Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine September! | All Issues

User Tag List

Like Tree1102Likes

Medical Notes - மருத்துவ குறிப்புகள்


Discussions on "Medical Notes - மருத்துவ குறிப்புகள்" in "General Health Problems" forum.


  1. #481
    gowrymohan's Avatar
    gowrymohan is offline Registered User
    Blogger
    Ruler's of Penmai
    Real Name
    Gowry Shanmuganathan
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    Sri Lanka
    Posts
    13,654
    Blog Entries
    380

    Re: Medical Notes - மருத்துவ குறிப்புகள்

    அழகுக்கு அழகு சேர்த்து பசியையும் தூண்டுவது கீரைகள். நமது உடல் நலத்தை பேணிக்காப்பதில் தானியவகைகள், பருப்பு வகைகள், பழங்கள் மற்றும் காய்கறிகள் மிக முக்கிய பங்கு வகிக்கின்றன. இவற்றில்கீரைகள் மிகச்சிறந்த இடத்தைப் பெறுகின்றன. கீரைகளில் புரதமும், கொழுப்புச்சத்தும் மிகக்குறைந்தஇடத்தைப் பெறுகின்றன. கீரைகளில் புரதமும், கொழுப்பும் மிகக்குறைந்த அளவிலும், உடலுக்குத்தேவையான நோய் எதிர்ப்புச் சத்தியை அளிக்கவல்ல வைட்டமின்களும், தாதுப்பொருட்களும் அதிகஅளவில் இருக்கின்றன. சீரண மண்டலம் சீராகச் செயல்படுவதற்குத் தேவையான நார்ச்சத்து கீரைவகைகளில் அதிகமாகக் காணப்படுகின்றது.
    தண்டுக்கீரை:-
    தண்டுக்கீரையில் செந்தண்டுக்கீரை, வெண்தண்டுக்கீரை என இரண்டு வகைகள் உள்ளன. செந்தண்டுக்கீரையானது உடல் வெப்பத்தைத் தணித்து ரத்தத்தைச் சுத்தி செய்வதுடன் சிறுநீர் பிரச்சனைகளைத்தீர்ப்பதிலும் பங்கு வகிக்கின்றது. வெண்தண்டுக் கீரையானது கொழுப்பைக் குறைக்கவும் தேவையற்றசதையைக் குறைக்கவும் பெரிதும் உதவுகின்றது.

    முளைக்கீரை:-
    முளைக்கீரையில் அடங்கியுள்ள இரும்பு மற்றும் தாமிர சத்துக்கள் ரத்தத்தை சுத்தி செய்து உடலுக்குஅழகையும் மெருகையும் ஊட்டுகின்றது. மேலும் பசியைத் தூண்டுவதிலும், மலச்சிக்கலைத் தீர்ப்பதிலும்பெரும்பங்கு வகிக்கின்றது.

    அரைக்கீரை:-
    பிரசவித்த பெண்களுக்கு இக்கீரையானது ஒரு சிறந்த மருந்தாகும். பிரசவ மெலிவைப் போக்கி உடலுக்குதேவையான சக்தியை அளிக்கின்றது. மேலும் தாய்ப்பாலுடன் கலந்து குழந்தையையும் வலுவூட்டுகிறது.

    முருங்கைக்கீரை:-
    இதில் வைட்டமின் '' 'சி' மற்றும் இரும்பு முதலிய சத்துக்கள் அதிக அளவில் உள்ளன. தொடர்ந்துசாப்பிட்டு வர கண்கள் குளிர்ச்சியடைவதுடன், வைட்டமின் '' பற்றாக்குறை தொடர்பான கண் நோய்கள்நீங்கி பார்வை தெளிவடையும்.

    அகத்திக்கீரை:-
    வாய், தொண்டை மற்றும் வயிற்றில் உண்டாகும் புண்களை குணப்படுத்துகின்றது. வயிற்றில் உள்ளபூச்சிகளை அழிப்பதிலும், உடல் சூட்டைத் தணிப்பதிலும் பெரிதும் பயன்படுகின்றது.

    மணத்தக்காளி:-
    வயிற்றுப்புண், வாய்ப்புண் மற்றும் குடல்புண் கியவற்றை சிறந்தமுறையில் கட்டுப்படுகின்றது. மேலும்கர்ப்பபை சம்பந்தாமான நோய்களுக்கும், கருச்சிதைவு, மலட்டுத்தன்மை கியவற்றை நீக்குவதிலும் பெரும்பங்கு வகிக்கின்றது.

    வெந்தயக்கீரை:-
    சர்க்கரையைக் கட்டுப்படுத்துவதில் மிகச்சிறந்து நீரிழிவு நோய் உள்ளவர்கள் இதனைத் தொடர்ந்துசாப்பிட்டு வர நீரிழிவு குணமாகும். மேலும் இக்கீரையானது சீரண சக்தியை அதிகரித்து பசியைத்தூண்டுகிறது.

    தவசிக்கீரை:-
    இக்கீரையில் ஏறக்குறைய அனைத்து வகையான வைட்டமின்களும் இருப்பதால் 'ம்ல்டி' வைட்டமின் கீரை'என அழைக்கப்படுகின்றது. இக்கீரையில் உள்ள மணிச்சத்து எலும்பு வளர்ச்சிக்கும், மூளை வளர்ச்சிக்கும்உதவுகின்றது. இரும்புச்சத்து ரத்தத்தை சுத்திகரித்து உடல் நலத்தைப் பேணிக் காக்கின்றது.

    பசலைக்கீரை:-
    ரத்த விருத்தியை உண்டாக்கி உடலுக்குப் பலத்தைக் கொடுக்கின்றது. கர்ப்பிணிப் பெண்கள் சுகப்பிரசவம்ஆவதற்கும், கால்களில் ஏற்படும் நீர் வீக்கம் மாறுவதற்கும் இதனை உணவில் சேர்த்துக்கொள்வது நல்லது.

    கரிசலாங்கண்ணி:-
    நல்லெண்ணைய் அல்லது தேங்காய் எண்ணைய்யுடன் கரிசலாங்கண்ணி சாற்றைச் சேர்த்து காய்ச்சப்பட்டதைலத்தை தேய்த்து வர தலைமுடி கருமையாகும். தலைவலி நீங்கும்.

    தூதுவளை:-
    கசப்புத்தன்மையுடைய இக்கீரை கபத்தை நீக்கி சுவாச மண்டலத்தை தூய்மைப்படுத்துகின்றது.மார்புச்சளியை நீக்குவதில் மிகச்சிறந்து விளங்குகின்றது.

    கொத்தமல்லி மற்றும் புதினா:-
    ஜீரண சக்தியை அதிகரித்து பசியைத் தூண்டுகின்றன. கொத்தமல்லியானது தலை இறக்கம், வாந்தி,வயிற்றுமந்தம் போன்றவற்றை அகற்றும், புதினா வாய் நாற்றத்தை நீக்கும் தன்மையுடையது. எனவேகுறைந்த செலவில் நிறைந்த மருத்துவ குணம் கொண்ட கீரை வகைகளை உணவில் சேர்த்து நோய்நொடியற்ற ஆரோக்கியமான வாழ்வைப் பெறுவோம்.

    வல்லாரை(Centella asiatica):
    நினைவாற்றலை அதிகமாக்கும். யானைக்கால் நோய் குணமாகும்.

    அகத்திக்கீரை:
    மலச்சிக்கலைப் போக்கும்.

    முளைக்கீரை:
    பல் சம்பந்தமான வியாதிகளை குணமாக்கும்.

    பொன்னாங்கண்ணி:
    இரத்தம் விருத்தியாகும்.

    தர்ப்பைப் புல்:
    இரத்தம் சுத்தமாகும். கஷாயம் வைத்து பருகவும்.

    தூதுவளை:
    மூச்சு வாங்குதல் குணமாகும்.

    முருங்கை கீரை:
    பொறியல் செய்து நெய்விட்டு 48 நாட்கள் சாப்பிட தாது விருத்தியாகும்.

    சிறுகீரை:
    நீர்கோவை குணமாகும்.

    வெந்தியக்கீரை(Fenugreek):
    இருமல் குணமாகும்.

    புதினா கீரை(Mint):
    மசக்கை மயக்கம்,வாந்தி குணமாகும்.

    அறுகீரை :
    சளிக்காய்ச்சல்,டைபாய்டு குணமாகும்.


    - இணையதளத்திலிருந்து



    Sponsored Links
    jv_66 and kiruthividhya like this.

    அன்புடன் கௌரி.


    "உன்னால் சாதிக்க இயலாத காரியம் என்று எதுவும் இருப்பதாக ஒருபோதும் நினைக்காதே!" - விவேகானந்தர்


    எனது கவிதை மொட்டுகள்




  2. #482
    gowrymohan's Avatar
    gowrymohan is offline Registered User
    Blogger
    Ruler's of Penmai
    Real Name
    Gowry Shanmuganathan
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    Sri Lanka
    Posts
    13,654
    Blog Entries
    380

    Re: Medical Notes - மருத்துவ குறிப்புகள்

    அறிவாற்றலை அதிகரிக்க விஞ்ஞானிகள் கூறும் 8 வழிமுறைகள்

    ஏதாவது தவறு செய்துவிட்டாலோ, அல்லது நினைவில்லாமல் மறந்துவிட்டாலோ பிறரிடம் இருந்து முதலில் வரும் கேள்வி என்ன புத்தி மழுங்கிப் போச்சா என்பதுதான். அந்த அளவிற்கு மனிதர்களுக்கு கட்டளையிடும் தலைமைச் செயலகமான மூளையின் பங்கு முக்கியமானது.

    மனிதர்களுக்கு வயசாக வயசாக, ஞாபக மறதி, தோல் சுருக்கம், நடை தளர்ச்சி, மூட்டுவலி இப்படி எத்தனையோ பிரச்சினைகள் வரத்தொடங்கும். அவற்றை தவிர்க்க முடியாது என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் முதுமையினால் ஏற்படும் நோய்களை ஏற்றுக்கொள்ளும் மனமானது வயசு ஏற ஏற அறிவும் கூட வளறவேண்டும் என்றுதான் நினைக்கிறது.

    எனவே வயது முதிர்ச்சியுடன் சேர்த்து, அறிவு முதிர்ச்சியும் இருக்க வேண்டும் என்பதற்காக விஞ்ஞானப்பூர்வமான ஆதாரங்களோட, பல்வேறு ஆய்வுகளின் அடிப்படையில முத்தான 10 வழிகளை சமீபத்துல ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். அவைகளை உங்களுக்காகக் கொடுத்துள்ளோம்.

    1. ஒரு நாளைக்கு 4 கப் காஃபி
    காலையில் எழுந்த உடன் ஆற அமர ருசித்து காஃபி குடியுங்கள். ஏனெனில் காஃபியில் உள்ள கெஃபீன் என்னும் வேதிப்பொருள், மூளையை பாதுகாக்கிறது. நாளொன்றுக்கு நான்கு கப் காஃபி குடித்தால் அல்ஷெய்மர்ஸ் என்ற நினைவாற்றலை பாதிக்கும் நோய் வராமல் தடுக்கப்படுகிறதாம். இந்த மருத்துவத்தன்மையானது, காஃபியில இருக்குற கெஃபீன் லேர்ந்து கிடைக்கிறதா ஆன்டி ஆக்ஸிடென்ட்ஸ் என்னும் வேதிப்பொருள்லேர்ந்து கிடைக்கிறதா என்பது பற்றியும் ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது.

    2. மூளைக்கு வேலை
    எவ்வளவுக்கு எவ்வளவு உங்க மூளையை கசக்கி ஒரு விஷயத்தைக் கற்றுக்கொள்ள முயற்சி செய்கிறீர்களோ, அவ்வளவும் உங்க முதுமைக் காலத்துல அறிவு முதிர்ச்சிக்கு வித்திடுமாம்!. ஒரு புது கணக்குக்கு விடை கண்டுபிடிக்கிறதுல மூளைக்கு கிடைக்குற பலனைவிட, சிக்கல் விளையாட்டுல எல்லா பகுதியையும் ஒன்னா சேர்க்குறதுல கிடைக்குற பலன் ரொம்பக் குறைவாம். குறுக்கெழுத்துப் போட்டியோ அல்லது அதற்கு இணையான மூளைப் பயிற்ச்சி விளையாட்டுகளோ, இவை எல்லாம் மூளையை பெரிதாக மேம்படுத்துகின்றன என்பதை திட்டவட்டமான ஆதாரங்களுடன் வரையறுக்கும் ஆய்வுகள் இதுவரை இல்லை!.

    3. மன உளைச்சல் வேண்டாம் (No Tension)
    மன உளைச்சலினால் நினைவாற்றல் சக்திக்கு அடிப்படையான மூளையின் ஹிப்போகேம்பஸ் மற்றும் இன்னும் சில பகுதிகளில் விஷத்தன்மையுள்ள பல ரசாயனப் பொருள்கள் கொட்டப்படுகிறதாம். யோகா, நண்பர்களுடன் பேசுதல் போன்ற செயல்களில் ஈடுபட்டால், மன உளைச்சல் குறைந்து, நினைவாற்றல் அதிகரிக்கிறது என்கிறது ஆய்வு

    4. நிம்மதியான உறக்கம்
    கனவு காண்பதால் மூளை வளர்ச்சியடையும் என்ற அதிசயிக்கத்தக்க உண்மை கண்டறியப்பட்டுள்ளது. கண்களை திறந்து கொண்டே பகல் கனவு காண்பதால் எந்த பிரயோசனமும் இல்லை. சரியான நேரத்தை ஒதுக்கி, உறங்கும்போது, வரும் கனவுகள் ஒருவரின் நினைவாற்றல் மீதான மேற்பார்வை செய்யும் மூளை, தேவையில்லாதவற்றை அழித்து, முக்கியமானவற்றை செப்பனிட்டு பாதுகாக்கிறதாம். ஆனால் சரியான தூக்கமின்மையால் நம் நரம்புத் தொடர்புகளின் (synapses) மீது, ஒரு வித புரதங்கள் தேங்கி, சிந்திக்கும் மற்றும் கல்வி கற்கும் திறன் குறைந்து போகிறதாம். முக்கியமா, வருடக்கணக்கில் சரியான தூக்கமில்லாதவர்களுக்கு, அவர்களின் முதுமையில் அறிவுத்திறன் பெரிதும் குறைந்துவிட வாய்ப்புகள் இருக்கிறதாம்!

    5. சுறுசுறுப்பான செயல்பாடு
    நாளொன்றுக்கு 30 நிமிடங்கள் சுறுசுறுப்பாக ஏதாவது வேலை செய்யவேண்டும் என்கின்றனர் ஆய்வாளர்கள். இது மூளை ஆரோக்கியத்தை மிகவும் மேம்படுத்துகிறதாம். நடப்பது, தோட்ட வேலை செய்வது, ஓடுவது இப்படி எதுவாக இருந்தாலும் அரைமணி நேரம் தொடர்ந்து செய்தால் மூளை வளர்ச்சி அதிகரிக்குமாம்.

    6. உடல் நலனில் அக்கறை
    வருமுன் காத்துக்கொள்ளக் கூடிய நோய்களான, நீரிழிவு நோய் (Type II diabetes), உடல்பருமன், ரத்தக் கொதிப்பு போன்றவை கூட ஒருவரின் மூளையை பாதிக்கின்றனவாம்! உடலளவிலான எல்லா உபாதைகளுமே, மூளையின் கற்கும் திறனையும், நினைவுத்திறனையும் பெரிதும் பாதிக்கின்றனவாம். எனவே உடலை பேணுவதன் மூலம் மூளை வளர்ச்சியை அதிகரிக்கலாம்.
    அதிகமாக உண்ணுவதன் மூலம் மூளை சோர்வடைந்து நினைவாற்றல் பாதிக்கிறதாம். அதேசமயம், உணவுக் கட்டுப்பாடு என்ற பெயரில் மிகவும் குறைவாக உட்கொண்டாலும் மூளை பாதிக்கப்படுகிறதாம். அவர்கள் கவனச்சிதறல், குழப்பம் மற்றும் நியாபகச் சக்தி குறைவு போன்ற உபாதைகளால் பாதிக்கப்படுகிறார்களாம். எனவே அதிக நார்ச்சத்துள்ள மிதமான அளவில் கொழுப்பும் புரதமும் உள்ள உணவை உட்கொள்வதன் மூலம் செரிமானச் செயல்பாடானது சீராக நடைபெற்று உடல் பாகங்களின் ஆரோக்கியத்தை நீண்டகாலம் பாதுகாத்து சரியான நிலையில் வைத்திருக்க உதவுகிறது.

    7. மீன் சாப்பிடுங்க

    மூளைவளர்ச்சியை அதிகரிப்பதில் ஒமேகா 3 எனப்படும் கொழுப்பிற்கு முக்கிய பங்குண்டு. இது மீன்களில் அதிகம் காணப்படுகிறது. ஒமேகா 3 கொழுப்பு நிறைந்த விதைகளையும் அதிகம் உண்ணலாம். மீன் எண்ணெய் மாத்திரைகள் தேவையில்லை.

    8. மாத்திரைகளை தவிருங்கள்
    வைட்டமின், தாது மாத்திரைகள் அப்புறம் சில நினைவாற்றல் மாத்திரைகள் எல்லாம் மூளைவளர்ச்சியை மேம்படுத்துவதாக சொல்லப்படுகிறது. இவற்றை உட்கொள்வதன் மூலம் ரத்தக் கொதிப்பு, செரிமானக் கோளாறு, மலட்டுத்தன்மை பிரச்சினைகள், மன உளைச்சல் போன்ற நோய்களும் தோன்றுவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.


    - தத்துவம் தன்னம்பிக்கை வாழ்க்கை


    jv_66 and shrimathivenkat like this.

    அன்புடன் கௌரி.


    "உன்னால் சாதிக்க இயலாத காரியம் என்று எதுவும் இருப்பதாக ஒருபோதும் நினைக்காதே!" - விவேகானந்தர்


    எனது கவிதை மொட்டுகள்




  3. #483
    gowrymohan's Avatar
    gowrymohan is offline Registered User
    Blogger
    Ruler's of Penmai
    Real Name
    Gowry Shanmuganathan
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    Sri Lanka
    Posts
    13,654
    Blog Entries
    380

    Re: Medical Notes - மருத்துவ குறிப்புகள்

    அறுகு

    அறுகம் புல்லை தண்ணீரில் காய்ச்சிக் கற்கண்டு சேர்த்து சாப்பிட ஆஸ்துமா குணமாகும்.
    அறுகம்புல் சாறுடன் தேன் கலந்து சாப்பிட இரத்தம் சுத்தமாகும்.
    அறுகம் வேரை பசும்பாலில் அரைத்து நெற்றியில் பற்றுப் போட தலைவலி குணமாகும்.
    அறுகம்வேரை அரைத்து பசுவின் பாலில் கலந்து அருந்தி வந்தால் உடல் தேறி பலம் பெறும்.


    - Dinamani

    jv_66 likes this.

    அன்புடன் கௌரி.


    "உன்னால் சாதிக்க இயலாத காரியம் என்று எதுவும் இருப்பதாக ஒருபோதும் நினைக்காதே!" - விவேகானந்தர்


    எனது கவிதை மொட்டுகள்




  4. #484
    gowrymohan's Avatar
    gowrymohan is offline Registered User
    Blogger
    Ruler's of Penmai
    Real Name
    Gowry Shanmuganathan
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    Sri Lanka
    Posts
    13,654
    Blog Entries
    380

    Re: Medical Notes - மருத்துவ குறிப்புகள்

    நீரிழிவைத் தடுப்பது எப்படி?


    • போஸாக்குள்ள உணவாக உட்கொள்ளல். ஆனால் இது சீனியைத் தவிர்ப்பது என்று அர்த்தம் அல்ல.
    • தினசரி உடற்பயிற்சி செய்தல் அல்லது உடல் உழைப்பில் ஈடுபடுதல்.
    • உடல் எடையை சரியான அளவில் பேணுதல்.


    போசாக்கு உணவு

    போசாக்குள்ள உணவு என்பது என்ன? இனிப்பு, எண்ணெய், நொறுக்குத் தீனி போன்றவற்றை மிகக் குறைவாக உண்ணல். மாப்பொருள் உணவை அளவோடு உண்ணல், புரத உணவுகளை தேவையான அளவில் உண்ணல், காய்கறி மற்றும் பழவகைகளை அதிகம் உண்ணல் எனச் சொல்லலாம்.


    தினமும் ஒவ்வொரு பங்கும் 80 கிராம் நிறையுள்ளதாக 5 பங்கு அளவில் காய்கறிகளையும் பழவகைகளையும் உணவில் சேர்க்க வேண்டும் என்பது பொதுவாக ஏற்கப்பட்ட கருத்தாகும்.
    எத்தகைய காய்கறி உணவுகள் நீரிழிவு வராமல் தடுக்க உதவும் என்பது அடுத்த கேள்வியாக இருக்கும்.
    மாப்பொருள் குறைந்த அளவுள்ள காய்கறிகள் நல்லது. கிழங்கு வகைகளில் மாப்பொருள் உள்ளதாயினும் அவற்றில் நார்பொருளும் நீர்ச்சத்தும் அதிகம் இருப்பதால் அளவோடு உண்பதில் தவறில்லை. ஏனைய காய்களிகளில் மாப்பொருள் குறைவாகவும், நார்ப்பொருள் அதிகமாகவும் உள்ளதால் நல்லது.
    இலைவகைகள் மேலும் சிறந்தவை என்கிறார்கள்.


    நீரிழிவைத் தடுக்கும் பச்சை நிறமான இலைவகைகள் அதிகளவு உட்கொள்ளும் உணவு முறையானது நீரிழிவு ஏற்படுவதற்கான சாத்தியத்தைக் குறைக்கிறது என University of Leicester யைச் சார்ந்த Patrice Carter தலைமையிலான ஒரு ஆய்வு கூறியது. ஆறு ஆய்வுகளின் முடிவுகளை மீள்பரிசோதனை செய்த போது இது தெரிய வந்ததாம்.

    ஏனைய காய்கறிகள் உண்பவர்களை விட அதிகளவு பச்சை நிறமான இலைவகைகளை உண்பவர்களுக்கு மட்டுமே நீரிழிவு வருவதற்கான சாத்தியம் 14 சதவிகிதம் குறைவு அது கூறியது. இது 13 வருடங்களாக 223,000 பேரிடையே செய்த அவதானிப்பின் முடிவு.
    ஆனால் ஏனைய வகை காய்கறிகளையும் பழங்களையும் அதிகம் உண்பவர்களிடேயே இந்தச் நீரிழிவுக்கு எதிரான சாதகமான பலன் கிடைப்பதாகத் தெரியவில்லை.


    இதன் அர்த்தம் ஏனைய வகை காய்கறிகள் பழங்கள் பயனற்றவை என்பது அல்ல. ஏனைய பல ஆராச்சி முடிவுகள் எல்லாப் பழவகைகளும், காய்கறிகளும் நீரிழிவைத் தடுப்பதில் பங்களிப்பதுடன், இருதயநோய்களுக்கான சாத்தியத்தையும் குறைப்பதாகக் கூறுகின்றன. ஆயினும் இலைவகை உணவுகளின் பங்களிப்பு அதிகம் என்பது இப்பொழுது தெரியவந்துள்ளது.
    இலைவகை உணவுகளின் நற்பயனுக்குக் காரணம் என்ன?
    ஒட்சிசனெதிரிகள் காரணமாக இருக்கலாம் என ஆய்வாளர்கள் கருதுகிறார்கள். பசுமையான பச்சை இலைகளில் பீற்றாகரோட்டின், பொலிபீனோல்ஸ், விட்டமின் சீ போன்ற ஒட்சிசனெதிரிகள் மற்றும் மக்னீசியம் போன்ற தாதுப்பொருட்களும் தாராளமாக இருப்பதே காரணம் எனலாம்.



    பசிய இலை வகை உணவுகளின் போசாக்கு



    • இலைவகைகள் மிகக் குறைந்தளவு கலோரிப் பெறுமானம் உள்ள உணவுகளாகும். அவற்றிலுள்ள மாப்பொருள்களானது நார்ப்பொருள்களிடையே அடைபட்டு இருப்பதால் எளிதில் சமிபாடடைவதில்லை. இதனால் நீரிழிவு நோயாளர்களின் இரத்த குளுக்கோஸ் அளவு அதிகரிப்பதைக் குறைக்கினறன.
    • இரும்பு, கல்சியம், பொட்டாசியம், மக்னீசியம் போன்ற கனியங்கள் உண்டு.
    • விட்டமின் D வகைகளுடன், விட்டமின்கள் K, C, E ஆகியவை நிறையக் கிடைக்கின்றன. ஒரு கப் சமைத்த இலையுணவு ஒரு மனிதனுக்கு தினசரி தேவைப்படும் விட்டமின்கள் K யைவிட 9 மடங்கு அதிகமாகக் கொடுக்கும் எனத் தெரிகிறது.
    • பீட்டாகரோட்டின், லியுடின் (beta-carotene, lutein, and zeaxanthin) போன்ற பைட்டோநியுரியன்டசை (phytonutrients) இலைவகை உணவுகள் தருகின்றன. இவை எமது உடற்கலங்கள் சேதமாவதைத் தடுக்கின்றன. வயது அதிகரிப்பால் ஏற்படும் பார்வை இழப்பை (Age related macular degemeration) தடுப்பதிலும் இவை உதவுகின்றன.
    • கொலஸ்டரோல் குறைப்பு, இருதய நோயிலிருந்து பாதுகாப்பு ஆகியவற்றிற்காக இப்பொழுது ஒமேகா 3 (Omeg 3 Fat) என்ற கொழுப்பை பலரும் பயன்படுத்துகிறார்கள். இது பெருமளவு ஆழ்கடல் மீன்களிலிருந்தே பெறப்படுகின்றது. ஆயினும் தாவர இலை உணவுகளிலும் இது சிறிதளவு காணப்படுகிறது.


    விற்றமின் கே யின் நன்மைகள்



    பசுமை நிறமான இலை வகைகளில் விற்றமின் K அதிகம் என்றோம். அதன் பலாபலனகள்; என்ன?

    • குருதி உறைதலைக் கட்டுப்படுத்துகின்றது. மாரடைப்பு, பக்கவாதம் போன்றவை ஏற்படுவதற்கு குருதி உறைதல் முக்கிய காரணமாகும். மருத்தவ ரீதியாக இதைத் தடுப்பதற்கே குறைந்த அளவு அஸ்பிரின் (75-100mg) மற்றும் குளபிடோகிரில் போன்ற மருந்துகளை நீண்ட கால அடிப்படையில் கொடுக்கிறார்கள். தாவர இலை உணவுகளில் உள்ள விற்றமின் கே இயற்கையான பாதுகாப்பைக் கொடுக்கும்.
    • விற்றமின் கே ஒஸ்டியோபொரோசிஸ் நோயிலிருந்து பாதுகாப்பளிக்கிறது. இன்று வயதான பலரும் முக்கியமாக பெண்கள் இதனால் பாதிக்கப்படுவது தெரிந்ததே. தாவர இலை உணவுகளை தினமும் உபயோகித்து வந்தால் ஒஸ்டியோபொரோசிஸ் வருவதிலிருந்தும் பாதுகாப்பு கிடைக்கும்.
    • நீரிழிவு ஏற்படாமல் தடுக்கவும் உதவும்.
    • அழற்சியைத் தடுக்கும் குணம் விற்றமின் கே க்கு இருப்பதால் மூட்டு நோய்களிலிருந்து பாதுகாக்கும்.
    • இரத்தக் குழாய்களில் கொழுப்புப் படிவதை தடுக்கும் ஆற்றலும் விற்றமின் கே க்கு உண்டு.



    எனவே நீரிழிவைத் தடுப்பதற்காக மட்டுமின்றி மேற் கூறிய பல பலன்களும் கிட்டும் என்பதால் தினமும் உணவில் பசிய இலை உணவைச் சேர்த்துக் கொள்வது அவசியமாகும்.


    - இணையதளத்திலிருந்து.

    jv_66 likes this.

    அன்புடன் கௌரி.


    "உன்னால் சாதிக்க இயலாத காரியம் என்று எதுவும் இருப்பதாக ஒருபோதும் நினைக்காதே!" - விவேகானந்தர்


    எனது கவிதை மொட்டுகள்




  5. #485
    gowrymohan's Avatar
    gowrymohan is offline Registered User
    Blogger
    Ruler's of Penmai
    Real Name
    Gowry Shanmuganathan
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    Sri Lanka
    Posts
    13,654
    Blog Entries
    380

    Re: Medical Notes - மருத்துவ குறிப்புகள்

    பனையோலைப் பாயில் படுத்து உறங்கினால் அதிக உஷ்ணம் மற்றும் பித்தம் உண்டாகும்.
    கோரைப் பாயில் படுத்து உறங்கினால் உடல் சூடு தணிந்து குளிர்ச்சி உண்டாகும். சுகமான நித்திரை கிடைக்கும்.
    இலவம் பஞ்சுப் படுக்கையில் படுத்தால் ஆரோக்கியம் கிடைக்கும். இரத்த விருத்தி உண்டாகும்.

    jv_66 likes this.

    அன்புடன் கௌரி.


    "உன்னால் சாதிக்க இயலாத காரியம் என்று எதுவும் இருப்பதாக ஒருபோதும் நினைக்காதே!" - விவேகானந்தர்


    எனது கவிதை மொட்டுகள்




  6. #486
    gowrymohan's Avatar
    gowrymohan is offline Registered User
    Blogger
    Ruler's of Penmai
    Real Name
    Gowry Shanmuganathan
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    Sri Lanka
    Posts
    13,654
    Blog Entries
    380

    Re: Medical Notes - மருத்துவ குறிப்புகள்

    பயணம் செய்யும்பொழுது அதிர்ச்சி இருந்தால் படிக்கக்கூடாது. இதனால் கண் கெடும்.

    படிக்கும் சமயம் முதுகுத் தண்டு வளையக்கூடாது.

    படிக்கும் சமயம் வெளிச்சம் புத்தகத்தின் மீது விழ வேண்டும். நம் கண்கள் மேல் விழக்கூடாது.

    jv_66 and Aarushi like this.

    அன்புடன் கௌரி.


    "உன்னால் சாதிக்க இயலாத காரியம் என்று எதுவும் இருப்பதாக ஒருபோதும் நினைக்காதே!" - விவேகானந்தர்


    எனது கவிதை மொட்டுகள்




  7. #487
    gowrymohan's Avatar
    gowrymohan is offline Registered User
    Blogger
    Ruler's of Penmai
    Real Name
    Gowry Shanmuganathan
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    Sri Lanka
    Posts
    13,654
    Blog Entries
    380

    Re: Medical Notes - மருத்துவ குறிப்புகள்

    • குளிரினால் உடல் சரியில்லாது போனாலோ அல்லது உடல்வலி இருந்தாலோ வெந்நீரில் எலுமிச்சைச்சாறு மற்றும் மிளகு கலந்து பருக வேண்டும். இச்செய்கை உடல் வலியைப் போக்கி செரிமானத்தைச் சீர்படுத்தும்.

    • மூட்டு வலிக்கும் குளிர்ச்சிக்கும் ஆகவே ஆகாது. குளிர்ச்சி அதிகம் சேர்ந்தால் மூட்டுவலி அதிகரிக்கும். பனிக்காலத்தில் மூட்டுவலி உள்ளவர்கள், ஈரத்தரையில் வெறும் காலால் நடப்பதைத் தவிர்க்க
    வேண்டும்.

    • வெளியே குளிர் அதிகமாக இருக்கும்போது நமக்கு அதிகம் தாகம் ஏற்படாது. அதனால் உதடுகள் காய்ந்து போவதில் நாம் அதிகம் கவனம் செலுத்தத் தவறிவிடுவோம். ஆனால் உடம்பின் நீரிழப்பானது சில சமயங்களில் குளிர்க்காய்ச்சலுக்கு நம்மை இட்டுச் சென்றுவிடும். இதனைத் தவிர்க்க டம்ளரில் வெதுவெதுப்பான நீரினை நிரப்பி அதில் சீரகம் சிறிது கலந்து அருந்தி வரலாம்.

    • குளிர் காலங்களில் சைக்கிள், ஸ்கூட்டர், பைக்கில் செல்லும்போது மார்பில் காற்று பலமாக தாக்கும். ஆகையால் ஒரு நியூஸ் பேப்பரை நான்காக மடித்து பனியனுக்குள் வைத்து
    பனியனை "இன்' செய்து சட்டைபோட்டுக் கொண்டால், மார்புக்கு பலமான பாதுகாப்பு கிடைக்கும். ஸ்வெட்டரை எடுத்துக் கொண்டு அலைய வேண்டாம்.

    • பனிக்காலத்தில் இஞ்சி, லவங்கம், ஏலக்காய், கிராம்பு, மிளகு, மஞ்சள் போன்ற மசாலாப் பொருள்களை போதிய அளவில் உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது. இது குளிர்காலத்தில் உண்ணும் உணவினை எளிதில் செரிக்க உதவும். முளைகட்டிய உணவு வகைகளும், முள்ளங்கி, வெந்தயம் போன்றவையும் பனிகாலத்துக்கு பயனளிக்கும் உணவுவகைகள்தாம்.

    • பனிக்காலத்தில் பயணம் மேற் கொள்ளும்போது கழுத்துப் பகுதியையும் தலைப்பகுதியையும் மூடிவைத்து பயணிப்பது உடல்நலம் காக்க உதவும்.

    • மற்ற காலங்களைவிட குளிர்காலத்தில் நமது உடலுக்கு அதிகம் தூக்கம் தேவைப்படுகிறது. இரவு உணவினை சீக்கிரமே முடித்துவிட்டு தூங்கச் செல்வதற்கு முன் மஞ்சள் தூள் கலந்த வெதுவெதுப்பான பாலை அருந்திவிட்டு தூங்குவது குளிர்காலத்தினால் தொண்டை மற்றும் நுரையீரல் பாதிப்பதை தடுக்கும்.

    • பனிக்காலத்தில் எண்ணெய் குளியல் மிகவும் அவசியமாகிறது. குளிக்கும் போது நாசித் துவாரங்களில் சிறிது எண்ணெய்விட்டும் கைகால்களில் எண்ணெய் தடவி ஊறிய பின்பு குளிக்க வேண்டும். ஊட்டம் மிகுந்த இந்த எண்ணெய்க் குளியல் நமது நரம்புப் பகுதிகளையும் மூட்டுப்பகுதிகளையும் குளிர்தன்மை தாக்காமல் பாதுகாக்கும்.


    - தினமணி

    jv_66 likes this.

    அன்புடன் கௌரி.


    "உன்னால் சாதிக்க இயலாத காரியம் என்று எதுவும் இருப்பதாக ஒருபோதும் நினைக்காதே!" - விவேகானந்தர்


    எனது கவிதை மொட்டுகள்




  8. #488
    gowrymohan's Avatar
    gowrymohan is offline Registered User
    Blogger
    Ruler's of Penmai
    Real Name
    Gowry Shanmuganathan
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    Sri Lanka
    Posts
    13,654
    Blog Entries
    380

    Re: Medical Notes - மருத்துவ குறிப்புகள்

    பிரசவத்திற்கு பின் சாப்பிடக்கூடாத உணவுகள்

    குழந்தைக்கு தாய்ப்பால் என்பது மிக மிக முக்கியம். தாய் பாலை மட்டுமே உணவாக அருந்தும் குழந்தைக்கு அந்த பாலை தூய்மையாக கொடுக்க வேண்டும். பல நோய்களுக்கு எதிர்ப்பு சக்தியாக தாய்ப்பால் இருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அத்தகைய மருத்துவத் தன்மைக் கொண்ட தாய்ப்பாலை தூய்மையாக கொடுக்க வேண்டும்.

    இந்த பாலின் தன்மை வெளி உணவுகளால் கெடாமல் பார்த்து கொள்வது தாயின் கடமையாகும். அலர்ஜி ஏற்படுத்தும் சில உணவுகளை தாய் உட்கொள்வதால், அது குழந்தையின் பாலில் கலந்து குழந்தைக்கு பாதிப்பை ஏற்படுத்துகின்றது என்பது மறுக்க முடியாத ஒன்று. ஆகவே அந்த உணவுகள் எது என்று ஆராய்ந்து அதை தவிர்க்க வேண்டும். இந்த கடமையை செய்தாலே ஆரோக்கியமான உடலையும், வலிமையையும் குழந்தைக்கு கொடுக்க முடியும்.

    பெற்றோர்களுக்கு இருக்கும் அலர்ஜி குழந்தைகளுக்கும் வர வாய்ப்புள்ளது என்று வல்லுநர்கள் கூறுகின்றனர். குழந்தைக்கு உணவில் அலர்ஜி அதாவது ஒவ்வாமை இருக்குமெனில் அலர்ஜி தரும் உணவுகளை தவிர்த்து விடுங்கள். இதில் பால் உணவு, சோயா, முட்டையின் வெள்ளை கரு, வேர்க்கடலை, கோதுமை போன்றவை அடங்கும்.

    உணவில் பூண்டு சேர்த்து கொள்வதால் குழந்தையின் பாலில் அதன் வாசம் வரக்கூடும். அதுவும் உணவு எடுத்த அடுத்த இரண்டு மணிநேரத்தில் இந்த வாசனையை பாலில் காண முடியும். சில குழந்தைகளுக்கு இந்த வாசனை ஒற்றுக் கொள்ளாமல் போகும் என்பதால் தவிர்த்து விடுங்கள்.

    எச்சில் வழிதல், டயப்பரால் வரும் எரிச்சல் போன்றவை சிட்ரஸ் பழங்களை எடுத்து கொள்வதால் வருகின்றது. ஆகவே ஆரஞ்சு, எலுமிச்சை போன்றவற்றை தவிர்த்து, பப்பாளி மற்றும் மாங்காய் போன்றவற்றை எடுத்துக் கொள்ளுங்கள்.

    பாலாடைக் கட்டி, தயிர், ஐஸ் க்ரீம் போன்றவையை உட்கொண்டால் சில நேரங்களில் அவை பாலுடன் கலந்து குழந்தைக்கு அலர்ஜி ஏற்படுத்தும் என்பதால் கவனமாக இருக்க வேண்டும். குறிப்பாக வாந்தி, தூக்கமின்மை, வரட்டு இருமல் போன்றவை வரலாம்.

    காபி அருந்துவதால் குழந்தைக்கு சில நேரங்களில் சோர்வும், தூக்கமின்மையும் வர நேரிடும். ஆகவே காபி அருந்தி குழந்தைக்கு கஷ்டம் ஏற்படுத்த வேண்டாம். முக்கியமாக ஆரம்பக் காலத்தில் தவிர்த்து விடுவது மிகவும் நல்லது.

    மது அருந்துவதால் குழந்தைக்கு அதிக தூக்கம், மயக்கம், தளர்வு, அதிக உடல் எடை போன்றவை நேரலாம். மேலும் மது தாய் பால் சுரப்பதிலும் பாதிப்பு ஏற்படுத்தலாம். ஆகவே குழந்தையை நல்ல முறையில் வளர்க்க மது அருந்துவது வேண்டாம்.


    உணவில் அதிக அளவில் மசாலா மற்றும் காரத்தைக் குறைத்து கொள்ள வேண்டும். அதிக மசாலா மற்றும் காரம் குழந்தைக்கு அலர்ஜி, எரிச்சல் போன்றவற்றை ஏற்படுத்தும். ஆகவே காரம் அதிகம் உள்ள மிளகு, இஞ்சி, எலுமிச்சை சாறு போன்றவற்றை தவிர்ப்பது நல்லது.






    jv_66 and Aarushi like this.

    அன்புடன் கௌரி.


    "உன்னால் சாதிக்க இயலாத காரியம் என்று எதுவும் இருப்பதாக ஒருபோதும் நினைக்காதே!" - விவேகானந்தர்


    எனது கவிதை மொட்டுகள்




  9. #489
    gowrymohan's Avatar
    gowrymohan is offline Registered User
    Blogger
    Ruler's of Penmai
    Real Name
    Gowry Shanmuganathan
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    Sri Lanka
    Posts
    13,654
    Blog Entries
    380

    Re: Medical Notes - மருத்துவ குறிப்புகள்

    சிறுநீரக நோய்


    ''சிறுநீரக நோய்த் தொற்று என்பது ஆண்களைவிட பெண்களுக்கு 20 சதவிகிதம் வாய்ப்பு அதிகம். இதற்கு முக்கியக் காரணம், வெளியிடங்களுக்குச் செல்லும் போது சிறுநீரை வெளியேற்றாமல் அடக்கிக்கொள்ளும் பழக்கம்தான்!'' என்று சொல்லும் டாக்டர், சிறுநீர் பிரச்னை ஏற்படுவதற்கான காரணங்கள், முக்கியமாகப் பாதிக்கப்படுபவர்கள், தவிர்ப்பதற்கான வழிகள், தினமும் குடிக்க வேண்டிய நீரின் அளவு, சிறுநீரகத் தொற்று நீக்கும் உணவு வகைகள், இன்னும் பல விழிப்பு உணர்வுத் தகவல்கள் எனத் தொடர்ந்தார்.

    ஆரோக்கியத்தின் முதல் படி... சீரான சிறுநீர் வெளியேற்றம்!

    ''உடல் ஆரோக்கியத்துக்கான முக்கியமான இயக்கங்களில் ஒன்று, இயல்பாக சிறுநீர் கழிப்பது. உடம்புக்குத் தேவையான நீர் எடுத்துக்கொள்ளப்பட்ட பிறகு, உடற்கழிவுகளுடன் வெளியேறும் மீதமுள்ள நீர்தான் சிறுநீர். தினமும் தேவையான அளவு நீர் குடிப்பதும், சிறுநீர் கழிப்பதற்கான உணர்வு ஏற்பட்டவுடன் தக்கவைக்காமல் வெளியேற்றுவதும் ஆரோக்கியத்தின் முதல் படி. வெளியேற்றாமல் தேக்கும்போது, சிறுநீர்ப் பையின் கொள்ளளவையும் மீறிய சுமையை அது தாங்க வேண்டி வரும். இதையே தொடர்ந்து செய்யும்போது, சிறுநீரகத் தொற்று ஏற்பட்டு, சிறுநீரகச் செயலிழப்பு வரை பிரச்னைகள் வரிசை கட்டும். எனவே, சிறுநீர் வந்தால் உடனடியாகக் கழிக்க வேண்டியது அவசியம்.

    எவ்வளவு தண்ணீர் குடிக்க வேண்டும்?!

    கோடை காலத்தில் ஒரு நாளைக்கு 3 லிட்டர் தண்ணீரும், மற்ற பருவநிலைக் காலங்களில் 2 லிட்டர் தண்ணீரும் போதுமானது. குடிநீரைத் தவிர, பால், பழச்சாறு, காய்கறி போன்றவற்றில் இருந்தும் உடலுக்குத் தேவையான நீர் கிடைத்துவிடும். அதேசமயம், தேவைக்கு அதிகமாகத் தண்ணீர் குடிப்பதும் பிரச்னையே! ஏ.சி. அறையில் இருப்பவர்கள், ஏ.சி. வாகனங்களில் தொடர்ந்து பயணிப்பவர்களுக்கு தாகம் எடுக்காமல் இருக்கலாம். என்றாலும், ஒரு நாளைக்கு குறைந்தது ஒன்று முதல் 2 லிட்டர் வரை தண்ணீர் குடிக்க வேண்டும்.

    தாகம் எடுப்பதன் காரணமாக இந்த அளவை விட கூடுதலாகத் தண்ணீர் குடிப்பதில் தவறில்லை. ஆனால், தண்ணீர் குடிப்பது நல்லது என்று பிறர் சொல்வதற்காக இஷ்டம்போல குடிப்பது நல்லதல்ல. இப்படிக் குடிப்பது, சிறுநீரகத்துக்கு கூடுதல் பளு தருவதாகத்தான் அமையும். கூடவே, இதயம் பழுதானவர்கள் மருத்துவர் பரிந்துரைத்ததற்கும் அதிகமாகக் கண்டிப்பாக தண்ணீர் குடிக்கக் கூடாது. இதன் காரணமாக இதயமானது ரத்தத்தை சரிவர 'பம்ப்’ செய்ய முடியாமல் போகும். அதேபோல, சிறுநீரகம் பாதிக்கப்பட்டவர்களும், கல்லீரல் நோயாளிகளும் அதிகமாகத் தண்ணீர் குடிக்கக் கூடாது. சிறுநீரகத்தில் கல் உள்ளவர்கள் அதிகமாகத் தண்ணீர் குடிக்கும்போது அது கற்களைக் கரைத்து வெளியேற்றும் என்பதால், அவர்களை மட்டும் மருத்துவர்கள் அதிக நீர் அருந்தச் சொல்வோம்.

    சிறுநீர்த் தொற்று ஏற்பட காரணங்கள்!

    தேவையான அளவு தண்ணீர் குடிக்காமல் இருப்பது, சிறுநீரை அடக்குவது, சுகாதாரமற்ற கழிப்பறையைப் பயன்படுத்துவது, மரபு, சுய சுத்தமின்மை, தாம்பத்யம்... என்று பல காரணங்களால் சிறுநீர்த் தொற்று ஏற்படக்கூடும். சாதாரணமாக 'யூரினரி இன்ஃபெக்*ஷன்’ என்று இதைச் சொல்லி, எளிதாகக் கடப்பதுதான் வழக்கமாக இருக்கிறது. இதைக் கவனிக்காமல் விட்டால் அடுத்தடுத்து வரிசை கட்டும் பிரச்னைகளின் பட்டியல் நீளம். நீர்க்கடுப்பாக ஆரம்பித்து, அடிக்கடி சிறுநீர் வெளியேற்றும் உணர்வு, சொட்டு சொட்டாக சிறுநீர் வெளியேறுவது, சிறுநீர் வெளியேறும்போது தாங்க முடியாத வலி மற்றும் எரிச்சல், முதுகு வலி, சிறுநீரகத்தில் நோய்த் தொற்று ஏற்படுத்தும் கிருமிகள் உற்பத்தியாவது வரை கலங்கவைக்கும்.
    கர்ப்பிணிப் பெண்கள், நீரிழிவு நோயாளிகள், முதியவர்களுக்கு சிறுநீர்த் தொற்று ஏற்பட்டால் அது சீரியஸ் பிரச்னை என்பதை உணர வேண்டும். கர்ப்பகாலத்தில் தாய் சிறுநீரகப் பிரச்னையால் பாதிக்கப்பட்டால், குழந்தைக்கும் அந்த பாதிப்பு ஏற்படலாம்...
    ஜாக்கிரதை! சிறுவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி இருக்கும் என்பதால், சிறுநீர்த் தொற்று ஏற்பட்டாலும் பெரியளவில் பாதிப்பை ஏற்படுத்துவதில்லை. ஆனால், 5 - 15 வயது வரை மீண்டும் மீண்டும் சிறுநீர்த் தொற்றால் பாதிக்கப்பட்டால், மருத்துவ ஆலோசனை நிச்சயம் பெற வேண்டும். குறிப்பாக, ஆண் குழந்தைகள். நீரிழிவு நோயாளிகள், சிறுநீரக மாற்று அறுவைசிகிச்சை மேற்கொண்டவர்களுக்கு இந்தப் பிரச்னை தீவிரமாக இருக்கும்.
    யூரிக் ஆசிட் உள்ள உணவுப் பொருட்களான இறைச்சி, பீர், வொயின் போன்றவற்றை அதிகளவில் எடுத்துக்கொள்ளும்போது, சிறுநீர்ப் பிரச்னைக்கான வாய்ப்பை அது அதிகரிக்கும்.

    சிறுநீர்த் தொற்றைத் தவிர்க்க!

    சிறுநீர் வெளியேற்றுவதற்கான உணர்வு ஏற்பட்ட பின்னும் சிறுநீரை அடக்கக் கூடாது.
    நன்றாகக் கை கழுவுவது மிகமிக முக்கியம். குழந்தைகளுக்கு நகம் வெட்டக் கற்றுக்கொடுக்க வேண்டும். மாதவிடாய் காலங்களில் நாளொன்றுக்கு இரண்டு எனும் வகையில் நாப்கினை சுகாதாரமாக பயன்படுத்த வேண்டும். தாம்பத்யத்துக்குப் பிறகு, பிறப்புறுப்பை நன்கு சுத்தம் செய்ய வேண்டும். சிறுநீர் கழிப்பதில் பிரச்னை எனில், உடனே மருத்துவரை அணுக வேண்டும்.
    தேவையான சிகிச்சையுடன் சிறுநீர் பெருக்கி உணவு வகைகளான சுரைக்காய், முள்ளங்கி, வாழைத்தண்டு, வெள்ளரி, தர்பூசணி இவற்றை எல்லாம் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். குறிப்பாக, கிரேன்பெரி ஜூஸ் (cranberry juice) நல்ல பலன் தரும். உலகம் முழுக்கவே 150 வருடங்களுக்கு முன் சிறுநீரகப் பிரச்னைகளுக்கு இதுவே மருந்தாகப் பயன்பட்டிருக்கிறது''என்று விளக்கங்களைத் தந்த டாக்டர், ''சிறுநீரகங்கள்தான் நம் உடலின் துப்புரவுத் தொழிற்சாலை. நம் கழிவறையில் பிரச்னை என்றாலோ, பழுதானாலோ, வீடே என்ன கதிக்கு ஆளாகிறது? நம் உடலின் கழிவறையில் பிரச்னை என்றால், உடல் என்னவாகும் யோசித்துப் பாருங்கள்!'' என்று கேட்டார்.

    தினமும் எவ்வளவு தண்ணீர்?
    கோடை காலத்தில் 3 லிட்டர்.
    மற்ற பருவ காலங்களில் 2 லிட்டர்.
    ஏ.சி. அறை, ஏ.சி. வாகனங்களில் இருப்பவர்கள் 1 2 லிட்டர்
    (தாகம் எடுக்காவிட்டாலும்)

    எவ்வளவு சிறுநீர்?
    ஆரோக்கியமான மனிதன் 4 6 மணி நேரத்துக்கு ஒருமுறை சிறுநீர் கழிக்க வேண்டும். ஒன்றிரண்டு மணி நேரத்துக்கு ஒருமுறை கழித்தால், அது ஃப்ரீக்வன்ஸி என்கிற வகையில் வரும். (அதேசமயம் அதிக குளிர், மழைக்காலங்கள் மற்றும் ஏ.சி. அறை, ஏ.சி. வாகனங்கள் பயன்படுத்தும்போது ஒன்றிரண்டு மணி நேரத்துக்கு ஒரு தடவை வருவதில் தவறில்லை). சிறுநீரக டி.பி, குடி, சிகரெட், முதுமை, சிறுநீர்த் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்த ஃப்ரீக்வன்ஸி ஏற்பட அதிக வாய்ப்புள்ளது.
    சிலர் ஏழெட்டு மணிநேரம் கூடத் தண்ணீரே குடிக்காமல் இருப்பார்கள். இதனால், வெளியேற வேண்டிய கழிவு தேங்கி யூரினரி இன்ஃபெக்*ஷன், எரிச்சல் ஏற்படும். அதேபோல, ஒரு நாளில் ஒன்றரை முதல் இரண்டு லிட்டர் சிறுநீர் வெளியேறுவதுதான் இயற்கை. மூன்று லிட்டருக்கும் மேல் சிறுநீர் வெளியேறினால், அது பாலியூரியா (polyuria). அதாவது, அளவுக்கு அதிகமாக சிறுநீர் வெளியேறும் நோய். பிறந்த குழந்தைக்கு ஒரு நாளில் இருநூறு மில்லி சிறுநீர் வெளியேறினாலே போதுமானது.


    - சிந்தனை களம்



    அன்புடன் கௌரி.


    "உன்னால் சாதிக்க இயலாத காரியம் என்று எதுவும் இருப்பதாக ஒருபோதும் நினைக்காதே!" - விவேகானந்தர்


    எனது கவிதை மொட்டுகள்




  10. #490
    gowrymohan's Avatar
    gowrymohan is offline Registered User
    Blogger
    Ruler's of Penmai
    Real Name
    Gowry Shanmuganathan
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    Sri Lanka
    Posts
    13,654
    Blog Entries
    380

    Re: Medical Notes - மருத்துவ குறிப்புகள்

    நீரிழிவு நோயை தடுக்கும் நிலக்கடலை

    நிலக்கடலையில் போலிக் ஆசிட் அதிகம் இருப்பதால் இனப்பெருக்கம் விரைவாக நடக்கிறது. எனவே நிலக்கடலையை தொடர்ந்து சாப்பிடும் பெண்களின் கர்ப்பபை சீராக இருப்பதுடன் கர்ப்பபை கட்டிகள், நீர்க்கட்டிகள் ஏற்படாது.


    நிலக்கடலையில் மங்கனீசு சத்து, மாவுச்சத்து கொழுப்புகள் மாற்றத்தில் முக்கிய பங்காற்றி நீரிழிவு நோயை கட்டுப்படுத்துகிறது. நாம் உண்ணும் உணவில் இருந்து கால்சியம் நமது உடலுக்கு கிடைக்கவும் பயன்படுகிறது. குறிப்பாக பெண்கள் நிலக்கடலையை தொடர்ந்து சாப்பிட்டால் எலும்புத்துளை நோய் வராமல் பாதுகாத்துக் கொள்ளலாம். நிலக்கடலையில் உள்ள தாமிரம் மற்றும் துத்தநாக சத்தானது உடலின் தீமை செய்யும் கொழுப்பை குறைத்து நன்மை செய்யும் கொழுப்பை அதிகமாக்குகிறது.

    பித்தப்பை கல்லைக் கரைக்கும்:
    நிலக்கடலையை தினமும் 30 கிராம் அளவுக்கு தினமும் சாப்பிட்டு வந்தால் பித்தப்பை கல் உருவாவதைத் தடுக்க முடியும் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

    இதயம் காக்கும்:
    நிலக்கடலையை சாப்பிட்டால் உடல் எடை அதிகரிக்கும் என்ற கருத்து நிலவி வருகிறது. ஆனால், நிலக்கடலையை சாப்பிட்டால் உடல் எடை அதிகரிக்காமல் இருக்கும். நிலக்கடலையில் ரெஸ்வ ரெட்ரால் என்ற சத்து நிறைந்துள்ளது. இது இதய வால்வுகளை பாதுகாக்கிறது. இதய நோயையும் தடுக்கிறது. இதுவே மிகச்சிறந்த ஆண்டி ஆக்சிடென்டாக திகழ்கிறது.

    இளமையை பாராமரிக்கும்:
    இது இளமையை பராமரிக்க பெரிதும் உதவுகிறது. நிலக்கடலையில் பாலிப்பினால்ஸ் என்ற ஆண்டி ஆக்சிடென்ட் உள்ளது. இது நமக்கு நோய்வருவதை தடுத்து இளமையை பராமரிக்கிறது.

    ஞாபகசக்தி அதிகரிக்கும்:
    நிலக்கடலை மூளை வளர்ச்சிக்கு நல்ல டானிக் போன்றது. இதில் மூளையின் வளர்ச்சிக்கு பயன்படும் விட்டமின் 3 நியாசின் உள்ளது. இது மூளை வளர்ச்சிக்கும் ஞாபக சக்திக்கும் பெரிதும் பயன்படுகிறது. ரத்த ஓட்டத்தை சீராக்குகிறது.

    மன அழுத்தம் போக்கும்:
    நிலக்கடலையில் பரிப்டோபன் என்ற முக்கிய அமினோ அமிலம் நிறைந்துள்ளது. இந்த வகை அமினோ அமிலம் செரட் டோனின் என்ற மூளையை உற்சாகப்படுத்தும் உயிர் வேதிப்பொருள் உற்பத்திக்கு பயன்படுகிறது. செரட்டோனின் மூளை நரம்புகளை தூண்டி, மன அழுத்தத்தை போக்குகிறது.


    - தினகரன்

    Last edited by gowrymohan; 16th Feb 2015 at 01:49 PM.

    அன்புடன் கௌரி.


    "உன்னால் சாதிக்க இயலாத காரியம் என்று எதுவும் இருப்பதாக ஒருபோதும் நினைக்காதே!" - விவேகானந்தர்


    எனது கவிதை மொட்டுகள்




loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter