Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree1102Likes

Medical Notes - மருத்துவ குறிப்புகள்

Discussions on "Medical Notes - மருத்துவ குறிப்புகள்" in "General Health Problems" forum.

  1. #411
    gowrymohan's Avatar
    gowrymohan is offline Registered User
    Blogger
    Ruler's of Penmai
    Real Name
    Gowry Shanmuganathan
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    Sri Lanka
    Posts
    13,953
    Blog Entries
    380

    Re: Medical Notes - மருத்துவ குறிப்புகள்

    ஆஸ்துமா என்னும் நோய் நுரையீரலுக்குக் காற்றைக் கொண்டுசெல்லும் மூச்சுப்பாதை (Airway)வீங்கி (Inflammation) குறுகுவதால் ஏற்படுகிறது.

    ஆஸ்துமாவை ஏற்படுத்தும் காரணிகள்:

    ஒவ்வாமையின் விளைவாகவே பெரும்பாலும் ஆஸ்துமா ஏற்படுகிறது. தூசு, குளிர்ந்த காற்று, புகை, மூச்சுப்பாதையில் ஏற்படும் தொற்றுகள், ரசாயனப் பொருட்கள், புகைபிடித்தல், மகரந்தங்கள், வளர்ப்புப் பிராணிகளின் முடிகள், வாசனைத் திரவியங்கள் போன்றவை ஏற்படுத்தும் ஒவ்வாமையின் விளைவுதான் ஆஸ்துமாவின் வெளிப்பாடு.

    அறிகுறிகள்:

    சளியுடனோ அல்லது சளி இல்லாமலோ இருமல் தொடர்ந்து இருக்கும். ஒரு சுவாசத்துக்கும் அடுத்த சுவாசத்துக்கும் இடைப்பட்ட நேரம் குறைந்து காணப்படும். இழுப்பானது அதிகாலை மற்றும் இரவில் அதிகமாக இருக்கும்.

    சித்த மருத்துவத்தில் எளிய தீர்வுகள்:

    முசுமுசுக்கை இலைப்பொடி, மற்றும் தூதுவளை இலைப் பொடி சம அளவு கலந்து, அதில் அரை ஸ்பூன் தேன் சேர்த்து உண்ணலாம்.

    உத்தாமணி இலைச்சாறு ஒரு ஸ்பூன் எடுத்து, சம அளவு தேன் சேர்த்து அருந்தலாம்.

    முட்சங்கன் இலையை அரைத்து, நெல்லிக்காய் அளவு பாலில் கலந்து சாப்பிடலாம்.

    நஞ்சறுப்பான் இலைகளை நிழலில் உலர்த்தி, தூள் செய்து அதில் 500 மிகி அளவு மூன்று வேளைகள் தேனில் குழைத்து அருந்தலாம்.

    திப்பிலிப் பொடியுடன் கம்மாறு வெற்றிலைச் சாறும் தேனும் கலந்து எடுத்துக்கொள்ளலாம்.

    செடி, திப்பிலி, நாயுருவி விதை, சீரகம், இந்துப்பு சமஅளவு எடுத்துப் பொடித்து, அதில் அரை ஸ்பூன் எடுத்து தேன் கலந்து சாப்பிடலாம்.

    கோரைக்கிழங்கு, சுக்கு, கடுக்காய்த்தோல் சம அளவு எடுத்துப் பொடித்து, வெல்லம் கலந்து இருவேளை உண்ணலாம்.

    சீந்தில் கொடி, ஆடாதோடை, கண்டங்கத்திரி இவற்றைச் சம அளவு எடுத்து, அரைத்து, அதில் நெய் சேர்த்துக் காய்ச்சித் தினசரி இருவேளை ஒரு ஸ்பூன் அருந்தலாம்.

    லவங்கம், சாதிக்காய், திப்பிலி வகைக்கு 1 பங்கு, மிளகு 2 பங்கு, தான்றிக்காய் 3 பங்கு, சுக்கு 4 பங்கு சேர்த்துத் தூள் செய்து, சம அளவு சர்க்கரை சேர்த்து அரை ஸ்பூன் காலை மாலை உண்ணலாம்.

    இஞ்சிச்சாறு, மாதுளம்பூச்சாறு, தேன் சம அளவு கலந்து 30 மிலி இருவேளை பருகலாம்.

    இம்பூறல் இலைப் பொடியுடன் இரண்டு பங்கு அரிசி மாவு சேர்த்து அடையாகச் செய்து சிற்றுண்டி போலச் சாப்பிடலாம்.

    ஆடாதோடை இலைச்சாறு ஒரு ஸ்பூன் எடுத்து, தேன் கலந்து அருந்தலாம்.

    மூங்கிலுப்பை வேளைக்கு அரை ஸ்பூன் வீதம் கொடுக்கலாம்.

    மூக்கிரட்டை வேரை அரைக் கைப்பிடி எடுத்து ஒன்றிரண்டாகச் சிதைத்து, 4 பங்கு நீர் சேர்த்து 1 பங்காக வற்றவைத்து இருவேளை அருந்தலாம்.

    மிளகரணை இலையை உலர்த்திப் பொடித்து, அரை ஸ்பூன் எடுத்துத் தேன் கலந்து உண்ணலாம்.

    சிற்றரத்தை, ஒமம், அக்கரகாரம் சம அளவு எடுத்துப் பொடித்து, அரை ஸ்பூன் எடுத்துத் தேன் கலந்து சாப்பிடலாம்.

    துளசி, தும்பை இலை சம அளவு எடுத்து, உலர்த்திப் பொடித்து, அதில் அரை ஸ்பூன் தேன் கலந்து உண்ணலாம்.

    தவிர்க்க வேண்டியவை:

    கிரீம் பிஸ்கட், குளிர்பானங்கள், கலர் சேர்க்கப்பட்ட உணவுகள், எண்ணெய், கொழுப்பு, வாழைப்பழம், திராட்சை, எலுமிச்சை, வாசனைத் திரவிங்கள், ஜஸ்கிரீம், கத்திரிக்காய், அதிகக் குளிர், பனி, குளிரூட்டப்பட்ட அறை.

    - தமிழும் சித்தர்களும்

    Sponsored Links
    jv_66, datchu, repplyuma and 2 others like this.

    அன்புடன் கௌரி.

    "உன்னால் சாதிக்க இயலாத காரியம் என்று எதுவும் இருப்பதாக ஒருபோதும் நினைக்காதே!" - விவேகானந்தர்

    எனது கவிதை மொட்டுகள்

  2. #412
    gowrymohan's Avatar
    gowrymohan is offline Registered User
    Blogger
    Ruler's of Penmai
    Real Name
    Gowry Shanmuganathan
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    Sri Lanka
    Posts
    13,953
    Blog Entries
    380

    Re: Medical Notes - மருத்துவ குறிப்புகள்

    jv_66, datchu, repplyuma and 1 others like this.

    அன்புடன் கௌரி.

    "உன்னால் சாதிக்க இயலாத காரியம் என்று எதுவும் இருப்பதாக ஒருபோதும் நினைக்காதே!" - விவேகானந்தர்

    எனது கவிதை மொட்டுகள்

  3. #413
    gowrymohan's Avatar
    gowrymohan is offline Registered User
    Blogger
    Ruler's of Penmai
    Real Name
    Gowry Shanmuganathan
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    Sri Lanka
    Posts
    13,953
    Blog Entries
    380

    Re: Medical Notes - மருத்துவ குறிப்புகள்

    குழந்தைகளின் அழுகைக்கான காரணங்கள்

    குழந்தைகளின் அழுகைக்கு பல காரணங்கள் இருக்கின்றன. குழந்தைகளின் அழுகைக்கு என்ன காரணம், அதை எப்படி கண்டுபிடிப்பது என்பதை இங்கே காணலாம்..பசியால்தான் பெரும்பாலும் குழந்தைகள் அழும். பசியால் அழுதால் எளிதாக கண்டு பிடித்துவிடலாம்.

    குழந்தைகள் பால்குடிக்கும்போது என்ன அறிகுறிகளை காட்டுமோ அதை எல்லாம் அந்த அழுகையோடு வெளிப்படுத்தும். கைவிரலை சப்புதல், பால்குடிப்பதுபோல் உதடுகளை சுளித்தல், உதடுகளை அம்மாவின் உடல் மீது சேர்த்தல், அம்மாவின் முகத்தை பார்த்தல் போன்றவைகள் எல்லாம் பசியால் ஏற்படும் அழுகையின்போது வெளிப்படும்.

    ‘அம்மா நான் நனைத்துவிட்டேன்’

    பசி தீர்ந்து, குழந்தை நன்றாக தூங்கும்போது திடீரென்று அழுதால் சிறுநீர் கழித்து நனைந்திருக்கிறது என்று அர்த்தம். அதுதான் காரணம் என்றால், நனைந்த துணியை மாற்றியதும் குழந்தை நிம்மதியாக தூங்கத் தொடங்கிவிடும்.

    ‘அம்மா எனக்கு தூக்கம் வருதே’

    வீட்டில் அதிக சத்தமோ, திடீர் சீதோஷ்ணநிலை மாற்றமே ஏற்பட்டால் அது குழந்தைகளின் தூக்கத்தை பாதிக்கும். அப்போதும் அழத் தொடங்கிவிடும். குளிப்பாட்டி, பசியை தீர்த்ததும் எல்லா குழந்தைகளும் தூக்கத்திற்கு தயாராகிவிடும். அப்போது தூக்கத்திற்கு ஏற்ற சூழ்நிலை அமையாவிட்டால் குழந்தைகள் அழுதுவிடும். அந்த குழந்தையின் அருகில் இருந்து மற்ற குழந்தைகள் விளையாடிக் கொண்டிருந்தாலும், தூங்க முடியாமல் குழந்தை தவிக்கும்.

    ‘அம்மா என்னை கொஞ்சம் எடுத்து கொஞ்சு’

    சில நேரங்களில் குழந்தைகள் அம்மா தன்னை தூக்கி கொஞ்சவேண்டும் என்பதற்காகவும் அழும். அப்போது அம்மா எடுத்து, நெஞ்சோடு சேர்த்து, கொஞ்சி சிறிது நேரம் பேசினால் அழுகையை நிறுத்திவிடும். அம்மாவின் பாதுகாப்பும், அரவணைப்பும், வருடலும் குழந்தைகளுக்கு எப்போதும் தேவைப்படுகிறது. அது கிடைக்காதபோது அழுகையைத் தொடங்கிவிடும்.

    ‘அம்மா எனக்கு வாயு தொந்தரவு’

    குழந்தைகளை அதிகமாக அழவைப்பது, அதன் வாயு தொந்தரவு. பால் குடித்த சிறிது நேரத்திலே இந்த தொந்தரவு ஏற்பட்டு குழந்தைகள் அழும். பிறந்த 3, 4 மாதங்களில் வாயு தொந்தரவு அதிகம் ஏற்படும். அதனால் பால் புகட்டியதும் சிறிது நேரம் தோளில் போட்டு தட்டிக்கொடுத்தால் குழந்தை ஏப்பம் விடும். அப்போது வாயு வெளியேறிவிடும்.

    பால் புகட்டியதும் குழந்தையை படுக்கவைக்காமல் இருந்தால், இந்த அழுகை ஏற்படாது.குளிர் அல்லது திடீர் உஷ்ணத்தை குழந்தைகளால் தாங்கிக்கொள்ள முடியாது என்பதாலும் அழும். குளிப்பாட்டிவிட்டு உடனே தலையை துவட்டி, உடலை துடைக்காவிட்டாலும், நனைந்த நாப்கினை மாற்ற தாமதமானாலும் குளிரால் குழந்தைகள் அழும்.

    குழந்தைகளை குளிப்பாட்டி முடிந்ததும் உடனே உடலை துடைத்துவிடவேண்டும்.குளிர்ந்த நீரிலும், சுடுநீரிலும் குழந்தைகளை குளிப்பாட்டக்கூடாது. குளிப்பாட்டும் நீரில் டெட்டால் போன்ற எதையும் கலக்கவும்கூடாது. பேபி சோப், பேபி லோஷன் போன்றவற்றை மட்டும் பயன்படுத்தவேண்டும்.

    ‘அம்மா எனக்கு பல் முளைக்கப்போகிறது’

    பல் முளைக்கும்போது சில குழந்தைகள் வலியால் அழும். அந்த அழுகை நீடித்தால் குழந்தையை டாக்டரிடம் காண்பிப்பதே நல்லது. 4 முதல் 7 மாதத்திற்குள் முதல் பல் முளைக்கும். அப்போது ஈறை தடவிப் பார்த்தால் உணர முடியும்.

    அறிமுகமற்றவர்கள் தூக்கும்போதும், ஆடை தொந்தரவாக அமையும்போதும், பால் குடிப்பதும்- தூங்குவதுமாக பொழுதை போக்கி போரடித்தாலும் குழந்தைகள் அழும்.காரணத்தைக் கண்டறிந்து, சரி செய்ய முடியாதபோது அழும் குழந்தையை டாக்டரிடம் கொண்டுபோய் காண்பிப்பதே சரியான வழி.

    - maalaimalar

    ramyaraj, jv_66, datchu and 2 others like this.

    அன்புடன் கௌரி.

    "உன்னால் சாதிக்க இயலாத காரியம் என்று எதுவும் இருப்பதாக ஒருபோதும் நினைக்காதே!" - விவேகானந்தர்

    எனது கவிதை மொட்டுகள்

  4. #414
    gowrymohan's Avatar
    gowrymohan is offline Registered User
    Blogger
    Ruler's of Penmai
    Real Name
    Gowry Shanmuganathan
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    Sri Lanka
    Posts
    13,953
    Blog Entries
    380

    Re: Medical Notes - மருத்துவ குறிப்புகள்

    உடம்பில் அடிபட்டால் உடனடி சிகிச்சைகள்

    நம் உடம்பில் இருக்கும் எலும்புகள் ஆரோக்கியமாக இருந்தால் தான் நாம் சுறுசுறுப்பாக அன்றாடப் பணிகளை குறைவின்றி செய்து முடிக்க முடியும். எனவே எலும்பு தொடர்பான பிரச்சினைகளில், பிறகு பார்த்துக்கொள்ளலாம் என்று அசட்டையாக இருக்கக்கூடாது.

    உடனுக்குடன் டாக்டரை பார்த்து ஆலோசனை பெற்று எலும்புகளில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளை தீர்த்துவிட வேண்டும். இது தொடர்பான டிப்ஸ்களை பிரபல மருத்துவர் கமலி ஸ்ரீபால் வழங்கியுள்ளார்.உங்கள் காலில் சுளுக்கா? அல்லது சற்று பலமான அடியா? PRICE முறையை கையாளுங்கள்.

    P - Protection
    R - Rest
    I - Ice
    C - Compression
    E - Elevation

    Protect - பாதுகாத்தல் - பாதிக்கப்பட்ட இப்பகுதியினை மேலும் பழுதாகாமல் பாதுகாத்தல் வேண்டும்.

    Rest - ஓய்வு - 48-72 மணிநேரம் அதாவது 2 முதல் 3 நாட்கள் பாதிக்கப்பட்ட பகுதிக்கு ஓய்வு கொடுங்கள்.

    Ice - ஐஸ் கட்டி - குளிர் ஒத்தடம் 2 முதல் 3 நாட்களுக்கு கொடுங்கள். உடைத்த ஐஸ் கட்டிகளை ஒரு டவலிலோ அல்லது பாலித்தீன் கவரிலோ பாதிக்கப்பட்ட பகுதியில் சுமார் 15 நிமிடங்கள் ஒத்தடம் கொடுங்கள்.

    இதனை நாள் ஒன்றுக்கு 4 - 5முறை செய்யுங்கள். ஐஸ் பையினை அப்படியே பாதிக்கப்பட்ட பகுதி மீது வைத்து விடாதீர்கள். இது அதிக குளுமையினால் காயத்தை ஏற்படுத்தும்.

    Compress - அழுத்தம் - எலாஸ்டிக் அல்லது பேன்டேஜ் கொண்டு அதிக இறுக்கம் இல்லாமல் சுற்றி விடுங்கள். இது ரத்த ஓட்டத்தினை தடை செய்யும்படி இருக்கக்கூடாது. இரவு தூங்கப் போவதற்கு முன் அதனை கழட்டி விடுங்கள்.

    Elevation - காலை சற்று உயர வைத்தல். இரண்டு தலையணை வைத்து காலை அதன் மீது தூக்கி வைத்துக் கொள்ளுங்கள்.

    * அடிபட்ட மூன்று நாட்களுக்குள் சூடு ஒத்தடம், மசாஜ், அடிபட்ட இடத்தில் வெந்நீர் ஒத்தடம் கொடுத்தல் போன்றவை பாதிப்பினை அதிகப்படுத்தி விடும்.

    நீங்கள் கீழே விழுந்து விட்டீர்களா?

    எலும்பு முறிவு என அச்சமாக இருக்கிறதா? அதற்கான அறிகுறிகள்.

    * தாங்கமுடியாத வலியும், வீக்கமும்.

    * மாறுபட்ட நிறம்.

    * நகர்த்த முடியாமை, நகர முடியாமை.

    * அடிபட்ட இடத்தில் வித்தியாசமான வளைவு, தொய்வு.உடனடியாக எலும்பு மருத்துவரை அணுகவும்.

    எலும்பின் அதிசயம்!

    * உடலில் உள்ள 206 எலும்புகளில் பாதிக்கு மேல் கை, கால்களில் தான் உள்ளன. 52 எலும்புகள் பாதங்களில் உள்ளன.

    * ஒருவரின் வாழ்நாளில் ஒவ்வொரு பாதமும் பூமியை, சுமார் 10 மில்லியன் முறை தரையில் தொடுகின்றது (நடப்பது,ஓடுவது, குதிப்பது) இவை அனைத்தும் இதில் அடங்கும்.

    * முகத்தில் 14 எலும்புகளும், 54 எலும்புகள் இரண்டு கைகளிலும் உள்ளது. காதில் உள்ள எலும்பு மிக மிக சிறியது. 2.5 மில்லி மீட்டர் நீளம் உடையது.

    * எந்த உடற்பயிற்சி, இதயத் துடிப்பினை கூட்டி, ரத்த ஓட்டத்தினை தூண்டி நன்கு மூச்சு விடச் செய்கின்றதோ, அதனை ஏரோபிக்ஸ் என்கிறோம். இது இசையோடு ஒத்துச் செய்யப்படுவதால், மனதினையும் மகிழ்ச்சியாக வைக்கின்றது.

    இவ்வகையான உடற்பயிற்சி

    * இருதயம், ரத்த ஓட்டம், நுரையீரலை சீர் செய்கின்றது.

    * உடல் எடை குறைய உதவுகின்றது.

    * உடல் இயக்கம் எளிதாகின்றது.

    * சதைகள் ஆரோக்கியத்துடனும், இளமையுடனும் இருக்கின்றன.

    * எலும்பின் உறுதி நிலைக்கும்.

    - maalaimalar

    Moderator's Note: This Article has been published in Penmai eMagazine Nov. 2014. You Can download & Read the magazines HERE.

    Last edited by sumathisrini; 19th Nov 2014 at 04:38 PM.
    ramyaraj, jv_66, datchu and 2 others like this.

    அன்புடன் கௌரி.

    "உன்னால் சாதிக்க இயலாத காரியம் என்று எதுவும் இருப்பதாக ஒருபோதும் நினைக்காதே!" - விவேகானந்தர்

    எனது கவிதை மொட்டுகள்

  5. #415
    gowrymohan's Avatar
    gowrymohan is offline Registered User
    Blogger
    Ruler's of Penmai
    Real Name
    Gowry Shanmuganathan
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    Sri Lanka
    Posts
    13,953
    Blog Entries
    380

    Re: Medical Notes - மருத்துவ குறிப்புகள்

    நாம் உண்ணும் உணவு சரியானதுதானா ?
    - கண்டுபிடிக்க ஒரு எளிய வழி

    அதாவது எந்த உணவானாலும் உணவு உண்ணும்போதோ உண்ட பின்னோ உடனே தண்ணீர் தேவைப்பட்டால் அப்போது உண்ட உணவு உண்பதற்கு ஏற்ற நல்ல உணவு அல்ல என்றும் உடனே தண்ணீர் தேவைப்படவில்லை என்றால் அது உண்பதற்கு ஏற்ற நல்ல உணவு என்றும் அறிந்து கொள்ளலாம். .

    ஒருவருக்குத் தண்ணீர்த் தாகம் எடுக்கிறது என்றால் அவர் உழைப்பின் காரணமாகவோ அல்லது வெய்யிலின் காரணமாகவோ அல்லது எதிர்பாராத செய்தியைக் கேட்டு நாக்கும் தொண்டையும் வரண்டு போனதாலோ அல்லது அதிகம் தொண்டை வரண்டுபோகுமளவு சப்தமாகப் பேசியதாலோ தான் இருக்கவேண்டும்.

    விளையாடும்போதும் ஓடும்போதும் வேகமாக நடக்கும் போதுகூட தண்ணீர்த் தாகம் எடுக்கலாம். காரணம் அந்த நேரங்களில் நமது உடம்பில் உள்ள நீர்மட்டும் அதிகம் செலவாகிறது.

    அப்படியல்லாமல் உண்ணும் உணவால் ஒருவருக்குத் தாகம் எடுக்கிறது என்றால் அந்த உணவை நமது உடம்பு சாதாரணமாக ஏற்றுக்கொள்வில்லை என்பது பொருள். அதன்காரணமாக தண்ணீரைக் குடித்து சரிசெய்து மேலும் அதே உணவை வயிற்றில் செலுத்துகிறோம்.

    உடம்புக்குத் தண்ணீர் தேவை இல்லாதபோதும் உண்ட உணவு தண்ணீர் கேட்கிறது. அத்தகைய உணவு எதாகிலும் குறையவோ கூடவோ உடல் நலத்துக்குத் தீங்கு விளைவிக்கக் கூடியதே!

    அடுப்பில் வைத்து எண்ணையின்றி வேகவைத்து சமைக்கப்படும் உணவுகள் குறைந்த தாகத்தையே உண்டுபண்ணும். அதாவது தாளிப்பின்றி குறைந்த உப்பு காரம் சேர்க்கப்படும் உணவுகள்.

    எண்ணைகொண்டு தாளிக்கும் மற்றும் உப்பு காரம் நிறையச் சேர்க்கப்படும் உணவுகள் கூடுதல் தாகத்தை உண்டுபண்ணும்.

    ஆனால் நெருப்பில் நேரடியாகவோ அல்லது காய்ச்சிய எண்ணையில் போட்டோ சுட்டெடுக்கப்படும் உணவு வகைகள் உடனே அதிகமான அளவு தண்ணீர் கேட்கும். காரணம் ஒவ்வொன்றும் அவற்றைச் சமைக்கும் முறைக்கேற்ப அதிகமான தண்ணீர் குடித்தால்தான் நமது செரிமான உறுப்புக்களால் செயல்பட முடிகிறது.

    இந்த இருவகைகளையும் ஒப்பிட்டுப்பார்த்தால் தண்ணீர்த் தாகத்தை அதிகப்படுத்தும் உணவுகள் எல்லாம் குறைந்த அளவிலிருந்து அதிகமான அளவு வரை நோய்களுக்குக் காரணமாக இருப்பதும் அப்படித் தாகத்தை உண்டுபண்ணாத உணவுகள் எல்லாம் நோய்களை உருவாக்குவது இல்லை என்பதோடு அநேக நோய்களுக்கு மருந்தாகவும் பயன்படுவது உறுதிப்படும்.

    அதற்குக் காரணம் இயற்கை உணவுகள் அனைத்தும் எளிதில் செரிக்கப்படுவதோடு அவற்றின் கழிவுப்பொருட்களும் எளிதில் வெளியேற்றப்படுகின்றன. அதேசமயம் சமைக்கப்படும் விதத்துக்கேற்ப சமையல் உணவுகள் எளிதில் செரிக்கப்படாமல் சிரமப்படுத்துவதோடு அவற்றின் கழிவுப்பொருட்களும் எளிதில் வெளியேறாமல் உடம்பிலேயே தங்கிப் பின் பல்வேறு நோய்கள் உருவாகக் காரணங்களாக மாறுகின்றன.

    இயற்கை உணவுகள் தண்ணீரைச் சார்ந்து இருப்பது இல்லை

    ...

    பச்சையாக உண்ணக்கூடிய காய்கறிகள், கனிவகைகள், முளைக்கட்டிய தானியங்கள், பழச்சாறுகள், மூலிகைச் சாறுகள், இளநீர் போன்ற இயற்கை உணவுகள் தாகத்தை அதிகமாகத் தூண்டுவது இல்லை.

    - தமிழும் சித்தர்களும்

    ramyaraj, jv_66, datchu and 1 others like this.

    அன்புடன் கௌரி.

    "உன்னால் சாதிக்க இயலாத காரியம் என்று எதுவும் இருப்பதாக ஒருபோதும் நினைக்காதே!" - விவேகானந்தர்

    எனது கவிதை மொட்டுகள்

  6. #416
    ramyaraj's Avatar
    ramyaraj is offline Penman of Penmai
    Blogger
    Guru's of Penmai
    Real Name
    RamyaRajan
    Gender
    Female
    Join Date
    May 2011
    Location
    bangalore
    Posts
    6,551
    Blog Entries
    6

    Re: Medical Notes - மருத்துவ குறிப்புகள்

    Quote Originally Posted by gowrymohan View Post

    Thank you Gowry... naan ithai feel panni irukken. enaku eppa hotel saappadu saapittaalum romba thagamave irukkum. athe veettu sapadu sapidum pothu appadi irukathu,ennaa enka veettu samayala oil,salt, chilli ellam kammiyaa irukkum.

    datchu and gowrymohan like this.
    Ramya Rajan
    “Not all of us can do great things. But we can do small things with great love.” ― Mother Teresa

    வழியோரம் விழி வைக்கிறேன் - full story link

  7. #417
    repplyuma's Avatar
    repplyuma is offline Guru's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    Canada
    Posts
    5,986

    Re: Medical Notes - மருத்துவ குறிப்புகள்

    நல்ல தகவல்கள் கௌரி சிஸ் .....Thx for sharing...

    gowrymohan likes this.
    - உமா உதய்

  8. #418
    gowrymohan's Avatar
    gowrymohan is offline Registered User
    Blogger
    Ruler's of Penmai
    Real Name
    Gowry Shanmuganathan
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    Sri Lanka
    Posts
    13,953
    Blog Entries
    380

    Re: Medical Notes - மருத்துவ குறிப்புகள்

    Quote Originally Posted by ramyaraj View Post
    Thank you Gowry... naan ithai feel panni irukken. enaku eppa hotel saappadu saapittaalum romba thagamave irukkum. athe veettu sapadu sapidum pothu appadi irukathu,ennaa enka veettu samayala oil,salt, chilli ellam kammiyaa irukkum.
    Unmaithaan Ramya. Naan intha thagavalai vaasiththa pinpu thaan check panni paarththaen. Inimael unavil avathaanamaaga iruppathu nallathu. Thank you Ramya.

    datchu likes this.

    அன்புடன் கௌரி.

    "உன்னால் சாதிக்க இயலாத காரியம் என்று எதுவும் இருப்பதாக ஒருபோதும் நினைக்காதே!" - விவேகானந்தர்

    எனது கவிதை மொட்டுகள்

  9. #419
    gowrymohan's Avatar
    gowrymohan is offline Registered User
    Blogger
    Ruler's of Penmai
    Real Name
    Gowry Shanmuganathan
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    Sri Lanka
    Posts
    13,953
    Blog Entries
    380

    Re: Medical Notes - மருத்துவ குறிப்புகள்

    Quote Originally Posted by repplyuma View Post
    நல்ல தகவல்கள் கௌரி சிஸ் .....Thx for sharing...
    Thank you and welcome Uma.

    அன்புடன் கௌரி.

    "உன்னால் சாதிக்க இயலாத காரியம் என்று எதுவும் இருப்பதாக ஒருபோதும் நினைக்காதே!" - விவேகானந்தர்

    எனது கவிதை மொட்டுகள்

  10. #420
    gowrymohan's Avatar
    gowrymohan is offline Registered User
    Blogger
    Ruler's of Penmai
    Real Name
    Gowry Shanmuganathan
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    Sri Lanka
    Posts
    13,953
    Blog Entries
    380

    Re: Medical Notes - மருத்துவ குறிப்புகள்

    கருப்பை கோளாறுகள் நீங்க

    · நெல்லிக்கனியை தினசரி சேர்த்து வர கருப்பை நோய் குணமாவதோடு தாய்க்கும் குழந்தைக்கும் சிறந்த டானிக்காக பயன்படுகிறது.

    · அருகம்புல்லை அரைத்து உட்கொண்டால் பெண்களுக்கு மாதவிடாய் தடை ஏற்படாது.

    · முருங்கைக்காயை சமைத்து சாப்பிட்டு வர கருப்பையின் பலவீனம் மறைந்து பலம் பெறும்.

    · அரசமரத்தின் இலையை மைய அரைத்து காலையில் வெறும் வயிற்றில் 1-உருண்டை சாப்பிட்டு வர குழந்தை பாக்கியம் கிடைக்கும்.

    - தமிழும் சித்தர்களும்

    jv_66 and datchu like this.

    அன்புடன் கௌரி.

    "உன்னால் சாதிக்க இயலாத காரியம் என்று எதுவும் இருப்பதாக ஒருபோதும் நினைக்காதே!" - விவேகானந்தர்

    எனது கவிதை மொட்டுகள்

loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!

Follow Penmai on Twitter