Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine December! | All Issues

User Tag List

Like Tree1102Likes

Medical Notes - மருத்துவ குறிப்புகள்


Discussions on "Medical Notes - மருத்துவ குறிப்புகள்" in "General Health Problems" forum.


  1. #511
    gowrymohan's Avatar
    gowrymohan is offline Registered User
    Blogger
    Ruler's of Penmai
    Real Name
    Gowry Shanmuganathan
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    Sri Lanka
    Posts
    13,960
    Blog Entries
    380

    Re: Medical Notes - மருத்துவ குறிப்புகள்

    சாப்பிட்டு முடித்ததும் தண்ணீர் அருந்தலாமா?

    சாப்பிட்டு முடித்த பின்னர் தண்ணீர் குடிப்பதில் பல கருத்துகள் நிலவுகிறது. நாம் உண்ணும் உணவு செரிமானமாவதற்கு உடலில் உள்ள சுரப்பிகள் சில என்சைம்கள், அமிலங்களை சுரக்கின்றது. ஆதலால் உணவு உண்ட பின்னர் 15அல்லது 20 நிமிடங்களுக்கு பின்னரே தண்ணீர் அருந்த வேண்டும் என்று அறிவுறுத்துகின்றனர் மருத்துவர்கள்.

    வெது வெதுப்பான தண்ணீர்

    உணவு உண்டபின்னர் இளம் சூடான நீர் அருந்துவது இதயத்திற்கு நல்லது என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இளம்சூடான தண்ணீர் அருந்துவதால் புற்றுநோய் செல்கள் உருவாவதை தடுக்கின்றதாம். சீனர்களும், ஜப்பானியர்களும், தவறாமல் இதனை பின்பற்றுகின்றனர். அவர்கள் உணவு உண்டபின்னர் சூடாக கிரீன் டீ, அல்லது வெதுவெதுப்பான வெந்நீர் அருந்தும் பழக்கத்தை கொண்டுள்ளனர்.

    சூடான தண்ணீர் அருந்துவதால் உணவானது எளிதில் செரிமானமாவதோடு உடலுக்கு கெடுதல் ஏற்படுத்தும் கெட்டக் கொழுப்புக்களையும் தடுக்கிறது. எனவே சாப்பிட்டு முடித்ததும் இளம் சூடான சூப் அல்லது வெது வெதுப்பான தண்ணீர் குடிக்கலாம் என பரிந்துரைக்கின்றனர்.

    ஜீல் தண்ணீர் வேண்டாமே

    ஜீல்லென்று தண்ணீர் பருகுவது உடலுக்கு எதிர்மறையான செயல்பாடுகளை ஏற்படுத்தும். நம்மில் அதிகம் பேர் சாப்பிட்டு முடித்தவுடன் குளிர்பதனபெட்டியில் வைத்திருக்கும் தண்ணீரையே பருகுகின்றனர்.. இது இதயநோய், புற்றுநோய்க்கு வழிவகுக்கும். சாப்பிட்டு முடித்தவுடன் ஜீல் தண்ணீரை குடிப்பதால், நாம் எடுத்துக்கொண்ட உணவில் உள்ள எண்ணெய்த் துகள்களை கெட்டியாக்கி விடுவதால் சாப்பிட்ட உணவு செரிமானம் ஆவதில் பிரச்சனை ஏற்படுவது மட்டுமல்லாமல் நமது உடலில் உள்ள கொழுப்பின் அளவை அதிகரிக்கவும் செய்கிறது.

    ஜீல் தண்ணீர் பருகுவதை தொடர்ந்து செய்து வந்தால் இதயம், சிறுநீரகம் சம்பந்தப்பட்ட பல பிரச்சினைகள் வரலாம். இதய நோயாளிகள் சாப்பிடும்போது கண்டிப்பாக ஜீல் தண்ணீரை எடுக்ககூடாது. வெதுவெதுப்பான தண்ணீரை மட்டுமே எடுத்துக்கொள்ள வேண்டும். வெதுவெதுப்பான தண்ணீரே ஆரோக்கியத்திற்கு சிறந்தது.

    - இணையதளத்திலிருந்து


    Sponsored Links
    jv_66, sumitra, shansun70 and 1 others like this.

    அன்புடன் கௌரி.


    "உன்னால் சாதிக்க இயலாத காரியம் என்று எதுவும் இருப்பதாக ஒருபோதும் நினைக்காதே!" - விவேகானந்தர்


    எனது கவிதை மொட்டுகள்




  2. #512
    gowrymohan's Avatar
    gowrymohan is offline Registered User
    Blogger
    Ruler's of Penmai
    Real Name
    Gowry Shanmuganathan
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    Sri Lanka
    Posts
    13,960
    Blog Entries
    380

    Re: Medical Notes - மருத்துவ குறிப்புகள்

    பசிய இலை வகை உணவுகளின் போசாக்கு


    • இலைவகைகள் மிகக் குறைந்தளவு கலோரிப் பெறுமானம் உள்ள உணவுகளாகும். அவற்றிலுள்ள மாப்பொருள்களானது நார்ப்பொருள்களிடையே அடைபட்டு இருப்பதால் எளிதில் சமிபாடடைவதில்லை. இதனால் நீரிழிவு நோயாளர்களின் இரத்த குளுக்கோஸ் அளவு அதிகரிப்பதைக் குறைக்கினறன.



    • இரும்பு, கல்சியம், பொட்டாசியம், மக்னீசியம் போன்ற கனியங்கள் உண்டு.



    • விட்டமின் D வகைகளுடன், விட்டமின்கள் K, C, E ஆகியவை நிறையக் கிடைக்கின்றன. ஒரு கப் சமைத்த இலையுணவு ஒரு மனிதனுக்கு தினசரி தேவைப்படும் விட்டமின்கள் K யைவிட 9 மடங்கு அதிகமாகக் கொடுக்கும் எனத் தெரிகிறது.



    • பீட்டாகரோட்டின், லியுடின் (beta-carotene, lutein, and zeaxanthin) போன்ற பைட்டோநியுரியன்டசை (phytonutrients) இலைவகை உணவுகள் தருகின்றன. இவை எமது உடற்கலங்கள் சேதமாவதைத் தடுக்கின்றன. வயது அதிகரிப்பால் ஏற்படும் பார்வை இழப்பை (Age related macular degemeration) தடுப்பதிலும் இவை உதவுகின்றன.



    • கொலஸ்டரோல் குறைப்பு, இருதய நோயிலிருந்து பாதுகாப்பு ஆகியவற்றிற்காக இப்பொழுது ஒமேகா 3 (Omeg 3 Fat) என்ற கொழுப்பை பலரும் பயன்படுத்துகிறார்கள். இது பெருமளவு ஆழ்கடல் மீன்களிலிருந்தே பெறப்படுகின்றது. ஆயினும் தாவர இலை உணவுகளிலும் இது சிறிதளவு காணப்படுகிறது.


    விற்றமின் கே யின் நன்மைகள்


    பசுமை நிறமான இலை வகைகளில் விற்றமின் K அதிகம் என்றோம். அதன் பலாபலனகள்;



    • குருதி உறைதலைக் கட்டுப்படுத்துகின்றது. மாரடைப்பு, பக்கவாதம் போன்றவை ஏற்படுவதற்கு குருதி உறைதல் முக்கிய காரணமாகும். மருத்தவ ரீதியாக இதைத் தடுப்பதற்கே குறைந்த அளவு அஸ்பிரின் (75-100mg) மற்றும் குளபிடோகிரில் போன்ற மருந்துகளை நீண்ட கால அடிப்படையில் கொடுக்கிறார்கள். தாவர இலை உணவுகளில் உள்ள விற்றமின் கே இயற்கையான பாதுகாப்பைக் கொடுக்கும்.



    • விற்றமின் கே ஒஸ்டியோபொரோசிஸ் நோயிலிருந்து பாதுகாப்பளிக்கிறது. இன்று வயதான பலரும் முக்கியமாக பெண்கள் இதனால் பாதிக்கப்படுவது தெரிந்ததே. தாவர இலை உணவுகளை தினமும் உபயோகித்து வந்தால் ஒஸ்டியோபொரோசிஸ் வருவதிலிருந்தும் பாதுகாப்பு கிடைக்கும்.



    • நீரிழிவு ஏற்படாமல் தடுக்கவும் உதவும்.



    • அழற்சியைத் தடுக்கும் குணம் விற்றமின் கே க்கு இருப்பதால் மூட்டு நோய்களிலிருந்து பாதுகாக்கும்.



    • இரத்தக் குழாய்களில் கொழுப்புப் படிவதை தடுக்கும் ஆற்றலும் விற்றமின் கே க்கு உண்டு.


    எனவே நீரிழிவைத் தடுப்பதற்காக மட்டுமின்றி மேற் கூறிய பல பலன்களும் கிட்டும் என்பதால் தினமும் உணவில் பசிய இலை உணவைச் சேர்த்துக் கொள்வது அவசியமாகும்.

    jv_66, sumitra, shansun70 and 1 others like this.

    அன்புடன் கௌரி.


    "உன்னால் சாதிக்க இயலாத காரியம் என்று எதுவும் இருப்பதாக ஒருபோதும் நினைக்காதே!" - விவேகானந்தர்


    எனது கவிதை மொட்டுகள்




  3. #513
    gowrymohan's Avatar
    gowrymohan is offline Registered User
    Blogger
    Ruler's of Penmai
    Real Name
    Gowry Shanmuganathan
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    Sri Lanka
    Posts
    13,960
    Blog Entries
    380

    Re: Medical Notes - மருத்துவ குறிப்புகள்

    சிலருக்கு சருமத்தில் எண்ணெய் பசையானது அதிகம் இருக்கும். இவ்வாறு சருமத்தில் அதிகப்படியான எண்ணெய் பசையானது இருந்தால், நிறைய சருமப் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். அதிலும் சருமத்தில் எண்ணெய் பசை அதிகம் உள்ளது என்பதற்கான அறிகுறிகளான முகப்பரு, கரும்புள்ளிகள், பெரிய சருமத்துளைகள் போன்றவை. இத்தகையவை சருமத்தில் இருப்பதற்கு, எண்ணெய் சுரப்பியானது அதிகப்படியான எண்ணெய் சுரப்பதே ஆகும். சருமத்தில் எண்ணெய் பசை இருப்பதால் ஏற்படும் நன்மை என்னவென்றால், வறட்சி இருக்காது. ஆனால், அதுவே அதிகமானால், நிறைய கெடுதல்களை சந்திக்க நேரிடும். எனவே சருமத்தில் சுரக்கும் அதிகப்படியான எண்ணெய் பசையை நீக்குவது என்பது மிகவும் முக்கியம்.

    சந்தனப் பொடி
    சந்தனப் பொடியை, மூல்தானி மெட்டி மற்றும் ரோஸ் வாட்டரில் கலந்து பேஸ்ட் செய்து, முகம் மற்றும் கழுத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து கழுவினால், சருமத்தில் உள்ள அதிகப்படியான எண்ணெய் பசை நீங்குவதோடு, பருக்களும் குறையும்.

    தயிர்
    தயிர் என்பது ஒரு நேச்சுரல் கிளின்சர். எனவே தயிரில் எலுமிச்சை சாற்றை விட்டு கலந்து, முகத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து கழுவினால், சருமத்தில் இருக்கும் அதிகமான எண்ணெய் பசையானது நீங்கிவிடும்.

    வெள்ளரிக்காய்
    குளிர்ச்சி மிகுந்த வெள்ளரிக்காயை அரைத்து, அதில் சிறிது எலுமிச்சை சாற்றினை ஊற்றி கலந்து, முகத்தில் தடவினால், எண்ணெய் பசை நீங்குவதோடு, சரும அழகும் கூடும்.

    ஆரஞ்சு
    காய்ந்த ஆரஞ்சு தோலை அரைத்து பொடி செய்து, ரோஸ் வாட்டர் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 10-15 காய வைத்து கழுவ வேண்டும்.

    மூல்தானி மெட்டி
    மூல்தானி மெட்டியை குளிர்ந்த நீரில் கலந்து, முகத்தில் தடவி ஊற வைத்து, குளிர்ச்சியான நீரில் கழுவினால், சருமத்தில் உள்ள அதிகப்படியான எண்ணெயை போக்கலாம்.

    கற்றாழை
    கற்றாழையின் ஜெல்லை சருமத்தில் தடவினால், முகத்தில் உள்ள பருக்கள் நீங்குவதோடு, அதிகமான எண்ணெய் பசையையும் போய்விடும்.

    ஆவி பிடித்தல்
    வாரத்திற்கு ஒரு முறை ஆவிப் பிடித்து, பின் ஒரு ஈரமான துணியைக் கொண்டு, கரும்புள்ளிகள் உள்ள இடத்தில் தேய்த்தால், சருமத்துளைகள் விரிவடைந்து, எண்ணெய் பசை நீங்கி, கரும்புள்ளிகள் வெளியேறிவிடும்.

    மாய்ஸ்சுரைசர்
    அதிகப்படியான எண்ணெய் பசை உள்ள மாய்ஸ்சுரைசர்கள் பயன்படுத்துவதை அறவே தவிர்க்க வேண்டும். இவை நிலைமையை மோசமாக்கிவிடும். எனவே சருமத்திற்கு தகுந்த பொருட்களை வாங்கி பயன்படுத்த வேண்டும்.

    ஃபேஷியல் வேண்டாம்
    முகத்தில் பருக்கள் அதிகம் இருந்தால், அப்போது ஃபேஷியல் செய்வதை தவிர்க்க வேண்டும். ஏனெனில் அவை பருக்களை உடைத்து, அதிலிருந்து வரும் நீர்மம் முகத்தில் பரவி, அவற்றை அதிகமாக்கிவிடும்.

    எண்ணெயில்லா உணவுகள்
    எண்ணெயில் பொரித்த உணவுகள் சாப்பிடுவதை அறவே தவிர்க்க வேண்டும். அதற்கு பதிலாக பானங்கள், காய்கறி மற்றும் பழங்களை அதிகம் சாப்பிட வேண்டும்.

    jv_66, sumitra, shansun70 and 1 others like this.

    அன்புடன் கௌரி.


    "உன்னால் சாதிக்க இயலாத காரியம் என்று எதுவும் இருப்பதாக ஒருபோதும் நினைக்காதே!" - விவேகானந்தர்


    எனது கவிதை மொட்டுகள்




  4. #514
    gowrymohan's Avatar
    gowrymohan is offline Registered User
    Blogger
    Ruler's of Penmai
    Real Name
    Gowry Shanmuganathan
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    Sri Lanka
    Posts
    13,960
    Blog Entries
    380

    Re: Medical Notes - மருத்துவ குறிப்புகள்

    அருகம்புல்லின் அற்புத சக்தி


    அருகம் புல்லுக்கு பல விசேட குணங்கள் இருக்கின்றது. நாக்கு வறட்சி, நாக்கு சுவை தெரியாமல் போவது, வாந்தி, எரிச்சல், பித்த மயக்கம், சோர்வு.. இது எல்லாவற்றுக்கும் அருகம்புல் சாறு நல்லது. ரத்த பித்தம் தணிந்து உடம்பைக் குளுமையாக்கும் அருகம்புல்.

    அக்கி என்பது ஒரு அவஸ்தையான சரும நோய். இதனால் பாதிக்கப்பட்டவர்கள், அருகம்புல்லின் வேரை எடுத்து, கழுவி, சுத்தமான தண்ணீரில் வேகவைத்து, பசு நெய் கலந்து பூசிக் குளித்தால், நோயோட வீரியம் குறையும்.

    அதேமாதிரி அருகம்புல்லின் வேரை அரைத்து, அந்த விழுதோடு, அரிசி கழுவிய தண்ணீரையையும் கலந்து சாப்பிட்டால், பித்த வாந்தி தணியும்.

    மாதவிடாய் முன்னும் பின்னுமா இருக்கும் பெண்கள் அருகம்புல்லை அரைத்து, அந்த விழுதில் தினமும் ஒரு நெல்லிக் காய் அளவு சாப்பிட்டு வரலாம். மாதவிடாய் சரியான இடைவெளியில் ஏற்படும்.

    இதுதவிர அருகம்புல் ஜூஸுக்கு, பித்தப்பையில் வரும் கல், சிறுநீரகக் கல்.. இதெல்லாத்தையும் கரைக்கக் கூடிய சக்தி இருக்கிறது.

    அருகம்புல்லை வேரோடு அரைத்து விழுதாக்கி, அதோடு மஞ்சள், கஸ்தூரி மஞ்சள், நலங்கு மாவு கலந்து உடம்பில் பூசி குளித்தால்.. சொறி, சிரங்கு, அரிப்பு எல்லாவற்றுக்கும் விமோசனம் கிடைக்கும்.

    சில பெண்களுக்கு கழுத்தில் தாலிக்கயிறு, சங்கிலி பட்டு அந்த இடமே கருப்பா மாறியிருக்கும். சில பெண்களுக்கு உள்பாவாடையை இறுகக் கட்டி, இடுப்பில் கருப்பா ஆகியிருக்கும். இதுக்கெல்லாம் கூட அருகம்புல் விழுது + மஞ்சள் + நலங்கு மாவு அற்புதமான மருந்து! இந்த மூன்றையும் கலந்து தடவி வந்தால், நல்ல ரிசல்ட் தெரியும்.

    சரி.. நலங்கு மாவு எப்படி செய்றதுனு கேக்குறீங்களா? பாசிப்பயறை அரைச்சு வெச்சுக்கணும். ரோஜா மொட்டு, கஸ்தூரி மஞ்சள், விளாமிச்சை வேர் (நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும்), வெட்டி வேர், காய்ந்த எலுமிச்சை தோல், கதிர்ப் பச்சை (பூக்கடைகளில் கிடைக்கும்) இது எல்லாத்தையும் நல்லா வெய்யில்ல காயவெச்சு, மெஷின்ல கொடுத்து, அரைச்சுக்கணும்.

    இந்த மாவோட, பயத்த மாவையும் தரமான வாசனைப் பொடியையும் கலந்தா.. அதுதான் நலங்குமாவு. சோப்புக்கு பதிலா இந்த மாவைத் தேய்ச்சுக் குளிச்சா, சருமம் பட்டுப்போல மிருதுவா இருக்கும்.


    - இணையதளத்திலிருந்து

    janu23, sumitra, shansun70 and 1 others like this.

    அன்புடன் கௌரி.


    "உன்னால் சாதிக்க இயலாத காரியம் என்று எதுவும் இருப்பதாக ஒருபோதும் நினைக்காதே!" - விவேகானந்தர்


    எனது கவிதை மொட்டுகள்




  5. #515
    gowrymohan's Avatar
    gowrymohan is offline Registered User
    Blogger
    Ruler's of Penmai
    Real Name
    Gowry Shanmuganathan
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    Sri Lanka
    Posts
    13,960
    Blog Entries
    380

    Re: Medical Notes - மருத்துவ குறிப்புகள்

    ஓடுவது என்பது மிகச்சிறந்த உடற்பயிற்சி வகையாகும். அதை வீட்டிற்குள் த்ரெட்மில்லிலும் செய்யலாம் அல்லது வீட்டிற்கு வெளியிலும் கூட ஓடலாம். ஆனால் சில பொதுவான தவறுகளை தவிர்ப்பது நல்லது.

    வலியுடன் ஓடுவது
    தீவிர வலியுடன் ஓடுவதால் யாரும் உங்களுக்கு ஒன்றும் வீரதீர செயலுக்கான விருதை வழங்கப்போவதில்லை. வீரதீர செயல்களை செய்யலாம், ஆனால் அது எப்போது என உங்களுக்கு தெரிய வேண்டும். வலி மற்றும் காயத்திற்கான அறிகுறி ஏதேனும் தென்பட்டால் முதலில் உங்கள் உடல் சொல்வதை கேளுங்கள். ஓடுவதை உடனே நிறுத்தி விடுங்கள். தசை வலி என்பது பொதுவான ஒன்று தான். ஆனால் அது நீங்கள் சரியான பாதையை நோக்கி செல்கிறீர்கள் என்பதை குறிக்கும் இது. அதனால் அதற்கும் மற்ற தீவிர வலிக்கும் உள்ள வித்தியாசத்தை தெரிந்து கொள்ளுங்கள்.

    தவறான ஷூக்கள் அணிதல்
    கடையிலேயே மிகவும் அழகாக தெரியும் ஷூவை வாங்குவதில் நம்மில் பலருக்கும் நாட்டம் இருக்கும். ஆனால் ஓடுவதற்கு ஷூவில் முதலீடு செய்வதற்கு முன்பு சில ஆராய்ச்சிகளில் ஈடுபடுங்கள். உழைப்பு, ஷூவின் தரம், சொகுசு போன்றவற்றை பாருங்கள். பாதங்கள் வைக்கும் இடத்தில் கூடுதல் பேட் இருக்கும் ஷூக்களை வாங்குங்கள். ஒவ்வொரு முறை தரையில் காலை ஊன்றும் போதும் இது உங்கள் பாதத்திற்கு குஷன் போல் செயல்படும்.

    குனிவது அல்லது நீட்சியடையச் செய்வது
    நம்முடைய தோரணையில் தான் இடர்பாடுகளே அடங்கியுள்ளது. மிக தூரமாக முன் பக்கமாக குனிந்தால், சமநிலையை உண்டாக்க உங்கள் உடல் தானாக நீட்சியடையும். இயற்கையாகவே அதனால் நீங்கள் முன் பக்கமாக அதிகமாக குனிய வேண்டி வரும். இதனால் முதுகு வலி ஏற்பட தொடங்கும். அதனால் ஓடும் போது உடலை நேர் நிலையில் வைத்து ஓடுவது அத்தியாவசியமாகும். அதற்காக ஆரம்பத்தில் உங்கள் வேகத்தை குறைத்தாலும் கூட பரவாயில்லை.

    வார்ம்-அப் செய்வதை தவிர்ப்பது
    புதிதாக ஓடத் தொடங்கியவர்கள் செய்யும் பொதுவான தவறு ஒன்று உள்ளது. அது என்னவென்று தெரியுமா? வார்ம் அப் எதுவும் செய்யாமல் நேரடியாக களத்தில் குதித்து ஓடத் துவங்குவது. இது மிகவும் ஆபத்தானது. இதனால் தசை வலி, மூட்டுக்களில் பிடிப்பு போன்றவைகள் ஏற்படும். இதனால் பாதிக்கப்பட போவது உங்களது உடற்பயிற்சி தான். இப்படி வார்ம் அப் செய்வதைப் பற்றி எந்த ஒரு சூழ்நிலையிலும் குறைத்து மதிப்பிடாதீர்கள். முடிந்த வரை வார்ம் அப்பில் ஈடுபடுங்கள்.

    குதிகாலை முதலில் ஊன்றுதல்
    வார்ம் அப் செய்ய தொடங்கிய பின், நீங்கள் மற்றொரு பொதுவான பிரச்சனையையும் கவனிக்கலாம். ஓடுபவர்கள் அனைவரும் சந்திக்கும் பிரச்சனையே இது. ஓடும் போது நீளமான எட்டு எடுத்து வைக்கும் போது, நீங்கள் முதலில் உங்கள் குதிகாலை தான் தரையில் ஊன்றுவீர்கள். நீளமாக எட்டு வைத்து ஓடினால் ஆற்றல் திறனும் அதிகமாக பயன்படுத்தப்படும் என்ற எண்ணத்தில் பலர் அப்படி செய்வார்கள். இருப்பினும் அது உண்மையில்லை. இப்படி செய்வதால் உங்கள் ஆற்றல் திறன் வீணாகும். மேலும் காயம் ஏற்படுவதற்கான இடர்பாடுகளும் அதிகம். அதனால் காலை ஊன்றும் போது நாடு பாதத்தை முதலில் ஊன்றுங்கள்.

    உங்கள் கைகளை அதிகமாக ஆட்டுதல்
    த்ரெட்மில் அல்லது வீட்டிற்கு வெளியே ஓடுபவர்கள் சிலர் உணர்ச்சி வேகத்தில் தங்கள் கைகளை மிகவும் வேகமாக சுழற்றுவார்கள். இது கண்டிப்பாக எந்த ஒரு பயனையும் அளிக்க போவதில்லை. காரணம் உங்கள் ஆற்றல் திறன்கள் கைகளில் அதிகமாக பயன்படுத்தப்படும். மாறாக, கைகளை இடுப்பு அளவில் வைத்திடுங்கள். எப்போதும் கைகளை லூசாக வைத்துக் கொள்ளுங்கள் தேவையில்லாத இறுக்கத்தை கொடுக்காதீர்கள்.

    அளவுக்கு அதிகமாக ஈடுபடுதல்
    புதிதாக ஓடத் தொடங்கினால் ஆர்வக் கோளாறினால் தொடர்ச்சியாக செய்ய முற்படுவீர்கள். அதற்கு என்னென்ன தேவையோ அனைத்தையும் தயார் செய்து நீங்களும் தயாராகி விடுவீர்கள். இருப்பினும் வெகு விரைவில் அளவுக்கு அதிகமாக ஈடுபடுவதை தவிர்க்க வேண்டும். அன்றாடம் பயிற்சியில் ஈடுபட உங்கள் வலிமை மற்றும் சுறுசுறுப்பை பாதுகாப்பது மிகவும் முக்கியமாகும். உங்களால் எவ்வளவு முடியுமோ அவ்வளவு தூரம் மட்டுமே ஓட வேண்டும். எப்போதுமே ஜாக்கிங் செய்வதில் இருந்து தொடங்குவது நல்லது. பின் ஒரு இடைவேளை எடுத்துக் கொண்டு, ஓட்டத்தை துரிதப்படுத்துங்கள். மெதுவாக நீங்கள் ஓடும் தூரத்தை அதிகரியுங்கள். இதனால் வலியில் இருந்து தப்பிக்கலாம். இந்த அடிப்படைகளை பின்பற்றினால் காயங்கள் ஏற்படும் இடர்பாடு மிகவும் குறைவு. இதனால் உங்களுக்கு பிடித்த பயிற்சியில் தொடர்ந்து ஈடுபடலாம்.


    - இணையதளத்திலிருந்து


    அன்புடன் கௌரி.


    "உன்னால் சாதிக்க இயலாத காரியம் என்று எதுவும் இருப்பதாக ஒருபோதும் நினைக்காதே!" - விவேகானந்தர்


    எனது கவிதை மொட்டுகள்




  6. #516
    sumitra's Avatar
    sumitra is offline Registered User
    Blogger
    Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jul 2012
    Location
    mysore
    Posts
    23,699
    Blog Entries
    18

    Re: Medical Notes - மருத்துவ குறிப்புகள்

    Hi @gowrimohan, really wonderful guidelines! thank you!!!!!!

    gowrymohan and SADAIYAN like this.

  7. #517
    gowrymohan's Avatar
    gowrymohan is offline Registered User
    Blogger
    Ruler's of Penmai
    Real Name
    Gowry Shanmuganathan
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    Sri Lanka
    Posts
    13,960
    Blog Entries
    380

    Re: Medical Notes - மருத்துவ குறிப்புகள்

    Quote Originally Posted by sumitra View Post
    Hi @gowrimohan, really wonderful guidelines! thank you!!!!!!
    Welcome dear Sumitra


    அன்புடன் கௌரி.


    "உன்னால் சாதிக்க இயலாத காரியம் என்று எதுவும் இருப்பதாக ஒருபோதும் நினைக்காதே!" - விவேகானந்தர்


    எனது கவிதை மொட்டுகள்




  8. #518
    shansun70's Avatar
    shansun70 is offline Minister's of Penmai
    Real Name
    M ShanmugaSundaram
    Gender
    Male
    Join Date
    Mar 2014
    Location
    Hosur
    Posts
    2,651

    Re: Medical Notes - மருத்துவ குறிப்புகள்

    Nice and good info. sharing thanks Ma'm.

    gowrymohan likes this.

  9. #519
    gowrymohan's Avatar
    gowrymohan is offline Registered User
    Blogger
    Ruler's of Penmai
    Real Name
    Gowry Shanmuganathan
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    Sri Lanka
    Posts
    13,960
    Blog Entries
    380

    Re: Medical Notes - மருத்துவ குறிப்புகள்

    Quote Originally Posted by shansun70 View Post
    Nice and good info. sharing thanks Ma'm.
    Thank you so much Brother


    அன்புடன் கௌரி.


    "உன்னால் சாதிக்க இயலாத காரியம் என்று எதுவும் இருப்பதாக ஒருபோதும் நினைக்காதே!" - விவேகானந்தர்


    எனது கவிதை மொட்டுகள்




  10. #520
    gowrymohan's Avatar
    gowrymohan is offline Registered User
    Blogger
    Ruler's of Penmai
    Real Name
    Gowry Shanmuganathan
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    Sri Lanka
    Posts
    13,960
    Blog Entries
    380

    Re: Medical Notes - மருத்துவ குறிப்புகள்

    கண்களை பாதுகாக்கும் காய்கறிகள்

    நம் அன்றாடம் உண்ணும் உணவிலேயே கண்களைப் பாதுகாக்கும் காய்கறிகள் அடங்கி உள்ளன. பச்சைக் காய்கறிகளில் வைட்டமின் ஏ மற்றும் வைட்டமின் சியும், இரும்பு மற்றும் கால்சியம் சத்துகளின் முதன்மை ஆதாரங்களும் அடங்கி உள்ளன. இவை கண்களுக்கு மிகவும் நல்லது.

    அகத்திக் கீரை, பசலைக் கீரை, முருங்கை, பொன்னாங்கன்னி, முளக்கீரை, அரக்கீரை, வெந்தயக் கீரை ஆகிய கீரைகளில் இரும்பு, போலிக் ஆசிட் மற்றும் வைட்டமின் பி-12 ஆகிய சத்துக்கள் அடங்கியிருப்பதால் இவற்றை அதிகம் சேர்த்துக் கொள்வது நல்லது. பச்சைக் காய்கறிகளுடன் சாலட் மற்றும் எலுமிச்சை நம் பார்வையை பெரிதும் கூர்மையாக்குகிறது.

    வைட்டமின் ஏயில் கண்ணையும், மூளையையும் இணைக்கும் முக்கிய சத்து அடங்கியுள்ளது. கண் விழித்திரையிலுள்ள ரோடோஸ்பின் என்ற புரதத்தில் வைட்டமின் ஏ உள்ளது. பார்வையில் இது முக்கிய பங்கு வகிக்கிறது. வைட்டமின் ஏ சத்து பற்றாக்குறையால் முதலில் தோன்றும் அறிகுறி மாலைக்கண் நோய். காரட்டில் அதிகமான வைட்டமின் ஏ உள்ளது.

    வைட்டமின் ஏ வாக நம் உடலில் மாற்றம் அடையும் பீட்டா கரோடின் மற்றும் அதிநிற பழங்களிலும், பச்சைக் காய்கறிகளிலும் வைட்டமின் ஏ உள்ளது. தக்காளி, பசலை, லிவர், முட்டை, நிறமயமான காய்கறிகள், கேரட், பப்பாளி மற்றும் பச்சை இலைகளில் உள்ளது.

    SADAIYAN likes this.

    அன்புடன் கௌரி.


    "உன்னால் சாதிக்க இயலாத காரியம் என்று எதுவும் இருப்பதாக ஒருபோதும் நினைக்காதே!" - விவேகானந்தர்


    எனது கவிதை மொட்டுகள்




loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter