Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree1102Likes

Medical Notes - மருத்துவ குறிப்புகள்


Discussions on "Medical Notes - மருத்துவ குறிப்புகள்" in "General Health Problems" forum.


 1. #431
  gowrymohan's Avatar
  gowrymohan is offline Registered User
  Blogger
  Ruler's of Penmai
  Real Name
  Gowry Shanmuganathan
  Gender
  Female
  Join Date
  Mar 2012
  Location
  Sri Lanka
  Posts
  13,960
  Blog Entries
  380

  Re: Medical Notes - மருத்துவ குறிப்புகள்

  Hi Suganthy, இது எல்லாத்தையும் ஒரே நேரத்தில் எடுக்காதீங்க. உங்களுக்கு கிடைக்கக் கூடியதில் ஒன்றை எடுத்துப் பாருங்க.
  முக்கியமாக உங்களுக்கு எதனால் இந்த வருத்தம் வருகிறது என்பதை அவதானித்து பார்த்து அதை தவிர்க்கலாம் தானே.
  தூதுவளை சம்பல், முசுமுசுக்கை சம்பல் இரண்டையும் மாறி மாறி daily உணவோடு சேர்க்க சளித் தொல்லை மெது மெதுவாக குறைந்து இல்லாமலே போய்விடும்.
  கற்பூரவள்ளி இலை சாப்பிட்டு வர சளி குறையும்.


  Sponsored Links
  jv_66, datchu and kirubankarthik like this.

  அன்புடன் கௌரி.


  "உன்னால் சாதிக்க இயலாத காரியம் என்று எதுவும் இருப்பதாக ஒருபோதும் நினைக்காதே!" - விவேகானந்தர்


  எனது கவிதை மொட்டுகள்
 2. #432
  gowrymohan's Avatar
  gowrymohan is offline Registered User
  Blogger
  Ruler's of Penmai
  Real Name
  Gowry Shanmuganathan
  Gender
  Female
  Join Date
  Mar 2012
  Location
  Sri Lanka
  Posts
  13,960
  Blog Entries
  380

  Re: Medical Notes - மருத்துவ குறிப்புகள்

  நாவல் பழம், நாகப்பழம், நவாப்பழம் என்று வெவ்வேறு பெயர்களில் அழைக்கப்படும், இந்தப் பழம் மருத்துவக் குணங்கள் நிறைந்தது. நாவல் பழம் சாப்பிட்டால் நீரிழிவு நோய் கட்டுப்பாட்டில் இருக்கும். கல்லீரல் கோளாறுகள், குடற்புண் போன்றவற்றைப் போக்க வல்லது.

  இது ஜூன் மாதம் தொடங்கி ஆகஸ்ட் மாதம் வரைக் கிடைக்கும்.
  இதைச் சாப்பிடுவது, உடம்பிற்கு மிகவும் நல்லது. ஆனாலும், இன்னமும் பெரியோர்கள், இதை குழந்தைகள் சாப்பிடும் பழமாகத்தான் கருதுகிறார்கள். இதன் துவர்ப்பு ருசியும், இதைச் சாப்பிட்டால் நீண்ட நேரம் நாவில் படிந்துவிடும் நீல நிறமும் காரணங்களாக இருக்கலாம்.

  வியாபார நோக்கில், இதை யாரும் பயிரிடாததால், இந்தப் பழங்கள் கிடைப்பது அரிதாகி வருகிறது. அதனால் இதன் விலையும் எக்கச்சக்கமாக இருக்கிறது.

  தமிழ் இலக்கியங்களிலும், தெய்வ வழிப்பாட்டிலும் இடம் பெற்ற இந்தப்பழம், எளிமையும், வலிமையும் சேர்ந்த ஒரு அருமையானப் பழம்.
  நியூசிலாந்தில் உள்ள ப்ளான்ட் அண்ட ரிசர்ச் இன்ஸ்டிடியூட்டை சேர்ந்த விஞ்ஞானி ரோஜர் ஹர்ஸ்ட் தலைமையிலான குழுவினர், மனித உடலுக்கு நாவல் பழம் அளிக்கும் நன்மைகள் பற்றி விரிவான ஆராய்ச்சி செய்தனர். நாவல் பழச்சாறை தொடர்ந்து 10 பேருக்கு அளித்து வந்து பல்வேறு பரிசோதனைகளை செய்தனர்.

  உடற்பயிற்சி செய்வதற்கு முன்பும், செய்த பிறகும் நாவல் பழச்சாறு சில சொட்டுகள் மட்டும் சாப்பிட்டவர்களுக்கு தசைகளில் சேதம் ஏற்படுவது தவிர்க்கப்பட்டது. தசைப்பிடிப்பு, அழுத்தமும் ஏற்படவில்லை. தவிர, உடற்பயிற்சி செய்த பிறகு ஏற்படும் உடல்வலி துளியும் இல்லாதது தெரிய வந்தது. தவிர, நாவல் பழச்சாறை 3 வாரங்களுக்கு சிறிதளவு சாப்பிட்டு வந்தவர்களுக்கு மூட்டு வலி குணமானதும், சிறுநீரக கல் கரைந்து போனதும் சோதனையில் தெரிந்தது. மேலும், உடல் சோர்வு, வலிகளையும் நாவல் பழம் குறைக்கும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.

  இதுபற்றி ஹர்ஸ்ட் கூறுகையில், மூட்டு வலி, உடல் வலி, சோர்வு, சிறுநீரகக் கல், நுரையீரல் பாதிப்புகளை நாவல் பழச்சாறு அற்புதமாக குறையச் செய்கிறது. எனினும், இதற்கு அந்தப் பழத்தில் இருக்கும் வைட்டமின் சி காரணமல்ல. அதில் உள்ள பளேவனாய்டு என்ற பொருள்தான் இந்த அற்புதங்களை செய்கிறது. ஆந்தோசயனின்ஸ் என்ற பொருள்தான் நாவல் பழத்தின் ஊதா நிறத்தை அளிக்கிறது. அதுவும் பல்வேறு பிரச்சனைகளை தீர்ப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது என்றார். தசைகளில் ஏற்படும் எரிச்சலை நாவல் பழம் குறைப்பதாக ஏற்கனவே பல ஆய்வு முடிவுகளில் தெரிய வந்ததுள்ளது குறிப்பிடத்தக்கது.


  - இணையதளத்திலிருந்து

  jv_66, datchu, fatima15 and 1 others like this.

  அன்புடன் கௌரி.


  "உன்னால் சாதிக்க இயலாத காரியம் என்று எதுவும் இருப்பதாக ஒருபோதும் நினைக்காதே!" - விவேகானந்தர்


  எனது கவிதை மொட்டுகள்
 3. #433
  gowrymohan's Avatar
  gowrymohan is offline Registered User
  Blogger
  Ruler's of Penmai
  Real Name
  Gowry Shanmuganathan
  Gender
  Female
  Join Date
  Mar 2012
  Location
  Sri Lanka
  Posts
  13,960
  Blog Entries
  380

  Re: Medical Notes - மருத்துவ குறிப்புகள்

  சர்க்கரை நோய் உள்ளவர்கள் தவிர்க்க வேண்டிய பழங்கள்

  மாம்பழம்:

  பழங்களின் ராஜா என்று கூறப்படும் மாம்பழம் உலகிலேயே அதிக சுவை மிகுந்த ஒரு பழமாக விளங்குகிறது. ஆனால் அப்பழத்தில் மிகுந்த சர்க்கரை இருப்பதால் இப்பழத்தை தவிர்ப்பது நல்லது. தொடர்ந்து இதை உட்கொண்டால் இரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகமாகிவிடும்.

  சப்போட்டா:

  இந்த பழத்தில் gi குறியீட்டு எண் 55 க்கு மேலுள்ளதால் இது சாப்பிடுவதற்கு உகந்தது அல்ல. இப்பழத்தில் சர்க்கரை மற்றும் கார்போஹைட்ரேட் அதிக அளவில் உள்ளது.

  அன்னாசி:

  இப்பழத்தில் அதிக அளவு கிளைசீமிக் குறியீடு இருப்பதால் இப்பழத்தை அறவே தவிர்க்க வேண்டும். ஒரு சிறிய கோப்பை அன்னாசிப் பழத்தில் 20 கிராம் அல்லது அதற்கு மேற்பட்ட அளவு கார்போஹைட்ரேட் உள்ளது.

  வாழைப்பழம்:

  அரை கப் வாழைப்பழத்தில் 15 கிராம் கார்போஹைட்ரேட் உள்ளது. அதன் gi 46 முதல் 70 வரை உள்ளது. முழுவதும் பழுத்த வாழைப்பழங்களை சர்க்கரை நோயாளிகள் தவிர்க்க வேண்டும்.

  பப்பாளி:

  59 gi உடைய இப்பழத்தில் கார்போஹைட்ரேட் மற்றும் கலோரிகள் அதிகம் உள்ளது. இதை சர்க்கரை நோயாளிகள் தங்கள் சர்க்கரை அளவு ஏறாத வன்னம் உண்ணுதல் உகந்தது.

  தர்பூசணி:

  குறைந்த நார்ச்சத்து மற்றும் குறைந்த கலோரி உடைய தர்பூசணி பழத்தில் சர்க்கரை மட்டும் 72 gi அளவிற்கு உள்ளது. இப்பழத்தில் வைட்டமின் ஏ மற்றும் சி ஆகியவையும் அதிகமாக உள்ளன. அரை கப் தர்பூசணியில் 5 கிராம் கார்போஹைட்ரேட் உள்ளது.


  - தமிழும் சித்தர்களும்

  jv_66, datchu, gkarti and 1 others like this.

  அன்புடன் கௌரி.


  "உன்னால் சாதிக்க இயலாத காரியம் என்று எதுவும் இருப்பதாக ஒருபோதும் நினைக்காதே!" - விவேகானந்தர்


  எனது கவிதை மொட்டுகள்
 4. #434
  deepikarani's Avatar
  deepikarani is offline Penman of Penmai
  Blogger
  Guru's of Penmai
  Gender
  Female
  Join Date
  Dec 2013
  Location
  kanyakumari
  Posts
  5,042
  Blog Entries
  3

  Re: Medical Notes - மருத்துவ குறிப்புகள்

  very much useful information.... thanks for sharing gowry sis

  gowrymohan likes this.

 5. #435
  gowrymohan's Avatar
  gowrymohan is offline Registered User
  Blogger
  Ruler's of Penmai
  Real Name
  Gowry Shanmuganathan
  Gender
  Female
  Join Date
  Mar 2012
  Location
  Sri Lanka
  Posts
  13,960
  Blog Entries
  380

  Re: Medical Notes - மருத்துவ குறிப்புகள்

  Quote Originally Posted by deepikarani View Post
  very much useful information.... thanks for sharing gowry sis
  Thank you Deepi.

  deepikarani likes this.

  அன்புடன் கௌரி.


  "உன்னால் சாதிக்க இயலாத காரியம் என்று எதுவும் இருப்பதாக ஒருபோதும் நினைக்காதே!" - விவேகானந்தர்


  எனது கவிதை மொட்டுகள்
 6. #436
  gowrymohan's Avatar
  gowrymohan is offline Registered User
  Blogger
  Ruler's of Penmai
  Real Name
  Gowry Shanmuganathan
  Gender
  Female
  Join Date
  Mar 2012
  Location
  Sri Lanka
  Posts
  13,960
  Blog Entries
  380

  Re: Medical Notes - மருத்துவ குறிப்புகள்

  நம் உடலுக்கும் கால அட்டவணை உண்டு

  இதை நாம் முறையாகப் பின்பற்றினால் டாக்டரிடம் போக வேண்டிய அவசியமே இல்லை.


  விடியற்காலை 3 முதல் 5 மணி வரை நுரையீரல் நேரம். இந்த நேரத்தில் தியானம், மூச்சுப் பயிற்சி செய்தால் ஆயுள் நீடிக்கும்.

  காலை 5 முதல் 7 வரை பெருங்குடல் நேரம். இந்த நேரத்தில் காலைக்கடன்களை முடிக்க வேண்டும். இதனால் மலச்சிக்கலே ஏற்படாது.

  காலை 7 முதல் 9 வரை வயிற்றின் நேரம். இந்த நேரத்தில் சாப்பிடுவது நன்கு ஜீரணமாகும்.

  காலை 9 முதல் 11 வரை மண்ணீரல் நேரம். வயிற்றில் விழும் உணவைச் செரிக்கச் செய்யும் நேரம். இந்த நேரத்தில் எதையும் சாப்பிடக் கூடாது. தண்ணீர் கூடக் குடிக்கக் கூடாது.

  காலை 11 முதல் 1 வரை இதயத்தின் நேரம். இதய நோயாளிகள் கவனமாக இருக்க வேண்டிய நேரம். சத்தமாகப் பேசுதல், படபடத்தல், கோபப்படுதலை அறவே தவிர்க்க வேண்டும்.

  பிற்பகல் 1 முதல் 3 வரை சிறுகுடல் நேரம். மிதமான சிற்றுண்டியுடன் ஓய்வு எடுக்க வேண்டும்.

  பிற்பகல் 3 முதல் 5 வரை சிறுநீர்ப் பையின் நேரம். நீர்க்கழிவுகளை வெளியேற்றச் சிறந்த நேரம்.

  மாலை 5 முதல் 7 வரை சிறுநீரகங்களின் நேரம். தியானம், இறைவழிபாடு செய்வதற்கு ஏற்றது.

  இரவு 7 முதல் 9 வரை பெரிகார்டியத்தின் நேரம். பெரிகார்டியன் என்பது இதயத்தைச் சுற்றி இருக்கும் ஒரு ஜவ்வு. இரவு உணவுக்கேற்ற நேரம்.

  இரவு 9 முதல் 11 வரை - உச்சந்தலை முதல் அடிவயிறு வரை உள்ள மூன்று பாதைகள் இணையும் நேரம். அமைதியாக உறங்கலாம்.

  இரவு 11 முதல் 1 வரை - பித்தப்பை நேரம். அவசியம் உறங்க வேண்டும்.

  இரவு 1 முதல் 3 வரை - கல்லீரல் நேரம். ரத்தத்தை கல்லீரல் சுத்தப்படுத்தும் நேரம். கட்டாயம் தூங்க வேண்டும்.


  - தமிழ் கருத்துக்களம்

  jv_66 and datchu like this.

  அன்புடன் கௌரி.


  "உன்னால் சாதிக்க இயலாத காரியம் என்று எதுவும் இருப்பதாக ஒருபோதும் நினைக்காதே!" - விவேகானந்தர்


  எனது கவிதை மொட்டுகள்
 7. #437
  gowrymohan's Avatar
  gowrymohan is offline Registered User
  Blogger
  Ruler's of Penmai
  Real Name
  Gowry Shanmuganathan
  Gender
  Female
  Join Date
  Mar 2012
  Location
  Sri Lanka
  Posts
  13,960
  Blog Entries
  380

  Re: Medical Notes - மருத்துவ குறிப்புகள்

  வீட்டிலேயே வளர்க்கக் கூடிய சில குறுஞ்செடிகளில் காற்றில் உள்ள நச்சுக்களைச் சுத்தப்படுத்தும் குணம் நிரம்பி இருக்கிறது என்று நாசா விஞ்ஞானிகளின் ஆராய்ச்சி கூறுகிறது. தமிழ்நாட்டுச் சீதோஷ்ண நிலையில் வாழும் தன்மையையும், அதிக நன்மை களையும் கொடுக்கும் இந்தச் செடிகளைப் பற்றிய அறிமுகம் இதோ...

  கற்றாழை (AloeVera):

  மருத்துவக் குணங்கள் நிறைந்துள்ள கற்றாழை, காற்றில் உள்ள ஃபார்மால்டிஹைட் என்னும் வேதிப் பொருளை நீக்கும். சருமத் தீப்புண்களுக்கும் மருந்தாகப் பயன்படும்!

  சீமை ஆல் (Rubber plant):

  வெயில் படாத இடங்களில்கூட வாழும் தன்மைகொண்டவை. அதிகமாக அசுத்தக் காற்றை உள்ளிழுத்து அதிகப்படியான ஆக்சிஜனை வெளியிடும்.

  வெள்ளால் (Weeping Fig):

  காற்றின் நச்சுக்களை நீக்கி சுற்றுப்புறத்தின் ஆக்சிஜன் அளவை அதிகப்படுத்தும்.

  மூங்கில் பனை (Bamboo Palm) :

  காற்றில் கலந்துள்ள ஃபார்மால்டிஹைட் நச்சுக்களை நீக்குவதோடு இயற்கையான ஈரப்பதனியாகச் செயல்படும்.

  ஸ்னேக் பிளான்ட் (snake-plant):

  நைட்ரஜன் ஆக்ஸைடு மற்றும் ஃபார்மால்டிஹைடைக் கிரகித்து ஆக்சிஜனை வெளிப்படுத்தும். வறண்ட சூழ்நிலை களில்கூட வாழும் தன்மைகொண்டவை.

  கோல்டன் போட்டோஸ் (golden pothos):
  நாசா விஞ்ஞானிகளின் அறிக்கைப்படி காற்றைச் சுத்தப்படுத்தும் தாவரங்களின் பட்டியலில் மூன்றாம் இடம் பிடித்திருக்கும் இந்தச் செடி, கார்பன் மோனாக்சைடு வாயுவை உறிஞ்சிக்கொண்டு காற்றின் அளவை அதிகரிக்கச் செய்யும்!

  வீட்டுக்கொரு மரம் வளர்ப்போம். முடியாதபட்சத்தில், இப்படிப்பட்ட செடிகளையேனும் வளர்ப்போமே!
  - தமிழ் கருத்துக்களம்

  jv_66 and datchu like this.

  அன்புடன் கௌரி.


  "உன்னால் சாதிக்க இயலாத காரியம் என்று எதுவும் இருப்பதாக ஒருபோதும் நினைக்காதே!" - விவேகானந்தர்


  எனது கவிதை மொட்டுகள்
 8. #438
  gowrymohan's Avatar
  gowrymohan is offline Registered User
  Blogger
  Ruler's of Penmai
  Real Name
  Gowry Shanmuganathan
  Gender
  Female
  Join Date
  Mar 2012
  Location
  Sri Lanka
  Posts
  13,960
  Blog Entries
  380

  Re: Medical Notes - மருத்துவ குறிப்புகள்

  இயற்கை உணவு குறித்த பொன்மொழிகள்

  (1) வைகறையில் துயில் எழு. (அதிகாலையில் எழ வேண்டும்).

  (2) நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்.

  (3) உண்பதற்காக வாழாதே. வாழ்வதற்காக உண்.

  (4) நீரை உண்; உணவை குடி(உணவை நன்கு மென்று கூழ் போலாக்கி குடிக்க வேண்டும். நீரை சிறிது சிறிதாக உமிழ் நீருடன் கலந்து பருக வேண்டும்)

  (5) உணவும் மருந்தும் ஒன்றே.

  (6) அஜீரணமும், மலச்சிக்கலும் ஆதிநோய்கள் பின்னால் வருபவை மீதி நோய்கள்.

  (7) கடவுள் கனிகளை படைத்தார். சாத்தான் சமையலை படைத்தான்.

  (8) படுக்கை காப்பி படுக்கையில் தள்ளும்.

  (9) பசிக்காக சாப்பிடு; ருசிக்காக சாப்பிடாதே.

  (10) சர்க்கரையும் உப்பும் விஷங்களாகும்.

  (11) சுத்தமான காற்று 100 அவுன்ஸ் மருந்துக்கு சமமாகும்.& ஜப்பானிய பொன்மொழி

  (12) சூரியன் இல்லாத இடத்திற்கு வைத்தியர் வருகிறார்.&ஸ்பெயின் பொன்மொழி

  (13) 5 மணிக்கு எழு 9 மணிக்கு உண் (காலை),
  5 மணிக்கு உண் 9 மணிக்கு உறங்கு(மாலை).

  (14) வயிறு பெரிதாக உள்ள இடத்தில் மூளை சிறியதாக இருக்கும்&ஜெர்மன் பழமொழி.

  (15) பெருந்தீனியே பஞ்சத்தையும் போரையும் விட அதிக மக்களை கொல்கிறது.

  (16) சூரிய உதயத்திற்கு பின்பும் சூரிய அஸ்தமனத்திற்கு முன்பும் உட்கொள்ளூம் உணவு ஆயுளை அதிகரிக்கிறது.

  jv_66 and datchu like this.

  அன்புடன் கௌரி.


  "உன்னால் சாதிக்க இயலாத காரியம் என்று எதுவும் இருப்பதாக ஒருபோதும் நினைக்காதே!" - விவேகானந்தர்


  எனது கவிதை மொட்டுகள்
 9. #439
  gowrymohan's Avatar
  gowrymohan is offline Registered User
  Blogger
  Ruler's of Penmai
  Real Name
  Gowry Shanmuganathan
  Gender
  Female
  Join Date
  Mar 2012
  Location
  Sri Lanka
  Posts
  13,960
  Blog Entries
  380

  Re: Medical Notes - மருத்துவ குறிப்புகள்

  இயற்கை முறையில் பயனுள்ள வைத்திய குறிப்புகள்

  1. உணவுக்கு பின் தண்ணீரில் சிறிது கருப்பட்டியை கரைத்து குடிக்கவும். இதனால் வயிற்றில் அமிலம் சுரப்பது குறையும்!

  2. துளசி இலைகள் போடப்பட்ட நீரை தினமும் குடித்து வந்தால் தொண்டைப் புண் ஏற்படாது.

  3. 1/4 தேக்கரண்டி கரு மிளகுத் தூள், 3 தேக்கரண்டி எலுமிச்சை சாறு, ஒரு கோப்பை நீரில் ஒரு தேக்கரண்டி தேன், இந்த கலவையை 3-4 மாதங்களுக்கு தொடர்ந்து எடுத்துக் கொண்டுவந்தால் உடல் எடை குறையும்.

  4. காலை உணவிற்கு முன் தினமும் ஒரு தக்காளி சாப்பிட்டு வரவேண்டும், ஒரு 3-4 மாதங்களுக்கு இதைச்செய்தால் உடல் எடை குறையும்.

  5. தினமும் காலையில் முழுதாக வளர்ந்த 10-12 கருவேப்பிலைகளை சாப்பிட்டு வரவும், 3-4 மாதங்களில் உடல் பருமனில் மிகுந்த மாற்றத்தை காணலாம்.

  6. அரிசி, உருளை கிழங்கு போன்ற மாவுச் சத்துப் பொருட்களை குறைக்கவும், பதிலாக கோதுமை எடுத்துக் கொள்ளலாம்.

  7. கடுமையான இருமல் இருந்தால் 3 கப் தண்ணீருடன் வெற்றிலையையும், மிளகையும் போட்டு கொதிக்க வைத்து குடித்து வரவும்.

  8. பல் வலி குறைய துளசி இலை 2, கொஞ்சம் உப்பு மற்றும் மிளகுத்தூள் ஆகியவற்றை வலி இருக்கும் இடத்தில் வைத்து அழுத்தி வரவும். வலி குறையும்.

  9. சருமத்தில் உள்ள சிறு தழும்புகளைப் போக்க குளிக்கும் நீரில் துளசி இலைகளை போட்டு குளிக்கவும். விரைவில் தழும்புகள் மறையும்.

  10. குழந்தைகளுக்கு ஏற்படும் காய்ச்சல் மற்றும் இருமலுக்கு நீருடன் தேனைக்கலந்து கொடுத்தால் விரைவில் இருமல் நிற்கும். காய்ச்சல் குறையும்.

  11. காரட் மற்றும் தக்காளிச் சாறு இதனுடன் கொஞ்சம் தேன் கலந்து குழந்தைகளுக்கு கொடுத்து வந்தால் உடல் வலிமை பெரும்.

  12. வயிற்றுப் போக்கை உடனடியாக நிறுத்த கொய்யா இலைகளை மென்று தின்றால் போதுமானது.


  - இணையதளத்திலிருந்து

  Last edited by gowrymohan; 3rd Jul 2014 at 08:32 PM.
  datchu likes this.

  அன்புடன் கௌரி.


  "உன்னால் சாதிக்க இயலாத காரியம் என்று எதுவும் இருப்பதாக ஒருபோதும் நினைக்காதே!" - விவேகானந்தர்


  எனது கவிதை மொட்டுகள்
 10. #440
  gowrymohan's Avatar
  gowrymohan is offline Registered User
  Blogger
  Ruler's of Penmai
  Real Name
  Gowry Shanmuganathan
  Gender
  Female
  Join Date
  Mar 2012
  Location
  Sri Lanka
  Posts
  13,960
  Blog Entries
  380

  Re: Medical Notes - மருத்துவ குறிப்புகள்


  கொழுப்புகளை குறைக்கும் உணவுகள்

  உடல் எடையை அதிகரித்து விட்டு, அதை குறைக்க முடியாமல் ஜிம், தினமும் உடற்பயிற்சி, உணவில் கட்டுப்பாட்டுடன் இருப்பது போன்றவற்றை பின்பற்றி வருபவர்கள் ஏராளம். ஆனால் அவ்வாறு சரியாக உண்ணாமல் இருப்பதால் பல நோய்கள் வருகின்றன.

  ஏனெனில் தினமும் உடலில் இனிப்பு, உப்பு, புளிப்பு போன்றவற்றை சேர்க்க வேண்டும். மேலும் உடலில் எந்த பிரச்சனையும் வராமல் இருக்க, சரியாக உணவு உண்டு வந்தாலே அதிக உடல் எடையானது குறைந்து விடுவதோடு ஆரோக்கியமாக வாழலாம்.

  மஞ்சள்: மஞ்சளானது ஒரு சிறந்த மருத்துவ குணம் வாய்ந்த பொருள் என்பது அனைவருக்கும் தெரியும். அத்தகைய மஞ்சளை தினமும் உணவில் சேர்த்து வந்தால், உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகளை கரைத்து, அதிக இரத்த அழுத்தம் எற்படாமல், இரத்த சுழற்சியானது நன்கு நடைபெற்று, இதய நோய் ஏற்படாமலும் இருக்கும்.

  ஏலக்காய்: இது ஒரு சிறந்த உணவுப் பொருள். அதை உண்டால் உடலில் உள்ள மெட்டபாலிசம் அதிகரிப்பதோடு, உடலில் உள்ள கொழுப்புகளை கரைத்துவிடும். மேலும் இது ஒரு சிறந்த செரிமானப் பொருள். ஆகவே எந்த உணவு உண்டாலும், அதை நன்றாக செரித்துவிடும். ஆகவே அதனை தினமும் உணவுப் பொருட்களில் சேர்த்தால், உடல் எடை குறையும்.

  மிளகாய்: உணவில் சேர்க்கப்படும் மிளகாய் கூட கொழுப்புகளை கரைத்துவிடும் தன்மையுடையது. மேலும் இதில் உள்ள கேப்சைசின்(capsaicin) உடலில் உள்ள மெட்டபாலிசத்தை அதிகரிக்கச் செய்யும். கேப்சைசின் என்பது வெப்ப ஊட்ட பொருள். அது இருக்கும் உணவுப்பொருளை உண்பதால், 20 நிமிடங்களில் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகளை கரைத்துவிடும்.

  கறிவேப்பிலை: அதை தினமும் உண்பதால் எடையானது எளிதாக குறையும். ஏனெனில் இந்த இலை உடலில் இருக்கும் கொழுப்பு மற்றும் டாக்ஸின் போன்றவற்றை உடலில் தங்கவிடாமல் வெளியேற்றும். மேலும் அதிக எடை இருப்பவர்கள், தினமும் 8 முதல் 10 கறிவேப்பிலையை வெறும் வாயில் உண்டால் நல்லது. இல்லையென்றால், அதனை அரைத்து தண்ணீரில் கரைத்து குடிக்க வேண்டும்.

  பூண்டு: இது ஒரு சிறந்த கொழுப்பை கரைக்கும் பொருள். ஏனெனில் இதில் சல்பர் இருக்கிறது. இது கிருமிகளை அழிக்கும் பொருளான ஆன்டி-பாக்டீரியல் இருப்பதோடு, தேவையற்ற கொழுப்புகளை கரைத்து உடலை விரைவில் ஸ்லிம் ஆக மாற்றும்.

  கடுகு எண்ணெய்: இதில் மற்ற எண்ணெயை விட குறைந்த அளவு கொழுப்புகள் உள்ளது. மேலும் இதில் ஃபேட்டி ஆசிட்(fatty acid), இரூசிக் ஆசிட்(erucic acid) மற்றும் லினோலிக் ஆசிட்(linoleic acid) போன்றவை இருக்கின்றன. இதுமட்டுமல்லாமல் ஆன்டி ஆக்ஸிடன்ட், தேவையான வைட்டமின் மற்றும் தேவையற்ற கொழுப்புகளை அகற்றும், அதனால் இதயமும் ஆரோக்கியமாக இருக்கும்.

  முட்டைக்கோஸ்: அதனை சமைத்தும் உண்ணலாம் அல்லது பச்சையாகவே சாப்பிடலாம். அது உடலில் சேரும் கொழுப்புகளை வேறு விதமாக மாற்றி மற்ற உடலில் நடைபெறும் செயல்களுக்கு பயன்படுத்திக் கொள்ளும். இதனால் உடலானது பருமனடையாமல் இருக்கும்.

  தேன்: இது உடலைக் குறைக்க ஒரு சிறந்த வீட்டு மருந்து. இதனை உண்டால் உடலில் சேரும் கொழுப்புகளை சாதாரணமாக உடலில் நடைபெறும் செயல்களுக்கு பயன்படுத்திக் கொள்ளும். ஆகவே தினமும் ஒரு டேபிள் ஸ்பூன் தேனை சூடான தண்ணீரில் கலந்து, விடியற்காலையில் குடிக்க வேண்டும்.

  மோர்: பால் பொருளில் கொழுப்புகள் அதிகமாக இருக்கும் என்பது அனைவருக்கும் தெரியும், ஆனால் பாலில் 8.9 கிராம் கொழுப்பும், 157 கலோரியும் உள்ளது. ஆனால் அத்தகைய பால் பொருளில் ஆன மோரில் 2.2 கிராம் கொழுப்பும், 99 கலோரியும் மட்டுமே உள்ளது.

  ஆகவே அதனை உண்பதால் உடலுக்கு தேவையான அளவு ஊட்டசத்துக்கள் கிடைப்பதோடு, கொழுப்பு மற்றும் கலோரியானது அதிகமாக சேராமல் எடையும் சரியான அளவு இருக்கும். ஆகவே மேற்கூறிய இத்தகைய உணவுகளை உண்டாலே, உடலானது ஆரோக்கியமாக இருப்பதோடு, உடலிலும் எடை கூடாமல் அழகாக இருக்கலாம்.


  - இணையதளத்திலிருந்து

  datchu and premabarani like this.

  அன்புடன் கௌரி.


  "உன்னால் சாதிக்க இயலாத காரியம் என்று எதுவும் இருப்பதாக ஒருபோதும் நினைக்காதே!" - விவேகானந்தர்


  எனது கவிதை மொட்டுகள்
loading...

Bookmarks

Posting Permissions

 • You may not post new threads
 • You may not post replies
 • You may not post attachments
 • You may not edit your posts
 •  
Like It?
Share It!Follow Penmai on Twitter