Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree1102Likes

Medical Notes - மருத்துவ குறிப்புகள்


Discussions on "Medical Notes - மருத்துவ குறிப்புகள்" in "General Health Problems" forum.


  1. #401
    premabarani's Avatar
    premabarani is offline Commander's of Penmai
    Real Name
    Premalata Baranidharan
    Gender
    Female
    Join Date
    May 2012
    Location
    Doha,Qatar
    Posts
    2,364

    Re: Medical Notes - மருத்துவ குறிப்புகள்

    Hi Gowri
    All are useful info.
    Thank you.
    Prema barani


    Sponsored Links
    gowrymohan likes this.
    Prema Barani

  2. #402
    gowrymohan's Avatar
    gowrymohan is offline Registered User
    Blogger
    Ruler's of Penmai
    Real Name
    Gowry Shanmuganathan
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    Sri Lanka
    Posts
    13,937
    Blog Entries
    380

    Re: Medical Notes - மருத்துவ குறிப்புகள்

    Quote Originally Posted by premabarani View Post
    Hi Gowri
    All are useful info.
    Thank you.
    Prema barani
    Thank you Prema barani.


    அன்புடன் கௌரி.


    "உன்னால் சாதிக்க இயலாத காரியம் என்று எதுவும் இருப்பதாக ஒருபோதும் நினைக்காதே!" - விவேகானந்தர்


    எனது கவிதை மொட்டுகள்




  3. #403
    gowrymohan's Avatar
    gowrymohan is offline Registered User
    Blogger
    Ruler's of Penmai
    Real Name
    Gowry Shanmuganathan
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    Sri Lanka
    Posts
    13,937
    Blog Entries
    380

    Re: Medical Notes - மருத்துவ குறிப்புகள்

    இருமலைப் போக்கும் தூதுவளை!

    சளி பிடிப்பதால் ஏற்படும் பல்வேறு உடல் உபாதைகளில் இருமலும் ஒன்று. சளி போனாலும் இருமல் போகாமல் பாடு படுத்தும்.

    இருமலைப் போக்க எளிதான வழி உள்ளது. தூதுவளை இலையை 4 அல்லது 5 எடுத்து அதன் முட்களை நீக்கிவிட்டு கழுவிக் கொள்ளவும்.

    இலைக்குள் 4 அல்லது 5 மிளகு வைத்து வெற்றிலைப் போல் மடித்து வாயில் போட்டு மென்று சாப்பிட இரண்டே நாளில் மார்புச் சளி போய், தொடர்ந்து வந்த குத்தல் இருமலும் காணாமல் போகும்.

    தூதுவளையை உளுத்தம் பருப்பு, புளி வைத்து துவையல் செய்தும் சாப்பிடுவார்கள். சளி பிடித்தவர்களுக்கு இந்த துவையலை செய்து கொடுத்தால் எந்த மருந்துக்கும் அசராத சளியும் கரைந்து காணாமல் போய் விடும்.

    தூதுவளை இலை உடலுக்கு உஷ்ணத்தைக் கொடுக்கும் என்பதால், சூட்டு உடம்புக் காரர்கள் அதிகமாக சாப்பிடக் கூடாது.



    - தமிழ் தந்த சித்தர்கள்

    Last edited by gowrymohan; 3rd May 2014 at 10:06 PM.
    jv_66, datchu, ramina and 1 others like this.

    அன்புடன் கௌரி.


    "உன்னால் சாதிக்க இயலாத காரியம் என்று எதுவும் இருப்பதாக ஒருபோதும் நினைக்காதே!" - விவேகானந்தர்


    எனது கவிதை மொட்டுகள்




  4. #404
    vimalmeganath is offline Friends's of Penmai
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    cuddalore
    Posts
    146

    Re: Medical Notes - மருத்துவ குறிப்புகள்

    very useful information. thank u

    gowrymohan likes this.

  5. #405
    gowrymohan's Avatar
    gowrymohan is offline Registered User
    Blogger
    Ruler's of Penmai
    Real Name
    Gowry Shanmuganathan
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    Sri Lanka
    Posts
    13,937
    Blog Entries
    380

    Re: Medical Notes - மருத்துவ குறிப்புகள்

    Thank you and welcome Vimalmeganath.


    அன்புடன் கௌரி.


    "உன்னால் சாதிக்க இயலாத காரியம் என்று எதுவும் இருப்பதாக ஒருபோதும் நினைக்காதே!" - விவேகானந்தர்


    எனது கவிதை மொட்டுகள்




  6. #406
    gowrymohan's Avatar
    gowrymohan is offline Registered User
    Blogger
    Ruler's of Penmai
    Real Name
    Gowry Shanmuganathan
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    Sri Lanka
    Posts
    13,937
    Blog Entries
    380

    Re: Medical Notes - மருத்துவ குறிப்புகள்






    jv_66 and datchu like this.

    அன்புடன் கௌரி.


    "உன்னால் சாதிக்க இயலாத காரியம் என்று எதுவும் இருப்பதாக ஒருபோதும் நினைக்காதே!" - விவேகானந்தர்


    எனது கவிதை மொட்டுகள்




  7. #407
    gowrymohan's Avatar
    gowrymohan is offline Registered User
    Blogger
    Ruler's of Penmai
    Real Name
    Gowry Shanmuganathan
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    Sri Lanka
    Posts
    13,937
    Blog Entries
    380

    Re: Medical Notes - மருத்துவ குறிப்புகள்

    முருங்கைப்பூ சாப்பிட்டால் கண்கள் குளிர்ச்சிபெறும். உடல் உறுப்புக்கள் சீரான முறையில் வளர்ச்சி அடையும். அதிகமான பித்தத்தைப் போக்கும்.


    முடக்குவாத நோயை சரி செய்யவும், எலும்பு தேய்மான பிரச்சினை இருப்பவர்களின் நோய் தீவிரத்தைக் குறைக்கவும் எழுமிச்சையிலுள்ள விட்டமின் 'c' சத்து உதவுகிறது.


    கருவுற்றிருக்கும் தாய்மார்கள் மாம்பழம் சாப்பிட்டு வந்தால் பிறக்கும் குழந்தை ஊட்டச்சத்துடன் இருக்கும். உடல் பலவீனம், கை கால் நடுக்கம், மயக்கம் இவைகளிலிருந்து விடுபடலாம்.


    இரத்தக்கொதிப்பு நோய் உள்ளவர்கள் ஒரு நாள் விட்டு ஒரு நாள் அகத்திக் கீரையை உணவில் சேர்த்துக்கொண்டால் இரத்தக் கொதிப்பு நோய் குணமாகும்.


    - கண்மணி

    jv_66, datchu and ramina like this.

    அன்புடன் கௌரி.


    "உன்னால் சாதிக்க இயலாத காரியம் என்று எதுவும் இருப்பதாக ஒருபோதும் நினைக்காதே!" - விவேகானந்தர்


    எனது கவிதை மொட்டுகள்




  8. #408
    gowrymohan's Avatar
    gowrymohan is offline Registered User
    Blogger
    Ruler's of Penmai
    Real Name
    Gowry Shanmuganathan
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    Sri Lanka
    Posts
    13,937
    Blog Entries
    380

    Re: Medical Notes - மருத்துவ குறிப்புகள்

    மனித உடல் ஆரோக்கியத்திற்கு நாம் சாப்பிடும் அன்றாட உணவில் எவ்வளவு காய்கறிகள் மற்றும் பழங்கள் இருக்கவேண்டும் என்பது குறித்து ஆய்வாளர்கள் புதிய பரிந்துரை ஒன்றை செய்திருக்கிறார்கள். அதன்படி, ஆரோக்கிய வாழ்க்கைக்கு அரைகிலோ காய்கனிகளை அன்றாடம் உண்பது அவசியம் என்கிறார்கள் சுமார் 65 ஆயிரம் பேரிடம் ஆய்வு செய்திருக்கும் இந்த விஞ்ஞானிகள்.


    இதுநாள்வரை ஒரு 25 வயது மதிக்கத்தக்க ஒரு மனிதர் ஒரு நாளைக்கு குறைந்தது 400 கிராம் அளவுக்காவது காய்கறி மற்றும் பழங்களை உண்ணவேண்டும் என்று மருத்துவ ஆய்வாளர்கள் பரிந்துரை செய்து வந்திருக்கிறார்கள். ஆனால் தற்போது ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் 560 கிராம், அதாவது அரைகிலோவுக்கும் அதிகமாக காய்கறி மற்றும் பழங்களை சாப்பிடுவது தான் மனிதர்களின் உடல் ஆரோக்கியத்துக்கு நல்லது என்று மருத்துவ ஆய்வாளர்கள் பரிந்துரை செய்திருக்கிறார்கள். இதன்மூலம் மனித உடலின் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் என்பதுடன் உடலின் ஆரோக்கியத்துக்கு அத்தியாவசியமான சத்துக்களையும் இந்த காய்கறி மற்றும் பழங்கள் கொடுக்கும் என்பது இந்த ஆய்வாளர்களின் பரிந்துரையாக இருக்கிறது.
    இதில் ஒரே வகையான காய்கறி, உதாரணமாக அரைகிலோ கேரட்டை சாப்பிட்டால் போதுமா, அல்லது ஒரே வகையான பழம், உதாரணமாக இரண்டு வாழைப்பழங்களை சாப்பிட்டால் போதுமா என்று கேட்டால் அது சரியான அணுகுமுறையாக இருக்காது என்கிறார்கள் இந்த ஆய்வை மேற்கொண்ட விஞ்ஞானிகள்.

    இவர்களின் கருத்துப்படி, நாளாந்தம் சாப்பிடும் காய்கறி மற்றும் பழங்களில் பல்வேறு வகையான காய்கறிகளையும் பழங்களையும் கலந்து சாப்பிடுவதே சரியான அணுகுமுறையாக இருக்கும் என்றும் அதன்மூலமே மனித உடலுக்கு தேவையான பல்வேறு சத்துக்கள் மனித உடலுக்கு கிடைக்கும் என்றும் இந்த ஆய்வை மேற்கொண்ட விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

    இந்த காய்கறிகள் என்பவை விலை உயர்ந்த காய்கறியாகவோ, பழவகைகள் என்றதும் விலை உயர்ந்த வெளிநாட்டு ஆப்பிள் பழங்களாகவோதான் இருக்கவேண்டிய அவசியம் இல்லை என்று சுட்டிக்காட்டியிருக்கும் விஞ்ஞானிகள், தக்காளி, வெங்காயம், முருங்கைக்காய், கத்தரி, வெண்டை, கோவைக்காய், பலவகையான கீரைகள், முள்ளங்கி, வாழைத்தண்டு போன்ற விலைகுறைந்த காய்கறிகளும் கூட நல்ல பலனைத்தரும் என்றும் விஞ்ஞானிகள் சுட்டிக்காட்டியுள்ளனர். பழங்களிலும் கூட வாழைப்பழம், நாவற்பழம், பலாப்பழம், இலந்தை, மாம்பழம் போன்ற விலை சகாயமாக கிடைக்கும் பழங்களிலும் கூட நல்ல பலன்கள் கிடைக்கும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

    ஆரோக்கிய வாழ்க்கைக்கு அரைகிலோ காய்கனிகளை அன்றாடம் சாப்பிடுவது அவசியம் என்கிறது இந்த ஆய்வறிக்கை. சுமார் 65 ஆயிரம் பேரிடம் செய்த ஆய்வில் இந்த முடிவுகள் தெரியவந்திருப்பதாக இந்த ஆய்வை மேற்கொண்ட விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.



    இணையதளத்திலிருந்து

    jv_66, datchu and ramina like this.

    அன்புடன் கௌரி.


    "உன்னால் சாதிக்க இயலாத காரியம் என்று எதுவும் இருப்பதாக ஒருபோதும் நினைக்காதே!" - விவேகானந்தர்


    எனது கவிதை மொட்டுகள்




  9. #409
    gowrymohan's Avatar
    gowrymohan is offline Registered User
    Blogger
    Ruler's of Penmai
    Real Name
    Gowry Shanmuganathan
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    Sri Lanka
    Posts
    13,937
    Blog Entries
    380

    Re: Medical Notes - மருத்துவ குறிப்புகள்

    குளியல் முறை - ஆயுர்வேத வழி

    குளிப்பதற்கு முன்
    மிகவும் குளிர்ந்த நீரில் குளிக்கக் கூடாது. நீர்த் தேக்கங்களில், ஆறு, குலம், அருவிகளில் ஆடையின்றி குளிக்கக் கூடாது. மிகக் குறைந்த அளவுள்ள நீரில் அதாவது குட்டைகளில் குளிக்கக் கூடாது. தண்ணீரை உடலில் ஊற்றுவது முதலில் தலையில் ஊற்றிப் பிறகு உடலில் ஊற்ற வேண்டும்.

    முகபட்ச வாதம் எனப்படும் முகத்தினை ஒரு பக்கம் இழுத்து வாய் கோணலாக்கிவிடும் அர்த்திதம் எனும் வாத நோய் உள்ளவர்கள், கண்வலி, கண் கூச்சம் உள்ளவர், காதில் வலி, இரைச்சல் முதலிய காது நோய் உள்ளவர், வயிற்றுப் போக்கு, வயிற்றுப் பொருமல், ஜலதோஷம், அஜீரணம் ஆகிய நோய் உடையவர்கள் நீர் நிலைகளில் குளிக்கக் கூடாது.

    குளிக்க இயலாதவர்கள் தலைக்கு ஊற்றாமல் உடலுக்கு மட்டும் ஊற்றிக் குளிக்கலாம். அல்லது உடலைக் குளிர்ந்த நீரிலோ, வெந்நீரிலோ நனைத்த துணியால் துடைத்துக் கொள்ளலாம்.

    கலங்கிய நீரில் குளிக்கக் கூடாது. நச்சுப் பூச்சுகள், மலம், சிறுநீர், அழுகிய பொருட்கள், புல், குப்பை உள்ள நீர் மற்றும் சூரியன், சந்திரன், வாயு ஆகியன படாததும், புதிதாக மண்ணில் வீழ்ந்த வெள்ளநீர் ஆகியவை குளிப்பதற்கு ஏற்றதல்ல.

    கிணறு, குளம் முதலியவற்றிலிருந்து தண்ணீரைக் காலை நேரத்தில் எடுத்து அன்றன்று பயன்படுத்த வைத்துக் கொள்ளலாம். ஏனெனில் நீர் அவ்வேளையில் குளிர்ந்து தெளிந்திருக்கும்.

    நன்கு வயிறு முட்டச் சாப்பிட்ட பின்னும், நிறைய நீர் குடித்த பின்னும் குளிக்கக் கூடாது.

    குளித்த பின்
    குளித்த பின் தோல் நனைந்துள்ள நிலையில் அதைத் துடைத்துவிடாமல் ஈரத் தலைமுடியை உதறக்கூடாது. உடம்பு ஈரமாக இருக்கையில் ஆடை உடுத்தக் கூடாது. உடலைத் துடைத்துத் தோலின் ஈரம் உலர்ந்தபின் உடுத்த வேண்டும்.

    குளித்தபின் அழுக்கில்லாத தூய்மையாகத் துவைத்த ஆடையை அணிய வேண்டும். ஏனெனில் அவையில் மதிப்பும், புகழும், ஆயுளும், அழகும், மகிழ்வும் கிட்டும்.

    பட்டு, கம்பளம், சிவந்த ஆடை வாயுவையும் கபத்தையும் போக்கும். ஆதலால் குளிர் காலத்தில் அவை அணியத்தக்கவை.

    காவி நிற ஆடை புத்தியை வளர்க்கும், குளிர்ச்சி அளிக்கும், பித்தத்தைப் போக்கும், மெல்லிய காவி நிற ஆடை மிக நல்லது. கோடையில் அணியத்தக்கது.

    வெண்ணிற ஆடை மங்களகரம். குளிரையும் வெப்பத்தையும் தாங்கிடும். குளிர்ச்சியோ, வெப்பமோ தராது. மழைக்காலத்தில் அணியலாம்.

    கிழிந்த ஆடை, பிறர் அணிந்த ஆடை, பிறர் சூடிய மலர், பிறர் அணிந்த செருப்பு அணியக்கூடாது.

    தூங்கும்போதும், வெளியில் செல்கையிலும், பூஜை செய்யும்போதும் புத்தாடை அணிவது நன்மையை உண்டாக்கும்.


    - பெண்மணி

    jv_66 and datchu like this.

    அன்புடன் கௌரி.


    "உன்னால் சாதிக்க இயலாத காரியம் என்று எதுவும் இருப்பதாக ஒருபோதும் நினைக்காதே!" - விவேகானந்தர்


    எனது கவிதை மொட்டுகள்




  10. #410
    gowrymohan's Avatar
    gowrymohan is offline Registered User
    Blogger
    Ruler's of Penmai
    Real Name
    Gowry Shanmuganathan
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    Sri Lanka
    Posts
    13,937
    Blog Entries
    380

    Re: Medical Notes - மருத்துவ குறிப்புகள்

    கொழுப்பு உணவை பெண்கள் தவிர்க்கக் கூடாது

    உணவுக்கும் உற்பத்தித்திறனுக்கும் தொடர்பு இருக்கிறது. பெண்களின் உடலில் நடக்கும் எல்லாவிதமான செயல்பாடுகளுக்கும் 'ஈஸ்ட்ரஜன்' என்ற ஹார்மோன் அத்தியாவசியமாகும்.

    ஆனால், பெண்களின் உடலில் ஆன்ட்ரோஜன் என்ற ஆண் ஹார்மோன் உள்ளது. இந்த ஆண் ஹார்மோனில் இருந்துதான் பெண் ஹார்மோன் ஈஸ்ட்ரஜன் உருவாகிறது. இந்த உருவாக்கம் நிகழ கொழுப்பின் உதவி தேவைப்படுகிறது.

    உணவின் மூலம் கொழுப்பு கிடைக்காதபோது உடலில் சரியான செயல்பாடு நடைபெறாது. இத்தகைய பெண்கள் கர்ப்பிணியாகும் வாய்ப்பு குறைவு. மாதவிலக்கிலும் கோளாறு ஏற்பட்டு ஈஸ்ட்ரஜன் அளவு குறைந்து மாதவிலக்கு நின்று போகும் அளவுக்கு உடலில் மாற்றங்கள் ஏற்பட்டு கர்ப்பப்பை சுருங்கி சிறிதாகிவிடும். இதனால் குண்டான பெண்களைப் போலவே ஒல்லியான பெண்களும் குழந்தை பெறுவது கஷ்டமாகிவிடுகிறது. இந்த உண்மைகளை ஹார்வர்டு பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ரோஷ்பிரிஷ் என்ற மருத்துவர் பல பெண்களை ஆராய்ந்து 2001 இல் இந்த உண்மைகளை வெளியிட்டார்.

    எனவே அளவுடன் கொழுப்புள்ள உணவுகளை பெண்கள் சேர்த்து வரவேண்டும். இத்துடன் கல்சியம் அதிகமுள்ள ராகி, முருங்கைக் கீரை, தயிர் முதலியவற்றையும் சேர்த்துவந்தால் கொழுப்பு உணவு அதிகம் சாப்பிட்டிருந்தாலும் உடல் பருமனாகாமல் பார்த்துக்கொள்ளலாம்.


    - பெண்மணி

    jv_66 and datchu like this.

    அன்புடன் கௌரி.


    "உன்னால் சாதிக்க இயலாத காரியம் என்று எதுவும் இருப்பதாக ஒருபோதும் நினைக்காதே!" - விவேகானந்தர்


    எனது கவிதை மொட்டுகள்




loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter