Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree1102Likes

Medical Notes - மருத்துவ குறிப்புகள்


Discussions on "Medical Notes - மருத்துவ குறிப்புகள்" in "General Health Problems" forum.


  1. #231
    gowrymohan's Avatar
    gowrymohan is offline Registered User
    Blogger
    Ruler's of Penmai
    Real Name
    Gowry Shanmuganathan
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    Sri Lanka
    Posts
    13,944
    Blog Entries
    380

    Re: Medical Notes - மருத்துவ குறிப்புகள்




    IMPORTANT

    On Sunday a family went to picnic with a few drinks tin. Monday, two family members admitted to hospital and placed in the Intensive Care Unit space. He died on Wednesday.Autopsy results concluded it hit Leptospirosis.

    The virus is stuck to the tin cans are drunk, without the use of glasses / cups. Test results showed that tin was infected mice that had dried urine containing Leptospira i.

    Highly recommended to rinse the parts evenly on all soda cans before drinking it. Cans are usually stored in the warehouse and delivered direct to retail stores without cleaning.

    A study shows that the top of all beverage cans more contaminated than public toilets (full of germs and bacteria.)So, clean it with water before putting mouth in order to avoid all accidents total.


    - Medical News


    Sponsored Links
    datchu and fatima15 like this.

    அன்புடன் கௌரி.


    "உன்னால் சாதிக்க இயலாத காரியம் என்று எதுவும் இருப்பதாக ஒருபோதும் நினைக்காதே!" - விவேகானந்தர்


    எனது கவிதை மொட்டுகள்




  2. #232
    gowrymohan's Avatar
    gowrymohan is offline Registered User
    Blogger
    Ruler's of Penmai
    Real Name
    Gowry Shanmuganathan
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    Sri Lanka
    Posts
    13,944
    Blog Entries
    380

    Re: Medical Notes - மருத்துவ குறிப்புகள்



    selvipandiyan, datchu and fatima15 like this.

    அன்புடன் கௌரி.


    "உன்னால் சாதிக்க இயலாத காரியம் என்று எதுவும் இருப்பதாக ஒருபோதும் நினைக்காதே!" - விவேகானந்தர்


    எனது கவிதை மொட்டுகள்




  3. #233
    gowrymohan's Avatar
    gowrymohan is offline Registered User
    Blogger
    Ruler's of Penmai
    Real Name
    Gowry Shanmuganathan
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    Sri Lanka
    Posts
    13,944
    Blog Entries
    380

    Re: Medical Notes - மருத்துவ குறிப்புகள்

    திருநீறு

    அறுகம்புல்லை உண்ணுகின்ற பசுமாட்டின் சாணத்தை எடுத்து உருண்டையாக்கி, காயவைக்க வேண்டும். பின் இதனை உமியினால் மூடி புடம் போட்டு எடுக்க வேண்டும். இப்போது இந்த உருண்டைகள்
    வெந்து நீறாகி இருக்கும். இதுவே உண்மையான திருநீறாகும்.

    அறுகம்புல் திருநீறு நல்ல அதிர்வுகளை மட்டும் உள்வாங்கும் திறன் கொண்டது. எம்மைச் சுற்றி அதிர்வுகள் இருக்கின்றன என்பது யாவரும் அறிந்ததே.

    எம்மை அறியாமலே அதிர்வுகளின் மத்தியில்த் தான் நாம் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். எமது உடலானது இவ் அதிர்வுகளை ஏற்றுக்கொள்ளுகின்றது. திருநீறானது நல்ல அதிர்வுகளை ஏற்றுக் கொள்ளும் தன்மை வாய்ந்தது. அந்தவகையில் உடலின் முக்கிய பாகங்களில் திருநீறு இட்டுக் கொள்ளும் வழக்கம் இந்துமதத்தவர்களிடம் காணப்படுகின்றது.


    இதைவிட மனித உடலிலே நெற்றி முக்கிய பாகமாகக் கருதப்படுகின்றது. அந்த நெற்றியிலேயே வெப்பம் அதிகமாகவும் வெளியிடப்படுகின்றது, உள் இழுக்வும் படுகின்றது. சூரியக்கதிர்களின் சக்தியை இழுத்து சரியான முறையில் உள்ளனுப்பும் அற்புதமான தொழிலை திருநீறு செய்யும். அதனாலேயே திருநீறை நெற்றியில் இடுவார்கள்.

    தனது உடலிலே சாம்பல் சத்துக் குறைந்துவிட்டால், வெப்பமான நாடுகளில் வளரும் கோழி இனங்கள் சாம்பலிலே விழுந்து குளிப்பதைக் கண்டிருப்பீர்கள். புறவை இனமே தன் தேவை தெரிந்து சாம்பலை நாடுகின்ற! அதே போல்த்தான் மனிதனும் தன் மூட்டுவலி தோற்றுவிக்கும் இடங்களில் நீர்த்தன்மையை உறிஞ்சவல்ல திருநீற்றை அணிகின்றான்.

    பசுமாட்டுச்சாணத்தை எரித்து திருநீறு செய்கின்றார்கள். மாடு அறுகம்புல் போன்ற பலவகையான புல்வகைகளை உண்டு. தனது உடலைத் தேற்றிச் சாணம் போடும். அச்சாணம் தீயிலிடப்படும் போது ஏற்படும் இரசாயன மாற்றங்கள் உடலுக்கு மருத்துவத்தன்மையைக் கொடுக்கின்றது.

    இதைவிட இரு புருவங்களுக்கும் இடையிலுள்ள பகுதியில் மிக நுண்ணிய நரம்பு அதிர்வலைகளை உள்ளன. அதனால் அந்த இடத்தைப் பயன்படுத்தி மனவசியம் இலகுவாகச் செய்யமுடியும். அதனாலேயே மனவசியத்தைத் தடுக்க அந்த இடத்தில் திருநீறு, சந்தனம் போன்றவை இடப்படுகின்றன. சந்தனம் நெற்றியில் வெளியிடப்படும் வெப்பத்தை நீக்குகின்றது. அதிகமான வெப்பம் கூடிய நாடுகளில் ஞாபகங்கள் முதலில் பதியப்படல், திட்டமிடல் போன்றவற்றிற்குத் தொழிற்படுகின்ற நெற்றிப்பகுதியிலுள்ள frontal cortex என்னும் இடத்தில் அணியப்படும் சந்தனமானது வெப்பம் மிகுதியால் ஏற்படும் மூளைச்சோர்வை நீக்குகின்றது.

    சந்தனம் இரு புருவங்களுக்கும் இடையில் இடுகின்ற போது, முளையின் பின்பகுதியில் ஞாபகங்கள் பதிவுசெய்து வைத்திருக்கும் Hippocampus என்னும் இடத்திற்கு ஞாபகங்களை சிறப்பான முறையில் அனுப்புவதற்கு இந்த frontal cortex சிறப்பான முறையில் தொழிற்படும். உடலுக்குக் குளிர்ச்சியூட்டும் சந்தனத்தை நெற்றியிலும் உடலின் பல பாகங்களிலும் இந்து சமயத்தவர் அணிந்திருக்கும் காட்சி நகைச்சுவையாகப் பார்வைக்குத் தோன்றினாலும் அற்புதமான காரணமும் அதில் உண்டு பார்த்தீர்களா!

    நெற்றியின் இரு புருவங்களுக்கும் இடையிலுள்ள நெற்றிப் பொட்டிலே பட்டும்படாமலும் சுண்டுவிரலை நேராகப்பிடித்தால் மனதில் ஒருவகை உணர்வு தோன்றும். அந்த உணர்வை அப்படியே வைத்துத் தியானம் செய்தால் மனஒருமைப்பாடு தோன்றும், சிந்தனை தெளிவுபெறும், எதையும் தெளிவாகப் புரிந்து கொள்ளும் நிலை தோன்றும். அந்த நெற்றிப் பொட்டு குளிர்ச்சியுடன் இருக்க வேண்டாமா? இதற்குச் சந்தனம் சரியான மருந்து. இந்த உண்மைகளைச் சாதாரணமாகக் கூறி விளங்கவைக்க முடியாத மக்களுக்கு நிலையில்லா வாழ்வின் நிலையை உணர்த்தி திருநீற்றை உடலில் அணிய வைத்திருக்கின்றார்கள். மதத்தைக் காட்டி விஞ்ஞான விளக்கத்தை மறைத்துக் கூறிய விளக்கங்களினால் மதம் வென்றது, விளக்கம் மறைந்தது.

    விபூதி இட்டுக் கொள்ளும் இடங்களும், பலன்களும்

    1. புருவ மத்தியில்(ஆக்ஞா சக்கரம்) வாழ்வின் ஞானத்தை ஈர்த்துக் கொள்ளலாம்.

    2.தொண்டைக்குழி(விசுத்தி சக்கரம்) நமது சக்தியை அதிகரித்துக் கொள்ளலாம்.

    3.நெஞ்சுக்கூட்டின் மையப்பகுதி தெய்வீக அன்பைப் பெறலாம். மேலும்,

    வீபூதியை எடுக்கும் போது, மோதிரவிரலால் எடுப்பது மிகவும்
    சிறந்தது. ஏனென்றால், நம் உடலிலேயே மிகவும் பவித்ரமான பாகம் என்று அதைச் சொல்லலாம். நம் வாழ்வையே கட்டுப்படுத்தும் சூட்சுமம் அங்கு உள்ளது.



    - தமிழ் களம்

    selvipandiyan and datchu like this.

    அன்புடன் கௌரி.


    "உன்னால் சாதிக்க இயலாத காரியம் என்று எதுவும் இருப்பதாக ஒருபோதும் நினைக்காதே!" - விவேகானந்தர்


    எனது கவிதை மொட்டுகள்




  4. #234
    gowrymohan's Avatar
    gowrymohan is offline Registered User
    Blogger
    Ruler's of Penmai
    Real Name
    Gowry Shanmuganathan
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    Sri Lanka
    Posts
    13,944
    Blog Entries
    380

    Re: Medical Notes - மருத்துவ குறிப்புகள்

    பொன்னாங்காணிக் கீரை





    கீரைகளின் ராஜா என்று அனைவரும் அழைக்கும் கீரை பொன்னாங்காணி. அந்த அளவிற்கு மருத்துவ குணங்களை கொண்டது இக்கீரை …

    சாதாரணமாக கீரையின் காம்புகளை கிள்ளி வைத்தாலே எந்த சூழலிலும் வளரக்கூடிய கீரை இது. இதில் ஊட்டச்சத்து, நீர்ச்சத்து, கொழுப்புச்சத்து, மினரல் சத்து, கால்சியம், பாஸ்பரஸ், புரதம் அடங்கிய கீரை.

    பொன்னாங்காணியை தொடர்ந்து 27 நாட்களுக்கு சாப்பிட்டால் பகலிலும் நிலவைப்பார்க்கலாம் என்று ஒரு பழ மொழி உண்டு. அந்த அளவிற்கு கண் பார்வைக்கு மிக துல்லியமாக தெரிய உதவும் கீரை.
    பொன்னாங்காணியில் சீமை பொன்னாங்காணி என்றும், நாட்டுப் பொன்னாங்காணி எனவும் இருவகை உண் டு. இதில் சீமை பொன்னாங்கண்ணி பெரும்பாலும் அழகுக்கு வளர்க்கப்படுகிறது. மருத்துவ குணம் குறைவு. பச்சையாக கிடைக்கும் நாட்டு பொன்னாங்கண்ணி தான் பல அருங்குணங்கள் கொண்டது.
    உடலுக்கு குளிர்ச்சியை தரக்கூடியது.


    பொன்னாங்காணியின் பயன்கள் :
    இக்கீரையுடன் மிளகும், உப்பும் சேர்த்து சாதத்துடன் சாப்பிட்டு வந்தால் உடல் எடை குறையும்.

    துவரம் பருப்பு, நெய்யுடன் சேர்ந்து சாப்பிட்டால் உடல் எடை கூடும்.

    கீழா நெல்லிச்சாற்றைக் கலந்து நல்லெ ண்ணெய் இட்டுக் காய்ச்சி தலைக்குத் தேய்த்து குளித்து வந்தால் கண் நோய்கள் விலகும்.
    சொறி, சிரங்குகளுக்கு சிறந்த மருந்து.
    உடலை, தோலைப் பளபள என்று மாற்றுவதில் பெரும்பங்குண்டு.
    மூல நோய், மண்ணீரல் நோய்களை குணப்படுத்த ஏற்றது.

    இன்று நாம் உண்ணும் உணவிலும் சுவாசிக்கும் காற்றிலும் இரசாயனம் கலந்திருப்பதால் அவை இரத்தத்தில் நேரடியாக கலந்துவிடுகின்றன. இதனால் இரத்தம் அசுத்தமடைகின்றது.
    பொன்னாங்காணிக் கீரையை நன்றாக அலசி சிறிதாக நறுக்கி, அதனுடன் பாசிப்பருப்பு, சின்ன வெங்காயம், சீரகம், பூண்டு, மிளகுத்தூள் சேர்த்து வேக வைத்து மசியல் செய்து சாப்பிட்டுவந்தால் அசுத்த இரத்தம் சுத்தமாகும். உடலுக்கு புத்துணர்ச்சியைத் தரும்.

    அதிக வெயிலில் அலைந்து வேலை செய்பவர்களுக்கும், கணினி முன் அதிக நேரம் அமர்ந்து வேலை செய்பவர்களுக்கும், சரியான தூக்கம் இல்லாதவர்களுக்கும் கண்கள் சிவந்து காணப்படும். கண்க ளில் எரிச்சல் இருந்துகொண் டே இருக்கும்.
    இவர்கள் பொன்னாங்கண்ணிக் கீரையை பொரியல் செய்து சாப்பிட்டு வந்தால் இப்பிரச்சினை நீங்கும்.

    கூந்தல் வளர தினமும் பொன்னாங்காணி தைலம் தயாரிக்கும் முறை பொன்னாங்காணி இலையை நிழலில் உலர்த்தி காயவைத்து – 20 கிராம், அருகம்புல் காய்ந்தது – 10 கிராம், செம் பருத்தி பூ காய்ந்தது–10 கிராம் எடுத்து 1/2 லிட்டர் தேங்காய் எண்ணெயில் நன்கு காய்ச்சி பாட்டி லில் அடைத்து தினமும் உபயோகிக்கலாம்.

    பொன்னாங்காணிக் கீரை, வாய் துர்நாற்றத்தை நீக்கும். இதயத்திற்கும் மூளைக்கும் புத்துணர்வு ஊட்டும். மேனியை பளபளக்கச் செய்யும். நோய் காரணமாக பலவீனமடைந்தவர்கள் டானிக் போன்று இக்கீரையை உண்டு வர உடலில் ரத்த உற்பத்தி பெருகி நல்ல பலம் சேரும்.

    பொன்னாங்காணி இலைச்சாறு, நல்லெண்ணெய் வகைக்கு ஒரு லிட்டர் கலந்து அத்துடன் அதிமதுரம், கோசுடம், செங்கழு நீர்க்கிழங்கு, கருஞ்சீரகம் வகைக்கு 20 கிராம் எடுத்து பாலில் அரைத்துப் போட்டு சிறு தீயில் பதமாகக் காய்ச்சி வடிகட்டி 4 நாளுக்கு ஒருமுறை தலைக்குக்குளித்துவர உட்காய்ச்சல், உடல் சூடு, கைகால் உடல் எரிச்சல், மண்டைக் கொதிப்பு, கண் எரிச்சல், உடம்புவலி, வயிற்றுவலி குணமாகும்.

    பொன்னாங்காணி வேர் ஒரு எலுமிச்சைப் பழம் அளவு எடுத்து அரைத்து எருமைப்பால் 2 படியில் கலக்கிக் காய்ச்சி தயிராக்கிக் கடைந்து எடுத்த வெண்ணெயை 3 நாள் காலையில் சாப்பிட்டு மோரையும் தாகத்துக்குக் குடித்துவர இரத்தம் கலந்து சிறுநீர் போகுதல் குணமாகும்.

    உடலில் உண்டாகும் வெப்பத்தின் மந்தம், உட்சூடு, கண்நோய், பித்த மூர்ச்சை இவற்றை நீக்கவல்ல கீரை, குறிப்பாக ஆண்களுக்கு விந்தினைப் பெருக்கிக்கொடுக்க வல்லவீரியம் நிறையவே இக்கீரைக்கு உண்டு. எனவே தான் தமிழ் மூலிகை மருத்துவம் இக் கீரையை விந்து கட்டி எனப் பேசுகிறது.

    இந்தக் கீரை வயல் வரப்புகளிலும், கிணற்று மேடுகளிலும், குளம் குட்டைகளில் கரைகளிலும், வாய்க்கால் கரைகளிலும் இயற்கையாக வளர்ந்து கிடப் பதைக் காணலாம். பலன்கள் கிடைக்க தொடர்ந்து உபயோகிக்க வேண்டும்.
    ஒருநாள், இரண்டு நாள் சாப்பிட்டுவிட்டு நிறுத்தினால் முழுப்பலன் கிடை க்காது.
    குறைந்தது 12 மாதம்முதல் 213 மாத காலம் எந்த மூலிகைக்கும் தேவை.


    - விதை2விருட்சம்

    datchu likes this.

    அன்புடன் கௌரி.


    "உன்னால் சாதிக்க இயலாத காரியம் என்று எதுவும் இருப்பதாக ஒருபோதும் நினைக்காதே!" - விவேகானந்தர்


    எனது கவிதை மொட்டுகள்




  5. #235
    vijivedachalam's Avatar
    vijivedachalam is offline Penman of Penmai
    Blogger
    Ruler's of Penmai
    Real Name
    vijayalakshmiBala
    Gender
    Female
    Join Date
    Jul 2012
    Location
    villupuram
    Posts
    10,965
    Blog Entries
    68

    Re: Medical Notes - மருத்துவ குறிப்புகள்

    Hi gowry Akka good morning.. Akka ponnaangkani tips super Akka....................tnx for sharing.......

    gowrymohan likes this.
    life is so beautiful....

  6. #236
    gowrymohan's Avatar
    gowrymohan is offline Registered User
    Blogger
    Ruler's of Penmai
    Real Name
    Gowry Shanmuganathan
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    Sri Lanka
    Posts
    13,944
    Blog Entries
    380

    Re: Medical Notes - மருத்துவ குறிப்புகள்

    Quote Originally Posted by vijivedachalam View Post
    Hi gowry Akka good morning.. Akka ponnaangkani tips super Akka....................tnx for sharing.......
    Romba nandri Viji.


    அன்புடன் கௌரி.


    "உன்னால் சாதிக்க இயலாத காரியம் என்று எதுவும் இருப்பதாக ஒருபோதும் நினைக்காதே!" - விவேகானந்தர்


    எனது கவிதை மொட்டுகள்




  7. #237
    gowrymohan's Avatar
    gowrymohan is offline Registered User
    Blogger
    Ruler's of Penmai
    Real Name
    Gowry Shanmuganathan
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    Sri Lanka
    Posts
    13,944
    Blog Entries
    380

    Re: Medical Notes - மருத்துவ குறிப்புகள்

    குக்கர் சாதம் சாப்பிட்டால் சர்க்கரை நோய் வரும்.....


    நவீன சமையல் உபகரணங்கள் வேலைப்பளுவை குறைக்க உதவினாலும், அவற்றால் ஏற்படும் உடல்நலக் கேடுகள் பற்றி அவ்வப்போது சர்ச்சைகள் எழுவதுண்டு. வாழ்க்கை முறை சார்ந்த பிரச்னைகளை அவை தரும் என புகழ்பெற்ற மருத்துவர்களே சொல்லியிருக்கிறார்கள். குறிப்பாக, ‘குக்கரில் சமைக்கப்படும் சாதத்தை சாப்பிட்டால் நீரிழிவு நோய் வரும்’ என்கிற தகவல் வயிற்றில் புளியைக் கரைக்கிறது.

    ‘‘லைஃப்ஸ்டைல் காரணமாக சமையலிலும் பெரும் மாற்றங்கள். ஆபீசுக்குப் போகிற அவசரத்தில் சீக்கிரம் எப்படி சமையலை முடிப்பது என கவலைப்படும் பெண்களுக்கு நவீன சமையல் உபகரணங்கள் பெரும் வரம் என்பதை மறுக்கமுடியாது. சமையலை எளிதாகவும் விரைவாகவும் செய்ய ஏராளமான பொருட்கள் வந்துவிட்டன. அதன் மூலம் செய்யப்படும் உணவுப்பொருட்களே பல நோய்களுக்குக் காரணமாகிறது’’ என்கிறார் லைஃப் ஸ்டைல் மேனேஜ்மென்ட்டைச் சேர்ந்த வயது நிர்வாக நிபுணர் டாக்டர் கௌசல்யா.

    ‘‘குக்கரில் சாப்பாடு செய்வது எளிதானதுதான். ஆனால், அதனால் உடல் பருமன், சர்க்கரை நோய் வரும் அபாயம் அதிகம் இருக்கிறது. வடித்து சமைக்கும் சாதத்தில் 30 முதல் 40 சதவிகிதம் மாவுச் சத்து (கார்போஹைட்ரேட்) குறைந்து விடும். ரத்த சர்க்கரை அளவை உடனடியாகவும் அது கூட்டாது. ஆனால், குக்கரில் சமைக்கும்போது அந்தச் சத்துகள் அப்படியே சாப்பாட்டில் முழுமையாக இருக்கும்.

    குக்கரில் வேக வைக்கப்படுகிற அரிசியில் கஞ்சி (மாவுச்சத்து) நீக்கப்படுவதில்லை. அதனால் கலோரி, குளுக்கோஸ் அளவு அதிகம். திடீரென ரத்த சர்க்கரை அளவு கூடுவதற்கும் வாய்ப்பு உண்டு. சிலருக்கு புதிதாக சர்க்கரை நோயை உண்டு பண்ணும் அபாயமும் இருக்கிறது. நார்ச்சத்து நிறைந்த, கஞ்சி நீக்கப்பட்ட சாதமே சர்க்கரை நோயாளிகளின் ரத்த சர்க்கரை அளவை கட்டுப்பாட்டுக்குள் வைக்கும்.

    அரிசி வேக எவ்வளவு அதிக நேரம் எடுத்துக் கொள்கிறதோ, அந்த அளவுக்கு அது சாப்பிட நல்லது. குறைந்த நேரத்தில் வேகும் சாப்பாட்டால் பிரச்னைதான். அதிக நேரம் வெந்த சாப்பாட்டை ஒரு கப் சாப்பிட்டாலே வயிறு நிரம்பி விடும். வேகமாக தயாரான சாப்பாட்டை 2 மடங்கு எடுத்துக்கொண்டால்தான் வயிறு நிரம்பும். இப்படி வயிற்றுக்குள் உணவைத் திணிக்கத் திணிக்க பிரச்னைகளும் அதிகமாகும். எண்ணெய் வகைகளையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

    அந்தக்காலத்தில் செக்கில் ஆட்டிய எண்ணெயில் வைட்டமின் மற்றும் நார்ச்சத்து நிரம்பியிருக்கும். அது ஜீரணத்துக்கும் ஆரோக்கியத்துக்கும் உகந்ததாக இருந்தது. இப்போது அல்ட்ரா ரீஃபைண்ட் ஆயில், டபுள் சூப்பர் ரீஃபைண்ட் ஆயில் என நிறைய வந்து விட்டது. அதிகமாக ரீஃபைண்ட் செய்வதால் வைட்டமின் சத்துகள் குறைந்து விடும். சூடாக்கிய எண்ணெயையும் திரும்பத் திரும்ப பயன்படுத்தக்கூடாது. அந்த எண்ணெயால் ரத்தத்தில் கொலஸ்ட்ரால் அதிகமாகும் ஆபத்து இருக்கிறது. இதனால் வயிற்றுப் புற்றுநோய் வரும் அபாயமும் உண்டு.

    பருமனும் ஏற்படலாம். முடிந்தவரை இவற்றையெல்லாம் தவிர்த்தல் நல்லது’’ என்கிறார் டாக்டர் கௌசல்யா. ‘‘நாம் பயன்படுத்தும் அரிசியும் சர்க்கரை நோய்க்கு ஒரு காரணம். 30 வருடங்களுக்கு முன் இருந்த கைக்குத்தல் அரிசி இப்போது இல்லை. இப்போது பாலீஷ்ட் ரைஸ், பாஸ்மதி ரைஸ், டபுள் ரீஃபைண்ட் ரைஸ் என எத்தனையோ வகை அரிசிகள். அரிசியை அதிகம் பாலீஷ் செய்து வெண்மையாக்குவது நல்லதல்ல. அப்படிப்பட்ட அரிசியில் நார்ச்சத்து குறைந்து, கலோரி அதிகமாகி, பருமனை அதிகமாக்கி சர்க்கரை நோய்க்கு வழி வகுக்கும்.

    நாம் பயன்படுத்தும் சமையல் பொருட்களில் பாதி ‘டீத் ப்ரௌன் க்ரோத்தன் ஃபுட்’. அதுல 60 சதவீதம் நியூட்ரிஷன் சத்துகள் இருக்காது. வெறும் டேஸ்ட் மட்டும்தான் இருக்கும். இந்தப் பொருட்களால் பருமன், இன்சுலின், ஹார்மோன், வயிற்றுப் பிரச்னைகள், முடி கொட்டுதல் என பல பிரச்னைகள் ஏற்படும். ஒரு நாளைக்கு 2 அல்லது 3 டேபிள்ஸ்பூன் எண்ணெய் பயன்படுத்துவதுதான் ஆரோக்கியத்துக்கு நல்லது.

    இப்போது உள்ள எண்ணெய்களில் கெமிக்கல் மாற்றம் ஏற்பட்டு, அவை இதய நோய்களை ஏற்படுத்தி விடுகின்றன. முன்பெல்லாம் செக்கில் ஆட்டிய எண்ணெய் ஒரு ஸ்பூன் பயன்படுத்தினால் போதும். இப்போதுள்ள எண்ணெய் பத்து ஸ்பூன்களுக்கு மேல் பயன்படுத்த வேண்டியிருக்கிறது. இது கொலஸ்ட்ராலை அதிகப்படுத்தி தேவையில்லாத நோய்கள் வர காரணமாகி விடுகிறது. ஆக, ஈஸி என்று நினைப்பதே நமக்கு பாதகமாகி விடுகிறது. சமையலில் சில வகைகளை ஏற்றுக்கொள்ளலாம். ஆனால், அடிப்படையான சிலவற்றை அவசியம் கடைப்பிடித்தே ஆகவேண்டும்’’ என்கிறார் நாளமில்லாச் சுரப்பி நிபுணர் ஜெயஸ்ரீ கோபால்.


    datchu and fatima15 like this.

    அன்புடன் கௌரி.


    "உன்னால் சாதிக்க இயலாத காரியம் என்று எதுவும் இருப்பதாக ஒருபோதும் நினைக்காதே!" - விவேகானந்தர்


    எனது கவிதை மொட்டுகள்




  8. #238
    gowrymohan's Avatar
    gowrymohan is offline Registered User
    Blogger
    Ruler's of Penmai
    Real Name
    Gowry Shanmuganathan
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    Sri Lanka
    Posts
    13,944
    Blog Entries
    380

    Re: Medical Notes - மருத்துவ குறிப்புகள்

    பாத வெடிப்பு- பாட்டி வைத்தியம்


    பலருக்கு முகத்தில் பருக்கள் தோன்றுவதை போல் பாதங்களில் வெடிப்பு ஏற்படுகிறது. ஆரம்பத்திலேயே பாதங்களை பராமரிப்பதில் ஆர்வம் காட்டினால் நிரந்தரமாக வெடிப்பு வருவதை தடுக்க முடியும்.
    பாதங்களை பராமரிக்க சில எளிய டிப்ஸ்

    மருதாணியை நன்கு அரைத்து வெடிப்பு உள்ள இடங்களில் தேய்த்து உலர விடவேண்டும் பின்பு தண்ணீரால் கழுவி வர நாளடைவில் பித்த வெடிப்பு குணமாகும். பாதம் தாங்கும் அளவிற்கு தண்ணீரை சூடுபடுத்தி, அதில் சிறிது உப்பும் எலும்பிச்சை சாறும் சேர்த்து அதில் பாதத்தை வைத்திருந்து பின்பு சொரசொரப்பான பொருட்களால் தேய்த்து வந்தால் கெட்ட செல்கள் உதிரும்.

    வேப்பிலை, மஞ்சள் ஆகியவற்றுடன் சிறிது சுண்ணாம்பு சேர்த்து அரைத்து, விளக்கெண்ணெய் சேர்த்து வெடிப்பு ஏற்பட்ட பகுதிகளில் தேய்த்து வந்தால் பித்த வெடிப்பு குணமடையும். பப்பாளி பழத்தை நன்கு அரைத்து அதனை பாதங்களில் வெடிப்பு உள்ள பகுதிகளில் நன்கு தேய்த்து வர வெடிப்பு குணமாவதுடன் எரிச்சல் குறையும். தரமான காலணிகளை பயன்படுத்துவதன் மூலம் வெடிப்புகளை தவிர்க்கலாம்.

    விளக்கெண்ணெய், தேங்காய் எண்ணெய் சம அளவில் எடுத்துக்கொண்டு அதில் மஞ்சளை சேர்த்து பாதத்திற்கு தடவி வந்தால் வெடிப்பு ஏற்படாது.
    இரவு நேரங்களில் படுக்க செல்லும் முன்பு காலை சுத்தப்படுத்தி சிறிது தேங்காய் எண்ணெய் தடவி வந்தால் வெடிப்பு வருவதை தவிர்க்கலாம். தினமும் குளித்ததும் பாதத்தை துணியால் துடைத்து பின் விளக்கெண்ணெய் தேய்த்து வந்தாலும் வெடிப்பை தவிர்க்கலாம்.


    -
    மருத்துவ குறிப்புகள்


    datchu, durgasakthi and fatima15 like this.

    அன்புடன் கௌரி.


    "உன்னால் சாதிக்க இயலாத காரியம் என்று எதுவும் இருப்பதாக ஒருபோதும் நினைக்காதே!" - விவேகானந்தர்


    எனது கவிதை மொட்டுகள்




  9. #239
    fatima15's Avatar
    fatima15 is offline Friends's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jun 2013
    Location
    New York
    Posts
    316

    Re: Medical Notes - மருத்துவ குறிப்புகள்

    Hi gowry thanks for sharing.Pati vaithyam very useful in NY.Thanks.

    datchu and gowrymohan like this.

  10. #240
    gowrymohan's Avatar
    gowrymohan is offline Registered User
    Blogger
    Ruler's of Penmai
    Real Name
    Gowry Shanmuganathan
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    Sri Lanka
    Posts
    13,944
    Blog Entries
    380

    Re: Medical Notes - மருத்துவ குறிப்புகள்

    Quote Originally Posted by fatima15 View Post
    Hi gowry thanks for sharing.Pati vaithyam very useful in NY.Thanks.
    Thank you Fatima.


    அன்புடன் கௌரி.


    "உன்னால் சாதிக்க இயலாத காரியம் என்று எதுவும் இருப்பதாக ஒருபோதும் நினைக்காதே!" - விவேகானந்தர்


    எனது கவிதை மொட்டுகள்




loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter