Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree1102Likes

Medical Notes - மருத்துவ குறிப்புகள்


Discussions on "Medical Notes - மருத்துவ குறிப்புகள்" in "General Health Problems" forum.


  1. #551
    gowrymohan's Avatar
    gowrymohan is offline Registered User
    Blogger
    Ruler's of Penmai
    Real Name
    Gowry Shanmuganathan
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    Sri Lanka
    Posts
    13,960
    Blog Entries
    380

    Re: Medical Notes - மருத்துவ குறிப்புகள்

    உணவு உண்டதும்

    இருப்பவனுக்கு வயிறு பெருக்கும்.
    நிற்பவனுக்கு உறுதி உண்டாகும்.
    நடப்பவனுக்கு ஆயுள் வளரும்.
    ஓடுபவனுக்கு அழிவு உண்டாகும்.
    தூங்குகிறவனுக்கு உடல் பெருக்கும்.


    உண்டதும் மெதுவாக நூறடி நடந்து அரசன் போல் நிமிர்ந்து உட்காரவேண்டும்.


    Sponsored Links

    அன்புடன் கௌரி.


    "உன்னால் சாதிக்க இயலாத காரியம் என்று எதுவும் இருப்பதாக ஒருபோதும் நினைக்காதே!" - விவேகானந்தர்


    எனது கவிதை மொட்டுகள்




  2. #552
    gowrymohan's Avatar
    gowrymohan is offline Registered User
    Blogger
    Ruler's of Penmai
    Real Name
    Gowry Shanmuganathan
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    Sri Lanka
    Posts
    13,960
    Blog Entries
    380

    Re: Medical Notes - மருத்துவ குறிப்புகள்

    புருவ முடி திருத்துதல் (threading) செய்யும் பெண்களுக்கு ஏற்படும் அபாயம்!



    இப்போதுள்ள இளைய தலைமுறை பெண்கள் அழகுபடுத்துதல் என்ற பெயரில் தங்கள் ஆரோக்கியத்தைக்கெடுத்துக் கொள்ளுகிறார்கள்.
    இப்போது பெண்கள் தங்களை அழகுபடுத்துதல் என்ற பெயரில் தங்கள் உயிரை தாங்களே அழித்துக் கொண்டிருக்கும் இன்னோர் பழக்கத்தையும் இங்கே விளக்கவே இந்தப் பதிவு.


    புருவமுடிகளைத் திருத்துகிறோம் (த்ரெட்டிங்)(threading)என்ற பெயரில் தங்கள் உயிரைக் குறைத்துக் கொள்கிறார்கள். புருவமுடிகள் என்பவை பிராணன் இயங்கும் இடங்கள். இறப்பு நெருங்கி வரும் பொழுது புருவமுடிகள் தொட்டாலே கையோடு வந்துவிடும். உடல் பிராணன் தீர்ந்து போய் விடுவதாலேயே புருவ முடிகள் கொட்டிப் போய் விடுகின்றன.


    இந்த புருவ முடிகளைத் திருத்துகின்றபோது ( த்ரெட்டிங்)(threading), கண்ணைச் சுற்றியுள்ள நட்சத்திர காலம், காம பூரி வர்மம், திலர்த வர்மம் (பொட்டுவர்மம் (அல்)சுடரொளியின் காலம்), மின் வெட்டி வர்மம் (முன்வெட்டி வர்மம் அல்லது விழி பிதுங்கி வர்மம்), மந்திரக் காலம், அடக்க வர்மம், நேம வர்மம், பட்சிவர்மம், கண்ணாடி வர்மம் (மூக்கிறாணி வர்மம்), பால வர்மம், சூண்டிகை வர்மம், கொண்ட வர்மம் போன்ற கண்ணைச் சுற்றி உள்ள வர்மங்களில், பாதிப்புக்கள் நேர்கின்றன.


    இந்த புருவ முடிகளைத் திருத்துகின்றவர்களுக்கு இந்த வர்மங்களைப் பற்றித் தெரிய வாய்ப்பேயில்லை.
    இதனால் பெண்களின் பிராண சக்தி குறைகின்றது. விளைவு குறைவான பிராண சக்தியால், ஆயுளும் குன்றி, பிராண சக்தி குன்றிய குழந்தைகளையும் பெற்று, ஆரோக்கியக் குறைவான சமுதாயத்திற்கே வித்திட்டு விடுகின்றனர்.
    இவை ஆயுளைக் குறைப்பதுடன் பல பெரும் நோய்களுக்கும் காரணம் ஆகின்றன.

    வர்மங்களில் நிலை கொண்டிருக்கும் மின் காந்த சக்தியை எந்த வழியிலும் சிதைப்பது கூடாது.மேலும் உடலின் முக்கிய சக்திப்பாதைகள் கண்களுக்கு அருகில் ஓடுகின்றன, எனவே இந்த இடங்களில் கை வைப்பது நமக்கு நாமே தலைக்கு கொள்ளி வைத்துக் கொள்வது போல ஆகும்.


    இறைவன் உறையும் இடம் இதுவே. இதை உணர்ந்து நம் நாட்டுக் கலாச்சாரத்திற்கு ஏற்றாற் போல் பெண்கள் நல்ல சுத்தமான விளக் கெண்ணையை கண் புருவங்களில் தீட்டுவ தானாலும், கண்ணில்இட்டு வருவதனாலும் தம் ஆயுளையும் காத்து, நீட்டித்து, நல்ல பிராணனும், நீண்ட ஆயுள், நிறை ஆரோக்கியமும் கொண்ட தேகத்தால் இதே போல நற்குழந்தைகளையும் பெற்று நல் ஆரோக்கிய சமுதாயத்திற்கு வித்திடுங்கள் .


    அன்புடன் கௌரி.


    "உன்னால் சாதிக்க இயலாத காரியம் என்று எதுவும் இருப்பதாக ஒருபோதும் நினைக்காதே!" - விவேகானந்தர்


    எனது கவிதை மொட்டுகள்




  3. #553
    gowrymohan's Avatar
    gowrymohan is offline Registered User
    Blogger
    Ruler's of Penmai
    Real Name
    Gowry Shanmuganathan
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    Sri Lanka
    Posts
    13,960
    Blog Entries
    380

    Re: Medical Notes - மருத்துவ குறிப்புகள்

    நீங்கள் குளிர்ந்த தண்ணீர் குடிக்கும் பிரியரா?

    அப்படியென்றால் இது உங்களுக்குத்தான் உங்களுக்காக.


    மாரடைப்பு மற்றும் சூடான குடிநீர்
    சீன மற்றும் ஜப்பான் மக்கள் தங்களின் உணவிற்கு பிறகு குளிர்ந்த
    தண்ணீரை விடுத்து சூடான தேநீர் அருந்துவதை வழக்கமாக கொண்டுள்ளனர். இப்பழக்கத்தை நாமும் பின்பற்ற வேண்டிய நேரம்
    வந்துவிட்டது.
    சாப்பிட்டவுடன் குளிர்ந்த நீர் குடிப்பதனால் , நம் உணவில் உட்கொண்ட எண்ணெய் பொருட்கள் திடப்பொருளாக மாறி செரிமானத்தை மெதுவாக்கிவிடும். திடப்பொருளாக மாறிய கலவை நம் வயிற்றில் இருக்கும் அமிலத்தோடு (Acid) வினைபுரியும்.
    இது திட உணவை விட வேகமாக உடைந்து குடலால் உறிஞ்சபடும்.

    இது நம் குடலில் அணிதிரண்டு அப்படியே நின்றுவிடும். மிக
    விரைவில், இது கொழுப்புகளாக மாறி புற்றுநோய்க்கு வழிவகுக்கும்.

    ஆகவே உணவிற்கு பிறகு சூடான தண்ணீர் அல்லது சூப் குடிப்பது நல்லது.


    மாரடைப்பு பற்றி ஒரு குறிப்பு
    மாரடைப்பின் முதல் அறிகுறி இடது கையில் ஏற்படும் கடுமையான வலி ஆகும். தாடையில் தீவிர வலி ஏற்பட்டாலும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

    மாரடைப்பு வரும்போது பொதுவாக நெஞ்சு வலி ஏற்படாது. குமட்டல் மற்றும் கடுமையான வியர்வையே மாரடைப்பு ஏற்பட பொதுவான அறிகுறிகள் ஆகும்.

    60% சதவீத மக்கள் தூக்கத்தில் மாரடைப்பு ஏற்படும்போது அவர்களால் எழுந்துகொள்ள முடியாது. உறக்கத்திலேயே இறந்துவிடுவர்.

    தாடை வலி ஏற்பட்டவர்கள் மட்டுமே அயர்ந்த தூக்கத்திலிருந்து எழுந்து கொள்ள முடியும். ஆகவே எப்பொழுதும் கவனமாகவும்
    எச்சரிக்கையுடனும் இருக்க வேண்டும்.


    அன்புடன் கௌரி.


    "உன்னால் சாதிக்க இயலாத காரியம் என்று எதுவும் இருப்பதாக ஒருபோதும் நினைக்காதே!" - விவேகானந்தர்


    எனது கவிதை மொட்டுகள்




  4. #554
    gowrymohan's Avatar
    gowrymohan is offline Registered User
    Blogger
    Ruler's of Penmai
    Real Name
    Gowry Shanmuganathan
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    Sri Lanka
    Posts
    13,960
    Blog Entries
    380

    Re: Medical Notes - மருத்துவ குறிப்புகள்

    மூளையைப் பாதிக்கும் 10 பழக்கங்கள்

    1. காலையில் உணவு உண்ணாமல் இருப்பது...
    காலையில் உணவு உண்ணாமல் இருப்பவர்களுக்கு ரத்தத்தில் குறைவான அளவே சர்க்கரை இருக்கும். இது மூளைக்குத் தேவையான சக்தியையும் தேவையான ஊட்டச் சத்துக்களையும் கொடுக்காமல் ஆக்கி, மூளை அழிவுக்குக் காரணமாகும்.

    2.மிக அதிகமாகச் சாப்பிடுவது
    இது மூளையில் இருக்கும் ரத்த நாளங்கள் இறுகக் காரணமாகி, மூளையின் சக்தி குறைவுக்குக் காரணமாகும்.

    3. புகை பிடித்தல்
    மூளை சுருகவும், அல்ஸைமர்ஸ் வியாதி வருவதற்கும் காரணமாகிறது.

    4.நிறைய சர்க்கரை சாப்பிடுதல்
    நிறைய சர்க்கரை சாப்பிடுவது, புரோட்டின் நமது உடலில் சேர்வதைத் தடுக்கிறது. இதுவும்மூளை வளர்ச்சிக்கு பாதிப்பாகிறது.

    5. மாசு நிறைந்த காற்று
    மாசு நிறைந்த காற்றை சுவாசித்தல், நமக்குத் தேவையான ஆக்ஸிஜனை நாம் பெறுவதிலிருந்து தடை செய்கிறது. மூளைக்கு ஆக்ஸிஜன் செல்லாவிட்டால், மூளை பாதிப்படையும்.

    6.தூக்கமின்மை
    நல்ல தூக்கம் நம் மூளைக்கு ஓய்வு கொடுக்கும். வெகுகாலம் தேவையான அளவு தூங்காமலிருப்பது மூளைக்கு நீண்டகாலப் பாதிப்பை ஏற்படுத்தும்.

    7. தலையை மூடிக்கொண்டு தூங்குவது
    தலையை மூடிக்கொண்டு தூங்குவது, போர்வைக்குள் கரியமிலவாயு அதிகரிக்க வைக்கிறது. இது நீங்கள் சுவாசிக்கும் ஆக்ஸிஜனை குறைக்கிறது. குறைவான ஆக்ஸிஜன் மூளையைப் பாதிக்கிறது.

    8.நோயுற்ற காலத்தில் மூளைக்கு வேலை கொடுப்பது
    உடல் நோயுற்ற காலத்தில் மிக அதிகமாக மூளைக்கு வேலை கொடுப்பதும், தீவிரமாகப் படிப்பதும் மூளையைப் பாதிக்கும். உடல் சரியாக ஆனபின்னால், மூளைக்கு வேலை கொடுப்பதே சிறந்தது.

    9.மூளைக்கு வேலை கொடுக்கும் சிந்தனைகளை மேற்கொள்ளாமல் இருப்பது
    மூளையை அதிகமாக உபயோகப்படுத்தும் சிந்தனைகளை மேற்கொள்வதால், மூளையில் புதுப்புது இணைப்புகள் உருவாகின்றன. அதனால், மூளை வலிமையான உறுப்பாக ஆகிறது.

    10. பேசாமல் இருப்பது
    அறிவுப்பூர்வமான உரையாடல்களை மேற்கொள்வது மூளையின் வலிமையை அதிகரிக்கிறது.

    Last edited by gowrymohan; 11th Mar 2016 at 11:32 AM.

    அன்புடன் கௌரி.


    "உன்னால் சாதிக்க இயலாத காரியம் என்று எதுவும் இருப்பதாக ஒருபோதும் நினைக்காதே!" - விவேகானந்தர்


    எனது கவிதை மொட்டுகள்




  5. #555
    gowrymohan's Avatar
    gowrymohan is offline Registered User
    Blogger
    Ruler's of Penmai
    Real Name
    Gowry Shanmuganathan
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    Sri Lanka
    Posts
    13,960
    Blog Entries
    380

    Re: Medical Notes - மருத்துவ குறிப்புகள்

    சர்க்கரை நோய் வராமல் இருக்க 7 கட்டளைகள்

    சர்க்கரை ஆரம்ப நிலையில் உள்ள போது, சில முன்னேற்பாடுகளை கடைப்பிடித்தால் சர்க்கரை நோய் வராமல் தடுக்கலாம். இல்லாவிட்டால் 5 ஆண்டில் சர்க்கரை நோய் வந்து விடும். சர்க்கரை நோய் வராமல் தடுப்பது எளிது. அதற்கு 7 கட்டளைகளை கடைப்பிடிக்க வேண்டும் என்கின்றனர் மருத்துவர்கள்.

    1. வாரத்திற்கு குறைந்தபட்சம் 3 நாளாவது குறைந்தபட்சம் 30 நிமிடமாவது கையை வீசி, வேகமாக நடக்க வேண்டும். இதனால் உடலில் சேரும் சர்க்கரை குறையும்.

    2. சிகரெட் குடிப்பவர்களுக்கு வழக்கமாக வரக்கூடிய நோய்கள் என்று சில இருந்தாலும், கூடுதலாக சர்க்கரையின் அளவு ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரிப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனால் சிகரெட் குடிப்பதை விட வேண்டும்.

    3. பெரும்பாலானோர் மாலை முதல் இரவு வரை அமர்ந்து டி.வி.பார்க்கின்றனர். இதனால் உடலுக்கு உழைப்பு கிடைப்பதில்லை. அப்போது நொறுக்கு தீனி உண்கின்றனர். இதனால் உடலுக்கு சர்க்கரை நோய் வரும். மாலை முழுவதும் விளையாட்டு என்று கடைப்பிடிக்க வேண்டும்.

    4. நாம் சமையலுக்கு பயன்படுத்தும் எண்ணெய் வகைகள் ரத்தத்தில் சர்க்கரை அளவை கூட்டுகிறது. ரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்தக்கூடிய, நல்ல கொழுப்பை உருவாக்கக்கூடிய எக்ஸ்ட்ரா வர்ஜின் ஆலிவ் ஆயிலை சமையலுக்கு பயன்படுத்த வேண்டும். அல்லது எதாவதொரு வகையில் தினசரி 5 மில்லி ஆலிவ் ஆயில் உடலில் சேர்க்க வேண்டியது கட்டாயம்.

    5.அரிசி, சர்க்கரை, உப்பு, மைதா, சாதம், தேங்காய், பால், தயிர் உள்ளிட்ட வெள்ளை உணவு பொருள்களை தவிர்க்க வேண்டும். பேக்கரியில் விற்கும் எல்லா பொருள்களும் சர்க்கரையை கூட்டக்கூடியது. அதையும் தவிர்க்க வேண்டும்.

    6. மூன்று வேளை சாப்பிடுவதை 5 வேளையாக மாற்றி கொள்ள வேண்டும். 3 வேளை சாப்பிடும் அளவை 5 வேளைகளில் சாப்பிட வேண்டும்.

    7. தினசரி 25 முதல் 30 கிராம் வெந்தயத்தை உணவின் மூலம் உடலில் சேர்க்க வேண்டும். அது சர்க்கரையின் அளவு கூடாமல் தடுக்கும். வால்நட், பாதாம்பருப்பு கொஞ்சம், நிறைய காய்கறிகள், பப்பாளி, ஆரஞ்சு, ஆப்பிள் ஆகிய பழங்கள் ஆகியவற்றை உணவில் சேர்க்க வேண்டும்.

    இவையெல்லாம் கடைப்பிடித்தால் சர்க்கரை நோய் வராது. சர்க்கரை நோய் எந்த நிலையில் உள்ளது என்பதை கண்டறிந்து, அதற்கான ஆலோசனையும், சிகிச்சையும் பெறுவது முக்கியம்.


    அன்புடன் கௌரி.


    "உன்னால் சாதிக்க இயலாத காரியம் என்று எதுவும் இருப்பதாக ஒருபோதும் நினைக்காதே!" - விவேகானந்தர்


    எனது கவிதை மொட்டுகள்




  6. #556
    gowrymohan's Avatar
    gowrymohan is offline Registered User
    Blogger
    Ruler's of Penmai
    Real Name
    Gowry Shanmuganathan
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    Sri Lanka
    Posts
    13,960
    Blog Entries
    380

    Re: Medical Notes - மருத்துவ குறிப்புகள்

    1. தினசரி ஒரு வெங்காயத்தை பச்சையாக உண்டு வந்தால் இரத்தம் சுத்தமாகும். இருமல், சளி நீங்கும்.
    2. சுண்டைக்காயில் இரும்புச்சத்து அதிகமாக உள்ளது. இந்தக்காய் ஆஸ்துமா, ஜீரம் முதலியவற்றை நீக்கும்.
    3. கர்ப்பிணிப் பெண்கள் தினமும் ஒரு முறை கேழ்வரகில் செய்த உணவுப்பொருளை சாப்பிட வேண்டும். இதில் இரும்புச்சத்து, கால்சியம் உள்ளது.
    4. வேப்பம்பூவை ரசம் வைத்துச் சாப்பிட்டால் உடம்பில் உள்ள கிருமிகள் அழியும். பித்தம் குறையும்.
    5. தினமும் முருங்கைக் கீரையைச் சாப்பிட்டால் நீரழிவு நோய் கட்டுப்படும். கண் பார்வை தெளிவு பெறும்.
    6. அதிக இருமல் ஏற்படும் போது ஒரு ஸ்பூன் தேன் சாப்பிட்டால் இருமல் குறையும்.
    7. சாதாரண வாய்வுப் பிடிப்பிற்கு சுக்கையும், பனை வெல்லத்தையும் கலந்து சாப்பிட்டால் போதும்.
    8. மணத்தக்காளிக் கீரையை பருப்புடன் சேர்த்து தினமும் சாப்பிட்டு வந்தால் ஆசனக்கடுப்பு, மூல நோய் குணமாகும்.
    9. கறிவேப்பிலை, இஞ்சி, சீரகம் மூன்றையும் சிறிதளவு எடுத்து ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றி கொதிக்க வைத்துக் குடித்தால் அஜீரணம் சரியாகிவிடும்.
    10. முள்ளங்கி கீரையில் வைட்டமின் சத்து உள்ளது. இக்கீரை தொற்று நோய்களை விரட்டி அடிக்கும்.
    11. உடல் எடை குறைந்தவர்கள் வாழைப்பழம் தினமும் இரவில் உண்டு வந்தால் எடை கூடும்


    அன்புடன் கௌரி.


    "உன்னால் சாதிக்க இயலாத காரியம் என்று எதுவும் இருப்பதாக ஒருபோதும் நினைக்காதே!" - விவேகானந்தர்


    எனது கவிதை மொட்டுகள்




  7. #557
    gowrymohan's Avatar
    gowrymohan is offline Registered User
    Blogger
    Ruler's of Penmai
    Real Name
    Gowry Shanmuganathan
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    Sri Lanka
    Posts
    13,960
    Blog Entries
    380

    Re: Medical Notes - மருத்துவ குறிப்புகள்

    தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் தவிர்க்க வேண்டிய பழங்கள்

    கர்ப்ப காலத்தில் மட்டுமின்றி, தாய்ப்பால் கொடுக்கும் காலத்திலும் பெண்கள் உண்ணும் உணவுகளில் கவனமாக இருக்க வேண்டும். ஏனெனில் பிறந்த குழந்தைக்கு ஒரே உணவு தாய்ப்பால் தான். தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் எந்த உணவுகளை உட்கொண்டாலும், அது தாய்ப்பாலுடன் கலந்து குழந்தையை அடையும்.
    எனவே உங்கள் குழந்தைக்கு எந்த ஒரு பிரச்சனையும் வராமல் இருக்க வேண்டுமானால், தாய்ப்பால் கொடுப்பவர்கள் தங்களது உணவுகளில் கவனத்தை செலுத்த வேண்டியது அவசியம். அதிலும் இது கோடைக்காலம். இக்காலத்தில் உடலை நீர்ச்சத்துடனும், ஆரோக்கியமாகவும் வைத்துக் கொள்ள பழங்களை அதிகம் சாப்பிட தோன்றும். ஆனால் தாய்ப்பால் கொடுப்பவர்கள் ஒருசில பழங்களை சாப்பிடக்கூடாது. அவை என்னவென்று பார்க்கலாம்.
    சிட்ரஸ் பழங்களில் உள்ள ஃப்ளேவர் தாய்ப்பாலில் கலந்து, குழந்தைக்கு வயிற்று உப்புசத்தை உண்டாக்கும். எனவே தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் ஆரஞ்சு, திராட்சை, எலுமிச்சை போன்றவற்றைத் தவிர்ப்பது நல்லது.
    தாய்ப்பால் கொடுக்கும் போது ஸ்ட்ராபெர்ரி பழத்தை பெண்கள் அதிகம் சாப்பிட்டால், குழந்தைக்கு தீவிரமாக அழற்சி ஏற்படும் வாய்ப்புள்ளது. மேலும் வாய்வுத் தொல்லை, வயிற்றுப்போக்கு, எரிச்சல் போன்றவையும், சில நேரங்களில் சருமத்தில் அரிப்புக்களும் ஏற்படும். எனவே தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் இவற்றைத் தவிர்ப்பது நல்லது.
    அன்னாசியில் உள்ள அசிட்டிக் தன்மை, தாய்ப்பாலுடன் கலந்தால், அது தாய்ப்பாலை நாற்றமிக்கதாக மாற்றுவதோடு, குழந்தைக்கு நாப்கின் அரிப்புக்களையும் உண்டாக்கும்.
    கிவி பழத்தை தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் தவிர்க்க வேண்டும். ஏனெனில் இது குழந்தைக்கு ஆரோக்கியமானதல்ல. இப்பழத்தில் உள்ள உட்பொருட்கள் குழந்தைக்கு வாய்வுத் தொல்லையை உண்டாக்கும்.
    செர்ரிப் பழங்களை அதிகமாக தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் உட்கொள்ளக்கூடாது. ஏனெனில் இதில் இயற்கையாகவே மளமிளக்கும் தன்மை உள்ளது. ஒரு வேளை அதிகமாக உட்கொண்டால், குழந்தைக்கு வயிற்றுப்போக்கு ஏற்படும் அபாயம் உள்ளது.


    அன்புடன் கௌரி.


    "உன்னால் சாதிக்க இயலாத காரியம் என்று எதுவும் இருப்பதாக ஒருபோதும் நினைக்காதே!" - விவேகானந்தர்


    எனது கவிதை மொட்டுகள்




  8. #558
    gowrymohan's Avatar
    gowrymohan is offline Registered User
    Blogger
    Ruler's of Penmai
    Real Name
    Gowry Shanmuganathan
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    Sri Lanka
    Posts
    13,960
    Blog Entries
    380

    Re: Medical Notes - மருத்துவ குறிப்புகள்

    உண்மையில் நம்மில் பல பேருக்கு எதற்காக குளிக்கிறோம் என்றே தெரியவில்லை.
    அழுக்கு போகவா.....! நிச்சயம் கிடையாது.....!
    சரி பின் எதற்கு தான் குளிக்கிறோம் என்று கேட்கிறீர்களா....?
    குளியல் = குளிர்வித்தல்
    குளிர்வித்தலோ மருவி குளியல் ஆனது.
    மனிதர்களுக்கு உள்ள 75% நோய்களுக்கு காரணம் அதிகப்படியான உடல் வெப்பம்.
    இரவு தூங்கி எழும்போது நமது உடலில் வெப்பக் கழிவுகள் நேங்கியிருக்கும்.
    காலை எழுந்ததும் இந்த வெப்பகழிவை உடலில் இருந்து நீக்குவதற்காக குளிந்தநீரில் குளிக்கிறோம்.
    வெந்நீரில் குளிக்க கூடாது. எண்ணெய் குளியலின் போது மட்டுமே மிதமான வெந்நீர் பயன்படுத்த வேண்டும்.
    குளிர்ந்த நீரை அப்படியே மொண்டு தலைக்கு ஊற்றிவிடக்கூடாது. இது முற்றிலும் தவறு.
    நீரை முதலில் காலில் ஊற்ற வேண்டும், பின், முழங்கால், இடுப்பு, நெஞ்சு பகுதி, இறுதியாக தலை.
    எதற்கு இப்படி. காலில் இருந்து ஊற்றினால் தான் வெப்பம் கீழிருந்து மேல் எழும்பி, விழி மற்றும் காது வழியாக வெளியேறும்.
    நேரடியாக தலைக்கு ஊற்றினால் வெப்பம் கீழ் நோக்கி சென்று வெளியில் போக முடியாமல் உள்ளேயே சுழன்று கொண்டிருக்கும்.
    இப்பொழுது நம் முன்னோர்களின் குளியல் முறையை கண்முன்னே கொண்டு வாருங்கள்.
    குளத்தில் ஒவ்வொறு படியாக இறங்குவார்கள். காலில் இருந்து மேல் நோக்கி நினையும். வெப்பம் கீழ் இருந்து மேல் எழுப்பி இறுதியில் தலை முங்கும் போது கண், காது வழியே வெப்பக் கழிவு வெளியேறிவிடும்.
    இறங்கும் முன் ஒன்று செய்வார்கள் கவனித்ததுண்டா. உச்சந்தலைக்கு சிறிது தண்ணீர் தீர்த்தம் போல் தெளித்துவிட்டு இறங்குவார்கள்.
    இது எதற்கு... உச்சந்தலைக்கு அதிக சூடு ஏறக்கூடாது. சிரசு எப்போதும் குளிர்ச்சியாக இருக்க வோண்டும்.
    எனவே உச்சியில் சிறிது நனைத்து விட்டால் குளத்தில் இறங்கும் போது கீழ் இருந்து மோலாக எழும் வெப்பம் சிரசை தாக்காமல் காது வழியாக வெளியேறிவிடுகிறது.
    வியக்கவைக்கிறதா... ! நம் முன்னோர்களின் ஒவ்வொறு செயலுக்கும் ஆயிரம் அர்த்தங்கள் உண்டு.
    குளித்துவிட்டு சிறிது நேரம் ஈரத் துணியோடு இருப்பது மிக நல்லது.
    அதே ஈரத்துணியோடு நாம் அரச மரத்தை சுற்றி வந்தால் 100% சத்தமான பிராணவாயுவை நமது உடல் தோல் மூலமாக கிரகித்துக்கொள்ளும்.
    பித்தம் நீங்கி பிராணவாயு அதிகரித்தால் அனைத்து நோய்களும் ஓடிவிடும்.
    புத்தி பேதலிப்பு கூட சரியாகும்.
    குளியலில் இத்தனை விடையங்கள் இருக்கும் போது. குளியல் அறை என்றாலே அதில் ஒரு ஹீட்டர் வேர, இப்படி சுடு தண்ணீரில் சோப்பும், ஸ்சேம்பையும் போட்டு குளிச்சிட்டு வந்தா நாம நோயாளியா இல்லாம வேற எப்படி இருப்போம்.
    குளிக்க மிக நல்ல நேரம் - சூரிய உதயத்திற்கு முன்
    குளிக்க மிகச் சிறந்த நீர் - பச்சை தண்ணீர்.
    குளித்தல் = குளிர்வித்தல்
    குளியல் அழுக்கை நீக்க அல்ல
    உடலை குளிர்விக்க.
    இறைவன் கொடுத்த இந்த உடல் மீது உங்களுக்கு அக்கறை இருந்தால் மாற்றிக்கொள்ளுங்கள்.
    நலம் நம் கையில்.


    - இணையதளத்திலிருந்து

    Last edited by gowrymohan; 13th May 2016 at 04:17 PM.

    அன்புடன் கௌரி.


    "உன்னால் சாதிக்க இயலாத காரியம் என்று எதுவும் இருப்பதாக ஒருபோதும் நினைக்காதே!" - விவேகானந்தர்


    எனது கவிதை மொட்டுகள்




  9. #559
    gowrymohan's Avatar
    gowrymohan is offline Registered User
    Blogger
    Ruler's of Penmai
    Real Name
    Gowry Shanmuganathan
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    Sri Lanka
    Posts
    13,960
    Blog Entries
    380

    Re: Medical Notes - மருத்துவ குறிப்புகள்

    எடுத்ததுக்கெல்லாம் டாக்டரை தேடி ஓடுவதை தவிர்க்க, தினமும் நாம் உட்கொள்ளும் உணவில் சில பொருட்களை சேர்த்துக் கொண்டலே போதும்; நலமுடன் வாழலாம். அதற்கு உதவும் சில எளிய வைத்தியக் குறிப்புகள் இதோ:
    * சீதபேதி கடுமையாக இருந்தால், ஊற வைத்த வெந்தயத்தை அரைத்து, தயிரில் கலந்து மூன்று வேளை கொடுக்க குணமாகும்.
    * அடிக்கடி ஏப்பம் வந்தால், வேப்பம்பூவை தூள் செய்து, நான்கு சிட்டிகை எடுத்து, இஞ்சி சாறுடன் கலந்து உட்கொண்டால் குணமாகும்.
    * உலர் திராட்சைப் பழத்தை, வெது வெதுப்பான தண்ணீரில் அரைமணி நேரம் ஊற வைத்து, காலையில் அருந்தினால், மாதவிடாய் கோளாறுகள், இதய நோய் தீரும்.
    * வல்லாரைக் கீரையை நிழலில் காய வைத்து, பொடித்து, தினமும் ஒரு தேக்கரண்டி உண்டு வந்தால், நினைவாற்றல் பெருகும்
    .
    * வெந்தயத்தை மட்டும் ஊற வைத்து, நன்கு அரைத்து தலையின் முடி வேர்க் கால்களில் தடவி, நன்கு ஊறியபின் தலைமுடியை அலசினால், முடி நன்கு வளருவதுடன் கண் எரிச்சல், உடல் சூடு தணியும்.
    * வயிற்றுக் கடுப்பு ஏற்பட்டால், புழுங்கல் அரிசி வடித்த தண்ணீரில் சிறிதளவு உப்பையும், வெண்ணெயையும் கலந்து குடியுங்கள். சிறிது நேரத்திலேயே குணம் தெரியும்.
    * புதினா விதையை வாயில் போட்டு மென்றுக் கொண்டிருந்தால், பல்லில் ஏற்படும் கூச்சம் மறையும்.
    * கேரட் சாறும் சிறிது தேனும் பருகி வந்தால், கர்ப்பிணிப் பெண்களுக்கு வாந்தி மட்டுப்படும்.
    * எலுமிச்சை பழச் சாற்றில் ரசம் செய்து சாப்பிட்டால், உஷ்ணம் குறையும்.
    * நுரையீரல் சம்பந்தமான நோய்கள் குணமாக, வெற்றிலைச் சாற்றில் இஞ்சி சாற்றை சேர்த்து, குடித்து வந்தால், நல்ல பலன் கிடைக்கும்.
    * பூச்சி கடித்து வலி, வீக்கம் ஏற்பட்டால், வெங்காயத்தை நறுக்கி அந்த இடத்தில் தேய்த்தால் விஷம் பரவாது. கடுகை அரைத்து வலியுள்ள பகுதியில் போட்டால் வலி குறைந்து விடும்.
    * தினமும் குடிநீரைக் காய்ச்சும் போது, ஒரு கைப்பிடி சுக்கைத் தட்டிப் போடலாம்; தேவைப்பட்டால் குடிநீரை வடிகட்டிக் கொள்ளலாம். மருத்துவ குணங்களைக் கொண்ட இப்பொருள், ஜீரணத்துக்கு உதவும், வாயுவை அகற்றும், மலச்சிக்கல் இருக்காது. தண்ணீரும் குடிக்க சுவையாக இருக்கும்.
    * கொப்பரைத் தேங்காயை கசகசா வுடன் சேர்த்துச் சாப்பிட்டால் வாய்ப்புண் குணமாகும்.
    * பச்சை கொத்தமல்லித் தழைகளை மிக்ஸில் அரைத்து தினமும் காலையில் எழுந்தவுடன் குடித்துவர தலைவலி நீங்கும்.
    * தயிரை உடம்பில் தேய்த்துக் குளித்தால் வேர்குருவை விரட்டி அடிக்கலாம்.
    * வெள்ளைப் பூசணிக்காயை பூந்துருவலாக துருவி, உப்பு சேர்த்து இஞ்சி, பச்சை மிளகாய், கொத்தமல்லி, கருவேப்பிலை, கடுகு, தாளித்து தயிரில் கலந்து தயிர்ப் பச்சடியாக சாப்பிட்டால் மிகவும் ருசியாக இருக்கும். ரத்தக் கொதிப்பு, கொலஸ்ட்ரால், தலைசுற்றல் எல்லாவற்றையும் பூசணிக்காய் கட்டுப்படுத்தும்.
    * ஒரு கப் சாதம் வடித்த நீரில், கால் ஸ்பூன் மஞ்சள் பொடியைக் கலந்து குடிக்க வயிற்று உப்புசம், அஜீரணம் மாறும்.
    * சாதம் வடித்த கஞ்சியை எடுத்து, ஆறவைத்து, ஒரு ஸ்பூன் நெய்யில் கொஞ்சம் சீரகம் கலந்து குடித்தால், இடுப்பு வலி நீங்கும்
    .
    * அரிசியுடன் வெந்தயத்தைச் சேர்த்து, கஞ்சியாக்கி காய்ச்சி உண்டு வந்தால் தாய்ப்பால் சுரக்கும்.

    - இணையதளத்திலிருந்து


    அன்புடன் கௌரி.


    "உன்னால் சாதிக்க இயலாத காரியம் என்று எதுவும் இருப்பதாக ஒருபோதும் நினைக்காதே!" - விவேகானந்தர்


    எனது கவிதை மொட்டுகள்




  10. #560
    gowrymohan's Avatar
    gowrymohan is offline Registered User
    Blogger
    Ruler's of Penmai
    Real Name
    Gowry Shanmuganathan
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    Sri Lanka
    Posts
    13,960
    Blog Entries
    380

    Re: Medical Notes - மருத்துவ குறிப்புகள்

    உடல் வியாதிகளை குணமாக்கும் மூலிகை குடிநீர் - இயற்கை மருத்துவம்
    * ஒரு லிட்டர் தண்ணீரில் கையளவு ஆவரம்பூவை போட்டு சூடாக்கி வடிகட்டி குடித்துவந்தால் கை, கால் பாதங்களில் சேற்றுப்புண், நகச்சொத்தை, உடல் அரிப்பு போன்றவை குணமாகும்.!
    * ஒரு லிட்டர் தண்ணீரில் அரை தேக்கரண்டி ஓமம் போட்டு சிறிது சூடாக்கி வடிக்கட்டி குடித்து வந்தால் குடலிறைச்சல், வயிற்றுப்பூச்சி, அடிக்கடி வாய்வு பிரிதல், வயிற்றுவலி குணமாகும்.
    * ஒருலிட்டர் தண்ணீரில் அரைதேக்கரண்டி சீரகம் போட்டு சிறிது சூடாக்கி குடித்து வந்தால் அஜீரணக்கோளாறு,வயிற்று உப்புசம், உடல்சூடு தணியும்.!
    * ஒருலிட்டர் தண்ணீரில் சிறிது சுக்கு,மிளகு, கொத்தமல்லியை தட்டிப்போட்டு சிறிது சூடாக்கி கொஞ்சம் கொஞ்சமாக குடித்து வந்தால் அதிக சோர்வு, சளித்தொல்லை,முகத்தில் ஏற்படும் கருவளையம்,தொண்டைக்கட்டு குணமாகும்.!
    * ஒருலிட்டர் தண்ணீரில் ஒரு கடுக்காயை தட்டிப்போட்டு சூடாக்கி குடித்து வந்தால் வாய்ப்புண், தொண்டைப்புண், வயிற்றுப்புண் குணமாகும்.!
    * ஒருலிட்டர் தண்ணீரில் நாவப்பழக் கொட்டைகளை தட்டிப்போட்டு சிறிது சூடாக்கி குடித்து வந்தால் அதிக சக்கரை குறையும்.!
    * ஒருலிட்டர் தண்ணீரில் 10 கிராம் பால்காயத்தை தட்டிப்போட்டு சூடாக்காமல் 2 மணி நேரம் அப்படியே ஊறவைத்து பிறகு குடித்து வந்தால் வாய்வுபிடிப்பு, ஏப்பம், மூட்டுவலி குணப்படும்.!
    * ஒருலிட்டர் தண்ணீரில் சிறிது புளி, கருப்பட்டி, இந்துப்பு போன்றவற்றை கலந்து வடிகட்டி அப்படியே குடித்துவந்தால் உடல்சோர்வு, அதிகதாகம் அடங்கும்.!
    * ஒருலிட்டர் தண்ணீரில் அரைமூடி எலுமிச்சைப்பழம், தேன், சிறிது இந்துப்பு கலந்து குடித்து வந்தால் உடல் உற்சாகம் பெருகும் உடலில் உள்ள நாள்ப்பட்ட சளியை கரைத்து வெளியேற்றும்.!
    இதுபோன்ற இன்னும் பலவித மூலிகை நீர் சிகிட்சை உண்டு. ஒருவர் தொடர்ந்து ஒரேவிதமான நீர்சிகிட்சையை செய்யக்கூடாது. ஒருலிட்டர் என்பது ஒரு அளவீடுதான் நமக்கு ஒரு நாளைக்கு எவ்வளவு நீர் தேவைப்படுமோ அவ்வளவு நீரையுமே இந்த முறையில் தயாரித்து குடித்து வந்தாலும் மிகவும் நல்லதுதான். ஒருமுறை தயாரித்த நீரை அதிகப்பட்சம் 9 மணிநேரம் வரையில் மட்டுமே வைத்துக்கொள்ளலாம்.


    - இணையதளத்திலிருந்து

    Vaisri02 likes this.

    அன்புடன் கௌரி.


    "உன்னால் சாதிக்க இயலாத காரியம் என்று எதுவும் இருப்பதாக ஒருபோதும் நினைக்காதே!" - விவேகானந்தர்


    எனது கவிதை மொட்டுகள்




loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter