Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree1102Likes

Medical Notes - மருத்துவ குறிப்புகள்


Discussions on "Medical Notes - மருத்துவ குறிப்புகள்" in "General Health Problems" forum.


  1. #471
    gowrymohan's Avatar
    gowrymohan is offline Registered User
    Blogger
    Ruler's of Penmai
    Real Name
    Gowry Shanmuganathan
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    Sri Lanka
    Posts
    13,944
    Blog Entries
    380

    Re: Medical Notes - மருத்துவ குறிப்புகள்

    நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க:

    இரவு நேரங்களில் அசைவ உணவு, மற்றும் கீரை வகைகள், தயிர் ஆகியவற்றை அறவே தவிர்த்துவிடுவது, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும்.

    துளசி, இரத்தத்தை சுத்திகரிக்கிறது என்று பொதுவாக எல்லோரும் சொல்வார்கள். வெள்ளை அணுக்களை அதிகரித்து, அதன் வகைகளை சரியான விகிதத்தில் இருக்கும்படி பார்த்துக்கொள்வதுதான் துளசி, கற்பூரவல்லி போன்றவற்றின் வேலை. எனவே நோய்வாய்ப்பட்டிருக்கும் சமயத்தில் இவற்றை தாராளமாக எடுத்துக்கொள்ளலாம்.

    "மனம் கவலைப்படுகிறது, உறுப்புக்கள் அழிகின்றன" என்று ஒரு பழமொழியே உண்டு. உடலில் வரும் வியாதிகளுக்கும் மனதுக்கும் அத்தனை நெருக்கமான தொடர்புண்டு. உண்மைதான். அடிக்கடி கோபம் கொள்கிறவர்களுக்கு இதயக் கோளாறும், எப்போதும் கவலைப்படுகிறவர்களுக்கு அல்சர் போன்ற வியாதிகளும் வருவதை எதிர்ப்பு சக்தி தடுப்பதில்லைத்தானே.

    இரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபின் அளவு குறைந்தால் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்துவிடும். அந்த வகையில் ஆப்பிள், பப்பாளி, அன்னாசி, வாழைப்பழம், பேரீச்சை, மாம்பழம், மாதுளை, கொய்யா, சாத்துக்குடி, நாவல், ஆரஞ்சு, வெண்டைக்காய், பேரிக்காய், வெள்ளரிக்காய், கோவைக்காய், கரும்புச்சாறு, இளநீர் போன்றவை நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் அருமருந்துகள்.

    பதப்படுத்தப்பட்ட குளிர்பானங்களை தவிர்த்து உடனுக்குடன் தயாராகும் பழச்சாறுகளை எடுத்துக்கொள்வது நல்லது. பதப்படுத்தப்பட்ட பானங்களில் உள்ள வேதிப்பொருள்கள் நோய் எதிர்ப்பு சக்தியை குறைக்கும். வயிற்று உபாதைகளையும் உண்டாக்கும்.


    - சேனைத்தமிழ் உலா.


    Sponsored Links
    sumitra and kiruthividhya like this.

    அன்புடன் கௌரி.


    "உன்னால் சாதிக்க இயலாத காரியம் என்று எதுவும் இருப்பதாக ஒருபோதும் நினைக்காதே!" - விவேகானந்தர்


    எனது கவிதை மொட்டுகள்




  2. #472
    gowrymohan's Avatar
    gowrymohan is offline Registered User
    Blogger
    Ruler's of Penmai
    Real Name
    Gowry Shanmuganathan
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    Sri Lanka
    Posts
    13,944
    Blog Entries
    380

    Re: Medical Notes - மருத்துவ குறிப்புகள்

    சர்க்கரை நோயை அடியோடு விரட்டி விடலாம். எப்படி தெரியுமா?

    1/2 கிலோ மல்லி, 1/4 கிலோ வெந்தயம் இரண்டையும் தனி தனியாக மிக்ஸ்யில் பொடி செய்து கொள்ளுங்கள். மல்லிபொடி 2 ஸ்பூன், வெந்தையபொடிய 1 ஸ்பூன் இரண்டையும் 1 டம்ளர் தண்ணீர் ஊற்றி காய்ச்சி 1/2 டம்ளர் வந்தவுடன் சாப்பாட்டு முன் அதாவது 3/4 மணி நேரத்திற்கு முன் தினமும் மூன்று வேளை குடித்து வந்தால் மூன்றே மாதத்தில் சர்க்கரை நோய் உங்களைவிட்டு ஓடிவிடும். கசாயம் குடித்த பிறகு தண்ணீரை தவிர எதையும் சாப்பிட கூடாது 3/4 மணி நேரத்திற்கு பிறகு உணவு எடுத்துகொள்ளலாம்.

    இது எந்தவித பக்க விளைவுகளும் அற்றது, பயமில்லாமல் குடிக்கலாம். சர்க்கரை நோயை இல்லாமலே செய்துவிடலாம்.


    - இதய சுவடுகள்

    sumitra and kiruthividhya like this.

    அன்புடன் கௌரி.


    "உன்னால் சாதிக்க இயலாத காரியம் என்று எதுவும் இருப்பதாக ஒருபோதும் நினைக்காதே!" - விவேகானந்தர்


    எனது கவிதை மொட்டுகள்




  3. #473
    gowrymohan's Avatar
    gowrymohan is offline Registered User
    Blogger
    Ruler's of Penmai
    Real Name
    Gowry Shanmuganathan
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    Sri Lanka
    Posts
    13,944
    Blog Entries
    380

    Re: Medical Notes - மருத்துவ குறிப்புகள்

    விஷசந்துக்கள் ஏதாவது தீண்டி விட்டால் பயப்பட தேவையில்லை பூரான், தேள், குளவி,கறுப்பு எறும்பு இவைகள் கடித்து விட்டால் அந்த இடத்தில் புளிகரைசலை வைத்தால் உடனே வலி குறையும் கடுப்பு நிற்கும். பொதுவாக சிறுகுழந்தைகளுக்கு போதுமான எதிர்ப்பு சக்தி இருக்காது இது போன்ற விஷசந்துக்கள் தீண்டிவிட்டால் எல்லோர் வீட்டிலும் புளி இருக்கும் உடனே புளிகரைசலை (பேஸ்டுபோல்) தடவி விட்டால் வலி குறையும் பயப்பட தேவையில்லை புளிக்கு விஷத்தை முறிக்கும் பவர் இருக்கிறது.

    மேலும் யாராவது தற்கொலைக்கு முற்சித்தவர்கள் அல்லது தெரியாமல் விஷத்தை சாப்பிட்டவர்களுக்கு இந்த புளிகரைசலை கொடுத்தால் விஷம் இரத்தத்தில் கலக்காது. இது சிறந்த முதலுதவி. அதன் பின் நீங்கள் மருத்துவமனை அழைத்துச் செல்லலாம்.


    - இதய சுவடுகள்

    sumitra and kiruthividhya like this.

    அன்புடன் கௌரி.


    "உன்னால் சாதிக்க இயலாத காரியம் என்று எதுவும் இருப்பதாக ஒருபோதும் நினைக்காதே!" - விவேகானந்தர்


    எனது கவிதை மொட்டுகள்




  4. #474
    gowrymohan's Avatar
    gowrymohan is offline Registered User
    Blogger
    Ruler's of Penmai
    Real Name
    Gowry Shanmuganathan
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    Sri Lanka
    Posts
    13,944
    Blog Entries
    380

    Re: Medical Notes - மருத்துவ குறிப்புகள்

    தினமும் இளநீரை குடித்தால் ஏற்படும் நன்மைகளை


    நோய்க்கு மருந்து
    இளநீரை தினமும் குடித்து வந்தால், அது இரத்த ஓட்டத்தை சீராக வைத்து, இதயத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவும்.
    உடலின் ஆரோக்கியத்தை கூட்டி உடல் சத்தியானது குறையாமலும் வைத்திருகின்றது.
    இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்பாட்டுடன் வைத்துக் கொள்ள உதவும் .
    வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள், இளநீரைக் குடித்து வந்தால், உடலில் காய்ச்சலை ஏற்படுத்திய வைரஸானது அழிந்துவிடும்.
    காலரா, வயிற்றுப்போக்கு ஆகிய காலங்களில் உடலில் உள்ள நீர்ச்சத்தானது குறையும். ஆகவே அப்போது இளநீரைக் குடித்தால், உடலில் உள்ள நீர்ச்சத்தின் அளவை அதிகரிக்கலாம்.

    தினமும் காலையில் வெறும் வயிற்றில் இளநீர் குடித்தால், உடலில் தங்கியுள்ள தேவையற்ற கொழுப்புக்களை குறைக்கலாம்.
    உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு, இளநீர் ஒரு வரப்பிரசாதம். ஏனெனில் இது உயர் இரத்த அழுத்தத்தைக் குறைக்கும்.
    இளநீரை குழந்தைகளுக்கு தினமும் குடிக்க கொடுத்தால், அவர்களின் வயிற்றில் இருக்கும் பூச்சிகள் வெளியேறிவிடும்.


    சிறு நீர பிரச்சனைகள்
    சிறு நீர் பிரச்சனைகள் உள்ளவர்களுக்கு இளநீர் ஒரு அரு மருந்து.
    இளநீர் சிறுநீர் பெருக்கத்தினை அதிகரித்து, உடலில் உள்ள நச்சுக்களை சிறுநீரின் மூலம் வெளியேற்றிவிடும்.
    சிறுநீரகப் பாதையில் தொற்றுகள் ஏதும் ஏற்படாமல் இருக்க, பெரிதும் உதவியாக இருக்கும்.
    சிறுநீரகக் கல் பிரச்சனை உள்ளவர்களுக்கும் இளநீர் ஒரு சிறந்த பானமாகும்.


    ஆரோகியமான உடற்கட்டு
    பொட்டாசியம் குறைபாட்டினால் அடிக்கடி தசைப்பிடிப்பு ஏற்படும். எனவே இளநீர் குடித்தால், உடலில் பொட்டாசியத்தின் அளவு அதிகரித்து, தசைப்பிடிப்பு ஏற்படுவது குறையும்.
    இளநீரில் கால்சியம் அதிகம் இருப்பதால், எலும்பு சம்பந்தபட்ட பிரச்சனைகள் ஏற்படாமல், எலும்புகள் நன்கு வலுவோடு இருக்க உதவும்.
    உடல் எடையை குறைக்க வேண்டுமானால் தினமும் உடற்பயிற்சி செய்த பின்னரும் குடிக்கலாம்.

    பொலிவான முகம் வேண்டுமானால், இளநீரைக் குடியுங்கள். இது சரும செல்களை புத்துணர்வாக்கி, முகத்தைப் பொலிவோடு வைத்துக் கொள்ளும்.
    இளநீரின் நன்மைகள் இன்னும் பல, ஒரு நோய் நிவாரணியாக நினைத்து குடியுங்கள்.


    - இணையதளத்திலிருந்து

    sumitra and kiruthividhya like this.

    அன்புடன் கௌரி.


    "உன்னால் சாதிக்க இயலாத காரியம் என்று எதுவும் இருப்பதாக ஒருபோதும் நினைக்காதே!" - விவேகானந்தர்


    எனது கவிதை மொட்டுகள்




  5. #475
    gowrymohan's Avatar
    gowrymohan is offline Registered User
    Blogger
    Ruler's of Penmai
    Real Name
    Gowry Shanmuganathan
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    Sri Lanka
    Posts
    13,944
    Blog Entries
    380

    Re: Medical Notes - மருத்துவ குறிப்புகள்

    குழந்தைகளின் கல்வி ஆற்றலை அதிகரிக்கும் மத்தியான நித்திரை

    மூன்று வயதுமுதல் ஐந்துவயது வரையிலான மழலைக் குழந்தைகளை மதியம் ஒரு மணி நேரம் ஒரு குட்டித்தூக்கம் போடவைத்தால் அது அவர்களின் கற்றல் திறனை மேம்படுத்துகிறது என்று அமெரிக்க ஆய்வாளர்கள் கண்டறிந்திருக்கிறார்கள். மதிய சாப்பாட்டுக்குப்பிறகான இப்படியான தூக்கம் குழந்தைகளின் மூளைத்திறனை மேம்படுத்துவதாக இந்த ஆய்வாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
    இயற்கை விஞ்ஞானத்துக்கான தேசியக் கழகத்தின் விஞ்ஞான சஞ்சிகையில் வெளியிடப்பட்டிருக்கும் இந்த ஆய்வின் முடிவுகள் 40 சிறார்களிடம் மேச்சசூசெட்ஸ் ஹம்ஹர்ஸ்ட் பல்கலைக்கழக ஆய்வாளர்களால் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளின் அடிப்படையில் எட்டப்பட்டிருக்கிறது.

    மூன்று வயது முதல் ஐந்துவயது வரையிலான குழந்தைகள் மதியம் ஒருமணிநேரம் தூங்கி எழுந்தால், அவர்கள் தங்களின் மழலைப்பருவ பாடங்களை நன்றாக நினைவில் வைத்திருப்பதாக இந்த ஆய்வில் தெரியவந்திருக்கிறது. இப்படி மதியம் தூங்கி எழுந்த குழந்தைகளின் மூளைத்திறன் மேம்பாடு மதியம் தூங்கி எழுந்தபின்னர் அதிகரிப்பதுடன், மறுநாளும் இது நீடிப்பதாகவும் இவர்கள் கண்டறிந்துள்ளனர்.
    குழந்தைகளின் நினைவாற்றலை ஸ்திரப்படுத்தி ஒழுங்குபடுத்துவதற்கும், ஆரம்பகால கற்றலுக்கும் இந்த மதிய தூக்கம் அவசியமாகிறது.
    மதிய உணவுக்குப் பிறகு தூங்க அனுமதிக்கப்பட்ட குழந்தைகள் தூங்கி எழுந்ததும் காலையில் கண்களால் பார்த்து அதன்மூலம் கற்றவற்றை நினைவுகூர்வதில் சிறப்பாக செயற்பட்டதாகவும், மதியநேரம் தூங்க அனுமதிக்கப்படாத குழந்தைகளை விட இவர்களின் நினைவாற்றல் மேம்பட்டு இருந்ததாகவும் இந்த ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.

    மேலும் இதே குழந்தைகளை மதிய நேரம் தூங்கவிடாதபோது அவர்களின் கற்றல் திறன் குறைவதையும் தாங்கள் கண்டறிந்ததாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
    குழந்தைகளுக்கு வயதாக ஆக, இந்த மதியநேர தூக்கம் என்பது இயற்கையிலேயே இல்லாமல் போகும். மழலையர் பள்ளிகளில் குழந்தைகளை மதிய நேரத்தில் தூங்க அனுமதிக்க வேண்டும். குறிப்பிட்ட வயதுக்குப் பிறகு மதியநேர குட்டித்தூக்கம் மனிதர்களின் மூளைத்திறனை, விழிப்புணர்ச்சியை அதிகப்படுத்தும் என்பது ஏற்கெனவே ஆய்வுகள் மூலம் நிரூபிக்கப்பட்ட செய்தி என்றாலும், மழலையர் பள்ளி மாணாக்கர்களிடமும் இது நல்லபலனைத்தரும்.

    மழலை வயதில் குழந்தைகள், இயற்கையாகவே தம்மைச்சுற்றி நடக்கும் நிகழ்வுகளில் இருந்து ஏராளமான தகவல்களை உள்வாங்கிக்கொள்ளும் தன்மை கொண்டவர்கள். இந்த தகவல்களையெல்லாம் அவர்களின் மூளை உள்வாங்கி பகுத்துப்பார்த்து சேமித்து வைத்துக்கொள்வதற்கு சராசரியாக ஒருநாளைக்கு 11 முதல் 13 மணிநேரம் அவர்கள் தூங்குவது அவசியம். எனவே இரவு நேரத் தூக்கத்தைப் போலவே, மதிய நேர தூக்கமும் இந்த மழலையர்களுக்கு மிகவும் அவசியம்.

    மதியநேரம் தூங்க அனுமதிக்கப்படாத குழந்தைகள், களைப்படைந்தும், எரிச்சலுடனும், கவனம் செலுத்தி கற்க முடியாமலும் திணறுவார்கள்.

    தங்களின் குழந்தையின் மழலைக்கற்றலை ஊக்குவிக்க நினைக்கும் பெற்றோர்கள், அவர்களை மதியநேரம் குறைந்தது ஒருமணிநேரமாவது தூங்கவிடுங்கள் என்பதே இந்த மருத்துவர்கள் செய்யும் பரிந்துரை.


    - இணையதளத்திலிருந்து

    sumitra and kiruthividhya like this.

    அன்புடன் கௌரி.


    "உன்னால் சாதிக்க இயலாத காரியம் என்று எதுவும் இருப்பதாக ஒருபோதும் நினைக்காதே!" - விவேகானந்தர்


    எனது கவிதை மொட்டுகள்




  6. #476
    gowrymohan's Avatar
    gowrymohan is offline Registered User
    Blogger
    Ruler's of Penmai
    Real Name
    Gowry Shanmuganathan
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    Sri Lanka
    Posts
    13,944
    Blog Entries
    380

    Re: Medical Notes - மருத்துவ குறிப்புகள்

    * ஒரு கப் தண்ணீரில் ஒரு கரண்டி ஓமம் போட்டு கொதிக்க வைத்து, பின் அதில் 100 மில்லி தேங்காய் எண்ணெயை விட்டு மீண்டும் கொதிக்க விட்டு வடிகட்டி வைத்து கொள்ளுங்கள். வடிகட்டியதோடு கற்பூரப் பொடியைக் கலந்து இளஞ்சூட்டுடன் இடுப்பில் நன்றாகத் தேய்த்து வர இடுப்பு வலி படிபடியாக நீங்கும்.

    * வெண்டைக்காய் விதையைக் கொஞ்சம் பார்லி கஞ்சியில் போட்டு காய்ச்சி தொடர்ந்து முன்று நாள் வரை சாப்பிட்டு வந்தால் சிறுநீர் கழிக்கும்போது ஏற்படும் எரிச்சல் இல்லாமல் போகும்.

    * உணவு சாப்பிடுவதற்கு அரை மணி நேரத்திற்கு முன்னதாக தினசரி அரை ஸ்பூன் ஆலிவ் எண்ணையைச் சாப்பிட்டு வந்தால், ரத்தக் குழாயில் கொழுப்பு படியாமல் தடுக்கலாம்.

    * வாய்ப்புண் உள்ளவர்களுக்கு காரம் என்றால் ஆகாது. அதனால், முடிந்த வரை காரத்தைக் குறைத்துச் சாப்பிடுங்கள். தேங்காய்த் துண்டுகளைச் சாப்பிட்டு வந்தால் வாய்ப்புண் எளிதில் குணமாகி விடும்..

    * ஜாதிக்காயைச் சிறு சிறு துண்டுகளாகச் சீவி, அதை நெய்விட்டு வறுத்து சாப்பிட்டு வந்தால் சீதபேதி குணமாகும். இந்த பாதிப்பு உள்ளவர்கள் தயிர், மோர், இளநீர் ஆகியவற்றை அதிகம் உட்கொள்வது நல்லது.

    * துளசி மனித முளைக்கு வலிமையைக் கொடுக்கக்கூடியது. அதற்கு, துளசி இலையை ஒரு டம்ளரில் பறித்துப் போட்டு ஊற வைத்து, அந்தத் நீரைக் குடித்து வந்தால் முளை பலம் பெறும்.

    * தொண்டைப் புண் பாதிப்பு குணமான பிறகு கொஞ்சம் மிளகைத் தூளாக இடித்து, அதில் சிறிது வெல்லம், நெய் கலந்து உருட்டி விழுங்கி வந்தால் அந்த பாதிப்பு முற்றிலும் குணமாகும்.

    * அஜீரணம் மற்றும் மந்தத்திற்குச் சிறந்தது கொய்யாவின் கொழுந்து இலை. அதனை சாப்பிட்ட உடனேயே பலனை காணலாம்.


    - இணையதளத்திலிருந்து

    sumitra likes this.

    அன்புடன் கௌரி.


    "உன்னால் சாதிக்க இயலாத காரியம் என்று எதுவும் இருப்பதாக ஒருபோதும் நினைக்காதே!" - விவேகானந்தர்


    எனது கவிதை மொட்டுகள்




  7. #477
    sumitra's Avatar
    sumitra is offline Registered User
    Blogger
    Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jul 2012
    Location
    mysore
    Posts
    23,699
    Blog Entries
    18

    Re: Medical Notes - மருத்துவ குறிப்புகள்

    Very useful tips! thank you Gowrymohan!

    gowrymohan likes this.

  8. #478
    gowrymohan's Avatar
    gowrymohan is offline Registered User
    Blogger
    Ruler's of Penmai
    Real Name
    Gowry Shanmuganathan
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    Sri Lanka
    Posts
    13,944
    Blog Entries
    380

    Re: Medical Notes - மருத்துவ குறிப்புகள்

    Quote Originally Posted by sumitra View Post
    Very useful tips! thank you Gowrymohan!
    Thank you and welcome Sumitra.

    sumitra likes this.

    அன்புடன் கௌரி.


    "உன்னால் சாதிக்க இயலாத காரியம் என்று எதுவும் இருப்பதாக ஒருபோதும் நினைக்காதே!" - விவேகானந்தர்


    எனது கவிதை மொட்டுகள்




  9. #479
    gowrymohan's Avatar
    gowrymohan is offline Registered User
    Blogger
    Ruler's of Penmai
    Real Name
    Gowry Shanmuganathan
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    Sri Lanka
    Posts
    13,944
    Blog Entries
    380

    Re: Medical Notes - மருத்துவ குறிப்புகள்

    தழும்புகள் மறைவதற்கு :

    உடல் அழகைக் கெடுப்பதில் தழும்புகள் முக்கிய பங்கினை வகிக்கிறது.
    அத்தகைய தழும்புகள் விபத்து அல்லது அலர்ஜியின் காரணமாக ஏற்படும். இவ்வாறு ஏற்படும் தழும்புகளை இயற்கையான முறையில் நீக்கலாம்.

    எலுமிச்சை சாறு

    எலுமிச்சை சாற்றை தினமும் தீக்காயம் ஏற்பட்ட இடத்தில் தடவி, 2 நிமிடம் மசாஜ் செய்ய வேண்டும். முக்கியமாக எலுமிச்சை சாற்றை தீக்காயம் நன்கு காய்ந்தப் பின்னர் தடவ வேண்டும்.

    பாதாம் எண்ணெய்

    தீக்காயம் ஏற்பட்ட இடத்தில் உள்ள தழும்புகளை நீக்க, பாதாம் அல்லது ஆலிவ் ஆயிலை தடவி மசாஜ் செய்ய வேண்டும்.

    அதிலும் ஒரு நாளைக்கு இரு முறை தடவி வந்தால், நன்கு பளிச்சென்று தெரியும் தழும்புகள் மங்கிவிடும்.

    கற்றாழை

    கற்றாழையில் உள்ள ஜெல்லானது மிகவும் சிறந்த ஒரு பொருள். அந்த ஜெல்லை தழும்புகள் உள்ள இடத்தில் தொடர்ந்து தடவி வந்தால், தீக்காயம் ஏற்பட்ட இடத்தில் உள்ள தழும்பானது மறைய ஆரம்பிக்கும். அதுமட்டுமின்றி, சருமமும் மென்மையாகும்.

    பால்

    தினமும் குளிக்கும் முன்பு, பாலை தழும்புகள் உள்ள இடத்தில் தடவி, மசாஜ் செய்து 10 நிமிடம் ஊற வைத்து குளிக்க வேண்டும். வேண்டுமெனில் அதில் சிறிது எலுமிச்சை சாற்றை விட்டும் செய்யலாம்.

    ஆலிவ் ஆயில்

    ஆலிவ் ஆயில் தழும்புகளை நீக்கவும் பயன்படுகிறது. எனவே இந்த ஆயிலை தீக்காயம் ஏற்பட்ட இடத்தில் தினமும் காலையும், மாலையும் தடவி மசாஜ் செய்து வந்தால் தழும்புகள் மறையும்.

    தக்காளி சாறு

    தக்காளியில் அதிகமான வைட்டமின்கள் இருப்பதால், அவை சருமத்தில் உள்ள இறந்த செல்களை நீக்கி, தழும்புகளை மறைய வைக்கும்.

    அதற்கு தக்காளி துண்டுகளை வெட்டிவோ அல்லது அதன் சாற்றையோ பாதிக்கப்பட்ட இடத்தில் தடவி, தினமும் மசாஜ் செய்து வந்தால் தழும்புகள் போய்விடும்.


    - இணையதளத்திலிருந்து

    rakul likes this.

    அன்புடன் கௌரி.


    "உன்னால் சாதிக்க இயலாத காரியம் என்று எதுவும் இருப்பதாக ஒருபோதும் நினைக்காதே!" - விவேகானந்தர்


    எனது கவிதை மொட்டுகள்




  10. #480
    gowrymohan's Avatar
    gowrymohan is offline Registered User
    Blogger
    Ruler's of Penmai
    Real Name
    Gowry Shanmuganathan
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    Sri Lanka
    Posts
    13,944
    Blog Entries
    380

    Re: Medical Notes - மருத்துவ குறிப்புகள்

    குதிகால் வெடிப்புக் குணமாக


    மருதோன்றி இலையை நன்றாக அரைத்துத் தினமும் படுக்கும்போது குதிகால் வெடிப்பு உள்ள பாகங்களில் தடவி வந்தால் சில நாட்களில் குதிகால் வெடிப்பு குணமாகிவிடும்.

    விளக்கெண்ணையில் தேவையான சுண்ணாம்பைக் கலக்கி வைத்துக் கொண்டு குதிகால் வெடிப்புகளில் அடிக்கடி தடவி வந்தால் குதிகால் வெடிப்புக் குணமாகிவிடும்.



    - இணையதளத்திலிருந்து


    அன்புடன் கௌரி.


    "உன்னால் சாதிக்க இயலாத காரியம் என்று எதுவும் இருப்பதாக ஒருபோதும் நினைக்காதே!" - விவேகானந்தர்


    எனது கவிதை மொட்டுகள்




loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter