re: Medical Notes - மருத்துவ குறிப்புகள்

    Hi , I am on the way to buy Vaazhaippoo b'cos I avoided it b'cos it takes long time to clean and cut it...but never mind I 'll start eating it hereafter ( after reading your post...)

    sgr37, gowrymohan and Amirporkodi like this.

  4. #204
    Amirporkodi's Avatar
    Amirporkodi is offline Commander's of Penmai
    Real Name
    Porkodi.A
    Gender
    Female
    Join Date
    Mar 2013
    Location
    chennai
    Posts
    1,885

    Re: Medical Notes - மருத்துவ குறிப்புகள்

    இதயம் சில உண்மைகள்! ! ! !

    1. பெண்களின் இதய துடிப்பு ஆண்களை விட அதிகம்.

    பொதுவாக எல்லா பெரிய உயிரினங்களின் இதய துடிப்பு மெதுவாகவும் (யானை - நிமிடத்திற்கு 20-30)சிறிய உயிரினங்களில் இதய துடிப்பு வேகமாகவும் இருக்கும் (எலி -நிமிடத்திற்கு 500-600). மனித இனத்தில் பெண்கள் உருவத்தில் ஆண்களைவிட சிறியவர்களாக இருப்பதால் அவர்களின் இதயத்துடிப்பு வேகமாக இருக்கும்.

    2. மனித இதயத்தின் எடை அரை கிலோகிராமிற்கு குறைவாகவே இருக்கும்.

    3. நீளமான மோதிர விரல் உள்ளவர்களுக்கு மாரடைப்பு வருவதற்கு வாய்ப்பு குறைவு என்பதினை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளார்கள்.

    4. மனிதனின் இதய துடிப்பு ஒரு நாளைக்கு 100,000 தடவைகளும் ஒரு வருடத்திற்கு 30 மில்லியன் தடவைகளும் வாழ் நாளில் 2.5 பில்லியன் தடவைகளும் துடிக்கின்றன.

    5. ஒரு மனிதனின் வாழ்நாளில் சராசரியாக 1 மில்லியன் பேரல் இரத்தத்தை பம்பு (pump) பண்ணுகிறது. (ஒரு பேரல் என்பது 117.34 லிட்டேர்கள் ...நீங்களே கணக்கிட்டு கொள்ளுங்கள்)

    6. பல் ஈறுகளில் நோய்தொற்று உள்ளவர்களுக்கு மாரடைப்பு வருவதற்கு வாய்ப்புகள் அதிகம்.

    7. நம் இதயத்தின் அளவு நமது கையின் ஒரு பிடி அளவே (clenched fist).

    8. கருவில் உருவாகும் முதல் உறுப்பு இதயமே.

    9. நாம் இதயத்தின் மேல் கை வை என்றால் உடனடியாக நாம் நமது கையைநெஞ்சின் இடதுபக்கம் வைப்போம் ஆனால் இதயம் நெஞ்சின் நடுவில்தான் இரண்டு நுரைஈரலுக்கும் மத்தியில் இருக்கிறது. இதயத்தின் அடிபகுதி மட்டுமே சற்று இடப்பக்கம் சாய்ந்து இருக்கும் எனவேதான் நாம் அவ்வாறு உணருகிறோம்.

    10. லப்..டப் ..லப்..டப் ..என்னும் சத்தம் நமது இதயம் ஏற்படுத்துகிறதுஎன்பதுநமக்கு தெரியும்.

    நமது இதயத்தின் வால்வுகள் திறந்து மூடும் போதே இந்த சத்தம்உருவாகிறது.

    நன்றி - விக்கிரவாண்டி-பக்கம்






    gowrymohan and premabarani like this.

  5. #205
    Amirporkodi's Avatar
    Amirporkodi is offline Commander's of Penmai
    Real Name
    Porkodi.A
    Gender
    Female
    Join Date
    Mar 2013
    Location
    chennai
    Posts
    1,885

    Re: Medical Notes - மருத்துவ குறிப்புகள்

    சுண்டைக்காய்யின் மருத்துவ குணங்கள்! ! ! !

    வாரம் இருமுறை சாப்பிட்டால் வயிற்றில் பூச்சி சேராது. ஆஸ்துமா நோயாளிகள் தினசரி சாப்பிட மூச்சுத்திணறல் குறையும். கர்ப்பிணிப் பெண்கள் மாதம் ஒரு நாள் சாப்பிடலாம்.நுரையீரலுக்கு செயல் திறன் தரும். சளியைக் கரைக்கும்.

    நன்றி - ஆயுர்வேதம் மற்றும் சித்த மருத்துவம்.






    sgr37 and gowrymohan like this.

  6. #206
    Amirporkodi's Avatar
    Amirporkodi is offline Commander's of Penmai
    Real Name
    Porkodi.A
    Gender
    Female
    Join Date
    Mar 2013
    Location
    chennai
    Posts
    1,885

    Re: Medical Notes - மருத்துவ குறிப்புகள்

    ஒரு நாளைக்கு நம் உடலுக்குத் தேவையான
    சரிவிகித உணவு என்னென்ன...?

    காலை 6 மணி :

    டீ ,காஃபி அல்லது ஏடு நீக்கப்பட்ட பால்
    அரை கப் (100
    மி.லி.) அதில் ஒரு டீஸ்பூன் சர்க்கரை மட்டுமே சேர்க்க வேண்டும்.

    9 மணி : 2 இட்லி அல்லது இரண்டு தோசை, ஒரு கப் உப்புமா அல்லது ஒரு கப் பொங்கல். இதோடு தேங்காய் சேர்க்காத
    சட்னி வகைகளை சேர்த்துக் கொள்ளலாம்.

    11 மணி : மோர் ஒரு கப், எலுமிச்சை ஜூஸ்
    ஒரு கப், தக்காளி ஜூஸ் ஒரு கப் இவற்றில் ஏதாவது ஒன்றை இரண்டு டீஸ்பூன்
    சர்க்கரை அல்லது சிறிது உப்பு கலந்து பருகலாம்.

    மதியம் 1 மணி : எண்ணெய் இல்லாத
    சப்பாத்தி 2 அல்லது ஒரு கப் சாதத்தை கீரை,
    காய்கள் , ரசம்
    ஆகியவற்றோடு கலந்து சாப்பிடலாம்.

    சாப்பிட்டு ஒருமணி
    நேரம் கழித்து இளநீர் சாப்பிடலாம்.

    மாலை 4 மணி : காபி, டீ குறைந்த அளவு சர்க்கரையுடன் சாப்பிடலாம்.

    மாலை 5.30 மணி : ஆப்பில், கொய்யா,
    மாதுளை இவற்றில் ஏதாவது ஒன்றுடன்
    வேகவைத்த சுண்டல் ஒருகப் சாப்பிடலாம்.

    இரவு 8 மணி : காய்கறி சூப், எண்ணெய்
    இல்லாத சப்பாத்தி அல்லது பருப்பு, கோஸ்
    பொரியலுடம் ஒரு கப் சாதம் சாப்பிடலாம். படுப்பதற்கு முன் ஏதாவது பழம் சாப்பிடலாம். வாழைப்பழம்
    உடல்பருமனுக்கு நண்பன் என்பதால்
    அதை தவிர்த்து விடலாம்.






    sgr37, gowrymohan and gshanthi like this.

  7. #207
    Amirporkodi's Avatar
    Amirporkodi is offline Commander's of Penmai
    Real Name
    Porkodi.A
    Gender
    Female
    Join Date
    Mar 2013
    Location
    chennai
    Posts
    1,885

    Re: Medical Notes - மருத்துவ குறிப்புகள்

    பழங்களின் மரு*த்துவ குணங்களும்! ! ! !

    கற்பூர வாழை கண்ணிற்கு குளிர்ச்சி தரும். செவ்வாழை கல்லீரல் வீக்கம், சிறுநீர் வியாதிகளை குணமாக்கும்.

    பச்சை வாழைப்பழம் குளிர்ச்சியைக் கொடுக்கும். ரஸ்தாளி வாழை கண்ணிற்கும், உடல் வலுவிற்கும் நல்லது.

    பேயன் வாழைப்பழம் வெப்பத்தைக் குறைக்கும். நேந்திரம் பழம் இரும்புச் சத்தினை கொடுக்கும்.

    பப்பாளிப் பழம் மூல வியாதிக்காரர்களுக்கு நல்லது.

    மாம்பழம் ரத்த அழுத்தத்தை சீராக்கும்.

    ஆப்பிள் மலச்சிக்கலைப் போக்கும்.

    திராட்சை இரத்த அழுத்தத்திற்கு நல்லது. ஈரல் சம்பந்தமான நோய் குணமாகும்.

    எலுமிச்சைப் பழம் உடல் சோர்வையும், மலச்சிக்கலையும்போக்கும்.

    செர்ரி பழம் கருப்பை வியாதிகளுக்கு நல்லது.

    மாதுளம் பழச்சாற்றில் பால் சேர்த்து சாப்பிட இரும்புச் சத்து கிடைக்கும். குடல் புழுக்கள் அழியும்.

    அன்னாசிப் பழச்சாறு சாப்பிட சிறுநீர் எரிச்சல் குணமாகும்.

    நாவல் பழம் நீரிழிவைக் கட்டுப்படுத்தும்.

    சாத்துக்குடி இரத்த அழுத்தத்திற்கு நல்லது.

    கமலாப்பழம் உடல் உஷ்ணத்தையும், பித்தக் கோளாறுகளையும் நீக்கும்.

    கொய்யாப்பழம் சர்க்கரை வியாதி உள்ளவர்களுக்கு நல்லது. கல்லீரல் பலப்படும்.

    கோவைப்பழம் சாப்பிட்டால் பல்வலிகுணமாகும்.

    அத்திப்பழம் சாப்பிட்டு வர நரம்புத் தளர்ச்சி குணமாகும்.

    நன்றி - ஆரோக்கியம் & நல்வாழ்வு






    gowrymohan and premabarani like this.

  8. #208
    gowrymohan's Avatar
    gowrymohan is offline Registered User
    Blogger
    Ruler's of Penmai
    Real Name
    Gowry Shanmuganathan
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    Sri Lanka
    Posts
    13,937
    Blog Entries
    380

    Re: Medical Notes - மருத்துவ குறிப்புகள்

    ஒரு நாளைக்கு நம் உடலுக்குத் தேவையான
    சரிவிகித உணவு என்னென்ன...?

    Konjam kashtam thaan. Aanaa aarokyamaa irukkanumnaa follow panna vaendiyathu thaan.

    Fruits pattriya thagaval ellaamae very useful Amirporkodi.


    அன்புடன் கௌரி.


    "உன்னால் சாதிக்க இயலாத காரியம் என்று எதுவும் இருப்பதாக ஒருபோதும் நினைக்காதே!" - விவேகானந்தர்


    எனது கவிதை மொட்டுகள்




  9. #209
    gshanthi's Avatar
    gshanthi is offline Friends's of Penmai
    Real Name
    Shanthi Ganesan
    Gender
    Female
    Join Date
    Jul 2013
    Location
    chennai
    Posts
    204

    Re: Medical Notes - மருத்துவ குறிப்புகள்

    A very useful post,,,,I enjoyed it...

    gowrymohan likes this.

  10. #210
    gowrymohan's Avatar
    gowrymohan is offline Registered User
    Blogger
    Ruler's of Penmai
    Real Name
    Gowry Shanmuganathan
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    Sri Lanka
    Posts
    13,937
    Blog Entries
    380

    Re: Medical Notes - மருத்துவ குறிப்புகள்

    வெற்றிலை


    1. இருமல்-சளி நீங்க
    இருமல், சளி தொல்லை உள்ளவர்களுக்கு வெற்றிலை சிறந்த மருந்து. 2 வெற்றிலை, நடுநரம்பு நீக்கிய 5 ஆடாதொடா இலையுடன் 10 மிளகு, ஒரு பிடி துளசி இலைகளை சேர்த்து ஒன்றிரண்டாக இடித்துக் கொள்ள வேண்டு ம். அதனுடன் 300 மில்லி நீர்விட்டு மூடிய பாத்திரத் தில் நன்றாக கொதிக்க வைத்து 75 மில்லி ஆனவுட ன் வடிகட்டி குடிக்க வேண்டும். இதேபோல் தினமும் 2 அல்லது 3 வேளை சளி, இருமல் இருக்கும்வரை குடிக்கலாம். இப்படி செய்தால் உடனடி நிவாரணம் கிடைக்கும்.


    2. ஆஸ்துமா, மூச்சுக்குழல் அலர்ஜி
    சித்த மருந்துகடைகளில் கிடைக்கும் சுவாசகுடோரி மாத்திரை இரண்டுடன் 2 மிளகும் சேர்த்து, அதை ஒரு வெற்றிலையில் வைத்து வாயில்போட்டு நன்கு மெல்லவேண்டும். தினம் 2 வேளை இவ்வாறு மென்றால் ஆஸ்துமா, மூச்சுக்குழல் அலர்ஜி படிப்படியாக குணமாகும்.


    3. காணாக்கடிக்கு


    எந்த பூச்சி கடித்தது என்று தெரியாமல் ஏற்படும் பாதிப்பான காணாக்கடிக்கு நடுநரம்பு நீக்கிய வெற்றிலை 5, மிளகு 10 ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து இடித்து, 200 மில்லி நீர்விட்டு கொதிக்க வைக்க வேண்டும். அது 50 மில்லியாக ஆனவுடன் தினமும் 2 வேளை சாப்பிட்டு வர காணாக்கடி விரைவில் குணமாகும்.

    4. உற்சாக உணர்விற்கு
    வெற்றிலை, பாக்கு, சுண்ணாம்பு மெல்லும் போது உமிழ்நீர் சுரப்பு தூண்டப்படுகிறது. அத்துடன், ஒருவித உற்சாக உணர்வும் கிடைக்கிறது.

    5. வாத நோய் நீங்க
    வாத நோய்களை குணமாக்கும் வாத நாராயணா எண்ணெய் தயாரிப்பில் வெற்றிலை சாறும் ஒரு முக்கிய மூலப் பொருளாகும்.


    6. தீப்புண் குணமாக
    தீப்புண் குணமாக வெற்றிலையில் நெய் தடவி லேசாக வதக்கி புண்ணின்மீது பற்றாக போடவேண்டும். விரைவில் அந்த புண் குண மாகும்.


    7. நுரையீரல் பலப்பட
    வெற்றிலைச்சாறு 5 மி.லி. யுடன் இஞ்சிச் சாறு 5 மி.லி. கலந்து தினமும் காலை வேளையில் வெறும் வயிற்றில் அருந்தி வந்தால் நுரையீரல் சம்பந்தப்பட்ட நோய்கள் அணுகாது. இவ்வாறு தொடர்ந்து ஒரு மண்டலம் அருந்தி வருவது நல்லது.

    8. வயிற்றுவலி நீங்க
    2 தேக்கரண்டி சீரகத்தை மூன்று தேக்கரண்டி வெண்ணெய் விட்டு நன்கு மைபோல் அரைத்து, 5 வெற்றிலை எடுத்து காம்பு, நுனி, நடு நரம்பு நீக்கி வெற்றிலையின் பின்புறத்தில் அந்த கலவையைத் தடவி சட்டியிலிட்டு வதக் கி பின்பு 100 மிலி நீர்விட்டு நன்றாக கொதிக்க வைத்து ஆறியபின்பு வடிகட்டி கசாயத்தை அருந்தி வந்தால் வயிற்றுவலி நீங்கும். மந்தம் குறையும்.

    9. சர்க்கரையின் அளவு கட்டுப்பட
    வெற்றிலை4, வேப்பிலை ஒரு கைப்பிடி , அருகம் புல் ஒரு கை ப்பிடி. சிறிது சிறிதாக நறுக்கி 500 மி.லி. தண்ணீர் விட்டு நன்றாக கொதிக்க வைத்து 150 மி.லி.யாக வற்றவை த்து ஆறியவுடன் வடிகட்டி தினமும் மூன்று வேளை உணவுக்கு முன் 50 மி.லி. குடித்து வந்தால் சர்க்கரையின் அளவு சீராகும்.

    10. விஷக்கடி குணமாக


    உடலில் உள்ள விஷத்தன்மையை மாற்ற வெற்றிலை சிறந்த மருந்தாகும். சாதாரணமான வண்டுக்கடி, பூச்சிக்கடி இருந்தால் வெற்றி லையில் நல்ல மிளகு வைத்துமென்று சாறு இறக்கினால் விஷம் எளிதில் இறங்கும்.


    11. இருமல் குறைய
    வெற்றிலைச் சாறுடன் கோரோசனை சேர்த்து சாப்பிட்டு வந்தால் தொண்டையில் சளிக்கட்டு, இருமல், மூச்சுத் திணறல் குணமாகும்.


    12. அஜீரணக் கோளாறு அகல
    வெற்றிலை 2 அல்லது மூன்று எடுத்து அதனுடன் 5 நல்ல மிளகுசேர்த்து நீர்விட்டு காய்ச்சி குழந்தைகளுக்கு கொடுத்து வந்தால் சிறுவர்களுக்கு உண்டாகும் செரியாமை நீங்கும். வெற்றிலை இரண்டு எடுத்து நன்றாக கழுவி அதில் சிறிது சீரகத்தையும், உப்பையும் சேர்த்து நன்கு மென்று விழுங்கி வந்தால் அஜீரணக் கோளாறுகள் நீங்கும்.


    13. தோல் வியாதிக்கு
    100 மி.லி. தேங்காய் எண்ணெயில் 5 வெற்றிலையை போட்டு சூடாக்கி வெற்றிலை சிவந்தவுடன் வடிகட்டி பாட்டிலில் அடைத்து வைத்துக் கொண்டு சொறி, சிரங்கு படை இவைகளுக்கு தடவி வந்தால், எளிதில் குணமாகும்.


    14. தலைவலி நீங்க
    வெற்றிலைக்கு மயக்கத்தைப் போக்கும் குணமுண்டு. மூன்று வெற்றிலைகளை எடுத்து அதைக் கசக்கி சாறு எடுத்து கிடைக்கும் சாறில் கொஞ்சம் கற்பூரத்தைப் போட்டு நன்றாக குழைத்து, நெற்றிப்பகுதியில் பற்று போட்டால் தலைவலி பறந்துபோகும்.


    15. தீப்புண் ஆற


    தீப்புண்ணின் மீது வெற்றிலையை வைத்து கட்டலாம்.


    16. அல்சர்


    அல்சர் உள்ளவர்கள் இரண்டு வெற்றிலையுடன் அத்தி இலை 1 கைப் பிடி வேப்பிலை 5 ஆகியவற்றை மேலே உள்ள முறைப்படி கசாயம் தயாரித்து மூன்று வேளை அருந்தி வரவும். முற்றின வெற்றிலையைச்சாறு பிழிந்து அதில் இரண்டு அவுன்ஸ் சாற்றுடன் 3 மிளகு அதே அளவு சுக்கு ஆகியவற்றை ஒரு தேக்கரண்டி தேனுடன் கொடுத்தால் இரைப்பு மூச்சுத் திணறல் குணமாகும்.


    17. தேள் விஷம்
    இரண்டு வெற்றிலையை எடுத்து அதில் ஒன்பது மிளகை மடித்து வாயில் போட்டு நன்றாக மென்று விழுங்கி தேங்காய்துண்டுகள் சிலவற்றினையும் மென்று தின்றால் தேள் விஷம் உடனே முறியும்.






    - Vidhai2Virutcham



    Last edited by gowrymohan; 15th Aug 2013 at 09:58 PM.

    அன்புடன் கௌரி.


    "உன்னால் சாதிக்க இயலாத காரியம் என்று எதுவும் இருப்பதாக ஒருபோதும் நினைக்காதே!" - விவேகானந்தர்


    எனது கவிதை மொட்டுகள்




loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter