Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree1102Likes

Medical Notes - மருத்துவ குறிப்புகள்


Discussions on "Medical Notes - மருத்துவ குறிப்புகள்" in "General Health Problems" forum.


  1. #301
    gowrymohan's Avatar
    gowrymohan is offline Registered User
    Blogger
    Ruler's of Penmai
    Real Name
    Gowry Shanmuganathan
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    Sri Lanka
    Posts
    13,944
    Blog Entries
    380

    Re: Medical Notes - மருத்துவ குறிப்புகள்

    Quote Originally Posted by Prathyuksha View Post
    Thanks for sharing these useful tips Gowry akka...

    -Prathyuksha
    Welcome Prathyuksha.


    Sponsored Links
    Prathyuksha likes this.

    அன்புடன் கௌரி.


    "உன்னால் சாதிக்க இயலாத காரியம் என்று எதுவும் இருப்பதாக ஒருபோதும் நினைக்காதே!" - விவேகானந்தர்


    எனது கவிதை மொட்டுகள்




  2. #302
    gowrymohan's Avatar
    gowrymohan is offline Registered User
    Blogger
    Ruler's of Penmai
    Real Name
    Gowry Shanmuganathan
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    Sri Lanka
    Posts
    13,944
    Blog Entries
    380

    Re: Medical Notes - மருத்துவ குறிப்புகள்






    jv_66, datchu, Prathyuksha and 1 others like this.

    அன்புடன் கௌரி.


    "உன்னால் சாதிக்க இயலாத காரியம் என்று எதுவும் இருப்பதாக ஒருபோதும் நினைக்காதே!" - விவேகானந்தர்


    எனது கவிதை மொட்டுகள்




  3. #303
    gowrymohan's Avatar
    gowrymohan is offline Registered User
    Blogger
    Ruler's of Penmai
    Real Name
    Gowry Shanmuganathan
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    Sri Lanka
    Posts
    13,944
    Blog Entries
    380

    Re: Medical Notes - மருத்துவ குறிப்புகள்

    மூளையை பாதிக்கும் பழக்க வழக்கங்கள்

    மனித உடல் உறுப்புகளில் மிகவும் இன்றியமையாதது மூளையாகும். நமது மூளை பாதிப்படைந்தால் அனைத்து செயல்களும் பாதிப்படையும்.

    காலையில் உண்ணாமல் இருப்பது -
    காலையில் உணவு உண்ணாமல் இருப்பவர்களுக்கு ரத்தத்தில் குறைவான அளவே சர்க்கரை இருக்கும். இது மூளைக்குத் தேவையான சக்தியையும் தேவையான ஊட்டச்சத்துக்களையும் கொடுக்காமல் மூளை அழிவுக்குக் காரணமாகும்.

    மிக அதிகமாக சாப்பிடுதல் -
    இது மூளையில் இருக்கும் ரத்த நாளங்கள் இறுகக் காரணமாகி, மூளையின் சக்தி குறைவுக்குக் காரணமாகும்.

    நிறைய சர்க்கரை சாப்பிடுதல் -
    இது புரோட்டீன் நமது உடலில் சேர்வதைத் தடுக்கிறது.இதுவும் மூளை வளர்ச்சிக்கு பாதிப்பகிறது.

    தூக்கமின்மை -
    நல்ல தூக்கம் நம் மூளைக்கு ஓய்வு கொடுக்கும். நீண்டகாலம் தேவையான அளவு தூங்காமலிருப்பது மூளைக்கு பாதிப்பை ஏற்படுத்தும்.

    மாசு நிறைந்த காற்று -
    மாசு நிறைந்த காற்றை சுவாசித்தல், நமக்குத் தேவையான ஆக்ஸிஜனை நாம் பெறுவதிலிருந்து தடை செய்கிறது. மூளைக்கு ஆக்ஸிஜன் செல்லாவிட்டால், மூளை பாதிப்படையும்.

    புகை பிடித்தல் -
    மூளை சுருங்கவும், அல்ப்சமர்ஸ் வியாதி வருவதற்கும் காரணமாகிறது.

    தலையை மூடிக்கொண்டு தூங்குவது -
    தலையை மூடிக்கொண்டு தூங்குவதால், போர்வைக்குள் கரியமில வாயு அதிகரிக்க வைக்கிறது. இது நீங்கள் சுவாசிக்கும் ஆக்ஸிஜனை குறைக்கிறது. குறைவான ஆக்ஸிஜன் மூளையை பாதிக்கிறது.

    நோயுற்ற காலத்தில் மூளைக்கு வேலை கொடுப்பது -
    உடல் நோயுற்ற காலத்தில் மிக அதிகமாக மூளைக்கு வேலை கொடுப்பதும், தீவிரமாக படிப்பதும் மூளையைப் பாதிக்கும். உடல் சரியாக ஆன பின்பு, மூளைக்கு வேலை கொடுப்பதே சிறந்தது.

    மூளைக்கு வேலைகொடுக்கும் சிந்தனைகளை மேற்கொள்ளாமல் இருப்பது -
    மூளையை அதிகமாக உபயோகப்படுத்தும் சிந்தனைகளை மேற்கொள்வதால், மூளையில் புதுப் புது இணைப்புகள் உருவாகின்றன. அதனால் மூளை வலிமையான உறுப்பாகிறது.

    பேசாமல் இருப்பது -
    அறிவுபூர்வமான உரையாடல்களை மேற்கொள்வது மூளையின் வலிமையை அதிகரிக்கிறது.


    - பெண்மணி


    jv_66, datchu and jeshmitha like this.

    அன்புடன் கௌரி.


    "உன்னால் சாதிக்க இயலாத காரியம் என்று எதுவும் இருப்பதாக ஒருபோதும் நினைக்காதே!" - விவேகானந்தர்


    எனது கவிதை மொட்டுகள்




  4. #304
    gowrymohan's Avatar
    gowrymohan is offline Registered User
    Blogger
    Ruler's of Penmai
    Real Name
    Gowry Shanmuganathan
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    Sri Lanka
    Posts
    13,944
    Blog Entries
    380

    Re: Medical Notes - மருத்துவ குறிப்புகள்

    சளித்தொல்லை நீங்க சிறந்த மருந்து இயற்கை மருந்து-

    * எலுமிச்சை சாற்றில் உப்பு சேர்த்து குடித்தால் சளியால் ஏற்படும் வாந்தி நிற்கும்.எலுமிச ்சை பழச்சாற்றை காபியில் கலந்து குடிப்பதன் மூலம் தலைவலி தீரும். எலுமிச்சை இலைகளை தேநீரில் போட்டு கொதிக்க வைத்துக் குடித்தால் நோய் எதிர்ப்பு சக்தி உண்டாகும்.

    * கடல் அழிஞ்சில் பட்டை, திப்பிலி, தாளிசபத்திரி மூன்றையும் சம அளவில் எடுத்து பொடி செய்து இரண்டு கிராம் பொடியை தினமும் இரண்டு வேளை தேனில் குழைத்து சாப்பிடலாம். சளி, இருமல், தும்மல் மற்றும் அலர்ஜியில் இருந்து தீர்வு கிடைக்கும்.

    * கடுகை பொடி செய்து தொண்டையில் பற்றுப் போட்டால் தொண்டை வலி குணமாகும். அரைக் கீரை தண்டுடன் மிளகு, மஞ்சள் ஆகியவற்றை சேர்த்து கஷாயம் வைத்து தினமும் அதிகாலையில் குடித்தால் சளி, இருமல் மற்றும் நுரையீரல்
    தொடர்பான பிரச்னைகளுக்கு தீர்வுகிடைக்கும்.

    * அறுவதா இலையுடன் ஒரு துண்டு இஞ்சி சேர்த்து அரைத்து சாப்பிட்டால் மார்பு சளி குணமாகும். ஆடாதொடா இலையை பொடி செய்து தேன் கலந்து சாப்பிட்டால் சளித் தொல்லை தீரும்.ஆலமர விழுதை பொடி செய்து காலை, மாலையில் சாப்பிட்டால் இருமல் குணமாகும்.

    - கதம்பம்

    datchu, gkarti and jeshmitha like this.

    அன்புடன் கௌரி.


    "உன்னால் சாதிக்க இயலாத காரியம் என்று எதுவும் இருப்பதாக ஒருபோதும் நினைக்காதே!" - விவேகானந்தர்


    எனது கவிதை மொட்டுகள்




  5. #305
    gowrymohan's Avatar
    gowrymohan is offline Registered User
    Blogger
    Ruler's of Penmai
    Real Name
    Gowry Shanmuganathan
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    Sri Lanka
    Posts
    13,944
    Blog Entries
    380

    Re: Medical Notes - மருத்துவ குறிப்புகள்

    வெயில் காலத்தில் உடலைப் பாதுகாக்கும் பழங்கள்!

    வெயில் காலத்தில் வெப்பத்திலிருந்து உடலையும், தோலையும் பாதுகாப்பது மிக மிக அவசியம். அந்த வகையில் பழங்கள் இன்றியமையாதவை.

    உடலுக்கு சரியான ஆற்றலைக் கொடுக்கக்கூடிய வகையில் பழங்கள் பெரிதும் உதவியாக இருக்கும். இத்தகைய பழங்கள் உடலின் ஆற்றலை மட்டும் அதிகரிக்காமல், உடலில் கொழுப்புக்கள் சேராதவாறும் பாதுகாக்கின்றன.

    மேலும் பழங்களில் ஸ்டார்ச் மிகவும் குறைவு. ஆனால் இயற்கை சர்க்கரையானது அதிகம். பெரும்பாலும் பலரது உடலின் ஆற்றலானது மதிய வேளையில்தான் குறைய ஆரம்பிக்கும். ஏனெனில் மதிய உணவு சாப்பிட்டு இரண்டு மணிநேரத்திற்குப் பிறகு, இரத்த சர்க்கரையின் அளவானது குறைய ஆரம்பிப்பதுதான்.

    இவ்வாறு உடலில் சர்க்கரையின் அளவு குறைந்தால், தலைவலி ஆரம்பித்து, உடல் சோர்வுடன் இருக்கும். இந்த நிலையில் மீண்டும் உணவை சாப்பிட முடியாது.

    ஆகவே மதியம் 4 மணி அளவில் ஒருசில பழங்களைச் சாப்பிட்டு, உடலின் ஆற்றலை அதிகரிக்கலாம். இத்தகைய பழங்கள் உடலின் ஆற்றலை அதிகரிப்பதோடு, உடலுக்கு உறுதியை அதிகரிக்கும்.

    மேலும் பழங்களில் உள்ள இயற்கை சர்க்கரையானது பயனுள்ள கலோரிகளைக் கொடுக்கும். அதுமட்டுமின்றி, சிட்ரஸ் பழங்களை அதிகம் சாப்பிட்டால், அதில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட் மற்றும் வைட்டமின் சி, உடலின் ஆற்றலை அதிகரிக்கும்.

    உடற்பயிற்சி செய்த பின்னர், வாழைப்பழம் சாப்பிடுவது மிகவும் சிறந்தது. ஏனெனில் இதில் நிறைய பயனுள்ள கார்ப்போஹைட்ரேட் மற்றும் இயற்கை இனிப்புகள் நிறைந்துள்ளதால், அதனை சாப்பிட்டால், உடனே உடலின் ஆற்றல் அதிகரிக்கும்.

    ஆரஞ்சுப் பழத்தில் வைட்டமின் சி அதிகம் நிறைந்துள்ளதால், உடல் சோர்வாக இருக்கும் வேளையில் ஆரஞ்சு ஜூஸ் சாப்பிடுவது நல்லது.

    தர்ப்பூசணியில் உடலை வறட்சியடையச் செய்யாத வகையில் ஒரு முக்கியமான பொருள் உள்ளது. அதுதான் நீர்ச் சத்து. எனவே இதனை அதிகம் சாப்பிட்டால், உடல் வறட்சியைத் தவிர்ப்பதோடு, இதில் உள்ள வைட்டமின் சி, உடலின் ஆற்றலை அதிகரிக்கும்.

    புரோட்டீன் நிறைந்திருக்கும் பழங்களில் ஒன்றுதான் மாம்பழம். மேலும் இந்தப் பழத்தில் உள்ள கலோரிகள், கால்சியம் மற்றும் ஜிங்க், உடலுக்கு தேவையான ஆற்றலைத் தருகிறது.

    உடலின் சக்தியை அதிகரிக்கும் பழங்களில் முக்கியமானவை ஆப்பிள். ஆகவே உடலின் சக்தி குறைந்திருக்கும் வேளையில் ஆப்பிளை அப்படியே அல்லது ஜூஸ் போட்டு குடித்தால், உடலின் எனர்ஜியானது அதிகரிக்கும்.

    பப்பாளி சாப்பிட்டால் உடல் எடை குறைவதோடு, அதில் நிறைந்துள்ள ஊட்டச்சத்துக்களானது, வயிற்றை நிறைப்பதோடு, ஆற்றல் மிக்கதாகவும் வைக்கும்.

    அன்னாசியிலும் எண்ணற்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. அதிலும் குறிப்பாக இதில் வைட்டமின் சி நிறைந்திருப்பதால், உடல் ஆற்றலை அதிகரிப்பதோடு, உடலில் உள்ள நச்சுக்களும் வெளியேறிவிடும்.

    பெர்ரிப் பழங்களில் வைட்டமின் சி மற்றும் பயனுள்ள கலோரிகள் நிறைந்துள்ளன. எனவே தினமும் ஒரு கப் ஸ்ட்ரா பெர்ரியை சாப்பிடுவது, உடலை ஆரோக்கியத்துடனும், ஆற்றல் மிக்கதாகவும் மற்றும் சருமத்தை பொலிவாகவும் வைத்திருக்கும்.

    மாதுளை சாப்பிட்டாலும், உடலின் சக்தியானது அதிகரிக்கும். மேலும் இது உடலின் ஸ்டாமினாவை தக்க வைக்கும் பழங்களில் முக்கியமானவை.

    சிட்ரஸ் பழங்களில் ஒன்றான எலுமிச்சையில் நிறைந்துள்ள வைட்டமின் சி என்னும் சத்தானது, சோர்வாக இருக்கும் உடலை புத்துணர்ச்சியுடன் வைக்கும். எனவே அவ்வப்போது எலுமிச்சை ஜூஸ் குடிப்பது மிகவும் நல்லது.

    கொய்யாப்பழத்தை அதிகம் சாப்பிட்டால், அதில் நிறைந்துள்ள வைட்டமின்கள் மற்றும் இதர சத்துக்கள், உடலின் ஆற்றலை அதிகரிக்கும்.

    தினமும் பேரிக்காய் சாப்பிட்டு வந்தால், அதில் உள்ள இயற்கை இனிப்புகள், உடலின் சக்தியை சீராக வைக்க உதவியாக இருக்கும்.

    ஆக, வெயிலில் வெப்பத்தைத் தணிக்கிறேன் பேர்வழி என்று கண்ட கண்ட கெமிக்கல் கலந்த பாட்டில் பானங்களை அருந்துவதை விட்டுவிட்டு இயற்கைப் பழங்களையும், பழச்சாறுகளையும் அருந்தினால் தாகமும் தீரும். உடலும் சக்தி பெறும்.


    - கதம்பம்


    அன்புடன் கௌரி.


    "உன்னால் சாதிக்க இயலாத காரியம் என்று எதுவும் இருப்பதாக ஒருபோதும் நினைக்காதே!" - விவேகானந்தர்


    எனது கவிதை மொட்டுகள்




  6. #306
    gowrymohan's Avatar
    gowrymohan is offline Registered User
    Blogger
    Ruler's of Penmai
    Real Name
    Gowry Shanmuganathan
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    Sri Lanka
    Posts
    13,944
    Blog Entries
    380

    Re: Medical Notes - மருத்துவ குறிப்புகள்

    வெங்காயம்


    தண்ணீர் அதிகம் குடிக்காமல் வெயிலில் வெகுநேரம் அலைந்து திரிபவர்களுக்கு நீர்க்கடுப்பு பாதிப்பு ஏற்படும்.

    இவர்கள், ஒரு வெங்காயத்தைப் பொடியாக நறுக்கி, அதை ஒரு டம்ளர் தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து அந்தத் தண்ணீரைக் குடித்தால் நீர்க்கடுப்பு உடனே நின்றுவிடும். வெங்காயத்தை தண்ணீரில் போட்டு கொதிக்க வைக்கும் அளவுக்கு பொறுமை இல்லாதவர்கள், அப்படியே பச்சையாக வெங்காயத்தை சாப்பிடலாம்.

    சில நிமிடங்களிலேயே நீர்க்கடுப்பு காணாமல் போய்விடும். வெயில் காலத்தில் சிலருக்கு உடம்பில் கட்டிகள் தோன்றும். இதற்கு, வெங்காயத்தை நசுக்கி, சாறு பிழிந்து கட்டிகள் உள்ள இடங்களில் தடவி வந்தால் வெகுவிரைவில் நிவாரணம் கிடைக்கும். வெங்காயத்தை துண்டுகளாக்கி நெய்யில் வதக்கி சாப்பிட்டால் உடல் சூடு தணியும்.


    - சித்த மருத்துவ குறிப்புகள்


    datchu and jeshmitha like this.

    அன்புடன் கௌரி.


    "உன்னால் சாதிக்க இயலாத காரியம் என்று எதுவும் இருப்பதாக ஒருபோதும் நினைக்காதே!" - விவேகானந்தர்


    எனது கவிதை மொட்டுகள்




  7. #307
    gowrymohan's Avatar
    gowrymohan is offline Registered User
    Blogger
    Ruler's of Penmai
    Real Name
    Gowry Shanmuganathan
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    Sri Lanka
    Posts
    13,944
    Blog Entries
    380

    Re: Medical Notes - மருத்துவ குறிப்புகள்

    கர்ப்பிணிப் பெண்கள் பப்பாளிப் பழம் உண்ணலாமா?

    கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் குழந்தைக்கான வாய்ப்பை எதிர்நோக்கும் பெண்கள் தவிர மற்ற எல்லோரும் விரும்பி சாப்பிடும் பப்பாளிப் பழம் நிறைய சத்துக்கள், மருத்துவ குணங்கள் கொண்ட பழமாகும். இதில் வைட்டமின்கள் ஏ, சி, ஈ மற்றும் நார்ச்சத்து நிறைய உள்ளது. பெரும்பாலும் கோடைகாலம்தான் இந்த பழத்தில் இருந்து நமக்கு கிடைக்கும் சில பயன்கள்:

    பப்பாளியில் உள்ள பேராக்ஸ்நேஸ் என்ற தாதுப்பொருள் கொழுப்பை குறைக்க உதவுகிறது. பப்பாளிப் பழத்தில் காணப்படும் வைட்டமின் `ஈ' குடல் பகுதியில் கேன்சர் வராமல் தடுக்கிறது.

    கிட்னியில் கல் இருப்பவர்கள் பப்பாளிப் பழத்தை தினமும் இரண்டு வேளை சாப்பிட்டு வந்தால் விரைவில் குணம் அடையலாம். அல்சர் தொல்லை உள்ளவர்கள் இந்த பழத்தை தினமும் சாப்பிட்டு வந்தால் விரைவில் குணம் பெறலாம்.

    சிலருக்கு அதிக புரோட்டின் நிறைந்த உணவு சாப்பிட்டால் செரிக்காமல் வயிறு கோளாறு ஏற்படும். அப்படி உள்ளவர்கள் உணவுக்குப்பின் இந்த பழத்தை சாப்பிட்டால் உணவை விரைவில் செரிக்க வைக்கும்.

    மலச்சிக்கல் உள்ளவர்களுக்கு லேகியங்களைவிட, பப்பாளிப் பழம் ஒரு அருமையான மருந்து. இதை தவறாமல் தினமும் காலையில் சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் வரவே வராது.

    பப்பாளிப் பழத்தை கூழாக்கி வாரம் இரண்டு முறை முகத்தில் தடவி மசாஜ் செய்து வந்தால் முகத்தில் இருக்கும் கரும் புள்ளிகள், சொரசொரப்பு தன்மை மாறி முகம் பளப்பளப்பாக மாறிவிடும்.

    பப்பாளியில் `பப்பைன்' என்ற தாது பொருள் உள்ளது. இந்த பப்பைன் மேலை நாடுகளில் மாட்டு இறைச்சி மற்றும் கோழி இறைச்சியை பதப்படுத்த உபயோகிக்கப்படுகிறது.

    பப்பாளிப்பழத்தை கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் குழந்தை பாக்கியத்தை எதிர்நோக்கி காத்திருக்கும் பெண்கள் சாப்பிடக்கூடாது என்ற கருத்து உள்ளது. இவர்கள், பப்பாளிப் பழத்தை அளவுக்கு அதிகமாக சாப்பிட்டால், உடல் வெப்பநிலை அதிகரித்து, ஆரம்ப நிலையில் உள்ள கரு கலைந்துவிடும் அல்லது கரு உருவாகுதல் தள்ளிப்போகும் என்பதால் அப்படிச் சொல்கிறார்கள். அதேநேரம், மேற்படி பெண்கள் இந்த பழத்தில் ஒன்று அல்லது இரண்டு துண்டுகள் சாப்பிடுவதில் தவறே இல்லை. ஒருவேளை, அளவுக்கு அதிகமாக பப்பாளிப் பழத்தை அவர்கள் எடுத்துக்கொண்டால், அந்த பழத்தை சாப்பிட்டு முடித்தவுடன் ஒரு டம்ளர் பால் குடிப்பது உடல் வெப்பநிலை அதிகரிப்பதை தடுத்து நிறுத்திவிடும்.


    - சித்த மருத்துவ குறிப்புகள்

    datchu and jeshmitha like this.

    அன்புடன் கௌரி.


    "உன்னால் சாதிக்க இயலாத காரியம் என்று எதுவும் இருப்பதாக ஒருபோதும் நினைக்காதே!" - விவேகானந்தர்


    எனது கவிதை மொட்டுகள்




  8. #308
    gkarti's Avatar
    gkarti is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Karthiga
    Gender
    Female
    Join Date
    Sep 2012
    Location
    Madurai
    Posts
    49,110

    Re: Medical Notes - மருத்துவ குறிப்புகள்

    //கடுகை பொடி செய்து தொண்டையில் பற்றுப் போட்டால் தொண்டை வலி குணமாகும்//

    Good Tips Gowry Kaa! Yeah THis tip Works
    Wonders with My throat infection



    datchu and gowrymohan like this.

  9. #309
    gowrymohan's Avatar
    gowrymohan is offline Registered User
    Blogger
    Ruler's of Penmai
    Real Name
    Gowry Shanmuganathan
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    Sri Lanka
    Posts
    13,944
    Blog Entries
    380

    Re: Medical Notes - மருத்துவ குறிப்புகள்

    Quote Originally Posted by gkarti View Post
    //கடுகை பொடி செய்து தொண்டையில் பற்றுப் போட்டால் தொண்டை வலி குணமாகும்//

    Good Tips Gowry Kaa! Yeah THis tip Works
    Wonders with My throat infection

    Romba santhoshamaa irukku Karthiga. Thank you dear.

    datchu and gkarti like this.

    அன்புடன் கௌரி.


    "உன்னால் சாதிக்க இயலாத காரியம் என்று எதுவும் இருப்பதாக ஒருபோதும் நினைக்காதே!" - விவேகானந்தர்


    எனது கவிதை மொட்டுகள்




  10. #310
    gowrymohan's Avatar
    gowrymohan is offline Registered User
    Blogger
    Ruler's of Penmai
    Real Name
    Gowry Shanmuganathan
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    Sri Lanka
    Posts
    13,944
    Blog Entries
    380

    Re: Medical Notes - மருத்துவ குறிப்புகள்





    அவசர கால முதலுதவி முறைகள்...!

    வேலை செய்யும் பொழுதோ மற்ற நேரங்களிலோ மயக்கம் வருவது போல் தெரிந்தால், உடனே தாமதிக்காமல் மேலுதட்டில் இருக்கும் சிறிய பள்ளத்தில் மூக்கிற்குக் கீழ் ஆட்காட்டி விரலை வைத்து 1 நிமிடம் லேசாக அழுத்தம் கொடுத்து கசக்கி விடுவதன் மூலம் மயக்கத்திலிருந்து உடனடி நிவாரணம் பெறலாம்.

    மயக்கம் வந்து கீழே விழுந்து விட்டால் :

    உங்கள் கண் முன்னே யாராவது மயக்கம் வந்து கீழே விழுந்து விடலாம். அவருக்கு முதல் உதவி செய்து காப்பாற்ற வேண்டியது நமது கடமை. உடனே விழுந்தவரின் மூக்கிற்குக் கீழ் உதட்டுப் பள்ளத்தில் மசாஜ் செய்யுங்கள்.

    வேகமாக பிறகு உள்ளங்கால் பகுதியில் கட்டை விரல் எலும்பும், பக்கத்து விரல் எலும்பும் சேரும் இடத்தில் விரலால், மிகுந்த அழுத்தத்துடன் மசாஜ் செய்யுங்கள். விழுந்தவர் எழுந்து விடுவார் தெளிவுடன்.

    தலைவலி :

    கை கட்டை விரல் நகத்திற்கு நேர் கீழ் உள் பக்கம் (கைரேகைக்காக இங்க் படும் பகுதி) சதைப் பகுதியில் மறுவிரல் நகத்தால் 1 நிமிடம் விட்டு விட்டு அழுத்தம் கொடுங்கள். அதே போல் அடுத்த விரலிலும் செய்யுங்கள். தலைவலி பறந்து போவதை நீங்கள் உணரலாம்.

    வயிற்றுப் பிரச்னைகள் :

    தொப்புலிலிருந்து இடது பக்கம் 2 இஞ்ச் உங்கள் கைவிரல் அளவு அளந்து உங்களின் ஆட்காட்டி விரலால் 1 நிமிடம் அழுத்தம் கொடுங்கள். சாதாரண வயிறு உபாதைகள் நீங்கும்.

    கால் கட்டை விரலிலிருந்து மூன்றாவது விரலுக்கும் (நடுவிரல்) இரண்டாவது விரலுக்கும் இடைப்பட்ட சவ்வுப் பகுதியில் 1 நிமிடம் அழுத்தம் கொடுங்கள்.

    வயிறு உப்புசம், வயிற்றில் சூடு, வயிறு கல் போட்டது போன்றிருத்தல், உடம்பு வலி ஆகியவைகள் பறந்து போகும். இது போன்ற அக்குபஞ்சர் முறையிலான முதலுதவி முறைகளை தெரிந்துக் கொள்வதன் மூலம் கையில் முதலுதவி பெட்டி இல்லாத போதும் நம்மால் முதலுதவி செய்ய இயலும்.


    - தமிழ் கருத்துக்களம்

    datchu and jeshmitha like this.

    அன்புடன் கௌரி.


    "உன்னால் சாதிக்க இயலாத காரியம் என்று எதுவும் இருப்பதாக ஒருபோதும் நினைக்காதே!" - விவேகானந்தர்


    எனது கவிதை மொட்டுகள்




loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter