Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree1102Likes

Medical Notes - மருத்துவ குறிப்புகள்


Discussions on "Medical Notes - மருத்துவ குறிப்புகள்" in "General Health Problems" forum.


  1. #491
    gowrymohan's Avatar
    gowrymohan is offline Registered User
    Blogger
    Ruler's of Penmai
    Real Name
    Gowry Shanmuganathan
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    Sri Lanka
    Posts
    13,944
    Blog Entries
    380

    Re: Medical Notes - மருத்துவ குறிப்புகள்

    குழந்தைகளுக்கு காது குத்தும் போது கவனிக்க வேண்டியவை

    * காது குத்தும் இடம் சுத்தமானதாக இருக்கிறதா என்று நாம் உறுதி செய்ய வேண்டும். ஏனென்றால் குழந்தைகளின் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாகவே காணப்படும்.

    * குழந்தைகள் அவர்கள் அணிந்திருக்கும் கம்மல் தோடுகளை இழுப்பதற்கு வாய்ப்புகள் உள்ளன. அது அவர்களுக்கு மிகுந்த வலியினை கொடுக்கும்.

    * காது குத்திய முதல் நான்கிலிருந்து ஐந்து மாதத்திற்கு குழந்தைகள் அவர்கள் அணிந்திருக்கும் கம்மல், தோடுகளை தொடர்ச்சியாக அணிய வேண்டும்.

    * காது குத்தும் கருவி சுத்தமானதாக இல்லை என்றால் காது குத்தப்பட்ட இடத்தில் கிருமிகள் தாக்க அதிக வாய்ப்புள்ளது.

    * அவர்கள் அணியக்கூடிய காதணிகள் தரமானதாக இல்லை என்றாலும் இது போன்று கிருமிகள் தாக்க வாய்ப்புள்ளது.

    * காது குத்தும் இடத்தை தரமான ஆண்டிசெப்டிக்கை பயன் படுத்தி கழுவவும்.

    * சில நேரங்களில், காது குத்திய இடத்தில் சிறிய தழும்புகள் வர வாய்ப்புகள் உள்ளது. இது சில நாட்களில் தானாகவே நீங்கிவிடும். பெரும்பாலும் காது குத்தும் இடங்களில் கட்டி இருந்தால் இந்த பிரச்சனைகள் வருவதற்கு வாய்ப்புகள் மிக அதிகம். அதனால் காது குத்தும் போது கட்டி இருந்தால் அந்த இடத்தை தவிர்ப்பது நல்லது.

    * உங்கள் குழந்தைக்கு இரும்பு போன்றவற்றினால் அலர்ஜி ஏற்படுமானால் அந்த அலர்ஜி, இது போன்ற காதணிகள் அணிவதால் உங்கள் குழந்தையை பாதிக்கலாம்.

    * குழந்தைகளின் காதணிகளை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளாதீர்கள்.

    * குழந்தை மருத்துவமனைகளில் இதனை செய்வது நல்லது.

    * காது குத்துவது சரியாக செய்யப்படவில்லை என்றால் அது குழந்தைகளுக்குஅதிகமான வலியை ஏற்படுத்தும்.


    - இணையதளத்திலிருந்து


    Sponsored Links
    Aarushi likes this.

    அன்புடன் கௌரி.


    "உன்னால் சாதிக்க இயலாத காரியம் என்று எதுவும் இருப்பதாக ஒருபோதும் நினைக்காதே!" - விவேகானந்தர்


    எனது கவிதை மொட்டுகள்




  2. #492
    gowrymohan's Avatar
    gowrymohan is offline Registered User
    Blogger
    Ruler's of Penmai
    Real Name
    Gowry Shanmuganathan
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    Sri Lanka
    Posts
    13,944
    Blog Entries
    380

    Re: Medical Notes - மருத்துவ குறிப்புகள்

    * சாதம் வடித்த கஞ்சியை எடுத்து ஆறவைத்து ஒரு ஸ்பூன் நெய்யில் கொஞ்சம் சீரகம் கலந்து குடித்தால் இடுப்புவலி நீங்கும்.

    * அரிசியுடன் வெந்தயத்தைச் சேர்த்து கஞ்சியாக்கி காய்ச்சி உண்டு வந்தால் தாய்ப்பால் சுரக்கும்.

    * விரலி மஞ்சளை சுட்டு பொடி செய்து தேங்காய் எண்ணெயில் குழப்பி காலையிலும் இரவிலும் ஆறாத புண்களுக்கு மேல் போட்டால் சீக்கிரம் குணமாகிவிடும்.

    * கறிவேப்பிலையை அம்மியில் வைத்து அதனுடன் தேக்கரண்டியளவு சீரகத்தையும் வைத்து, மை போல அரைத்து வாயில் போட்டு தண்ணீர் குடித்துவிட்டால் வயிற்றுப் போக்கு நிற்கும்.

    * சாம்பிராணி, மஞ்சள், சீனி போட்டு கஷாயமாக்கி பாலும் வெல்லமும் சேர்த்து பருகினால் உடம்புவலி தீரும்.

    * நெருப்பு சுடுநீர் பட்ட இடத்தில் பெருங்காயத்தை அரைத்துப் பூசினால் எரிச்சல் குறையும் கொப்பளமும் ஏற்படாது.

    * வெண்டைக்காயை உணவில் அடிக்கடி சேர்த்து வந்தால் நரம்புகள் வலிமை பெறும். மூளையின் இயக்கத்தைச் செம்மைப்படுத்துவதுடன் நல்ல ஞாபக சக்தியையும் உண்டாகும்.

    * பசுவின் பால் நூறு மில்லி தண்ணீரில் அதே அளவு விட்டு இதில் வெண்தாமரை மலர்களைப் போட்டுக் காய்ச்சி பாத்திரத்தை இறக்கி வைத்து அதில் வரும் ஆவியைக் கண்வலி போன்ற நோய்கள் வந்த கண்ணில் படும்படி பிடித்தால், கண் நோய்கள் அகலும்.

    * புடலங்காயின் இலைச்சாறு, காலையில் குழந்தைகளுக்குத் தருவதால் கக்குவான், இருமல் குணமாகும். மலச்சிக்கல் நீங்கும். புடலங்காய் சமைத்து உண்பதால் தேவையில்லாத உடல் பருமன் குறையலாம்.

    * பீட்ருட் கிழங்கின் சாற்றுடன் சிறிது தேனும் கலந்து அருந்தி வந்தால் வயிற்றுப்புண் குணமாகும்.

    * கேரட் சாறும் சிறிது தேனும் கலந்து பருகி வர கர்ப்பினி பெண்கள் வாந்தி நிற்கும் உடல் வலுவாகும். பித்த நோய்கள் தீரும்.

    * சுக்கு, மிளகு, திப்பிலி, தாமரை இதழ், வெல்லம் சேர்த்து தண்ணீரில் விட்டுக் கொதிக்க வைத்து வடிகட்டி இரவில் ஒரு டம்ளர் சாப்பிடுவதால் மாரடைப்பைத் தடுக்கலாம்.

    * முட்டைக் கோசுடன் பசுவின் வெண்ணெய் கலந்து பாகம் செய்து சாப்பிட்டால் உடல் தளர்ச்சி விலகும்.
    இருமல், தொண்டை கரகரப்பு
    பாலில் பூண்டைப் போட்டு காய்ச்சிக் குடித்தால் இருமல், ஜலதோஷம், தொண்டைக் கரகரப்பு போகும்.

    சளி
    பூண்டை தோல் உரித்து நசுக்கி, தக்காளி, உப்பு, தண்ணீர் சேர்த்து கொதிக்க வைத்து சூப் செய்து குடித்தால் சளி சீக்கிரம் குணமாகும்.

    டான்சில்
    வெள்ளைப் பூண்டு, இஞ்சி சாறு இரண்டையும் சேர்த்து அரைத்து இதனுடன் தேன் கலந்து காலை மாலை உணவுக்கு முன் சாப்பிட்டால் டான்சில் கரையும்.

    Aarushi likes this.

    அன்புடன் கௌரி.


    "உன்னால் சாதிக்க இயலாத காரியம் என்று எதுவும் இருப்பதாக ஒருபோதும் நினைக்காதே!" - விவேகானந்தர்


    எனது கவிதை மொட்டுகள்




  3. #493
    gowrymohan's Avatar
    gowrymohan is offline Registered User
    Blogger
    Ruler's of Penmai
    Real Name
    Gowry Shanmuganathan
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    Sri Lanka
    Posts
    13,944
    Blog Entries
    380

    Re: Medical Notes - மருத்துவ குறிப்புகள்

    ஆரோக்கிய வாழ்வு தரும் ஆறு சுவைகள்

    நாம் உண்ணும் உணவுகள் ஆறு சுவைகளாக பிரிக்கப்படுகின்றன.இனிப்பு, புளிப்பு, உவர்ப்பு, கசப்பு, கார்ப்பு மற்றும் துவர்ப்பு ஆகிய ஆறு சுவைகள் உடல் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கின்றன.


    துவர்ப்புச் சுவை (Astringent)
    உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் உகந்த சுவை. அதிக வியர்வையைக் கட்டுப்படுத்துகின்றது. இரத்தப்போக்கினைக் குறைக்க வல்லது. வயிற்றுப்போக்கினை சரி செய்யவல்லது.
    இதனை அதிகமாக எடுத்துக்கொண்டால் இளமையில் முதுமை தோற்றத்தை உண்டுவிக்கும். வாய் உலர்ந்து போகச் செய்யும், சரளமாக பேசுவதைப் பாதிக்கும். வாத நோய்கள் தோன்ற வழிவகுக்கும்.
    வாழைக்காய், மாதுளை, மாவடு, மஞ்சள், அவரை, அத்திக்காய் போன்ற காய் வகைகளில் அடங்கியுள்ளது.


    இனிப்புச் சுவை (Sweet)
    மனிதர்களால் அதிகம் விரும்பப்படும் சுவை இதுதான். மனதிற்கு மட்டுமல்லாமல் உடலுக்கும் உடனடி உற்சாகத்தைத் தரக்கூடியது. குழந்தைகளின் வளர்ச்சிக்கு மிகவும் உதவுகின்றது.
    இதனை அதிகமாக எடுத்துக்கொண்டால் உடல் தளர்வு, சோர்வு, அதிகத் தூக்கம், இருமல், உடல் எடைக் கூடுதல் போன்ற சிக்கல்கள் பலவும் தோன்ற வாய்ப்பு உள்ளது.
    பழவகைகள், உருளை, காரட் போன்ற கிழங்கு வகைகள், அரிசி, கோதுமை போன்ற தானியங்கள் மற்றும் கரும்பு போன்ற தண்டு வகைத் தாவரங்களிலும் இனிப்புச் சுவை அதிக அளவில் அடங்கியுள்ளது.


    புளிப்புச் சுவை (Sour)
    உணவிற்கு மேலும் ருசி சேர்க்கும் ஒரு சுவையிது. பசியுணர்வைத் தூண்டும். உணர்வு நரம்புகளை வலுப்பெறச் செய்கின்றது. இதயத்திற்கும், செரிமானத்திற்கும் மிகவும் நல்லது.
    இதனை அதிகமாக எடுத்துக்கொண்டால், தாக உணர்வினை அதிகரிக்கும். பற்களைப் பாதிக்கும். நெஞ்செரிச்சல், இரத்தக் கொதிப்பு, அரிப்பு போன்ற தொந்திரவுகளை உண்டுவிக்கும். உடல் தளரச் செய்யும்.
    எலுமிச்சை, புளிச்ச கீரை, இட்லி, தோசை, அரிசி, தக்காளி, புளி, மாங்காய், தயிர், மோர், நார்த்தங்காய் போன்றவற்றில் அதிகம் உள்ளது.


    காரச் சுவை (Pungent)
    பசியுணர்வைத் தோற்றுவிப்பதோடு அல்லாமல், செரிமானத்திற்கும் பெரிதும் உதவுகின்றது. உடல் இளைக்கவும், உடலில் உள்ள அதிக்கப்படியான நீரை வெளியேற்றவும் செய்கின்றது.
    இரத்தச் சுத்திகரிப்புச் செய்கின்றது. தோல் நோய்களுக்கு நல்லதொரு பலனைத் தருகின்றது.
    அதிகப்படியான காரம், உடல் எரிச்சலை உண்டுவிக்கும். உடல் சூட்டை அதிகரித்து, வியர்வையை அதிகம் சுரக்கச் செய்யும். குடல் புண்கள் தோன்ற அதிக வாய்ப்பு அளிக்கும்.
    வெங்காயம், மிளகாய், இஞ்சி, பூண்டு, மிளகு, கடுகு போன்றவற்றில் அதிகப்படியான காரச்சுவை அடங்கியுள்ளது.


    கசப்புச் சுவை (Bitter)
    அதிகம் வெறுக்கப்படும் சுவையாக இருந்தாலும், அதிகம் நன்மைப் பயக்கும் . சிறந்த நோய் எதிர்ப்புச் சக்தியாக செயல்படுகின்றது.
    தாக உணர்வைக் கட்டுப்படுத்துகின்றது. உடல் எரிச்சல், அரிப்புகளில் இருந்து நிவாரணம் தருகின்றது. காய்ச்சலைத் தணிக்கின்றது. இரத்தச் சுத்திகரிப்புச் செய்கின்றது.
    இதனை அதிகமாக எடுத்துக்கொண்டால், உடலின் நீர் குறைந்துப் போகச் செய்யும். மேனி வறண்டு கடினத்தன்மைத் தோன்ற நேரிடும். எலும்புகளைப் பாதிக்கும். அடிக்கடி மயக்கம் உண்டாகும், உச்சகட்டமாய் சுயநினைவற்ற நிலைக்கும் செல்ல வழிவகுக்கும்.
    பாகற்காய், சுண்டக்காய், கத்தரிக்காய், வெந்தயம், பூண்டு, எள், வேப்பம்பூ, ஓமம் போன்றவற்றில் இந்த சுவை மிகுதியாய் உள்ளது.


    உவர்ப்புச் சுவை (Salty)
    இது உமிழ்நீரைச் சுரக்கச் செய்கின்றது. மற்றச் சுவைகளைச் சமன்செய்ய உதவுகின்றது, உணவுச் செரிமானத்திலும் பங்கு வகிக்கின்றது.
    இது அதிகமாயின் தோல் தளர்வினை உண்டுவித்து, சுருங்கிப் போகச் செய்யும். தோல் வியாதிகளையும் தோன்றச் செய்கின்றது.
    உடல் சூட்டினை அதிகப்படுத்தி சிறுக் கட்டிகள், பருக்கள் தோன்ற வழிவகுக்கும்.
    கீரைத்தண்டு, வாழைத்தண்டு, முள்ளங்கி, பூசணிக்காய், சுரைக்காய், பீர்க்கங்காய் போன்றவற்றில் அதிகமாய் இருக்கின்றது.


    - Lankasri Technology


    அன்புடன் கௌரி.


    "உன்னால் சாதிக்க இயலாத காரியம் என்று எதுவும் இருப்பதாக ஒருபோதும் நினைக்காதே!" - விவேகானந்தர்


    எனது கவிதை மொட்டுகள்




  4. #494
    gowrymohan's Avatar
    gowrymohan is offline Registered User
    Blogger
    Ruler's of Penmai
    Real Name
    Gowry Shanmuganathan
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    Sri Lanka
    Posts
    13,944
    Blog Entries
    380

    Re: Medical Notes - மருத்துவ குறிப்புகள்

    நாம் எந்த கீரை சாப்பிட்டால் என்ன பலன் கிடைக்கும்

    கொத்தமல்லி கீரை- மூளை, மூக்கு சம்பந்தமான சகல வியாதிகளும் குணமாகும். பசியைத் தூண்டும்.

    அரைக்கீரை- நரம்பு தளர்ச்சியை போக்கும். தாய்ப்பால் பெருகும்.

    வல்லாரை - நினைவாற்றலை அதிகமாகும். யானைக்கால் நோய் குணமாகும்.

    அகத்திக்கீரை- மலச்சிக்கலைப் போக்கும்.

    முளைக்கீரை - பல் சம்பந்தமான வியாதிகளை குணமாக்கும்.

    பொன்னாங்கன்னி - இரத்தம் விருத்தியாகும்.

    தர்ப்பைப் புல் - இரத்தம் சுத்தமாகும். கஷாயம் வைத்து பருகவும்.

    தூதுவளை - மூச்சு வாங்குதல் குணமாகும்.

    முருங்கை கீரை - பொரியல் செய்து நெய்விட்டு 48 நாட்கள் சாப்பிட தாது விருத்தியாகும்.

    சிறுகீர - நீர்கோவை குணமாகும்.

    வெந்தியக்கீரை - இருமல் குணமாகும்

    புதினா கீரை - மசக்கை மயக்கம், வாந்தி குணமாகும்.


    - இணையதளத்திலிருந்து

    meenasenthilkumar likes this.

    அன்புடன் கௌரி.


    "உன்னால் சாதிக்க இயலாத காரியம் என்று எதுவும் இருப்பதாக ஒருபோதும் நினைக்காதே!" - விவேகானந்தர்


    எனது கவிதை மொட்டுகள்




  5. #495
    gowrymohan's Avatar
    gowrymohan is offline Registered User
    Blogger
    Ruler's of Penmai
    Real Name
    Gowry Shanmuganathan
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    Sri Lanka
    Posts
    13,944
    Blog Entries
    380

    Re: Medical Notes - மருத்துவ குறிப்புகள்

    கர்ப்ப காலத்தில் கால் வீக்கம் அடைய காரணம் -

    கர்ப்பமாக இருக்கும்போது பெண்களின் எடை 10 முதல் 12 கிலோ வரை கூடலாம். ஆனால், சில பெண்களுக்கு 15 கிலோவுக்கும் அதிகமாக எடை கூடும். இவர்களுக்கு இரட்டைக் குழந்தையாக இருக்கலாம் அல்லது குழந்தையின் எடை அதிகமாக இருக்கலாம்.


    இவை இரண்டுமே இல்லை என்றால் உடலின் எந்தப் பகுதியிலோ நீர் கோத்திருக்கிறது என அர்த்தம். இதனால், கர்ப்பிணிகளின் கால் வீங்கிக் காணப்படும். பொதுவாகவே கர்ப்பிணிகளுக்கு கால் வீக்கம் இருப்பது இயல்புதான்.


    ஆனால், இந்த வீக்கம் கணுக்காலுக்குக் கீழே மட்டும் இருக்கும். அதுவும் நன்றாகத் தூங்கி எழுந்ததும் சரியாகிவிடும். அப்படி இல்லாமல் கணுக்காலைத் தாண்டியும் வீக்கம் இருந்தால் உப்பு அதிகமாக இருக்கிறது என்பதைப் புரிந்துகொள்ளலாம்.


    சிறுநீர்ப் பரிசோதனை மூலம் உப்பின் அளவைக் கண்டறிந்து, அதைக் குறைக்க முயற்சி செய்ய வேண்டும். இத்துடன் ரத்த அழுத்தம் அளவுக்கு அதிகமாகிவிடாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

    இல்லாவிடில் பேறுகாலத்தின்போது வலிப்பு நோய் ஏற்பட வாய்ப்பு உள்ளது. இதுபோன்ற பிரச்சனைகளை ஆரம்பத்திலேயே கண்டுபிடித்துக் குணப்படுத்த வேண்டியது அவசியம்.


    - இணையதளத்திலிருந்து


    அன்புடன் கௌரி.


    "உன்னால் சாதிக்க இயலாத காரியம் என்று எதுவும் இருப்பதாக ஒருபோதும் நினைக்காதே!" - விவேகானந்தர்


    எனது கவிதை மொட்டுகள்




  6. #496
    gowrymohan's Avatar
    gowrymohan is offline Registered User
    Blogger
    Ruler's of Penmai
    Real Name
    Gowry Shanmuganathan
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    Sri Lanka
    Posts
    13,944
    Blog Entries
    380

    Re: Medical Notes - மருத்துவ குறிப்புகள்

    மருத்துவ பயன்கள்
    பழங்கள், காய்கறிகள், மூலிகைகளின் மருத்துவக் குணங்கள்


    1) என்றும் 16 வயது மார்க்கண்டையனாக வாழ ஓர்
    ""நெல்லிக்கனி.""

    2) இதயத்தை வலுப்படுத்த
    ""செம்பருத்திப் பூ"".

    3) மூட்டு வலியை போக்கும்
    ""முடக்கத்தான் கீரை.""

    4) இருமல், மூக்கடைப்பு குணமாக்கும்
    ""கற்பூரவல்லி"" (ஓமவல்லி).

    5) நீரழிவு நோய் குணமாக்கும்
    ""அரைக்கீரை.""

    6) வாய்ப்புண், குடல்புண்களை குணமாக்கும்
    ""மணத்தக்காளிகீரை"".

    7) உடலை பொன்னிறமாக மாற்றும்
    ""பொன்னாங்கண்ணி கீரை.""

    8) மாரடைப்பு நீங்கும்
    ""மாதுளம் பழம்.""

    9) ரத்தத்தை சுத்தமாகும்
    ""அருகம்புல்.""

    10) கான்சர் நோயை குணமாக்கும்
    "" சீதா பழம்.""

    11) மூளை வலிமைக்கு ஓர்
    ""பப்பாளி பழம்.""

    12) நீரிழிவு நோயை குணமாக்கும்
    "" முள்ளங்கி.""

    13) வாயு தொல்லையிலிருந்து விடுபட
    ""வெந்தயக் கீரை.""

    14) நீரிழிவு நோயை குணமாக்க
    "" வில்வம்.""

    15) ரத்த அழுத்தத்தை குணமாக்கும்
    ""துளசி.""

    16) மார்பு சளி நீங்கும்
    ""சுண்டைக்காய்.""

    17) சளி, ஆஸ்துமாவுக்கு
    ""ஆடாதொடை.""

    18) ஞாபகசக்தியை கொடுக்கும்
    ""வல்லாரை கீரை.""

    19) ரத்த அழுத்தத்தை குணமாக்கும்
    ""பசலைக்கீரை.""

    20) ரத்த சோகையை நீக்கும்
    "" பீட்ரூட்.""

    21) ஜீரண சக்தியை அதிகப்படுத்தும்
    "" அன்னாசி பழம்.""

    22) முடி நரைக்காமல் இருக்க கல்யாண முருங்கை (முள் முருங்கை)

    23) கேரட் + மல்லிகீரை + தேங்காய் ஜூஸ் கண்பார்வை அதிகரிக்கும் கேட்ராக்ட் வராது.

    24) மார்புசளி, இருமலை குணமாக்கும்
    ""தூதுவளை""

    25) முகம் அழகுபெற
    ""திராட்சை பழம்.""

    26) அஜீரணத்தை போக்கும்
    "" புதினா.""

    27) மஞ்சள் காமாலை விரட்டும்
    “கீழாநெல்லி”

    28) சிறுநீரக கற்களை தூள்தூளாக ஆக்கும்
    “வாழைத்தண்டு”


    - இணையதளத்திலிருந்து


    அன்புடன் கௌரி.


    "உன்னால் சாதிக்க இயலாத காரியம் என்று எதுவும் இருப்பதாக ஒருபோதும் நினைக்காதே!" - விவேகானந்தர்


    எனது கவிதை மொட்டுகள்




  7. #497
    gowrymohan's Avatar
    gowrymohan is offline Registered User
    Blogger
    Ruler's of Penmai
    Real Name
    Gowry Shanmuganathan
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    Sri Lanka
    Posts
    13,944
    Blog Entries
    380

    Re: Medical Notes - மருத்துவ குறிப்புகள்

    பப்பாளியின் மருத்துவப் பண்புகள்

    * நல்ல மலமிளக்கி. மலச்சிக்கல் வயிற்றுக் கடுப்பு, செரிமானமின்மை, அமிலத்தொல்லை போன்ற பிரச்சனைகளுக்குஅருமருந்து.

    * பித்தத்தைப் போக்கும்.

    * உடலுக்குத் தென்பூட்டும்.

    * இதயத்திற்கு நல்லது.

    * மனநோய்களைக் குணமாக்குவதில் உதவும்.

    * கல்லீரலுக்கும் ஏற்றது.

    * கணைய வீக்கத்தைக் கட்டுப்படுத்தும்.

    * சிறுநீர்க் கோளாறுகளைத் தீர்க்கும்.

    * கல்லீரல் கோளாறுகளைத் தீர்க்கும்.

    * முறையான மாதவிலக்கு ஒழுங்குக்கு உதவும்.

    *இரத்தச்சோகைக்கு நிவாரணமளிக்கும்.

    * மண்ணீரல் வீக்க சிகிச்சையில் பப்பாளி பயன்படுகிறது.

    * பழுக்காத பச்சைப் பப்பாளித் துண்டுகள் அல்லது சாறை அருந்தினால், குடலிலுள்ள வட்டப்புழுக்கள்வெளியேறும்.

    * பப்பாளியிலுள்ள ‘பப்பாயின்’ என்சைம்களில் ‘ஆர்ஜினைன்’ என்பது ஆண்களுக்கான உயிர் உற்பத்தித் திறனை மேம்படுத்தவும்,‘கார்பின்’ இருதயத்திற்கும், ஃபைப்ரின் இரத்தம் உறைதலுக்கும் உதவுகின்றது.

    * பப்பாளியிலுள்ள விதவிதமான என்சைம்களின் சேர்க்கை, புற்றுநோயைக் குணப்படுத்த வல்லது.

    * இளமைப் பொலிவைக் கூட்டி வயோதிகத்தைக் கட்டுப்படுத்துவதாக பப்பாளிகளை சிறப்பித்துக் கூறுவர்.

    * உடலிலுள்ள நச்சு முழுக்க பப்பாளியால் சுத்திகரிக்கப்படுகிறது.

    * இயற்கை மருத்துவச் சிகிச்சையின் கீழ் ‘பட்டினிச் சிகிச்சை’ மேற்கொள்கையில் பப்பாளிச் சாறும், வெள்ளரிச் சாறும் மாற்றி மாற்றிக் குடித்தால் உடல் கழிவுகள் நீக்கத்தில் பெரும்பயன் விளையும்.

    * ‘ஆண்டிபயாடிக்’ மருந்துகளில் சிகிச்சை பெற்றபின் ஒருவர், பப்பாளி நிறையச் சாப்பிட வேண்டும். ஏனெனில் குடல் தசைகளில் அழிக்கப்பட்டிருக்கும் நல்ல பாக்டீரியாக்களைமீண்டும் உற்பத்தி செய்வதற்கு பப்பாளி உதவும்.

    * நன்றாகப் பழுத்த பப்பாளிப் பழத்தின் விதைகள், குடல் புழுக்களை வெளியேற்ற உதவும். கூடவே தாகம் போக்குவதில் நல்ல பயன் தரும்.
    பப்பாளி இலைகளின் பொடி யானைக்கால் வியாதிக்கும், நரம்பு வலிகளுக்கும் மருந்தாக விளங்குகிறது.

    வருடம் முழுவதும் கிடைக்கக்கூடிய பழம் இது. இதிலும் வைட்ட மின் ஏ உயிர் சத்து நிறைய இருக்கிறது. பல் சம்மந்தமான குறை பாட்டிற்கும், சிறு நீர்ப்பையில் உண்டாகும் கல்லை கரைக்கவும் பப்பாளி சாப்பிட்டால் போதும். மேலும்- நரம்புகள் பலப் படவும், ஆண்மை தன்மை பலப்படவும், ரத்த விருத்தி உண்டாகவும், ஞாபக சக்தியை உண்டு பண்ணவும் பப்பாளி சாப்பிடுங்கள்.

    மாதவிடாய் சரியான அளவில் இன்றி கஷ்டப்பட்டு கொண்டி ருக்கும் பெண்மணிகள் தினமும் பப்பாளிப்பழம் உண்டு வந்தால் மாதவிடாய் குறைபாடு சீராகும்.

    அடிக்கடி பப்பாளி பழத்தினை உண்டு வருபவர்கள் எவ்வகை நோய்க்கும் ஆளாக நேரிடாது. எந்த வகையான தொற்று நோய் பரவினாலும், அது இவர்களை தாக்காது. பப்பாளி பழத்தில் இயற்கையாகவே விஷக்கிருமிகளை கொல்லும் ஒரு வகை சத்து இருப்பதால் பப்பாளி பழத்தை சாப்பிடுபவர்களின் ரத்தத்தில் நோய் கிருமிகள் தங்கி நோயை உண்டு பண்ண வாய்ப்பில்லை.


    - இணையதளத்திலிருந்து


    அன்புடன் கௌரி.


    "உன்னால் சாதிக்க இயலாத காரியம் என்று எதுவும் இருப்பதாக ஒருபோதும் நினைக்காதே!" - விவேகானந்தர்


    எனது கவிதை மொட்டுகள்




  8. #498
    gowrymohan's Avatar
    gowrymohan is offline Registered User
    Blogger
    Ruler's of Penmai
    Real Name
    Gowry Shanmuganathan
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    Sri Lanka
    Posts
    13,944
    Blog Entries
    380

    Re: Medical Notes - மருத்துவ குறிப்புகள்

    குழந்தைகளை குறிவைக்கும் “நிமோனியா”

    நுரையீரல்களில் ஏற்படும் நிமோனியா என்னும் நோய், குழந்தைகளின் உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்திவிடும்.நுரையீரல்களின் காற்றுபைகளில் கிருமிகளின் தாக்குதலால் உண்டாவது தான் நிமோனியா.
    இந்த கிருமிகள் பாக்டீரியா அல்லது வைரஸ் வகைகளை சார்ந்தவைகளாக இருக்கலாம்.
    நமது நுரையீரல் வலது பக்கத்தில் மூன்று பகுதிகளாகவும், இடது பக்கம் இரண்டு பகுதிகளாகவும்(lobes) அமைந்துள்ளன.
    நிமோனியா, இவற்றில் ஒருபகுதியை மட்டும் அல்லது ஒரு நுரையீரலின் எல்லா பகுதியையும், அல்லது இரண்டு பக்கத்திலும் கூட தாக்கலாம்.
    இவ்வாறு நுரையீரலின் காற்றுப் பைகள் பாதிக்கப்பட்டால், அவை செயல் இழந்துபோய் மூச்சுத் திணறல் உண்டாகிறது.
    குறிப்பாக இந்த நோய் குறிவைத்து தாக்குவது குழந்தைகளையே, அடுத்ததாக முதியவர்களை தாக்குகிறது.
    ஏனெனில் அவர்களுக்கே நோய் எதிப்பு சக்தி குறைவு.


    நோய் அறிகுறிகள்

    * அதிக வெப்பமுள்ள காய்ச்சல்
    * குளிர், நடுக்கம்
    * மூச்சுத் திணறல்
    * விரைவாக சுவாசித்தல்
    * கடுமையான இருமல்
    * சளியில் நிறமாற்றம் அல்லது இரத்தம்
    * சுளீர் எனும் நெஞ்சுவலி
    * குழந்தைகள் சுறுசுறுப்பு குன்றிய நிலையில் உணவு உண்ணாமல் சுணங்கி காணப்படுவர்
    * குழந்தைகள் மூச்சு விடும் போது மெல்லியதாகவோ அல்லது இரைச்சலுடனோ ஒருவிதே ஓசை(grunting) எழுதல்.


    நோயை கண்டுபிடித்தல் (Diagnosis)

    நிமோனியா என்ற சந்தேகம் எழுந்தால் உடனே மருத்துவரின் உதவியை நாடவேண்டும். அதுபோன்றே சாதாரண சளிக்காய்ச்சல் 3 நாட்களைத் தாண்டினாலும் உடன் மருத்துவமனை செல்ல வேண்டும்.
    மருத்துவர் பரிசோதனை செய்யும் பொது ஸ்டேத்தஸ்கோப் மூலம் சுவாச ஓசையைக் கேட்டாலே நிமோனியாவா என்பதைக் கூறிவிடலாம்.
    ஆனால் கட்டாயமாக நெஞ்சை எக்ஸ்ரே படம் எடுத்தாக வேண்டும். அதோடு இரத்தப் பரிசோதனையும், சளி பரிசோதனையும் தேவைப்படும்.


    சிகிச்சைகள்

    1. நிமோனியோ காய்ச்சலை தணிக்க வெந்நீரை ஊற்றி வெதுவெதுப்பான நிலையில் குழந்தையின் நெஞ்சுப்பகுதியில் ஒத்தடம் கொடுக்கலாம்.
    2. இதனால் நுரையீரல் பகுதியில் சளி இருந்தால் அது வெளியேறும். மூச்சுவிடுவதில் உள்ள சிரமம் நீங்கும்.
    3. கடுகை அரைத்து நெஞ்சுப் பகுதியில் பற்றுப் போடலாம். ஒருசில குழந்தைகளுக்கு கடுகுப் பற்று அலர்ஜியை ஏற்படுத்தினால் அதை உடனே அகற்றிவிட வேண்டும்.
    4. குழந்தைகளுக்கு காய்ச்சல் அறிகுறி தென்பட்ட உடனேயே முதல் மூன்று நாட்கள் ஆரஞ்சு, ஆப்பிள், அன்னாசி, மாம்பழம், சாத்துக்குடி, தக்காளி, பப்பாளி - இவற்றுள் ஏதேனும் ஒன்றைத் தெரிவு செய்து சாறாக அருந்த கொடுக்க வேண்டும்.
    5. பெரியவர்களுக்கு நிமோனியா காய்ச்சல் வந்துவிட்டால் இஞ்சிச் சாறு எலுமிச்சை சாறு இவற்றில் ஒரு தேக்கரண்டி தேன் சேர்த்து அருந்தவும் அல்லது வெள்ளைப் பூண்டு, வெங்காயம் இவற்றைச் சாறாக்கி அருந்தவும். மூன்றாவதாக துளசிச் சாறு, ஆரஞ்சுச் சாறு, காரட் சாறு இந்த மூன்றையும் மாற்றி மாற்றி அருந்தவும்.
    6. நிமோனியா காய்ச்சலை கட்டுப்படுத்த எள்ளுருண்டை சாப்பிடலாம் அல்லது எள்விதைகளைக் கஷாயம் வைத்து இறக்கி, ஆறியதும் உப்பும் தேனும் சேர்த்து அருந்தலாம்.


    - இணையதளத்திலிருந்து


    அன்புடன் கௌரி.


    "உன்னால் சாதிக்க இயலாத காரியம் என்று எதுவும் இருப்பதாக ஒருபோதும் நினைக்காதே!" - விவேகானந்தர்


    எனது கவிதை மொட்டுகள்




  9. #499
    gowrymohan's Avatar
    gowrymohan is offline Registered User
    Blogger
    Ruler's of Penmai
    Real Name
    Gowry Shanmuganathan
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    Sri Lanka
    Posts
    13,944
    Blog Entries
    380

    Re: Medical Notes - மருத்துவ குறிப்புகள்

    எலுமிச்சை ஜூசில் மறைந்துள்ளது ஏராளமான
    நன்மைகள்


    *எலுமிச்சை ஜூஸ் சாப்பிட்டால் ரத்த அழுத்தம் குறையும்.

    *விட்டமின் சி இருப்பதால் சாதாரண சளி, ஜலதோஷத்தை கட்டுப்படுத்தும்.

    *சிறுநீரகத்தில் சேரும் நச்சுப் பொருட்களை வெளியேற்றும்

    *சிறுநீரகத்தில் கல் உருவாகும் பிரச்சினையை நீக்கும்
    வல்லமை எலுமிச்சை ஜூசுக்கு உள்ளது.

    *வாய் மற்றும் தொண்டையில் புண் இருந்தால் எலுமிச்சை சாறு எடுத்து தொண்டையில் படும்வரை வாய்க்குள்
    வைத்திருந்து கொப்பளிக்கலாம். இப்படி செய்தால் பாக்டீரியாக்களால் ஏற்படும் நொய் தொற்று குணமாகும்.

    *எலுமிச்சையை வைத்து தேய்க்கும்போது பாத்திரம் கூட பளபளக்கும். அதுபோலத்தான் அதன் ஜூசை குடிக்கும்போது ரத்தம் சுத்தீகரிப்பு அடையும்.

    *மது குடித்ததால் வரும் தலைவலி அல்லது மன அழுத்தத்தால் வரும் தலைவலி என எதுவாக இருந்தாலும்
    எலுமிச்சை சாறு அதை குணப்படுத்தும்.

    *காயம் பட்ட இடத்தில் எலுமிச்சை சாறை ஊற்றினால், நோய் தொற்று ஏற்படாது. அப்படி ஊற்றும்போது ஏற்படும்
    எரிச்சலை பொறுத்துக்கொள்ள வேண்டியது அவசியம்.


    - இணையதளத்திலிருந்து

    shrimathivenkat likes this.

    அன்புடன் கௌரி.


    "உன்னால் சாதிக்க இயலாத காரியம் என்று எதுவும் இருப்பதாக ஒருபோதும் நினைக்காதே!" - விவேகானந்தர்


    எனது கவிதை மொட்டுகள்




  10. #500
    gowrymohan's Avatar
    gowrymohan is offline Registered User
    Blogger
    Ruler's of Penmai
    Real Name
    Gowry Shanmuganathan
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    Sri Lanka
    Posts
    13,944
    Blog Entries
    380

    Re: Medical Notes - மருத்துவ குறிப்புகள்

    தண்ணீர் குடிப்பதால் உண்டாகும் நன்மைகள்

    உடலில் 80 சதவீதம் தண்ணீர் நிறைந்துள்ளது. எனவே தான் இவ்வுலகில் உணவு இல்லாவிட்டாலும் வாழ முடியும், ஆனால் தண்ணீரின்றி வாழ முடியாது. மேலும் தண்ணீர் உடலில் போதிய அளவில் இருந்தால், உடல் ஆரோக்கியமாகவும், புத்துணர்ச்சியுடனும் இருக்கும். பலர் தண்ணீரை அதிகம் குடிக்காமல் இருக்கின்றனர். இதற்காக அவர்களுக்கு தண்ணீர் குடிப்பதால் உண்டாகும் நன்மைகளைப் பற்றி நன்கு தெரியவில்லை என்று அர்த்தம் இல்லை. அதிகமான வேலைப் பளுவினால், தண்ணீர் குடிப்பதற்கு கூட நேரமில்லை என்று தான் சொல்ல வேணடும்

    .உண்மையில் தண்ணீர் குடிப்பதால், உடலில் ஏற்படும் பல பிரச்சனைகளை தடுக்கலாம். அதனால் தான் மருத்துவர்கள் கூட தண்ணீரை அதிகம் குடிக்க வேண்டும் என்று அறிவுறுத்துகின்றனர். மேலும் மனித உடலுக்கு ஒரு நாளைக்கு 8 டம்ளர் தண்ணீர் போதுமானதாக இருக்கலாம். ஆனால் அது நிச்சயம் போதாது. ஏனெனில் நாம் வெளியே வேலைக்கு செல்வது, பயணம் மேற்கொள்வது போன்றவற்றை செய்வதால், 8 டம்ளர் தண்ணீர் என்பது குறைவு தான். ஆகவே குறைந்தது 3 லிட்டர் தண்ணீராவது குடிக்க வேண்டும்.

    இவ்வாறு குடிப்பதால், உடலானது நன்கு செயல்படும். அதிலும் கோடைகாலம் என்றால், குறைந்தது 4-5 லிட்டர் தண்ணீராவது குடிக்க வேண்டும். இப்போது தண்ணீர் குடிப்பதால் ஏற்படும் நன்மைகளை பட்டியலிட்டுள்ளோம். அதை படித்து தெரிந்து கொண்டு, இனிமேல் தண்ணீர் குடிக்கும் பழக்கத்தை தவறாமல் தொடருங்கள்.


    எனர்ஜி கிடைக்கும்: உடலில் தண்ணீர் தான் அனைத்து பாகங்களுக்கு ஊட்டச்சத்துக்களை சுமந்து செல்வதோடு, கழிவுகளை வெளியேற்றும். எனவே தான் உடலுக்கு எனர்ஜி வேண்டுமெனில், தண்ணீர் அதிகம் குடிக்க வேண்டும்.


    கழிவுகளை வெளியேற்றும் அனைவரது உடலிலுமே ஒரு நாளைக்கு மில்லியன் கணக்கில் கழிவுகள் சேரும். ஏனெனில் மாசுக்கள், ஆரோக்கியமற்ற உணவுகளை சாப்பிடுவது போன்றவற்றால் உடலில் கழிவுகள் அதிகம் சேரும். எனவே இத்தகையவற்றை உடலில் இருந்து முறையாக வெளியேற்றுவதற்கு தண்ணீரை அதிகம் குடிக்க வேண்டும்.


    உடல் வெப்பத்தை சீராக வைக்கும் உடலின் வெப்பத்தை சீராக வைப்பதற்கு, தினமும் போதிய அளவில் தண்ணீரை குடிக்க வேண்டும். இல்லையெனில் உடலில் அதிகப்படியான வெப்பம் ஏற்பட்டு, ஆபத்தை விளைவிக்கும்.


    மெட்டபாலிசம் அதிகமாகும் உடலில் மெட்டபாலிசம் எனப்படும் வளர்ச்சிதை மாற்றத்தை அதிகரிப்பதற்கு தண்ணீர் மிகவும் இன்றியமையாதது


    தசைப்பிடிப்புகளை தடுக்கும் 80 சதவீத தசைகள் நீரால் சூழப்பட்டுள்ளது. எனவே போதிய தண்ணீர் உடலில் இல்லாவிட்டால், தசைகளில் பிடிப்புகள் அதிகரிக்கும். ஏனெனில் நீருக்கு பதிலாக கழிவுகள் தங்கி, பிடிப்புகளை ஏற்படுத்தும். எனவே அவற்றை வெளியேற்ற நீர் மிகவும் அவசியம் ஆகும்.


    முறையான குடலியக்கம் நிறைய பேர் மலச்சிக்கல் பிரச்சனையால் அவஸ்தைப்படுகின்றனர். ஆகவே மலச்சிக்கல் பிரச்சனை இருந்தால், அப்போது அதிகப்படியான தண்ணீர் குடித்தால், அவை சரியாகிவிடும். ஏனெனில் தண்ணீர் குடலியக்கத்தை சீராக வைக்கும்.

    பொலிவான சருமம் முகத்தில் முகப்பருக்கள், பிம்பிள் போன்றவை அதிகப்படியான அழுக்குகள் மற்றும் எண்ணெய் காரணமாகத் தான் ஏற்படுகிறது. எனவே இத்தகைய அழுக்குகளை வெளியேற்றுவதற்கும், பருக்கள் வராமல் இருக்கவும் தண்ணீர் அதிகம் குடிக்க வேண்டும்.

    அசிடிட்டியை குறைக்கும் பொதுவாக வயிறானது உணவுகளை செரிப்பதற்கு நொதியை சுரக்கும். அது மிகவும் சக்தி அமிலத்தன்மை நிறைந்தது. எனவே அதன் அமிலத்தன்மையை குறைப்பதற்கு, அடிக்கடி தண்ணீர் குடிக்க வேண்டும். இல்லாவிட்டால், அது வயிற்றை அரிக்க ஆரம்பித்துவிடும்.

    மூளை செயல்பாடுகள் மூளையில் 90 சதவீத தண்ணீர் உள்ளது. ஆனால் போதிய தண்ணீர் உடலில் இல்லாவிட்டால், தலைவலி, சோர்வு போன்றவை அதிகம் ஏற்படும். அதிலும் 24 மணிநேரத்திற்கு மேலாக உடல் வறட்சி இருந்தால், இது மிகவும் மோசமான நிலையை உண்டாக்கிவிடும்.

    மூட்டு உராய்வைத் தடுக்கும் உடலிலேயே மூட்டுகள் மிகவும் முக்கியமான ஒன்று. எப்படி இயந்திரங்களில் இணைப்புகள் உள்ளதோ, அதேப் போல் உடலின் ஒவ்வொரு பாகத்தையும் இணைப்பது மூட்டுகள் தான். இத்தகைய மூட்டுகளில் ஏற்படும் உராய்வைத் தடுப்பதற்கு தண்ணீர் அதிகம் குடிக்க வேண்டும். இல்லாவிட்டால், மூட்டு வலிகள் ஏற்பட ஆரம்பிக்கும்.

    ஊட்டச்சத்துக்களை கொடுப்பதற்கு உடலில் அனைத்து பாகங்களுக்கும் ஊட்டச்சத்துக்களை எடுத்து செல்வது தண்ணீர் மற்றும் இரத்த அணுக்கள் தான். ஆகவே தண்ணீர் குறைவாக இருந்தால், உடலின் பாகங்களுக்கும் ஊட்டச்சத்துக்கள் கிடைக்காமல் போகும்.


    எடை குறைப்பதற்கு தண்ணீர் வயிற்றை நிரப்புவதோடு, மெட்டபாலிசத்தின் அளவையும் அதிகரிப்பதால், அது உடல் எடையை குறைக்கவும் உதவியாக இருக்கும்.











    - இணையதளத்திலிருந்து


    அன்புடன் கௌரி.


    "உன்னால் சாதிக்க இயலாத காரியம் என்று எதுவும் இருப்பதாக ஒருபோதும் நினைக்காதே!" - விவேகானந்தர்


    எனது கவிதை மொட்டுகள்




loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter