Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree1102Likes

Medical Notes - மருத்துவ குறிப்புகள்


Discussions on "Medical Notes - மருத்துவ குறிப்புகள்" in "General Health Problems" forum.


 1. #421
  gowrymohan's Avatar
  gowrymohan is offline Registered User
  Blogger
  Ruler's of Penmai
  Real Name
  Gowry Shanmuganathan
  Gender
  Female
  Join Date
  Mar 2012
  Location
  Sri Lanka
  Posts
  13,953
  Blog Entries
  380

  Re: Medical Notes - மருத்துவ குறிப்புகள்

  நாம் இனிப்பு தின்பதற்கு நமது குழந்தைகளைப் பழக்குவது போல கசப்பு உண்ணவும் பழக்க வேண்டும்.நல்ல கசப்பு சுண்டை வற்றல்.இதை தவறாது உணவில் சேர்க்க புழுக்கள் உடலில் சேராது.உடலில் இருக்கும் புழுக்கள் வெளியேற குப்பை மேனியின் வேர் இரண்டை சிதைத்து ஒரு டம்ளர் தண்ணீரை ஊற்றி அரை டம்ளராகச் சுருங்கும் வரை காய்ச்சி காலையில் வெறும் வயிற்றில் மூன்று நாட்கள் கொடுக்க கிருமிகள்,மற்றும் புழுக்கள் கூண்டோடு விழுந்து அழியும்.


  - சித்த ஞான சபை


  Sponsored Links
  jv_66, datchu and kirubankarthik like this.

  அன்புடன் கௌரி.


  "உன்னால் சாதிக்க இயலாத காரியம் என்று எதுவும் இருப்பதாக ஒருபோதும் நினைக்காதே!" - விவேகானந்தர்


  எனது கவிதை மொட்டுகள்
 2. #422
  gowrymohan's Avatar
  gowrymohan is offline Registered User
  Blogger
  Ruler's of Penmai
  Real Name
  Gowry Shanmuganathan
  Gender
  Female
  Join Date
  Mar 2012
  Location
  Sri Lanka
  Posts
  13,953
  Blog Entries
  380

  Re: Medical Notes - மருத்துவ குறிப்புகள்

  உடல் உழைப்பின்றி நாற்காலியில் அமர்ந்து பகல் முழுவதும் வேலை பார்ப்பவர்கள் உணவைக் குறைக்க வேண்டும்.
  உடல் உழைப்பு இல்லாததால் உணவு உடலில் கசடுகளாகத் தங்கி துன்பம் விளைவிக்கும்.


  - இணையதளத்திலிருந்து

  jv_66, datchu and kirubankarthik like this.

  அன்புடன் கௌரி.


  "உன்னால் சாதிக்க இயலாத காரியம் என்று எதுவும் இருப்பதாக ஒருபோதும் நினைக்காதே!" - விவேகானந்தர்


  எனது கவிதை மொட்டுகள்
 3. #423
  gowrymohan's Avatar
  gowrymohan is offline Registered User
  Blogger
  Ruler's of Penmai
  Real Name
  Gowry Shanmuganathan
  Gender
  Female
  Join Date
  Mar 2012
  Location
  Sri Lanka
  Posts
  13,953
  Blog Entries
  380

  Re: Medical Notes - மருத்துவ குறிப்புகள்

  உடல் வெப்பம் தணிக்கும் வெட்டிவேர்

  கொளுத்தும் கத்தரி வெயிலில் இருந்து தப்பிக்க, குளிர்ச்சியான ஆகாரங்களை பயன்படுத்துவது அவசியம். அந்த வகையில் மண் பானை தண்ணீர் உடலுக்கு மிகவும் நல்லது. இந்த தண்ணீரில் வெட்டி வேரை சேர்க்கும் போது கிருமிகள் அழிந்து நீர் சுத்தமாகும். நல்ல மணம் கிடைக்கும். உடல் சூட்டை குறைக்கும் தன்மை வெட்டி வேருக்கு உண்டு.

  கோடைகாலத்தில் நீர் கடுப்பு, தேக எரிச்சல், வயிற்றுக் கடுப்பு, போன்றவற்றால் அவதிப் படுபவர்கள் வெட்டிவேரை சுத்தம் செய்து உலர்த்திப் பொடிசெய்து கொண்டு அதனுடன் பெருஞ்சீரகம் பொடி செர்த்து சம அளவு எடுத்து வெந்நீரில் 200 மி.கி. அருந்தினால் தீர்வு கிடைக்கும்..முகம் முழுக்க அடிக்கடி பருக்கள் தோன்றி அவதிப்படுகிறவர்களுக்கு, நல்ல மருந்தாக இருக்கிறது இந்த வெட்டிவேர் விழுது.

  காய்ச்சல் மற்றும்வயிற்றில் ஏற்படும் நோய்களைக் கட்டுப்படுத்தும். நாவறட்சி, தாகம் நீக்குவதுடன் மன மகிழ்ச்சி உண்டாகும். வாந்தி பேதிக்கும் இது நல்ல மருந்தாகும். மேலும் சளி தொந்தரவு ஏற்படாமல் இந்த வேர் பாதுகாக்கும். வெட்டிவேர் கவலையை நீக்கி மனதை அமைதிப்படுத்தும், மன அழுத்தத்தை நீக்கவும் பெரிதும் உதவுகிறது. வெட்டிவேரில் தயாரிக்கப்படும் எண்ணெய் முக அழகை கூட்டுவதோடு தோலில் ஏற்படும் காயங்களை குணப்படுத்துகிறது.

  நீண்ட நாட்களாக ஆறாமல் வடுக்கள் இருப்பின் அவற்றின் மேல் வெட்டிவேர் எண்ணெய் தடவி வந்தால் தழும்பு மறைந்து விடும். இதன் எண்ணெய்யை உடல் முழுவதும் தடவினால் உடலுக்கு நோய் எதிர்ப்பு மண்டலத்தை உருவாக்கி பாதுகாக்கிறது. வெட்டிவேரின் எண்ணெய் பாலுணர்வு செய்யும் மூளையின் லிபிடோ பகுதிகளை தூண்டுகிறது. மஜாஜ் செய்வதற்கு வெட்டிவேரின் எண்ணெய்யை பயன்படுத்துகின்றனர். நமது உடலில் உள்ள போதை நீக்க பணிகளை செய்து நிணநீர்க்குரிய வடிகாலை தூண்டுகிறது.

  எண்ணெய் தேய்த்து குளிக்கும் போதெல்லாம் சீயக்காய்க்குப் பதில் வெட்டிவேரின் பவுடரை பயன்படுத்துங்கள். இதை தொடர்ந்து செய்தால் முகத்தில் எண்ணெய் வழியாது. முகம் கூடுதல் அழகுடன் காணப்படும். வெட்டிவேரை வாங்கி பயன்படுத்துங்க ஆரோக்கியத்துக்கும் அழகுக்கும் சிறந்தது.


  - தமிழும் சித்தர்களும்  jv_66, datchu and kirubankarthik like this.

  அன்புடன் கௌரி.


  "உன்னால் சாதிக்க இயலாத காரியம் என்று எதுவும் இருப்பதாக ஒருபோதும் நினைக்காதே!" - விவேகானந்தர்


  எனது கவிதை மொட்டுகள்
 4. #424
  gowrymohan's Avatar
  gowrymohan is offline Registered User
  Blogger
  Ruler's of Penmai
  Real Name
  Gowry Shanmuganathan
  Gender
  Female
  Join Date
  Mar 2012
  Location
  Sri Lanka
  Posts
  13,953
  Blog Entries
  380

  Re: Medical Notes - மருத்துவ குறிப்புகள்

  எத்தகைய படுக்கையில் படுத்து உறங்கினால் என்ன பலன் ஏற்படும் என்பதை "மருத்துவ திறவுகோல்’ என்னும் சித்த மருத்துவ நூல் விளக்கியுள்ளது.

  கம்பளிப் படுக்கை- குளிருக்கு இதம். குளிர் சுரம் நீங்கும்.

  கோரைப்பாய்- உடல் சூடு, மந்தம், சுரம் போக்கும், உடலுக்குக் குளிர்ச்சியும், உறக்கமும் ஏற்படும்.

  பிரம்பு பாய்- சீதபேதி, சீதளத்தால் வரும் சுரம் நீங்கும்.

  ஈச்சம்பாய்- வாதநோய் குணமாகும். உடல் சூடு, கபம் இவை
  அதிகரிக்கும்.

  மூங்கில் பாய்- உடல் சூடும், பித்தமும் அதிகரிக்கும்.

  தாழம்பாய்- வாந்தி, தலை சுற்றல், பித்தம் நீங்கும்.

  பேரீச்சம்பாய்- வாதகுன்மநோய், சோகை நீங்கும். ஆனால் உடலுக்கு அதிக உஷ்ணம் தரும்.

  இலவம்பஞ்சு படுக்கை- உடலில் ரத்தம், தாது பலம் பெறும். தலை முதல் பாதம் வரையிலான அனைத்து நோய்களும் நிவாரணம் பெறும்.

  மலர்ப்படுக்கை- ஆண்மை அதிகரிக்கும். நன்றாகப் பசியெடுக்கும்.

  இரத்தினக் கம்பளம்- நஞ்சுகளின் பாதிப்பால் ஏற்படும் நோய்களை நீக்கும்.

  jv_66, datchu and kirubankarthik like this.

  அன்புடன் கௌரி.


  "உன்னால் சாதிக்க இயலாத காரியம் என்று எதுவும் இருப்பதாக ஒருபோதும் நினைக்காதே!" - விவேகானந்தர்


  எனது கவிதை மொட்டுகள்
 5. #425
  gowrymohan's Avatar
  gowrymohan is offline Registered User
  Blogger
  Ruler's of Penmai
  Real Name
  Gowry Shanmuganathan
  Gender
  Female
  Join Date
  Mar 2012
  Location
  Sri Lanka
  Posts
  13,953
  Blog Entries
  380

  Re: Medical Notes - மருத்துவ குறிப்புகள்

  பெண்களின் கவனத்துக்கு!

  இரும்புச்சத்து ஆணை விட பெண்ணுக்கு அதிகம் தேவை என்கிறார் சித்த மருத்துவர் சிவராமன். சாதாரண பெண்ணை விட தாய்மை அடைந்த, பிரசவித்த, பாலூட்டும் பெண்ணுக்கு கொஞ்சம் கூடுதலாய்த் தேவை. மாதவிடாயில் அதிக இரத்தப்போக்கு உள்ள இளம் பெண்ணுக்கு இன்னும் அதிகம் தேவை. பல நோய் நிலைகளில் இரும்புச்சத்து குறைந்திருப்பின் அந்த நோய் இன்னும் அதிகம் ஆட்டம் போடும். சர்க்கரை நோயாளிகள், அறுவை சிகிச்சையில் இருந்து வந்தவர்கள், மூல நோயினர், ஃபைப்ராய்டு கட்டியினால், பெரும்பாடு(அதி ரத்தப்போக்கு) உள்ள மகளிர் எல்லோரும் அவ்வப்போது தங்கள் இரும்புச்சத்து அளவை அறிந்து வைத்திருப்பது அவசியம்.

  இரும்புச்சத்து உடலில் சரியாக உட்கிரகிக்கப்பட விட்டமின் சி சத்தும் ஃபோலிக் அமைலமும் அவசியம்.ஆதலால், அடிக்கடி நெல்லிக்காய் சாறு, நெல்லிக்காய் என சாப்பிடுவது நீங்கள் சாப்பிடும் இரும்பை உடலில் பத்திரமாய் சேர்க்க உதவிடும்.
  வீட்டில் உங்கள் குழந்தை சுவரை பிராண்டி அந்த சுண்ணாம்பு காரையை சாப்பிட்டாலோ, அல்லது உங்க வீட்டு அம்மணி, கோயில்பிரசாதமாக* தந்த திரு நீரை அப்படியே ஹார்லிக்ஸ் மாதிரி சாப்பிட்டாலோ, ‘என்னே பக்தி!’ என மெச்ச வேண்டாம். டாக்டரிடம் கொண்டு போய் ”அனீமியா” இருக்கிறதான்னு பார்த்து விடுங்கள். Pica என அழைக்கப்படும் இரத்த சோகைக்கான அறிகுறி இது. நெஞ்சுக்குள் குதிரை ஓடுவது போல் ஒருவித படபடப்பு, மூச்சிரைப்பு, இருந்து கொண்டே இருந்தாலும் இரும்புசத்தை தேடும் உடலின் நிலையாக இருக்கலாம்!

  உடலுக்கு தேவையான முக்கிய சத்து இரும்பு. அதை காந்தமாய் உணவிலிருந்து கவர்ந்திழுக்க இளமை முதல் தவறிவிட வேண்டாம். மறுத்தாலோ, மறந்தாலோ, நோய் காந்தமாய் ஒட்டிக் கொள்ளும்!


  - இணையதளத்திலிருந்து


  அன்புடன் கௌரி.


  "உன்னால் சாதிக்க இயலாத காரியம் என்று எதுவும் இருப்பதாக ஒருபோதும் நினைக்காதே!" - விவேகானந்தர்


  எனது கவிதை மொட்டுகள்
 6. #426
  gowrymohan's Avatar
  gowrymohan is offline Registered User
  Blogger
  Ruler's of Penmai
  Real Name
  Gowry Shanmuganathan
  Gender
  Female
  Join Date
  Mar 2012
  Location
  Sri Lanka
  Posts
  13,953
  Blog Entries
  380

  Re: Medical Notes - மருத்துவ குறிப்புகள்

  இரத்த உற்பத்திக்கு சாப்பிட வேண்டிய உணவுகள்

  உடலில் உள்ள இரத்தம் சுத்தமில்லாமல் இருந்தால் உடல் அசதி, காய்ச்சல், வயிற்றுப் பொருமல், சுவாசக் கோளறுகள் போன்றவை உண்டாகலாம். அதனால் உடலின் அடிப்படை சக்தியான இரத்தத்தை சுத்தமாக வைத்துக்கொள்வது அவசியமாகும். இயற்கை உணவுகள் மூலம் இரத்தத்தை சுத்தமாக வைத்துக்கொள்வது எப்படி? ரத்தத்தை எப்படி உடலுக்கு உற்பத்தி செய்யலாம் என பார்ப்போம்.

  நாவல் பழத்தைத் அடிக்கடி சாப்பிட்டு வர* இதயத்திற்கு மிகுந்த பலத்தைக் கொடுப்பத்துடன் உடலில் இரத்தம் அதிகமாக* ஊறும். பேரீச்சம் பழத்தை தேனில் மூன்று நாட்களுக்கு ஊற வைத்து பிறகு வேளைக்கு 2 அல்லது மூன்று வீதம் சாப்பிட்டு வந்தால் உடலில் ரத்தம் ஊறும். தினசரி இரவு அரை தம்ளர் தண்ணீரில் உலர்ந்த 3 அத்திப்பழத்தை போட்டு, காலை வெறும் வயிற்றில் குடித்தால் ரத்தம் பெருகும்..

  பீட்ரூட் கிழங்கு சாப்பிட்டு வந்தால் புதிய இரத்தம் உற்பத்தியாகும். செம்பருத்திப் பூவை நடுவில் இருக்கும் மகரந்தத்தை தவிர்த்து சுத்தி உள்ள இதழ்கள் மட்டும் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர வெட்டை சூடு தீர்ந்து இரத்தம் விருத்தியாகும்.

  முருங்கைக் கீரையை துவரம் பருப்புடன் சமைத்து ஒரு கோழிமுட்டை உடைத்து விட்டு கிளறி நெய் சேர்த்து 41 நாட்கள் சாப்பிட்டு வர இரத்தம் விருத்தியாகும். இஞ்சிச் சாறுடன் தேன் கலந்து சாப்பிட்டால் இரத்தம் சுத்தப்படுத்தப்படுகிறது.

  தக்காளிப் பழம் சாப்பிட்டு வந்தால் இரத்தம் சுத்தமாகும். ஆனால், வாத நோய் உள்ளவர்கள் தவிர்த்தல் நல்லது. இலந்தைப் பழம் சாப்பிட்டால் இரத்தத்தை சுத்தம் செய்வது மட்டுமில்லாமல், சுறுசுறுப்பாக வைத்துக் கொள்ளும். பசியையும் தூண்டும் தன்மை கொண்டது. விளாம்பழம் சாப்பிட்டால் இரத்தத்தில் உள்ள கிருமிகள் அழிந்துபோகும்.


  - தமிழும் சித்தர்களும்

  janu23, datchu and kirubankarthik like this.

  அன்புடன் கௌரி.


  "உன்னால் சாதிக்க இயலாத காரியம் என்று எதுவும் இருப்பதாக ஒருபோதும் நினைக்காதே!" - விவேகானந்தர்


  எனது கவிதை மொட்டுகள்
 7. #427
  kirubankarthik's Avatar
  kirubankarthik is offline Commander's of Penmai
  Real Name
  suganthini
  Gender
  Female
  Join Date
  May 2012
  Location
  france
  Posts
  1,092

  Re: Medical Notes - மருத்துவ குறிப்புகள்

  Quote Originally Posted by gowrymohan View Post
  ஆஸ்துமா என்னும் நோய் நுரையீரலுக்குக் காற்றைக் கொண்டுசெல்லும் மூச்சுப்பாதை (Airway)வீங்கி (Inflammation) குறுகுவதால் ஏற்படுகிறது.

  ஆஸ்துமாவை ஏற்படுத்தும் காரணிகள்:

  ஒவ்வாமையின் விளைவாகவே பெரும்பாலும் ஆஸ்துமா ஏற்படுகிறது. தூசு, குளிர்ந்த காற்று, புகை, மூச்சுப்பாதையில் ஏற்படும் தொற்றுகள், ரசாயனப் பொருட்கள், புகைபிடித்தல், மகரந்தங்கள், வளர்ப்புப் பிராணிகளின் முடிகள், வாசனைத் திரவியங்கள் போன்றவை ஏற்படுத்தும் ஒவ்வாமையின் விளைவுதான் ஆஸ்துமாவின் வெளிப்பாடு.

  அறிகுறிகள்:

  சளியுடனோ அல்லது சளி இல்லாமலோ இருமல் தொடர்ந்து இருக்கும். ஒரு சுவாசத்துக்கும் அடுத்த சுவாசத்துக்கும் இடைப்பட்ட நேரம் குறைந்து காணப்படும். இழுப்பானது அதிகாலை மற்றும் இரவில் அதிகமாக இருக்கும்.

  சித்த மருத்துவத்தில் எளிய தீர்வுகள்:

  முசுமுசுக்கை இலைப்பொடி, மற்றும் தூதுவளை இலைப் பொடி சம அளவு கலந்து, அதில் அரை ஸ்பூன் தேன் சேர்த்து உண்ணலாம்.

  உத்தாமணி இலைச்சாறு ஒரு ஸ்பூன் எடுத்து, சம அளவு தேன் சேர்த்து அருந்தலாம்.

  முட்சங்கன் இலையை அரைத்து, நெல்லிக்காய் அளவு பாலில் கலந்து சாப்பிடலாம்.

  நஞ்சறுப்பான் இலைகளை நிழலில் உலர்த்தி, தூள் செய்து அதில் 500 மிகி அளவு மூன்று வேளைகள் தேனில் குழைத்து அருந்தலாம்.

  திப்பிலிப் பொடியுடன் கம்மாறு வெற்றிலைச் சாறும் தேனும் கலந்து எடுத்துக்கொள்ளலாம்.

  செடி, திப்பிலி, நாயுருவி விதை, சீரகம், இந்துப்பு சமஅளவு எடுத்துப் பொடித்து, அதில் அரை ஸ்பூன் எடுத்து தேன் கலந்து சாப்பிடலாம்.

  கோரைக்கிழங்கு, சுக்கு, கடுக்காய்த்தோல் சம அளவு எடுத்துப் பொடித்து, வெல்லம் கலந்து இருவேளை உண்ணலாம்.

  சீந்தில் கொடி, ஆடாதோடை, கண்டங்கத்திரி இவற்றைச் சம அளவு எடுத்து, அரைத்து, அதில் நெய் சேர்த்துக் காய்ச்சித் தினசரி இருவேளை ஒரு ஸ்பூன் அருந்தலாம்.

  லவங்கம், சாதிக்காய், திப்பிலி வகைக்கு 1 பங்கு, மிளகு 2 பங்கு, தான்றிக்காய் 3 பங்கு, சுக்கு 4 பங்கு சேர்த்துத் தூள் செய்து, சம அளவு சர்க்கரை சேர்த்து அரை ஸ்பூன் காலை மாலை உண்ணலாம்.

  இஞ்சிச்சாறு, மாதுளம்பூச்சாறு, தேன் சம அளவு கலந்து 30 மிலி இருவேளை பருகலாம்.

  இம்பூறல் இலைப் பொடியுடன் இரண்டு பங்கு அரிசி மாவு சேர்த்து அடையாகச் செய்து சிற்றுண்டி போலச் சாப்பிடலாம்.

  ஆடாதோடை இலைச்சாறு ஒரு ஸ்பூன் எடுத்து, தேன் கலந்து அருந்தலாம்.

  மூங்கிலுப்பை வேளைக்கு அரை ஸ்பூன் வீதம் கொடுக்கலாம்.

  மூக்கிரட்டை வேரை அரைக் கைப்பிடி எடுத்து ஒன்றிரண்டாகச் சிதைத்து, 4 பங்கு நீர் சேர்த்து 1 பங்காக வற்றவைத்து இருவேளை அருந்தலாம்.

  மிளகரணை இலையை உலர்த்திப் பொடித்து, அரை ஸ்பூன் எடுத்துத் தேன் கலந்து உண்ணலாம்.

  சிற்றரத்தை, ஒமம், அக்கரகாரம் சம அளவு எடுத்துப் பொடித்து, அரை ஸ்பூன் எடுத்துத் தேன் கலந்து சாப்பிடலாம்.

  துளசி, தும்பை இலை சம அளவு எடுத்து, உலர்த்திப் பொடித்து, அதில் அரை ஸ்பூன் தேன் கலந்து உண்ணலாம்.

  தவிர்க்க வேண்டியவை:

  கிரீம் பிஸ்கட், குளிர்பானங்கள், கலர் சேர்க்கப்பட்ட உணவுகள், எண்ணெய், கொழுப்பு, வாழைப்பழம், திராட்சை, எலுமிச்சை, வாசனைத் திரவிங்கள், ஜஸ்கிரீம், கத்திரிக்காய், அதிகக் குளிர், பனி, குளிரூட்டப்பட்ட அறை.


  - தமிழும் சித்தர்களும்
  hi akkaa

  enakkum en pillaikalukkum intha varuththam irukku
  marunthum edukkirom aana kattupadum meendum vanthidum
  neenga sonna kaivaiththiyam paarththen arumai
  aanaa niraiya ilaikalda peyar solliyirukkenga onnum vilangavillai
  enakku neenga sonna ilaikal verkal kaaikalda image podamudiyumaa
  inthu ellaam srilankala kidaikkumaa
  oorukku poravangakitta solli edukkalaam athaan ketten illa penmai friends kitta ketkalaam

  so please enakku intha uthavi seiveerkalaa

  suganthi

  datchu and gowrymohan like this.

 8. #428
  gowrymohan's Avatar
  gowrymohan is offline Registered User
  Blogger
  Ruler's of Penmai
  Real Name
  Gowry Shanmuganathan
  Gender
  Female
  Join Date
  Mar 2012
  Location
  Sri Lanka
  Posts
  13,953
  Blog Entries
  380

  Re: Medical Notes - மருத்துவ குறிப்புகள்

  Hi Suganthi,
  எனக்கு தெரிந்தவற்றின் படங்கள் தருகிறேன். இவை SriLanka ல கிடைக்கும். இந்தியாலயும் கிடைக்கும் என்று நினைக்கிறேன்.

  முசுமுசுக்கை.

  தூதுவளை.

  ஆடாதோடை.

  கண்டங்கத்தரி.

  சிற்றரத்தை

  துளசி.


  அன்புடன் கௌரி.


  "உன்னால் சாதிக்க இயலாத காரியம் என்று எதுவும் இருப்பதாக ஒருபோதும் நினைக்காதே!" - விவேகானந்தர்


  எனது கவிதை மொட்டுகள்
 9. #429
  gowrymohan's Avatar
  gowrymohan is offline Registered User
  Blogger
  Ruler's of Penmai
  Real Name
  Gowry Shanmuganathan
  Gender
  Female
  Join Date
  Mar 2012
  Location
  Sri Lanka
  Posts
  13,953
  Blog Entries
  380

  Re: Medical Notes - மருத்துவ குறிப்புகள்

  எனக்கு தெரியாதவை - நெட்ல தேடி கீழே போட்டிருக்கேன்.

  உத்தாமணி இலை

  முட்சங்கன் இலை
  நஞ்சறுப்பான் இலை

  திப்பிலி.

  நாயுருவி

  கோரைக்கிழங்கு

  datchu and kirubankarthik like this.

  அன்புடன் கௌரி.


  "உன்னால் சாதிக்க இயலாத காரியம் என்று எதுவும் இருப்பதாக ஒருபோதும் நினைக்காதே!" - விவேகானந்தர்


  எனது கவிதை மொட்டுகள்
 10. #430
  gowrymohan's Avatar
  gowrymohan is offline Registered User
  Blogger
  Ruler's of Penmai
  Real Name
  Gowry Shanmuganathan
  Gender
  Female
  Join Date
  Mar 2012
  Location
  Sri Lanka
  Posts
  13,953
  Blog Entries
  380

  Re: Medical Notes - மருத்துவ குறிப்புகள்

  மேலும் சில.....

  கடுக்காய்

  சீந்தில் கொடி

  தான்றிக்காய்

  இம்பூறல் இலை

  மூக்கிரட்டை வேர்

  மிளகரணை இலை

  தும்பை இலை.

  datchu and kirubankarthik like this.

  அன்புடன் கௌரி.


  "உன்னால் சாதிக்க இயலாத காரியம் என்று எதுவும் இருப்பதாக ஒருபோதும் நினைக்காதே!" - விவேகானந்தர்


  எனது கவிதை மொட்டுகள்
loading...

Bookmarks

Posting Permissions

 • You may not post new threads
 • You may not post replies
 • You may not post attachments
 • You may not edit your posts
 •  
Like It?
Share It!Follow Penmai on Twitter